Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 30, 2018

பாதாள வஞ்சனம் என் கண்ணில் ! நீ அழறில் உழன்று ஆகாசமனம் அறியாது வாழ்கின்றாய். உணரடா ! சத்திய விரதம் ,,,


to INANYA MAHA MUNIVAR
31-05-2018
பாதாள வஞ்சனம் என் கண்ணில் ! நீ அழறில் உழன்று ஆகாசமனம் அறியாது வாழ்கின்றாய். உணரடா !
சத்திய விரதம் ,,,
நீ என்ன செய்தாலும், எங்கிருந்தாலும் உலகிலும் உன்னிலும் என்ன மாற்றம் வந்தாலும் உன் சத்திய பாதையில் இருந்து விலகிவிடாதே ! எத்தனை விரதம், உபவாசம் இருந்தாலும் சத்தியம் இல்லை என்றால் எதுவும் உனக்கு நன்மையாய் இருப்பதில்லை !
உலகில் வலிமையானது சத்தியம் ! நீ கடைபிடிக்கும் சத்திய விரதமே உன்னை மனிதனாக்கி ஞானியாக்கும் ! பிறக்கும் போது சத்தியத்தோடு பிறந்தாய். பின் தேய்ந்து களவு, பொய், சூது, பொறாமை, கோபம், காமம், மோகம், என்ற கேடுகெட்ட விஷயங்களை உன்னுள் புதைத்து சிதைந்து போகின்றாய். இது உன்னை மீண்டும் பிறக்க வைக்கும். இந்த கெட்ட சூத்திரத்தில் திகைத்து போகின்றாய். இதுவே அசுரகுணம் !
திருமணத்தில் ஏழு அடி எடுத்து வைக்கின்றாய். ஒழுக்கத்தில் நிறைவு பெற்று வாழ்வதற்காக ! ஆனால் ஒழுக்கம் தவறி மூடனாகி போனாய். ஏழு அடி எடுத்து வைப்பது சத்திய விரதத்தை கடைபிடித்து ஒழுக்க நெறியாய் வாழ வேண்டும் என்ற தத்துவம் தான். நான் சத்தியம் ! இந்த சத்திய நாயகன் எப்போதும் உன்னை கைவிடுவதில்லை.
நான் சத்திய விரதன். இயற்கையின் இயக்க விதியை நான் அறிந்தவன். வென்றவன். ஆதலால் என் பின்னால் வருவபவனும் நிச்சயம் வெல்வான் !
பூமி அசைந்தாலும், வானம் இடிந்தாலும், கடல் நீர் உயர்ந்தாலும் மலை வெடித்து மண்ணில் விழுந்தாலும் நான் உனை தாங்கி பிடிப்பேன். நஞ்சை மறந்து உண்டாலும் நாயகன் உன் நஞ்சை அமிழ்தமாக மாற்றுவேன்.
நீயாக சாக நினைக்காதே ! உனக்கு உரிமையில்லை ! இருக்கும் வரை பிறப்பறுக்கும் வித்தையை கற்று கொள்ள ஆசைப்படு ! வாடா என் சத்திய பாதையில் வானத்தை வசப்படுத்த கற்றுத் தருகிறேன். மரங்கள், பறவைகள் சத்தியத்தோடு அதனதன் கடமையை செய்கின்றது. நீ தான் நாகரிகம் என்ற பெயரால் சத்தியம் தவறுகின்றாய்.
செய்த தவறை மறைத்து கஷ்டம் வந்தால் கடவுளை குற்றம் சொல்கின்றாய். சத்தியத்தை நோக்கி உன் பயணம் இருக்கட்டும். துன்பத்தை விலை கொடுத்து வாங்காதே ! கேளிக்கை, உல்லாசம், பிரயானம் என்று உன் செல்வத்தை தொலைத்து நிம்மதியை இழக்காதே ! உனக்குள் உன்னை தேடு !
உண்மை (சத்தியம்) எதுவென்று புரியும் !
நான் சத்யம் ! என் சொல் சத்யம் !
என் நாமம் சத்யமடா !
நான் இநன்யா !

Saturday, May 26, 2018

தர்மம் சிறக்க அதர்மம் அழியும் காலம் ஆரம்பித்தது.


to INANYA MAHA MUNIVAR
தர்மம் சிறக்க அதர்மம் அழியும் காலம் ஆரம்பித்தது.(23.5.2018) இனி உலகமெலாம் ஓலமிட கண்டேன். மத வழிபாட்டு ஸ்தலங்கலெல்லாம் அழியக் கண்டேன். பகற் கொள்ளை பெருகும். தண்ணீருக்கும், தானியத்திற்கும் சண்டையிடுவான்.
விஞ்ஞான அணு உலைகலெல்லாம் வெடித்து சிதறும். கடல்அலை கரை தாண்டும். மனிதன் இருக்குமிடம் ஓலத்தை நான் கேட்டேன். என் கரத்தில் இருக்கும் மணிபுஷ்பகம் என்ற சூட்சும சங்கை ஊத ஆரம்பித்தேன். மனிதன் ஊதும் சங்கு ஊருக்குமட்டும். நான் ஊதுகின்ற சங்கு உலகெல்லாம் ஒலிக்கும்.
தர்மா காக்கபடும் ! உலகெல்லாம் சிசு உருவாக்கம் 75 சதவீதம் குறையக் கண்டேன் ! கூட்டம் கூடும் இடத்தில் நிற்காதே. கூட்டமாய் வழிபாட்டு ஸ்தலத்தில் கூடாதே ! குறையோடு வருவாய்.
நான் காப்பேன் என்றென்றும் தர்மாக்களை ! ஓர்மையில் சொல்கிறேன் ! உனை கைவிடமாட்டேன்.
இந்த பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா என் 111 கோடி முனிவர்களோடு உலகை வலம் வர ஆரம்பித்துவிட்டேன், தர்மத்தை காக்க !
உண்மையில் நன்மை நான் !
என் நாமம் சத்தியமே !

Wednesday, May 23, 2018

மனதிலிருந்தே உன் பாவம் உருவாகின்றது. மனம் தான் உன் இந்திரியங்களை கெட்ட வழியில் அழைத்து செல்கிறது. மனம் தான் உன்னை மீண்டும் பிறக்க வைக்கிறது. மனம், மணம், மனனம் இங்கே ஒழுக்கத்தில் நிறைந்த


24-05-2018
மனதிலிருந்தே உன் பாவம் உருவாகின்றது. மனம் தான் உன் இந்திரியங்களை கெட்ட வழியில் அழைத்து செல்கிறது. மனம் தான் உன்னை மீண்டும் பிறக்க வைக்கிறது.
மனம், மணம், மனனம்
இங்கே ஒழுக்கத்தில் நிறைந்தவனுக்கு மனம் அடிமையாகிறது. மனதை உன் அடிமையாக்கு ! மனதிடம் அடிமையாகாதே ! தீய பாதையில் பயணிப்பவன் நிம்மதி அடைவதில்லை. ஒரு நாள் விரதம் இருந்து, ஒரு நாள் ஒழுக்கத்தில் இருந்தால் உனக்கு நிம்மதி வருவதில்லை. மனதை என் கொட்டிலில் கட்டு ! தீமையான நோக்கத்தில் எதையும் அணுகாதே !
மணம் என்பது உன் பிரானனுக்கு உகர்ந்தது ! கடவுள் நிலை அறிய வைக்கும் தத்துவம். உன் உணர்வுகளும், உணர்ச்சிகளும் படைப்பின் சூட்சுமத்தை அறிய வைக்கிறது. பூக்களின் மணம் உனை மென்மைக்கு அழைத்து செல்கிறது.
எப்போதும் நல்லவற்றை மனனம் செய் ! எப்போதும் நல்லதை நினை ! பேசு ! எனக்கு மனம் என்பதில்லை ! நான் ஆன்ம வழி நடப்பதால் நான் ஆனந்தமாக இருக்கிறேன். தன்னம்பிக்கை உள்ளவன் எதற்கும் அடிமையாகமாட்டான் ! நீ யாருக்கும் அடிமையாக இருக்க நினைக்காதே ! அன்புக்கு அடிபணிந்து பார் ! ஆரோக்கியம் உருவாகும்.
மனம் தான் உன்னை கீழ்நிலைக்கு அழைத்து செல்கிறது. காமத்திலும் மோகத்திலும் உனை பணிய வைக்கின்றது. திருமணமும், குழந்தைகளும் ஆனந்தம் என்று இயற்கை உன்னை ஏமாற்றுகிறது ! ஆசையை உருவாக்கி உனை மீண்டும் பிறக்க வைக்கிறது. வாரிசு வேண்டும் என்று அலைகின்றான் மானுடன். ஆனால் தன் பாவத்தையே பூமியில் விதைக்கின்றான் என்பதை அறியாமல் வாழ்கின்றான்.
மணத்தை (சுவாசம்) உற்று நோக்கு. பூக்களின் வாசமும், பூமியின் வாசமும், மழை நீரின் வாசமும் உனை அறிய வைக்கும் ! இங்கே எல்லை இல்லா ஆனந்தம் உண்டு. அறிந்தவன் உணர்ந்தவன் இன்பமடைகிறான்.
சத்தியம் தவறுகின்றவன் மனதால் பாவம் செய்கிறான் !
மனதால் செய்யும் பாவத்திற்கும் தண்டனை உண்டு. நீ எப்போதும் என் நாமத்தை மனனம் செய். உன் மனம் அடங்கும். மனமே சகலமும் ! அந்த மனம் என் காலடியிலே ! நீ உருபெற நான் நரமாமிசத்தால் உருவானேன்.
உணரடா உனக்கு ஞானமிருந்தால் ! ஆசில் என்பது நீ ஒழுக்கமாக இருப்பது தான். சத்திய பாதையில் நடந்து உன்னை உயர்த்துவது தான் என்பதை புரிந்து கொள் !
நான் உன் ஆன்மா !
நான் இநன்யா !

Wednesday, May 16, 2018

கணவத்தின் வேர் ஆளுமைமிக்கது. எதற்கும் பயப்படாது ! செலதன் வேர் உன் ஆண்மையை சுத்தமாக்குவது. நீ வேரை மறந்தாய் வேதனை கொள்கின்றாய் ! வேர் !


to INANYA MAHA MUNIVAR
17-05-2018
கணவத்தின் வேர் ஆளுமைமிக்கது. எதற்கும் பயப்படாது ! செலதன் வேர் உன் ஆண்மையை சுத்தமாக்குவது. நீ வேரை மறந்தாய் வேதனை கொள்கின்றாய் !
வேர் !
வாழ்க்கையை கற்று கொண்டால் தான் வாழ பிடிக்கும் ! எந்த ஒரு கருவியையும் அடிவரை கற்று கொண்டால் தான் சுகம் கிடைக்கும். எதிலும் ஆழ்ந்து விடு ! தீய எண்ணத்தால் அல்ல ! கடவுளின் பேரன்பில் ! வாழ்வும் அப்படித்தான் !
வாழ்க்கையை கற்று கொண்டால் தான் வாழ்வு ஆனந்தாமாக இருக்கும் ! ஆனால் நீ அன்பை கற்கவில்லை. அறிவை கற்கவில்லை. பிறரையும் பிறர் வரலாற்றையும் கற்று கொள்ள நினைக்கின்றாய். ஆழ மூழ்கி முத்தெடுத்தவன் இங்கே குறைவு. வாழ தெரியாதவர்கள் இங்கே நிரம்ப கண்டேன் !
நீ வாழ்வை ஆராய, ஆராய உனக்கு மிரட்சி வரும். பின் பூரிப்பு வரும். மரத்தின் வேராய் இரு ! எல்லாவற்றையும் தாங்கி பிடித்து மண்னோடு இணக்கமாக இருந்து மரத்தை அண்ணாந்து பார்க்க வைக்கும் வேர் வலிமை தானே ?
மரமாக இருக்க ஆசை கொள்ளாதே ! மனிதன் வெட்டி சாய்த்துவிடுவான். வேராய் இரு ! மீண்டும் துளிர்க்கலாம் ! மறைந்து இருந்து மரத்தை தாங்கி பிடிக்கும் ஆணி வேராய் இரு ! மரத்தின் வேர் நீரை தேடுவது போல நீ அறிவை தேடும் வரை தான் நீ உன்னை மிக புத்திசாலியாக நினைப்பாய் ! ஆனால் நீ அறிவானவன் என உணரும் போது நீ ஒன்றுமில்லா பூஜ்யம் என நினைப்பாய் !
இயற்கை, கடவுள், உன் சிருஷ்டி மிக ஆச்சரியம் தான் ! நான் வேராய் இருக்கிறேன். என்னுள் எத்தனை கோடி மரங்கள் இருப்பதை அறிவாயோ நீ ?
கடவுள் இல்லை என்று பிதற்றாதே !
மதம், இனம், ஜாதி என்று பிரித்து உன்னை வளர்க்க நினைக்காதே ! கடவுள் மரத்தின் வேரைப் போல மறைந்திருக்கின்றான். நீ அறியாமல் கடவுள் இல்லை என்று பிதற்றலாகுமோ ?
எதுவும் இங்கு இழப்பல்ல ! இயல்பாய் இரு !
இயல் (சக்தி) நான் ! இசையும் (மூச்சு) நான் ! உனை இயக்கும் சூட்சுமமும் நான் ! நான் கற்றவனல்லை ! கற்பினையற்று உனக்கு உணர்ச்சியூட்டுகிறேன். எதையும் படித்து உனக்கு பாடம் நடத்தவில்லை. எனக்குள் எல்லாம் விரிந்து கிடக்கிறது. நான் சுயம்பு. எனக்கு குரு யாருமில்லை ! நானே குருவாய் இருந்து என்னில் கற்றேன். மயக்கமில்லா வாழ்வை மடியில் வைத்திருக்கிறேன் !
தெரிந்த அன்பும், திறனுள்ள பற்றும் என்னுள் !
என் அடிமுடி காணாது போனாய் ! கணவத்தின் வேர் பயமில்லாதாது. எதற்குள்ளும் துணிந்து ஊடுறுவும். ஆனால் அன்புமிக்கது. உன் உடலை பக்குவபடுத்தும் சூட்சுமம் அதில் உண்டு.
நாயுருவி வேரில் நயம் பயக்கும் சூட்சுமம் உண்டு ! தும்பை வேரில் உன் துயர் துடைக்கும் சூட்சுமம் உண்டு ! வாழை தூறில் வாதம் போக்கும் சூட்சுமம் உண்டு ! எல்லா வேரிலும் இன்முகம் தானுண்டு ! ஆனால் மனிதன் வேர் கொண்ட மரத்தை வெட்டி சாய்த்து தன் சந்ததியின் வேரை வளர விடாமல் செய்கின்றான்.
வேர் (மூலம்) எனக்குள்ளே !
மூச்சை தடுத்து நிறுத்தும் வேதமும் எனக்குளே !
ஆறும் எனக்குள்ளே !
அரசாட்சி புரியும் ஆளுமையும் எனக்குள்ளே !
உணர் ! உனக்கு ஞான செருக்கிருந்தால் !
ஆணி வேர் நானடா !
நான் இநன்யா !

Wednesday, May 9, 2018

என் நாவிலே ச்ருதி உண்டு ! நாயகன் விண் படைத்தோன் என் நெஞ்சில் உண்டு ! நாளெல்லாம் ஆனந்தம் தரும் என் அன்பின் அன்னை வசியாவும் உண்டு ! ஒன்றை கொடுத்தான்.


10-05-2018
என் நாவிலே ச்ருதி உண்டு ! நாயகன் விண் படைத்தோன் என் நெஞ்சில் உண்டு ! நாளெல்லாம் ஆனந்தம் தரும் என் அன்பின் அன்னை வசியாவும் உண்டு !
ஒன்றை கொடுத்தான்.
மேலிருந்து உன்னிடம் ஒரு பொருள் தந்து அனுப்பினார் என் தந்தை பிரபஞ்ச நாயகன் ! நீ அதை உபயோகிக்க தெரியாமல் உருக்குலைந்து போனாய். காலம் தான் அந்த பொருள். காலம் தான் உனை உணர வைக்கும். காலம் தான் உன் சொத்து ! அந்த காலத்தை விரயப்படுத்தி விகாரமானாய். ஏனடா ?
காலம் தான் கடவுள் என்பதை மறாவாதே ! மூன்று காலத்திலும் முதல்வனோடு இருப்பவன். ஆறு காலத்தில் ஆனந்தமாக நிற்பவன் ! நானே காலம் ! நீ காலத்தை மறந்து காலனுக்கு இரையாகினாய் !
கடந்த காலத்தை நினைத்து எதிர்காலத்தை எண்ணி பயந்து இன்று நடக்கும் நிகழ்காலத்தை மறந்தாய். இன்று இருக்கும் இறப்பே நீ ! இன்னொன்றும் முக்கியமாக தந்தார் ! ஆனால் மனிதன் மறந்தான். பொன் தரவில்லை , பொருள் தரவில்லை என்று புலம்புகிறான். ஆனால் உயரிய அறிவை தந்தான் என் தந்தை . அறிவை விரிக்காமல் ஒடுங்கி போனாய். கல்லறையிலே மீண்டும் பிறப்பதற்காக !
பூமியில் எதுவும் இல்லாமல் வாழலாம் ! ஆனால் புனித நீர் தந்தாரே, என்றாவது நன்றி சொன்னாயா ? படைத்த பொருள் எல்லாம் உனக்காகத்தான் ! ஆனால் படைத்ததில் மிக உயர்ந்தது சத்திய பெண்கள் தான் ! எதையும் அனுபவிக்க தெரியாமல் ஆளத் தெரியாமல் மாண்டு போகிறாய்.
எல்லாம் தந்தான் உயிர் வாழ ! பாவமடா நீ ! உயிரற்ற சட பொருளை வேண்டி நிற்கின்றாய் ! காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது என படித்தாய். ஆனால் நீ காலமும் அறியவில்லை ! கடமையும் அறியவில்லை ! குறை, குறை என்று வாழ் நாளெல்லாம் குமுறுகிறாய் !
நிறையுடையோன் உன்னுள் ! இதை ஏன் மறந்தாய் ? கடவுளிடம் எதுவும் கேட்காதே ! எப்போதும் நன்றி சொல்லும் மன நிலையில் உனை கொண்டு வா ! எல்லாம் உனக்கு வசமாகும் ! காலம் தந்த நாயகன், உண்ண உணவும், உடுக்க உடையும் , நீரும் , தானியமும், உறங்க இடமும் தந்தான் பரமபதன் யாகவன் சுயநலமில்லா அன்னையை போல !
உன் பாவத்தை, கர்மத்தை கரைக்க வழி சொல்லி தந்து அதை சுமக்கவும் செய்தான் தூயவன் என் யாகவா ! எனக்கும் கற்று தந்தார் ! என்றாவது கடவுளுக்காக கண்ணீர் சிந்தினாயா ? உலகில் உயர்வானது ஒன்று தாய்மை ! இன்னொன்று கடவுள் ! இருவரும் உன் சுமையை சுமப்பவர்கள் !
இந்த தூய உச்சத்திற்கு என்றும் நன்றியோடு இரு ! காலம் உன் காலடியில் வரும் உன் மனம் அழுக்காகி அனர்த்தமாகியிருக்கிறது. அதனாலே கடவுள் உன் கண்களுக்கு தெரிவதில்லை. கடவுள் நீக்கமற நிறைந்திருக்கிறான் காலத்தில் சூட்சுமமாய் !
எல்லா இடத்திலும் இன்முகமாக இருக்கின்றான் ! ஆனந்தமானவன் என் அருகிலே ! ஆளுமையோடு உணரடா, உண்மை நானென்று !
காலம் என் வலக்கரத்திலே !
வா காலத்தை வெல்லும் சூட்சுமம் அறிவாய் என் நாமத்தில் !
காலம் நான் !
நான் இநன்யா !

மேலே சுத்தவாளி என்று பெயரெடுக்க ஆசைப்படு ! யாஷ்ய தீர்ப்பு காண்டம் உன் வரவை நோக்கி ! நிறைகாண் !

03-05-2018
மேலே சுத்தவாளி என்று பெயரெடுக்க ஆசைப்படு ! யாஷ்ய தீர்ப்பு காண்டம் உன் வரவை நோக்கி !

to
 INANYA MAHA MUNIVARமேலே சுத்தவாளி என்று பெயரெடுக்க ஆசைப்படு ! யாஷ்ய தீர்ப்பு காண்டம் உன் வரவை நோக்கி !
நிறைகாண் !
வாழ்வில் எப்போதும் குறை சொல்லி வாழ்கின்றாய் ! செய்கின்ற வேலையில், காண்கின்ற பொருளில் எல்லாம் குறை சொல்லி திரிகின்றாய். உனதருகில் இருக்கும் உறவுகளை குறை சொல்கின்றாய். இங்கே எதிலும் நிறை காண்பவன் நிம்மதியாய் இருக்கின்றான் !
நிறைமதியே பூர்ணசந்திரன் என்று புகழ்கின்றாய். மழையை, காற்றை, நீரை, சூரிய சுற்றத்தை எல்லாம் குறை சொல்லி தன்னில் குறையோடு வாழ்கின்றாய். தினமும் கடவுளை குறை சொல்லி மனித மூளையை செயல் இல்லா ஆக்கும் மானிடமே இங்கே நிரம்ப கண்டேன் !
உன்னில் குறை உண்டு அதை சீர்படுத்தி, சரிபடுத்து. எல்லாம் நிறையாக உன் குறைகளை உற்று நோக்கி சீர்படுத்து !
ஞானிகள், மகான்கள் எல்லாவற்றிலும் நிறைகண்டார்கள். நிம்மதியாய் எப்போதும் ஆனந்த நிலையில் வாழ்ந்தார்கள். நீ ஜடப்பொருளை கூட குறை சொல்கின்றாய். எப்போதும் முனுமுனுப்பாய் வாழ்கின்றாய். பயம், குறை, தன்னிலை மரத்தல் இதுவே உன் குறை ! எதையும் சரிபடுத்த முயலவில்லை. ஆனால் நிம்மதியை தேடுகின்றாய். நன்றி என்ற வார்த்தையை மறந்தான். கடவுளை தேடுவது, கோயிலுக்கு செல்வது, சித்தர்களை தேடுவது எல்லாம் எதிர்பார்த்து தான். கண்டுபிடித்து குறை சொல்லத்தான் !
உயிர் போகும் நிலையில் என்னிடம் வருவான். சுகம் கொடுத்தால் தன்நிலை மறப்பான். துன்பம் தீர்ந்து சுகம் கொடுத்தால் கடவுளை மறக்கின்றான். நன்றி சொல்ல மறக்கின்றான். என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் “நிம்மதியை நான் கொடுத்தால் நீ என்னை மறப்பாயடா” என்று !
கர்மத்தை, பாவத்தை தூக்கி சுமந்து கொண்டு கடவுளை குற்றம் சொல்லி கயவனாக திரிகின்றான். உயிரை கொடுத்தவனுக்கு மயிரை வளர்க்க தெரிந்தவனுக்கு, மரணத்தை நிர்ணயித்தவனுக்கு மனிதனின் நிலை தெரியாதா என்ன ?
மனிதன் குறுகிய மனபான்மையோடு வாழ்கின்றான். மனைவியோடு சண்டை, சொத்து தகராறு, ஜுரம், தலைவலி, கால் வலி என்று கடவுளிடம் புலம்ப கண்டேன். இந்த அற்ப செயல் அரை நொடியில் பஸ்பமாகும். ஆனால் என்னில் நிம்மதி வேண்டும், ஞானம் வேண்டும், மீண்டும் பிறவா வரம் வேண்டும் என்று கேட்பாரில்லை. வேடிக்கை மானுடமடா !
என் வியாதி சரியாகவில்லை. அதனால் இநன்யா கடவுள் இல்லை என்று பிதற்றுகின்றான். வேடிக்கை மனிதனடா ! உன் குறை, உன் பாவம், உன்னை உருக்குலைத்து மூலையில் முடங்க வைக்கிறது !
என்னில் குறை இல்லை ! நீ குறையில்லா வந்தால் நிறையோடு செல்வாய் ! நான் எல்லாவற்றிலும் நிறையை காண்கின்றேன் ! தன் குறை நினைப்பவன் பிறர் குறை நினைக்கமாட்டான். கடவுள் நிறைவான வாழ்வை தந்தும் மனிதன் இறக்கும் வரை குறை இருப்பதாய் எண்ணி இறக்கின்றான்.
கடவுள் அன்பானவன் ! நிறையுடையோன் ! அவனில் குறை இல்லை. உன் குறை நான் தீர்ப்பேன், நீ உணர்ந்தால் !
பயத்தையும், குறை சொல்லும் மனதையும் மாற்று ! மாயவன் உனை நிறையாக்குவேன் ! மிருகங்கள், பறவைகள், மரங்கள் குறை சொல்வதில்லை ! குறையோடு வாழ்வதில்லை ! இந்த அற்ப மனிதன் தான் குறை சொல்லி குறையோடு வாழ்கின்றான்.
என்னிடம் இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யும் மானுடமே நிரம்ப அவனே நிறை இல்லா வாழ கண்டேன் !
எனை அறிந்தவன் நிறைவோடு வாழ்வான் !
நிறையுடையோன் நான் !
நான் இநன்யா !