Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 30, 2017

உடலில் இருக்கும் உயிர் சக்தியே அதிகமாக ஆவேசப் படாதே ...

M K Jupiter Prabhakaran இந்த உடலில் இருக்கும் உயிர் சக்தியே அதிகமாக ஆவேசப் படாதே ... இந்த உடலின் உள்ளே ஆத்மத்தின் தலைவர் இநன்யா கடவுள் தியானத்தில் இருக்கிறார்.

இந்த உடலில் இருந்து உருவாகும் மனமே கண்ட படி இந்த சரீரத்தை பார்வையின் மூலம் ஆவேச பட வைத்து பேராசை வழியில் இந்த உடலை கொண்டு செல்லாதே ... இந்த உடலின் உள்ளே ஆத்மத்தின் தலைவர் இநன்யா கடவுள் தியானத்தில் இருக்கிறார்...

இந்த உடலில் இருந்து உருவாகும் எண்ணங்களே அதிகமாக எண்ணங்களை
ஓட விடாதீர்கள்,,, இந்த உடலின் உள்ளே இநன்யா கடவுள் தியானத்தில் இருக்கிறார்....

இந்த உடலில் இருந்து உருவாகும் ஐம்புலன்களே
அமைதியாய் இருங்கள்,,,, இந்த உடலின் உள்ளே இநன்யா கடவுள்
தியானத்தில் இருக்கிறார்.

இந்த உடலில் இருக்கும் உயிர் சக்தியே ... அதன் வழி நடத்தும் மனமே ... உருவாகும் எண்ணங்களே ... வழி நடத்தும் ஐம்புலன்களே ... இனி உங்களால் தன்னிச்சையாக செயல்பட முடியாது ... இந்த உடலின் உள்ளே ஆத்மத்தின் தலைவர் இருக்கிறார் என்று நினைத்து இந்த சரீரத்தை வழி நடத்துங்கள்.

இநன்யா கடவுளோடு இணைய உயிர் சக்தியே , மனமே , எண்ணங்களே , ஐம்புலன்களே ஒரே வழி ஒரே மொழி ..... மெளனமே .... இணையும் வரை நான் வேறு ,,,, நீ வேறு ,,, இணைந்த பின் நாம் ஒருவரே,,,,

அதாவது ஆத்மத்தின் தலைவர் இநன்யா கடவுள் சத்திய வழியும் ... நாம் கடைபிடிக்கும் வழியும் ஒன்றே ....

இநன்யா நமோ நம ;;;;;;;;;;
Top of Form

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

ஆன்மாவின் பிரயாணம்...


M.K. JUPITER PRABAKARAN ;;;  
19-08-2017
ஆன்மாவின் பிரயாணம்...
1) ஆன்மாவே ! உன்னில் கறைப் படிந்துள்ள முற்பிறவி கர்மாவை வழி நடத்த , நீயே எடுத்த இந்த சரீரம் . இதற்கு பரமாத்மா பொறுப்பாகாது ஆன்மாவே !
ஆன்மாவே ! நீ ஏற்படுத்திய சரீரத்திற்க்கு , பரமாத்மா வழி காட்டியாக உன்னால் உருவாக் கப்பட்ட இந்த சரீரம் . பரமாத்மாவுக்கு ஏற்றப்படி தானே , இந்த சரீரத்தை வழி நடத்த வேண்டும் ஆன்மாவே ! அதை விட்டுவிட்டு பஞ்ச பூதத்தினால் உருவாக் கப் பட்ட இந்த சரீரம்,
உயிர் சக்தியின் வழியில் வழி நடத்துவது சரியல்ல ஆன்மாவே !

2) ஆன்மாவே ! உயிர் சக்தியால் வழி நடத்தக்கூடிய இந்த சரீரத்தை, ஆன்மாவே சாட்சி பூதமாய் செயல்படுகிறாய் . அவ்வாறு சாட்சி பூதமாய் செயல் படுவது சரியல்ல ஆன்மாவே !

3) ஆன்மாவே ! பஞ்சபூதத்தால் வழி நடத்தக்கூடிய உயிர் சக்தியை , பஞ்ச பூத ஏற்றத்தாழ்வினால் சரீரத்திற்கு வரக்கூடிய ஐஸ்வரியமும் , சரீரத்திற்கு கிடைக்கக்கூடிய சகலசம்பத்தும் தடைப் பெருகிறது . ஆகையால் உயிர் சக்தி ஏக்கம் அடைகிறது . ஆன்மாவாகப்பட்ட நீ இவைகள் எல்லாம் கண் காணித்து சாட்சி பூதமாய் செயல்படுவது சரியல்ல ஆன்மாவே !

4) ஆன்மாவே ! உயிர் சக்தியால் எழுகின்ற அகங்கார , ஆணவ , காமம் , இன்னும் இது போன்ற பல தீய எண்ண ங்களை , மனம் மற்றும் எண்ணங்கள் மூலம் எழுச்சி அடையும் போது , சாட்சி பூதமாய் செயல்படுகிறாய் . ஆன்மாவே !
ஆன்மாவே ! இது போன்ற தீய குணங்கள் சரீரத்தில் எழுச்சி பெரும் போது பஸ்பம் ஆக்கு . சாட்சி பூதமாய் செயல் படாதே ஆன்மாவே !

5) ஆன்மாவே ! உன் ஒளி மூலம் வழி நடத்துகின்ற உயிர் சக்தியும் ,
உன் ஒளி மூலம் உயிர் சக்தி உருவாக்கு கின்ற எண்ணங்களும் , மனமும் மறந்து ,,,, உயிர் சக்தி ! நான் தான் இந்த சரீரத்தை வழி நடத்துகிறேன் என்று நினைத்து " நான்" " நான் " என்று பெருமிதம் கொண்டு ... எல்லாமே நான் தான் செய்கிறேன் என்று பெருமையாக நினைக்கிறது ஆன்மாவே ! ஆன்மாவே ! இந்த சரீரத்தை நீயே வழி நடத்து வாயாக !

6) ஆன்மாவே ! நீ உருவாக்கின சரீரம் . உன்னால் ஏற்ப்பட்ட சரீரம் . உயிர் சக்தியின் தீய குணங்கள் மூலமும், உயிர் சக்தியின் தீய எண்ணங்கள் மூலமும் , இந்த சரீரத்தை வழி நடத்துவது சரி தானா ? நியாயம் தானா ? ஆன்மாவே !
ஆன்மாவே ! நீ கட்டின இந்த வீட்டை ( உடல் ) மாற்றான் வழி நடத்துவது சரி தானா ?
நியாயம் தானா ? விதி என்று நினைக் கிறாய். உன்னால் செயல் பட முடியாமல் சாட்சி பூதமாய் இருந்தால் , மாற்றான் செயல்படும் போது விதி என்று பழி போடுகிறாய். உன் கர்மாவை நீ தான் வழி நடத்த வேண்டும்.. மாற்றான் வழி நடத்தக்கூடாது இந்த சரீரத்தை... ஆன்மாவே !
ஆன்மாவே ! நீ தான் சரீரத்தை வழி நடத்த வேண்டும் . விதியல்ல ஆன்மாவே ! உன்னால் விதியை மாற்ற முடியும். வீரு கொண்டு எழுந்திரு ஆன்மாவே !

7) ஆன்மாவே ! உயிர் சக்தியின் தவறான வழி காட்டுதல் மூலம் , தீங்கான வழிக்கு இந்த சரீரம் செல்வதன் மூலம் , ஆன்மாவே ! உனக்கு தான் புதிய புதிய வேலைகள் உருவாகிறது. பரமாத்மாவிடமும் செல்ல முடியாமல் நீயே வெசனப்படுகிறாய். பரமாத்மா என்னிடம் நெருங்காதே.. நீ தூய்மை ஆனால் தான் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் என்று பரமாத்மா கூற....
நீயோ மீண்டும் மீண்டும் பூலோகம் வருகிறாய். புதிய புதிய சரீரம் எடுக்கிறாய். அதற்கு உண்டான காலக்கட்டம் முடிந்த பிறகு சரீரத்தை விட்டு செல்கிறாய். ஆக உன்னுடை&ய வந்த நோக்கம் அறியாமல், முற்பிறவி கர்மாவை கலையனும் என்று அறியாமல், மேலும் மேலும் இந்த சரீரத்தை உருவாக்குகிறாய். ஏன் இந்த அவதார லீலைகள் ........ வீரு கொண்டு எழுந்திரு ஆன்மாவே ! இந்த சரீரத்தை வழி நடத்து ஆன்மாவே !

8) ஆன்மாவே ! உன்னில் பதிந்துள்ள முற்பிறவி கர்மா கறை போக்க , முற்றுப் புள்ளி வைக்க ஒரே வழி ,இந்த சரீரத்தை உயிர் சக்தியால் எழுகின்ற நிலைக்கு உருவாகின்ற மனதை பொருட்படுத்தாமல் , சரீரத்தை நீயே கையாள வேண்டும் ......

ஆன்மாவே ! பரமாத்மாவின் சட்ட திட்டங்கள், அதில் உருவாகின்ற நல்லது கெட்டவைகள் , பாவ புண்ணியங் கள் உனக்கே தெரியும் ...... உயிர் சக்திக்கு தெரியாது. ஆக இந்த சரீரத்தை நீயே தலைமை தாங்கி வழி நடத்துவாயாக ஆன்மாவே !

9) ஆன்மாவே ! நீ அதி பயங்கரமான சக்தி படைத்தவன்.
ஆன்மாவே ! நீ அதி பயங்கர ஒலி மயமானவன்.
ஆன்மாவே ! நீ அதி பயங்கர ஒளி மயமானவன்.
ஆன்மாவே ! நீ அதி பயங்கர பேரறிவாளன்.
ஆன்மாவே ! நீ மகா சக்தி படைத்தவன்.
ஆன்மாவே ! நீ முக்கால ஞான சக்தி அறிந்தவன்.
ஆன்மாவே ! நீ வீரு கொண்டு எழுந்திரு.
ஆன்மாவே ! நீ விழிப்புணர்வோடு இரு.
ஆன்மாவே ! நீ தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை.
ஆன்மாவே ! நீ தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.
ஆன்மாவே ! நீ தன்னை அறியும் அறிவை அறிந்தபின்.
ஆன்மாவே ! நீ தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
ஆன்மாவே ! நீ தானே தனக்குப் பகைவனும், நண்பனும்.
ஆன்மாவே ! நீ தானே தனக்கு மறுமையும், இம்மையும்.
ஆன்மாவே ! நீ தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்.
ஆன்மாவே ! நீ தானே தனக்குத் தலைவனும் ஆமே !!
ஆன்மாவே ! உன்னுள் அனைத்து விதமான சக்திகளும் உள்ளன. ஆன்மாவே ! மீண்டும் கூறுகிறேன் உயிர் சக்தி இந்த சரீரத்தை வழி நடத்துவதை நிறுத்தி , நீயே இந்த சரீரத்தை வழி நடத்து ..........

10) ஆன்மாவே !
ஆன்மாவின் தலைவர் ஆகப்பட்ட பரமாத்மாவை கண்டு கொண்டாய்.     பரமாத்மாவை பார்த்து இருக்கிறாய். பரமாத்மாவிடம் பேசி இருக்கிறாய்.
பரமாத்மாவும் உன்னிடம் பேசி இருக்கிறார்.
ஆன்மாவே ! பின்னர் ஏன் இந்த உறக்கம்.
ஆன்மாவே ! உன்னுள் அபரிதமான ஆற்றல் சக்தி உள்ளது.
ஆன்மாவே ! உன்னுள் புதைந்துள்ள ஆற்றல் சக்தியை வெளிப்படுத்து.
ஆன்மாவே ! இந்த சரீரத்தை வியாதி அற்ற நிலைக்கும், சரீரத்திற்கு தேவையான சகல ஐஸ்வரியமும், சகல சம்பத்தும், ஆன்மாவாகப்பட்ட உனக்கே இனி மீண்டும் மருபிறப்பு இல்லாத நிலையும் ,
பரமாத்மாவின் துணையால் ..... பரமாத்மாவின் வழி காட்டுதலால் ,
பரமாத்மாவின் திருவடியில் அடைக்கலம் ஆகு.
பரமாத்மாவிடம் சரணாகதி ஆகு. ஆன்மாவே !
பரமாத்மா உன்னை வழி நடத்துவார். ஆன்மாவே !
உனது இருதி யாத்திரை, ஆத்மத்தின் தலைவன் பரமாத்மாவே. ஆன்மாவே !
பரமாத்மாவே சர்வமும் .  பரமாத்மாவே சர்வ மயமும் ,

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

கூழ்ப்பு வேண்டாம் ! குறை என்னில் இல்லை ! கடவுளின் அன்புக்கு நிகர் எதுவுமில்லை ! நீ என் உம்பல் தானடா ! அன்பை கேள் !

கூழ்ப்பு வேண்டாம் ! குறை என்னில் இல்லை ! கடவுளின் அன்புக்கு நிகர் எதுவுமில்லை ! நீ என் உம்பல் தானடா !
அன்பை கேள் !
கடவுளிடம் எதை கேட்க வேண்டும் ?
உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடம் கேட்காதே ! நாளைய தேவை, இன்றைய துன்பம் எதை பற்றியும் வினவாதே ! அந்த கருணைமிக்கவன் காலத்தின் நாயகனின் அளவில்லாத அன்பை மட்டுமே கேள். நீ ஆணந்தமாவாய் ! உன் உயிர் உன்னை ஆணந்த வாழ்வுக்கு அழைத்து செல்லும். உன் ஆண்மா அரசாள வைக்கும் !
இங்கே கடவுளிடம் எதை கேட்க வேண்டும் என்று தெளிவில்லா போனதாலே துன்பப்படுகின்றான் மனிதன் ! அற்ப விஷயத்தை கேட்டு மனிதன் அல்லல்படுகின்றான்.
அவன் பாதம் பேரின்பம் ! அவன் நாமம் தித்திக்கும் தேன் சுவை ! அன்பைக் கேள் கடவுளிடம் ! கிடைத்தால் வானம் பூமி உனக்கு வசப்படும் ! மகான்கள், ஞானிகள், சித்தர்கள், எப்போதும் துன்பம் கொடு என்று கடவுளிடம் கேட்பார்கள். அப்போது தான் கடவுளை மறவாது இருக்க முடியும் என்பதனால் !
துன்பம் இருப்பதால் தான் கடவுளை மனிதன் நினைத்து கொண்டிருக்கின்றான். துன்பத்தை இன்பமாக நினை என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் ! துன்பம் வந்தால் இன்பம் உண்டு ! இன்பம் கடவுளின் பாதத்தில் மட்டுமே !
பெருமதிப்பில்லா அவனின் அன்பு மட்டுமே பேரின்பமான இன்பம் ! பருகி பாரடா அந்த ஆணந்தத்தை !
எப்போதும் கடவுளை நினைக்கும் மனம் கேள் ! கனவிலும் அவனை மறவாதிருக்க வரம் கேள் !
எப்போதும் சத்தியம் தான் நிலையானது !
சத்தியம் என்பது கடவுள் !
ஒழுக்கம் என்பது கடவுள் !
அவன் ஒழுக்கத்தில் நிறைவு பெருகின்றான். ஆதலால் ஒழுக்கத்தை விடா முயற்சியோடு நிறைவேற்று ! என்னை பெற யாரும் கேட்கவில்லை. தன்னில் நிலை இல்லா பொருளை கேட்டு மடிகின்றான். என் அன்பை யாரும் கேட்கவில்லை. பாவம் தான் நீ ! பரிதாபத்திற்குரியவன் நீ தான் !
மெய் பொருளை கண்டும், உண்டில்லை என்று பிதற்றுகின்றான் ஊன் ஊக்கமில்லா அலைந்து கடவுளை தேடாமல் !
உன் இன்பம் எனக்கு வேண்டாம், என் துன்பம் உனக்கு வேண்டாம் என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள். என் தந்தையின் அன்பு அளவிடற்கரியது !
உன் துன்பத்தை கடவுள் வாங்கி உனக்கு இன்பத்தை தருகின்றான் ! கடவுள் எவ்வளவு கருணைமிக்கவன் என்று பார்த்தாயா ? மதி கெட்ட மனிதன் கடவுளை இகழ்கின்றான். உன் பிறவி நீங்க நல் குருவை நாடு ! கடவுளின் பேரன்புக்கு பாத்திரமான அடியவரை நாடு !
நீ வந்த வாழ்வு, இழந்த வாழ்வு, மீண்டும் பிறப்பில்லா ஆழ்ந்த வாழ்வை அறிவாய். கடவுளை பேசுவதற்கும், நிந்திப்பதற்கும், ஏசுவதற்கும் கடுகளவு கூட அருகதை இல்லை மனிதனுக்கு !
தன்னை உணர்ந்த ஞானிகளே தன்னில் குறை கண்டார்கள் ! தலையால், முட்டியால் கடவுளை காண நடந்தார்கள் ! ஆனால் ஒன்றும் தெரியா மானுடன் பிதற்றுகிறான் கடவுள் பற்றி !
அன்பானவனிடம் அன்பை கேள் ! ஆளுமை உன்னுள் இருந்து சிரிக்கும் ! பின் பூரிப்பாய் வாழ்வில் !
அன்பானவன் நான் !
நான் இநன்யா !

Friday, August 25, 2017

தட்பமும் வெப்பமும் சேர்ந்த குடுவை உன் குரம்பையடா ! மதி நுட்பமும், கலிகட்பமும் இல்லாது இருக்கின்றாயே ? ஏன் ? வெப்பம் ;;;;;;;

