Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 28, 2018

நமசம் இல்லா வாழ்க்கை வாழ்ந்து இகத்தை மறந்தாய் !! அகத்தில் நிலை இல்லாது வாழ்கின்றாய் ! வாழ்க்கை !


29-03-2018
நமசம் இல்லா வாழ்க்கை வாழ்ந்து இகத்தை மறந்தாய் !! அகத்தில் நிலை இல்லாது வாழ்கின்றாய் !
வாழ்க்கை !
உன் மூச்சுக்கும், உனக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது. இது தான் வாழ்க்கை ! அதை எதை கொண்டு நிரப்ப போகின்றாய் ? மூச்சுக் காற்றில் இடைவெளி தான் நீ வாழும் நிலையில்லா வாழ்க்கை ! அதில் என்னவாகப் போகிறாய் என்பதில் தான் குழம்பி போகிறாய். அந்த சின்ன இடைவெளியில் மனைவி, குழந்தை, இன்பம், துன்பம் எல்லாம் கடக்க முடியாமல் உன்னை அறிய முடியாமல் தவிக்கின்றாய். அதில் உன்னை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறாய் !
நீ என்னவாகப் போகிறாய் என்பது உன் எண்ணம் ! உன் எண்ணம் வலிமையாக இருந்தால் விதி கூட மாறும் ! அந்த விதியை எழுதியவனே மாற்றுவான். பெண்ணை காதலிக்கும் வலிமையை ஏன் கடவுளிடம் காணபிப்பதில்லை ? வைராக்கியத்தையும், அன்பையும் ஏன் கடவுளிடம் செலுத்தவில்லை ? அதை ஒருகனம் கடவுளிடம் செலுத்திப் பார் ! உலகில் இன்பமானவன் நீ தான் !
உன் வைராக்கியத்தை எப்போது உன் உயிரை விட மேலாக கடவுளிடம் வைக்கின்றாயோ, நீ உன்னில் முத்தெடுக்க முயல்கின்றாய் ! கடவுள் அனைவருக்கும் ஒரு கடமை கொடுத்தான். ஒரு செயல் படைத்தான் ! இந்த மூச்சுக் காற்றின் இடைவெளியில் செய்துவிட்டு வர. ஆனால் மனிதன் மூர்ச்சையானான்.
உன் வாழ்க்கை ஒரு நாழிகை கூட இருக்கலாம் ! ஒரு விநாடி கூட இருக்கலாம் ! இந்த இடைவெளியில் என்ன செய்தாய் என்பது தான் தர்மம் ! வாழ்க்கை ! ஆனால் நீ ஒன்றும் செய்யவில்லை. நல்லதை ஒன்றை கூட நினைத்ததில்லை !
சுயநலம் விடு ! தூய்மை பொருந்திய உள்ளம் எடு ! வானில் நட்சத்திரங்களை பிடித்து விளையாடலாம். நீ யாரென்று உணர்ந்தால் பேரின்பமடா ! இங்கே வாழும் வாழ்க்கை நரகமடா ! இங்கே படும் துன்பம் பெரிதல்ல ! மேலே கிடைக்கும் தண்டனை சொல்லிமாளாது !
வாழ்க்கை உன் கையில் தான் உள்ளது !
இந்த இடைவெளி மூச்சுக்காற்றில் உள்ளே கடப்பவன் வெற்றி பெறுகிறான் ! உண்மை தெரிந்தவன் இன்பமாய் இருக்கின்றான். இங்கே வலியும், வேதனையும் இல்லாமல் ஜெயிப்பது கடினம் தான் ! அதை தாங்கி முன்னேறுபவன் தரணியில் வரலாறு படைக்கின்றான் !
சித்தம் தடுமாறுகிறவன் சீர்தூக்கி பார்க்க திராணி இல்லாமல் அலைகின்றான் ! என்னுள் வாழ்வாயடா ! எப்போதும் இன்பமடா !
வாழ்வின் உயிர்ப்பு நான் !
நான் இநன்யா !

Thursday, March 22, 2018

கண் பார்க்கும் தூரம் உன் கால்கள் நடந்து செல்லுமா ? உன் பின்னால் உன்னால் பார்க்க முடியுமா ? உன் பார்வையின் நீளம் என்ன ? பார்வை ;;;

