இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நானே சர்வமும் ! நீயின்றி நான் உண்டு ! நானின்றி நீ இல்லை ! நீர் இன்றி நீ இல்லை !
28 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நானே சர்வமும் ! நீயின்றி நான் உண்டு ! நானின்றி நீ இல்லை ! நீர் இன்றி நீ இல்லை ! நீரின் பாசம் நீரை குடித்தவனுக்கு இல்லை ! மீனின் பாசம் மீனை தின்றவனுக்கு இல்லை ! நீர் தான் அழகு ! நீ அழகா என்பதை யோசி !
புனித நீர் !
நீர் இல்லை என்றால் நீ இல்லை !
என் தந்தை சொல்வார்கள் கருவின் உருவாக்கம் நீர் ! கருவை காப்பதும் நீர் ! கருவறையிலும் நீர் ! நீ இருக்க உன் உடலை கழுவவும் நீர் ! நீ இறக்க உனை கழுவவும் நீர் ! நீரில்லாமல் நீ இல்லை ! நானில்லாமல் நீ இல்லை ! ஏனென்றால் நானே நீர் ! இங்கே நீரில்லாமல் எதுவும் அழகல்ல ! பசுமைக்கும், பாழ்பட்ட வயிற்றுக்கும் நீர் தேவை ! நீரை மறந்தாய் ! நிம்மதி இழந்தாய் ! எதை எதையோ வணங்குகிறாய் ! வணங்கி என்ன பலன் கண்டாய் ?
மாயையில் சிக்கி தவித்து மனிதம் இல்லாமல் அலைகின்றாய் ! உன் தாகத்தை தீர்க்கும் தண்ணிரை மறந்தாயே ஏன் ? மயக்கம் தெளிவாக்க நீர் கொடுக்கிறாய் ! நான் நன் நீர் ! என் நாமம் சொல் ! உன் மாய மயக்கத்தை தெளிவாக்குவேன் ! ஆதி காலத்தில் முனிவர்கள் கமண்டலத்தில் நீர் வைத்து, நீர் கொடுத்து எல்லாம் சரி செய்தார்கள் ! ஞானத்திற்கும், தெளிவிற்கும், அறிவு நெறியை புகட்டி உடலுக்கும், மனதுக்கும் நிம்மதி தர நீர் தந்தார்கள். இப்போது மகத்துவம் இல்லா ஏதோ பொருளை கையில் கொடுக்க நான் கண்டேன். எந்த கடவுளை நேரில் பார்த்தாய் ?
ஏதோ கதை படித்து உளர்கின்றாய் ! விபூதியும், குங்குமமும் கொடுக்கின்றாய் ! எங்கும் அக்னி ! எங்கும் சாம்பல் ! எங்கும் யாகம் ! அட மனிதனே ! எதை செய்து எதை அடைந்தாய் ?
நீரை கையால் தொடுவாய் ! அக்னியை உன்னால் தொட முடியுமா ? நீ எதுவும் அறியாமல் புரியாமல் அக்னியை வணங்கி ஆனந்தம் தொலைத்து அலைகின்றாய் ! பூமியில் இருக்கும் போது அக்னியை கொளுத்தி வணங்குகின்றாய் ! பின் மாண்ட பின் அக்னியில் பஸ்பம் ஆகிறாய் ! வெந்து வருகின்ற பாண்டாமாகிய உன் உடலை எதற்காக திரும்பவும் வேக வைக்கிறாய் ? உடலை புதைப்பது தான் சிறந்தது !

கடலை வணங்குகிறாய் ! அதுவோ உன் காலை தொட்டு வணங்க நான் கண்டேன். அந்த ஆகாத நீர் சீறினாலும் நான் அதை அழகென்று நினைக்கவில்லை ! அதை கையளவு அருந்தினாயா? அது மாயத் தோற்றம் ! நான் அதை சுழற்சி செய்து மீண்டும் உனக்கு தருகின்றேன் நன் நீராக !
கடல் நீர் அதன் சுழற்சியால் நன் நீராகி பாவம் தொலைக்க நான் கண்டேன் ! நீயோ அதில் எண்ணற்ற பிணங்களையும், கழிவுகளையும் கொட்டி மாசுமடுத்தி பாவமாக்கினாய் ! அந்த நீர் காற்றின் சுழற்சியில் மேலெழும்பி பின் நன் நீராக பூமியில் விழக் கண்டேன். கடல் நீர் கூட பாவம் தொலைக்க கண்டேன். நீ தான் பாவம் தொலைக்காமல், பாவம் சேர்க்கின்றாய் ! கங்கையில் பிணத்தை போட்டு நீரை மாசுபடுத்துகின்றாய் ! அஸ்தியை நீர் நிலையில் கரைத்து பாவம் சேர்க்கின்றாய் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ?

விண்ஷம் என்ற புனித மரம் ஒன்று இருக்கிறது ! அது மலையில் தான் வளரும். அதை கண்டுபிடித்து அந்த வைர மரத்தின் உள்ளிருக்கும் நீரை குடித்துப் பார் ! ஆகாய பிரபஞ்சம் தெரியும் ! நீ யார் என்று உனக்கு தெரிய வரும் ! நிலத்தின் அடியில் இருப்பது உன் கண்களுக்கு தெரியும் !
நீர் இல்லா நெற்றி பாழ் என்று சொல்லி வைத்தார்கள் ! மனிதன் நீரை தொட்டு நெற்றியில் வைக்காமல் எதை எதையோ நெற்றியில் வைக்கின்றான் ! நீருக்கு தான் திருநீர் என்று பெயர் ! நீ தான் அறியாமல் திருநீர் என்றால் விபூதி என்று உளரக் கண்டேன் !
சித்தர்களின் பாடலை அரை குறையாக படித்து புலம்பித் திரிகின்றான். உனக்கு எதுவும் முழுவதுமாக தெரியாததால் தான் மிகுந்த துன்பத்தோடு வாழ்கிறாய் என்பதனை உணர்ந்து பார் ! நீரை எப்போதும் நெற்றியில் புருவ மத்தியில் வை ! ஞானப் பிரளய சூட்டில் உன் நெற்றிக் கண் வாடும் ! எப்போதும் நீரை தொட்டு வை ! நானே நீர் ! எனை உன் நெற்றியில் வை ! ஞானம் வரும் ! நிம்மதி சத்யமாக உண்டு !
பொறுத்திரு ! நான் உனக்கு என் சத்தியக் கரங்களால் புனித நீரை தருவேன் ! அது உன் உடல் பிணி தீர்த்து, பின் மனப் பிணியையும் தீர்க்கும் ! வேண்டுமென்றால் ஆராய்ச்சி செய் ! நான் உனக்கு தரும் நீர் ஆயிரம் வருடங்களானலும் கெட்டுப் போகாது ! நான் லிங்கத்தையும், விபூதியையும் தரமாட்டேன் . புனித நீர் தருவேன் ! அது உனை புனிதனாக்கும் ! நான் நீரிலே இருக்கின்றேன் ! சலணமற்று ஆர்பரிக்காமல் உனை ஆள்கின்றேன். உணர் !
இனி உலகில் பல நாடுகள் நீரால் அழியும் ! சுனாமி பேரலைகள் அனைத்தையும் சுருட்டிப் போடும் ! பூமியெங்கும் நீர் சூழும் ! நீரின் ருத்ர தாண்டவம் மிக அதிகமாக இருக்கும் ! உலகமெல்லாம் நீரில்லாமல் பஞ்சங்கள் ஏற்படும் ! ஒரு வாய் நீருக்கு ஊரெல்லாம் தேடுவாய் !
இந்தியாவில் ஒரு பக்கம் இயற்கைப் பேரழிவு மிகுதியாக இருந்தாலும் ஒரு பக்கம் செழித்துக் கொண்டிருக்கும் ! கங்கை நதி காவிரியோடு இணையும் ! அது தாமிரபரணியில் சங்கமித்து பசுமை புரட்சியை ஏற்படுத்தும் சத்யமாக ! நானே நீர் ! என்னை நினைப்பவனின் இல்லத்தில் நல் நீரூற்றாய் பொங்குவேன் !
தீர்த்தம், விருட்சம் இல்லா கோயில் இல்லை என்று சொல்கிறாய் ! பின் ஏன் நீரை மறந்தாய் ? ஆதிகாலத்தில் மன்னர்கள் ஏரி, குளம் வெட்டி மக்களுக்கு நலம் புரிந்தார்கள் ! இப்போது மூலைக்கு மூலை கோயில் கட்டி குழப்பத்தில் திரிகின்றான்.

நீர், தரை, காற்று, ஆகாயம் ரகசியமானது ! இந்த ரகசியத்தைக் கண்டுபிடிப்பவன் ஞானியாகிறான் !
நான் நீரில், காற்றில், ஒலியில், ஒளியில் இருக்கின்றேன் ! நீரை உறிஞ்சி குடிக்கும் தாவர, மிருகங்கள் கூட என்னை உணர்கின்றன ! நின்று நீர் குடிக்கும் மானிடப் பிறவியான நீ எனை உணராமல் இருக்கலாமா ?
என் நாமம் சொல் ! உனக்கு நல்ல நீரும், நலம் தரும் வாழ்வும் தருவேன் !
கண்டதையும் வணங்காதே ! நீ கண்டதை வணங்கு ! நீ உண்டதை வணங்கு !
நீரை வணங்கு ! நிம்மதி நிச்சயம் உண்டு !
நான் நன் நீர் ! உனக்கு நலம் தருவேன் !
புனிதமானவன் இநன்யா !
No comments:
Post a Comment