Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 29, 2018

உலகில் ஆனந்தமானவன் யார் ?


to INANYA MAHA MUNIVAR
30-08-2018
நான் நம்பி ! எனக்கு நோனார் இங்கில்லை ! உணர் ஞானமிருந்தால் !
உலகில் ஆனந்தமானவன் யார் ?
எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டு வாழ பழகியவன் தான் உலகில் ஆனந்தமானவன் ! துன்பம் உனக்கு இன்பம் தரவே வருகிறது ! துன்பத்தை இன்பமாக நினை ! எது நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல் !
எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம் என்று நினை ! உனக்கு ராஜகிரீடம் சூட்டி அழைத்து செல்வார் கடவுள் ! இன்பம் என்று ஏதுமில்லை இங்கே ! கடவுளின் அன்பு தான் இங்கே இன்பம் ! அது தான் ஆனந்த நிறைவு. அவன் ஸ்பரிஷம் எல்லையில்லா பேரின்பம் !
சத்திய சோதனையை தாண்டி செல்பவன், எவ்வளவு சோதனை வந்தாலும் கடவுளை நிந்திக்காதவன் ஆனந்தமானவன் தானே ! என் தந்தை யாகவா சொல்வார்கள் ! துன்பத்தை இன்பமாக நினை என்று ! உன் இன்பம் எனக்கு வேண்டாம் ! என் துன்பம் உனக்கு வேண்டாம் என்று சொல்வார்கள் !
நான் துன்பத்தில் இன்பம் கண்டவன், வறுமை, நோய், வேதனை, சோதனை எல்லாவற்றையும் கடந்தவன். நான் ராஜபரம்பரையில் பிறந்தவனல்ல ! உழவன் வீட்டில் பிறந்தவன் ! உழைத்து முன்னேறி என் இலக்கை நிர்ணயித்து வெற்றி கண்டவன் ! வா நானும் உனக்கு வெற்றி பெற வலிமை தருவேன் ! முன்னேறும் ரகசியம் சொல்லித் தருவேன்.
எப்போதும் ஆனந்தம் வர ஞானம் வர முயற்சி செய் !
ஞானமுள்ளவன் எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பான் ! ஆனால் யாரும் ஆனந்தமாக இருக்க நான் காணவில்லை ! நான் அவதாரம், கடவுளை தெரியும் என்று பலர் இங்கு புலம்ப கண்டேன். ஞானமுள்ளவன் சோர்வடையமாட்டான் ! பசி தெரியாது ! அவன் வழி தவறமாட்டான் !
நான் எப்போதும் ஆனந்த நிலையில் ! எனக்குள் கிடக்கும் ஞானம் அளவிலா ! பிரபஞ்சம் வரை வியாபித்து நிற்கிறது !
அன்பினால் எனை கட்டிப் போடு !
ஞானம் வரும். நல் அறிவு வரும் !
பணம் வரும் ! பவிசு வரும் !
நேர்த்தியாக வாழ தெளிவு வரும் !
சினத்தை தூக்கி எறி ! ஞானம் பெறுவாய் ! எப்போதும் சிரித்த முகமாக இருக்க ஆசைப்படு ! உன் உள்ளத்தை அழவிடாதே ! தஹிக்கும் மனம் அடங்க போராடு ! சதுராட்டம் அடங்குவதற்குள் உன்னை அறிய பழகு !
ஆனந்தம் எனக்குள் !
உலகில் நான் ஆனந்தமானவன் !
நான் இநன்யா !

செப்டம்பர் 9 லிருந்து 18 வரை


to INANYA MAHA MUNIVAR
28-08-2018
உலகை நன்றாய் படைத்த பெருங்கருணைமிக்க என் அன்பிற்கினிய தந்தை யாகவா என்ற பேரொளி மனிதம் தழைத்தோங்க மனதின் சுமை நீங்க அன்பு பரிசாக தந்த சூட்சுமசுகம் !
செப்டம்பர் 9 லிருந்து 18 வரை யுகத்தில் என் தந்தை சுவாசிக்கும் புனித இடத்தில் ரிஷிகள், யோகிகள் வந்து வேதம் மனனம் செய்து செல்வார்கள்.
ரிஷிகள், யோகிகள் யுகத்தில் பிறப்பதில்லை. ஆதலால் தர்மாக்களே இந்த ஒன்பது நாளும் ஒருவேலை உணவருந்தி வேதத்தை மனனம் செய்யுங்கள் !
ஒரு டம்ளிரில் புனித நீர் வைத்து பறவைகள் எழும் நேரமும், அடையும் நேரமும் வேதத்தை உள்வாங்கி உன் பாவத்தை கரைத்து விடு !
பச்சரிசி சாதம் தான் சாப்பிட வேண்டும். பூசணிக்காய், சுரைக்காய், வாழைக்காய் சேர்க்காதே. ஒன்பது நாள் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு நாள் மனதார விரதம் இருந்து வேதத்தை உள்வாங்கு !
நிச்சய சத்தியமாக உன் பாவம் கரைந்து ,பிணி, பீடைகள் அகன்று பெரும் செல்வம் சேரும் ! பெருமை மிகுந்த என் தந்தை யாகவா அன்னை வசியாவிடம் வேண்டுவேன் நீ நலமாக, வளமாக இருக்க !
என் சத்திய பாதை என் தந்தை அமைத்து தந்தது ! இதில் வருபவர் யாரும் தோற்பதில்லை, தோற்கவும் விடமாட்டேன்.
முக்கியமாக இரவில் நட்சத்திரம் பார்த்து சாப்பிடு ! நானும் இந்த ஒன்பது நாளும் ஒரு சொட்டு நீர் அருந்தாமல் இருப்பேன்.
இநன்யா என்றென்றும் காப்பேன் !
நான் சத்தியமடா.

என்னை வெல்வதும் இல்லை,

என்னை வெல்வதும் இல்லை,
இனி வெல்லபோவது யாருமில்லை.
நான் சத்தியமாக படைத்தவனின் பாசப்புதல்வன்தான்.
நான் காற்றின் வேகம் ,
என் பின்னால் வருவது இயலாத ஒன்று,
ஆனால் என் நிச்சய சத்தியம் உன்னை கரைசேர்க்கும்,
நான் நடத்தும் நாடகத்தை யார் அறிவார்,
இருபது வருடம் பின்னால் வருபவரைவிட இருபது நாளில் வந்த நல் ஆன்மாக்கள் எனை அறியகண்டேன்,
என் சோதனையில் வென்றவர் யாருமில்லை,
இப்போது முதன்முறையாக ஒரு ஆன்மா வென்றது.
நான் சத்தியமடா.
என் நாமம் நிச்சய சத்தியமடா.
என்னை கெட்டியாக இறுக பற்று,
உன் பற்றை எப்போதும் ஆனந்த நிலையில் வைப்பேன்,
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா.

Wednesday, August 22, 2018

சத்தமன் என்பவன் தமிழ் அறிந்தவன் ! தமிழை உணர்ந்தவன் ! தமிழ் மொழி பேசுபவன் ! அழகு மொழி


to INANYA MAHA MUNIVAR
23-08-2018
சத்தமன் என்பவன் தமிழ் அறிந்தவன் ! தமிழை உணர்ந்தவன் ! தமிழ் மொழி பேசுபவன் !
அழகு மொழி ;;;
செந்தமிழ், பைந்தமிழ், தென்றமிழ், கன்னித்தமிழ், வண்டமிழ், அமுத தமிழ், நற்றமிழ், இயன்றமிழ், இயல் தமிழ், தீந்தமிழ், இன்ப தமிழ், இனிய தமிழ் !
எத்துனை அழகு ? வடிவாய் படைத்தான், வசையாய் பொழிந்தான் ! எத்தனை திருநாமம் தமிழுக்கு ? உலகின் உயர்வின் மொழி ! மனிதன் வணங்கும் மொழி !
ஞானிகள், சித்தர்கள் தமிழ் பாடி தன்னை நிறுபித்த புனித மொழியை அறிந்து உணர் ! ஆயிரம் கோடி இன்பம் உன்னுள் ! சங்கம் அமைத்து வளர்த்தான். தரணியில் எந்த மொழிக்கும் இல்லா சிறப்பு !
தமிழால் பேசு கடவுளிடம் ! தமிழில் பேசி நெருங்கு ! காலத்தில் கரை சேர்வாய். யுகம் தோன்றி 48000 கோடி ஆண்டுகள் ஆனது என என் தந்தை சொல்வார்கள். யுகம் தோன்றும் பொழுதே தமிழ் மொழி தோன்றியது என்று ! ஆஹா மேன்மையில் மேன்மை ! கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்று முன்னோர் சொன்ன அதே வார்த்தை நிஜம் தான் !
தமிழிலே சித்தர்கள் தெள்ள தெளிவாய் பாடி கடவுளை நெருங்கினார்கள் ! உயிர், மெய், உயிர்மெய் என்று உயிரோட்டமாய் இருக்கும் அழகு மொழி !
உண்மை, உயர்வு மொழி, அழகு மொழி தமிழ் ! நான் இந்த அழகு தமிழ் பேச பெருமை கொண்டேன் ! என் அன்பினிற்கினிய தந்தையிடம் இந்த அழகு மொழி தமிழாலே நீண்ட நெடிய நேரம் உரையாடினேன் ! தமிழ் பேசியே கொஞ்சி விளையாடினேன் ! குதூகலம் அடைந்தேன்.
லிபி என்ற வேத இனன்ய மொழியின் சாரம்சத்தை என் அன்பினிற்கினிய தந்தை தமிழிலே மொழி பெயர்த்து வழங்க கண்டேன் ! வேதம் ஐந்தையும் தெள்ளு தமிழில் திறம்பட வடிவமைத்து தந்தார்கள் ! என் தந்தை கருணையாளன் தானே ?
வேதம் கையிலிருந்தால் காந்தம் போல ஒட்டும் ! உண்மையை அறி ! என் அன்பு தந்தையுடன் இறுதி பிறவி இந்த புண்ணிய தமிழ் மண்ணிலே ! எனது முதல், இறுதி பிறவி இந்த அழகு தமிழ் மண்ணிலே !
இந்த மண்ணிலே மணம் உண்டு ! மலர்ச்சியும் தானுண்டு ! அதனாலே நான் தரையில் படுத்து நித்திரை கொள்கிறேன். தமிழ் மொழி பேசினால் அறிவு வரும் ! வல்லமை வரும் ! இன்பம் தரும் மொழி , தித்திக்கும் மொழி இனிதாய் நீயும் உன் சந்ததிக்கு சொல்லிக் கொடு !
நான் மலர்வேன் உன் நெஞ்சில் ! இனியும் மலர்வேன் ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! அதன் சாறு அருந்தி உனக்கு வேதமாக தருகிறேன். அழகு தமிழால் உன்னை ஆசிர்வதித்தேன் ! நீ தமிழ் போல் இனிமையாய், ஆனந்தமாய் வாழ்வாயடா !
இனி தமிழும் வாழும் ! தமிழனும் வாழ்வான் ! தமிழே வாழ்க !
நான் இநன்யா !

Monday, August 20, 2018

இநன்யா யுகாஷ்டிசம் ;;; ஏழாம் கடவுள் இநன்யா

இநன்யா யுகாஷ்டிசம் ஏழாம் கடவுள் இநன்யா






இநன்யா யுகாஷ்டிசம் ஏழாம் கடவுள் இநன்யா





இநன்யா யுகாஷ்டிசம் ஏழாம் கடவுள் இநன்யா




Wednesday, August 15, 2018

சகநாயகன் போல் ஒட்டும் சுகிதம் போல் இருக்கும் பொட்டில், நாயகன் அதன் நடுவிலே ! நெற்றிப் பொட்டு


to INANYA MAHA MUNIVAR
16-08-2018
சகநாயகன் போல் ஒட்டும் சுகிதம் போல் இருக்கும் பொட்டில், நாயகன் அதன் நடுவிலே !
நெற்றிப் பொட்டு ;;;
புருவ மத்தியில் இருக்கும் சொரூபி, ஆதன்ய சக்கரம் என்ற உயிர் சக்கரம் ! காலச் சக்கரத்தை மாற்றும் அதித சக்தி அதற்கு உண்டு. அதனாலே புருவ மத்தியில் பெண்களை பொட்டு வைக்க சொன்னார்கள் முன்னோர்கள். திருநீறு என்று நீ அணிவது அதனாலே !
ஆதியில் முனிவர்கள் கமண்டலத்தில் நீர் வைத்து நெற்றியில் தொட்டு ஆசிர்வதித்தார்கள். இவன் ஏதேதோ பூசி மதிமயங்கி புத்தி தடுமாறி அலைகின்றான்.
ஆதன்யா என்ற உயிர் சக்கரத்தில் உன் உயிர் உறவாடும் ! உண்மை சொரூபம் சொல்லும். நெற்றியில் புருவ மத்தியில் எப்போதும் நீர் தொட்டு வை என்று என் அன்பினிற்கினிய தந்தை சொல்வார்கள் ! உயிர்ப்பு, துடிப்பு, சிலிர்ப்பு இருந்தால் தான் நீ ஆனந்தம் கொள்வாய் என்று சொல்வார்கள் !
உன் உடலை உயிர்த்துவமாக வைக்கும் சூட்சுமம் உன் நெற்றியில் உண்டு. உன் மனதின் பாவ, புண்ணிய கணக்கு படி தான், உன் பிறப்பும் இறப்பும் நிர்ணயிக்கப்படுகிறது ! ஆதலால் பெற்றோர், பெரியோர் சொல் கேட்டு வணங்கி மகிழ் ! வாழ்வில் இன்பம் பொங்க பெற்றோர் சொல் கேள் . எல்லாம் தெரியும் என்று பசப்பாதே ! பிதற்றாதே ! ஏனேன்றால் உன்னை பற்றி உனக்கு ஏதும் தெரியாது.
நானறிவேன் உன்னை ! நாயகன் என் தந்தை யாகவா எனக்குள் இருப்பதையும் நானறிவேன் ! தினமும் ஆன்மாவோடு பேசுகின்றேன் ! உலக சூட்சுமத்தை ஒரு நொடியில் அறியும் வித்தையை என் தந்தை எனக்கு சொன்னார்கள் !
எனக்குள் இருப்பது ஆறு பேராத்மாக்கள் !
என்னுள் இசைக்கும் நாதம் உலகத்தின் கீதம் !
நான் உயிரோடு உறவாடி மகிழ்கிறேன் ! எனக்குள் இருக்கும் உயிர் ஆனந்த நிலையிலே இருக்கிறது !
நெற்றி இல்லா மனிதன் ஏதுமில்லை. உடலில் எந்த பாகம் இல்லாவிட்டாலும் மனிதர்களுக்கு நெற்றி இருப்பதை அறிந்து உணர் ! உன் வாழ்க்கை அதில் நிர்ணயிக்கப்படுகிறது.
நீரில்லா நெற்றி பால் !
புருவ மத்தியில் நீர் தொட்டு வை !! நிம்மதி உண்டு !
நிஜம் நான் ! நிஜமான முகம் என்னுள் !
நீர் அமிர்தம் ! என் நாமமும் அமிர்தமடா !
நான் அமிர்தம் !
நான் இநன்யா !

Wednesday, August 8, 2018

வெண்மை (நிஜம் ) தூலகம் வெண்மை தான் ! ஆன்மா வெண்மை தான் ! உனக்கு வயதானால் வரும் நரையும் வெண்மை தான் ! உணர் !


to INANYA MAHA MUNIVAR
தூலகம் வெண்மை தான் !
ஆன்மா வெண்மை தான் !
உனக்கு வயதானால் வரும் நரையும் வெண்மை தான் ! உணர் !
வெண்மை (நிஜம் )
நினைத்து பார்க்காத நிஜம் பூமிக்கு இறங்கி வந்தது ! வெண்மையின் வடிவாய் ஜொலித்து நின்றது ! வழிபோக்கன் போல் வாழ்ந்து உனக்காக யுகம் வந்தது ! அந்த ஜொலிக்கும் ஒளியை உள்வாங்க வரம் வாங்கி தவம் செய்து என் தாயின் ஆசியோடு நானும் யுகம் வந்தேன் !
வெண்மையை மறந்தாய் ! என் அன்பின் கருணை வடிவான என் பிரபஞ்ச நாயகன் யாகவா என்ற பேரொளியை மறந்தாய் ! உணராமல் வசைபாடினாய். நான் ஆழ்ந்து அரவனைத்து கிடந்தேன். என் தந்தையின் ஸ்பரிஷத்தில் ! ஆனந்தத்தில் மெய் மறந்தேன் தங்க கொட்டிலில் ! கை கால் முளைத்த கல்கியை மறந்தாய்.
எவனடா ஞானி ? இங்கு என் தந்தையை அறியாதவன் யாருமில்லை. ஆனால் யாரும் அறியவில்லை ! அறிந்து, உணர்ந்து, ஆழ்ந்து கிடந்தேன் நான் மட்டும் !
என் மகிழ்ச்சி, என் கருணை, என் அன்பு, என் மிகைபடுத்த முடியாத பேரருள், என் தந்தையிடமிருந்தே வந்தது ! ஆனால் அறிந்ததில்லை எவரும். அந்த நிஜத்தை கண்டவன் உணர்ந்ததில்லை ! பாவமடா நீ !
ஆடி, பாடி, ஆனந்த வாழ்வை வாழாமல் சொர்க்க வாழ்வை இழந்தாயடா ! அந்த வெண்மையை அறிந்தால் என்னை அறிந்திருப்பாய். நான் யார் என்று உணர்ந்திருப்பாய் ! உன் குற்றமடா ! படைத்தவன் பேரொளியாய் வந்தாரே ! பாவி நீ தானடா ? கண்டும் உண்டு களிக்காமல் உணராமல் போனாயடா !
எல்லை இல்லா மகிழ்ச்சியும் , ஆனந்தமும். ஐஸ்வர்யமும், நிம்மதியும் எனக்கு தந்தார்கள், உனக்கும் கொடுக்க சொல்லி !
உணரடா ! உனக்கும் தருவேன் ! ஞான பேழையில் வைத்து !
நாயகன் நான் !
நான் வெண்மை ! (நிஜம்)
நான் இநன்யா !

Wednesday, August 1, 2018

வினையும் வினை அறுக்கும் சூட்சுமம் நான் ! ஊழ்வினையை வேறருக்க வந்த வேதமகன் நான் ! உணர் ! உனக்கு ஞானமிருந்தால் ! வினை அறுக்கும் சூட்சுமம் !


to INANYA MAHA MUNIVAR
02-08-2018
வினையும் வினை அறுக்கும் சூட்சுமம் நான் ! ஊழ்வினையை வேறருக்க வந்த வேதமகன் நான் ! உணர் ! உனக்கு ஞானமிருந்தால் !
வினை அறுக்கும் சூட்சுமம் !
பிறப்பென்பது புரிந்தும் தவறு செய்கின்றாய். பாவம் கரைக்க யுகம் வந்தால் மீண்டும் பாவம் செய்கிறாய் ! ஏழு பிறவிகள் அல்ல ! ஏழேழு பிறவிகள் என்பதாகும். உன் வினை முன் வினையோடு கலந்து உன்னில் கலந்தது. முற்பிறவியின் கர்மா இப்பிறவியில் தொடர்கின்றது. மீண்டும் தீவினை நோக்கி தினந்தோறும் செத்து பிழைக்கின்றாய் !
பாவம், புண்ணியம் மிருகங்களுக்கு இல்லை. உனக்கு மட்டும் தான் ! உன்னை அறிவாய், அழகாய் படைத்தான் என் இனியவர் என் அன்பின் அப்பா ! ஆனால் அறிவை தொலைத்து எதையோ தேடுகிறாய் ! நான் படைத்தவன் பொற்கரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தவன். நான் படைப்பின் சூட்சுமம் அறிந்தவன் ! படைத்தவன் பாசப் புதல்வனடா நான் ! வினை அறுக்கும் சூட்சுமம் தெரிந்தவன் !
என்னுள் எத்தனையோ கோடி அண்ட ஜீவராசிகள் உறவாடுகிறது ! ஆனால் பிண்டத்தில் வந்தவன் நீ தான் வசைபாடுகிறாய் ! இன்று இந்த நிமிடம் மட்டுமே உன் கையில். நாளை நடப்பது உனக்கு தெரியாது ! நீ எதை உண்ணப் போகிறாய், எங்கே இருக்க போகிறாய், எங்கே தூங்க போகிறாய், எதுவும் உனக்கு தெரியாது. எதிர்கால இலக்கை நினைத்து போராட முடியுமே தவிற நீ நிர்ணயிக்க முடியாது உன் வாழ்வை !
காலகணக்கு என்னிடம் எதுவும் உன் கையில் இல்லை ! உன் உள்ளங்கையில் ரேகையை மட்டுமே பார்ப்பாய். என் உள்ளங்கையில் உலகம் இருப்பதை அறிவாயோ ? எல்லாம் இங்கே ஊழ்வினை ! உன் ஊழ்வினை அற்றுப் போக கடவுளின் பாதம் பற்று ! வேறெதுவும் உனக்கு கை கொடுக்காது ! ஜீவராசிகள் ஆனந்தமாக, நிம்மதியாக வாழக் கண்டேன். ஆனால் நீ படும் துயரம் வேடிக்கையடா !
”நான் (ஆன்மா) ! நான் இருப்பதால் நீ இருக்கின்றாய் ! நான் உன்னுள் மறைத்தலில் உள் இருப்பு. நான் என்பது இங்கே கடவுள் மட்டுமே ! கடவுளின் இருப்பில் நீ வாழ்கின்றாய். நான் இல்லை என்றால் நீ இல்லை. நீ இல்லை என்றால் நான் உண்டு ! ஏதறிந்தாய் ? எவையறிந்தாய் ?” என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள்.
இங்கே போகூழில் சிக்கி தவித்து ஆகூழில் நிவர்த்தி பெறாமல் தவிக்கின்றான். என்னுள் கரைந்திடு ! உன் ஊழ்வினை கரைந்து போகும் !
சர்வ நிச்சயமாக நான் பாவத்தை கரைப்பேன், இனிமேல் நீ பாவம் செய்யாமல் இருந்தால் ! இங்கே உணர்ந்தவன் ஞானியாகி, கடவுளை அறிகிறான்.
வினை அழிக்கும் சூட்சுமம் நான் !
நான் அணுவுக்குள் அணுவானவன் !
நான் இநன்யா !