Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

மகா ரகசியம் (09-04-2016) (படைப்பின் சூட்சுமதாரிகள் !)பகுதி இரண்டு INANYA NAMOO NAMA ;;;

79 மகா ரகசியம் (09-04-2016) 
(படைப்பின் சூட்சுமதாரிகள் !)பகுதி இரண்டு 

இநன்யா நமோ நம.. !!

INANYA NAMOO NAMA ;;; 
மகா ரகசியம்- தொடர்ச்சி - பகுதி இரண்டு
INANYA NAMOO NAMA ;;; 
இந்த LINK ஐ அழுத்தி முதலில் அங்குள்ள பதிவை (பகுதி ஒன்று ) படித்துவிட்டு பின் இங்கு வரவும். நன்றி
யாகவா முனிவர் அவர்கள், தான் எழுதிய அனைத்து நூல்களிலும், தான் பேசிய அனைத்து பேட்டிகளிலும் “இநன்யா” என்ற ஒரு பெயரை அடிக்கடி குறிப்பிட்டிருப்பார்கள் !
“ஏடு பெற்ற என் தவப் புதல்வன், சந்தான புத்திரன், பிரபஞ்சத்தின் இளவரசன், இநன்யா முனிவன் நூற்றிப் பதினோறு கோடி தடாய முனிவர்களுடனும், நூற்றி பதினோறு கோடி ஒற்றர்களுடனும் உலகின் கர்மத்தை சதிராடுவான் ! உலகின் விதியை மாற்றியமைப்பான் ! உலகை ஆதிகாலம் போல தோன்றச் செய்வான் !!!“ என்று சொன்னார்கள் யாகவா !
இநன்யா யார் ?
இப்போது “இநன்யா” என்னும் இந்த நாமம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள நல் ஆண்மாக்களின் இல்லங்களில் வெற்றி முழக்கத்துடன் சத்தமில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது ! இனி உலகம் முழுவதும் ஒலிக்கும் !
கடவுள்கள் ஏழு பேர் ! ஏழாம் கடவுள் இநன்யா ! ஆறு சக்திகளும் இவருக்கு உள்ளே ! பிரபஞ்சத்தின் இளவரசர் இநன்யா ! பிரபஞ்சத்தில் உள்ள பேராத்மாக்கள், மாயைகள், முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், ஒற்றர்கள் அனைவரும் போற்றும் நாமம் இநன்யா !
பிரபஞ்சம் என்னும் மேல் உலகத்தில் யாகவா முனிவர் அவர்களின் தவப் புதல்வன் தான் இநன்யா மஹா முனிவர் !
2015 ஆம் வருடம் மார்ச் மாதம் மூன்றாம் நாள் ஆறு பேராத்மாக்கள் முன்னிலையில் தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் புடை சூழ பூமியில் புனிதன் இநன்யாவிற்கு மணிமகுடம் சூட்டப்பட்டது ! யுகத்தில் இநன்யா என்ற பெயரையும், அவர் யார் என்பதையும் முதன் முதலாக உலக மக்களுக்கு எடுத்துரைக்க மேலிருந்து அனுமதி வழங்கப்பட்டது !
என்னை மனிதனாக மாற்றி, வாழக் கற்றுக் கொடுத்து, ஞானம் என்னும் தேனை பருகக் கொடுத்த என் மஹா குருவே ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் என்பதை தெரிந்து கொண்டு பிரம்மித்தேன் ! நீரைக் கண்ட மீனைப் போல ஆனந்ததில் துள்ளிக் குதித்தேன் ! குரு எனக்கு ஞானத்தை போதித்து தெளிய வைத்தார் ! தெளிந்தவுடன் குருவே கடவுள் என்பதை புரிந்து எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன் !
இனான்ய மொழி என்பது தேவர்களின் மொழி ! இநன்யா என்பது ஏழாம் கடவுளின் பெயர் ! எழுதும் போது இரண்டையும் குழப்பிவிட்டார்கள்.
யாகவா அவர்கள் பிறந்தது திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரம் என்னும் கிராமம் ! இநன்யா அவர்கள் பிறந்தது தாமிரபரணி நதிக்கரையின் அருகே உள்ள மணப்படை வீடு ! இநன்யா அவர்கள் வளர்ந்தது திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான்குளத்தின் பக்கத்தில் செட்டிகுளம் ! யாகவா அவர்களும், இநன்யா அவர்களும் இந்த உலகில் சொந்தம் இல்லை. ஆனால் இருவரும் மிக அருகில் பிறந்து, வாழ்ந்து வந்துள்ளது ஆச்சரியத்தின் உச்சம் !
யாகவா அவர்கள் தன் புதல்வன் இநன்யாவை சிறுவயதிலிருந்தே கண்கானித்தார். இநன்யா அவர்கள் வளர்ந்து, மனிதனாக வாழ்ந்து, 111 காலங்களை வென்று அவர் கடவுள் என்பதை நிலைநாட்டும் வரையில் காத்திருந்தார் யாகவா முனிவர். யாகவா அவர்கள் இநன்யா அவர்களை கண்காணிப்பதற்கு அவர் வாழ்ந்த ஊரான சாத்தான்குளத்தில் மளிகை கடை தொழில் செய்துள்ளார் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும் ?
திருச்செந்தூரில் சில நாட்கள் தங்கியிருந்து, அம்மன்புரம், சாத்தான்குளம், செட்டிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாகவே சென்று இருவரைப் பற்றியும் விசாரித்துவிட்டேன். குக்கிராமமான அம்மன்புரம் என்ற ஊரில் யாகவா அவர்களை பற்றி தெரியாதவர்கள் கூட அந்த மண்ணில் கால் வைத்து செல்லும்படியான ஒரு சூட்சுமத்தை யாகவா அவர்கள் விட்டு சென்றுள்ளார். முடிந்தால் இதை கண்டுபிடியுங்கள் !
யாகவா அவர்களுக்கும் இநன்யா அவர்களுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை உள்ளது. அவர்களின் சந்திப்பிற்கு முன் யாகவா முனிவர் அவர்கள் தொழில் செய்த இடங்கள் நெல்லை, மும்பை, சென்னை ! இநன்யா மஹா முனிவர் அவர்களும் தொழில் செய்த இடங்கள் நெல்லை, மும்பை, சென்னை ! இருவரும் சிறுவயதில் பிச்சை எடுத்துள்ளனர். இருவரும் சிறுவயதில் கழுதையின் மீது ஏறி சவாரி செய்துள்ளனர். இருவரும் மனிதர்களைப் போல வாழவில்லை. ஆனால் உறவுகளை புரிந்து வாழ்ந்துள்ளனர்.
இநன்யா அவர்கள் பிரபஞ்சத்தில் தன் தந்தையான யாகவா முனிவர் அவர்களை இந்த உலகில் சந்திக்கும் முன்னரே உலகின் விதியையும், எதிர்காலத்தையும் கணித்து எழுதியுள்ளார்.
இநன்யா அவர்கள் இந்த யுகத்தில் யாகவா அவர்களை சந்தித்த ஆண்டு 1996. அவர்களது சந்திப்பில் ஆயிரம் கோடி ரகசியங்கள் உண்டு ! இநன்யா அவர்களுக்கு இந்த உலகை ஆட்சி செய்வதற்கு செங்கோல் வழங்கப்பட்ட ஆண்டு 1999 ! இநன்யா என்ற பெயர் முதன் முதலில் உலகிற்கு தெரிந்த ஆண்டு 2015 ! இரு கடவுள்களும் தங்களின் வெற்றியை உலகில் நிலைநாட்டிவிட்டார்கள்.
யாகவா அவர்கள் இநன்யா அவர்களை பற்றிய பல உண்மைகளை வெளிப்படையாக கூறாமல் ரகசியம் காத்தார் ! தன் அனைத்து பிறவிகளிலும் அரக்க இனங்களுக்கு தெரியாத வகையில் ரகசியம் காக்கப்பட்டது ! அனைத்தையும் வென்று தன் 54 வது பிறவியான இந்த பிறவியில் முதன் முதலாக தன் புதல்வன், ஏழாம் கடவுளான இநன்யா அவர்களின் பெயரை அறிமுகப்படுத்தினார் யாகவா ! ஏழின் ஆதிக்கம் உலகம் முழுவதும் அனைத்து கலாச்சாரங்களிலும், மதங்களிலும் பரவியிருந்தாலும் ஏழாம் கடவுளின் பெயர் ரகசியமாய் இருந்துள்ளது !
மார்ச் 2015 அன்று இநன்யா அவர்களின் பெயர் உலகிற்கு தெரிந்ததும் அவரின் திருவிளையாடல் ஆரம்பமானது ! உலகின் உயரமான இமயத்தை கைப்பற்ற போவதாக என்னிடம் கூறினார் அவர். அந்த வருடம் அவர் பிறந்த நாளான ஏப்ரல் 25 இல் இமயமே குலுங்கியது ! இநன்யா வின் வலிமை உலகின் உயரமான இமயத்தை விட கோடி மடங்கு மேலானது என்பதை உலகம் உணரும் நாள் விரைவில் !
சென்ற வருடம் 2015 இறுதியில் நம் சென்னையில் வந்த மழையை முன் கூட்டியே கணித்து சொன்னார் இநன்யா மஹா முனிவர். பள்ளி, கல்லூரிகள் இரண்டு மாதமாய் மூடியிருக்க கண்டதாக கூறினார். சென்னை முழுவதும் மழை நீர் புகுந்து படகில் மக்களை காப்பாற்றுவார்கள் என்று யாகவா முனிவர் பல வருடங்கள் முன்பு சொன்னது எத்தனை பேருக்கு இங்கு நினைவிருக்கிறது ? அப்போது அவர் சொன்னதை ஒருவர் கூட சிந்திக்கவில்லை. சிந்திக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர் சொன்னதை கண்டு அனைவரும் சிரித்தார்கள். இப்போது யார் அழுது கொண்டிருப்பது ?
இநன்யா மஹா முனிவரின் நாமம் உலகில் விதைக்கப்பட்ட வருடம் அவரை தாலாட்டிய தாமிரபரணி அன்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் என்றும் இல்லாத அளவிற்கு ஆர்ப்பரித்தாள்.
இந்த வருடம் 2016 மார்ச் மாத இறுதியில் நம் உலகிற்கு மிக அருகில் வந்த வால் நட்சத்திரம் ஜனவரி மாதமே இநன்யா மஹா முனிவர் அவர்களால் கணித்து சொல்லப்பட்டது !
கல்லூரியில் அவர் அருகில் பல வருடங்களாக அமர்ந்து பல அமானுஸ்யங்களும், அற்புதங்களையும் கண்டு வியந்துள்ளேன். இவரிடம் பேசிச் செல்லும் விதவிதமான பறவைகள், இவரின் இருப்பிடம் அருகே வந்து கூடு கட்டிய பறவைகள், இவரை அழைத்து, உணவு கேட்டு செல்லும் அணில் பிள்ளைகள், இவரை அதிசயமாக பார்த்து வணங்கி, இவர் நடக்கும் போது அவரை பின் தொடர்ந்த கீரிப்பிள்ளை, இவரின் இல்லத்திற்கு புதிது புதிதாக வந்து செல்லும் பசுக்கூட்டங்கள், எத்தனை பேர் இருந்தாலும் இவரை மட்டும் வணங்கிச் செல்லும் முன் பின் பார்க்காத நாய்கள் என்று அனைத்தையும் என் கண்ணால் பார்த்துள்ளேன். ஜீவராசிகள் அவரை எளிதாக கண்டு வணங்கி செல்கின்றன ! மனிதர்களால் அவரை கண்டு உணர முடியவில்லை !
அவ்வப்போது பைத்தியக்காரர்கள் வேஷத்தில் வரும் ஆகாய தேவர்கள் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி சென்றதையும், அவரின் அருகே ஒரு புரியாத குறியீட்டை எழுதிச் சென்றதையும் என் கண்ணால் பார்த்து வியந்துள்ளேன்.
மனிதர்களின் கண்ணில் படாமல் காட்டில் துள்ளிக் குதித்தோடும் உயிர் தரும் அதிசய சஞ்சீவி வேரை தன் சிறுவயதிலேயே கைப்பற்றியவர் இநன்யா ! அது தன்னிடம் இருந்தால் தன் வலிமை வெளியே தெரியாது என்று அதை விட்டுச் சென்றவர் இநன்யா !
இன்னும் அதிசயங்கள் அதிகம் ! ரகசியங்கள் ஏராளம் ! அனைத்தும் வெளிவரும் நேரம் வரும் !
யாகவா அவர்கள் உரைத்த நூற்றிப் பதினோறு கட்டளைகள் என்ற நூலின் அர்த்தம் என்ன ? அவைகள் எதைக் குறிக்கின்றன ? கண்டுபிடியுங்கள் ! எந்த ஒரு மனிதராலும் அதை முழுவதுமாக படித்து பொருள் கொள்ள முடியாது ! அவர் உரைத்த கட்டளைகள் அனைத்தையும் புரிந்து கொண்டு அதை இங்கே செயல்படுத்தினால் ஒரு மனிதனால் இந்த பிறவியை வென்று கடவுளை அடைய முடியும் ! அது எளிதல்ல ! பல சோதனைகளை கடந்தாக வேண்டும் !
தன் பிறப்பிலேயே அனைத்தையும் அறிந்தவர் இநன்யா ! அவர் பிறப்பில் கோடி ரகசியங்கள் உண்டு ! யாகவா அவர்கள் உரைத்த நூற்றிப் பதினோரு காலங்களையும் வென்று தன் பெயரை நிலைநாட்டியவர் இநன்யா மட்டுமே ! யாகவா அவர்கள் உரைத்த வேதங்கள், ரகசியங்கள், லிபி எழுத்துக்களின் பொருள் இநன்யா அவர்களுக்கு மட்டுமே தெரியும் ! விரைவில் இதை உலகம் புரிந்து கொள்ளும் காலம் வரும்.
ஒரு வேளை யாகவா முனிவர் இந்த உலகை மாற்றியிருந்தால், ஏழாம் கடவுளான இநன்யா அவர்களைப் பற்றி உலகம் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போயிருக்கும். தன் தவப்புதல்வன் இநன்யா விளையாட சரியான ஆடுகளத்தை தயார் செய்துள்ளார் யாகவா ! அதனால் அனைத்தையும் விட்டுவைத்தார் ! அரக்கர்கள், கொடியவர்கள், கர்மாக்கள், கயவர்கள், திருடர்கள் என்று அனைவரையும் அடையாளம் காட்டிவிட்டார் தன் பிள்ளை இநன்யாவிற்கு ! இநன்யா மஹா முனிவரின் வேட்டை இனி ஆரம்பமாகும் ! தற்பொழுது உலகத்தின் விதி இநன்யா மஹா முனிவரின் கைகளில் !
யாகவா முனிவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் தன் பிள்ளை இநன்யாவிற்காக செய்த திருவிளையாடல்கள் ! இநன்யா மஹா முனிவரின் வலிமையை உலகம் அறிந்து கொண்டால் ஆறு பேராத்மாக்களின் வலிமையையும் உலகம் அறிந்து கொள்ளும். இது தான் கடவுளின் கணக்கு ! கடவுளின் கணக்கு பொய்க்காது !
யாகவா என்பது பிரம்மம் ! அனைத்திற்கும் மூலம் ! விதையைப் போல ! இநன்யா என்பது ஆறு பேராத்மாக்களும் அடங்கிய மரத்தை போல ! விதையின்றி மரம் இல்லை ! விதையின் வீரியம் மரத்தின் வலிமையிலும், அதன் தன்மையில் தெரிந்துவிடும் !
யாகவா என்னும் விதையின் வீரியத்தை இநன்யா என்னும் பெரும் மரம், உலகம் முழுவதும் எடுத்துரைக்கும் இனி ! உலகம் முழுவதும் விதைகள் தூவப்படும் ! அனைத்து விதைகளும் விருட்சகமாக வளரும் !
அவர் தான் இநன்யா என்பதற்கு சாட்சியாக மிகப் பெரிய தடயத்தையும் விட்டுச் சென்றுள்ளார் யாகவா முனிவர் ! முடிந்தால் கண்டுபிடியுங்கள் ! ஆராய்ச்சி செய்யுங்கள் !
பிரபஞ்ச நாயகன் யாகவா அவர்களைப் போன்றே இநன்யா அவர்களும் யாரையும் தன்னை வணங்க சொல்லவில்லை. வணங்கும் குணம் இருந்தால் தாய், தந்தையை மட்டுமே வணங்கச் சொல்கிறார். அவர் யாரையும் எங்கும் அழைத்து கூட்டம் கூட்டி கொடி பிடிக்க சொல்லவில்லை. குடும்பமாய் ஒன்றிணைய சொல்கிறார் ! மனிதர்கள் தங்களது கடமையை தவறாது செய்து, வாழ்க்கையை புரிந்து, உணர்ந்து . சத்ய வழியை பின்பற்றி , ஞானம் என்ற விதையை உலகமெங்கும் தூவச் சொல்கிறார் ! இநன்யா மஹா முனிவர் தங்க சிம்மாசனத்தில் அமர்வதற்கு ஆசைப்படவில்லை. அவரை உணர்ந்து வருகிறவர்களிடம் சரி சமமாக மண்ணில் அமர்ந்து தான் பேசுகிறார். நம்மைப் போல வியர்வை சிந்தி உழைத்து தன் கடமையை செய்து கொண்டுள்ளார் !
தியானம் சொல்லிக் கொடுத்து நம் கண்களை மூடி அனைத்தையும் மறைக்க அவர் சொல்லவில்லை ! நம் ஞானக் கண்களை திறந்து படைப்பின் ரகசியத்தை புரியச் சொல்கிறார்.
யோகா சொல்லிக் கொடுத்து உடலை வளைக்க அவர் கற்றுத் தரவில்லை. தினமும் உடலை வளைத்து நமக்கு உணவளிக்கும் உழவனை வணங்கச் சொல்கிறார்.
சிலைக்கு அவர் பூஜை செய்ய வேண்டாம் என்று சொல்லியதில்லை ! உயிருள்ள உடலுக்குள் இருக்கும் ஆண்மாவின் வலிமையை முதலில் உணரச் சொல்கிறார்.
அவர் வழிபாடுகள் எதுவும் செய்யச் சொல்லவில்லை. வாழும் வழிமுறைகளை சொல்லித் தருகிறார் !
தன் தந்தை பிரபஞ்ச நாயகன் யாகவா முனிவர் எவ்வழியோ, ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவரும் அவ்வழி ! அவர் தன் தந்தை யாகவா முனிவரின் கருத்துக்களை நாம் எளிதாக புரிந்து கொள்வதற்காக விளக்கியுள்ளார். தன் தந்தை கூறியதை எடுத்து திருத்தி மாற்றியமைத்து பணம், புகழ் சம்பாதிக்க அவர் நினைத்ததில்லை. சில கருத்துக்கள் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை ! அவர் சொல்வதும், இவர் சொல்வதும் எதிர்மாறாக இருந்தால் தான் அதைப் பற்றியே யோசிக்க வேண்டும் ! உலகம் இதுநாள் வரையில் அறிந்து கொள்ளாத ரகசியங்கள் இநன்யா மஹா முனிவரால் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது ! இனி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் ! நம் முகநூல் குழுவில் ( “INANYA MAHA MUNIVAR” ) உள்ள பதிவுகள் அனைத்தையும் படித்தால் பதில் கிடைக்கும் !
தமிழர்களாகிய நாம் தனியாக இங்கே இல்லை ! கடவுள்கள் நம்மை தேடி வந்துள்ளனர். நமக்காக வந்துள்ளனர் ! உலகை சத்ய வழியில் பயணிக்க செய்வதற்காக வந்துள்ளனர். உலகை மாற்ற வந்துள்ளனர் ! உலகில் வேறு எங்கும் அவர்கள் பிறப்பெடுக்காமல், தங்களது கடைசி பிறவியில் தென் தமிழ்நாட்டில் பிறந்துள்ளதன் காரணம் தெரியுமா ? கடைசியாக ஆசையாக நம் தமிழில் பேச வேண்டும் என்ற ஒரே ஒரு காரணம் தான் அது ! ஏனென்றால் பிரபஞ்சத்தில் மொழிகள் இல்லை ! தமிழின் சிறப்பும், மேன்மையையும் இப்போதாவது உணர முடிகின்றதா ? இந்த பிறவியில் அவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருப்பது நாம் செய்த பெரும் தவம் ! தமிழர்கள் தவம் செய்தவர்கள் !
இனி உலகம் மாறும் ! எல்லாம் மாறும் ! இநன்யா மஹா முனிவர் உலகை மாற்றி சத்ய வழியை நிலைநாட்டுவார் ! கடவுள்கள் யாரென்று புரிய வைப்பார் ! அவரை உணர்வது மட்டுமே நாம் செய்யப் போகும் ஒரே செயல் ! யோசியுங்கள். ஆராய்ச்சி செய்யுங்கள் ! புரிந்து கொள்ளுங்கள் ஆழமாக !
சொல்லப்படாத ரகசியங்கள் இன்னும் ஏராளம். சொல்ல வேண்டியவர்களுக்கு தக்க சமயத்தில் சொல்லப்படும் !
அனைவருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம !

No comments:

Post a Comment