இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; எல்லாம் நானே ! நான் மஹா விஷ்ணு !
27 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
எல்லாம் நானே ! நான் மஹா விஷ்ணு ! என் கையில் இருக்கும் காலச் சக்கரம் உனை அழிக்கவும் செய்யும், அரவணைக்கவும் செய்யும் ! என் தர்ம குலமே உனை கைவிடமாட்டேன் ! நான் தென்றல் ! எப்போதும் சுகம் தருவேன் !
புனித காற்று !
காற்றில் ஒன்பது வகை உண்டு ! காற்றின் மூலமே யாவும் ! காற்றும் நீரும் சேர்ந்ததே நீ ! உன் தாய் காற்று ! உன் தந்தை நீர் ! காற்று என்பது அன்பு ! நீர் என்பது பாசம் ! அதனாலேயே நான் உன் பெற்றோரை வணங்கச் சொல்கின்றேன் ! என் தந்தை வேத நாயகன் யாகவா சொன்ன வேத முத்துகள் இது,
அண்ட காற்று, பிண்ட காற்று, ஆனந்தம் தரும் உனை ஆளும் காற்று ! இவை மூன்றில் எதை உள்ளே வாங்குவது எதை விடுவது என யோசி ! எதுவும் தெரியாமல் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மூச்சை இழுக்காதே ! மூடனாக திரியாதே ! இடகலையிலும், பிங்கலையும் எந்த பக்கம் வந்தால் மூச்சை இழுப்பது, விடுவது என யோசி ! இது எதுவும் தெரியாமல் உனக்கு சொல்லித் தருகிறார்கள் ! அவர்கள் பின் நடவாதே !
எப்படி நீ கற்றாலும் நீ தேடும் நிம்மதி உனக்கு கிடைக்காது ! கடமையை செய்யாமல் காலத்தை விரயமாக்காதே ! ஏதும் தெரியா பாவிகள் ஏதோ கற்றுக் கொண்டு உளரக் கண்டேன் ! சம்சாரிக்கு எதுவும் தேவையில்லை ! இங்கு உழைப்பு தான் நிம்மதி ! மற்றதெல்லாம் வெற்றுக் கூச்சல் ! ஏதோ புத்தகத்தை படித்து புனிதனென்று உளரக் கண்டேன் !
சித்தர்கள் கால வர்த்தமானவர்கள். அவர்கள் எழுதி வைத்ததை வைத்து உன்னால் ஏதும் செய்ய முடியாது ! எல்லா மூலத்திலும் ஒன்பது சதவீதம் ரகசியம் மறைக்கப்பட்டுள்ளது ! முழுவதையும் யாரும் சொல்லித் தர மாட்டார்கள் ! முழுவதையும் யாரும் எழுதி வைக்கமாட்டார்கள் ! உனக்கு முழுவதும் தெரிந்தால் என்னாகும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் !
ஒரு மரத்தடியில் உட்கார்ந்து யோசி ! காற்றின் திசையை ஞானமாக கவனி ! வலப் பக்கம் வரும் காற்று உனை வசந்தமாக்கும் ! ஆண் வாரிசை பெற்றுத் தரும் ! உன் பாவம் வளரும் ! இடப் பக்கம் வரும் காற்று பெண் குழந்தையை பெற்றுத் தரும் ! உனை செல்வந்தனாக வாழ வைக்கும் ! மீண்டும் பிறக்காத வழி தரும் ! இரு பக்கமும் வருகின்ற காற்று உனக்கு ஞானத்தை அள்ளித் தரும் ஞானக் குழந்தையை பெற்று தரும். பிணைப்பில் வாய் வழி காற்று திருநங்கையை பெற்று தரும். இடகலை, பிங்கலை அடைக்கும் காற்று ஊனமுள்ள குழந்தையை பெற்றுத் தரும் ! இவையெல்லாம் தேவ ரகசியம் ! இவை எதுவும் தெரியாமல் உளரக் கண்டேன் ! காற்றின் இசை, திசை தெரியாமல் புலம்பக் கண்டேன் ! அரை குறை வித்தை தெரிந்தவன் அதை காசாக்க கண்டேன். வித்தை முழுவதும் தெரிந்தவன் மக்களை ஏமாற்றமாட்டான் ! ஆசிரமம் கட்டமாட்டான் ! மக்களிடம் பிச்சை எடுத்து பள்ளி, கல்வி கூடங்கள் கட்டமாட்டான் !
தாவரங்கள் அடி காற்றில் அசைந்தால் மழை வரும் என்று அர்த்தம் ! மழை வருவது நாய், பசு, எறும்புக்கும் தெரியும் ! எல்லாம் இங்கு காற்றின் ஸ்பரிசம் ! நாய் கூட நல் காற்று வரும் திசை பார்த்து தான் முகம் வைத்து படுக்கும் ! இங்கு எல்லாவற்றையும் காற்று தான் கற்றுக் கொடுக்கிறது. காற்று உனக்கு ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றது ! எல்லாம் கற்ற உனக்கு இது ஏன் தெரியாமல் போனது ?
புனித காற்றை வணங்கு ! நேசித்து பார் ! நீ செய்த பாவத்தின் தண்டனை தான் ஆவேசக் காற்றை, சூறாவளியாய், புயலாய் சுருட்டி போடுகிறது !
இனி காற்றின் ருத்ர தாண்டவம் மிக மிக மிகுதியாக இருக்கும் ! இனி காற்றானது உலகில் பல இடங்களில் மணல் மேடுகளை உருவாக்கும் ! உலகில் பல நாடுகள் சூறாவளியால், புயல் காற்றால் அழியும் ! காற்றிலே நீர் இருக்கின்றது ! முனிவர்களும், சித்தர்களும் காற்றை உட்கொண்டு வாழ்வார்கள் !
ஒன்பது வாசலில் ஒரு வழியிலும் போகாத உன் மூச்சுக் காற்று உன் காலம் முடிந்தவுடன் என் நோக்கி மேலே வருகிறது ! இது காற்றின் சத்யம் ! காற்று தான் மனசு ரூபத்தில் உனை கொல்கிறது ! தீராத துன்பம் கொடுத்து, உன் உயிர் காற்றை வைத்தே உன் உடலை ரணமாக்குகிறான் கடவுள்.
நான் காற்றின் சத்யம் !
நான் காற்றின் சத்யம் !
என்னை நினை ! நான் காற்றாய் வந்து உன் காயங்களை ஆற்றுவேன் ! என் நாமம் உனக்கு பேரின்பத்தை தரும் ! நாள் முழுவதும் சொல் ! சுகம் தருவேன் !
பூமியில் உதவும் காற்று மூன்று ! உதவாத காற்று ஒன்று ! உற்று நோக்கு ! பூவுலகில் பூ பூக்காமல் காய்க்கும் புனித மரங்கள் ஐந்து இருக்கின்றது ! அதை கண்டுபிடித்து அதன் அடியில் உட்கார்ந்து ஆனந்தமாக புனித காற்றை உள் வாங்கு ! மரங்கள் உனக்கு ஞானம் தரும் ! பூமியில் மரங்கள் புனிதமானது ! லோகத்திலும் மரங்கள் உண்டு ! மேலிருந்து வரும் வேதங்கள் முதலில் மரங்கள் மீதே படுகிறது ! பின் காற்றால் பூமியெங்கும் பரவுகிறது. புனித மரங்களின் அடியில் உட்கார்ந்து புனித காற்றை உள் வாங்கு ! உனக்கு நல் அறிவு தரும். உன்னை உணர வைக்கும் ! பாவம் செய்யாதே ! ஊழிக் காற்றில் சிக்கி தவிக்காதே !
மூச்சை உள்ளிழுத்து மூடனாக திரியாதே ! இயல்பாய் இரு !
முதலில் எதையும் உணரக் கற்றுக் கொள் ! நீ செய்யும் பாவம் தான் பந்து போல் சுருண்டு உன் இதயத்திற்கும், ஆன்மாவிற்கும் நடுவில் நிற்கின்றது உன் மனதாய் ! மனதுக்கும், மூச்சுக்கும் தொடர்பு இருக்கின்றது ! மனது அசைந்தால் மூச்சு அசையும் ! நீ பாவம் செய்தால் மனது என்ற போர்வையில் உன் மூச்சு (உயிர்) ரணப்படுத்துகிறது ! உன் மனதை கடவுளின் தங்கத் திருவடியில் கட்டு. இந்த ஆத்மத்தின் தலைவன் காற்றாய் வந்து உன் மனதை கட்டுப்படுத்துவேன் !
முதலில் எதையும் உணரக் கற்றுக் கொள் ! நீ செய்யும் பாவம் தான் பந்து போல் சுருண்டு உன் இதயத்திற்கும், ஆன்மாவிற்கும் நடுவில் நிற்கின்றது உன் மனதாய் ! மனதுக்கும், மூச்சுக்கும் தொடர்பு இருக்கின்றது ! மனது அசைந்தால் மூச்சு அசையும் ! நீ பாவம் செய்தால் மனது என்ற போர்வையில் உன் மூச்சு (உயிர்) ரணப்படுத்துகிறது ! உன் மனதை கடவுளின் தங்கத் திருவடியில் கட்டு. இந்த ஆத்மத்தின் தலைவன் காற்றாய் வந்து உன் மனதை கட்டுப்படுத்துவேன் !
நீ பாவம் செய்யாதவனாக இருந்தால் உன் ஆன்மா நல் குருவை அமைத்து கொடுத்து உனை நல் வழிப்படுத்தும் ! மனது வழி நடப்பதால் தான் மனிதன் அல்லல்படுகின்றான் ! ஆன்மா வழி நட ! உயிர் தரும் காற்று உனை வாழ வைக்கும். புனித காற்றை நேசி ! அன்பையும் புண்ணியமும் தரும் காற்றை வணங்கு ! காற்றின் இசையை கவனித்து வாழக் கற்றுக் கொள்.
உணர் ! நான் இந்த காற்றை ஆள்பவன் ! கணப் பொழுதில் உனக்கு யாவும் கற்று தருவேன். தென்றலாய் சுகம் தருவேன் !
கைலையில் உருவாகும் ருத்ர காற்றும் நான் தான் என்பதை மறவாதே !
நான் இநன்யா !
No comments:
Post a Comment