தட்பமும் வெப்பமும் சேர்ந்த குடுவை உன் குரம்பையடா ! மதி நுட்பமும், கலிகட்பமும் இல்லாது இருக்கின்றாயே ? ஏன் ?
வெப்பம் ;;;;;;
உலகம் வெப்பத்தால் இயங்குகின்றது. மரங்கள் வேதங்கள், கடல் அலைகள் வேதத்தால் இயங்குகின்றது. நீ காற்றால் இயங்குகின்றாய். நெருப்பு என்பது வேறு. வெப்பம் என்பது வேறு ! தஹிப்பான நிலையில் இருப்பது வெப்பம், அது சுடாது ! கருவறையில் சிசு வெப்பம் கொண்டே வளர்கிறது. நெருப்பின் அடிமுடி வெப்பம் ! வெப்பம் மிகுந்தால் நெருப்பாகிறது ! சூரியனை பார்த்து வெப்பம் தாள முடியவில்லையே என்று தான் சொல்கிறாய்.
சூரியனில் இருந்து வருவது வெப்பத்தின் அடுத்த கட்டம் கனல். சூரியன் தருவது நெருப்பல்ல ! இது புரியாமல் மனிதன் வெப்பத்தின் ஐந்தாவது நிலையான நெருப்பை வணங்கினான் !
சூரியன், சந்திரனை வணங்க வேண்டியதில்லை. அவைகள் இங்கு தன் கடமையை செய்ய கடவுள் படைத்தான்.
பூமி ஒரு கர்ப்பம் !
வானம் ஒரு கர்ப்பம் !
பெண் ஒரு கர்ப்பம் !
இங்கு எல்லாம் வெப்பத்தால் தான் இயங்குகிறது ! வெப்பத்தால் தான் கரு வளர்கிறது. பூமி தானியத்தை தருகிறது. ஆகாயம் மழையை தருகிறது. பெண் சிசுவை தருகிறாள்.
நெருப்பு இல்லாமல் உன்னால் இங்கு வாழ முடியும். ஆதியிலே நெருப்பில்லாமலே வாழ்ந்தான். இயற்கையோடு இணைந்து இயைந்து வாழ்ந்தான். காற்றும், நீரும் மட்டுமே இங்கே வணங்கதக்கது. வெப்பம் தான் மேகத்தை குளிர்விக்கிறது. மழையை தருகிறது. வெப்பம் அதிகளவில் இருந்தால் மழை வரும்.
மனிதன் எப்போது நெருப்பை வணங்க ஆரம்பித்தானோ அதிலிருந்து சுடுகின்றான் கோபம் என்ற பாவத்தை சுமந்து கொண்டு ! கோயிலில் விருட்சம் புணித நீர் இருக்க நெருப்பை வணங்கி வருகின்றான். எல்லாம் இங்கே அறியாமை. ஆளுமை தெரியா மனிதன் அலங்கோலப்படுகின்றான்.
விதவிதமாக எதை செய்தாலும், எதை படித்தாலும், நிம்மதி என்பது நீ உணர்ந்தால் தான் கிடைக்கும். யோகா, தியானம், இன்னும் எத்தனை எத்தனை செயல் செய்தாலும் நீ தேடும் நிம்மதி கிடைக்காது. கடவுளை தவிற இங்கு யாரும் நிம்மதி தர முடியாது !
உன் உடலில் வெப்பம் மிகுந்தால் சுரம், காய்ச்சல், தலைவலி என்று எழுபத்து ஆறு வகை நோய்கள் உருவாகிறது. நூறு டிகிரிக்கு மேல் உன் உடல் வெப்பமானால் நீ தூங்கி போகின்றாய் உடல் சோர்வால் ! உணர் !
அறியாத ஆட்டுக் கூட்டத்தை என்ன சொல்வேன் ? எப்போதும் உடலை தஹிப்பான நிலையில் வை ! அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து பார் ! நீ நலமாக ஓர் நிலை கொண்டு நிம்மதியாவாய் ! நீருக்கடியில் தஹிப்பான வெப்பம் உண்டு ! மீன் வாழ்வதும் வெப்பத்தால் தான் ! அறிந்து உணரடா !
வெண்ணெய்யை நெருப்பு உருக்கவில்லை. பாத்திரத்தில் வெப்பம் படிந்து வெண்ணெய் உருகுகின்றது ! எதையும் ஆளமாக யோசி ! நெருப்புக்கும், வெப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை !
கடவுளை அறிய எத்தனை வழிமுறைகள் உள்ளன ! ஆனால் நீ வழிப்பாட்டை தூக்கி சுமக்கின்றாய் !
உலக வெப்பம் அதிகமாகிவிட்டது !
பனி நீர் உருகும் என்றும், புவி வெப்பமாதலை தடுக்க வேண்டும் என்று தான் மனிதன் புலம்புகின்றான். உலகம் அழிவு பாதையில் செல்கின்றது. பனி உருகி பாவி மனிதர்கள் மடிய கண்டேன் !
வெப்பம், கனல், தனல், சுடர், நெருப்பு ஆகிய ஐந்து நிலைகளில் நீ முதலாவதை உணராமல் கடை கோடியை வணங்கி கண்மூடி பிராத்திக்கின்றாய். தழல் ஆகி போகும் வாழ்வை வைத்து தடுமாறி வாழ்கின்றாய் பூமியிலே !
உணரடா ! என் அன்பு குழந்தையே !
அழியாத ஆணந்தம் நான் !
நான் இநன்யா !

Sunday, August 20, 2017

முஞல்க்கு பயந்து மூர்ச்சையாகி போகின்றான் ! ஆனால் வீரன் என்று பிதற்றுகிறான். இங்கே மனித சாட்குலியே நிரம்ப கண்டேன். ஆனால் நான் அதை வேட்டையாடுகின்றேன் ! தீமை

முஞல்க்கு பயந்து மூர்ச்சையாகி போகின்றான் ! ஆனால் வீரன் என்று பிதற்றுகிறான். இங்கே மனித சாட்குலியே நிரம்ப கண்டேன். ஆனால் நான் அதை வேட்டையாடுகின்றேன் !
தீமை ;;;;;
உன் மனதில் தீமையான எண்ணங்கள் இருக்கிறது. அதனால் தான் உனக்குள் துன்பம். நீ துன்பம் துவளும் சூட்சுமம் இது தான் ! உன் கெட்ட எண்ணங்கள், தீமையான நோக்கங்களும் தான் உன் துன்பத்திற்கு காரணம்.
கடவுளின் நாமம் சொல்லி எப்போதும் இறுமாந்திரு ! தீமையான எண்ணங்கள் வந்தாலும் வாயிலிலே நிற்கும் !
நீ என்ன கர்மா செய்தாலும் கடவுளுக்கு அர்பணித்து விடு ! உன் எண்ணங்கள் தான் உன்னை துன்பத்திற்கு ஆளாக்குகிறது. மனதில் தீய எண்ணங்கள் தான் உன் மனதை அமைதி இல்லா ஆக்குகிறது. ஏன் துன்பம் என்று யோசி ! அது என்னவென்று களைய பார் ! நீ ஆணந்தமாக இருக்கும் சூட்சுமம் இது தான் ! கடவுளை நினைப்பது, அவன் நாமத்தை சொல்லி ஆணந்தப்படுவது. எல்லை இல்லா சந்தோஷமும், ஆணந்தமும் உனக்குள் இருப்பதை உணர்வாய் !
ஆணந்த தாண்டவமாடு கடவுள் உனக்குள் இருப்பதாக ! உன்னை வழி நடத்தும் சக்தியை உணர்ந்து பார் ! மனித குலம் மனநிம்மதி இல்லாது இருக்க காரணம் தீய பாதையில் பயணிப்பது தான். உன் பயணத்தை கடவுள் பால் திருப்பு ! உன் வாழ திருப்பு முனையாக மாறும்.
எப்போதும் விரக்தி வரும். அதை தூக்கி எறி ! கடவுள் உன்னுள் இருப்பதாக நினைத்து, மரம் வைத்தவன் நீர் ஊற்றுவான். எப்போதும் குழந்தையின் மனநிலையில் இரு !
சாத்தான் என்பது வெளியில் இருந்து வருவதில்லை. உன் கோபம், ஆசை தான் சாத்தான் ! அதை நீ தான் விரட்ட வேண்டும். கடவுள் எப்போதும் உன்னை கண்கானிக்கின்றான். அவன் கருணை உன் மீது எப்போதும் இருந்தாலும் அதை நீ தான் உணராமல் அலைகின்றாய் !
உன் பொறுப்பற்ற செயலுக்கு அவ்வப்போது தண்டிக்கின்றான் கடவுள் ! ஆனால் அதை மறந்து மீண்டும் தவறு செய்கின்றான். நாளைய உணவு உனக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்று உனக்கு தெரியாது. பின் நாளையைப் பற்றி ஏன் கவலை கொள்கிறாய் ? உணவைப் பற்றி, வாழ்வை பற்றி கவலை கொள்ளாதே !
கடவுள் என்ற தகப்பனின் பொற்றாமரை பாதங்கள் பேரின்பம் ! பெருவாழ்வு ! கெட்டியாக பிடித்து கொள் !
உன் குழந்தை தீய வழியில் சென்றால், தீய பழக்கம் கொண்டால் உனக்கு வெறுப்பு வரும். ஏன் இந்த பிள்ளை பிறந்தது என்று ! அதே போல தான் நீ தவறு செய்தால் கடவுளின் மனநிலையும் இப்படி தான் ! ஆனால் கடவுள் மன்னிக்கின்றான் ! நீ திருந்தும் வரை காத்திருக்கிறான்.
உனக்கு வரும் துன்பம் உன்னாலே. கடவுளை ஒரு நொடியேனும் நிந்திக்காதே ! அவன் உனக்கு நிறைய கொடுத்திருக்கின்றான். அதற்கு நன்றி சொல்லவே உனக்கு நாள் போதாது. எப்போதும் நல் நினைவு, நல்வழியை தேர்ந்தெடு ! நாயகன் என் தந்தையோடு, நானும் உனை வழி நடத்துவேன் ! பிரபஞ்ச பேரழகை உனக்கு காட்டுவேன் !
தீயதை நினைக்காதே ! தீமைகள் செய்யாதே ! தினமும் போராடு !
கடவுள் எப்போதும் உன் பக்கத்தில் ! நிறைவாய் வாழ்வோடு !
வசந்த காலம் நான் !
நான் இநன்யா !

உன் குரம்பை சிணிதானடா ! சீ சீ மானிடா தேககோசத்தில் மயங்கி பிடையில் முடங்கி பாழாகி போனாயடா ? ஏனடா உனக்கு மதம் ? எதற்கடா மதம் ?

உன் குரம்பை சிணிதானடா ! சீ சீ மானிடா தேககோசத்தில் மயங்கி பிடையில் முடங்கி பாழாகி போனாயடா ? ஏனடா உனக்கு மதம் ?
எதற்கடா மதம் ?
மரத்தை வளர்த்தால் காய், கனி, விறகு தரும். உன் சந்ததியும் பலன் பெறும். நீ மதத்தை வளர்த்து ஏது கண்டாயடா ? உடைந்து போன துடிப்பில்லா தோணி போன்றது மதம்.
மதத்தால் நீ நினைத்த இலக்கை நிச்சயம் அடைய முடியாது !
மதத்தை வைத்து மனித மனதை மாற்றி மதி கெட்டு போனான் மானமில்லா ஈனமில்லா இழிசாதி மானிடன். இங்கே ஒழுக்கத்தை கடமையை தர்மத்தை சொல்லி கொடுக்கவில்லை. அழுது ஆர்பரிக்க கற்றுக் கொடுக்கிறான். உதவாத வழிபாடுகளை சொல்லி உரு இல்லா அலைகின்றான் ஈன சாதி மனிதன். எப்போது அறிவானடா ?
ஆயிரம் பேர் கூடி அழுதாலும், தொழுதாலும் கடவுள் உன்னில் நிலை பெறமாட்டான். உன் சொல் செவிமடுக்கமாட்டான். எப்போது பாவத்தை செய்யாமல் கடமையை செய்கின்றாயோ அப்போதே கடவுள் உனை நெருங்குவான் !
இங்கே உழைத்து கடமையை செய்பவனிடமே கடவுள் இருக்கின்றான் ! படைப்பில் எதற்கும் மதமில்லை ! ஜாதி இல்லை ! எல்லோரும் முடிவில் கருங்குழிக்கு தான் சொந்தம் என்பதை புரிந்து கொள் ! பிடி சாம்பலாக போகும் மானிடா, எதற்கடா மதம் ? ஏமாந்தது போதுமடா ! போதுமடா ! புரிந்து உணரடா ! போகும் வழி அறிந்து தெளியடா !
இந்த இநன்யாவுக்கு மதமில்லை ! ஜாதி இல்லை. என் சுட்டு விரல் உனக்காக காத்திருக்கின்றது. நிம்மதியான சத்தியமான பாதையில் உனை அழைத்து செல்கிறேனடா ! உன் துன்பத்தில் தோள் கொடுத்து நிற்பேனடா ! ஏனடா உனக்கு மனபயம் ?
வீறு கொண்டு எழுந்து நில்லடா ! வீதி எல்லாம் சொர்க்கமாக்க ! என் ஆணந்தம் நிம்மதி உனக்கு தான். என்னுள் நிறைபெறு ! எல்லாம் எடுத்து செல் ! ஊக்கமும் உறுதியும் கொண்டு ஆக்கம் (செல்வம்) பெற போராடு ! என்னையும் உன் துன்பத்தில் அழைத்து செல் !
நீ இன்பமாக வாழ நினை ! நான் துணை இருப்பேனடா ! என்னில் நிலைப்பாயடா ! எல்லாம் நிறைவாயடா !
என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள். “ஒலியாகி, உயிராகி, விதையாகி, உனக்குள் நானாக பின்னொரு நாள் உன் உடல் மன்னாகி, உன் உயிர் என்னாகி ஏதுகண்டாய் நிம்மதி ?” என்று சொல்வார்கள்.
மதம் மாறினால் துன்பம் போகாது. மதம் மாறி மனம் மாறி துன்புறுகின்றாயே ? உன் ஆண்மா இன்புறுவது எப்போதடா ? என்று சாடை மொழி பேசி சாட்டை அடி கொடுத்தார்கள் என் தந்தை. ஏன் உணரவில்லை நீ ?
மதம் உனக்கு சொர்க்கத்தின் பாதையை காட்டாது. இனி மனிதன் கூடுகின்ற கூட்டத்தில் கடவுள் இடியாய் இறங்குவான். உலகில் அனைத்து மதவழிபாடுகள் நடக்கும் ஸ்தலங்கள் எல்லாம் மண்ணில் புதையுண்டு போகும் !
பாலைவனம் சோலைவனமாகும் ! இடுகாடு குடியிருப்பாகும் ! குடியிருப்பு இடுகாடாகும் ! மதக்கலவரங்கள் உலகமெல்லாம் வரும் ! மதம் அழியும் ! மனித நேயம் மலரும் ! இடியாய், மின்னலாய், பூகம்பமாய் இனி கடவுள் இறங்குவான். உணர் !
உன்னுள்ளே ஒன்பது வாயில்கள். இயற்கைக்கு ஐந்து வாயில்கள். அதில் ஏழு வாயில்கள் சூட்சும வாயில்கள். உன்னில் உள்ள ஏழு வாயில்கள் இயற்கையில் ஐந்து வாயில்களோடு ஒத்து போனால் தான் நிம்மதியோடு இருப்பாய். நோயில்லா இருப்பாய். ஞானதன்மையோடு இருப்பாய். இதைவிடுத்து மதவழிபாடால் மகத்துவம் உண்டென்று ஏதோ புலம்புகின்றான் !
உன்னில் உள்ள ஐந்து வாசல்கள்தான் கடவுளை நெருங்க வைக்கும். அதில் மூன்று வாயில்கள் தான் உன்னை அறிய வைக்கும் ! இதை முதலில் கண்டுபிடி !
இரை தேடும் மானிடா, இறையையும் தேடு ! கடவுளின் பாதத்தில் கலந்திடு ! அவனுள் உருகிடு ! அவன் பொருளே நீ ! அறிந்து உணர்ந்து ஆணந்தமாகிடு ! உன்னில் அனைத்தும் ஒடுங்கும் !
தாயின் மார்பில் புணிதம் அருந்தியவன் புரியாது வாழ்கின்றான்.
பூமியின் மார்பில் நீர் அருந்தியவன் நீசனாக அலைகின்றான்.
அழிவு ஒன்று தொடக்கமே ! முடிவு ஒன்று ஆரம்பமே !
மதம் வேண்டமடா ! மனிதநேயம் கற்றுக் கொடு ! காலம் உன் பாதத்தில் கவிபாடும். ஏழு வீடுகள், ஒன்பது வாசல்கள் உனக்குள் தானடா ! உணர்ந்து அறியடா ! மதத்தை வளர்க்கும் மதி கெட்ட மானிடா ! மரத்தை வளரடா ! மண்ணும் குளிரும், உன் மனமும் குளிருமடா !
சத்தியத்தின் வாசல் நான் !
நான் இநன்யா !

Thursday, August 3, 2017

வருவியில் உலக தத்துவம் உண்டு ! தாரகாகணத்தில் உன்னை அறியும் பக்குவம் உண்டு ! தத்துவம் உணராது சத்தியம் தவறி வாழ்கின்றாயே, ஏனடா ?


to


வருவியில் உலக தத்துவம் உண்டு ! தாரகாகணத்தில் உன்னை அறியும் பக்குவம் உண்டு ! தத்துவம் உணராது சத்தியம் தவறி வாழ்கின்றாயே, ஏனடா ?
நன்மை !
உன் மனதில் தீமையான எண்ணங்கள் குறுக்கிடுகின்றன. அதனால் தான் உனக்கு துன்பம் என்று துவண்டு போகிறாய் ! மனம் அமைதி இல்லாமல் ஆர்பரிக்கின்றது. அது என்னவென்று ஆராய்ந்து களைந்துவிடு !
தீய எண்ணம் கொண்டவன் ஆணந்தமாக இருப்பதில்லை. எப்போதும் குழந்தை மனநிலையில் இaரு ! கடவுள் உன்னை எப்போதும் கண்கானிக்கின்றான். உன் பொறுப்பற்ற செயலை பார்த்து அவ்வப்போது தண்டிக்கின்றான். நீ உணராது இருப்பது ஏனோ ?
கடவுளுக்கும், உன் துன்பத்திற்கும் சம்பந்தமில்லை !
உன் அதிகாரத்தை உள் அடக்கி அன்பொழுக கேள் ! கடவுள் எல்லாம் உனக்காக படைத்தான் ! நீ அனுபவிக்க ஆணந்தமாக படைத்தான் ! படைக்கப்பட்டவை எல்லாம் உன்னை அறிவதற்காக ! ஆணந்தமாய் இருப்பதற்காக !
ஒரு புன்னகையால் இந்த பூமியை ஆளலாம். எப்போதும் மனதை ஆணந்த நிலையில் வைத்திருப்பவன் ஆர்பரிப்பதில்லை. அவன் ஆணந்தமாக வாழ்கின்றான். கடவுள் கையில் பொக்கிஷம் உண்டு ! அவன் திருகரங்கள் அன்பின் மிகுதி ! அவனுள் நிம்மதி ஆணந்தம் !
அவன் ஸ்பரிஷம் நீ கேள் ! இந்த துன்பம் ஏன் ? எதற்கு என்று கேள் ! உனக்கு விடை கொடுக்கும் உன் உள்வெலி மூலமாக !
சத்தியம் நிலையானது ! நானும் நிலையானவன் ! ஆண் குழந்தை பிறந்தால் ஆணந்தமென்றும், பெண் குழந்தை என்றால் துன்பம் என்றும் நினைத்து கடவுளை நிந்திக்கின்றான். உன் கர்மா, எண்ணம் தான் வாழ்க்கை ! எப்போதும் கடவுள் உனக்கு நன்மையே செய்வான் என்பதை புரிந்து கொள் !
நான் எனது என்ற கர்மா எண்ணத்தை கைவிடு ! எல்லாம் அவனுள் ஒப்படைத்து விடு ! உனக்கு எப்போதும் நன்மை தான் ! கடன் வாங்கி கஷ்டத்தில் மூழ்காதே ! ஆசையை குறை ! ஆள்பவன் உனக்கு அள்ளித் தருவான் ! நீ தான் செய்தாய் நீ தான் அனுபவிக்க வேண்டும் !
கடவுள் எப்போதும் மென்மையானவன், அவன் கடைக்கண் பார்வை உன் மேல் எப்போதும் ! உனக்கு தான் அவன் பார்வை பட வாழ தெரியவில்லை. இயல்பாய் வாழ் ! முயற்சி எப்போதும் செய் ! சோர்ந்து போகாதே ! நிச்சயம் உனக்கு அள்ளித் தருவேன்.
கடவுளை துணை கொள் ! உனக்கு வழி கிடைக்கும் !
படைத்ததில் தீமையானது என்பது ஏதுமில்லை. உன் தீய எண்ணம் தான் எல்லாம், தீமையாக தெரிகிறது. பொருள்களில் நன்மை தீமை உண்டு ! பிரித்து உணர்ந்து அருந்தும் மானிடா, ஏன் உன்னை அறிய முற்படவில்லை ?
மாதத்தில் ஒரு நாள் மனதில் உள்ள எல்லா கசடுகளையும் நீக்கி கடவுளோடு ஆணந்தமாக இருக்க பழகு ! ஆசை, கோபம், காமம் எல்லாம் விலக்கி பின் ஆணந்த நிலை அறிவாய் !
நன்மைக்குள் நன்மை நான் !
நான் இநன்யா !
https://www.youtube.com/playlist?list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg