Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நான் வெண்மை ! நான் உண்மை ! புணித உப்பில் இருக்கிறேன் ! புணித உப்பு ;;;INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; நான் வெண்மை ! நான் உண்மை ! புணித உப்பில் இருக்கிறேன் !
புணித உப்பு
34 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நான் வெண்மை ! நான் உண்மை ! புணித உப்பில் இருக்கிறேன் !
புணித உப்பு
யுகத்தில் சிறந்த சூட்சுமம் உப்பு ! மலர் போன்று ஞானம் இருப்பதால் வெண் உப்பும், வெண் பஞ்சும் மிக உயர்ந்தது ! தென்னம் பூ, வாழைப் பூ, தும்பை பூவில் கோடி ரகசியங்கள் உண்டு ! உன்னால் முடிந்தால் முதலில் இதை கண்டுபிடித்து ஞானம் அடையப் பார் ! வெண் உப்பு விதை இல்லாமல் பயிராகும் ! நான் வெண் உப்பில் இருக்கிறேன் !
ஆன்மாவுக்கு பிடித்ததும் வெண்மையடா !
படைத்த பொருள்களில் வெண் உப்பு மிக மிக உயர்ந்தது ! இதை வேதத்தில் (தந்தஸ்) என்று அழைப்பதுண்டு ! வேதத்திற்கு நிகரான ஆத்ம சக்தி இதில் உள்ளது !
உலகில் பயிராகும் எல்லாவற்றுக்கும் விதை இருக்கும். ஆனால் புணித உப்பு மட்டும் தான் நன்நீரில் விதை இல்லாமல் பயிராகிறது, விளைகிறது, பூக்கிறது !
படைத்தவனுக்கும், எனக்கும், உன் ஆண்மாவுக்கும் பிடித்த பொருள் வெண்மையே ! உப்பை பக்குவமாக உன்னும் மானிடா, ஏன் பக்குவம் தொலைத்தாய் ? பேச்சில் செயலில் உண்மையாக இரு ! பறவைக்கும், மீனுக்கும் பிடித்த நிறம் வெண்மையே. நீர் நிலைகளில் வெண்மையான துணி வைத்து மீன்களை பிடித்தால் துள்ளி வந்து விழும். வேறு எந்த நிறமும் மீன்களுக்கு பிடிக்காது. தூய்மையான வெண்மைக்கே இங்கே உயரிய மதிப்பு ! ஆனால் வெண்மையின் புணிதத்தை பற்றி உனக்கு தான் தெரியவில்லை ! பரிசுத்தமான வெண்மையை அறிந்து கொள் ! லோகத்தின் நிறம் வெண்மை ! உன் மனதை வெள்ளை மனசு என்று தான் கூறக் கண்டேன். யாரும் சிவப்பு, கருப்பு என்று கூற நான் கேட்கவில்லை !
வயது ஆக ஆக உன் தலை முடி ஏன் வெண்மையாகிறது ? ஏன் என்று உணர்ந்தாயா நீ ? உணர் !
பசுமை உப்பிடம் ! வெண்மையின் உண்மை உப்பிடம். எதையும் அளவோடு சாப்பிட்டால் தான் அமிழ்தம் ! ஆனால் ஞானத்தை மட்டும் சாப்பிட சாப்பிட திகட்டாது ! உலகில் நான்கு வெண்மையான பொருள்களை அளவோடு சாப்பிடு. (உப்பு, அரிசி, பால், சர்க்கரை) அளவு மீறினால் உன் உடல் அசைவற்று போகும். கிராமத்தில் இன்றும் கார் அரிசி (சிவப்பு) சாப்பிட கண்டேன். நீ தான் வெண் அரிசி சாப்பிட்டு வேதனை கொள்கிறாய் !
புணித உப்பு வணங்கச் சிறந்த பொருள். படிக்கும் அறையில், தொழில் செய்யும் இடத்தில் வட மூலையில் உப்பை வை ! நீ சுகம் பெறுவாய் ! செல்வம் தங்கும். வீட்டை சுற்றி உப்பையும், மஞ்சளையும் சேர்த்து போடு ! வீட்டை சுத்தம் செய்யும் போது சிறிது உப்பை போட்டு சுத்தம் செய்து பார் ! வீட்டிற்கு துர்தேவதைகள், திருஷ்டி, விஷ பாம்புகள் நெருங்காது ! பசுவுக்கு எவ்வளவு உப்பை கொடுத்தாலும் சாப்பிடும். ஆனாலும் அதன் உடலுக்கு எந்த தீங்கும் வருவதில்லை ! இரண்டு இரப்பை இருப்பதால் அது எளிதில் பிரித்துவிடும். அதன் கோமியம் உப்பு தன்மை இல்லாமல் இருப்பதால் தான் புணிதம் என்று சொல்கிறார்கள் !
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று ஏன் சொன்னார்கள் என்பதை யோசி ! உப்பை தின்றவன் தண்ணிர் குடிப்பான், உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்கிறாய் ! பந்தியில் இலையில் உப்பை தான் முதலில் வைக்கிறாய் ! ஏன் என்று உணர் !
உணரா பாவி நீ எதை எதையோ வணங்குகின்றாய் ! ஆதிகாலத்தில் உப்பை தான் செல்வத்திற்கு நிகராக பண்டை மாற்று முறையை பின்பற்றினான். நீ எதையோ படித்து எதையோ சொல்லி நிம்மதி இல்லாமல் அலைகிறாய். ஆதி காலத்தில் குருகுலத்தில் கல்வி கற்க சென்றால் புணித உப்பை தாமரை இலையில் பரப்பி முட்டி போட்டு நிற்க சொல்வார்கள். பின் கல்வி போதிப்பார்கள். ஞானத்தோடு இருந்தது குழந்தைகள். இப்போது காசுக்காக கல்விசாலை நடத்துகிறாய் ! நீ எப்பொழுது மருத்துவத்தையும், கல்வியையும் காசுக்காக விற்றாயோ அன்றே உனக்கு துன்பங்கள் ஆரம்பித்துவிட்டது ! உன் ஞானத்திற்கும் அறிவிற்கும் உப்பிற்கும் சம்பந்தம் உள்ளது !
உப்பு கடல் நீரில் விளையவில்லை ! உவர் நிலத்தில் நன்நீரில் விளைவது புணித உப்பு ! உன் பாவத்தை போக்கும் புணித உப்பை வணங்கு !
நான் வெண்மையின் உண்மை ! என்னை நினை ! அற்புதம் நிறைந்த வெண் உப்பை புரிந்து கொள் ! உன் மானத்தை மறைக்கும் வெண் பஞ்சும் வெண்மை ! வெண் பஞ்சை மறவாதே !
லோகத்திலும் வெண் பஞ்சும் உப்பும் உண்டு ! உண்மையை இன்னும் உரைப்பேன் ! நீ உன்னை உணர்ந்தால், உனக்கு யாவும் தெரிந்துவிடும் ! ஆனால் உன் அகங்காரம், அறியாமை, நான் என்ற திமிர் உன் கண்களை மறைக்கிறது. உன் மானத்தை மறைக்கும் வெண் பஞ்சுக்கு நன்றி சொன்னாயா அல்லது அதை படைத்து உனக்கு தந்து அழகு பார்த்தானே அந்த புணிதன் ? அவனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ? சிவ சிவா என்று மூச்சை உள்ளிழுத்து மூடனாக திரிகின்றாய் ! எதற்காக ?
பருத்தி கொட்டையை மாட்டுக்கு கொடுத்து எதை எதையோ புதிதாக கண்டுபிடித்து உண்கின்றாய் ! வெண் பஞ்சு நிகரில்லா புணிதத் துவம் வாய்ந்தது ! குளிக்கும் போது வெண்மை நிற துணியை கட்டி கொண்டு குளி ! புணித நீருக்கும், பஞ்சுக்கும் சம்பந்தம் உள்ளது !
பஞ்சில் தயாரிக்கும் துணியை உடை என்கிறாய் ! பட்டில் தயாரிக்கும் துணியை ஆடை என்று சொல்கிறாய் ! ஏன் என்று கண்டுபிடித்தாயோ ? இதை கண்டுபிடி ! ஞானம் உண்டு !
உணவு சாப்பிடும் பொழுதும் சமைக்கும் பொழுதும், உப்பை கைகளினால் தொடாதே ! முன் காலத்தில் உப்பை பனை ஓலையில் எடுத்து உபயோகப்படுத்தினார்கள் ! மகத்துவம் நிறைந்த உப்பை மண் சட்டியில் வைத்தார்கள் ! நீயும் புணித உப்பை மண் சட்டியில் வைத்து உபயோகப்படுத்து ! வீடு மங்களம் பொங்கும் ! உனை கடனாளி ஆக்காது. உன் மமதை அழியும். புணித உப்பை கையினால் தொட்டால் புணிதம் கெடும் !
புணித உப்பை, புண்னியம் தரும் உப்பை வணங்கு ! புணித உப்பிலே நான் இருக்கிறேன் ! பூ வேறு ! மலர் வேறு ! மலரிலே உயர்ந்தது தாமரை ! பூவிலே உயர்ந்தது பெண் ! பெண் பூப்படைந்துவிட்டதாக தான் சொல்கிறார்கள். மலர்ந்துவிட்டதாக யாரும் சொன்னதில்லை ! ஏன் என்று கண்டுபிடி ! பெண்களை பூவையர் என்று ஏன் சொல்கிறார்கள் என்று கண்டுபிடி ! இன்னும் எத்தனையோ கோடி ரகசியம் உண்டு !
படைப்பின் அதிசயத்தை எதுவென்று சொல்வேன் ? அந்த ஆனந்த கூத்தினை அறியாமல் ஏதோ உளர்கிறாய். உணராமல் தவிக்கின்றாய் ! உன் வேண்டுதலையும், உன் வணங்கும் முறையையும் என்னவென்று சொல்வேன் ?
உணவில் உப்பை பக்குவமாக இட்டு உண்ணும் மனிதனே, ஏன் உணராமல் அலைகின்றாய் ? உண்பதை போல் உணர கற்றுக் கொள். நீ உண்ணும் பொருள் யாவும் உன்னை ஏன் உண்கின்றது என்பதனை யோசி. இது தெரியாமல் நீ உணவை உண்பதாக உளரிக் கொண்டிருக்கிறாய்.
உலகில் விதையின்றி பயிராகும் புணித உப்பு சிறந்தது. அதை வணங்கிப் பார் ! வாழ்வாய் நீ !
நிகரில்லா புணித உப்பின் நற்தன்மை நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment