Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, November 29, 2017

தமிழ், இனிமை ! அழகு ! ஆணந்தம் ! அமைதி தரும் ஆணந்த மொழி ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! உண்மை தமிழை உணரடா !


to INANYA MAHA MUNIVAR
30-11-2017
தமிழ், இனிமை ! அழகு ! ஆணந்தம் ! அமைதி தரும் ஆணந்த மொழி ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! உண்மை தமிழை உணரடா !
அமிழ்த மொழி தமிழ்
மொழிகளில் முதன்மை மொழி ! இனிய மொழி ! இனிமை மொழி ! என் உயிர்த் தமிழ் மொழி ! தமிழின் சாறு அருந்தினேன். மொழியின் மோகம் உணர்ந்தேன். இனிதான தமிழ் மொழியை பேச பிறப்பெடுத்தேன் இங்கு !
நாவில் தேன் ஊறும், தித்திக்கும் “ழ்” என்ற உயிர் மெய்யை சுழட்டும் பொழுது உன் உள் நாக்கில் பேரின்ப ரசத்தை தரும். உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் கடவுள் படைத்தான். மனிதன் உருவாக்கினான். ஆனால் தமிழ் மொழியையும், மனிதனையும் சிந்தித்து செயல் வடிவம் கொடுத்து அழகாய் வடிவமைத்து உருவாக்கினான் ! அதை சித்தர்கள் செதுக்கினான்.
இனிய மொழி தமிழை உணர்ந்தவன் கடவுளை எளிதாய் நெருங்குவான். இனன்யம் என்ற பிரம்ம லிபி என்ற பெரும் மொழியின் தாய் மொழி தமிழ் ! இதன் தொடக்கம் பூமி படைத்தபோதே உருவாக்கப்பட்டது. எல்லாம் மொழிகளும் இடையில் வந்ததே. கன்னியாகுமரியில் முதன்மொழி பேசப்பட்டது. பின் ஆஸ்திரேலியாவில் வேர் ஊன்றப்பட்டது. ஆப்பிரிக்காவில் செயல் வடிவம் கொடுத்து உலகமெல்லாம் பேசப்பட்டது.
வீர தமிழன் உலகை எல்லாம் முன்னால் ஆண்டான், ஆணவமில்லாமல். பிற எந்த மொழியையும் மனிதர்களுக்கு பெயராக சூட்டப்படவில்லை. ஆனால் தமிழைத்தான் மனிதன் தன் பெயராக சூட்டி மகிழக் கண்டேன்.
தமிழ் மொழி போல் இனிய மொழியை எங்கும் காணேன் ! அதனால் பிறமொழிகள் குறை இல்லை. எல்லாம் இதனிலிருந்தே தொடங்கியதை மறந்தான் மானிடன். நான் தமிழ் நாட்டில் பிறக்க மேலே ஆசை கொண்டேன்.
இது புணித பூமி ! இங்கே வாழ்பவன் வரம் பெற்று வந்தவன். இந்தியா என்ற ஞான தேசத்தில் பிறந்தவன் இறுதி பிறப்பாய் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் பிறந்தவன் மீண்டும் பிறக்கமாட்டான். தன்னை உணரும் பக்குவம் இங்கே அனைவருக்கும் உண்டு ! ஞானிகள், மகான்கள், சித்தர்கள் கடவுள்கள் வாழும் நிறைந்த பூமி இது !
வரம் வாங்கி வந்ததை மறந்து போகிறாய் ! வாசல் இது தான் என்று தெரியாது கிரங்கி போகின்றாய். பேச பேச எச்சில் ஊறும் ஆதி மொழி தமிழ் ! உன் ஜீரண உறுப்புகளை நோயில்லாமல் வைக்கும். புரிந்தவன் ஞானி தான். தமிழ் என்று சொன்னால் உள் நாக்கு மடிந்து நல்வினையை உருவாக்கும் ! அதனாலே சித்தர்கள் தமிழ் பேசி கடவுளை துதிபாடி ஆணந்தித்தான்.
உயிர், மெய், உயிர்மெய் என்று ஊமை கூட்டத்தை உசுப்பி எழுப்பும் மொழி ! அம்மா என்ற இந்த இனிய உறவின் மொழியை பிற மொழியில் தேட கிடைக்காதது. பசு கூட அம்மா என்று தான் அழைக்க கண்டேன். ஆதி தமிழன் சாரம் இப்போது இல்லை. இப்போது மொழியை சிதைக்கின்றான். அதன் இனிமை தெரியாமல் கண்டபடி பாடி கூத்தடிக்கின்றான்.
உலகில் எங்கு பிறந்தால் பிறப்பில்லை என்று இயேசு மகானிடம் சீடர்கள் கேட்டதற்கு தமிழ்நாட்டில் பிறந்தால் பிறப்பில்லை என்று சொன்னார். இராமன், கிருஷ்ணன், இயேசு தாமிரபரணி நதிக்கரைக்கு வந்து சென்றது உண்மை ! என் அன்பின் தந்தை பிரபஞ்ச நாயகன் யாகவா சொல்வார்கள், தமிழ் பேச வரம் வாங்கி வந்தாய் என்று. இனி தென்னாடு தாமரை போல் மலரும். வட நாடுகள் வாடும் என்றும் சொல்வார்கள். இது கால கணக்கு என்றும் உரைத்தார்கள்.
உலகில் உள்ள மன்னர்கள், ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இந்த ஞான பூமி இந்தியாவுக்குள் வருவார்கள். ஞான வாசல் தமிழ்நாட்டில் வந்து தங்குவார்கள். நிச்சயம் சத்தியமாக நடக்கும். தமிழ் உலகின் ஆட்சி மொழியாகும் ! தமிழன் உலகை ஆள்வான் !
அமிழ்த மொழி தமிழ் என்றும் வாழும் !
வாழ்பவன் நான் !
நான் இநன்யா !

