Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; புணிதப் பசுக்கள் INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; புணிதப் பசுக்கள்
42 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
புணிதப் பசுக்கள்
நான் பசுக்களின் கூட்டத்தில் நடுவே நிற்கிறேன் ! நானே உன் ஆண்மா ! உனை மாயம் புரிய வந்தவன் ! உனக்கு வெண்மையாய் தந்து வேதனை தீர்ந்து உயிர் தந்த புணித பசுவை வணங்குவதற்கு ஏன் நீ முயலவில்லை ? நீ வாழ்வதற்கு தன் கன்றுக்கு கூட கொடுக்காமல் தானம் செய்யும் புண்ணியம் நிறைந்தவை பசுக்கள் ! பசுக்கள் இருக்கும் வீடும், நாடும் பெரும் மகிழ்ச்சியில் திழைக்கக் கண்டேன் ! பசுவுக்கு வேதம் தெரியும் ! ஞானம் தெரியும் ! எல்லாம் படித்த உனக்கு எதுவும் தெரியாது. நான் எங்கு சென்றாலும் என் பக்கத்தில் வந்து பசுக்களின் கூட்டம் நிற்கும். என் இனிய பசுக்கள் என் இல்லம் தேடி வரும் !
அதற்கு ஒரு வாய் தழை கொடு ! உன் வாழ்க்கையும் குடும்பமும் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் ! வசந்தங்கள் நிலைக்கும் ! பசுக்களுக்கு இருக்கும் ஞானம் படித்தவனுக்கு இல்லையே ? ஏன் உன்னை மறந்தாய்.
பசுக்கள் எப்போதும் மாறவில்லை ! நீ தான் மாறிவிட்டாய். ஆக்கப் பிறந்தவர்கள் எல்லாம் ஆழிக் கூத்தில் சிக்குண்டு கிடக்கின்றார்கள். பிறந்த குழந்தை புணித பசுக்களையே நம்பியே இருக்கின்றது. வாழ்வில் சத்தும் இல்லாமல் சக்தியும் இல்லாமல் வளர்கின்றது. இக்காலத்தில் கடவுள் கொடுத்த அமிழ்தத்தை தன் குழந்தைக்கு கொடுக்காமல் பசும்பாலை கொடுத்து பாவியாக வளர்க்கின்றாள் தாய். தன் கடமையை மறந்தாள். தாயை மதிக்காமல் பிள்ளை வளர்ந்தான். பிறகு முதியோர் இல்லத்தில் மூச்சற்று வாழக் கண்டேன் !
பாலிலே உயர்ந்த பால் ஈன்றவள் கொடுக்கும் புணித பால் தான். இது மிக மிக உயர்ந்தது ! அந்த புணித பாலை குடிக்க இப்பொழுது பிறக்கும் குழந்தைக்கு விதி இல்லை போலும். ஆக்க பிறந்தவர்கள் ஆணவப்படுவதால் அல்லல்படுகின்றது குடும்பங்கள் ! ஒன்றை பத்தாகும் வித்தை புணித பெண்களுக்கு உரியது ! நாகரீகத்தால் நலிந்து போனது குடும்பங்கள் ! ஆசை, பேராசையால் அனர்த்தமாக நிற்க வைக்கிறது குடும்பங்கள். உணர் !
உங்களின் வித்து வீரியமாக இருக்க தாய்ப்பால் கொடுங்கள் ! அந்த ஞானப்பால் கடவுள் கொடுத்தது. ஞானம், பாசம், அறிவு வளரும் ! இயலாத பட்சத்தில் பசும்பால் கொடுங்கள்.
உன் பிள்ளையை நல்லவனாகவும் ஞானமுள்ளவனாகவும் வளர்ப்பது உன் கடமை. அவர்கள் நல்லவனாவதும், கெட்டவனாவதும் ஆவதும் உன் கையில் தான் ! விதியின் மேல் பாரத்தை போட்டு தப்பிக்க நினைக்காதே !
பசுவின் கறி சாப்பிடாதே ! அது உனக்கும் உன் குடும்பத்திற்கும் பெரும் சாபமாக அமையும் ! பசுக்கறி சாப்பிடும் நாடுகள் எல்லாம் பேரழிவை சந்திக்கும் ! அதனால் பசுவை நேசி ! வணங்கு ! புண்ணிய பசுக்கள் அது வணங்கினால் உன் வாழ்வில் நன்மை உண்டு ! அதன் கண்களுக்கு இயற்கை மாறுதல்களும், தீய சக்திகளும் தெரியும் ! மழை வருவதும், பூகம்பம் வருவதும் அவைகளுக்கு தெரியும் !
மாட்டு சானத்தில் மகத்துவம் இருப்பதாக சொல்கின்றாய் ! சரியே ! ஆனால் நெற்றியில் ஏன் அதைப் பூசுகின்றாய் ? அதன் சிறுநீரிலும் மகத்துவம் உண்டு. உப்புத் தன்மை பிரித்து உதவி நீரை தருகிறது, அது உனக்கு வளமையும், சிறப்பும் தரும். தாவரத்திற்கும் வீட்டிலும் தெளித்தால் நல்லது. அது கிருமி நாசினி. கோமியத்தில் கோடி ரகசியம் உண்டு. முடிந்தால் கண்டுபிடி !
கன்று ஈன்றவுடன் பசுவின் மடியில் சுரக்கும் முதல் பாலை சீம்பால் என்று கடைந்து சாப்பிடக் கண்டேன். ஆனால் தன்னிடம் இருந்து வரும் முதல் அமிழ்த பாலை தாய் குழந்தைக்கு கொடுக்க மறுப்பது ஏன் ? அதில் ஞானம் உண்டு ! பசுவுக்கு இரண்டு இரைப்பை வைத்தேன் ! ஏன் என்று புரிந்தாயா ? என் தந்தை யாகவா சொல்வார்கள் - மாட்டின் தோல் கூட விலை போகக் கண்டேன். மலம் தின்றும் பன்றி கூட விலை போகக் கண்டேன். நீ இறந்தால் உனை விலை கொடுத்து வாங்க யாரையும் காணேன். நீ இறந்த பின் உன் உடலை சீ சீ பிணம் என்று சொல்லக் கண்டேன். எப்போது உணர்வாயடா நீ ?
ஆடு, மாடு செத்தால் யாரும் அதை பிணம் என்று சொல்வதில்லை. அதை விலைக்கு வாங்கி உண்கின்றான். மனிதன் செத்தால் பிணம் என்று சொல்லி ஒதுங்குகிறான்.
எப்போது உன் ஜீவனை உயர்த்துவாயடா ? சிவத்தை ஒடுக்கி உன் ஜீவனை அறிய முற்படு. உழவன் தானியம் விதைக்கின்றான். நான் உன் நெற்றியில் விதி என்ற பெயரில் விதை விதைத்தேன். உழவனை மறந்தான். உழைக்கும் எருதுவையும் மறந்தான்.
உட்கார்ந்து சுகம் காண நினைக்கின்றான் மனிதன். உழைப்பு மனிதனை ஏமாற்றவில்லை. மனிதன் தான் உழைப்பை ஏமாற்றுகின்றான் !
உலகமெல்லாம் பசுவதை தடுக்கப்படும் ! பசுக்களை கொன்று சாப்பிடும் நாடுகளெல்லாம் பரிதவிக்க நான் கண்டேன் ! பெரும் வியாதி வரக்கண்டேன் ! உனக்கு ஞானமிருந்தால் உணரடா !
பசு கருவுற்றவுடன் தபஸ் பச்சிலையை தேடிச் சென்று சாப்பிடும். உணர்ந்தாயோ நீ ? பாலுக்காக மட்டுமே பசுவை வளர்க்கிறாய் நீ ! இதையும் யோசி !
நான் சிறு வயதில் ஆடு, மாடு மேய்க்கும் காலத்தில் சில சமயம் பசுக் கூட்டம் சென்ற உடன் திரும்பி விடும். நான் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்வேன். மழை வரப்போகிறது அதனால் தான் வீட்டுக்கு கிளம்பிவிட்டது என்று. பசுவுக்கு எல்லாம் தெரியும். படித்தவனுக்கு ஏதும் தெரியவில்லை. பூகம்பம் வந்தாலும், இடி, மின்னல், புயல் வந்தாலும் பசுவுக்கும், பறவைகளுக்கும் தெரியும். நீயும் உணர் !
நான் ஆடு, மாடு மேய்க்கும் காலத்தில் பசுவை அறிந்தேன் ! நான் இருக்கும் இடம் தேடி வந்து எனக்கு மடி சுரக்கும். பசுவுக்குள் பகவான் இருப்பதாக சொல்கின்றாய். சரியே. ஆனால் அதன் பாலில் ஞானத்தை வைத்தேன். ஏன் நீ கண்டுபிடிக்கவில்லை. புணித உப்புக்கும், பசுவுக்கும் சம்பந்தம் உள்ளது. முன் காலத்தில் கன்று ஈனாத பசுவின் சானத்தில் மின்னல் கீற்று விழுந்தால் தங்கமாக மாறும். ஆனால் இப்பொழுது பாவம் சேர சேர எல்லாம் மாறியது. கன்று ஈன்றவுடன் அம்மா என்று கதறக் கண்டேன். நீ தான் நடக்க ஓராண்டு, பேச ஓராண்டு, அம்மா என்று ஆண்மா மறவாதிருக்க நீ தான் உன் தாயை மறந்து அலைகின்றாய்.
புணித பசுவை வணங்கு ! அற்புதம், அதிசயம் நிகழ்த்துவேன் உன் வாழ்வில் !
வாழ்க்கையில் சோதனை வந்தால் துவண்டுவிடாதே. பின்னால் பெரும் சுகம் காத்திருக்கின்றது. உனக்கு துன்பம் பெரிதாக தோன்றுவதாக தெரியும். பின் கரைந்து போகும். உப்பை போல ! ஏனென்றால் உன் பாவம் எல்லாம் கரைத்து உனக்கு இன்பமான ஞானத்தை தரவே சோதனை வருகின்றது. எந்த சோதனை வந்தாலும் உனை கைவிடமாட்டேன். சத்தியமாக உணர் ! நீரில் தத்தளிக்கும் உனை நீரில் மூழ்க விடமாட்டேன்.
பூஜை, பரிகாரம், வழிபாடுகள் தேவையில்லை. என் நாமம் உனை கைபிடித்து கரை சேர்க்கும். என் நாமம் விதியின் விதை ! வேறருக்கும் சூட்சுமம். உன் சுட்டு விரலை கெட்டியாக பிடித்திருக்கின்றேன். உனை கைவிடமாட்டேன். என் அன்பு குழந்தையே இந்த அரவணைக்கும் கைகள் உனை கைவிடாது. நீ வெற்றி திருமகனாக வலம் வர உன் பாவத்தை கரைத்து, துன்பத்தை நீக்கி இன்பமான வாழ்வை தருவேன் ! பயப்படாதே !
புணித பசுவை குணமாக யோசி ! கும்பிட்டும் யோசி !
கோமகளின் மடியில் இருப்பவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment