Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, May 17, 2016

INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;யாகவா முனிவரின் ஆஸ்ரமம்

104        யாகவா முனிவரின் ஆஸ்ரமம் 
INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;

பரந்த மணல் திடல் — பெரிய பெரிய விருக்ஷங்கள் — அமைதி பொங்கும் சூழ்நிலை — இனிமையான தெய்வமணம் கமழும் மென் காற்று — ஆஸ்ரமத்திற்குள் நுழைகிறேன் நான். வா, சௌந்தரம் என்ற கனத்த குரல் ஒலிக்கிறது. நான் யாகவா முனிவர் முன் நிற்கிறேன். அப்படி உட்கார் என்று அவர் சொன்னவுடன் நான் மெதுவாக அடக்கமாக அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்கிறேன். தர்மம் செய்தவந்தான் உயர்ந்தவன். கூன்,குருடு, செவிடு, ஏழை மக்களுக்கு உதவுபவந்தான் உயர்ந்தவன். நீ உயர்ந்த பிறவி. உதவப் பிறந்தவன் நீ. இங்கே வந்து உட்கார் என்று சொல்லி மெத்தை – திண்டு இருக்கும் பக்கம் கை காட்டுகிறார். பேச்சோடு பேச்சாக, வெகு சாதாரணமாக, நீ முற்றின விதை, இந்த விதை முளைக்காது என்றும் என்னிடம் அவர் சொல்கிறார். அதன் உள்ளார்ந்த அர்த்தம் எனக்கு சட்டென்று புரியவில்லை. இனிப் பிறவா வரம் வேண்டும் முருகா என்ற என் வாழ் நாள் முழுதுமான முறையீட்டினையே யாகவா முனிவர் இப்படிச் சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று நான் பிறகுதான் தெரிந்து கொண்டேன்..
சௌந்தரம், நேற்று ஸ்டுடியோவில் உன்னால் பாட முடியவில்லையாமே? குரலில் நடுக்கம் இருந்த தாமே? கவலைப் படாதே. பத்தே நிமிடத்தில் சரி செய்து விடுகிறேன் என் சொல்லி என்னை உள்ளே அழைத்துச் செல்கிறார். ஆல், அரசு, வேம்பு என்று பல்வேறுபட்ட மரங்கள் கொத்துக் கொத்தாக செறிந்து இருந்த அந்த வனத்திலே ஆயிரக்கணக்கான பக்ஷி ஜாலங்கள் மேலே பறந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் உனக்குக் கை கொடுக்கும் என்றயாகவா முனிவர் ஏ பக்ஷிகளா கலைஞன் ஒருவன் வந்திருக்கிறான். அவனைப் பாராட்டுங்களேன், என்கிறார். என்ன ஆச்சரியம். கொத்துக் கொத்தாக அவ்வளவு பறவைகளும் ஒரே கூட்டமாக மேலே எழும்பிப் பறந்து என்னையும், யாகவா முனிவரையும் மூன்று முறைவலம் வந்து பிறகு மரங்களில் அமர்கின்றன.
உள்ளே சென்ற யாகவா முனிவர் ஒரு செம்பு ஜலம் கொண்டு வருகிறார். ஒரு பெரிய பொட்டலம் ஒன்றையும் பிரிக்கிறார். உள்ளே விபூதி இருக்கிறது. அந்த விபூதி மொத்தத்தையும் அந்த செம்பு ஜலத்தில் கரைக்கிறார்.
கண்ணாடியைக் கழற்றிக்கொள் என்று என்னிடம் சொல்லி யாகவா முனிவர் அந்த செம்பு ஜலத்தை மூன்று முறைதன் கைகளில் எடுத்து என் முகத்தில் வேகமாக விசிறி அடிக்கிறார். என் கைகளை நீட்டச் சொல்லி எனது உள்ளங்கையில் கொஞ்சம் கொஞ்சமாக அதே நீரை வார்த்து எனனி உட்கொள்ளவும் சொல்கிறார். மிகவும் இனிமையான மலைத் தீர்த்தம் போன்று அது இனிக்கிறது. மூன்று முறையும் அந்த நீரை உட்கொள்கிறேன். செம்பிலிருந்து மீதி ஜலத்தை என் கால்களில் கொட்டுகிறார். காலைத் துடைத்துவிடாதே என்று சொல்லி என்னை அருகில் இருந்த மெத்தையில் அமரச் சொல்கிறார்.
பத்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. மீண்டும் யாகவா முனிவர் என் அருகே வருகிறார். நான் வீருட்டென எழுகிறேன். அவரைக் கைகூப்புகிறேன். கைகளிலோ, கால்களிலோ நடுக்கம் சிறிதும் கிடையாது. நெடுஞ்சாண் கிடையாக அவர் கால்களில் விழுகிறேன். குரலிலிருந்த நடுக்கம் முற்றிலுமாக விலகிவிட்டதை உணர்கிறேன். முருகப் பெருமானைப் போற்றி நானே எழுதி இசை அமைத்திருந்த எத்தனை முறைகள் பார்த்தாலும் இனிக்குதையா உன் உருவம் என்ற பாடலை மனமுருக யாகவா முனிவர் முன் கணீரென்றகுரலில் பாடுகிறேன்.
நாளை ஸ்டுடியோவில் நீ பாடுகிறாய் சௌந்திரம் என்கிறார். ஆணவம் கொள்ளாதே ஞானப்பெண்ணே என்ர அந்தப் பாட்டை மறு நாளே நான் ஐந்தரைக் கட்டை சுருதியிலும் ஆறு கட்டை சுருதியிலுமாக இரண்டு முறை பாடுகிறேன். மிகமிக நேர்த்தியாக — நான் பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களிலேயே எனக்கு மிகவும் மனச்சாந்தி அளித்த பாடல்களில் ஒன்றாக — அந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது.
இது நடந்தது 1991-ல் அன்றிலிருந்து இன்று வரை யாகவா முனிவரை நான் வழிபட்டு வரும் முருகப் பெருமானாகவே நான் காண்கிறேன். என்னுடைய பிறந்த தினமான மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நான் யாகவா முனிவரை அவரது ஆஸ்ரமத்திற்குச் சென்று வழிபட்டு வணங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
யாகவா முனிவர் முக்காலத்தையும் கடந்த — முக்காலத்தையும் நிர்ணயிக்கும் — மாபெரும் தீர்க்கதரிசி ஆவார். உயர்திரு யாகவா வசியா அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு வணக்கம்.

No comments:

Post a Comment