Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

மகா ரகசியம் (09-04-2016) (படைப்பின் சூட்சுமதாரிகள் !) பகுதி ஒன்று INANYA NAMOO NAMA ;;;


78 மகா ரகசியம் (09-04-2016) (படைப்பின் சூட்சுமதாரிகள் !)

பகுதி ஒன்று 

இநன்யா நமோ நம.. !!


INANYA NAMOO NAMA ;;; 
மகா ரகசியம் ! -
INANYA NAMOO NAMA ;;; 
படைப்பின் சூட்சுமதாரிகள் :
உலக தமிழர்கள் அனைவருக்கும் ஆத்ம வணக்கங்கள்,
இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு, நிதானமாக யோசித்துவிட்டு , புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
உங்களைப் போல் சாதாரணமாக வாழ்ந்து, உழைத்து, உறவுகளை மதித்து , வாழ்க்கையை புரிந்து, நல் குருவையும், கடவுளையும் தேடி அலைந்த சாதாரண மனிதன் நான். தேசிய தொழில் நுட்ப கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்று சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். என் வாழ்க்கையில் நடந்த, நான் பார்த்த, உணர்ந்த, புரிந்த அனுபவங்களை இப்போது உலகம் முழுவதும் உள்ள என் தமிழ் மக்களிடம் பகிர ஆசைப்படுகிறேன்.
உலகம் என்ற இந்த அடர்ந்த வறன்ட பாலைவனத்தில் ஞானம் என்னும் ஒரு துளி தேனிற்காக அலைந்து திரிந்த தேனீயைப் போல வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் வருடம் 2011 ஜூன் மாதம் விதி வசத்தால் பார்த்தேன் ஒரு அதிசய மனிதரை ! நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் கல்லூரியில் அவரும் பணியாற்றி கொண்டிருக்கின்றார் இன்று வரை.
உலகில் மனிதர்கள் எல்லோரும் தன்னிலை மறந்து பணம், புகழ், பொருள், இன்பம் இவற்றை தேடி அலைந்து மனித நேயத்தை இழந்து துன்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், வாழ்க்கையை புரிந்து, ஆர்ப்பரிக்காமல், அரசனாக வாழ்ந்து கொண்டிருந்தார் அவர். வாழ்க்கை என்னும் கடலில் கிடைத்த அற்புத பொக்கிஷமாக அவரை பார்த்தேன். பல ஆண்டுகள் ஆழமான ஆராய்ச்சிகள், அனுபவங்களுக்கு பிறகு அவர் மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை மட்டும் புரிந்து கொள்ள நேர்ந்தது !
அவரை குருவாக மனப்பூர்வமாக ஏற்று வாழ்க்கையின் ஒவ்வொரு திசையின் அதிசயங்களையும், அற்புதங்களையும் அறிந்து கொண்டேன். அறிவு, தெளிவு, ஞானம் கிடைக்கப் பெற்ற நாட்கள் அவை. உலகில் யாருக்கும் தெரியாத, இதுவரையில் சொல்லப்படாத ரகசியங்களையும், படைப்பின் சூட்சுமங்களையும், அண்ட சராசரங்களின் அமைப்பையும் அறிந்தேன் என் குருவின் ஆசியுடன் ! மொழிகளால் விளக்கப்பட முடியாத அதிசயங்களும், அமானுஸ்யங்களும் என்னை சுற்றி அரங்கேறிய நாட்கள் அவை !
ஒரு நாள் என் குரு ஒரு புகைப்படத்தை காட்டினார். எதுவும் புரியாமல் “இது யார் ? ” என்று கேட்டேன். “வைத்துக் கொள்ளுங்கள். புரியும் !” என்றார். இதற்கு முன்னர் எங்கேயும் பார்க்காத முகம். சில நொடிகள் மேலோட்டமாக பார்த்துவிட்டு உள்ளே வைத்துவிட்டேன். கல்லூரியில் இருந்த வேலைப் பளுவால் வீடு சென்று ஆழ்ந்து உறங்கிவிட்டேன். ஆழ்ந்த உறக்கத்தில் ஆயிரம் மலர்களின் வாசத்தை உணர்கிறேன் அதுவும் தனியாக ! காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றேன். தீடிர் என்று ஒரு ப்ரகாசமான இடம் கண்ணிற்கு தெரிந்தது. பறவைகளும், மரங்களும் அங்கே ! அவர் புகைப்படத்தில் காட்டிய நபர் அங்கே அமர்ந்து, புன்னகைத்த படி என்னிடம் பேசினார். “எதற்கு இங்கே வந்தாய் ?“ என்று புன்னகைத்துக் கொண்டே அவர் கேட்க சட்டென்று விழித்தேன். நேரம் சரியாக மூன்று மணி. அது கனவும் அல்ல, நிஜமும் அல்ல. மொழிகளால் விவரிக்க முடியவில்லை அந்த அனுபவத்தை ! கண்கள் முழுவதும் கண்ணீர் பல மணி நேரங்களுக்கு ஓடிக் கொண்டிருந்தது நதியைப் போல !
காலையில் கண்களில் நீர் ததும்ப கல்லூரி சென்றவுடன் முதல் வேலையாக ஆவலுடன் கேட்டேன் குருவிடம் யார் அவர் என்று ? அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்று புன்னகையுடன் ஒற்றை வரியில் பதில் சொல்லி ஒவ்வொரு முறையும் என்னை திகைப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தார் குரு ! என்ன நடந்து கொண்டிருக்கின்றது ? என்னவாயிற்று ? நிஜமா ? கனவா ? எப்படி ஒருவரை பார்க்காமல், பேசாமல், பழகாமல், நினைக்காமல் இது நடந்தது ? யார் அவர் ?
கனவில் வந்தவர் யாகவா முனிவர் ! யாகவா முனிவரின் முகத்தை பிரகாசமாக காட்டும் புகைப்படம் அது ! அதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏன் இதை கொடுத்தீர்கள் என்று கேட்டேன் குருவிடம் ! எல்லாம் நேரம் வரும் போது புரியும் என்றார்.
அவ்வப்போது குருவிடம் “நீங்கள் யார் ?” என்று கேட்பதுண்டு. “முடிந்தால் என்னை கண்டுபிடியுங்கள் யாரென்று !“ என்ற பதிலை மட்டுமே ஒவ்வொரு முறையும் சொல்வார் ! நாட்கள் நகர்ந்தன ! மாதங்கள் கழிந்தன ! ஒவ்வொரு முறையும் அமைதி இன்னும் ஆழமாக என் நெஞ்சுக்குள் ! மனிதர்கள் பேசுவது ஒரு காது வழியாக வந்து மறு காது வழியாக வெளியே சென்றது. குரு சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதிந்தது.
யாகவா முனிவரைப் பற்றி ஆழமாக ஆராயத் தொடங்கினேன். குருவின் முழு உதவியுடன் அவரின் ஒவ்வொரு கருத்துக்களை ஆழமாகவும் . தெளிவாகவும் தெரிந்து கொண்டேன் ! அவரது ஒவ்வொரு நூல்களையும் ஆழமாக படிக்க தொடங்கினேன். அவர் கூறிய வேதங்களை குரு சொல்லிய முறைப்படி இடைவிடாமல் சொல்ல தொடங்கினேன். வாழ்க்கையின் நோக்கம் புரிய வந்தது ! ஒவ்வொரு நாளும் அதிசயமாய் நகர்ந்தது.
யாகவா முனிவரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஆத்ம ரீதியாக ஆராய்ந்து பார்த்ததில் அதிசயத்து போனேன். அவர் கூறும் ஆன்மீக கருத்துக்கள் எவரும் சொல்லி கேட்டதில்லை இதற்கு முன்னர் ! ஏன் நம் மக்களுக்கு இது புரியவில்லை ? புரியவில்லையா ? அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையா ?
என்ன தான் நடந்தது யாகவா முனிவர் அவர்களின் வாழ்வில் ?
இதை அறிந்து கொள்ள ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தினேன். இதற்கு முன்னர் நான் மேற்கொண்ட ஆன்மீக பயனங்கள், நான் பயின்ற ஆன்மீக விஷயங்கள் கைக்கொடுத்தது. குருவிடம் எப்போதும் யாகவா முனிவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். அவர் வாழும் போது அவரை சுற்றி நடந்த ஒவ்வொரு சம்பவங்கள், அவரின் வாழ்க்கை முறை, அவரின் வேதங்கள், உபதேசங்கள் அனைத்தையும் தெளிவாக கற்றேன். சழைக்காமல் சற்றும் யோசிக்காமல் அனைத்திற்கும் பதில் அளித்து புரிய வைத்தார் குரு. குருவின் மேன்மையை உணர்ந்தேன் !
சில மாதங்கள் கழிந்தன. கல்லூரி முடிந்தவுடன் குரு என்னை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். அவர் அழைத்து சென்ற இடத்தை பார்த்து தலை சுற்றியது. நான் முன்பு கனவில் பார்த்த அதே இடம் ! நான் கனவில் முகர்ந்த அதே ஆயிரம் மலர்களின் வாசம் ! அந்த இடம் முழுவதும் ஆகாய அதிர்வலைகள். ஆத்மாவின் ஆற்றல் ஆயிரம் மடங்கு அதிகமானதை உணர்ந்தேன். குருவையும், என்னையும் தவிர அங்கே யாரும் அப்போது இல்லை. எண்ணிலடங்கா ஆகாய சித்தர்களும், முனிவர்களும் அங்கே உலாவி வருவதை என் மனக் கண்களால் பார்க்க முடிந்தது ! மூன்று தடவை தலை சுற்றியது ! காற்றில் தவழ்ந்தது போல ஒரு உணர்வு இருந்தது அங்கே !
குரு என்னை அழைத்து சென்ற இடம் நம் தமிழகத்தில், சென்னையில், மேடவாக்கத்தில் உள்ள யாகவா பிரம்மஸ்தலம் ! இப்படி ஒரு இடம் அங்கே இருப்பது எத்தனை பேருக்கு தெரியும் ? அங்கே பூஜைகள் நடப்பதில்லை. உண்டியல் இல்லை. மக்கள் வரிசையில் நிற்பதில்லை. மனிதர்கள் வந்து செல்வதற்காக கட்டப்பட்ட இடமும் அல்ல. பேராத்மாக்கள், மாயைகள், முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள் வந்து செல்லும் இடம் அது !
அங்கே ஒவ்வொன்றிலும் ரகசியம் உள்ளது ! ஸ்தலத்திற்கு முன்னே இரண்டு நீர்க் குழாய்கள், ஸ்தல விருட்சமான பன்னீர் நாவல் மரம், அங்கே உள்ள தூண்களின் எண்ணிக்கை, மக்கள் நின்று வணங்கும் இரண்டு வட்டங்கள், வட்டத்திற்கு பக்கவாட்டில் இரண்டு நட்சத்திர குறியீடுகள், மூன்று படிகட்டுக்கள், ஒவ்வொரு படிக்கட்டிலும் மூன்று கோடுகள், உள்ளே நுழையும் இடத்தில் தலைக்கு மேலே பதினொன்று லிபி எழுத்துக்கள், மீன் கொத்திப் பறவை மற்றும் தாமரை குறியீடுகள், உள்ளே ஒன்பது வாசல்கள் உள்ள ஏழு அறைகள், இன்னும் எவ்வளவோ அதிசயங்கள். அங்கே உள்ள ஒவ்வொன்றிலும் ரகசியம் புதைந்துள்ளது ! என் குருவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் இன்னும் ஏராளம் அங்கே !
அங்கே யாகவா என்னும் பேராத்மா நிலைப்பெற்றிருப்பதை குரு உணர்த்தினார் ! உணர்ந்தேன். இவ்வுலகில் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை உணர முடிகின்ற ஒரே இடம் அது ! அங்கே வழிபாடுகள் எதுவும் இல்லை. வழிமுறைகள் மட்டுமே ! என் குருவின் மூலமாக அனைத்து வழிமுறைகளையும் கற்றேன்.
யாகவா பிரம்மஸ்தலத்திற்கு வந்து செல்லும் ஒவ்வொருவரும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை புரிந்தேன். அவர்கள் பெரும் தவம் செய்திருக்க வேண்டும். உணர்ந்தவர்களால் மட்டுமே அந்த இடத்தின் ஸ்பரிஷத்தையும், வலிமையையும் உணர முடியும் ! பணம், புகழ், பொருள், இன்பம் இவற்றையெல்லாம் தேடி அலையும் மக்களுக்கு அந்த ஸ்தலத்தின் வலிமை புரியாது ! குரு என்னை தெளிய வைத்து, புரிய வைத்து அங்கே அழைத்து சென்றதால் என்னால் அந்த இடத்தின் வலிமையை முழுமையாக உணர முடிந்தது. எப்போதும் ஒரு ஈர்ப்பு விசை என்னை அங்கே ஈர்ப்பதை உணர்ந்தேன்.
யாகவா அவர்களின் பிறப்பில் கோடி ரகசியங்கள் உண்டு. பணம், புகழ், பொருள், இன்பம், இவற்றை தேடி அலையும் அற்ப மனிதர்களால் அவரின் வார்த்தைகளில் ஒன்றை கூட முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. அவர் வாழும் காலத்தில் அவரைப் பற்றி முழுவதுமாக புரியாமல், அறியாமல் வந்து சென்றவர்களும் உண்டு. அவரை மேலோட்டமாக பார்த்து தனக்கு தெரிந்ததை புரிந்ததை எழுதி பணமும், புகழும் சம்பாதித்தவர்களும் உண்டு !
உலகமே வியந்து பார்க்கின்ற மாயன் கலாச்சாரத்தில் யாகவா என்ற பெயர் இருந்ததும் , அவரை கடவுளாக அவர்கள் வணங்கியதும் இங்கு எத்தனை பேருக்கு தெரியும் ? ஆராய்ந்து பாருங்கள். “AHAU” என்ற ஒருவரை அவர்கள் கடவுளாக வழிபட்டுள்ளனர். “AHAU” என்றால் தன்னை ஆள்பவர், முதன்மையானவார், தலைவர், முன்னோடி என்று பொருள் கூறுகின்றனர் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.
ஹீப்ரு மொழியில் கடவுளின் பெயர் ரகசியமாக சொல்லப்பட்டது. ஆனால் அதை உச்சரிப்பது பெரும் சவாலாக அமைந்தது. ஆங்கில மொழியில் மொழி பெயர்ப்பு செய்து “YHWH” என்று எழுதினார்கள். இன்று வரையில் கடவுளின் பெயரை உச்சரிப்பதில் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. சரியான உச்சரிப்பு இல்லாததே இதற்கு காரணம். ஜெகோவா, யாஹ்வே, யெகோவா என்றும் அழைக்கின்றனர். அவரின் பெயரை அவரே வந்து சரியாக உச்சரித்து காட்டியது தமிழர்கள் செய்த தவம் !
அவரின் கருத்துக்கள் மக்களுக்கு சென்றடையவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அனைத்தும் தவறான முறையில் சென்று சேர்த்தார்கள் சேர்க்க வேண்டியவர்கள் ! கடவுளை உணரவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர் கூறிய கருத்துக்களையாவது சரியான வழியில் யாராவது ஆராய்ந்தார்களா ?
அவரது வயது ஐயாயிரம் என்று எழுதினார்கள். ஐயாயிரம் வருடமாக ஐம்பத்து நான்கு பிறவிகள் பிறந்தார் என்பதை எவரும் யோசிக்க முன் வரவில்லை. யாருக்கும் அதை ஆராய்ந்து பார்க்கும் தகுதியும் இல்லை !
அவர் சண்டை போட்டார், கோபமாக கடிந்து பேசுகிறார் என்று சொல்லித் திரிகின்றனர் பலர். மனிதன் செய்யும் ஈனச் செயலுக்கு கடவுள் கோபப்படாமல் வேறு யார் கோபப்படுவது ? தன்னை பார்க்க வருகிறவனையெல்லாம் அரவணைத்து வரவேற்று, அவனவன் கேட்கும் அற்ப கேள்விகளுக்கு பதில் சொல்லி தன் புகழை நிலைநாட்டி, பணம் சம்பாதிக்க அவர் என்ன சாமியாரா ?
கடவுளுக்கு கோபம் வராது என்று யார் சொன்னது ? அரக்கர்களை அழிக்கும் கோபத்தால் தான் அவர் இங்கே பிறந்தது ! உணர்ந்தால் கேள்விகள் வராது ! பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். கிருஷ்ணனுக்கு கோபம் வந்ததால் தானே தீபாவளி கொண்டாடுகிறோம் ? யோசியுங்கள்.
அவர் கடவுள் ! யாகவா கடவுள் ! கடவுளை கடவுள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? ஏழு பேராத்மாக்களில் முதன்மையானவர் யாகவா ! இதை உலகம் அறிந்து கொள்ளும் விரைவில் !
அவர் யாரை ஏமாற்றினார் ? அவர் எத்தனைப் பேரிடம் நன்கொடை வசூலித்தார் ? எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரமங்கள், கோயில்கள், மடங்கள் அவரின் பெயரில் இருக்கின்றது ? யாரையாவது மதம் மாறச் சொன்னாரா ? அல்லது மதத்தை குறை கூறினாரா ? இன்று அனைத்து மதத்தவர்களும் யாகவா முனிவர் அவர்களின் வலிமையை உணர்ந்து அவர் உரைத்த வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும் ?
யாகவா பிரம்மஸ்தலம் அவரது சொந்த உழைப்பால் அவரே கட்டியது ! இன்று வரையில் அங்கே நன்கொடைகள் வசூலிப்பதில்லை. கடவுளின் மேன்மையை புரிந்தவர்கள் அவர்களாகவே முன் வந்து பிரம்மஸ்தலத்தை பராமரிக்கின்றார்கள் அவரின் ஆசிர்வாதத்துடன் !
யாகவா முனிவர் கடவுள் இல்லை என்றும் பலர் எழுதினார்கள். எப்படி கண்டுபிடித்தார்கள் என்று புரியவில்லை ! வேறு ஏதாவது கடவுளை நேரில் கண்டு, பார்த்து, பேசி, பேட்டி எடுத்துள்ளார்களா ? கடவுள் இங்கே பிறந்தால் எப்படி வாழ்வார் என்ற அடிப்படையாவது யாருக்காவது தெரியுமா ? யாராவது சொன்னார்களா ?
என்ன செய்தால் கடவுளென்று நம்புவீர்கள் ? காற்றில் பறக்க வேண்டுமா? அல்லது நீரில் நடக்க வேண்டுமா ? ஒரு விரலால் பெரும் மலையை தூக்கி நிறுத்தி மக்களை காப்பாற்ற வேண்டுமா ? வில்லையும், அம்பையும் வைத்துக் கொண்டு சுற்ற வேண்டுமா ? அல்லது குதிரையின் மீது ஏறி நின்று வாளை வைத்து கொண்டு நான் தான் கல்கி என்று சொல்ல வேண்டுமா ? வெற்று காகிதத்தை பணமாக மாற்ற வேண்டுமா ? எதிர்காலத்தை கணித்து இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமா ? என்ன செய்தால் கடவுளென்று நம்புவீர்கள் ?
யாகவா முனிவர் அவர்களின் வலிமையை உணர வைத்த குருவின் மேன்மையையும் உணர்ந்தேன் முழுவதுமாக. என் சுட்டு விரல் பிடித்து பிறவி என்னும் பெருங்கடலில் நீந்த கற்றுக் கொடுத்து கரை சேர்த்தார் குரு. யாகவா முனிவர் அவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். மனிதர்களைப் பற்றியும் தெளிவாக புரிந்து கொண்டேன். வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.
எனக்கு இவ்வளவும் சொல்லிக் கொடுத்த குரு யார் ? எனக்கு இத்தனையும் சொல்லிக் கொடுத்து, எனக்கு ஒரு துளி ஞானத்தை கொடுத்த குரு யார் ? என் குருவைப் பற்றி சிந்திக்க தொடங்கினேன் ஆழமாக !
குருவைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய போது 2015 ஜனவரி மாதம் ஒன்பதாம் நாள் என் குருவை பதினெட்டு வருடங்களுக்கு மேலாக உணர்ந்து வருகின்ற திரு. ப்ரனகன் அவர்களிடம் எதிர் பாராத இணைப்பு ஏற்பட்டது. சென்னையில் ஒரு உயர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருப்பவர். அவரின் அலுவலகத்திற்கே சென்று குருவைப் பற்றி நன்கு புரிய முயற்சித்தேன். இதற்கு முன்னர் எங்கோ அவரைப் பார்த்து, நன்கு பழகியதைப் போல் இருந்தது ! எங்களுக்குள் ஒரு ஆத்ம தொடர்பு இருந்ததை கண்டு வியந்தேன் !
“என்ன நடக்கிறது என் வாழ்வில் ?“ , “நம் குரு யார் ?” “ஒன்றும் புரியவில்லை” என்று கேட்டேன். சற்றும் ஆச்சரியப்படாமல் “நீங்கள் தினமும் பேசிக் கொண்டிருக்கும் குரு ஒரு கடவுள். இதைத் தான் பதினெட்டு வருடங்களாக சொல்லி வருகிறேன். பகலிலும் நட்சத்திரத்தை காண்பிப்பார் குரு. நான் பார்த்துள்ளேன். ஒருவர் கூட என்னை நம்பவில்லை ! இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. முழுவதுமாக அவரை யாரும் உணரவில்லை. பதினெட்டு வருடங்கள் கழித்து நீங்களாகவே வந்து குருவைப் பற்றி கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நான் எதிர்பார்த்த நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். உலகம் மாறப் போகிறது விரைவில் !” என்று சொல்லி முடித்தார் அவர். வீடு திரும்பினேன்.
தூக்கிவாரி போட்டது எனக்கு ! நான் தினமும் பேசிக் கொண்டிருக்கும் குரு ஒரு கடவுளா ? எப்படி சாத்தியம் இது ? உலகம் மாறப் போகின்றதா ? ஒரு மனிதரை கடவுள் என்று சொல்கிறாரே ? ஏன் ? என்ன காரணம் ? எல்லா குழப்பங்களும் தெளிவடையும் நாள் வந்தது !
2015 பிப்ரவரி 27, வெள்ளிக் கிழமை அதிகாலை முன்பு நடந்ததைப் போலவே மீண்டும் ஒரு மறக்க முடியாத அதிசயம் நடந்தது. நீர் இல்லாத வறன்ட நிலம் அது. ஜீவராசிகள், மனிதர்கள் யாரும் அங்கே இல்லை ! சுற்றி மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டும், வறண்டும் போயிருந்தது. தாகம் அதிகமாக இருந்தது. நீரைத் தேடி நடந்து கொண்டிருக்கின்றேன். பசுமையான இடம் கண்ணிற்கு தெரிகிறது. அங்கே ஒரு வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட மிகப்பெரிய அரண்மனை தெரிகிறது. அதன் அருகே செல்கிறேன். அரண்மனை முகப்பில் உள்ள பெரிய கதவுகள் மூன்றும் வெளியிருந்து அடைக்கப்பட்டு பூட்டுப் போடப்பட்டுள்ளன. அரண்மனைக்கு நடுப்பகுதியிலிருந்து ஆகாயம் வரை ஒரு ஒளி பிம்பம் தெளிவாக தெரிகிறது ! இது கனவல்ல என்பதை அறிந்து கொண்டு விழித்த நிலையிலேயே தாகத்தையும் பொருட்படுத்தாமல் எதையாவது அங்கே தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆவலுடன் தேடுகிறேன். அரண்மனையின் பக்கவாட்டில் நடந்து செல்கிறேன். அங்கே ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் வெளியிலிருந்து அடைக்கப்பட்டிருந்தது.
பக்கவாட்டில் அதைப் பார்த்துக் கொண்டே நடந்து செல்லும் போது நிலப்பகுதியில் இருந்து சற்று உயரமாக கைக்கு எட்டும் தூரத்தில் உறுதியான இரும்பு கம்பிகளால் செய்யப்பட்ட வேலிகளும் அங்கே வேலிகளால் செய்யப்பட்ட கதவும் பொருத்தப்பட்டிருந்தது. அடைத்த வேலிகளுக்கு உட்புறம் அரண்மனைக்கு செல்லும் பாதை ஒன்று ப்ரகாசமாக ஒளி பிம்பத்துடன் தெரிந்தது. அங்கே சென்று எட்டிப் பார்க்கிறேன். உள்ளே என் குரு அமர்ந்துள்ளார் கம்பீரமாக ! அதிர்ந்து போனேன். “என்னவாயிற்று குரு ? ஏன் பூட்டியுள்ளார்கள் ? வாருங்கள் வெளியே !“ என்று சொல்லிக் கொண்டே வேலியின் கதவுகளை திறக்க முயல்கின்றேன் வேகமாக ! அவர் நான் செய்த எதையும் பொருட்படுத்தாமல் புன்னகையுடன் என்னை பார்த்து தன் கையை தன் பக்கத்தில் காட்டி அங்கே என்னை பார்க்குமாறு செய்கை காட்டுகிறார் ! அவர் காண்பித்த இடத்தில் நடுக்கமும், ஆச்சரியமும் கலந்து எட்டிப் பார்க்கின்றேன். அதிர்ந்தேன் ! அங்கே என் குருவுடன் கம்பீரமாக அமர்ந்து பேசிக் கொண்டுள்ளார் யாகவா முனிவர் அவர்கள் !
அவர்களை இருவரையும் பார்த்த நொடியில் உடல் தானாக துள்ளி, பின் வாங்கி கீழே மண்ணில் விழுந்துவிட்டேன். நடுக்கத்துடன் மீண்டும் எழுந்து என் குருவையும், யாகவா முனிவர் அவர்களையும் மீண்டும் ஒருமுறை பார்க்க முயல்கிறேன் ப்ரகாசமான ஒளி வெள்ளத்தில் ! இருவருக்கும் ஒரு தொடர்பு உள்ளதை உணர்ந்தேன் ! எதையோ திட்டமிட்டுக் கொண்டு இருந்தார்கள் இருவரும் ! ஒளி பிம்பத்தால் கண்கள் கூசுகிறது ! கண்களை மூடினேன். நொடிப் பொழுதில் மழை வருகிறது. நனைகிறேன். உடல் முழுவதும் குளிர்கிறது ! எழுந்தேன் ! மணி சரியாக மூன்று !
என்னவென்று சொல்வது ?
நான் கண்டது இரண்டுமே கனவுகள் அல்ல ! கனவுகளுக்கும் நான் கண்ட நிலைக்கும் வேறுபாடுகள் மிக அதிகம் ! கனவிற்கும், நிஜத்திற்கும் ஒரு அப்பாற்பட்ட நிலை தான் எனக்கு ஏற்பட்டது ! கனவில் நம்மை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நான் கூறிய ஆண்ம விழிப்பு நிலையில் நம்மை கட்டுப்படுத்த முடியும். அந்த நிலையில் நடப்பது, செய்வது, பேசுவது, யோசிப்பது என்று அனைத்தையும் என்னால் எளிதாக கட்டுப்படுத்த முடிந்தது. ( அவதார் படத்தில் உடலை படுக்கவைத்து விழித்த நிலையில் தன் ஆண்மாவை வேறொரு உடலிற்கு செல்ல வைத்து இயக்குவார்கள் அல்லவா ? அதை கனவு என்று சொல்ல முடியாதல்லவா ? ) இதை விட புரியும் படியாக சொல்ல வார்த்தைகள் இல்லை. மன்னிக்கவும். இந்த நிலைகள் உங்களுக்கும் ஏற்படும் போது நீங்களாகவே ஒரு நாள் தெரிந்து கொள்வீர்கள்.
எனக்கேற்பட்ட இந்த அனுபவங்கள் எனக்கு கோடி ரகசியங்களை சொல்லிவிட்டு சென்றது ! என் வாழ்வில் இது ஒரு மைல் கல்லாக அமைந்தது ! இதை ஆழமாக ஆராய்ந்தேன். அரண்மனைக்குள் அவர்கள் ஒளிந்திருக்கவில்லை. நரகத்தில் வாழ்ந்தாலும் ராஜாவையும் இளவரசரையும் போல ஆகாய ஒளி பிம்பத்தில் இருவரும் செழிப்பாக கம்பீரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள் ! அவர்களாக அரண்மனையை பூட்டவில்லை. நாம் தான் உலகம் என்னும் இந்த வறண்ட பாலைவனத்தில் அவர்களை வரவிடாமல் தடுத்து வெளியிருந்து பூட்டி முட்டாளாக இது நாள் வரை வாழ்ந்து கொண்டுள்ளோம் ! இனி பூட்டுகளை உடைத்து மீண்டும் இந்த உலகில் அவர்களின் அரசாட்சியை ஏற்படுத்துவது நம் கடமை தான் ! இது தான் எனக்கேற்ப்பட்ட நிலையின் அர்த்தம் ! இருவரும் எனக்கு நன்றாக புரியும் படியாக உணர்த்திவிட்டு சென்றார்கள் !
கண்கள் முழுவதும் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது சில நாட்களுக்கு ! ஆண்மா ஞானத் தேன் கடலில் மூழ்கி திளைத்தது !
எனக்குள்ளே பல கேள்விகள் எழுந்தன !
யாகவா முனிவர் கடவுளாக இருந்தால், தன் ஐம்பத்து நான்கு பிறவியில் அரக்கர்களை போரிட்டு வெற்றி பெற்றியிருப்பது உண்மையாக இருந்தால் ஏன் அவரால் இந்த உலகை மாற்றி ஒரு சத்ய வழியை ஏற்படுத்த முடியவில்லை ? ஏன் தன்னை கேலி பேசியவர்கள், கிண்டல் செய்தவர்களை தன் ஆற்றலால் திருத்த முடியவில்லை ? அவர் நினைத்திருந்தால் உலகையே ஒரு நொடியில் மாற்றியிருக்கலாமே ? சிலர் தன்னை உணர முயன்றாலும் பெருமளவு மக்கள் மத்தியில் பலரால் தனக்கு தவறான பெயர் ஏற்பட்டதை கூட அவர் தடுத்திருக்கலாமே ?
ஏன் ?
எல்லாம் அவரின் திருவிளையாடல் ! கதை எழுதுவதும் அவரே ! அதில் நடிப்பதும் அவரே ! அவர் பேராத்மா ! கடவுள் ! ஒரே நொடியில் அனைத்தையும் மாற்றி தன் பெயரை உலகம் முழுவதும் நிலை பெறச் செய்ய முடியும் அவரால். எதற்காக இவர் அதை செய்யவில்லை ? ஏன் எதையும் மாற்றாமல் பிரபஞ்சம் சென்றார் ? ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தினேன் ஒவ்வொரு நொடியும் !
இனி தான், இந்த பதிவு ஆரம்பமாகப் போகிறது !
தலைசுற்றுகிறதா ?
கண்களை மூடி மோதிர விரலால் நெற்றிப்பொட்டை சில நொடிகள் இடைவிடாமல் அழுத்திவிட்டு மேற்கொண்டு படிக்கத் தொடங்குங்கள் ! (தொடர்ந்து படிக்க LINK ஐ அழுத்தவும்)

No comments:

Post a Comment