Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நான் உன் மனதை மாயம் புரிய வந்தவன் ! நான் மெய் ! உன் உயிர் மெய் ! கடவுள் மெய் ! என் வார்த்தையும் மெய் ! பொய் ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; நான் உன் மனதை மாயம் புரிய வந்தவன் ! நான் மெய் ! உன் உயிர் மெய் ! கடவுள் மெய் ! என் வார்த்தையும் மெய் !
பொய் !

38 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நான் உன் மனதை மாயம் புரிய வந்தவன் ! நான் மெய் ! உன் உயிர் மெய் ! கடவுள் மெய் ! என் வார்த்தையும் மெய் !
பொய் !
எல்லாமே இங்கு பொய் ! மாடு, மனை, வீடு, வயல், தோட்டம் எல்லாம் பொய். இங்கு நீயும் பொய் ! ஒருபுறம் உடலுக்கு வேஷமிட்டு ஏமாற்றும் மூடர்களின் கூட்டம் ! மறுபுறம் காசுக்காக எதையும் செய்யும் கயவர்களின் கூட்டம் ! எல்லாம் இங்கு ஏமாற்றும் கூட்டம் !
உறவுக்குள் உறவு ஏமாற்றக் கண்டேன் !
பிள்ளைகள் தன் பெற்றோரை ஏமாற்றக் கண்டேன் !
சாமியார்கள் மனிதர்களை ஏமாற்றக் கண்டேன் !
பொய் உடலை வைத்து, பொய்யும், புரட்டும் பேசும் மனித கூட்டத்தையே நான் பார்த்தேன் ! ஆனால் நான் மெய் ! என் வார்த்தை மெய் ! என்னுள் நீ வந்தால் நீயும் மெய் !
சத்திய பாதையில் நடப்பவர்களை நான் இங்கு காணவில்லை ! எங்கேயும் பொய் பேசி, அரிதாரம் பூசி ஆடும் மனித ஜாதியையே இங்கு நான் கண்டேன். பகலில் ஒரு வேஷம், இரவில் ஒரு வேஷம் போடும் பாழ்பட்ட மனிதர்களையே இங்கு நிரம்பக் கண்டேன். நான் இந்த மனித கூட்டத்தில் இருக்க ஆசை கொள்ளவில்லை. ஆனாலும் இங்கே சில தர்ம கூட்டம் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க கண்டேன் ! அதனாலேயே இங்கு சில தர்மாக்களின் முகங்களை பார்க்க வந்தேன் (முகநூல்).
என்னுள் நீ வந்தால் உன் பொய் முகம் அழிந்து உண்மை முகம் தெரிய வைப்பேன் ! இந்த பொய்யான உலகில் மனிதன் பொய்யனைப் போல வாழக் கண்டேன். ஏமாற்றும் மூடர் கூட்டத்தையும், உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி கூட்டத்தையும், வஞ்சனை, சூது , வாயெல்லாம் பொய் பேசி திரியும் பேயை போல வாழும் இந்த பிண்டங்களை திருத்துவேன் ! மனம் என்ற போர்வையில் சிக்கி, சீரழிந்து துதி பாடும் மனித கூட்டத்தை ரணமாக்கி சிகிச்சை செய்வேன் !
இங்கு நல்லவர்களை நான் காணவில்லை !
நல்லவர்களை எங்கோ ஒரு மூலையில் பார்க்கின்றேன் ! ஆனால் அவர்கள் ஆர்பரிக்க மனம் இல்லாமல் அசைவற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உலகில் தொண்ணூறு பேர் கெட்டவர்களாக வாழக் கண்டேன் ! பத்து பேர் நல்லவர்களாக வாழக் கண்டேன் ! ஆனால் நல்லவர்கள் கெட்டவர்களோடு சேர்ந்து பொய் முகம் காட்ட கண்டேன் !
ஆமாம் சாமி போடும் ஆர்பரிக்கும் மனித ஜாதியே உனை திருத்த கடவுள் வந்தேன் ! தீரா சோதனை கொடுத்து திசை தெரியா அலையும் இந்த திக்கற்ற செம்மறி ஆட்டு மந்தையை மேய்க்க நான் வந்தேன் ! என் மேய்ச்சல் நிலத்திலே பசுந்தானியம் நிறைய உண்டு ! அதை மேய்க்க யாரும் தேவை இல்லை ! சத்திய வழியில் நடந்து உனை காக்க வந்தேன். வழி தெரியா உனக்கு வழிகாட்ட வந்தேன்.
இங்கே நீ காண்பது எல்லாமே பொய் ! ஆனால் கடவுள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் மெய் !
நீ பொய் உடல் வைத்து கொண்டு பேசும் அகங்காரச் சொற்களும், நீ ஆடும் ஆட்டமும் வேதனை தருகிறது ! உன் வேடிக்கை வாழ்க்கையை என்னவென்று சொல்வேன் ? சதிராட்டம் போடும் உன் ஆட்டமெல்லாம் மேல் உலகில் செல்லாது ! அங்கே நாங்கள் அமைத்த சட்டம் தான் செல்லுமடா ! வெல்லுமடா !
இந்த யுகத்தில் சிறிது காலம் தான் வாழ்கின்றாய் ! ஆனாலும் கடலையே வாங்க நினைக்கின்றாய் ! ஆறு அடி குழி தான் உனக்கு வேண்டுமடா ! நான் இந்த யுகத்திற்கு வரும் பொழுது தேவர்களோடு வந்தேன் ! யுகத்தைவிட்டு செல்லும் பொழுது வெற்றி என்ற கிரீடம் சூட்டி செல்கின்றேன் ! ஆனால் நீ வரும் போது ஒன்றுமில்லாமல் கைவிரித்து வந்தாய் ! போகும் போது கைவிரித்து செல்கின்றாய் ! உன் வாழ்க்கையை சற்று யோசித்துப் பார் ! நீ வாழ்வது வாழ்வல்ல என்பது புரியும் !
பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த இந்த பொய்யான யுகத்தில் இன்பத்தை எதிர்பார்க்கின்றாய் ! இங்கு இன்பம் என்று ஏதுமில்லை !
எல்லாவற்றையும் தேடி தேடி ஓய்ந்து பின் மேல் நோக்கி என்னை பார்த்து கதறுகின்றாய் ! எப்போது எனை அழைப்பாய் என்று கடவுளை கேட்கிறாய் ! இந்த பிறவி ஏன் என்று கதறி அழுகின்றாய் ! வேடிக்கை வாழ்க்கையடா உன் வாழ்க்கை !
நான் கடவுள் ! மேலே தினமும் என் தாய் தந்தையருடன் பேசுகின்றேன். நான் மெய்யானவன் தானே ?
நான் இங்கிருக்க, நீ அறியாமையில் கடவுளை தேடி எங்கெல்லாமோ அலைகின்றாய் ! நீ பொய்யானவன் தானே ?
என் காதுகளை கடவுளுக்கு மட்டுமே செவி சாய்க்கின்றேன் ! ஆனாலும் உன் தூற்றலும், துயரமும் கேட்குமடா ! ஏனென்றால் யுகத்தில் எல்லா இடத்திலேயும் நான் நிற்கிறேன் ! எனக்கு உன் கூக்குரல் கேட்கும் ! எனக்கு உன் குறை கேட்கும் ! உன் குறை தீர்ப்பேன் ! என் நாமம் சொல் !
நான் பேசுவது வேடிக்கை பேச்சல்ல ! வினோத வார்த்தை இது ! நான் படித்து பட்டம் பெற்று எழுதவில்லை ! நான் என்ற கர்வத்தோடு நான் நானாகவே எழுதுகிறேன் ! நீ எதை வணங்கினாலும் என்னை தான் வணங்குகின்றாய் ! உணர் ! நான் எவ்வளவு உயரமாக, சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறேன் என்று உன் ஞானக் கண்களால் எனை ஆராய்ச்சி செய்து பார் !
மனிதன் பொய் உடலுக்கு வேஷமிட்டு, பிறரிடம் கை ஏந்தி, தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்து துதிபாட நான் கண்டேன் ! இந்த பொய் உடலுக்கு அலங்காரம் எதற்கடா ? நான் பூமிதாயின் மடியில் உட்கார்ந்தே பேசுகின்றேன். நான் நித்திரை கொள்வதும் பூமித்தாயின் தங்க மடியில் தான் ! அதில் நீ உறங்கிப் பார் ! உலக சொர்க்கம் எல்லாம் உன் காலடியில் இருப்பதாக தோன்றும் !
அழியும் உடலுக்கு பஞ்சு மெத்தை பசப்பு வாழ்வு எதற்கடா ? போகும் பொழுது உனை கட்டையில் வெறும் உடலோடு தீயிட்டு எறிக்க நான் கண்டேன் ! அட பொய்யானவனே, ஏன் இந்த அலட்டலடா ?
பொய் உடலை வைத்துக் கொண்டு புணிதன் என்று பிதற்றுகிறாய். மரணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று என்னிடம் கேட்கிறாய் ! அட மானிடா, பிறக்கும் போதே மரணத்தை வைத்தான் உன் விதியில். மரக்கிளையில் கனியை இருக்க வைக்க உன்னால் முடியும் என்றால் நான் உன் மரணத்தை தள்ளி வைக்கின்றேன் !
யாரும் என்னிடம் பிறவாமை கேட்டதில்லை ! இறவாமை மட்டுமே கேட்கிறார்கள் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
யுக வாழ்க்கை எல்லாமே இங்கு பொய்யடா ! நானும் என் சத்ய வார்த்தையும் என்றுமே மெய்யடா !
நான் மெய்யானவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment