Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 4, 2015

சௌந்தர்ய லஹரி தமிழில் 76--------------100

சௌந்தர்ய லஹரி தமிழில்  76--------------100

76. "மன்மதன் மூழ்கிய மடுப்போன்ற னாபியின் அழகு" [பரம வைராக்யம்; காமஜயம்]
ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீரஸி க்ருதஸங்கோ மனஸிஜ: I
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி ii 76
  அன்னையே ! பரமசிவனுடைய கோபத்தினால் அவரதுநெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் , அந்த நெருப்பின் வெப்பம் தாளமுடியாமல் , அதிலிருந்து  விடுபடுவதற்காக ,  குளுமையானதடாகம் போன்ற , ஆழமான உன்னுடைய தொப்புள் குழியில் குதித்தான் .தடாகத்தில் , நெருப்புடன் குதித்ததால் உண்டான புகையை , உன்நாபியைச் சுற்றிய ரோமங்களாக நினைக்கின்றனர்.  

77. "யமுனையின் சிறு அலை நாபியாகிய மடுவில் பொகுவது போன்ற ரோமவரிசை" [ஸர்வஜன வச்யம்; ஸூக்ஷ்ம தர்சனம்]
யதேதத் காலிந்தீ-தனுதர-தரங்காக்ருதி சிவே
குசே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம் i
விமர்த்தா-தன்யோன்யம் குசகலசயோ-ரந்தரகதம்
தனூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம் ii 77
 அம்மா ! தியானிகளுக்கு மட்டுமே  புலப்படக்கூடிய உன் சிறு இடுப்பில் ,யமுனை நதியின் கறுமையான மெல்லிய அலை போன்ற ,உன்னுடைய ரோமவரிசை , தொப்புள் குழியில் முடிவடைகிறது .அதைப் பார்த்தால் நீல வானமானது உன் பருத்த கலசங்கள் போன்றஇரு ஸ்தனங்களுக்கு இடையே அகப்பட்டு அதனுடையஅழுத்தத்தினால் , எங்கே தான் அழிந்து விடுவோமோ என்று பயந்து ,மெல்லியதாக ஆகி ,தொப்புள் குழியினுள் செல்வது போல்தோன்றுகிறது . 

78. "
நகில்களாகிய தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி" {ஸர்வலோக வச்யம்}
ஸ்திரோ-கங்காவர்த: ஸ்தனமுகுல-ரோமாவலி-லதா-
கலாவாலம் குண்டம் குஸுமசர-தேஜோ-ஹுதபுஜ: I
ரதேர்-லீலாகாரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர்-கிரிச-நயனானாம் விஜயதே ii 78
  தாயே ! உன் தொப்புள் இருக்கும் இடமானது , அமைதியான கங்கைநதியின் சுழல் போன்றதுஉன் ஸ்தனமாகிய தாமரை மொட்டுக்களைச்சுமக்கின்ற உனது  ரோமங்களாகிய கொடியின்  வேர்களுக்கு  , பாத்திபோன்றது .  மன்மதனின் ஒளியான நெருப்பிற்கு ஹோமகுண்டம்போன்றது . மன்மதனின் மனைவியான ரதிக்கு விளையாடும்இடமானதுபரமசிவனின் தவ உயர்விற்கு சித்தி அடையும் குகை வழிபோன்றதுஇது போன்று ஆழம் தெரியாத உன் தொப்புளின் அழகு ,வருணனைக்கு  அப்பாற்ப்பட்டதன்றோ ? 

79. "மெல்லிய இடையின் அழகு" {ஸர்வஜன மோஹம்; இந்திரஜால வித்தை]
நிஸர்க்க-க்ஷீணஸ்ய ஸ்தன-தட-பரேண க்லமஜுஷோ
நமன்மூர்த்தேர்-நாரீதிலக சனகைஸ்-த்ருட்யத இவ ii
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ-தீர-தருணா
ஸமாவஸ்தா-ஸ்தேம்னோ பவது குசலம் சைலதனயே ii 79
 அம்மா !   இயற்கையில் மெல்லியதான உன் இடுப்பு  , உன் இரு பருத்தஸ்தனங்களின் பாரத்தைத்  தாங்க முடியாமல் , கொஞ்சம்  முன்புறம்சாய்ந்து இருப்பதைப் பார்த்தால் , ஒடிந்து விழுந்து விடுமோ , என்றுதோன்றுகிறது .  தண்ணீருள்ள ஆற்றின் கரையிலுள்ள மரமானது , கீழேவிழுந்துவிடும்  போல்  சாய்வாக இருந்தாலும் , எவ்வளவு உறுதியாகஇருக்குமோ , அதுபோல்  உன்  இடுப்பிற்கு எந்த ஆபத்தும் வராமல்  (ஓடிந்துவிடாமல்  ), நீண்டகாலம் நன்றாக  இருக்கப் பிரார்த்திக்கிறேன் .

80. "இடையில் கட்டிய கொடியைப் போன்ற 3 ரேகைகளின் அழகு"
குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸபிதுரௌ
கஷந்தௌ தோர்மூலே கனக-கலசாபௌ கலயதா i
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ ii 80
  தேவீ ! உன் பதியான பரமேஸ்வரனின் பெருமைகளை , நீநினைத்து ,நினைத்து மகிழ்வதால் , உன் தங்கக்கலசம் போன்ற  ஸ்தனங்கள் ,அடிக்கடி வியர்த்து ,  பூரிப்பதால் , மன்மதன் , இந்த ஸ்தன சுமையினால்உன் இடுப்பு ஒடிந்து விழுந்துவிடப் போகிறதே  என்று , உன் இடுப்பைவள்ளிக் கொடிகளால்  மூன்று சுற்றாக சுற்றி இருப்பது போல்தோன்றுகிறது  (இடுப்பிலுள்ள மூன்று சதை  மடிப்புகளின் அழகு  ).    

81. "மலை போன்ற நிதம்பம்" {அக்னி ஸ்தம்பம்]
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே i
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமசேஷாம் வஸுமதிம்
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ii 81
 தேவீ ! பார்வதி ! உன்னுடைய பின்பாகமானது ( நிதம்பம் ) பருத்து ,அகலமாக இருப்பதால்இந்த பூமியையே மறைத்து , அதை லேசாகஇருப்பது போல் செய்கிறது . இதைப் பார்த்தால் இந்த பருமனும் ,அகலமும் உன்  தந்தையான பர்வதராஜன் தன்னுடையஅடிவாரத்திலிருந்து உனக்கு அளித்த  ஸ்ரீதன சீர்வரிசை போல்தோன்றுகிறது .  

82. "யானையின் துதிக்கை போன்ற தொடை"
கரீந்த்ராணாம் சுண்டான் கனக-கதலீ-காண்ட-படலீம்
உபாப்யாம்-ஊருப்யாம்-உபயமபி நிர்ஜித்ய பவதி i
ஸ்வ்ருத்தாப்யாம் பத்யு; ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி ii 82
 அம்மா !  வேதநாயகியே ! உன்தொடைகள் இரண்டும் , யானைகளின் துதிக்கைகளையும் , தங்கமயமான வாழைமரத் தண்டுகளையும் விட ,மிக அழகாக இருக்கின்றன . உன்  முழங்கால்கள்   உருண்டையாகவும் ,உன்  கணவனாகிய பரமசிவனை , அடிக்கடி வணங்குவதால்  சற்று  கடினமாகவும் உள்ள  அந்த முழங்கால்களால் ,  ஐராவதத்தின்தலையில் உள்ள கும்பங்களை நீ வெற்றி கொண்டாயே !  

83. "மன்மதனுடைய அம்புறாத்தூணிகள் போன்ற முழங்கால்கள்" [சதுரங்க சனிய ஸ்தம்பனம்]
பராஜேதும் ருத்ரம் த்விகுண-சரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷம-விசிகோ பாட-மக்ருத i
யதக்ரே த்ருச்ச்யாந்தே தசசரபலா: பாத-யுகலீ
நகாக்ரச்-சத்மான: ஸுர-மகுட-சாணைக-நிசிதா ii 83
  தாயே!உன்னுடைய கனுக்கால்கள்பரமசிவனை வெற்றிகொள்வதற்காக , மன்மதனால் தயாரிக்கப்பட்ட  அம்பராத்துணிபோல்தோன்றுகிறது . தன்னுடைய  ஐந்து பாணங்கள் போதாமல் ,  உன் கால்பத்து விரல்களையும் , பத்து  பாணங்களாகப் படைத்தான் . அந்தஅம்பராத்துணிகளின் முன்பாகத்தில் தெரிகின்ற உன் கால் விரல்களின்நகங்கள் , உன்னை வணங்க வருகின்ற வானவர்களின்மணிமுடிகளிலுள்ள (மாணிக்கம் , ரத்தினம்  போன்றவை ) சாணைக்கற்களால் தீட்டப்பட்டு இரும்பு கூர் போல் இருக்கிறது .  

84. "உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்" [பரகாயப் பிரவேசம்; ஜீவன்முக்தி]
ஸ்ரீஉதீனாம் முர்த்தனொ தததி தவ யௌ சேகரதயா
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ i
யயோ: பாத்யம்பாத: பசுபதி-ஜடாஜூட-தடினீ
யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண ஹரிசூடாமணி-ருசி: Ii 84
  தாயே ! எந்த சரணங்களை  வேதங்களின் சிகரமான உபநிடதங்கள் ,தன் தலையில் மலராக  சூடிக்கொள்கின்றனவோ , எந்த சரணங்கள் பரமசிவனது சடைமுடியிலுள்ள புனித கங்கை நீரால்நீராட்டப்படுகிறதோ ,  எந்த சரணங்களில் பூசியிருக்கும் மருதாணியின்பொலிவானது  , வணங்க வரும் விஷ்ணுவின் சூடாமணியின்பொலிவினால் ஏற்படுகிறதோ , அந்தப் புனித  மலரடியை என் தலைமீதும் வைப்பாயாக !  

85. "பரமசிவனும் தாங்கவிரும்பும் பாதாரவிந்தங்கள்"
நமோ-வாகம் ப்ரூமோ நயன-ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே i
அஸூயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பசூனா-மீசான: ப்ரமதவன-கங்கேலி-தரவே ii 85
 தாயே ! மருதாணியுடன் கூடிய உன்  பாதங்கள் எங்களுக்குஇனிமையானவை , மேன்மைகளைத் தருபவை . இந்த பாதங்களினால் உதைபட வேண்டும் என்று  ஆசைப்படும் நந்தவனத்து அசோகமரத்தைக் கண்டு , சிவனும் பொறாமை  அடைகிறார் . அந்த புனித பாதகமலங்களை  நான்  வணங்குகிறேன் .

86. "
ஊடலில் பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி" [பிசாச பய நிவ்ருத்தி; சத்ரு ஜெயம்]
ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்ய-நமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே i
சிராத்ஹந்த: சல்யம் தஹனக்ருத-முன்மூலிதவதா
துலா-கோடிகாணை: கிலிகிலித-மீசான-ரிபுணா ii 86
  தாயே ! உன் தங்கத் திருவடிகள் தன்மீது படவேண்டும் என்று , உன்கணவனாகிய சிவன் , உன்னை வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைக்க , அதனால் உனக்கு ஏற்பட்ட கோபத்தைத் தணிக்க ,என்னசெய்வது என்று தெரியாமல் , அவர் உன்னை வணங்கும் போது ,உன் பாதகமலமானது அவர் தலைமீது பட , அப்பொழுது எழுந்த  உன்கால் தண்டை  ஒலி  ஒசைதனைக் கேட்ட மன்மதன் , தன்னை எரித்தசிவனிடம் உண்டான  பகைதனையும் மறந்து தானே வெற்றி பெற்றதாகமுரசு கொட்டுவது போல் தோன்றுகிறது .  

87. " இமயத்தின் பனியிலும் இரவுநேரத்திலும் அழகு குன்றாத பாத கமலங்கள்" [ஸர்ப்ப வச்யம்]
ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சத்ரௌ
நிசாயாம் நித்ராணம் நிசி-சரமபாகே விசதௌ i
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரீஇய-மதிஸ்ருஜந்தௌ ஸமயினாம்
ஸரோஜம் த்வத்-பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம் ii 87
  அம்மா ! பனிமலையில் இருக்கும் உன் பாத கமலம் , இரவு , பகல் ,சந்தியா காலம் ஆகிய எந்நேரமும் மலர்ந்து  இருக்கக் கூடியவை .உன்னையே நினைத்து தியானிக்கும் அடியவர்க்கு அழியாத செல்வம்தரக்கூடியது . திருமகளான லக்ஷ்மி வாழ்கின்ற தாமரையானது ,பனியால் உதிர்கின்றது , இரவில்  மூடிக்கொள்கிறது .  இந்தத்தாமரையை விட உன் பாத தாமரை மிகவும் உயர்வுடையது என்பதைச்சொல்லவும் வேண்டுமோ ? 

88. "மென்மையான பாதத்தைப் பரமசிவன் அம்மியில் ஏற்றியதால் அவர் கல்நெஞ்சர் போலும்" [துஷ்ட மிருகங்களின் வச்யம்]
பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத-மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடின-கமடீ-கர்ப்பர-துலாம் i
கதம் வா பாஹுப்யா-முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா ii 88
  தாயே ! பக்தர்களுக்கு உயர்வை கொடுக்கக் கூடியதும் , அவர்களதுதுன்பங்களைப் போக்கக்கூடியதுமான , பெருமையுடைய உன்மென்மையான பாத நுனியைப் பிடித்து , சிவனும்  அளவற்றஆசையுடன் திருமணநாளன்று , எப்படித்தான் கடினமான கருங்கல்அம்மி மீது வைத்தாரோ ? கவிகளும் இந்த மென்மையான பாதங்களின்மேல்பாகத்தை ,  ஆமை முதுகு  ஓட்டிற்கு  உவமையாகக்  எப்படித்தான் கூறினாரோ ? 

89. "சந்திரகிரணம் போன்ர கால்நகங்களின் ஒளி" [ஸகலரோக நிவ்ருத்தி]
நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல-சங்கோச-சசிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸ்த இவ தே சண்டி சரணௌ i
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமனிச மஹ்னாய தததௌ ii 89
தாயே ! தேவலோகத்தில் உள்ள கற்பகமரங்கள் இலைகளாகிய தனகரங்களால் , வானவர்களுக்கு அவர்கள் விரும்பியதைத் தருகின்றன . ஆனால் நீயோ உன்பாதங்களால் வானவர்களுக்கும் , ஏழை தரித்திரர்களுக்கும் எப்பொழுதும் சீக்கிரத்தில் செல்வத்தை வாரி , வாரிவழங்குகின்றாய் . வானுலக கற்பகமரங்கள் கைகளால் தருவதைநீயோகால்களால் தந்துஅவைகளை ஏளனம் செய்கிறாய் . தேலோகத்துப்பெண்களின்  தாமரை போன்ற கைகளை மூடி  வணங்கச் செய்கின்ற ,சந்திரனைப்போல் ஒளி உடைய உன் பாத அழகினைச் சொல்லவார்த்தைகள் ஏது ?

90. 'இந்திரியங்களையும், மனத்தையும் கால்களாகக் கொண்ட வண்டு போன்ற ஜீவன் நாடும் கற்பகப்பூங்கொத்தாகிய பாதம்" [துர்மந்திரச் சேதனம்]
ததானே தீனேப்ய; ச்ரியமனிச-மாசானு-ஸத்ருசீம்
அமந்தம் ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி i
தவாஸ்மின் மந்தார-ஸ்தம்பக-ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன மஜ்ஜீவ: கரண-சரண ஷட்சரணதாம் ii 90
  தேவீ ! உன் பாதங்கள் ஏழைகளுக்கு அவர்கள் விரும்பும் அளவிற்குசெல்வத்தைக் கொடுக்கிறது .வெள்ளம் போன்று தேனைப் பெருகச்செய்கின்றது . கற்பகமரப்  பூங்கொத்து போல் அழகானவை . இந்தஅழகிய உன் பாத கமலத்தில் ஆறு கால்களைக் கொண்ட , தேனைப்பருகும் வண்டாக இருக்கும் பாக்யத்தை என் ஆன்மாவானதுஅடையட்டும் .  

91. "
தேவியின் நடையழகு" [பூமி லாபம்; தன லாபம்]
பதந்யாஸ-க்ரீடா-பரிசய-மிவாரப்து-மனஸ:
ஸ்கலந்தஸ்-தே கேலம் பவன-கல-ஹம்ஸ ஜஹதி i
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருரிதே ii 91
  தாயே ! உன்னுடைய அழகான நடையினைப் பார்த்து , தானும் அதைக் கற்றுக்கொள்ள நினைத்து , உன்  வீட்டிலுள்ள அன்னப்பட்சிகள்  ,துள்ளித் துள்ளி நடந்து , உன் அழகு நடையைப் பின்பற்றி ,உன்னைப்போல் தானும் நடக்க பழக்கப்படுத்திக்  கொள்கின்றன . நீநடக்கும்பொழுது உன் தண்டையிலுள்ள பத்மராகக் கற்கள் எழுப்பும் ஓசையானது , அந்த  அன்னப்பட்சிகளுக்கு  மறைமுகமாக  நடப்பதற்குப்பாடம் சொல்லித்தருவது போல் உள்ளது .  

92. "
தேவியின் இருக்கை" [ஆளும் திறமை]
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேச்வர-ப்ருத:
சிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட: I
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன-ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் ii 92
 அம்மா ! உலகாளும்  பிரம்மா ,விஷ்ணு , ருத்ரன் , ஈசன் இந்நால்வரும்உனக்கு எப்போதும் பணிபுரிவதற்காக , உன் கட்டிலின் நான்குகால்களாக ஆகி , உன்னை எப்போதும் வணங்குகின்றனர் . உன்கட்டிலின் மேல் விரிப்பாக இருக்கும் சதாசிவன்  வெண்மையானஆடைதனைக் கூடியவராக இருந்தாலும் , உன்னுடைய சிவந்தஒளியின்  பிரதிபலிப்பால்  அவரும் சிவப்பாகமாரி ஸ்ருங்காரரசம் உருவெடுத்தாற்போல்  ஆகி , உன் கண்களுக்கு மகிழ்ச்சியைத்தருகின்றார்.  

93. "சிவனுடைய கருணையின் உருவே தேவி' [மனோரத சித்தி]
அராலா கேசேஷு ப்ரக்ருதி-ஸரலா மந்த-ஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷதுபல-சோபா குசதடே i
ப்ருசம் தன்வீ மத்யே ப்ருது ருரசி ஜாரோஹ விஷயே
ஜகத் த்ராதும் சம்போர்-ஜயதி கருணா காசி தருணா ii 93
  தாயே ! மனம் , வாக்குக்கு  எட்டாதவளே ! இயற்கையில்சுருண்டமுடியும் , இனிமையான புன்னகையும் ,  வாகைமலரைப் போல் மிருதுவான மனமும் , ரத்தினக்கற்கள் போல் கடினமான  ஸ்தனமும் , மெலிந்த இடையும் ,  பருத்த பின்பாகமும் ,  மயக்கம்  தரும் அழகிய உதடும் , உடல் முழுவதும் சிவந்த  அழகுடனும் கூடிய நீயே , சிவனின்கனிவு சக்தியான  அருணாதேவியாக இந்த உலகம் முழுவதையும்காக்கின்றாய் . 

94. "
தேவியின் உபயோகத்திற்காக நிரப்பப்பெற்ற ஜலபாண்டம் போன்றது சந்திர பிம்பம்" [இஷ்ட ப்ராப்தி]
கலங்க: கஸ்தூரீ ரஜநிகர-பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்ப்பூரைர்-மரகத-கரண்டம் நிபிடிதம் i
அதஸ்-த்வத்-போகேன ப்ரதிதின-மிதம் ரிக்த-குஹரம்
விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூனம் தவ க்ருதே ii 94
 அம்மா ! மரகதத்தினால் செய்யப்பட்ட பெரிய பாத்திரமான சந்திரமண்டலத்தில் நீராடுபவளே ! சந்திரனின்  நடுவில் உள்ளகளங்கமே கஸ்தூரி பொடியாகவும் , சந்திரனே   பன்னீராகவும் , சந்திரகிரணங்களே பச்சைக்  கற்பூரப்பொடியாகவும் ,  உனக்குநீராடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது . தினமும் நீ நீராடியபின்காலியான  இவைகளை , பிரம்மாவானவர் மீண்டும்மீண்டும்இவைகளை வாசனைப் பொருள்களால் நிரப்பி வைக்கிறார் .  

95. "இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபட இயலாது" [இஷ்ட ப்ராப்தி]
புராராதே-ரந்த: புரமஸி ததஸ்-த்வச்சரணயோ:
ஸபர்யா-மர்யாதா தரல-கரணானா-மஸுலபா i
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யபி-ரமரா: Ii 95
 அம்மா !  மூ உலகமும் எரித்த பரமசிவனின் பட்டத்துராணியே !புலன்களை  அடக்கமுடியாத சபலபுத்தி  உடையவர்களுக்கு , உன் பாதம்அருகில் வரவோ , பூஜை செய்யவோ  தகுதி கிடையாது . அதனால்தான்இந்திரன் போன்ற தேவர்களுக்கு , அந்த பாக்கியம் கிடைக்காமல் , உன்வாசலில் காவல் புரியும் அணிமாதி  சித்திகளுக்குச் சமமான நிலையைஉடையவர்களாய் உன் வாசலிலேயே இருக்கும்படி  நேரிடுகிறது . 

96. "தேவியினுடைய பாதிவ்ரத்ய மஹிமை" [ஸரஸ்வதி கடாக்ஷம்; லக்ஷ்மீ கடாக்ஷம்]
கலத்ரம் வைதாத்ரம் கதிகதி ப்ஹஜந்தே கவய:
ச்ரியோ தேவ்யா: கோ பவதி பதி: கைரபி தனை: I
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: Ii 96
 தாயே ! கற்புக்கரிசியே !  பிரும்மாவின் மனைவியான சரஸ்வதியைஎத்தனை கவிகள்தான் அடையவில்லை ? அதுபோல் கொஞ்சம்செல்வம் பெற்றவன் கூட  லக்ஷ்மிபதியாக ஆகவில்லையோ ? ஆனால்உன்னை அப்படிச் சொல்லமுடியுமோ ? உன் ஆலிங்கனமானது , உன்கணவனான சிவனைத் தவிர குரவக  மரத்திற்கும் கிடையாதே ,அப்படியானால்   நீதானே பதிவ்ருதா மங்கையர் திலகம் ?  

97. "
பரப்ரம்ம மஹிஷியாகிய நீயே ஸரஸ்வதியும், லக்ஷ்மியும், பார்வதியும்" [ஜீவன் முக்தி]
"
கிராமாஹுர்-தேவீம் த்ருஹிண-க்ருஹிணீ-மாகமவிதோ
ஹரே: பத்னீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரி-தநயாம் i
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி ii 97
  தாயே !  வேத இரகசியங்கள் அறிந்தவர்கள் ,  நீயே  பிரம்மாவின்மனைவி   சரஸ்வதி என்றும் ,விஷ்ணுவின்    மனைவி லக்ஷ்மிஎன்றும் , சிவனின் துணைவி பார்வதி என்றும்   கூறுகின்றனர் . அனால்நீயோ இன்னதென்று வருணிக்க முடியாததும் ,  அடைய முடியாததும்எல்லையற்ற மகிமையுடன் கூடிய மஹாமாயா உருவினளாகி இந்தஉலகம்  முழுவதையும்  திகைக்கவைக்கின்றாய்  !   

98. "பாத தீர்த்தம் ஊமையையும் பேச வைக்கும்" [வாக் ஸித்தி]
கதா காலே மாத: கதய கலிதாலக்த-கரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜன-ஜலம் i
ப்ரக்ருத்யா மூகானாமபி கவிதா-காரணதயா
கதா தஸ்தே வாணீ-முக-கமல-தாம்பூல ரஸதாம் ii 98
 அம்மா ! பிறவியிலேயே  ஊமையாய்   இருப்பவனுக்கும் கூட ,கவிதைகள்  பாடும்  திறமையைக் கொடுக்கக்  கூடிய சரஸ்வதியின்சக்தியுடைய தாம்பூலரசத்திற்குச் சமமானதான , மருதாணி பூசிய உன்பாதங்களை அலம்பிய ( தாம்பூலரசம் போல் சிவந்த ) நீரானது ,ஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது  கிடைக்குமோ ?

99. "
தேவியை வழிபடுபவன் கல்வி, செல்வ, அழகு, ஆயுள் இவையனைத்தும் நிரம்பியவன் ஆவான்" [பேரின்பம்]
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா i
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாச-வ்யதிகர:
பாராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவான் ii 99
தாயே ! உன்னை வணங்கி துதிப்பவனிடத்தில் சரஸ்வதி இருப்பதால்அவன் பிரம்மாவிற்கு எதிரியாகவும் , லக்ஷ்மிகடாக்ஷம்  இருப்பதால்அவன்  விஷ்ணுவிற்கு எதிரியாகவும் , மன்மதனின்  மனைவி  ரதிதேவியின்  கற்ப்பிற்கு தளர்ச்சி ஏற்ப்படுத்துவனாகவும் , அறிவு ,அழகு ,செல்வம் ஆகிய இவைகள் உடையவனாய்,உயிர் , உடல் , மாயை என்றபந்தங்களிலிருந்து விடுபட்டு , என்றும் நிலையான பரமானந்த சுகத்தைஅடைகிறான் .  

100. "தேவியளைத்த சக்தியால் தேவியைப் பாடியது, சூரியனுக்கு அவன் கிரணத்து அக்கினியால் தீபாராதனை செய்தது போலாம்" [ஸகல ஸித்தி]
ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜனவிதி;
ஸுதா-ஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்ய-ரசனா i
ஸ்வகீயை-ரம்போபி: ஸலில-நிதி-ஸௌஹித்ய கரணம்
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துத்ஹிரியம் ii 100
  தேவீ ! லோகநாயகி ! கைத்தீவட்டி ஒளியினால் கதிரவனுக்கு ஆரத்திசெய்வது போலவும் , சந்திரகாந்தக் கல்லிலிருந்து பெருகுகின்றநீராலேயே , அமிர்தத்தை  வாரி , வாரிப் பொழியும் சந்திரனுக்குஅர்க்கியம்  தருவது போலவும் , கடல்நீராலேயே கடல் அரசனுக்குதர்ப்பணம் முதலியன செய்வது போலவும் , உன்னுடையவாய்மொழியால் இயற்றப்பட்ட இந்த துதி மொழியினாலேயே உன்னைநான்   துதிக்கிறேன் . 
  இந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை முழு மனதுடன் படிப்பவர்களுக்கும் , கேட்பவர்களுக்கும்  எல்லா வித நன்மைகளும்உண்டாக வேண்டும் என்று அன்னையை வேண்டுகிறேன் .

                                                    முற்றும் முற்றும் முற்றும் முற்றும் முற்றும் ..........................