Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, December 27, 2017

என் பசைவு உண்மைதானடா ! பெருவாரி போல் தானடா ! சத்தியம் நான் தானடா ! தரணியில் எதை தேடுகின்றாயடா ? சத்தியம்

என் பசைவு உண்மைதானடா ! பெருவாரி போல் தானடா ! சத்தியம் நான் தானடா ! தரணியில் எதை தேடுகின்றாயடா ?
சத்தியம் ;;;
புஷ்கரி என்றால் தாமரை. புஷ்கரம் என்பதும் ப்ரணம் என்பதும் நீர் ! இந்த புஷ்கரிக்கும் புஷ்கரம் என்ற ப்ரணத்திற்கும் தொடர்பு உண்டு ! இரண்டும் ஆன்மா, உயிர் சம்பந்தப்பட்டது ! என் அன்பினிற்கினிய தந்தை பிரபஞ்சத்தின் தலைவன் யாகவா திருக்கரத்திலே ஐந்து கோடி ப்ரணம் உண்டு ! கையில் இருக்கும் புஷ்கரிணி என்ற அட்சயத்திலே ஆள கருத்து உண்டு ! ஆள்பவன் படைத்தவன் கையிலே நீருண்டு ! புணித ஸாதுனா என்ற பெருங்காற்றும் உண்டு !
வலிமையானவன் படைத்தவன் தானே ? பின் பாழ்பட்டதை வணங்கி பாசமில்லாது அலைகின்றாயே ஏன் ? உன் உயிருக்கு நிம்மதி தரும் சூட்சுமம் நீரில் தான் உண்டு. நீர் தான் உனக்கு மென்மை, ஆளுமை கற்றுத் தரும் !
நான் சத்யம் ! என் சொல் சத்யம் ! என் செயல் சத்யம் ! காமமும், மோகமும், கோபமும் உள்ளவனால் நல்வாக்கு தரமுடியாது. சத்யம் என்பது ஆன்மா ! சத்தியமே நிலையானது ! உண்மையானது ! நீ சத்தியத்தை பேசி பழகு ! நீ சத்தியனாவாய் ! உன் சொல் வெல்லும். பின் தீமையானது உன்னை நெருங்காது. எல்லா நேரத்திலும் சத்தியத்தை கடைபிடி ! அதுவே தர்மம் ! ஆனால் தர்மத்திற்காக போராடும் பொழுதும், சண்டையிடும் பொழுதும் சத்யம் தேவை இல்லை.
தர்மத்திற்காக உயிர்களை கொல்வது தவறில்லை. கடவுள் தர்மத்திற்காக தான் இப்போது பூகம்பம், இடி, மின்னல், சூறாவளி, பெரும் வெள்ளம் என்று அசுர கூட்டங்களை அழித்து கொண்டிருக்கின்றான். தர்மத்திற்காக உயிரை கொல்வது தவறில்லை ! பாவமில்லை ! தர்மத்திற்காக மட்டுமே உன் சத்யம் கையில் யுத்தத்தை எடுக்கட்டும். நான் சத்தியத்தின் சாயல். என் ஒளி உன் மேல் விழும் போது நீயும் சத்தியனாகிவிடுவாய் !
சத்தியம் பேசும் தன்னிகரில்லா பெரும் மரங்களைப் பார்த்து உணர் ! தனக்கு தானே சமைத்து உண்ணும் உயிர் மரங்களை உணர் ! பிறருக்கு உதவியாய் இருக்கும் மரங்கள் பேசும். ஆனால் அதன் அழுகுரல் கேட்காமல் மனிதன் வெட்டி சாய்க்கின்றான். மனித நேயம் தொலைத்து மழை வளம் இல்லாது மாய்கின்றான். மரங்கள் யுகத்தில் கடவுளை மட்டுமே நம்பும். தனக்கு தானே சமைத்து உண்ணும் மரங்கள் சத்தியத்தின் சாயல் தானே ?
சத்திய வார்த்தைகளை பறவைகளும் பேசும் ! இங்கே சத்தியத்தை தொலைத்தது மனிதன் மட்டும் தான் ! மனிதன் சத்திய பாதையை மறந்தான். தன் சந்ததிக்கு சத்தியம் சொல்ல மறந்தான் ! கோபம், ஆசை, விரக்தியை தான் மனிதன் கற்று கொடுக்கின்றான். தீவினைக்குள் மூழ்கி திசை தெரியாமல் அலைகின்றான் !
மண்ணையும், மரங்களையும் எப்போது மனிதன் மறந்தானோ அப்போதே மனித நேயம் தொலைத்தான். முன்னால் வீதியெல்லாம் மரங்களை நட்டான். இப்போது வீதியில் நிற்கின்ற மரங்களை வெட்டி காகிதம் செய்கின்றான். காகிதத்தால் வந்த வினை தானடா கர்மம் நிறைய !
கடவுள் சத்தியமடா ! நிச்சயம் திருத்தி கரை சேர்ப்பான். நான் கடை விரிக்க வரவில்லை. நீ உண்டு தின்பதை பார்த்து உண்மை அறிய வந்தேன் ! சத்யம் சத்யம் என்று மதங்களை வைத்து கூவி நிற்கின்றான். எப்போதும் சத்யம், எதற்கெடுத்தாலும் சத்தியத்தை பேசி சந்ததியை பிரிந்து அலைகின்றான். சத்யம் தவறி உழைப்பில்லாமல் கடவுள் பெயரை சொல்லி உட்கார்ந்து சுகம் காண்கின்றான்.
உலகில் பஞ்சம், வறுமை, நோய் இயற்கையின் சீற்றத்தை கடவுள் கொடுக்கின்றான். ஆண்மாவின் ஆளுமை தெரியாமல் வாழ்கின்றான் மனிதன் ! உணர் !
சத்தியத்தோடு இரு !
சத்தியத்தோடு பழகு !
சத்யமாய் உனக்கு சத்திய வாசல் தெரியும் !
உண்மை பசைவு நானடா !
சத்தியமானவன் நானடா !
நான் இநன்யா !

Wednesday, December 20, 2017

போர்வு வருமடா ! போர் அடிக்கும் மேழி சுமப்பான் மேதகு வாழ்வு வாழ்வானடா ! என் சொல் வெல்லுமடா !

போர்வு வருமடா ! போர் அடிக்கும் மேழி சுமப்பான் மேதகு வாழ்வு வாழ்வானடா ! என் சொல் வெல்லுமடா !
தானம் தந்த தனம் ;;;
தானம் தரும் உழவன் இனி வாழ்வான். உலகமெல்லாம் வறுமை சூழும். உலகம் உழவனின் காலில் விழும் காலம் நெருங்கிவிட்டது.
தனம் வர தானம் செய் ! மண், பொன், வெள்ளி, பசு, தேங்காய், எள் தானம் செய்யலாம். உடனடி பலன் உண்டு ! பின் நெல், அரிசி, கோதுமை பயிர்கள் எல்லாம் தானம் செய் ! சந்தனம் மிகப் பெரிய வளம். இருந்தால் கொடு ! இல்லையேல் மனதால் வாழ்த்தி விலகு ! பால், வெள்ளம், வஸ்திரம், புத்தகம் தானமாக கொடுக்கலாம். உன் உள்ளம் தாளமிடும் !
கடுகைத் தவிற எல்லா நவமணிகளையும் தானம் செய்யலாம். நிதானம் வர தானம் செய் ! ஆனால் சோற்றை கொடுத்து சோம்பேறியாக்காதே ! இல்லாமை கொடுமை அல்ல ! விரும்பாமை தான் பாவம் !
எலுமிச்சை, பூசணி, சுரைக்காய், தாமரை இலை தானம் செய்யாதே ! முருங்கை, உப்பு, துளசி, எண்ணெய் , முட்டை அசைவ வஸ்துகள் தானம் செய்யாதே ! பிறரிடம் இருந்தும் வாங்காதே ! மனைவி வீட்டில் இருந்தும், தாய் வீட்டில் இருந்தும் வாங்காதே ! தாய், தந்தை, மனைவியிடமிருந்து பஞ்சினால் நெய்ததை புதிதாக வாங்காதே ! நீரில் அலசி வாங்கு ! கருவுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு !
அடுத்தவர் கையிலிருந்து எலுமிச்சை வாங்காதே ! ஊமத்தை, நாயுறுவி, துளசி, தொட்டாற்சுருங்கி, எருக்கு - இவைகளை நன்றி சொல்லாமல் பறிக்காதே !
பஞ்சதரு என்று சொல்லும் மேலிருந்து நேரடியாக கீழே வந்த மரங்கள் (வன்னி, பாதிரி, மா, வில்வம், மந்தாரை ) இந்த ஐந்து மரங்களின் இலைகளையும் நன்றி சொல்லாமல் பறிக்காதே. இவைகள் ஐந்தும் ஞானமரங்கள். உன் சந்ததி வளம் பெற இந்த ஐந்து மரங்களையும் பூமியில் ஊன்றி போ ! உன் பாவம் கரையும். அதற்கு நீர் ஊற்ற ஊற்ற மரத்தை நட்டு பராமரித்தால் உன் மனசுமை குறையும். நீயே ஆராய்ந்து பார் ! இந்த ஐந்து மரங்களுக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டு ! மா, வில்வம் மகத்தான மரங்கள் !
எதையும் பெண்கள் தொடலாம். பறிக்கலாம். பாவமில்லை. தீட்டு இல்லை. ஆனால் பாவி மனிதன் தான் பெண்ணை விலக்கினான். பெண் அந்த மூன்று நாள் (மாத விலக்கு) தனக்கு வேண்டியதை கேட்டால் நிச்சயம் கிடைக்கும் ! சாபம் விட்டால் எதிரியும் கலங்கி போவான். இங்கே யார் சாபமிட்டாலும் பலிக்கும் தாயின் சாபத்தை தவிற !
பசுவைத் தவிற எந்த ஜீவராசிகளையும் தானம் கொடுக்காதே ! ஆதியிலே கருப்பு நிறம் காராம் பசு சாணத்தை தரையில் படாமல் வெள்ளை துணியில் பிடித்து அதை இளம் வெயிலில் காய வைப்பார்கள். இதை கார்த்திகை மாதம் ஆரம்பிப்பார்கள். பின் காய்ந்த சாணத்தை ஆற்று மணல் மேல் எரித்து அதை மார்கழி பணி முழுவதும் வைத்து பின் தை மாதம் வளர்பிறையில் அந்த சாண சாம்பலை வெள்ளை துணியில் சலித்து பின் உடலில் பூசுவார்கள்.
இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கெட்ட நீரும், தலையில் உள்ள எரிஞ்ச நீரும் உறிஞ்சப்படும். ஏனென்றால் பசு அரிஷ்ட மூலிகை என்ற விஷ புற்களை சாப்பிடும். அதனால் தான் பசுவுக்கு எந்த விஷமும் தொண்டையில் நின்றுவிடும். இதை அறிந்து செய்தான். ஆனால் அதை புணிதம் என்ற பெயரால் மதத்தில் புகுத்தினான்.
ஆதியிலே இருந்த மதம் உண்மை தான். இப்போது சுயநலத்திற்காக மதம் ஆரம்பித்து சண்டையிடுகின்றான். கோதானம், பூதானம், பொன் தானம், திலதானம், இவை எல்லாவற்றிலும் சிறந்தது அறிவு தானம் தான் ! மேலே கூறிய அனைத்து தானங்களும் பாவம் கரைக்கும். ஆனால் அறிவு தானம் மீண்டும் பிறப்பில்லாமல் வைக்கும் !
தானத்தில் சிறந்தவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, December 13, 2017

வான் கொடை ஊற்றருகி ஊமை கூட்டம் உணராது இருப்பது ஏனோ ? இங்கு சளகனே நிரம்ப கண்டேன். கொடை

வான் கொடை ஊற்றருகி ஊமை கூட்டம் உணராது இருப்பது ஏனோ ? இங்கு சளகனே நிரம்ப கண்டேன்.
கொடை
வான் கொடை தந்தான். வான் தலைவன் என் அன்பின் அப்பா யாகவா ! வின் மகன் நான் உனக்கு ஊட்டினேன். நீ உணராது இருப்பது ஏனோ ? கருணை நிறைந்த புணித மழையை வரவேற்காமல் கரிசனம் செய்தான் கர்மத்தின் சாயல் வைத்த மானுடம் !
என் தந்தையின் அருட் கொடையை அறிவாயோ ? ஆஹா ஆனந்தம். ஆயுள் முழுவதும் பேரானந்தம். பெரு வாழ்வோடு உலகானந்தம் ! வான் கொடை தராவிடில் இங்கே யாரும் வாழ முடியாது. வசந்த காலம் நிலைக்க முடியாது. எந்த வித சிரமமுமின்றி எந்த வித கொடுக்கலும் இன்றி நீ இன்புற தந்தானே வான் மழை தந்த நாயகன் ! நீ என்றாவது நன்றி சொன்னாயா ?

படைத்தவன் கருணை பாமரனுக்கும் உண்டு ! கடவுளுக்கு பாகுபாடு இல்லை, பண்பு கெட்ட மானிடா ! கடவுளின் அருட் கொடையை பருகி உணர்ந்தவன் பக்குவம் தொலைத்தான். பாசமுள்ள மழையை உணரா பாவியாக அலைகின்றான் !
என் விந்தை நடத்தும் சந்தையில் நீ விற்காத பொருள் தானடா ? ஆதலால் வேதனையோடு வாழ்கின்றாய். இந்த பூமியிலே உணர்ந்து கொள்ளடா ! புணிதன் கருணையை உணர் ! புண்ணியம் உனக்குண்டு.
என் நாவினிலே நாயகன் தானுன்டு. நம்பியவர் வாழ்வில் கண்ணீர் இல்லா வசந்த காலம் தானுண்டு. உவகை கொள்ளடா ! உண்மையில் நன்மை நானடா !
வான் அமிர்தம் மழை தந்த நாயகனை தெரிய முற்படு ! நான் உனை அழைத்து செல்கிறேன். அவன் பாத கமலத்தில் பருகும் தேனுண்டு. நான் அழகாக, ஆனந்தமாக இந்த நரகத்தில் இருக்கும் ரகசியம் நன்றி சொல்வதாலே தான் !
இயற்கை எனை தாலாட்டுகிறது. நம்பிக்கை தளரும் பொழுதெல்லாம் நாயகன் என் பாத கமலத்தை கெட்டியாக பிடித்து கொள். விண் நாயகன் பிரபஞ்சத்தின் இளவரச இந்த இநன்யா உனை கரை சேர்ப்பேன்.
நன்றி சொல்லடா ! .நாளும் அவன் புகழ்பாடடா ! நாயகன் நான் உன் கண் முன்னால் விரிவேன் !
ஆணந்த தூறல் நான் ! ஆர்பரிக்கும் வெள்ளமும் நானே ! ஆர்பரிக்கும் வெள்ளத்தை அடக்கும் வல்லமையும் நானே ! ஆனால் நான் எப்போதும் ஆர்பரிப்பதில்லை. அற்ப மனிதன் ஏசுவதையும், பேசுவதையும் காது கொடுத்து கேட்பதில்லை. ஏனென்றால் நான் ஆனந்தமானவன்.
என்னுள் இருமாந்து அலைகின்றேன் ! நான் உயரிய வித்து என்பதை அறிவேன். பிரபஞ்ச நாயகனின் தவப் புதல்வன் என்பது எனக்கு தெரியும் ! நான் கடவுளின் (என் தந்தை) கருணையை உணர்ந்தவன். அளவில்லா அன்பை உணர்ந்தவன். என் ஆனந்த சூட்சுமம் இது தான் !
காண்கின்ற பொருளில் எல்லாம் கருணையை உணர்வதால் பேரின்பம் எனக்குள்ளே ! நீயும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய் ! கடவுளின் கருணையை உணர் ! அதை உற்று அறியாமல் உறங்கிவிடாதே !
வான் கொடை மழை ! வாரி அனைத்து முத்தமிடு !
கடவுளின் கருணை உன் மேல் !
வான் கொடை நான் !
நான் இநன்யா !

Wednesday, December 6, 2017

இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யும் மானுடமே நான் கண்டேன் ! நான் சத்யம் ! என் நாமம் சத்தியம் ! உணர்ந்தவன் ஆனந்த நிலையில் வாழ்வான்.

இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யும் மானுடமே நான் கண்டேன் ! நான் சத்யம் ! என் நாமம் சத்தியம் ! உணர்ந்தவன் ஆனந்த நிலையில் வாழ்வான்.
காஞ்சியில் ஏன் வாழ்கின்றேன்.
பொறுனை எனும் புணித தாமிரபரணி நதிக்கரையில் பிறந்தேன். சீரலவாய் எனும் திருச்செந்தூர் அருகில் வளார்ந்தேன். பிரம்மபுரம் என்று வேதத்தில் இருக்கும் புணித காஞ்சி மாநகரில் வாழ்கின்றேன் ! வந்தது ஓர் இடம் ! வளர்ந்தது ஓர் இடம் ! வாழ்வது ஓர் இடம் !
வசந்த காலத்தை காலடியில் வைத்து, காலத்தை கையில் வைத்து காஞ்சிக்கு வந்தேன் ! தமிழும், மானுடமும் உற்பத்தி செய்த இடத்திலிருந்து இந்த முக்தியை தரும் புண்ணிய பூமி காஞ்சிக்கு வந்தேன் !
தமிழ்நாட்டில் எங்கு பிறந்தாலும் மீண்டும் பிறக்கமாட்டாய். உன்னை உணர்ந்தால் ! வாழ்வில் இந்த மூன்று முக்கிய முக்தி தரும் ஸ்தலத்தில் கால் தடம் பதித்திருப்பாய் ! (தாமிரபரணி நதிக்கரை, செந்தூர் எனும் சீரலவாய், காஞ்சி). பூமியில் இவ்விடங்கள் மும்மூர்த்திகள் வாசம் செய்யும் இடங்கள் ! அதனாலே காஞ்சி மாநகருக்கு மும்மூர்த்திகள் வாசம், பிரம்மபுரம், விண்டுபுரம், சிவபுரம் என்ற புணித பெயர்கள் உண்டு !
மன்னர் மன்னனும்  , மானுட வடிவம் தரித்த ராமன், கிருஷணன், இயேசு வந்து சென்ற சஞ்சி நாதம் பதித்த இடம் உலகில் மூன்று முக்கிய புள்ளிகள் நேர் கோடுகளாக தெற்கிலிருந்து வடக்காக நீண்டு காண்டத்தின் வாயிலில் முடிவடைகிறது. அது நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் தொடங்கி சீரலவாயில் ஊன்றி காஞ்சியில் முடிவடைகிறது. இந்த முக்கோணத்திற்கும் உன் பாத்தில் உள்ள மூன்று நரம்புகளுக்கும் தொடர்புண்டு !
காஞ்சிக்கு காமபுரம் என்ற நாமமும் உண்டு ! காம என்றால் அன்பு, கருணை, தெளிவு என்று அர்த்தம். அன்பின் ஊற்று ஆளுமையை உற்று நோக்கும் உயிரின் உணர்வு இது. என் அன்பிற்கினிய தந்தையும், நானும் தாமிரபரணி நதிக்கரையில் பிறந்தோம். திருச்சீரலவாயில் வளர்ந்தோம். காஞ்சியில் வாழ்ந்து பிரபஞ்சத்தின் ஒளியாக உயிர் பெற்றோம் !
இந்த சத்தியவிரத ரேத்திரம் என்ற காஞ்சி மாநகரில் சத்தியத்தை கடைபிடித்து சத்திய பாதையில் பயணிக்கின்றேன். நான் சத்தியம் ! அறிவு, அறிவது, அறியப்படுவது என்ற மூன்றுக்கும் ஆண்ம தொடர்பு உண்டு ! மூன்றும் நானறிந்தேன் ! அதனாலே “நான்” என்று சொல்கிறேன்.
என் அன்பிற்கினிய தந்தை யாகவா அவர்களிடம் உலகில் அவர்கள் பார்த்ததில் யார் சிறந்த மகான் என்று கேட்டதற்கு காஞ்சி மகான் மட்டுமே உண்மை என்று சொன்னார்கள் ! காஞ்சி மாநகர் பிரளய சித்து என்ற திருநாமத்தையும் தன்னகத்தே கொண்டது. இந்த மண் முக்தி தரும் புண்ணிய பூமி !
மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வு அளிக்கும் தாமிரபரணி நதியில் நீராடி காஞ்சியில் கால் மிதித்தவன் இங்கே மீண்டும் பிறப்பதில்லை ! முக்தி தரும் ஏழு நகரங்களில் முதன்மையானது இது தான் ! காளிதாசன் ஞான திருஷ்டியில் உணர்ந்து இங்கே கால் மிதித்து போனான். தன் கவிதையிலும் வடித்தான் காஞ்சியை.
வரலாறு மறைக்கபட்டது ! உணர் ! மனிதன் சாஸ்திரத்தில் மயங்கி சரித்திரம் மறந்தான். திராவிடத்தை உருவாக்கி பின் அதை சிதைப்பதும் இந்த பூமியில் தான் !
இனி எல்லாம் மாறும் !
எல்லாம் அழியும் ! இனி புது புது வித்துக்கள், புது புது பறவைகள், புது புது விலங்கினங்கள், புது புது நோய்கள் யுகத்தில் தோன்றும் ! தர்ம யுகமாக மாறி கால சக்கரம் சத்திய வழியில் பயணிக்கும். அனைத்திற்கும் இங்கே காரணம் உண்டு ! காரணமில்லாமல் இங்கு ஏதும் நடப்பதில்லை என்பதை உணர் !
நான் வந்த காரணம் தெரிந்தேன் ! காலத்தை என் பாதத்தில் அடக்கினேன் ! முக்காலத்தையும் உணர்ந்தேன் ! நீ எக்காளமிடாதே ! உன் உயிர் உனை ரணப்படுத்தும். உணர் உண்மை நீ என்று ! உன்னுள் இருப்பது கடவுள் ! அதை உணரப் போராடு !
நான் இந்த யுகத்தில் முப்பத்தி எண்ணாயிரம் தேவர்களோடு, நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளோடு, நூற்றிப் பதினோறு கோடி முனிவர்களோடு நாற்பத்தி எட்டாயிரம் கோடி ஆண்டுகள் வாழ்வேன் !
இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யாதே !
என் தந்தையின் பிரம்மஸ்தலமும் காஞ்சி மாவட்டத்தில் அடங்கி இருக்கிறது. உணர் உனக்கு ஞானமிருந்தால் !
பிரம்மபுரத்தில் யாசித்து, வாசித்து, சுவாசித்து வென்றவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, November 29, 2017

தமிழ், இனிமை ! அழகு ! ஆணந்தம் ! அமைதி தரும் ஆணந்த மொழி ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! உண்மை தமிழை உணரடா !


to INANYA MAHA MUNIVAR
30-11-2017
தமிழ், இனிமை ! அழகு ! ஆணந்தம் ! அமைதி தரும் ஆணந்த மொழி ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! உண்மை தமிழை உணரடா !
அமிழ்த மொழி தமிழ்
மொழிகளில் முதன்மை மொழி ! இனிய மொழி ! இனிமை மொழி ! என் உயிர்த் தமிழ் மொழி ! தமிழின் சாறு அருந்தினேன். மொழியின் மோகம் உணர்ந்தேன். இனிதான தமிழ் மொழியை பேச பிறப்பெடுத்தேன் இங்கு !
நாவில் தேன் ஊறும், தித்திக்கும் “ழ்” என்ற உயிர் மெய்யை சுழட்டும் பொழுது உன் உள் நாக்கில் பேரின்ப ரசத்தை தரும். உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் கடவுள் படைத்தான். மனிதன் உருவாக்கினான். ஆனால் தமிழ் மொழியையும், மனிதனையும் சிந்தித்து செயல் வடிவம் கொடுத்து அழகாய் வடிவமைத்து உருவாக்கினான் ! அதை சித்தர்கள் செதுக்கினான்.
இனிய மொழி தமிழை உணர்ந்தவன் கடவுளை எளிதாய் நெருங்குவான். இனன்யம் என்ற பிரம்ம லிபி என்ற பெரும் மொழியின் தாய் மொழி தமிழ் ! இதன் தொடக்கம் பூமி படைத்தபோதே உருவாக்கப்பட்டது. எல்லாம் மொழிகளும் இடையில் வந்ததே. கன்னியாகுமரியில் முதன்மொழி பேசப்பட்டது. பின் ஆஸ்திரேலியாவில் வேர் ஊன்றப்பட்டது. ஆப்பிரிக்காவில் செயல் வடிவம் கொடுத்து உலகமெல்லாம் பேசப்பட்டது.
வீர தமிழன் உலகை எல்லாம் முன்னால் ஆண்டான், ஆணவமில்லாமல். பிற எந்த மொழியையும் மனிதர்களுக்கு பெயராக சூட்டப்படவில்லை. ஆனால் தமிழைத்தான் மனிதன் தன் பெயராக சூட்டி மகிழக் கண்டேன்.
தமிழ் மொழி போல் இனிய மொழியை எங்கும் காணேன் ! அதனால் பிறமொழிகள் குறை இல்லை. எல்லாம் இதனிலிருந்தே தொடங்கியதை மறந்தான் மானிடன். நான் தமிழ் நாட்டில் பிறக்க மேலே ஆசை கொண்டேன்.
இது புணித பூமி ! இங்கே வாழ்பவன் வரம் பெற்று வந்தவன். இந்தியா என்ற ஞான தேசத்தில் பிறந்தவன் இறுதி பிறப்பாய் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் பிறந்தவன் மீண்டும் பிறக்கமாட்டான். தன்னை உணரும் பக்குவம் இங்கே அனைவருக்கும் உண்டு ! ஞானிகள், மகான்கள், சித்தர்கள் கடவுள்கள் வாழும் நிறைந்த பூமி இது !
வரம் வாங்கி வந்ததை மறந்து போகிறாய் ! வாசல் இது தான் என்று தெரியாது கிரங்கி போகின்றாய். பேச பேச எச்சில் ஊறும் ஆதி மொழி தமிழ் ! உன் ஜீரண உறுப்புகளை நோயில்லாமல் வைக்கும். புரிந்தவன் ஞானி தான். தமிழ் என்று சொன்னால் உள் நாக்கு மடிந்து நல்வினையை உருவாக்கும் ! அதனாலே சித்தர்கள் தமிழ் பேசி கடவுளை துதிபாடி ஆணந்தித்தான்.
உயிர், மெய், உயிர்மெய் என்று ஊமை கூட்டத்தை உசுப்பி எழுப்பும் மொழி ! அம்மா என்ற இந்த இனிய உறவின் மொழியை பிற மொழியில் தேட கிடைக்காதது. பசு கூட அம்மா என்று தான் அழைக்க கண்டேன். ஆதி தமிழன் சாரம் இப்போது இல்லை. இப்போது மொழியை சிதைக்கின்றான். அதன் இனிமை தெரியாமல் கண்டபடி பாடி கூத்தடிக்கின்றான்.
உலகில் எங்கு பிறந்தால் பிறப்பில்லை என்று இயேசு மகானிடம் சீடர்கள் கேட்டதற்கு தமிழ்நாட்டில் பிறந்தால் பிறப்பில்லை என்று சொன்னார். இராமன், கிருஷ்ணன், இயேசு தாமிரபரணி நதிக்கரைக்கு வந்து சென்றது உண்மை ! என் அன்பின் தந்தை பிரபஞ்ச நாயகன் யாகவா சொல்வார்கள், தமிழ் பேச வரம் வாங்கி வந்தாய் என்று. இனி தென்னாடு தாமரை போல் மலரும். வட நாடுகள் வாடும் என்றும் சொல்வார்கள். இது கால கணக்கு என்றும் உரைத்தார்கள்.
உலகில் உள்ள மன்னர்கள், ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இந்த ஞான பூமி இந்தியாவுக்குள் வருவார்கள். ஞான வாசல் தமிழ்நாட்டில் வந்து தங்குவார்கள். நிச்சயம் சத்தியமாக நடக்கும். தமிழ் உலகின் ஆட்சி மொழியாகும் ! தமிழன் உலகை ஆள்வான் !
அமிழ்த மொழி தமிழ் என்றும் வாழும் !
வாழ்பவன் நான் !
நான் இநன்யா !

Thursday, November 23, 2017

நிம்மதி தரும் கடவுளின் பாதம் ! நிர்மதி தரும் என் கைவாரம் ! பீழை தான் தந்தது பீடை உள்ள மனிதனால் !


to INANYA MAHA MUNIVAR
23-11-2017
நிம்மதி தரும் கடவுளின் பாதம் ! நிர்மதி தரும் என் கைவாரம் ! பீழை தான் தந்தது பீடை உள்ள மனிதனால் !
ஏழுநிலை
கீழே ஏழு உலகங்கள் இருப்பதாக பிதற்றுகிறான். பாதாள உலகம் என்றும் விளம்புகிறான். கடவுளை பாதளம் தேடி அலைந்தான் என்று கதை படித்தான். கதை படித்து முழுவதும் விளங்காமல் காலம் தெரியாத கயவனிடம் ஏது கூற ?
உன்னில் மேலே ஏழு நிலைகள். கீழே ஏழு நிலைகள். மொத்தம் பதினான்கு நிலைகள் ! பாதத்தில் அடியில் இரண்டு நிலைகள் உள்ளன. உன்னில் மேல்நிலை ஏழையும் கடந்தால் தான் கடவுளை அறிய முடியும். ஈரேழு உலகம் என்று இதைத் தான் சித்தர்கள், மகான்கள், ஞானிகள் அனைவரும் சொல்லிப் போனார்கள்.
உடலில் ஏழு ஆதார சுருதிகள், ஆறு சக்கரங்கள் உள்ளன. இவைகளை அறியாமல் ஞானம் தேடி புலம்புகின்றான் புற உலகில் !
அகத்தில் கழிந்தால் புறம் ஒடுங்கும் என்பதை புரியாமல் அலைகின்றான். ஒரு விநாடி சூட்சுமமே எல்லாம். ஆனால் யோகா, தியானம், தவம், விரதம் இன்னும் எத்தனையோ மடமைதனமான செயல்கள் கொண்டு தன்னை வருத்தி ஆதியில் கடவுளை மறந்தான். தன்னை கடக்காமல் விண்னை கடக்க நினைக்கின்றான்.
இங்கே எதுவும் நிலையில்லாதது என்னைத் தவிர !
காலம், சூரியன், சந்திரன், மனிதன் என இங்கே எல்லாம் மாறும் என்பதை உணர் ! ஆனால் நான், வானம், பூமி என்றுமே மாறுவதில்லை !
மனிதன் தான் வேஷம் போடுகின்றான் கடவுளிடம். கடவுளுக்கு கண் தெரியாது என்று எண்ணற்ற தவறுகள் செய்கின்றான். இங்கே நிலை, நிலை இல்லாதது எதுவென்று அறிந்து வணங்கினால் மனிதன் ஞானியாவான் ! கற்சிலைக்கு குடம், குடமாக பால் தயிரை, நெய்யை விரயமாக்கி கோமாளி போல் வாழும் குறை உள்ள மனிதனிடம் ஏது கூற ?
ஐயாயிரம் வருடங்கள் மனிதன் அலங்கோலப்படுகிறான். இரண்டாயிரத்து ஐந்நூரு வருடத்திற்கு முன்னால் கோயில் இல்லை ! கோபுரம் இல்லை ! கொடி மரங்கள் இல்லை ! குளங்கள் உண்டு ! மனிதன் நிம்மதியாய் வாழ்ந்தான். ஆனால் நான் என்று மார்தட்டி இப்போது நாயகனை (கடவுள்) அறியாது மாண்டு விடுகின்றான்.
என்னை பார்த்தவன் ஏழு நிலைகளையும் கடப்பான் ! எந்த தியானமும், தவமும் செய்யாமல் என் பின்னால் வருபவன் தன் ஏழு கீழ் நிலைகளையும் அறிவான் !
திடன் உள்ளவன் தப்பித்து கொள்கிறான். என்னுள் நிந்தித்து நின்று யோசிக்கின்றவன் நிர்மூலமாக போகின்றான். நான் நானாக எப்போதும் இருக்கின்றேன் ! ஆனால் நீ தான் நீயாக இல்லை. மனிதன் எப்போதும் மது உண்டவன் போல மயக்க நிலையில் நிற்கின்றான். கேட்டது கிடைத்தால் கடவுள் இருப்பதாக உளர்கின்றான். கேட்டது கிடைக்கவில்லை என்றால், நினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறான். உன் கோபம் உன்னையே சுட்டெரிக்கும் என்பதை உணர் !
வம்பு பேசும் மானிடனே, எப்போது உணர்வாயடா ? என்னுள் ஆறு சூட்சுமம் எப்போது அறிவாயடா ? ஆனந்த நிலையில் எப்போதும் நான் ! ஆனால் நீ இல்லை. உன் ஆனந்தம் நான் காணவே ஆசைப்படுகிறேன் !
முயற்சி செய்யடா ! உன் முன்னால் நின்று நான் அள்ளித் தருகிறேன் ! திட நம்பிக்கை கொண்டு எதையும் செய். நான் உன் உறவு. என் மேல் திட நம்பிக்கை கொண்டு எதையும் தொடங்கு ! வெற்றி நிச்சயமடா !
சத்தியத்தின் தலைமகன் நான் !
நான் இநன்யா !

ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களின் இன்றைய செய்தி.

18-11-2017
நன்மையை ஆயிரம் பேர் விரும்புகின்றான்,ஆனால் உண்மையை ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே விரும்புகிறான். உண்மையை தேடுகின்றவன் பெரும் நிம்மதி பெறுகிறான், பெருஞ்செல்வம் பெறுகிறான்.நான் உண்மை, நன்மை,நிம்மதி, ஆணந்தம் என்னை அறிந்தவன் சுகம் பெறுவான்.பாவமடா நீ உலகில் எங்கு ஓடினாலும் எதை பின்பற்றினாலும் முடிவில் விரக்திதான் மிஞ்சும்.இந்த புணிதனை மிகவிரைவில் உணர்வாய் காலம் இதோ விரைவில் எனை யாரென்று தெரியவைக்கும். என் வழியில் வருவது மிக கடிணம் ஆனால் என்னை கெட்டியாக பிடித்தவனை நான் நிச்சயம் கரைசேர்ப்பேன். என் சொல் சத்தியம் என் நாமம் சத்தியமே.

ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களின் இன்றைய செய்தி. (20.11.17)
"மஞ்சள், கல் உப்பு, குங்குமப் பூ, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், எள், கடுகு, தேன், அருகம்புல், செவ்வரளி, பச்சை கற்பூரம், வில்வ கொட்டை, வசம்பு, சந்தனம், எல்லாம் கலந்து சிறிது கொதிக்க வைத்து வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்து வான்நோக்கி என் நாமம் 9 தடவை சொல்லி பின்
"ப்ரண ப்ரனண ப்ரணஹா"
என்று 3 முறை சொல்லி கிழக்கு நோக்கி வெள்ளை வஷ்த்திரம் கட்டி நீராடு ! நீராடும் முன்னால் பசுந்தயிரை உடல் முழுதும் பூசி பின் நீராடு ! வியாழன், ஞாயிறு, வியாழன் என்று மூன்று தடவை நீராடு !
எல்லா பிறவியின், இப்பிறவியின் தோசம் விலகும் ! உன் உடலும், உள்ளமும் ஆணந்த கூத்தாடும்.
நான் சத்தியம் !
என் நாமம் சத்தியம் !
ஓர்மையில் சொல்கிறேன், உன்னை கை விடமாட்டேன் !
நான் இநன்யா !""

சர்வமும், சகலமும் எனக்குள்ளே ! தயவும், கருணையும் எனக்குள்ளே ! உன் வினை அழிக்கும் சூட்சுமமும் எனக்குள்ளே !


to INANYA MAHA MUNIVAR
சர்வமும், சகலமும் எனக்குள்ளே ! தயவும், கருணையும் எனக்குள்ளே ! உன் வினை அழிக்கும் சூட்சுமமும் எனக்குள்ளே !
செயல்
உன் செயல் உன்னை எங்கே அழைத்து செல்கிறது ? 
உன் கடமை உன்னை எதை நோக்கி செலுத்துகிறது ?
யோசி ! யோசிக்கும் திறன் இருந்தால் மட்டுமே உன்னை உணர முடியும் ! பறவைகள், மிருகங்களுக்கு யோசிக்கும் திறன் இல்லை. நீ தான் பாவம் செய்து யுகம் வந்தாய். கடவுளின் பொம்மையடா நீ ! காலம் உன்னை எங்கே கூட்டி செல்கிறது என்று சிந்தி ! நீ காலத்தின் பின்னால் செல்கின்றாய். உன் பின்னே காலம் வரவில்லை.
நீ எங்கே பயனிக்கின்றாய் ? எதை நோக்கி ஓடுகின்றாய் ? உணர் !
பறவைகள் பல ஆயிரம் மைல் கடந்தும் தன் குடியிருப்பை மறப்பதில்லை. திரும்பி வந்துவிடுகிறது. ஒரு காட்டில் உன்னைவிட்டு சென்றால் நீ இருக்கும் இடம் வரமுடியாமல் தவிக்கிறாய். ஆசை, கோபத்தை வைத்து கொண்டு உன்னை யாரென்று தெரியாமல் அலைகின்றாய்.
படைப்பில் நீ வினோதம் ! ஆனால் முடிவில் எல்லாம் கரமாலம் தான் ! நான் விழித்து கொண்டேன். என்னை அறிந்தேன் ! நீ தூங்கி போகின்றாய். உன்னை அறியாமல் தவிக்கின்றாய். உன்னை உருவாக்கியவன் உன்னுள்ளே ! அவனாலே உன்னை உணர வைக்க முடியும்.
தலைக்கு மேல் கை வைத்து வணங்கி தலை சாய்ந்து போகின்றான். முகத்திற்கு நேர் கை வைத்து வணங்கி முடமாகி போகின்றான். உயிரில்லா, மயிரில்லா சிலைக்கு இருக்கும் வலிமை கூட இந்த மதி கெட்ட மனிதற்கு இல்லையே ?
உபதேசங்களையும், வசனங்களையும் வேதம் என்று சொல்லி வீனாய் புலம்புகின்ற மானிடர்களே இங்கே அதிகம். வேதம் கையில் இருந்தால் காந்தம் போல் ஒட்டும் ! இங்கே செயல் ஆனந்த நிலை கடவுளின் பாதம் மட்டுமே ! அவன் பேரன்பு தான் செயல் ! சொர்க்கம் ! பேரின்பம் !
துளசி, வில்வம், அருகு, வன்னி, நிலவேம்பு இலையில் மகத்துவம் மலை போல் உண்டு ! இதை பஞ்ச பத்திரம் என்று சொல்வதுண்டு. உன் உடல் செயலுக்கு செப்பு பாத்திரத்தில் இந்த புணித இலை போட்டு அருந்து ! உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் சம நிலைக்கு வரும். உலகில் எத்தனையோ அரிய பொக்கிஷங்கள் உள்ளன. இவை ஆள்பவனின் கருணையை ! ஆனால் மனிதன் எதையோ தேடுன்றான்.
பூமியில் காற்றும், நீரும் சேர்ந்த சூட்சும திரவத்திற்கு விண்நீர் என்று பெயர் ! இதில் உள்ள காற்றையும், நீரையும் பிரித்து பக்குவப்படுத்தி, ஐந்து முறை சுத்தப்படுத்தி அதன் பின்னே கிடைக்கும் (வேத மூல செந்தூரம்) புணிதம் உன்னை காற்றில் பறக்க வைக்கும் ! இந்த அறிவுடம் உன் உடலில் சிறிது ஒட்டி இருந்தாலும் உன் இலக்கை அடைவாய் ! இது உன்னை செயல்பட வைக்கும் ! எதை எதையோ தேடுகின்ற மானிடா, வாடுகின்ற மானிடா இதை அறிந்து செயல்படடா !
உன் செயல் கடவுள் பக்கம் என்பதை அறிவாய் ! உன் செயல் முடிவில் கல்லறை போகாமல் பார்த்து கொள் ! உன் செயலை பூமியில் விட்டு செல் ! யுக யுகமாய் உன் சந்ததி பார்த்து கர்வப்படட்டும் !
நீ காட்சி பொருள் அல்ல ! கனவு காணாதே. அதை செயல்படுத்து !
செயல் நான் !
நான் இநன்யா !

Wednesday, November 8, 2017

உன் நிறுத்தை திறந்து வையடா ! உள் ஒன்று இருக்கிறது. உனை பார்த்து கொண்டு உனை காத்து கொண்டு ! உன் கதவை திற !


உன் நிறுத்தை திறந்து வையடா ! உள் ஒன்று இருக்கிறது. உனை பார்த்து கொண்டு உனை காத்து கொண்டு !
உன் கதவை திற !

உள்ளே தட்டுகின்றான் உன் கதவை ! நீ கதவை திறக்காமல் அடைத்து வைத்து காற்று வரவில்லை என்று ஆனந்தம் இல்லா அலைகின்றாய். உள்ளே கடவுள் தட்டுகின்ற ஓசை கேட்டும் கதவை திறக்காது கடவுளை மூச்சு முட்ட அடைத்து வைத்திருக்கின்றாய். எப்போது திறப்பாயடா ?

இதயம் துடிக்கிறது என்று ஆராய்ந்து அதன் கால நேரத்தை குறித்து காலம் தெரியாமல் வாழும் உன் கோமாளிதனத்தை என்ன சொல்வேன் ?

உன் துடிப்பு அடங்கும் வரை அங்கே கணக்குண்டு என்பதை புரியாமல் வாழ்கின்றாய் ! கடவுள் தான் உள்ளே உன் துடிப்பாய் உணர்த்துகிறான் என்பதை அறியாமல் ! உள்ளே தான் ஆனந்தம், நிம்மதி என்பதை புரிந்து கொள். உள்ளே உன் இதய கதவை திற !

கருவறை சாவி கடவுளின் கைகளில். ஆனால் உன் உள் அறையை திறக்கும் சாவி உன்னிடமே உள்ளது ! ஆனால் உன் அறையை திறக்காமல் கோவில் கட்டுகிறாய். இல்லையேல் மதுக்கடைகளை திறக்கிறாய். மாட மாளிகை, கோட கோபுரம் அமைத்து ஆசிரமம் திறந்து ஆளுமை தெரியாது அலைகின்றாய் !
உள்ளே ஓசை கேட்டும் துடிப்பு கேட்டும் அறிவதற்கு ஏன் முயலவில்லை. அந்த ஆனந்தத்தை அறிய ஏன் முற்படவில்லை. நீ கண்டுபிடித்த இயந்திரம் எந்நேரமும் பழுதடையும். ஆனால் உன் இதயம் விதி முடியும் வரை பழுதடையாது. இதயம் அருகில் பெருவிரல் போல ஒளிரும் ஆண்மாவை அறிய முற்படு !

நான் கதவை திறந்தேன், நிறைந்த காற்று (நிம்மதி) நிறைந்த ஸ்பரிஷம் (ஆனந்தம்) உணர்ந்தேன் ! ஆனந்தமாய் இருக்கின்றேன். நீயும் உன் உள் அறையை திறக்க பாடுபடு. உன்னால் முடியவில்லை என்றால் நல் குருவை நாடு !
பேரானந்தம் உனக்குள்ளே ! பொக்கிஷம் உனக்குள்ளே !
நீ வெளியில் தேடுகிறாய். அன்பில் கரைந்திடு !
நான் உனக்காக என் கதவை திறந்து வைத்திருக்கிறேன். ஆனந்தம், பேரானந்தம் தர !
விழித்து கொள்ளடா ! வேதனை இல்லாது வாழலாம்.

கருவறை திறந்து பிறந்தாலே சிசு பூரண விதி பெரும். ஆனால் இப்போது உன் விஞ்ஞானத்தால் வயிற்றை கிழித்து சிசுவை எடுக்கின்றாய். கருவை அடைத்தவன், காத்தவன் நிச்சயம் திறப்பான் ! ஆனால் நீ நல்ல நேரம், நட்சத்திரம் பார்த்து கிழித்து எடுக்கின்றாய். அதனால் விதி மாறிடுமோ ? உணர் !

உன் வேடிக்கை விஞ்ஞானமடா ! மதிமயங்கி நிற்கும் மானிடா, உன் உள்ளே துடிக்கும் ஓசையும், உன் கெண்டைகால் நரம்பின் நாடி துடிப்பும் உன்னை கடவுளிடம் கூட்டி செல்ல அலைக்கிறது ! துடிக்கிறது ! உணர்ந்து கொள்ளடா !

உன் இதய கதவை திறக்க உன்னாலே முடியும். உன் மன நிறுத்தை திறக்க வந்த மாயவன் நானடா !

இநன்யா அணுவுக்குள் அணுவானவன் ! ஆனந்தம் நிறைந்தவன் ! உனக்கும் தர காத்திருக்கிறேன். உன் கதவை திறந்து வையடா !

மாயவன் நான் !

நான் இநன்யா !

Thursday, November 2, 2017

ஆக்கம், துவஞ்சம் அழியாது வாழும் மானிடா, ஆள்பவனை எப்போது அறிவாயடா ? எது கடவுள் ?


to INANYA MAHA MUNIVAR
02-11-2017
ஆக்கம், துவஞ்சம் அழியாது வாழும் மானிடா, ஆள்பவனை எப்போது அறிவாயடா ?
எது கடவுள் ?
கடவுள் எங்கே ? எது கடவுள் ? உன் அனுபவம் தான் கடவுள் ! அந்த அனுபவத்தில் அன்பிற்கினிய தந்தை இருப்பதை உணர்வது தான் கடவுள் ! உன் இன்பத்திலும் துன்பத்திலும் கிடைக்கும் அனுபவம் தான் கடவுள் ! அனுபவப் பாடம் ஆள்பவன் தருவது என புரியாமல் வாழ்கின்றாய்.
வெளியில் இருந்து வந்த ஒலி வெப்பமாகி பின் காற்றில் சங்கமித்து நீரில் உறவாடி நிலத்தில் வந்திறங்கினாய். ஐம்பூத தத்துவம் அடிமுடி கண்டாயானால் கடவுளை எப்போதோ அறிந்திருப்பாய். உணர்ந்திருப்பாய் ! வெளி, வெப்பம், காற்று, நீர், நிலம் இதை வரிசைப்படுத்தி வாழ்வை புரிந்தவன் ஞானியாகிறான். இதுவே சரியான அளவு கோல் !
இயற்கையினால் கடவுள் உனக்கு உணர்த்தி கொண்டே இருக்கின்றான். பூகம்பம், இடி, மின்னல், புயல் என்று புரிதல் உனக்கில்லையே ! பூமியின் காந்தப்புலன் மேலிருந்து வரும் மெல்லிய மாய கயிற்றின் தொடர்போடு பொருந்தியது என்று. நீ இங்கே தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றாய் என்பதை அறிந்தால் தவறு செய்யமாட்டாய். நீர், மரம், நீ எல்லாம் இந்த புவியின் காந்த புலத்தில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
உன் காந்த புலன் பூமியின் காந்த புலத்தில் இருந்து விலகும் போது தான் நீ மரணிக்கின்றாய். படைப்பின் மகத்துவமும், ரகசியமும் அறிவாயோ நீ ? அன்பிற்கினியவன் என் தந்தை அளவிட முடியாத பேரன்பு கருணைமிக்க பேரருளாளன் என்பதை உணர் !
நீ இப்போது இருக்கின்றாய். இதுவே கடவுளின் உணர்தல் ! நீ அறிவை தான் தேடிக் கொண்டிருக்கின்றாய். நீ உணரும் காலம் எப்போதடா ? கடவுள் இருப்பதை அறிவதில் தான் அறிவை தொலைத்து அலைகின்றாய். நோய், துன்பம், வறுமை, இதுவெல்லாம் மனிதருக்கு மனிதர் வேறுபட்டிருப்பது ஏன் ? உணர் !
ஜணிக்கும், பிறக்கும் மனிதரின் கைரேகை ஒருவர் போல் மற்றவர்க்கு இல்லையே ஏன் ? படைப்பின் உண்ணதத்தை அறிவாயானால் கடவுள் இருப்பை உணர்வாயடா !
அன்பானவன் அன்பை உணர்ந்தாலே ஆயுள் உள்ளவரை ஆணந்தம் உணர்வாய் ! ஏனடா விரக்தி, வேதனை ? நான் உன் நீதிபதி. என் சட்டம் பொய்ப்பதில்லை.
உன் அனுபவம் உன்னை கூட்டி செல்கிறது இன்பம் போல துன்பம் போல உனக்கு காட்டி ! ஆனால் இந்த மெல்லிய மாயத்தை உணராமல் ‘நான்’, ‘எனது’ என்று வீராப்பு பேசுகிறாய். உன் பயணம் எப்போதும் மரணத்தை (கடவுள்) நோக்கி தான் ! ஆனால் அதை உணராமல் நீ ஒரு கெட்ட பாதையை அமைத்து பயணிக்கிறாய்.
துன்பம் எப்போது இல்லை என்று உணர்கிறாயோ, உன் பாதை சரி என்று அர்த்தம் ! மனகிலேசமும், மாய மயக்கமும் இருப்பதாலேயே உனக்கு உன் பாதை தெரியவில்லை. உன் இருப்பு, இறப்பு கடவுள் இருப்பதை உணர்த்துகிறது ! உணர் !
உன் அனுபவம் தான் கடவுள் என்பதை புரிந்து கொள் !
உன் அனுபவம் நான் !
நான் இநன்யா !

Thursday, October 26, 2017

வலசை போகும் பறவை போல வெளியில் தேடி ஓடாதே ! என்னுள் பொலிசை உண்டு ! ஏஞ்சுதல் பண்ணடா ! பூமி பந்து


to INANYA MAHA MUNIVAR
வலசை போகும் பறவை போல வெளியில் தேடி ஓடாதே ! என்னுள் பொலிசை உண்டு ! ஏஞ்சுதல் பண்ணடா !
பூமி பந்து
அஷ்டதாதுக்கள் நிரம்பி நீரும், மரமும், நீயும், ஜீவராசிகளும் தொங்கி கொண்டிருக்கும் இந்த பூமி பந்து உருண்டை இல்லை ! தட்டை என்பதை அறிந்து உணர் ! இங்கே பூமி பந்து என்பதில் “பந்து” என்றால் உருண்டை அல்ல. பந்து என்றால் தொடர்பு, பாசம் என்று அர்த்தம் !

முன்னூற்றி முப்பத்து மூன்று பிரபஞ்சத்திலும், நூற்றி எட்டு காண்டங்களில் இல்லாத அன்பு, பாசம் இந்த பூமிபந்தில் மட்டுமே உண்டு ! உறவால் பிண்ணிபினையும் தத்துவம் ! ஆண், பெண் சேரும் தத்துவம், இந்த பந்தத்திலே உண்டு !
பூமி பந்து என்று சித்தர்கள் சொல்லிப் போனதை உருண்டை என்று எழுதி திருத்தினான். எல்லா சித்தர்களும் தட்டை என்று தான் சொன்னார்கள். இங்கே சூரியன் உதிக்கவில்லை. மறையவில்லை. பூமி சுற்றவில்லை. பூமி உருண்டை இல்லை !
இடையில் வந்த விஞ்ஞானம் சொல்வதெல்லாம் பொய் தான். காந்த புலனை அறியாமல் காலத்தை விரயமாக்கி ஆராய்ச்சி செய்கின்றான்.
மெய்ஞானம் மிரட்சிதானடா ! அறிந்தவன் எல்லாம் (ஞானிகள்) அடக்கமாய் இருந்தான். இந்த பூமிபந்தின் தொடர்பு பிரபஞ்சம் வரை !
பிரபஞ்சமும் அஷ்டதாதுக்களால் நிரம்பியதே ! அந்த மெல்லிய படலம் மாயை உரு கொண்டு பூமியை உயிர் பெற்று வைக்கிறது. இரவு, பகல் என்பவை இங்கே மட்டும் தான். மேலே இல்லை. மேலே எல்லாம் தெரிந்து வாழ்கின்றாய் ஆயிரத்து பதினொன்று வயது வரை ! உணர் !
இங்கே தெரியாமல் அறியாமல் உணராமல் வாழ்கின்றாய். ஆகையால் நூற்றி பதினொன்று வயது இங்கே ! இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை உணரும் வரை பிறப்பு தான் என்பதை அறிந்து கொள் !
என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள்.
“உன் பூமி தட்டையடா ! உன் பாதம் தட்டை ! உன் முதுகு தட்டை ! தட்டை மேல் படுத்துறங்கும் தட்டையாகி போனவனே எப்போது அறிவாயடா ?” என்று விளம்பினார்கள்.
நீ ஏது அறிந்தாய் ? எவையறிந்தாய் ? உன் உணர ஏது கற்றாய் ? என் தந்தையின் சொல் வேதம் ! படைத்தவன் சொல்லி போனதை பாவி மனிதன் ஆராயவில்லை. இங்கே இன்பத்தை தேடுவார் யாருமில்லை. ஜடப்பொருளில் இன்பம் இல்லை என்று எப்போது உணர்கிறானோ, அப்போது தான் கடவுளை நோக்கி பயணிக்கின்றான் என அர்த்தம் !
செயல் நான்கும் இருபத்து மூன்று கண்களும் படைத்தான் ! இதை ஆராய்ச்சி செய்தாலே கடவுளை அறியலாம். தினமும் உனக்கு நடக்கும் அனுபவத்தை அசை போடு. ஆழ்ந்து போ ! ஆளுமை அறிவாய் !
இந்த பூமி அன்னை தினமும் கடவுளிடம் வந்து முறையிடுகிறாள், இந்த பாவி மனிதன் என்னை பாடாய்படுத்துகிறான் என்று ! அதற்கு என் தந்தை “எல்லாம் உன்னில் இருந்து தின்றான், கழித்தான். ஆடும் ஆட்டமெல்லாம் பின் கல்லறையில் தானே ! முடிவில் நீ தானே சாப்பிட போகிறாய் !” என்று சொல்வார்கள்.
உன்னை தாங்கி பிடிக்கும் பூமியை உணர் ! என் தந்தை நாயகன் தினமும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் வழங்கல். இந்த ஐந்தும் செய்து அதற்கு மேலாக அன்பால் அரவணைக்கின்றான் ஆறாவதாக ! எனக்கும் சொல்லி தந்தான் இன்முகமாக பூமி பந்திலே ஆனந்தமாக வாழ !
நீயும் வாழ ஆனந்தம் அளவிலா உன் வாழ்வில் கிடைக்கும். இந்த பூமி உன்னை புணிதனாக்கும் !
பந்தம் நான் ! பாசம் நான் !
நான் இநன்யா !

Wednesday, October 18, 2017

சிந்துபுட்பம் ஊதி திசை தெரியா அலைகின்றான் ! பூமி பந்தை புரியாமல் புண்ணியம் தேடா அலைகின்றான். எது தாங்கி பிடிக்கிறது ?


Inanya Maha Munivar to 19-10-2017

சிந்துபுட்பம் ஊதி திசை தெரியா அலைகின்றான் ! பூமி பந்தை புரியாமல் புண்ணியம் தேடா அலைகின்றான்.
எது தாங்கி பிடிக்கிறது ?
உன்னை எது தாங்கி பிடிக்கிறது ? உன் உடலை தாங்கிப் பிடிப்பது எது ? தலையை தாங்கி பிடிக்கும் மூன்று எழும்பின் மஜ்ஜையே உன்னை தலை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்து மூன்று உன்னை தெளிவுபடுத்தவும், அதில் மூன்று எழும்பே உன்னை திறனாகவும் வைக்கிறது. இதில் தான் குண்டலினி சக்தி இருக்கின்றது.
உடலில் மூன்று எலும்பு , மூன்று நரம்பு இதை கண்டுபிடித்து தட்டிவிட்டால் உன் மாய மயக்கம் தெளிவாகிவிடும். ஆனால் குண்டலினி என்று ஆராய்ந்து இதற்கு பயிற்சி கொடுக்கின்றாய். அரை நொடி சூட்சுமத்தை ஆயுள் முழுவதும் கற்று கொடுக்கின்றாய் ! செம்மறி ஆட்டு கூட்டத்தை என்னவென்று சொல்வேன் ?
பூமி பந்து தாங்கிபிடிக்கின்றதா ? இல்லையேல் பூமியின் காந்த புலனால் நிலை பெறுகிறாயா ? அஷ்ட தாதுக்கள் நிலை நிறுத்துகிறதா ? இதை ஆராய்ந்தால் பிரபஞ்ச சூட்சுமம் தெரிந்துவிடும் ! அஷ்ட தாதுக்கள் என்றால் தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், இரும்பு, ஈயம். ஆனாலும் இந்த காந்த புலத்தில் தாதுக்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் தொடர்பு உண்டு ! இந்த காந்த புலத்தில் உயிர் தான் உன்னை இயக்குகிறது. ஆண்மா அசைவற்று உனை ஆராய்ச்சி செய்கிறது. நீ செய்யும் நல்லது, கெட்டதை மேல் உலகுக்கு அனுப்புகிறது !
மனிதன் வாழ் நாளில் இருபதாயிரம் கிலோ தானியத்தை உண்டு தின்று உடலை தேய்க்கின்றான். ஐம்பதாயிரம் லிட்டர் நீரை தன் வாழ்நாளில் பயன்படுத்துகிறான். ஒரு நாளைக்கு மூன்று கிலோ காற்றை உட்கொள்கிறான். ஆனால் இந்த உடலை தாங்கி பிடிக்கும் உயிருக்கு உணவு கொடுக்காமல் உறங்கி திரிகின்றான். நான் என்று உள்ளே வைத்து நாயகனை (கடவுளை) அறியாது தேய்கின்றான !
உடலுக்கு உணவு கொடுத்தாய் ! இந்த உயிருக்கு ஏன் உணவு கொடுக்கவில்லை ? உன் உயிர் தினமும் கடவுளிடம் சென்று முறையிட்டு அழுகிறது. இந்த அற்ப சரீரத்தை விட்டு எப்போது விலகுவேன் என்று ஆளும் வல்லமை உள்ளவனிடம் முறையிடுகிறது.
முதன் முதலில் என் அன்பிற்கினிய தந்தை “உன் உயிருக்கு உணவு கொடுடா” என்று சொன்னார்கள் ! அது என்னிடம் இருக்கிறது, எடுத்து போ என்று ஓடி வா, ஓடி வா என்று அழைத்தார்கள். ஆனால் இந்த மூட மனிதன் கேலி செய்து கீழ்த்தரமாய் போனான். மதி கெட்ட மானிடன் குறை சொல்லி திரிந்து கோமாளியாகி போனான். கதை படித்தவன் எப்படி காலத்தின் நாயகனை உணர்வான் ?
என்னிடமும் உன் உயிர்க்கு மருந்து ஒன்று இருக்கின்றது. என் தந்தை எனக்கு அளவிளாது தந்து சென்றார்கள். உன்னை தாங்கி பிடிக்க நான் இருக்க ஏது பயமடா !
நான் பேரின்பம் ! என்னுள் எத்தனை கோடி ஜீவராசிகள், எத்தனை கோடி பிரபஞ்சம் ? அறிந்தவன் யாருமில்லை. கால சக்கரத்தின் மேலே நர்த்தனம் ஆடுகின்றேன். துன்பத்தில் ஆடும் மானிடா, எப்போது அறிவாயடா ?
உன்னை தாங்கி பிடிப்பது எது ? மாயையை உணரடா ! மால்மயம் புரிந்துவிடும் !
உன்னை தாங்கி பிடிக்க வந்த தலைமகன் நான் !
நான் இநன்யா !

திண்டிமகவியாக போனாய் ! நீலாஞ்சலை ஒடுங்குவதை அறிவாயோ ? எல்லாம் இங்கே நமனம் தான் ! நமன நிலை !


Inanya Maha Munivar to 
October 12 -2017

திண்டிமகவியாக போனாய் ! நீலாஞ்சலை ஒடுங்குவதை அறிவாயோ ? எல்லாம் இங்கே நமனம் தான் !
நமன நிலை !
உன் உயிர் ஒடுங்க உன்னை பிடிக்காமல் வெளியில் தேடுகிறது, உள்ளே ஒன்று ஒளி வீசி கொண்டிருப்பதை நீ அறியாமல் இருப்பதால் !
நீ ஜீவாத்மாவை அறிந்தாலே அது உன்னை பேராத்மாவுக்குள் அழைத்து செல்லும் ! கைகூப்பி, உடலை ரணபடுத்தி வெளியில் தேடுகிறாய். ஒடுங்க தேடுகிறாய். உன்னை அறிந்தால் கல்லையும், மண்னையும், ஜீவசமாதியையும் இருகரம் கூப்பி வணங்கி ஒடுங்கமாட்டாய் !
கல்லறையில் ஒடுங்கி போகும் உடலை வைத்து உணராமல் அலைகின்றாயே ? உனக்கு ஒன்று மேலே இருக்கின்றது ! அதனாலே தேடுகின்றாய்.
நீ ஜீவாத்மா என்பதை உணர் ! உன் துன்பம், நோய், வறுமை, கவலை எல்லாம் தீர ஒன்றை தேடுகிறாய் ! ஆனால் முதலில் உள்ளே தேடாமல் வெளியில் தேடுவதாலே உன்னை அறியாமல் போனாய் ! உள்ளே பெரு ஒளி ஒன்று அகல் விளக்கில் (இதயத்தில்) எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் செயற்கையாய் விளக்கெறிந்து சித்திரத்தை, பிம்பத்தை வைத்து அதில் ஒடுங்கி போய் ஓய்ந்து போனாய் ! உணர் !
உயிரற்ற ஜடப் பொருளில் நிலை ஒன்றும் இல்லை. ஆனால் நிலையான ஒன்றை தேடாமல் போனாய். நீ நிலை இல்லாதவன். உன் உயிர், ஆண்மா நிலையானது. நிலை உள்ளது உன் உள்ளே உறங்கி கொண்டிருக்கிறது. ஒரு நாள் முழுதும் மௌனமாய் (ஐம்புலன் அடக்கி) இரு !
எல்லா ஆசையையும் அசைவற்று வை ! உன் ஆளுமை மெல்ல விழிக்கும். உன் உயிர் தான் தேடுகிறது. உன் துன்பம் தீர்க்க ! ஆனால் ஆண்மா எதையும் தேடுவதில்லை. வணங்குவதும் இல்லை. “உன் உயிர் வணங்கும் என்னை !” என்று என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் ! உன் தாய், தந்தையை வணங்கு முதலில் ! வணங்கும் குணம் இருந்தால் உன் தாய், தந்தையை வணங்கு என்றும் சொல்வார்கள் ! உன் உயிர் நிலை அறியும் ஆரம்ப சூட்சுமம் இது தான் !

ஜீவனும், ப்ரம்மமும் எப்போதும் இணைவதில்லை. தனி, தனி பணி செய்து கொண்டிருக்கின்றன. உன் உயிர்க்கு தான் தண்டனை. ஆண்மாவுக்கு அல்ல. உன்னுள் ஒடுங்கு ! மௌனம் எதையும் சாதிக்கும். தேடு முதலில் உன்னை ! பின் செல்வம் தேடு ! தேடிய பொருளை உனக்கு போக இல்லாதார்க்கு கொடு ! இந்த தொண்டு உன்னை உணர வைக்கும்.
வழிபாடு தேவை இல்லை. வழிமுறைகளை தாங்கு ! பின் பூரிப்பாய். உன் உடல் ஒடுங்கும் முன் உன்னை அறிய முற்படு !
கடவுள் இருப்பது சத்தியம் ! இதற்கு நானே சாட்சி ! என்னுள் இருந்து பேசுகிறேன். உன் துன்பம், நோய் கரைக்க இன்று முதல் ஆணையிட்டேன்.
மன்னுதல் ஆக யோசி ! மாயவன் உனை எப்போதும் காப்பேன் !
என்னுள் ஒடுங்கு ! உன்னில் மலர்ந்து பின் உலகில் மலர்வாய் !
ப்ரம்மம் நான் !
நான் இநன்யா !