Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 7, 2021

கீதைப் பதிவு-18 மோக்ஷ ஸன்யாஸ யோகம்

கீதைப் பதிவு-18 மோக்ஷ ஸன்யாஸ  யோகம்

அர்ஜுனன் சொன்னது

ஹிருஷிகேசா, மகாபாகுவே,கேசி நிஷுதனா, சந்யாசத்தினுடையவும் தியாகத்தினுடையவும் தத்துவத்தைத் தனித்தனியே  தெரிந்து கொள்ள விரும்புகிறேன்(1)

ஸ்ரீபகவான் சொன்னது

காமிய கர்மங்களைத் துறப்பதை சந்நியாசமென்று அறிகிறார்கள் ஞானிகள். எல்லாக் கர்மங்களின் பயனை விடுவதைத் தியாகமென்கின்றனர் தீர்க்க தரிசிகள்.(2)

கர்மங்கள் எல்லாம் குற்றமுடையவைகள் ஆதலால் துறத்தற்குரியவைகள் என்று சில அறிஞர்கள் பகர்கின்றனர்.வேறு சிலர் வேள்வி, தானம், தபசு ஆகிய கர்மங்கள் துறக்கப்படலாகாது.என்கிறனர்.(3)

பரதகுலக் கோவே, புருஷருள் புலியே, தியாகத்தைக் குறித்து நான் கொண்டுள்ள சித்தாந்தத்தைக் கேள்.தியாகமானது மூன்று விதமானதென்றே பகரப் பட்டுள்ளது(4)

யக்ஞம், தானம், தபசு ஆகிய கர்மம் விடப்படுவதன்று.அது செயற்பாலதே.யக்ஞமும் தானமும் தவமும் அறிஞர்களுக்குப் புனிதம் வழங்குபவைகளாம்.(5)

பார்த்தா, பற்றுதலையும் பயனையும் ஒழித்தே இக்கர்மங்கள்யாவும் செய்யப்படவேண்டும் என்பது என் நிச்சயமான உத்தமமான கொள்கை(6)

மேலும் நித்திய கர்மத்தை விடுவது பொருந்தாது. அறிவின்மையால் அதைத் துறப்பது தாமஸமென்று கூறப்படுகிறது.(7)

உடம்பின் வருத்தத்துக்கு அஞ்சி, கர்மத்தை துக்கமெனக் கருதி அதை விடுகிறவன் ராஜசத் தியாகம் செய்கிறான். அதனால் அவன் தியாக பலனை அடைவதே இல்லை.(8)

அர்ஜுனா, பற்றுதலையும் பயனையும் விட்டு செய்வதற்குரியது என்றே எந்த நித்திய கர்மம் செய்யப்படுகிறதோ, அந்தத் தியாகம் சாத்விகமானதென்று கருதப் படுகிறது.(9)

சத்துவம் நிறைந்தவனும், பேரறிஞனும், ஐயத்தை அகற்றியவனும் ஆகிய தியாகியானவன், துன்ப வினையை வெறுக்கான், இன்ப வினையை விரும்பான்(10)

உடலெடுத்தவனுக்குக் கர்மங்களை அறவே விடுவது இயலாது.ஆனால் வினைப்பயனைத் துறந்தவன் எவனோ அவன் தியாகி எனப்படுகிறான்(11)

தியாகிகள் அல்லாதார்க்கு, மரணத்துக்குப் பிறகு இன்னாதது, இனியது, இவ்விரண்டும் கலந்தது என மூன்று விதமான வினைப்பயன் விளைகிறது.தியாகிகளுக்கோ ஒரு பொழுதுமில்லை(12)

பெருந்தோளோய்,கர்மத்தின் முடிவு காட்டும் சாங்கிய சாஸ்திரத்தில் சகல கர்மங்களின் சித்திக்கென்று பகரப் பட்டுள்ள இந்த ஐந்து காரணங்களையும் என்னிடம் அறிந்துகொள்.(13)

உடல், கர்த்தா, வெவ்வேறு விதமான இந்திரியங்கள், பல விதமாக வேறுபட்ட செயல்கள், இவற்றுக்கு ஐந்தாவதாக தெய்வமும் காரணங்களாகின்றன.(14)

மெய்யால் மொழியால் மனதால் மனிதன் நியாயமாக அல்லது அநியாயமாக  எக்கர்மத்தைச் செய்தாலும் இவ்வைந்துமே  அதற்குக் காரணங்களாம்(15)

அது அங்ஙனமிருக்க . முழு முதற்பொருளாகிய ஆத்மாவைக் கர்த்தாவாக இனி யார் காண்கிறானோ. புத்தி பண்படாத அவ்வறிவிலி மெய் காண்கிறானில்லை.(16)

யாருக்கு அகங்காரமில்லையோ, யாருடைய புத்தி பற்று வைக்கிறதில்லையோ. அவன் இவ்வுலகத்தாரைக் கொன்றாலும் கொல்லாதவனே; பந்தப்படாதவனே.(17)

அறிவு. அறியப்படுபொருள், அறிபவன் எனக் கர்மத்துக்குத் தூண்டுதல் மூன்றுவிதம்.கருவி, கர்மம், கர்த்தா எனக் கர்மத்துக்கு இருப்பிடம் மூன்று விதம்(18)

ஞானமும், கர்மமும், கர்த்தாவும் குண பேதத்தினால் மூவகை என்று சாங்கிய சாஸ்திரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.அவைகளையும் உள்ளபடிக் கேள். (19)

வேறு வேறாயுள்ள பூதங்களில், வேறுபடாத, அழியாத, ஏகவஸ்துவை எதனால் பார்க்கிறாயோ அந்த ஞானத்தை சாத்விகமானதென்று அறிக.(20)

பின்பு எந்த ஞானம் எல்லாபூதங்களிலும் வெவ்வேறு விதமான பல ஜீவர்களை ஒன்றினின்று ஒன்று வேறானதென்று அறிகிறதோ அந்த ஞானத்தைராஜசமென உணர்க.(21)

ஒரு காரியத்தையே முழுதுமென்று பற்றிக் கொண்டு, யுக்திக்குப்பொருந்தாத தாயும், உண்மைக்கு ஒவ்வாததாயும் அற்பமாயிமுள்ள ஞானம் எதுவோ அது தாமசமெனப் படுகிறது.(22)

விளைவினில் விருப்பம் வைக்காதவனால், பற்று இல்லாமல், விருப்பு வெறுப்பு அற்று, நியமிக்கப் பட்டுள்ள எக்கர்மம் செயல் படுகிறதோ அது சாத்வீக மானதெனப் படுகிறது(23)

ஆசையினால் வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் பெரும் பிரயாசையுடன் இனி எக்கர்மம் செய்யப்படுகிறதோ அது ராஜசமானது எனப்படுகிறது(24)

வினையின் விளைவையும் நஷ்டத்தையும், துன்பத்தையும்,  தன் திறத்தையும் எண்ணிப் பாராதுமயக்கத்தால் எக்கர்மம் தொடங்கப் படுகிறதோ அது தாமசம் எனப்படும்(25)

பற்று நீங்கியவன், அகங்கார மற்றவன் உறுதியும் ஊக்கமும் உடையவன், வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் இத்தகைய கர்த்தா சாத்விகன் எனப்படுகிறான்.(26)

ஆசையுள்ளவன் வினைப்பயனை விரும்புபவன், உலுத்தன், துன்புறுத்தும் தன்மையன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கொள்பவன் இத்தகைய கர்த்தா ராஜசன் எனப்படுகிறான்.(27)

யோகத்துக்குஒவ்வாத மனமுடையவன். அறிவு வளரப் பெறாதவன், முரடன், வஞ்சகன் , பழிகாரன், சோம்பேறி, துயருறுவோன், காலம் நீடிப்பவன் இத்தகைய கர்த்தா தாமசன் எனப்படுகிறான்.(28)

அறிவினுடையவும், மன உறுதியினுடையவும் ஆகிய மூவகை வேற்றுமையைக் குணங்களுக்கேற்ப பாகுபடுத்தி பாக்கியில்லாமல் பகர்கின்றேன் கேள் தனஞ்சயா.(29)

பார்த்தா பிரவிருத்தியையும். நிவிருத்தியையும் , செய்யத்தகுந்ததையும், தகாததையும், பயத்தையும் , பயமின்மையையும் பந்தத்தையும் மோக்ஷத்தையும் அறியும் புத்தி சாத்விகமானது(30)

பார்த்தா,தர்மத்தையும் அதர்மத்தையும், தகுந்த காரியத்தையும் தகாத காரியத்தையும் தாறுமாறாக எந்த புத்தி அறிகிறதோ, அது ராஜசமானது.(31)

பார்த்தா அக்ஞான இருளால் மூடப்பெற்ற எந்த அறிவானது அதர்மத்தை தர்மமாகவும் பொருள்களையெல்லாம் விபரீதமாகவும் நினைக்கிறதோ அது தாமசமானது(32)

பார்த்தா, யோகத்தைக் கொண்டு பிறழாத எந்த உறுதியால் மனம்-பிராணன் இந்திரியங்களின் செயல்களை ஒருவன் காக்கின்றானோ அந்த உறுதி சாத்விகமானது(33)

மற்று எந்த உறுதியினால் அர்ஜுனா அறம் பொருள் இன்பங்களை ஒருவன் காக்கின்றானோ,பற்றுதலால் பயனை விரும்புகின்றவன் ஆகிறானோ அந்த உறுதியானது பார்த்தா, ராஜசமானது(34)

பார்த்தா தூக்கத்தையும்,அச்சத்தையும், துயரத்தையும், மனக் கலக்கத்தையும் செருக்கையும் விடாது பிடிக்கும் அறிவிலியின் உறுதியோ தாமஸமானது.(35)

ஒருவன் எச்சுகத்தையும் பயிற்சியால் துய்த்துத் துன்பத்தின்  முடிவை அடைகிறானோ, அதன் மூவிதப் பாகுபாட்டையும் இப்போது என்னிடம் கேளாய் ,பரதகுலக் காளையே.(36)

எது முதலில் விஷம் போலவும்முடிவில் அமிர்தத்துக்கு ஒப்பானதுமாகிறதோ அந்த சுகம் சாத்விகமாம். ஆத்ம நிஷ்டையில்தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது(37)

பொறிபுலன்களின் பொருத்தத்தால்முதலில் அமிர்தம் போன்றிருந்து முடிவில் விஷம் போன்றதாகும் சுகம் ராஜசமென்று சொல்லப் படுகிறது(38)

துவக்கத்திலும் முடிவிலும் தன்னை மயக்குவதும் தூக்கம் ,சோம்பல், தடுமாற்றத்தில் இருந்து பிறப்பதுமாகிய சுகம் தாமஸமென்று உரைக்கப்படுகிறது(39)

இயற்கையிலிருந்து உதித்த இம்முக்குணங்களிலிருந்து விடுதலை அடைந்த உயிர் மண்ணுலகில் அல்லது விண்ணுலகில் வானவர்களுக்குள்ளும் இல்லை(40)

எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண க்ஷத்திரிய வைசிய சூத்திரர்களுடைக கர்மங்கள் அவரவர் இயல்பில் உதித்த குணங்களுக்கு ஏற்ப பிரிக்கப் பட்டிருக்கின்றன(41)

அகக் காரணங்களை அடக்குதல், புறக்காரணங்களை அடக்குதல். தவம் தூய்மை,பொறுமை நேர்மை, சாஸ்திர ஞானம், சுவானுபவ ஞானம், ஈசுவர நம்பிக்கை-இவையாவும் இயல்பாய் உண்டாகிய பிராம்மண கர்மங்களாம்(42)

சூரத்தன்மை, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டாமை, கொடை, இறைமை, ஆகியவைகள் இயற்கையில் உண்டாகிய க்ஷத்திரிய கர்மங்களாம்(43)

உழவும் கால்நடை காத்தலும் வாணிகமும் இயல்பாய் உண்டாகிய வைசிய கர்மங்களாம். இட்டபணி ஆற்றுவது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டாகிய கர்மம்(44)

அவனவனுக்கு உரிய கர்மத்தில் களிப்புறும் மனிதன் நிறைநிலை எய்துகிறான். தன் கர்மத்தில் கருத்து வைப்பவன் எப்படி நிறை நிலை அடைகிறான் என்பதைச் சொல்லக் கேள்(45)

யாரிடத்திருந்து உயிர்கள் உற்பத்தி யாயினவோ. யாரால் இவ்வையகமெல்லாம் வியாபிக்கப் பட்டுள்ளதோ அவ் வீசுவரனை சுய கர்மத்தால் வணங்கி மனிதன் மேன்மை எய்துகிறான்(46)

நிறைவாய் அனுஷ்டிக்கும் பர தர்மத்தைவிட குறைவாய் அனுஷ்டிக்கும் ஸ்வதர்மம் சிறந்தது.சுபாவத்தில் அமைந்த கர்மத்தைச் செய்பவன் கேடு அடையான்.(47)

குந்தியின் மைந்தா, கேடுடையது எனினும் உடன் பிறந்த கர்மத்தை விட்டு விடலாகாது.ஏனென்றால் தீயைப் புகை சூழ்வது போன்று வினைகளை எல்லாம் கேடு சூழ்ந்துள்ளது(48)

யாண்டும் பற்றற்ற புத்தி உடையவனாய், சிந்தையை அடக்கியவனாய், ஆசை அற்றவனாய் இருப்பவன் சன்னியாசத்தால் உத்தமமான நைஷ்கர்ம்ய சித்தியை அடைகிறான்(49)

குந்தியின் மகனே, சித்தி அடைந்தவன் ஞானானத்தில் உயர் நிலையாகிய பிரம்மத்தை எப்படி எய்துகிறானென்பதைச் சுருக்கமாக என்னிடம் அறிந்து கொள்,(50)

தூய அறிவுடன் கூடியவன் உறுதியுடன் தன்னை அடக்கியும், சப்தம் முதலிய இந்திரிய விஷயங்களைத் துறந்தும், விருப்பு வெறுப்பை விட்டொழித்தும்(51)

தனித்திருந்து உண்டி சுருக்கிமனம் மொழி மெய்யை அடக்கி யாண்டும் தியான யோகத்தில் திளைத்திருந்து, வைராக்கியம் பூண்டவனாய்(52)

அகங்காரம் வன்மை செறுக்கு, காமம் குரோதம், உடைமை ஆகியவைகளை நீத்து மமகாரமற்று சாந்தமாய் இருப்பவன் பிரம்மம் ஆவதற்கு தகுந்தவன்(53)

பிரம்ம மயமாகித் தெளிந்தமனமுடையவன், துயர் உறுவதில்லை, அவா உறுவுவதில்லை, , எல்லா உயிர்களிடத்தும்  சமனா யிருப்பவன் என் மீது மேலாம் பக்தி பெறுகிறான்(54)

நான் எத்தன்மையன், யார் என்று பக்தியினால் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான், உள்ளபடி அறிந்தபின் விரைவில் என்னை அடைகிறான்(55)

எப்பொழுதும் எல்லாக் கர்மங்களையும் செய்தபோதிலும் என்னைச் சரணடைகிறவன் எனதருளால் சாசுவதமானதும் அழியாததுமாகிய பதமடைகிறான்(56)

விவேகத்தால் கர்மங்களையெல்லாம் என்பால் ஒப்படைத்து, என்னைக் குறியாகக் கொண்டு, புத்தி யோகத்தைச் சார்ந்திருந்து, யாண்டும் சித்தத்தை என்பால் வைப்பாயாக(57)

சித்தத்தை என்பால் வைத்து எனதருளால், இடைஞ்சல்களை எல்லாம் தாண்டிச் செல்வாய், அன்றி அஹங்காரத்தால் கேளாவிட்டால் கேடு அடைவாய்(58)

அஹங்காரங்கொண்டு போர் புரியேன் என்று நினைப்பாயாகில் உன் துணிவு வீணாகும். உன் இயல்பே உன்னைப் போரில் பிணைத்து விடும்(59)

குந்தியின் மைந்தா, மயக்கத்தால் எதைச் செய்ய மறுக்கிறாயோ, உன் இயல்பில் பிறந்த வினையினால் கட்டுண்டு உன் வசமிழந்தவனாய், அதையே நீ செய்வாய்.(60)

அர்ஜுனா, ஈசுவரன் உயிர்களை எல்லாம் உடல் என்னும் எந்திரத்தில் ஏற்றி, மாயையினால் ஆட்டிக்கொண்டு அவைகளின் உள்ளத்தில் இருக்கிறான்.(61)

அர்ஜுனா, எல்லாப் பாங்கிலும் அவனையே தஞ்சமடை. அவனருளால் மேலாம் சாந்தியும் நிலைத்துள்ள வீடு பேறும் பெறுவாய்.(62)

மறை பொருளுக்கெல்லாம் மறை பொருளாகிய ஞானம் இங்ஙனம் உனக்கு இயம்பப் பட்டது. இதை முழுவதும் ஆராய்ந்து விரும்பியதைச் செய்.(63)

அனைத்திலும் ஆழ்ந்த எனது மேலாம் மொழியை மீண்டும் கேள். நீ எனக்கு உற்ற நண்பனாகையால் உனக்கு நலத்தை நவில்கிறேன்.(64)

என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை ஆராதித்திடுவாய். என்னை வணங்கு.என்னையே அடைவாய்.உனக்கு உறுதி கூறுகிறேன்.எனக்கு இனியவன் நீ.(65)

தர்மங்களை எல்லாம் அறவே தியஜித்துவிட்டு(பரித்தியாகம் செய்து)என்னையே சரணடைக..பாபங்களில் இருந்து உன்னை நான் விடுவிப்பேன், வருந்தாதே(66)

தவமில்லாதவனுக்கும் , புத்தி இல்லானுக்கும் , தொண்டு புரியாதவனுக்கும் , என்னை இகழ்பவனுக்கும் இக்கோட்பாட்டை இயம்பாதே.(67)

மிக ஆழ்ந்த இத்தத்துவத்தைஎன் பக்தர்களிடத்து உபதேசித்து, என்னிடத்து மேலாம் பக்தி பண்ணுகிறவன் ஐயமின்றி என்னையே அடைவான்.(68)

மாந்தருள் எனக்கு விருப்பமான செயல்புரிபவனும்  அவனைவிட வேறு யாருமில்லை.. எனக்கு இனியவனும் அவனைவிட யாருமில்லை(69)

தர்மம் நிறைந்த நமது இச்சம்பாஷணையை, யார் கற்றறிகிறானோ, அவனால் ஞானயக்ஞத்தால் நான் ஆராதிக்கப் படுபவன் ஆவேன். இது என் கொள்கை.(70)

ஊக்கங்கொண்டு, அவமதிக்காது இதைக் கேட்கவாவது செய்யும் மனிதனும் விடுதலையுற்று நல்வினையாளர் எய்தும் நல்லுலகங்களை அடைவான்(71)

பார்த்தா ஒருமை மனதுடன் உன்னால் இது கேட்கப் பட்டதா.?தனஞ்சயா உனது அறியாமையாகிய மயக்கம் அழிந்ததா.?(72)

அர்ஜுனன் சொன்னது

அச்யுதா, மயக்கம் ஒழிந்தது. உமது அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது .ஐயங்கள் அகன்று போயின. உறுதியா யிருக்கிறேன் உமது சொற்படிச் செய்வேன்(73)

ஸஞ்சயன் சொன்னது.

இங்ஙனம் வாசுதேவருக்கும் மகாத்மாவான பார்த்தனுக்கும் இடையில் நிகழ்ந்த மயிர்க் கூச்சு உண்டு பண்ணும் அற்புத சம்பாஷணையை நான் கேட்டேன்(74)

வியாசர் அருளால். இந்த மேலாம் ஆழ்ந்த யோகத்தை தாமே சொல்லலுற்ற யோகேஸ்வரன் கிருஷ்ணனிடமிருந்து நான் நேரே கேட்டேன்(75)

வேந்தே கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய  இப்புண்ணிய சம்வாதத்தை நினைந்து நினைந்துநான் மீண்டும் மீண்டும் மகிழ்வடைகிறேன்.(76)

அரசே, ஹரியின் அந்த அதிசய வடிவத்தை இன்னும் எண்ணியெண்ணி எனக்குப் பெரு வியப்புண்டாகிறது. மேலும் மேலும் களிப்புமடைகிறேன்(77)

யோகேசுவரக் கிருஷ்ணனும் தனுசைத் தாங்கிய பார்த்தனும் எங்குளரோ, ஆங்கு திருவும் வெற்றியும் பெருக்கும், நிலைத்த நீதியும் உளவென்பது என் கொள்கை,(78)

                  மோக்ஷ சன்னியாச யோகம் நிறைவு.

                      ஸ்ரீமத் பகவத் கீதை நிறைவு. 


G.M Balasubramaniam Posts

கீதைப் பதிவு—17 சிரத்தாத்ரய விபாக யோகம்

கீதைப் பதிவு—17 சிரத்தாத்ரய விபாக யோகம்

அர்ஜுனன் சொன்னது

கிருஷ்ணா, யார் சாஸ்திர விதியை மீறி,ஆனால் சிரத்தையோடு கூடியவர்களாய் ஆராதிக்கிறார்களோ, அவர்களுடைய நிலை சத்துவமா, ரஜஸா, தமஸா?(1)

ஸ்ரீபகவான் சொன்னது.

தேகிகளுக்கு இயல்பாய் உண்டான சிரத்தையானது  சாத்விகமென்றும், ராஜஸமென்றும் தாமஸமென்றும் மூவிதமாய் இருக்கிறது. அதைக்கேள்(2)

பாரதா ஒவ்வொருவனுடைய மனப் பாங்குக்கு ஏற்ப சிரத்தை அமைகிறது.மனிதன் சிரத்தை மயமானவன்; சிரத்தை எதுவோ அதுவே அவனுமாம்.(3)

சாத்விகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள். ரஜோ குணமுடையவர்கள் யக்ஷ  ராக்ஷசர்களையும், மற்ற தாமச ஜனங்கள் பிரேத பூத கணங்களையும் போற்றுகிறார்கள்(4)

வீம்பும் அகங்காரமும் உடையவர்களாய், காமமும் பற்றுதலும் வலுத்தவர்களாய், எந்த அறிவிலிகள் உடலிலுள்ள இந்திரியங்களையும்  உள்ளத்தில் உறையும் என்னையும் துன்புறுத்தி சாஸ்திரத்துக்கு ஒவ்வாத கொடுந்தவம் புரிகிறார்களோ, அவர்களை அசுர வழியில் துணிந்தவர்கள் என்று அறிக,(5,6)

ஒவ்வொருவருக்கும் விருப்பமான உணவும் மூவகைப் படுகிறது.யாகமும் தபசும்,தானமும் அங்ஙனமே அமைந்துள்ளன, அவைகளுள் இவ்வேற்றுமையைக் கேள்(7)

ஆயுள்,அறிவு, பலம், ஆரோக்கியம்,சுகம் ருசி ஆகியவைகளை வளர்ப்பவைகள்,ரசமுள்ளவைகள், பசை உள்ளவைகள். வலிவு தருபவைகள், இன்பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் சாத்விகர்களுக்குப் பிரியமானவைகள்(8)

கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, பெருவெப்பம், காரம் வரட்சி,  எரிச்சல் மிகுந்தவையும் துன்பம் துயரம் நோய் உண்டுபண்ணுபவைகளும் ஆகிய உணவுகள் ரஜோகுணத்தாருக்கு விருப்பமானவைகள்.(9)

யாமம் கழிந்த, சுவை அற்ற, துர்நாற்றம் எடுத்த, பழைய எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோ குணத்தாருக்குப் பிரியமானது.(10)

ஆராதனையாகச் செய்தே ஆகவேண்டுமென்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, வினைப் பயனை விரும்பாதவர்களால் சாஸ்திர விதிப்படி எந்த யாகம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது. (11)

பரதகுல சிரேஷ்டனே, பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ செய்யப்படுகிற ஆராதனையை ராஜஸமானது என்று அறிக.(12)

வேதநெறி வழுவியதும், அன்னதானமில்லாததும், மந்திரமற்றதும், தக்ஷிணை இல்லாததும் சிரத்தை அற்றது மாகிய யக்ஞம் தாமஸிகமென்று சொல்லப்படுகிறது(13)

தேவர் பிராம்மணர், குருமார் ஞானிகள், ஆகியவர்களைப் போற்றுவதும், தூய்மையும் , நேர்மையும், பிரம்மசரியமும், அஹிம்சையும் தேகத்தால் செய்யும் தவமெனப்படுகிறது(14)

துன்புறுத்தாத வாய்மையும், இனிமையும், நலனும் கூடிய வார்த்தை, மற்றும் வேதம் ஓதுதல்-இது வாக்கு மயமான தபசு என்று சொல்லப் படுகிறது.(15)

மன அமைதி, அன்புடைமை, மௌனம், தன்னடக்கம், துய நோக்கம்-இது மானஸ தபசு என்று கூறப்படுகிறது(16)

பயனை விரும்பாதவரும். யோகத்திலே உறுதி பெற்றவருமான நரர்களால் பெரு முயற்சியுடன் செய்யப்படும் இம்மூவித தபசு சாத்விகமானதென்று பகரப் படுகிறது(17)

பாராட்டுதலையும் பெருமையையும் போற்றுதலையும் முன்னிட்டு ஆடம்பரத்தோடேஈண்டு எத்தவம் புரியப் படுகிறதோ, த்ற்காலிகமானதும் உறுதி அற்றதுமான அது ராஜஸமானதென்று பகரப் படுகிறது(18)

மூடக் கொள்கையால் தன்னையே துன்புறுத்தியோ அல்லது பிறரை அழித்தற் பொருட்டோ செய்யப்படுகிற தவம் தாமஸமெனப் படுகிறது(19)

தக்க இடத்திலே, வேளையிலே பிரதி உபகாரம் செய்யாதவர் எனினும் தகுந்த பாத்திரமாய் உள்ளவர்க்கு தானம் செய்வது முறையெனக் கருதி வழங்கும் தானம் சாத்விகமானது(20)

மற்று, கைம்மாறு கருதியோ பலனை உத்தேசித்தோ வருத்தத்தோடு வழங்கப் படும் தானம் ராஜஸமென்று எண்ணப்படுகிறது.(21)

தகாத இடத்திலும், காலத்திலும் தகுதி அற்றவர்களுக்கு வணக்கமின்றி இகழ்ச்சியுடன் செய்யும் தானம் எதுவோ அது தாமஸமெனப் படுகிறது(22)

ஓம் தத் ஸத் என்று பிரம்மம் மூவிதமாய் மொழியப் பட்டுள்ளது. அதினின்று வேதியர், வேதம், வேள்வி  பண்டு படைக்கப்பட்டன(23)

ஆகையால் வேதம் அறிந்தவர்கள் வேத விதிப்படி செய்யும் யக்ஞ-தான-தபக் கிரியைகள் எப்பொழுதும் ”ஓம் என்று உச்சரித்துத் துவங்குகின்றன(24)

தத்என்று(பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லை) உச்சரித்துப் பலன் விரும்பாது மோக்ஷத்தை நாடுபவர்களால் நானாவிதமான யக்ஞ தபக் கிரியைகளும் தானக் கிரியைகளும் செய்யப்படுகின்றன(25)

அர்ஜுனா, உண்மை என்ற கருத்திலும் நன்மை என்ற கருத்திலும் “ஸத் என்ற சொல் வழங்கப் படுகிறது.மங்கள கர்மங்களிலும் ‘ஸத் என்ற சொல் உபயோகிக்கப் படுகிறது.(26)

வேள்வியிலும் தவத்திலும் தானத்திலும் நிலைத்திருப்பதுஸத்  என்று சொல்லப் படுகிறது. இன்னும் பிரம்மத்தின் பொருட்டு செய்யும் கர்மமும் ‘ஸத் என்றே இயம்பப்படுகிறது(27)

சிரத்தையின்றி செய்யும் யாகமும் தானமும் தபசும்மற்ற கர்மமும் ‘அஸத் எனப்படும். அது மறுமைக்கும் உதவாது. இம்மைக்கும் உதவாது.(28)

           சிரத்தாத்ரய விபாக யோகம் நிறைவு.       .

 

G.M Balasubramaniam Posts    

கீதைப் பதிவு – 16 தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்

கீதைப் பதிவு – 16 தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்

ஸ்ரீபகவான் சொன்னது

அஞ்சாமை, உள்ளத் தூய்மை. ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை பொறிகளை அடக்குதல், யாகம் ஸாஸ்திரம் படித்தல், தபஸ்.நேர்மை(1)

தீங்கிழையாமை, உண்மை, சினமின்மை, துறவு, அமைதி, கோள் சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், பிறர்பொருளை விரும்பாமை, இனிமை, நாணம்,மனம் சலியாமை(2)

தைரியம் பொறை மனவுறுதி, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை, ஆகிய இவைகள் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன அர்ஜுனா,(3)

பார்த்தா பகட்டும், இறுமாப்பும் தற்பெருமையும், சினமும் ,கடுமையும், அக்ஞானமும் அசுர சம்பத்தை உடையவனாய்ப் பிறந்தவனுக்கு உண்டு.(4)

தெய்வ சம்பத்து மோக்ஷம் தருவதென்றும், அசுர சம்பத்து பந்தப் படுத்துவதென்றும் கருதப் படுகின்றன.பாண்டவா, வருந்தாதே, நீ தெய்வ சம்பத்து வாய்த்துப் பிறந்துள்ளாய்.(5)

பார்த்தா,தெய்விகம் என்றும் அசுரம் என்றும் இருவகை உயிர்ப் பிறப்புகள்  இவ்வுலகில் உண்டு.தெய்வ இயல்பு விரிவாகப் பகரப் பட்டது. அசுர இயல்பை என்னிடம் கேள்.(6)

செய்யத்தகுந்த நல் வினையையும், தகாத தீவினையினையும் அசுர இயல்புடையார் அறியார். அவர்களிடம் தூய்மையும் நல்லொழுக்கமும் வாய்மையும் இல்லை(7)

உலகம் உண்மை இல்லாதது, தர்மப் பிரதிஷ்டை இல்லாதது, கடவுள் இல்லாதது, காமத்தைக் காரணமாகக் கொண்டு ஆண்பெண் இணக்கத்தால் ஆனது அன்றி வேறு என்ன இருக்கிறது என்கின்றனர்.(8)

இக்கொள்கை உடைய புல்லறிவாளர் ஆத்ம நஷ்டமடைந்தவர்களாய், கொடுஞ் செயல் புரிபவர்களாய், உலகின் பகைவர்களாய், அதன் அழிவுக்கென்றே தோன்றி இருக்கின்றனர்(9)

நிறைவேறாத நெடுங்காமம் பிடித்தவர்களாய், ஆடம்பரமும், பெருமையும், மதமும் பொருந்தியவர்களாய், மயக்கத்தால் கெட்ட எண்ணங்களைக் கிரகித்து தீய தீர்மானங்களுடன் தொழில் புரிகின்றனர்(10)

சாகும்வரையில் அளவுகடந்த கவலையை உடையவர்களாய், காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாகக் கருதி, மற்றொன்றுமில்லை என்று தீர்மானம் செய்தவர்களாய்;(11)

நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் தளைக்கப் பட்டவர்களாய், காமக் குரோத வசப்பட்டவர்களாய்,காம போகத்தின் பொருட்டுச் செல்வக் குவியல் தேட முயலுகின்றனர். (12)

இன்று இது என்னால் அடையப்பட்டது; இவ்விருப்பத்தை நிறைவேற்றுவேன், இது இருக்கிறது, மேலும் எனக்கு இச்செல்வம் வந்துசேரும்(13)

அப்பகைவன் என்னால் கொல்லப்பட்டான், மற்றவர்களையும் கொல்லுவேன், நான் ஆளுபவன், போகத்தை அனுபவிப்பவன், காரிய சித்தன், வலிவுடையவன், இன்புறுபவன்(14)

செல்வம் படைத்து உயர் குலத்தவனாயிருக்கிறேன் எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்.? யாகம் செய்வேன், தானம் கொடுப்பேன், மகிழ்வடைவேன் என்று அக்ஞானத்தில் மயங்கியவர்கள்(15)

பல எண்ணங்களில் குழப்பமடைந்தவர்கள் மோக வலையில் மூடப் பெற்றவர்கள் காம போகங்களில் பற்றுடையவர்கள் பாழ் நரகில் வீழ்கின்றனர்.(16)

தற்புகழ்ச்சியுடையார், வணக்கமிலார், செல்வச் செருக்கும் மதமும் உடையார் பெயரளவில் யாகத்தை விதி வழுவி ஆடம்பரத்துக்காகச் செய்கின்றனர்(17)

அஹங்காரம் பலம் இறுமாப்பு காமம்  குரோதம் –இவைகளை உடையவர்கள் தங்கள் தேகத்திலும் பிறர் தேகத்திலும் உள்ள என்னை வெறுத்து அவமதிக் கின்றனர்(18)

 துவேஷ குணமுடையவர்களை, கொடியவர்களை, கடையவரை, இழிந்தோரை பிறந்து இறந்து உழலும் உலகில் அசுரப் பிறவியிலேயே, திரும்பத் திரும்ப நான் அவர்களைத் தள்ளுகிறேன்(19)

குந்தியின் மகனே, மூடர்கள் பல பிறவிகளில் அசுர யோனிகளில் தோன்றி என்னை அடையாமல் இன்னும் கீழான கதியையே அடைகிறார்கள்(20)

காமம் குரோதம் லோபம் ஆகிய மூவித வாயிலை உடையது நரகம். இவை ஜீவனைக் கெடுக்கும் தன்மையன. ஆகையால் இம்மூன்றையும் துறத்தல் வேண்டும்(21)

அர்ஜுனா, இம்மூன்று நரக வாயில்களினின்றும் விடுபட்டவன் தனக்கு நலன் செய்து கொண்டு பின்பு மோக்ஷத்தை அடைகிறான்.(22)

காமத்தின் வசப்பட்டு சாஸ்திரத்தின் ஆணையை மீறி நடப்பவன் எவனோ அவன் பரி பூரணனாகான், சுகம் பெறான், முக்தி அடையான்(23)

ஆகையால் செய்யத் தகுந்ததையும்  தகாததையும் நிச்சயிப்பதில் சாஸ்திரம் உனக்குப் பிரமாண மாகிறது. இங்கு சாஸ்திரம் ஆக்ஞாபித்து உரைப்பதை அறிந்து கர்மம் செய்யக் கடவாய்.(24)

                   தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் நிறைவு.

 

G.M Balasubramaniam Posts    

கீதைப்பதிவு –15 புருஷோத்தம யோகம்

கீதைப்பதிவு –15 புருஷோத்தம யோகம்

ஸ்ரீபகவான் சொன்னது

மேலே வேருள்ளதும் , கீழே கிளைகளுள்ளதும் ஆகிய ஆலமரம் போன்ற சம்சாரத்தை அழிவற்றது என்கின்றனர். வேதங்கள் அதன் இலைகள்.அதை அறிபவனே வேதத்தை அறிபவன் ஆகிறான்(1)

அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர் விட்டு, கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மானிட உலகில் வினையை விளைவிப்பனவாய் அதன் வேர்கள் கீழ் நோக்கிப் பரவி இருக்கின்றன.(2)

இம்மரத்துக்கு இங்கு வடிவம் தென்படுவதில்லை, முடிவில்லை, துவக்கமில்லை, இருப்புமில்லை. வலுத்து வேரூன்றிய இந்த அசுவத்த மரத்தைப் பற்றின்மை என்ற உறுதியான வாளால் வெட்டி;(3)

எப்பதம் பெற்றுப் பிறப்பெடுப்பதில்லையோ அது அப்பால் தேடத்தக்கது. எவரிடத்திருந்து பண்டைத் தொழில் பெருகி வந்துள்ளதோ அதே ஆதி புருஷனைச் சரணடைகிறேன் (எனறுணர்க)(4)

ஆணவமும் அவிவேகமும் அற்றவர். பற்று என்னும் குற்றம் வென்றவர், பரமாத்ம ஞான நிஷ்டர், ஆசையற்றவர், இன்பதுன்பம் எனும் இருமைகளைக் கடந்தவர், மயக்கமொழிந்தவர்- இத்தகையார்கள் அவ்வழியா நிலை எய்துகின்றனர்.(5)

எங்கு சென்றவர்கள் திரும்பி வருகிறதில்லையோ. எதை ஞாயிறும் திங்களும் ,தீயும் விளக்க மாட்டாவோ அது எனது பரமபதம்(6)

எக்காலத்தும் எனது அம்சமே ஜீவனாகத் தோன்றி, ஜீவலோகத்தில் பிரகிருதியிலே நிற்கின்ற மனது உட்பட ஆறு இந்திரியங்களை (போகத்தில்) இழுக்கிறது(7)

மலர்களினின்று மணங்களை காற்று எடுத்து ஏகுவதுபோல், ஜீவன் உடல் எடுக்கும்போதும் விடும்போதும் இந்திரியங்களைப் பற்றிக் கொண்டு போகிறான்(8)

அவன் செவி,கண், மெய், நாவு, நாசி,மனது, ஆகியவைகளைத் தனதாக்கிக் கொண்டு விஷயங்களை அனுபவிக்கிறான்(9)

 உடலை விடும்போதும், உடலில் இருக்கும்போதும் அனுபவிக்கும் பொழுதும் குணங்களோடு கூடி இருக்கும்பொழுதும் ஜீவனை மூடர் அறியார்; ஞானக் கண் உடையவர் அறிவர். (10)

உயற்சியுடைய யோகிகள் அவ்வாத்மனை தங்களுக்குள்ளேயே காண்கின்றனர். முயற்சி உடையார் எனினும் ஆதம பரிபாக மடையாத அறிவிலிகள் அவனைக் காண்பதில்லை.(11)

சூரியனிடத்திருந்து வந்து உலகம் முழுதையும் விளக்குகிற வெளிச்சமும், சந்திரனுடையதும் தீயினுடையதும் என்னிடமிருந்து வந்த பிரகாசம் என்று அறிக.(12)

என் வலிவால் நான் பூமியினுள் பிரவேசித்து உயிர்களைத் தாங்குகிறேன்; இனிமை வடிவாகிய சந்திரனாகவும் ஆகிப்பயிர்களைப் போஷிக்கிறேன்(13)

உதரக் கனலாக நான் உயிர்களின் உடலில் இருந்து கொண்டு பிராண அபான வாயுக்களுடன் கூடி நான்கு வித அன்னத்தைச் சேமிக்கிறேன்.(14)

எல்லோருடைய உள்ளத்திலும் நான் வீற்றிருக்கிறேன் நினைவும் ஞானமும் அவற்றின் அழிவும் என்னிடமிருந்து உண்டாகின்றன. வேதங்கள் எல்லாவற்றிலும் அறியப்படும் பொருள் நானே, வேதாந்த்தத்தைச் செய்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே(15)

க்ஷரன் என்றும் அக்ஷரன் என்றும் உலகில் இரண்டே புருஷர்கள் இருக்கிறார்கள். வடிவெடுத்த எல்லோரும் க்ஷரன், கூடஸ்தனோ அக்ஷரன் எனப்படுகிறான்.(16)

இனி இவர்கட்கு அன்னியமானவர் புருஷோத்தமன். அந்த ஈசுவரன் நிர்விகாரப் பரமாத்மா என்று அழைக்கப் படுகிறார். அவர் மூவுலகினுட் புகுந்து அதைத் தாங்குகிறார்(17)

க்ஷரத்தை கடந்து அக்ஷரத்துக்கும் நான் மேலானவனாக இருப்பதால் உலகிலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று புஅழ் பெற்றிருக்கிறேன்(18)

பாரதா, யார் மயக்கமற்றவனாய் இங்ஙனம் என்னைப் புருஷோத்தமன் என்று அறிகிறானோ, எல்லாம் அறிந்த அவன் முழுமனதோடு என்னை வழுத்துகிறான்(19)

குற்ற மற்றவனே, இங்ஙனம் ஆழ்ந்த இந்த சாஸ்திரம் என்னால் உரைக்கப் பட்டது. அர்ஜுனா, இதை அறிபவன் ஞானியும் கிருதார்த்தனும் ஆவான்(20)

                    புருஷோத்தம யோகம் நிறைவு.           


G.M Balasubramaniam Posts    

 

கீதைப் பதிவு-14 குணத்ரய விபாக யோகம்

கீதைப் பதிவு-14 குணத்ரய விபாக யோகம்

ஸ்ரீபகவான் சொன்னது

முனிவர்கள் எல்லோரும் எதை அறிந்து இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் மேலாம் சித்தியை அடைந்தார்களோ, ஞானங்களுள் சிறந்ததும் பரம் பொருளைப் பற்றியதுமான  அந்த ஞானத்தை மீண்டும் உரைப்பேன். (1)

இந்த ஞானத்தை அனுஷ்டித்து என் சொரூபத்தை அடைந்தவர்கள் சிருஷ்டியில் தோன்றுவதில்லை, பிரளயத்தில் துன்புறுவதில்லை(2)

பாரதா, பெரிய பிரகிருதி எனது கர்ப்பாசயம்.அதில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன். அதினின்று உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன.(3)

குந்தி புத்ரா, கர்ப்பாசயங்கள் எல்லாவற்றிலும் பிறக்கின்ற வடிவங்களுக்குப் பெரிய பிரகிருதி தாயாகிறாள்.கர்ப்பாதானம் செய்யும் தந்தை நான்.(4)

பெருந்தோளோய், பிரகிருதியிலிருந்து உண்டான சத்வம், ரஜஸ், தாமசம் என்னும் குணங்கள் அழிவற்ற தேகியை  தேகத்தில் பிணிக்கின்றன(5)

பாபமற்றவனே, அவற்றுள் சத்துவம் அழுக்கின்மையால் ஒளி பொருந்தியது, இடர்படுத்தாதது, சுகப் பற்றுதலாலும் ஞானப் பற்றுதலாலும் அது பிணைக்கிறது(6)

குந்தி மகனே, ரஜோகுணத்தை ஆசை வடிவுடையதென்றும், வேட்கையையும் பற்றுதலையும் உண்டு பண்ணுவதென்றும் அறி. வினைப்பற்றால் அது தேகியைத் தளைக்கிறது(7)

பாரதா, தமோகுணமோ அக்ஞானத்தில் பிறந்தது என்றும் உயிர்களை எல்லாம் மயக்குவது என்றும் அறி. அது அசட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் கட்டுகிறது.(8)

சத்துவ குணம் சுகத்தில் சேர்க்கிறது, ரஜோ குணம் கர்மத்தில், தமோ குணமோ, பாரதா, ஞானத்தை மறைத்துக் கவனமின்மையில் இணைக்கிறது(9)

சத்வம் ரஜஸையும் தமசையும் அடக்கி மேலெழுகிறது, ரஜஸ் சத்துவத்தையும் தமசையும் ஆளுகிறது.அங்ஙனம் தமஸ் சத்துவத்தையும் ரஜசையும் அடக்குகிறது அர்ஜுனா.(10)

இத்தேகத்தின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞானஒளி வீசுகிறதோ அப்பொழுதே சத்துவம் ஓங்கி உள்ளதென்று அறிதல் வேண்டும்(11)

பரத சிரேஷ்டா, பேராசை, பிரவிருத்தி, வினைப்பெருக்கு, அமைதி இன்மை, வினையில் விருப்பம் இவைகள் ரஜோ குணம் மேலெழும்பும்போது உண்டாகின்றன.(12)

குருவம்சத்து வீரா, விவேகமின்மை, முயற்சியின்மை, தவறுதல், மதிமயக்கம்-ஆகிய இவைகளே தமோ குணத் தலையெடுப்பால் விளைகின்றன(13)

தேகம் எடுத்துள்ளவன் சத்துவ குணம் ஓங்கி இருக்கும்போது மரணம் அடைவானாயின் ஞானவான்களுடைய நல்லுலகங்களை அடைவான்(14)

ரஜோகுணத்தில் காலமாகின்றவன் கர்மப் பற்றுடையவர்களுக்கு இடையிலே பிறக்கிறான்.அவ்வாறே தமஸில் சாகின்றவன் அறிவிலிகள் கர்ப்பத்தில் பிறக்கிறான் (15)

நற்செய்கையின் பயன் சாத்விகமும் தூய்மையும் என்பர்.ரஜோ குணத்தின் பயனோ துன்பம். தமோ குணத்தின் விளைவு அறிவின்மை.(16)

சத்துவத்திலிருந்து ஞானம் உதிக்கிறது, ரஜஸிலிருந்து பேராசையும், தமசிலிருந்து அக்ஞானமும் கவனமின்மையும், மதி மயக்கமுமெ உண்டாகின்றன.(17)

சத்துவ குணத்தில் உள்ளோர் மேலேறுகின்றனர்.ரஜோ குணத்தில் உள்ளோர் இடையில் நிற்கின்றனர். கடையான குணமாகிய தமோகுணத்தில் இருப்போர் கீழிறங்கு கின்றனர்(18)

 

ஜீவன் எப்பொழுது குணங்களுக்கு வேறான கர்த்தாவைக் காண்பதில்லையோ, குணங்களுக்கு மேலாகப் பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது அவன் பிரம்ம சொரூபத்தை அடைகிறான்.(19)

உடம்பை உண்டாக்கும் இம் முக்குணங்களையும் கடந்து, பிறப்பு இறப்பு ,மூப்பு, துன்பத்தினின்று விடுபட  ஜீவன் மரணமிலாப் பெரு வாழ்வு பெறுகிறான்.(20)

அர்ஜுனன் சொன்னது

இறைவா, எந்த அடையாளங்களால் (ஜீவன்) இந்த மூன்று குணங்களையும் கடந்து நிற்பவன் ஆகின்றான்? அவனது நடத்தை யாது.? எங்ஙனம் இம் முக்குணங்களைக் கடக்கிறான்.?(21)

ஸ்ரீபகவான் சொன்னது

பாண்டவா, (சத்துவத்தின் காரியம்) ஒளி, (ரஜஸின் காரியம்) செயல், (தமஸின் காரியம்) மயக்கம்-இவை வாய்த்த விடத்து அவன் வெறுக்கிறதில்லை, ஒழிந்தவிடத்து வேட்கை யுறுகிறதில்லை(22)

வெறும் சாக்ஷியாய் இருந்துகொண்டு யார் குணங்களால் அசைக்கப் படுவதில்லையோ, குணங்களே தொழில் புரிகின்றன என்று ஆத்மாவில் அசையாது இருக்கிறானோ;(23)

துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகக் கொண்டவன்,ஆத்மாவில் நிலைத்தவன், மண், கல். பொன்னை நிகராகக் காண்பவன் இனியதையும் இன்னாததையும் ஒன்றாக ஓர்ப்பவன், பேரறிஞன், இகழ்ச்சி புகழ்ச்சியை ஒரே பாங்குடன் பார்ப்பவன்(24)

மான அவமானத்தை நிகராக நினைப்பவன், நண்பனிடத்தும் பகைவனிடத்தும் ஒரே பாங்குடையவன், தனக்கெனத் தொழில் செய்யாதவன் யரோ, அவன் குணாதீதன் எனப்படுகிறான்.(25)

மாறாத பக்தி யோகத்தால் என்னை யார் உபாசிக்கிறானோ, அவன் இக்குணங்களை முற்றும்  கடந்து, பிரம்மம் ஆவதற்குத் தகுதி உடையவனாகிறான்.(26)

அழியாத மோக்ஷ நிலையாகிய பிரம்மத்துக்கும் சாசுவதமான தர்மத்துக்கும்  ஒப்பற்ற சுகத்துக்கும் நானே இருப்பிடம். (27)

                குணத்ரய விபாக யோகம் நிறைவு.        


G.M Balasubramaniam Posts    

கீதைப் பதிவு -13 க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

கீதைப் பதிவு -13 க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

அர்ஜுனன் சொன்னது.

பிரகிருதி புருஷன்,க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன், ஞானம், ஞேயமாகிய இவைகளை அறிந்து கொள்ள, கேசவா நான் விரும்புகிறேன்(பல பதிப்புகளில் இந்த சுலோகம் காணப்படுவதில்லை.)

ஸ்ரீ பகவான் சொன்னது.

குந்தி புத்திரா, இவ்வுடலம் க்ஷேத்திரம் எனப்ப்டுகிறது. இதை அறிகிறவனை க்ஷேத்ரக்ஞன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.(1)

அர்ஜுனா, க்ஷேத்ரங்களனைத்திலும் என்னை க்ஷேத்ரக்ஞன் என்று அறிக..க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன் பற்றிய அறிவே ஞானம் என்பது என் கொள்கை.(2)

அந்த க்ஷேத்திரம் யாது, எத்தன்மைகளை உடையது, என்ன பிரிவுகளை உடையது, எதிலிருந்து உண்டானது,அந்த க்ஷேத்ரக்ஞன் யார்,அவன் மகிமை யாதுஇவைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேள்,(3)

(இவ்வுண்மை) ரிஷிகளால்விதவிதமான சந்தஸ்களில்(இயல் இசைகளில்)பாங்காகப் பல வகைகளில் பாடப் பெற்றிருக்கிறது.யுக்தியால் நிச்சய புத்தியைத் தந்து, பிரம்மத்தைக் குறிக்கிற பதங்களாலும்  பாடப் பெற்றிருக்கிறது.(4)

மஹாபூதங்கள் (ஆகாசம்,வாயு, அக்கினி, அப்பு, பிருதிவிஆகிய ஐந்து பூதங்களும் சூக்‌ஷுமமாக எங்கும் உள்ளபடியால் அவை மஹாபூதங்கள்)அகங்காரம், புத்தி, மூலப்பிரகிருதி, இந்திரியங்கள் பத்து,மனம் ஒன்று,இந்திரியார்த்தங்கள் ஐந்து, விருப்பு வெறுப்பு, இன்பம், துன்பம், உடலமைப்பு, உணர்வு, உறுதி, -இங்ஙனம் க்ஷேத்திரமும் அதன் தோற்றங்களும் சுருக்கமாகச் சொல்லப் பட்டன,(5.6) (அகங்காரம் –பூதங்களின் காரணமாக எழும் இருக்கிறேன் என்னும் உணர்ச்சிஅகங்காரம் எனப் படுகிறது; புத்தி அகங்காரத்துக்குக் காரணம். மூலப்பிரகிருதி அல்லது அவ்யக்தம் புத்திக்குக் காரண்ம். இவையாவும் ஈசுவரசக்தி. பத்து இந்திரியங்கள் –கண் முதலிய ஐந்து ஞாநேந்திரியங்கள் ஐந்து கை முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்து; மனம் –பத்து இந்திரியங்களுக்கும் பொதுவானது. இந்திரியார்த்தங்கள்-சப்த ஸ்பரிச, ரூப, ரச, கந்த வடிவங்களாயுள்ள ஐந்து இந்திரியங்களின் விஷயங்கள் .இச்சை ,துவேஷம் சுகம் ,துக்கம், சங்காதம்=உடலமைப்பு, உணர்வு, உறுதி, க்ஷேத்திரம் என்று உடலை முதல் சுலோகத்தில்சொல்லியதன் முழுவிளக்கம் இந்த இரு சுலோகங்களில் வந்து அமைகிறது.)

தற்பெருமையின்மை, தருக்கின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை குரு சேவை, தூய்மை விடாமுயற்சிதன்னடக்கம்(7)

விஷயங்களில் விருப்பின்மை. அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்புபிணி துயரமாகியவைகளில் கேடுகாணுதல்(8)

பற்றின்மை, மகன் மனைவி, வீட்டைத் தனதென்று அபிமானியாதிருத்தல், வேண்டுவன வேண்டாதவை விளையு மிடத்து மனம் யாண்டும் நடு நிற்பது(9)

வேறு எதையும் எண்ணாத யோகத்தால், என்னிடம் பிறழாத பக்தி பண்ணுதல், தனியிடத்தை நாடுதல், ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை(10)

ஆத்ம ஞானத்தில் நிலைபேறு, உண்மைப் பொருள் ஆராய்ச்சி, -இவையாவும் ஞானமாம். இவற்றுக்கு அன்னியமானவை அக்ஞானம்(11)

அறியத்தக்கது எது, எதை அறிந்து ஒருவன் சாகாத்தன்மை எய்துகிறான், அதைப் பகர்கிறேன். அது ஆதியில்லாத பரப்பிரம்மம்.உளது இலது என வொண்ணாதது.(12)

அது எங்கும் கைகால்களை உடையது, எங்கும் கண், தலை, வாய்களையுடையது, எங்கும் காதுகளை உடையது, உலகில் அனைத்தையும் அது வியாபித்துள்ளது(13)

இந்திரியங்கள் அனைத்தின் வாயிலாகஒளிர்வது, இந்திரியங்கள் யாவையும் அற்றது, பற்றற்றது, அனைத்தையும் பற்றித் தாங்குவது, குணங்களே இல்லாதது, எனினும் குணங்களை அனுபவிப்பது.(14)

பொருள்களுக்குப் புறமும் உள்ளும் உள்ளது,அது அசையாதது, அசைவது, நுண்மையானது ஆதலால் அறிய அரிது.எட்டவும் கிட்டவும் இருப்பது அது.(15)

அது பிளவு படாதது, பொருள்களில் பிளவு பட்டதுபோல் இருக்கிறது. பொருள்களைத் தாங்குவதும், விழுங்குவதும், தோற்றுவிப்பதும் அது என்று அறிக.(16)

ஒளிக்கெல்லாம் ஒளியாகிய அது,இருளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப் படுகிறது.அறிவும் அறியப்படும் பொருளும், அறிவினால் அடையப் படுவதுமாகிய அது எல்லோரது உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது(17)

க்ஷேத்திரமும் ஞானமும் ஞேயமும் இங்ஙனம் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. இதை அறியும் என் பக்தன் என்னையடையத் தகுந்தவனாகிறான்.(18)

பிரகிருதி புருஷன் ஆகிய இரண்டுமே ஆதி இல்லாதவைகள் என்று அறிக.

வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியில் பிறந்தவைகள் என்று உணர்.(19)

உடலுக்கும் இந்திரியங்களுக்கும் காரணம் பிரகிருதி எனப் படுகிறது.இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணம் ஜீவன் எனப்படுகிறான்.(20)

புருஷன் பிரகிருதியில் நின்று பிரகிருதியில் தோன்றிய குணங்களைத் துய்க்கிறான்.அவனுக்கு நலம் கேடு உடைய பிறவிகள்.அதற்குக் காரணம் குணப் பற்றே(21)

இத்தேகத்தில் உள்ள பரம புருஷ்னானவன் சாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேஸ்வரன், பரமாத்மன் இப்படியெல்லாம் இயம்பப் படுகிறான்(22)

இங்ஙனம் புருஷனையும் குணங்களுடன் கூடிய பிரகிருதியையும் அறிபவன் எவ்வாறு வாழ்பவனாயினும் அவன் மறுபடியும் பிறப்பதில்லை.(23)

த்யானத்தால் தெளிவடைந்த அறிவால்,சிலர் ஆத்மாவை உள்ளத்தில் உணர்கின்றனர். சிலர் ஞான யோகத்தாலும் இன்னும் சிலர் கர்ம யோகத்தாலும் காண்கின்றனர்(24)

இன்னும் சிலர் இங்ஙனம் உண்மையை அறியாதவர்களாயினும் பெரியோர் சொல் கேட்டு அதில் பெருநம்பிக்கை வைத்தொழுகி மரணத்தை நிச்சயமாகக் கடக்கின்றனர்(25)

அர்ஜுனா, நிலைத்திணை இயங்கு திணையாகிய எவ்வுயிர் தோன்றி உள்ளதோ அது க்ஷேத்திர க்ஷேத்ரக்ஞனுடைய சேக்கையால் என்று அறிக.(26)

உயிர்கள் அனைத்திலும் சமமாய் இருக்கிறவனும் , அழிவனவுற்றுள் அழியாதவனும் ஆகிய பரமேசுவரனைப் பார்ப்பவனே பார்க்கிறான்.(27)

எங்கும் ஒப்ப நிலைத்திருக்கும் ஈசனைக் காண்போன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறானில்லை. அதனால் அவன் பரகதி அடைகிறான்.(28)

கர்மங்களெல்லாம் பிரகிருதியினாலேயே செய்யப் படுகின்றன என்றும், ஆத்மா செயலற்றது என்றும் யார் பார்க்கிறானோ அவனே பார்க்கிறான்.(29)

தனித் தனியாக வாழும் பிராணிகள் ஒரே பொருளில் இருப்பதையும், அந்த ஒரு பொருளிலிருந்தே அவைகள் விரிவடைவதையும் காணும்போது அவன் பிரம்ம மாகிறான்(30)

குந்தி புத்திரா, ஆதி இல்லாததால், குணமில்லாததால், கேடில்லாத இப்பரமாத்மா சரீரத்தில் இருப்பினும், அது செயலற்றது, பற்றற்றது(31)

எங்கும் நிறைந்துள்ள ஆகாசமானது நுண்ணியமாயிருப்பதால் எப்படிக் களங்க மடைவதில்லையோ, அப்படியே தேகமெங்கும் நிறைந்துள்ள ஆத்மா களங்கம் அடைவதில்லை.(32)

ஒரு சூரியன் எப்படி உலகனைத்தையும் ஒளியுறச் செய்கின்றதோ, அப்படி அர்ஜுனா, பிரபஞ்சம் அனைத்தையும் பரமாத்மா பிரகாசிப்பிக்கிறான்(33)

இவ்வாறு க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞனுக்கிடையில் உள்ள வேற்றுமையையும் உயிர்கள் பிரகிருதியில் இருந்து விடுதலை அடைவதையும்ஞானக் கண்ணால் காண்போர் பிரம்மத்தை அடைகின்றனர்.(34)

          க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ  விபாக யோகம் நிறைவு.   


  G.M Balasubramaniam Posts   

கீதைப் பதிவு—12 பக்தி யோகம்

கீதைப் பதிவு—12 பக்தி யோகம்

அர்ஜுனன் சொன்னது

இவ்வாறு யாண்டும் யோகத்தில் உறுதிப் பாடுடன் உம்மை உபாசிக்கும் பக்தர்கள், மற்று நிர்க்குண பிரம்மத்தை உபாசிப்பவர்கள் ஆகிய இவர்களுள் யோகத்தை நன்கு அறிந்தவர்கள் யார்.?(1)

ஸ்ரீபகவான் சொன்னது

என்னிடத்தில் மனதை வைத்து யோகத்தில் நிலைத்தவராய், பெருஞ் சிரத்தை உடையவராய் யார் என்னை உபாசிக்கிறார்களோ அவர்கள் யோகத்தில் மேம்பட்டவர்கள் என்பது என் கருத்து(2)

ஆனால் யார் எங்கும் சம புத்தி உள்ளவர்களாய், இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கி, சொல்லுக்கு அடங்காததும், கட் புலனாகாததும், மனதுக் கெட்டாததும், எங்கும் நிறைந்ததும் மாறாததும் , நகராததும், நிலைத்ததும், அழியாததும் ஆகிய பிரம்மத்தை நன்கு உபாசிக்கிறார்களோ, எல்லா உயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ள அவர்கள் என்னையே வந்தடைகிறார்கள்(3,4)

நிர்க்குணப் பிரம்மத்தில் சித்தம் வைப்பவர்க்குப்பிரயாசை மிக அதிகம் ஏனென்றால் உடலுணர்ச்சி உடையவருக்கு நிர்க்குணப் பிரம்ம நிஷ்டை அடைதல் அரிதாம்,(5)

ஆனால் யார் வினையனைத்தையும் எனக்கு அர்ப்பித்து, என்னையே பரகதியாகக் கொண்டு, சிதைவுறா யோகத்தால் என்னை தியானித்து வணங்குகிறார்களோ, சித்தத்தை என்பால் வைத்த அவ்ர்களை, பார்த்தா, நான் மரண சம்சார சாகரத்தில் இருந்து  விரைவில் கரையேற்றுகிறேன்.(6,7)

என்னிடத்தே மனதை வைத்து என்னிடத்து புத்தியைச் செலுத்துக.பின்பு என்னிடத்தில் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.(8)

தனஞ்ஜயா, இனி சித்தத்தை என்பால் உறுதியாக வைக்க இயலாவிடின், அப்பியாச யோகத்தால் என்னை அடைய விரும்பு..(9)

அப்பியாசத்தில் உனக்கு வல்லமை இல்லையாயின் என் பொருட்டுக் கர்மம் செய்வதைக் குறிக் கோளாகக் கொள். எனக்காகக் கர்மம் செய்வதாலும் நீ சித்தியடைவாய்.(10)

இனி, இதைச் செய்தற்கும் இயலாதெனின், என்னிடம் அடைக்கலம் புகுதலில் பொருந்தினவனாய், தன்னடக்கம் பயின்று கர்மபலன் முழுவதையும் எனக்கு அர்ப்பணம் செய்.(11)

அப்பியாசத்தைவிட ஞானம் சிறந்தது. ஞானத்தினும் தியானம் மேலானது.தியானத்தைக் காட்டிலும் கர்மபலத் தியாகம் உயர்ந்தது .தியாகத்தினின்று விரைவில் சாந்தி வருகிறது.(12)

உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி, நட்பும் கருணையும் உடையவனாய், மமகாரம் அகங்காரம் அற்று, இன்ப துன்பங்களை சமமாகக் கருதி, பொறுமை படைத்து எப்போதும் சந்தோஷமாய் இருப்பவன், யோகியாய், தன்னடக்கம் உடையவனாய், திட நிச்சயம் உள்ளவனாய், என்னிடத்து மனம் புத்தியை சமர்ப்பித்தவனாய், யார் என் பக்தனாகிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்(13,14)

யாரிடமிருந்து உலகுக்கு இடர் இல்லையோ யார் உலகத்தினின்று இடர் படுவதில்லையோ, இன்னும் யார் களிப்பு, கோபம், அச்சம், கலக்கம், இவைகளில் இருந்து விடு பட்டவனோ அவன் எனக்கு உவந்தவன்(15)

வேண்டுதல் இலனாய், தூயவனாய்த் திறமை உடையவனாய் ஓரம் சாராதவனாய், துயரமற்றவனாய்க் காமிய கர்மங்களைத் துறந்தவனாய் என்னிடத்து பக்தி பண்ணுபவன் எனக்கு இனியவன் ஆகிறான்(16)

மகிழ்தலும் வெறுத்தலும் துன்புறுதலும் அவா உறுதலும் இன்றி, நன்மை தீமைகளைத் துறந்த பக்தனே எனக்குப் பிரியமானவன்(17)

பகையையும் நட்பையும் , அங்ஙனம் மானத்தையும் அவமானத்தையும் நிகராக்கிக் குளிர் வெப்பம், இன்பம் துன்பம் இவைகளை ஒப்பாக்கிப் பற்றற்றவன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மௌனி, கிடைத்ததில் திருப்தி அடைபவன் இருக்க இடம் தேடாதவன், உறுதியான உள்ளம் உடையவன், -பக்திமானாகிய அம்மனிதன் எனக்கு உவந்தவன்.(18.19)

சிரத்தை உடைய எந்த அன்பர் என்னையே கதியாகக் கொண்டு அமிர்தம் போன்ற இத் தர்மத்தை ஈண்டு உரைத்தபடி கடை பிடிக்கிறாரோஅவரே எனக்கு மிகவும் இனியவர்.(20)

                 பக்தி யோகம் நிறைவு      


G.M Balasubramaniam Posts