Thursday, November 23, 2017

நிம்மதி தரும் கடவுளின் பாதம் ! நிர்மதி தரும் என் கைவாரம் ! பீழை தான் தந்தது பீடை உள்ள மனிதனால் !


to INANYA MAHA MUNIVAR
23-11-2017
நிம்மதி தரும் கடவுளின் பாதம் ! நிர்மதி தரும் என் கைவாரம் ! பீழை தான் தந்தது பீடை உள்ள மனிதனால் !
ஏழுநிலை
கீழே ஏழு உலகங்கள் இருப்பதாக பிதற்றுகிறான். பாதாள உலகம் என்றும் விளம்புகிறான். கடவுளை பாதளம் தேடி அலைந்தான் என்று கதை படித்தான். கதை படித்து முழுவதும் விளங்காமல் காலம் தெரியாத கயவனிடம் ஏது கூற ?
உன்னில் மேலே ஏழு நிலைகள். கீழே ஏழு நிலைகள். மொத்தம் பதினான்கு நிலைகள் ! பாதத்தில் அடியில் இரண்டு நிலைகள் உள்ளன. உன்னில் மேல்நிலை ஏழையும் கடந்தால் தான் கடவுளை அறிய முடியும். ஈரேழு உலகம் என்று இதைத் தான் சித்தர்கள், மகான்கள், ஞானிகள் அனைவரும் சொல்லிப் போனார்கள்.
உடலில் ஏழு ஆதார சுருதிகள், ஆறு சக்கரங்கள் உள்ளன. இவைகளை அறியாமல் ஞானம் தேடி புலம்புகின்றான் புற உலகில் !
அகத்தில் கழிந்தால் புறம் ஒடுங்கும் என்பதை புரியாமல் அலைகின்றான். ஒரு விநாடி சூட்சுமமே எல்லாம். ஆனால் யோகா, தியானம், தவம், விரதம் இன்னும் எத்தனையோ மடமைதனமான செயல்கள் கொண்டு தன்னை வருத்தி ஆதியில் கடவுளை மறந்தான். தன்னை கடக்காமல் விண்னை கடக்க நினைக்கின்றான்.
இங்கே எதுவும் நிலையில்லாதது என்னைத் தவிர !
காலம், சூரியன், சந்திரன், மனிதன் என இங்கே எல்லாம் மாறும் என்பதை உணர் ! ஆனால் நான், வானம், பூமி என்றுமே மாறுவதில்லை !
மனிதன் தான் வேஷம் போடுகின்றான் கடவுளிடம். கடவுளுக்கு கண் தெரியாது என்று எண்ணற்ற தவறுகள் செய்கின்றான். இங்கே நிலை, நிலை இல்லாதது எதுவென்று அறிந்து வணங்கினால் மனிதன் ஞானியாவான் ! கற்சிலைக்கு குடம், குடமாக பால் தயிரை, நெய்யை விரயமாக்கி கோமாளி போல் வாழும் குறை உள்ள மனிதனிடம் ஏது கூற ?
ஐயாயிரம் வருடங்கள் மனிதன் அலங்கோலப்படுகிறான். இரண்டாயிரத்து ஐந்நூரு வருடத்திற்கு முன்னால் கோயில் இல்லை ! கோபுரம் இல்லை ! கொடி மரங்கள் இல்லை ! குளங்கள் உண்டு ! மனிதன் நிம்மதியாய் வாழ்ந்தான். ஆனால் நான் என்று மார்தட்டி இப்போது நாயகனை (கடவுள்) அறியாது மாண்டு விடுகின்றான்.
என்னை பார்த்தவன் ஏழு நிலைகளையும் கடப்பான் ! எந்த தியானமும், தவமும் செய்யாமல் என் பின்னால் வருபவன் தன் ஏழு கீழ் நிலைகளையும் அறிவான் !
திடன் உள்ளவன் தப்பித்து கொள்கிறான். என்னுள் நிந்தித்து நின்று யோசிக்கின்றவன் நிர்மூலமாக போகின்றான். நான் நானாக எப்போதும் இருக்கின்றேன் ! ஆனால் நீ தான் நீயாக இல்லை. மனிதன் எப்போதும் மது உண்டவன் போல மயக்க நிலையில் நிற்கின்றான். கேட்டது கிடைத்தால் கடவுள் இருப்பதாக உளர்கின்றான். கேட்டது கிடைக்கவில்லை என்றால், நினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறான். உன் கோபம் உன்னையே சுட்டெரிக்கும் என்பதை உணர் !
வம்பு பேசும் மானிடனே, எப்போது உணர்வாயடா ? என்னுள் ஆறு சூட்சுமம் எப்போது அறிவாயடா ? ஆனந்த நிலையில் எப்போதும் நான் ! ஆனால் நீ இல்லை. உன் ஆனந்தம் நான் காணவே ஆசைப்படுகிறேன் !
முயற்சி செய்யடா ! உன் முன்னால் நின்று நான் அள்ளித் தருகிறேன் ! திட நம்பிக்கை கொண்டு எதையும் செய். நான் உன் உறவு. என் மேல் திட நம்பிக்கை கொண்டு எதையும் தொடங்கு ! வெற்றி நிச்சயமடா !
சத்தியத்தின் தலைமகன் நான் !
நான் இநன்யா !

ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களின் இன்றைய செய்தி.

18-11-2017
நன்மையை ஆயிரம் பேர் விரும்புகின்றான்,ஆனால் உண்மையை ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே விரும்புகிறான். உண்மையை தேடுகின்றவன் பெரும் நிம்மதி பெறுகிறான், பெருஞ்செல்வம் பெறுகிறான்.நான் உண்மை, நன்மை,நிம்மதி, ஆணந்தம் என்னை அறிந்தவன் சுகம் பெறுவான்.பாவமடா நீ உலகில் எங்கு ஓடினாலும் எதை பின்பற்றினாலும் முடிவில் விரக்திதான் மிஞ்சும்.இந்த புணிதனை மிகவிரைவில் உணர்வாய் காலம் இதோ விரைவில் எனை யாரென்று தெரியவைக்கும். என் வழியில் வருவது மிக கடிணம் ஆனால் என்னை கெட்டியாக பிடித்தவனை நான் நிச்சயம் கரைசேர்ப்பேன். என் சொல் சத்தியம் என் நாமம் சத்தியமே.

ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களின் இன்றைய செய்தி. (20.11.17)
"மஞ்சள், கல் உப்பு, குங்குமப் பூ, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், எள், கடுகு, தேன், அருகம்புல், செவ்வரளி, பச்சை கற்பூரம், வில்வ கொட்டை, வசம்பு, சந்தனம், எல்லாம் கலந்து சிறிது கொதிக்க வைத்து வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்து வான்நோக்கி என் நாமம் 9 தடவை சொல்லி பின்
"ப்ரண ப்ரனண ப்ரணஹா"
என்று 3 முறை சொல்லி கிழக்கு நோக்கி வெள்ளை வஷ்த்திரம் கட்டி நீராடு ! நீராடும் முன்னால் பசுந்தயிரை உடல் முழுதும் பூசி பின் நீராடு ! வியாழன், ஞாயிறு, வியாழன் என்று மூன்று தடவை நீராடு !
எல்லா பிறவியின், இப்பிறவியின் தோசம் விலகும் ! உன் உடலும், உள்ளமும் ஆணந்த கூத்தாடும்.
நான் சத்தியம் !
என் நாமம் சத்தியம் !
ஓர்மையில் சொல்கிறேன், உன்னை கை விடமாட்டேன் !
நான் இநன்யா !""

சர்வமும், சகலமும் எனக்குள்ளே ! தயவும், கருணையும் எனக்குள்ளே ! உன் வினை அழிக்கும் சூட்சுமமும் எனக்குள்ளே !


to INANYA MAHA MUNIVAR
சர்வமும், சகலமும் எனக்குள்ளே ! தயவும், கருணையும் எனக்குள்ளே ! உன் வினை அழிக்கும் சூட்சுமமும் எனக்குள்ளே !
செயல்
உன் செயல் உன்னை எங்கே அழைத்து செல்கிறது ? 
உன் கடமை உன்னை எதை நோக்கி செலுத்துகிறது ?
யோசி ! யோசிக்கும் திறன் இருந்தால் மட்டுமே உன்னை உணர முடியும் ! பறவைகள், மிருகங்களுக்கு யோசிக்கும் திறன் இல்லை. நீ தான் பாவம் செய்து யுகம் வந்தாய். கடவுளின் பொம்மையடா நீ ! காலம் உன்னை எங்கே கூட்டி செல்கிறது என்று சிந்தி ! நீ காலத்தின் பின்னால் செல்கின்றாய். உன் பின்னே காலம் வரவில்லை.
நீ எங்கே பயனிக்கின்றாய் ? எதை நோக்கி ஓடுகின்றாய் ? உணர் !
பறவைகள் பல ஆயிரம் மைல் கடந்தும் தன் குடியிருப்பை மறப்பதில்லை. திரும்பி வந்துவிடுகிறது. ஒரு காட்டில் உன்னைவிட்டு சென்றால் நீ இருக்கும் இடம் வரமுடியாமல் தவிக்கிறாய். ஆசை, கோபத்தை வைத்து கொண்டு உன்னை யாரென்று தெரியாமல் அலைகின்றாய்.
படைப்பில் நீ வினோதம் ! ஆனால் முடிவில் எல்லாம் கரமாலம் தான் ! நான் விழித்து கொண்டேன். என்னை அறிந்தேன் ! நீ தூங்கி போகின்றாய். உன்னை அறியாமல் தவிக்கின்றாய். உன்னை உருவாக்கியவன் உன்னுள்ளே ! அவனாலே உன்னை உணர வைக்க முடியும்.
தலைக்கு மேல் கை வைத்து வணங்கி தலை சாய்ந்து போகின்றான். முகத்திற்கு நேர் கை வைத்து வணங்கி முடமாகி போகின்றான். உயிரில்லா, மயிரில்லா சிலைக்கு இருக்கும் வலிமை கூட இந்த மதி கெட்ட மனிதற்கு இல்லையே ?
உபதேசங்களையும், வசனங்களையும் வேதம் என்று சொல்லி வீனாய் புலம்புகின்ற மானிடர்களே இங்கே அதிகம். வேதம் கையில் இருந்தால் காந்தம் போல் ஒட்டும் ! இங்கே செயல் ஆனந்த நிலை கடவுளின் பாதம் மட்டுமே ! அவன் பேரன்பு தான் செயல் ! சொர்க்கம் ! பேரின்பம் !
துளசி, வில்வம், அருகு, வன்னி, நிலவேம்பு இலையில் மகத்துவம் மலை போல் உண்டு ! இதை பஞ்ச பத்திரம் என்று சொல்வதுண்டு. உன் உடல் செயலுக்கு செப்பு பாத்திரத்தில் இந்த புணித இலை போட்டு அருந்து ! உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் சம நிலைக்கு வரும். உலகில் எத்தனையோ அரிய பொக்கிஷங்கள் உள்ளன. இவை ஆள்பவனின் கருணையை ! ஆனால் மனிதன் எதையோ தேடுன்றான்.
பூமியில் காற்றும், நீரும் சேர்ந்த சூட்சும திரவத்திற்கு விண்நீர் என்று பெயர் ! இதில் உள்ள காற்றையும், நீரையும் பிரித்து பக்குவப்படுத்தி, ஐந்து முறை சுத்தப்படுத்தி அதன் பின்னே கிடைக்கும் (வேத மூல செந்தூரம்) புணிதம் உன்னை காற்றில் பறக்க வைக்கும் ! இந்த அறிவுடம் உன் உடலில் சிறிது ஒட்டி இருந்தாலும் உன் இலக்கை அடைவாய் ! இது உன்னை செயல்பட வைக்கும் ! எதை எதையோ தேடுகின்ற மானிடா, வாடுகின்ற மானிடா இதை அறிந்து செயல்படடா !
உன் செயல் கடவுள் பக்கம் என்பதை அறிவாய் ! உன் செயல் முடிவில் கல்லறை போகாமல் பார்த்து கொள் ! உன் செயலை பூமியில் விட்டு செல் ! யுக யுகமாய் உன் சந்ததி பார்த்து கர்வப்படட்டும் !
நீ காட்சி பொருள் அல்ல ! கனவு காணாதே. அதை செயல்படுத்து !
செயல் நான் !
நான் இநன்யா !

Wednesday, November 8, 2017

உன் நிறுத்தை திறந்து வையடா ! உள் ஒன்று இருக்கிறது. உனை பார்த்து கொண்டு உனை காத்து கொண்டு ! உன் கதவை திற !


உன் நிறுத்தை திறந்து வையடா ! உள் ஒன்று இருக்கிறது. உனை பார்த்து கொண்டு உனை காத்து கொண்டு !
உன் கதவை திற !

உள்ளே தட்டுகின்றான் உன் கதவை ! நீ கதவை திறக்காமல் அடைத்து வைத்து காற்று வரவில்லை என்று ஆனந்தம் இல்லா அலைகின்றாய். உள்ளே கடவுள் தட்டுகின்ற ஓசை கேட்டும் கதவை திறக்காது கடவுளை மூச்சு முட்ட அடைத்து வைத்திருக்கின்றாய். எப்போது திறப்பாயடா ?

இதயம் துடிக்கிறது என்று ஆராய்ந்து அதன் கால நேரத்தை குறித்து காலம் தெரியாமல் வாழும் உன் கோமாளிதனத்தை என்ன சொல்வேன் ?

உன் துடிப்பு அடங்கும் வரை அங்கே கணக்குண்டு என்பதை புரியாமல் வாழ்கின்றாய் ! கடவுள் தான் உள்ளே உன் துடிப்பாய் உணர்த்துகிறான் என்பதை அறியாமல் ! உள்ளே தான் ஆனந்தம், நிம்மதி என்பதை புரிந்து கொள். உள்ளே உன் இதய கதவை திற !

கருவறை சாவி கடவுளின் கைகளில். ஆனால் உன் உள் அறையை திறக்கும் சாவி உன்னிடமே உள்ளது ! ஆனால் உன் அறையை திறக்காமல் கோவில் கட்டுகிறாய். இல்லையேல் மதுக்கடைகளை திறக்கிறாய். மாட மாளிகை, கோட கோபுரம் அமைத்து ஆசிரமம் திறந்து ஆளுமை தெரியாது அலைகின்றாய் !
உள்ளே ஓசை கேட்டும் துடிப்பு கேட்டும் அறிவதற்கு ஏன் முயலவில்லை. அந்த ஆனந்தத்தை அறிய ஏன் முற்படவில்லை. நீ கண்டுபிடித்த இயந்திரம் எந்நேரமும் பழுதடையும். ஆனால் உன் இதயம் விதி முடியும் வரை பழுதடையாது. இதயம் அருகில் பெருவிரல் போல ஒளிரும் ஆண்மாவை அறிய முற்படு !

நான் கதவை திறந்தேன், நிறைந்த காற்று (நிம்மதி) நிறைந்த ஸ்பரிஷம் (ஆனந்தம்) உணர்ந்தேன் ! ஆனந்தமாய் இருக்கின்றேன். நீயும் உன் உள் அறையை திறக்க பாடுபடு. உன்னால் முடியவில்லை என்றால் நல் குருவை நாடு !
பேரானந்தம் உனக்குள்ளே ! பொக்கிஷம் உனக்குள்ளே !
நீ வெளியில் தேடுகிறாய். அன்பில் கரைந்திடு !
நான் உனக்காக என் கதவை திறந்து வைத்திருக்கிறேன். ஆனந்தம், பேரானந்தம் தர !
விழித்து கொள்ளடா ! வேதனை இல்லாது வாழலாம்.

கருவறை திறந்து பிறந்தாலே சிசு பூரண விதி பெரும். ஆனால் இப்போது உன் விஞ்ஞானத்தால் வயிற்றை கிழித்து சிசுவை எடுக்கின்றாய். கருவை அடைத்தவன், காத்தவன் நிச்சயம் திறப்பான் ! ஆனால் நீ நல்ல நேரம், நட்சத்திரம் பார்த்து கிழித்து எடுக்கின்றாய். அதனால் விதி மாறிடுமோ ? உணர் !

உன் வேடிக்கை விஞ்ஞானமடா ! மதிமயங்கி நிற்கும் மானிடா, உன் உள்ளே துடிக்கும் ஓசையும், உன் கெண்டைகால் நரம்பின் நாடி துடிப்பும் உன்னை கடவுளிடம் கூட்டி செல்ல அலைக்கிறது ! துடிக்கிறது ! உணர்ந்து கொள்ளடா !

உன் இதய கதவை திறக்க உன்னாலே முடியும். உன் மன நிறுத்தை திறக்க வந்த மாயவன் நானடா !

இநன்யா அணுவுக்குள் அணுவானவன் ! ஆனந்தம் நிறைந்தவன் ! உனக்கும் தர காத்திருக்கிறேன். உன் கதவை திறந்து வையடா !

மாயவன் நான் !

நான் இநன்யா !

Thursday, November 2, 2017

ஆக்கம், துவஞ்சம் அழியாது வாழும் மானிடா, ஆள்பவனை எப்போது அறிவாயடா ? எது கடவுள் ?


to INANYA MAHA MUNIVAR
02-11-2017
ஆக்கம், துவஞ்சம் அழியாது வாழும் மானிடா, ஆள்பவனை எப்போது அறிவாயடா ?
எது கடவுள் ?
கடவுள் எங்கே ? எது கடவுள் ? உன் அனுபவம் தான் கடவுள் ! அந்த அனுபவத்தில் அன்பிற்கினிய தந்தை இருப்பதை உணர்வது தான் கடவுள் ! உன் இன்பத்திலும் துன்பத்திலும் கிடைக்கும் அனுபவம் தான் கடவுள் ! அனுபவப் பாடம் ஆள்பவன் தருவது என புரியாமல் வாழ்கின்றாய்.
வெளியில் இருந்து வந்த ஒலி வெப்பமாகி பின் காற்றில் சங்கமித்து நீரில் உறவாடி நிலத்தில் வந்திறங்கினாய். ஐம்பூத தத்துவம் அடிமுடி கண்டாயானால் கடவுளை எப்போதோ அறிந்திருப்பாய். உணர்ந்திருப்பாய் ! வெளி, வெப்பம், காற்று, நீர், நிலம் இதை வரிசைப்படுத்தி வாழ்வை புரிந்தவன் ஞானியாகிறான். இதுவே சரியான அளவு கோல் !
இயற்கையினால் கடவுள் உனக்கு உணர்த்தி கொண்டே இருக்கின்றான். பூகம்பம், இடி, மின்னல், புயல் என்று புரிதல் உனக்கில்லையே ! பூமியின் காந்தப்புலன் மேலிருந்து வரும் மெல்லிய மாய கயிற்றின் தொடர்போடு பொருந்தியது என்று. நீ இங்கே தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றாய் என்பதை அறிந்தால் தவறு செய்யமாட்டாய். நீர், மரம், நீ எல்லாம் இந்த புவியின் காந்த புலத்தில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
உன் காந்த புலன் பூமியின் காந்த புலத்தில் இருந்து விலகும் போது தான் நீ மரணிக்கின்றாய். படைப்பின் மகத்துவமும், ரகசியமும் அறிவாயோ நீ ? அன்பிற்கினியவன் என் தந்தை அளவிட முடியாத பேரன்பு கருணைமிக்க பேரருளாளன் என்பதை உணர் !
நீ இப்போது இருக்கின்றாய். இதுவே கடவுளின் உணர்தல் ! நீ அறிவை தான் தேடிக் கொண்டிருக்கின்றாய். நீ உணரும் காலம் எப்போதடா ? கடவுள் இருப்பதை அறிவதில் தான் அறிவை தொலைத்து அலைகின்றாய். நோய், துன்பம், வறுமை, இதுவெல்லாம் மனிதருக்கு மனிதர் வேறுபட்டிருப்பது ஏன் ? உணர் !
ஜணிக்கும், பிறக்கும் மனிதரின் கைரேகை ஒருவர் போல் மற்றவர்க்கு இல்லையே ஏன் ? படைப்பின் உண்ணதத்தை அறிவாயானால் கடவுள் இருப்பை உணர்வாயடா !
அன்பானவன் அன்பை உணர்ந்தாலே ஆயுள் உள்ளவரை ஆணந்தம் உணர்வாய் ! ஏனடா விரக்தி, வேதனை ? நான் உன் நீதிபதி. என் சட்டம் பொய்ப்பதில்லை.
உன் அனுபவம் உன்னை கூட்டி செல்கிறது இன்பம் போல துன்பம் போல உனக்கு காட்டி ! ஆனால் இந்த மெல்லிய மாயத்தை உணராமல் ‘நான்’, ‘எனது’ என்று வீராப்பு பேசுகிறாய். உன் பயணம் எப்போதும் மரணத்தை (கடவுள்) நோக்கி தான் ! ஆனால் அதை உணராமல் நீ ஒரு கெட்ட பாதையை அமைத்து பயணிக்கிறாய்.
துன்பம் எப்போது இல்லை என்று உணர்கிறாயோ, உன் பாதை சரி என்று அர்த்தம் ! மனகிலேசமும், மாய மயக்கமும் இருப்பதாலேயே உனக்கு உன் பாதை தெரியவில்லை. உன் இருப்பு, இறப்பு கடவுள் இருப்பதை உணர்த்துகிறது ! உணர் !
உன் அனுபவம் தான் கடவுள் என்பதை புரிந்து கொள் !
உன் அனுபவம் நான் !
நான் இநன்யா !