கண் பார்க்கும் தூரம் உன் கால்கள் நடந்து செல்லுமா ? உன் பின்னால் உன்னால் பார்க்க முடியுமா ? உன் பார்வையின் நீளம் என்ன ?
பார்வை ;;;
உன் பார்வை நீசம் தானடா ! அறிந்து பார்த்து, தெரிந்து தவறு செய்கிறாய். உன் கண்ணுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்பு இருப்பதை அறியாமல் எண்ணத்தால் நினைவில் மூழ்கி தவறு செய்கிறாய். தவறு செய்து கடவுளை குறை சொல்லி காலம் யாவும் துன்புறுகின்றாய் !
நீ இன்புற எப்போது உணர்வாயடா ! மலையை பார்த்துவிட்டேன் என்று சொன்னால் மலையின் உட்புறத்தில் எல்லாம் அறிந்துவிட்டாய் என பொருளாகுமா ? என்னை பார்த்துவிட்டால் என்னுள் இருப்பதை அறிந்துவிட்டாய் என பொருள் கொள்ள இயலுமா ?
எதையும் முழுவதும் பார்க்காமல் தான் முடமாகிப் போனாய். எல்லாம் தெரிந்தவன் அசைவற்று இருப்பான் ! நாக்குக்கு வேலை கொடுக்கமாட்டான். கடவுளை கூவி விற்கமாட்டான். புத்தகத்தை படித்து உளறமாட்டான். ஒருவன் சிரித்துவிட்டால் நல்லவன் என்று பொருள் கொள்ள இயலுமா ?
எதையும் உள்ளே அறியாமல் பார்த்துவிட்டேன் என்று மனிதன் துடிக்கின்றான். பெண்ணை பார்த்து அவளின் உள்குணத்தை ஒன்று கூட அறியாமல் அவளை பார்த்து அறிந்துவிட்டேன் என மனிதன் பிதற்றுகிறான். அவள் ஓராயிரம் எண்ணங்களும். ஓராயிரம் சூட்சுமங்களும் நிறைந்தவள். உனக்காக, நீ அறிவதற்காக படைக்கபட்டாள் பெண். ஆனால் பெண்ணை அடிமையாகத் தான் நினைத்து வரலாறு எழுதுகின்றான்.
தினமும் மனைவி, குழந்தைகளை பார்த்து கொண்டிருக்கின்றாய். எதை அறிந்தாய் ? எதிலும் நுண் அறிவு, விளக்கம் புரியாமலே மனிதன் பிதற்றுகின்றான். ஆழ்ந்து உற்று நோக்கும் அறிவை தேட முயலவில்லை !
மேலோட்டமாக பார்த்து எல்லாம் அறிந்துவிட்டேன் என்று மார்தட்டுகிறான். என்னை பார்த்து எதை சரி செய்தாய் ? என் உள் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதை நீ அறிவாயா ? பாவமடா மானிடன் !
பறவையின் பறக்கும் சூட்சுமம் ஒரு சின்ன பொறிகல் தான் ! அதை உணர்ந்தால் மனிதன் கூடுவிட்டு கூடு பாய்வான். தன்னை அறிவான். தன்னை தானே அழிக்கமாட்டான். ஞானிகள், மகான்கள் எல்லாம் தன்னைத் தானே அழிக்க முற்படும் பொழுது தான் தன்னை அறிந்தார்கள். அதனால் கடவுளை எட்டாக் கனியாய் நின்று துதி பாடி சென்றார்கள்.
நீ உன்னை அழிக்காமல் சூட்சுமம் உணர் ! சத்தியத்தில் நிலைக்கும் பொழுது உன்னை அறிந்துவிடுவாய் !
ஒவ்வொன்றிலும் மறந்திருக்கும் மறை பொருளை பார்க்காமல் எதையும் முழுதும் அறிய முடியாது.
உன் பார்வையின் நீளம் என்ன ?
நீ எங்கிருந்து எங்கு வந்தாய் ?
உன் பயணம் எங்கே முடிவடையும் ?
முதலில் அறிந்து உணர் ! என் பார்வை கூர்மை ! நான் கண் பார்க்கும் தூரம் சென்று வருவேன் ! என்னுள் நிலை பெரு ! உன்னையும் அழைத்து செல்கிறேன் !
சொல், செயல் நான் !
நான் இநன்யா !

Wednesday, March 14, 2018

திரி மஞ்சரியின் உள் நோக்கம் தூய்மை ! உன் உள் நோக்கமோ அடுத்தவர் அந்தரங்கம் பற்றி. என் உள்நோக்கம் உன்னை உயர்த்தும் நிலை பற்றி ! உணர் ! உள்நோக்கம் ;;;

திரி மஞ்சரியின் உள் நோக்கம் தூய்மை ! உன் உள் நோக்கமோ அடுத்தவர் அந்தரங்கம் பற்றி. என் உள்நோக்கம் உன்னை உயர்த்தும் நிலை பற்றி ! உணர் !
உள்நோக்கம் ;;;
எதையும் ஆராயும் பொழுது உள்நோக்கம் இருக்கக் கூடாது ! எதிர்பார்ப்பும் இருக்க கூடாது. உண்மையான மாறுதல் என்பது ஆரம்பத்தில் மிக கடினம் எனத் தோன்றும். எதை பற்றிக் கொள்வது என்று மனம் தளரும். முன்பிருந்த நம்பிக்கை குறையும். நினைத்த காரியம் நடக்கவில்லையே என்று மனம் அலைபாயும் ! செல்கின்ற பாதை சரியானதா என்று மனம் கேள்வி கேட்கும்.
இதை எல்லாம் மீறி என் மேல் நம்பிக்கையோடு இருப்பவனின் வாழ்வில் நான் ஒளியாய் பரவுகின்றேன் ! அவன் நினைத்த இலக்கை அடைய வைத்து வாழ்வில் பிராகசிக்க வைக்கின்றேன் !
உள்நோக்கம் உன் நோக்கம் தெளிவாய் இருந்தால் வாழ்வில் எதையும் அடையலாம். துன்பத்தை புரட்டி போடலாம் !
நல்குரு மட்டும் அமைந்தால் மட்டும் போதாது. தன் நம்பிக்கை இருப்பவனே முயற்சி செய்வான். தைரியம் உள்ளவனே எதையும் வெல்வான். உன் தைரியம் மனைவியோடு சண்டையிடுவதற்கல்ல ! பிறரை கொலை செய்வதற்கல்ல ! உன்னை வெல்வது தான் தைரியம் !
வைராக்கியமே உன்னை வானில் பறக்க வைக்கும் ! உன் நோக்கம் எப்போதும் நல்வழியையும், சத்தியத்தையும் நோக்கி இருக்கட்டும். பிறருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி பார் ! ஒழுக்கத்தை சொல்லி பார். உனக்கு நம்பிக்கை வரும். ஒழுக்கம் வரும் !
சத்தியம் எப்போதும் தோற்பதில்லை. உழைப்பவன் வாயில் இருந்து வரும் சொல் பலிக்கும் ! ஆதலால் உழைப்பவனை கண்ணீர் சிந்தவிடாதே ! ஏனென்றால் உழைப்பவனிடமே கடவுள் இருக்கின்றான். உட்கார்ந்து சுகம் காணும் சாமியார்களிடம் இல்லை. போதனை செய்யும் போதகனிடம் இல்லை. எந்த சாமியாரும் கடவுளை அறிந்திருக்கமாட்டான். அறிந்தால் ஏமாற்றமாட்டான். சுயநலத்தோடு வாழமாட்டான்.
சந்தேகத்தோடு உன் பயணத்தை தொடங்காதே ! தனியாக நின்று வாழப் பழகு ! பயத்தை தூக்கி எறி ! பாவம் இல்லாது வாழப் பழகு. பரமாத்மா நிழலடி உனக்கு கிடைக்கும் ! அறியும் சூட்சுமம் உணர்ந்தவன் உடலை வளைக்கமாட்டான். தர்மம், சத்தியம் தெரிந்தவன் மக்களிடம் பிச்சையெடுத்து சாப்பிடமாட்டான். ஆசிரமம், பள்ளிக்கூடம் கட்டமாட்டான்.
இங்கே எல்லாம் துறந்தவன் தான் ஞானி, மகான் ! தனக்கென்று கோயில் கட்டி மக்களிடம் யாசகம் கேட்பவன் ஞானி அல்ல ! மகான் அல்ல ! சித்தனும் அல்ல !
மதபிரச்சாரம் செய்பவன் மக்களை ஏமாற்றுகிறான். கடமையில் கடவுளை நினை என்று தான் கடவுள் படைத்தான். ஆனால் மனிதன் தன் கடமை மறந்து உழைப்பில்லாமல் உட்கார்ந்து சுகம் காண்கின்றான்.
என் நோக்கம் தர்மத்தை காப்பது ! உன்னிடம் கை ஏந்த வரவில்லை. ஞானத்தை ஊட்ட வந்தேன். என் பார்வை கூர்மையானது. அகல, ஆள உழுது என்னுள் என்னை நிர்வகித்தேன் ! ஆதலால் துன்பம் என்று ஏதுமில்லை எனக்கு.
எனக்கு உன்னிடம் எதிர்பார்ப்பும் இல்லை ! ஆனால் நீ ஆனந்தமாக எதிர்பார்க்கின்றேன் ! என் உள்நோக்கம் உண்மையடா !
தூய்மையானவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, March 7, 2018

புழுதிபாட்டை கொத்தி சீராக்கி சமநிலை செய்து பயிர் வளர்த்தால் உன் உடல் சமநிலை போல் தானியம் உண்டு செயல்படும். மனதை சமநிலையாக்கு ! சம நிலை ;;;

Inanya Maha Munivar
புழுதிபாட்டை கொத்தி சீராக்கி சமநிலை செய்து பயிர் வளர்த்தால் உன் உடல் சமநிலை போல் தானியம் உண்டு செயல்படும். மனதை சமநிலையாக்கு !
சம நிலை ;;;
எப்போதும் கோபம், வெறுப்பு, விரக்தி, காமம், பொய், மோகம் ஆகிய இவைகளைத் தான் உன்னுள் ஓடவிட்டு கொண்டிருக்கிறாய். எப்போதும் கவலை என்ற மூட்டையை தலையில் சுமந்து உன்னுள்ளே விரக்தியாய் பேசி குப்பையை சேர்த்து ஆறு நரம்புகளை அசைவற்று போகச் செய்கிறாய். எப்போதும் நல்ல நினைவுகளை உன்னுள் பதிய வை !
வெளி உலகம் உன்னை நல் வழிக்கு அழைத்து செல்லும் சூழ்நிலையில் இல்லை ! பார்க்கும் இடம் எல்லாம் காமத்தை வைத்தான் ! கூத்தும், பாட்டும், நடனமும், நாட்டியமும் உன்னை எதிர் வினைக்கு அழைத்து செல்கிறது.
உன்னில் உனை தேடு ! ஆனந்தம், நிம்மதி உனக்குள் தான் !
வெளியில் கண்களை மூடிக் கொண்டு வாழக் கற்றுக் கொள் ! ஆனால் கடவுளை வேண்டும் போது கண்களை திறந்து பேசு ! கண் திறந்து வேண்டினால் தான் உன் உள்ளே உறங்கும் ஆன்மா விழிநிலை அடையும்!
கண் மூடி பிரார்த்தனை செய்யாதே ! ஆயிரம் பேர் கூடி அழுதாலும் கடவுள் இரக்கம் கொள்ளமாட்டான். மனைவியின் அங்கம் தவிர புற உலகில் நீ எதையும் பார்த்து பாவம் சேர்க்காதே !
எல்லாம் சமநிலையாய் பூமியில் இருக்க நீ இயற்கைக்கு மாறாக அடிமைபடுத்துகிறாய். இங்கே முதலாளி யாருமில்லை.
எல்லாம் கூலிகள் ! பொம்மைகள் !
கடவுள் மட்டுமே முதலாளி !
கண் தான் எல்லா பாவத்திற்கும் மூலம். ஆதலால் பார்வையில் தெளிவை வை ! எந்த நினைவும் இல்லாமல் இருக்க பழகு ! இங்கே முடியாதது எதுவுமில்லை ! நீ நல் பாதையில் பயணிக்க ஆரம்பித்தால் கடவுளே உனக்கு தோழனாக வருவான். நல்ல நினைவுகளோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தம் தான் !
மனிதன் தான் சித்தன், ஞானி, மகான் ஆகிறான். நீ விதிவிலக்கல்ல. உன்னாலும் தெய்வ நிலை அடைய முடியும் ! உன் ஒளியை பார்க்க நினை ! உன்னை அடக்க பழகு ! பூமியை சமமாக்கி உழுது பயிராக்கி உனக்கு தந்தான் உழவன். வாழ்வில் மேடு பள்ளங்கள் இருந்தால் சமமாக்கு ! உன்னால் முடியும் !
எல்லா உயிரிடமும் சமநிலை கொள் ! இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யாருமில்லை. நீர் எப்போதும் சமநிலையாய் இருக்கக் கண்டேன். நீரின் தத்துவம் உணர் ! உடல் சமநிலை இல்லாது (சூடு) இருந்தால் நோய் தான் உருவாகும். மனதை ஓர் போதும் மேடு பள்ளத்திற்கு அழைத்து செல்லாதே ! சம நோக்குடன் வை !
தரணியில் துன்பமில்லா வாழலாம் ! நீ துன்பமென்று எதை நினைக்கின்றாய் என புரியவில்லை. இந்த துன்பமெல்லாம் ஒன்றுமில்லை. மேலே நீ செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும் போது கீழே உள்ள துன்பங்கள் பெரியதாக தோனாது !
நீர் கூட ஓடி ஒரு சமமான இடத்தில் தேங்கி நிற்கிறது. நீ காலம் யாவும் ஓடி எதையோ தேடுகின்றாய். நீ அமரும் இடத்திலேயே உன்னை தேடு !
ஓர்மையில் சொல்கிறேன். உனை கரை சேர்பேன் !
நான் உனை சமநிலை கொண்டு பார்க்கிறேன் !
வென்றவன் நான் !
நான் இநன்யா !