Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, February 26, 2017

Karma - வாழ்வின் ரகசியம்:

Karma - வாழ்வின் ரகசியம்:
வாழ்வின் ரகசியம் என்ன என்று பார்ப்போம். "வாஸன" எனப்படும் (முன் ஜென்மாவில் நிறைவுறாத ஆசைகள்) சக்தி, ஆசைகள் நிறைவேற சாதகமான சூழ்நிலையை உருவக்கிக் கொண்டு, உலகின் ஓர் தகுந்த இடத்தில், உகந்த உடலுருவத்தை அமைத்துக்கொண்டு உருவாவதுதான் நம் ஜெனன ரகசியம். இப்படி உருவான உடலை, நம் அறிவீனத்தால், நிரந்தரம் எனக் கருதி அதை போஷிப்பித்து, அழகு படுத்தி ஆசாபாச பந்தத்தால் உலகில் கட்டுண்டு நம் சுயநிலை தெரியாமல் அஹம் அனும் பாவத்தை வளர்த்துக்கொண்டு ஸுக துக்கங்களினால் பீடித்து உலகில் தத்தளிக்கிறோம். இது மாயா சக்தியினால் ஆவன. இதிலிருந்து விடுபட்டு நம் சுய உருவை உணருவதுதான் நம் வாழ்க்கை லட்சியமாக அமைய வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலிருந்து எழும் பலனை நாமேதான் அனுபவிக்கவேண்டும். நல்லகாரியம் செய்தால் ஸுகமும், கெடுதல் செய்தால் கஷ்டமும் நேரும் என எல்லோர்க்கும் தெரிந்த உண்மைதானே? இப்படி நல்ல காரியம் செய்தாலும், கெடுதல் செய்தாலும் அதன் பலனை நாமே அனுபவிக்க வேண்டும். அதற்காக வாழ்ந்தே தீரும். வாழ்வு என்பது ஸுக துக்கங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நியதி. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் ஸுக துக்கங்கள் இல்லாமலிருக்க வேண்டும். அதற்குக் கர்மா பண்ணாமல் இருக்க வேண்டும். அதெப்படி முடியும்? கர்மா புரியாமல் இருக்க முடியாது. கர்மாவில் ஈடுபடுவதுதான் வாழ்க்கை. அப்படியானால் ஸுகதுக்கத்திலிருந்து விடுபட்டு நம் சுய உருவை எப்படி உணர முடியும்? இதை அறிந்துகொண்டால் வாழ்வின் ரகசியம் புரிந்துவிடும்.
நாம் இந்த உலகில் பிறந்து, பால்யம், கௌமாரம், யௌவனம், வார்தக்யம் என்ற நாலு நிலைகளை அடைந்து முடிவில் உலகிலிருந்து மறைந்துவிடுகிறோம். இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அனுபவத்துடன் வாழ்துவருகிறோம். இந்நிலைகளில் நாம் பலவித உடல், மனம் சம்பந்தப்பட்ட அநுபவங்களில் வாழ்துவருகிறோம். இந்த வித்தியாசமான அனுபவங்களுக்கு என்ன காரணம்? நாம் வாழும் வாழ்க்கையின் தரமேதான். நமக்கு வாழ்க்கையில் வரும் சுகதுக்கங்கள் நாம் செய்யும் காரியங்களின் தன்மையை ஒட்டியே நிகழ்கின்றன. ஆதலால் வாழ்க்கையில் நிகழும் அனுபவத்திற்கு நாமே காரணம் எனத் தெரிகிறது. அப்படியானால் நம் வாழ்க்கையை நம்மால் நியந்தரணம் பண்ண முடியுமா என வினா எழலாம். ஆம், நாமே நம் வாழ்க்கைத் தரத்திற்கு வழி வகுத்துக்கொள்கிறோம் எனச் சொன்னால் மிகையாகாது.

ஒரு *"ராஜா"* தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.

ஒரு *"ராஜா"* தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.
திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்.
மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்.
ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது.
காட்டு வழியே வரும்போது
திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்.
மந்திரியும் காவலர்களும்
வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக்
கொண்டு நின்று விடுகிறார்கள்.
எங்கிருந்தோ *"ஆறு இளையர்கள்"* வந்து
அவர்களை காப்பாற்றுகிறார்கள்.
மந்திரியுடன் ஆறு இளையர்களும் *"ராஜாவிடம்"* வருகிறார்கள்.
*"ராஜாவும்"* மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,
”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்.
*"முதல்"* இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்.
*"இரண்டாவது"* இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்.
*"மூன்றாவது"* இளைஞன் தான் வசிக்கும்
கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.
*"நான்காவது"* இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்.
*"ஐந்தாவது"* இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த
மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்.
அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன *"ராஜா"*,
*"ஆறாவது"* இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன
வேண்டும்” என்று கேட்கிறான்.
இளைஞன் சற்று
தயங்குகிறான்,
*"ராஜா"* மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,
"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்.
வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்.
*"ராஜாவும்"* இவ்வளவுதானா என்று முதலில் கேட்டான்.
பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை.
தெரிந்து கொண்டான்...
ஆம்.
*"ராஜா"* அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்,
அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும்.
வேலைக்காரர்கள் வேண்டும்.
அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்.
சொல்லப் போனால் முதல் *"ஐந்து"* இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும்.
என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,
.........................................
இந்தக் கதையில் கூறிய *"ராஜாதான்"* அந்த *"இறைவன்"*.
பொதுவாக எல்லோரும்
*"இறைவனிடம்"* கதையில் கூறிய ,
முதல் *"ஐந்து"*
இளைஞர்களைப் போல்,
தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்.
கடைசி இளைஞனைப் போல் *"இறைவனே"* நம்மிடம் வர
வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,
மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பதற்கு,
எடுத்துக் காட்டாக இந்தக் கத ையைக் கூறினார்.
Sankar E N FACE BOOK

பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால் பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர்

பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால் பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர்
கர்ணன் செஞ்சோற்று கடன் தீரவேண்டி கௌரவர்களுடன் இருந்து போரில் உயிர் விட்டான் அதன் பின்பு தான் பாண்டவர்களுக்கே கர்ணன் தங்களது மூத்த சகோதரன் என்று தெரிந்தது
அவருக்கு மட்டுமல்ல ஆசாரியர் துரோணருக்கு சீடனாக கிருபர் சிஷ்யனாக போரில் தங்களால் கொல்லபட்ட துரியோதணன் உட்பட நூறு கௌரவர்களுக்கும் அந்த வம்சத்தின் மூத்த அண்ணனாக இருந்து தர்மர் அந்திமகாரியங்களை செய்தார்.
ஆனால் கௌரவர்கள் நூறுபேரும் குருச்சேத்திர யுத்தத்தில் மடித்த சில ஆண்டுகளில் இறந்து போன அவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு அந்திம க்ரியை செய்தது கௌரவர்களில் ஒருவன் என்பது தெரியுமா?
கௌரவர்கள் நூறுபேர் இறந்த பின் கௌரவரா என கேட்காதீர்கள் கௌரவர்கள் நூற்றொருவர் பின் அவர் ஏன் மற்ற கௌரவர்களுக்கு அந்திம காரியம் செய்யவில்லை என்றால் அதுவும் காரணமாகவே
திருதுராஷ்ட்ரனின் பட்ட மகிஷி காந்தாரியின் மகன்களுக்கு அவர்களது சந்திகளுடன் போரில் மரணமேற்பட்டதால் பாண்டுவின் மகன்களில் மூத்தவரான தர்மர் அந்திம காரியம் செயதார். தன் தாயின் கர்பத்தில் உதித்தவர் ஆகையாலே்கர்ணனுக்கும் செய்தார்
ஆனால் திருத்ராஷ்ரனுக்கு அந்திம காரியம் செய்தது யுயுத்சு என்னும் கௌரவன்
யார் இந்த யுயுத்சு? இவன் எப்படி கௌரவர்களில் ஒருவன் ஏன் இவன் த்ருத்ராஷ்டனுக்கு மட்டும் அந்திம க்ரியை செய்தான் என்கிறோம் என பார்ப்போம்
அதற்க்கு ஒரு சம்பவத்தை விளக்குகிறேன் உங்களுக்காக
குருசேத்ர யுத்தத்திற்காக 
தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நிற்க்க
எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன.
இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர்
அதிவிரைவில் யுத்தம் தொடங்கப் போகிறது.
இடைபட்ட நேரத்தில்
அர்ச்சுனன் தன் தேர்த்தட்டில் சாரதியாக வீற்றிருந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பணிவோடு வணங்கி நேராக பார்த்து மெல்லிய குரலில் உரிமையுடன் கேட்டான்:
‘‘கண்ணா! இதோ யுத்தம் தொடங்கப் போகிறது. எனக்கு உன்னிடமிருந்து தெளிவான பதில் தேவை.
கண்ணன் கேட்டான் என்ன கேள்விக்கு பதில் வேண்டும் 
மீண்டும் கீதையில் ஏதேனும் சந்தேகமா? என்றான்
அர்சுனன் :- அது இல்லை கண்ணா இந்த போரில் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் தானே உன் கொள்கை?
அதாவது தீயவர்களை அழித்து அடியவர்களைக் காப்பாற்றுவது! சரிதானே அப்படியானால் கௌரவர்கள் மொத்தபேரும் அழிவார்கள் அல்லவா?’’ என்றான்
கண்ணன்:- அர்ச்சுனா! நீ சொன்னதில் ஒரு பாதி சரி. ஒரு பாதி தவறு. தீயவர்களை அழிப்பேன். ஆனால், கௌரவர்கள் அத்தனை பேரும் அழிவார்கள் என்று சொல்ல முடியாது. கௌரவர்களில் நல்லவர் யாரேனும் இருக்கலாம் அல்லவா?’’ என்றான்
அர்சுனன் துனுக்குற்று்
‘‘கௌரவர்களில் நல்லவரா? பீஷ்மர், துரோணர் கிருபர் சல்லியன் போன்ற நல்லவர்களெல்லாம் கூட, கௌரவர்களோடு கூட்டு சேர்ந்ததால் அழியப் போகிறார்கள் என்கிறபோது கௌரவர்களில் யாரேனும் ஒரு நல்லவன் இருந்தாலும் அவன் கௌரவர்களுடன் இருப்பதால் அழிய வேண்டியவன் தானே? 
நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள்தானே கண்ணா?’’ என்றான்
கண்ணன் கலகலவென நகைத்தான். ‘‘நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல, அர்ச்சுனா! கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி,’’ என்று புதிராக பதில் சொன்னான்.
‘‘நீ சொல்வது புரியவில்லை கண்ணா!’’ என்றான் அர்சுனன்
கண்ணன் சொன்னார் பொறுத்திரு. புரியும்!’’
இவர்கள் இப்படிப் உரையாடிக் கொண்டிருந்த போது
தர்மபுத்ரன் யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார்.
ஏதோ முக்கியமாக ஒன்றை அறிவிக்கும் நோக்கில் வந்திருக்கிறார் என்பதை அவர் நின்ற தோரணையே இருதரப்புக்கும் தெரிவித்தது.
இரு தரப்பு வீரர்களும் அமைதி காத்தனர்.
துரியோதனன் தர்மரையே் வெறித்துப் பார்த்தவாறு அவரது அறிவிப்பைக் கேட்கக் காத்திருந்தான்.
தர்மர் ஒரு அறிவிப்பை உரத்துச் சொல்லலானார்: 
"வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்கவிருக்கிறது இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.
எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம்.
துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம்"
வீர்ர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம். என்றான்
மேலும்
அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலாகாது.
அப்படி்அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பிலேயே்போரிடுவார்கள்.’’ என
கம்பீரமாக அறிவித்து விட்டு
தர்மர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார்.
அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தர்மனின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள்.
தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டைப் இரு அணியினருக்கும் புலப்படுத்தியது
இந்தக் கடைசி சந்தர்ப்பத்தில் யாரேனும் கட்சி மாறுவார்களா என்ன? ( இன்றய அரசியல் சூழலை நிணையாதீர்கள்)
தர்மர் தமது மாபெரும் படையைப் பார்த்தார். யாரும் இருந்த இடத்தை விட்டு ஒரு துளி அசைவையும் காட்டவில்லை.
துரியோதனன் தரப்புப் படைவீரர்களைக் கேள்விக் குறியுடன் பார்த்தார் தர்மர்
என்ன ஆச்சரியம்! ஒரே ஒரு தேர் மட்டும் அதில் அமர்ந்திருந்த வீரனைத் தாங்கி கௌரவர் பக்கமிருந்து பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது!
‘‘யார் அது, நம் தரப்பிலிருந்து பாண்டவர் தரப்பிற்கு கட்சி மாறுவது?’’ துரியோதனன் உரத்த குரலில் கூச்சலிட்டான்.
அந்தத் தேரில் அமர்ந்திருந்த வீரனை நோக்கி அம்பெய்யவும் முற்பட்டான்.
பாண்டவர் அணிக்குச் செல்லும் வீரனை தொலைவிலிருந்தே உற்றுப் பார்த்தார் பிதாமகர் பீஷ்மர்.
கவசங்களால் உடல் மறைக்கப்பட்டு ஒரே மாதிரி உடை அணிந்த நிலையில் எல்லா வீரர்களும் ஏறக்குறைய ஒன்றுபோல்தான் அவர் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.
என்றாலும் அவன் யார் என்பதை பீஷ்மரின் கூரிய விழிகள் கண்டுகொண்டு விட்டன.
அந்த வீரனை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது
"துரியோதனா, சற்றுப் பொறு!’’ என்று குறுக்கிட்டார் பீஷ்மர்.
‘‘அவனைப் போகவிடு. தர்மபுத்ரன் கட்சி மாறுபவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை போகவிடு
நம் படை, அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குறையப் போவதில்லை.
மேலும் நீ அவனை இப்போது கொல்வானேன்?
நம்மிலிருந்து வேறுபட்டுப் பாண்டவர் அணியில் சேர்ந்த வீரனை போர் தொடங்கியதும் நம் வீரர்களில் ஒருவனாலேயே கொல்லப்படுவான்!
அதுவே அவனுக்கான நமது தண்டனை!’’ என்றார்,
பீஷ்மர் சொன்னதைக் கேட்டு துரியோதனன், அம்பைத் தன் அம்பறாத் தூணியில் செருகிக் கொண்டான்.
எதிரணியைச் சார்ந்த பீஷ்மரின் பேச்சைக் கேட்டு கண்ணன் முகத்தில் சிறு புன்முறுவல் படர்ந்தது.
கண்ணன் அர்ச்சுனனிடம் சொன்னான்: ‘‘பீஷ்மர் பெரும் வீரராக இருக்கலாம். ஆனால், முக்காலமும்
உணர்ந்தவரல்லர்அல்ல." என்றான்
"ஏன் அப்படிச் சொல்கிறாய் கண்ணா?’’ என்றான் அர்சுனன்
பின்னே?
இதோ நம் அணியில் சேர வருகிறானே அவன் ஒருவன்தான் போர் முடிந்த பின்னும் உயிர் பிழைத்திருக்கப் போகும் ஒரே கௌரவ வீரன். அப்படியிருக்க அவன் கொல்லப்படுவான் என்கிறாரே பீஷ்மர்? அவன் சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’ என்றான் கண்ணன்
கண்ணா என்ன சொல்லுகிறாய் அந்த வீரன் "கௌரவர்கள் நூறுபேரில் ஒருவனா?’’ என்றான்
கண்ணன் கூறினான் அர்ச்சுனா! கௌரவர்கள் மொத்தம் நூற்றியோரு பேர்.
நம் அணியில் சேர வருபவன் நூற்றியோரு பேரில் ஒருவன்.’’
கண்ணா எனக்கு ‘‘வியப்பாக இருக்கிறதே! இதுவரை கௌரவர் நூறுபேர் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன்.’’ என்றான்
கண்ணனோ அர்சுனா
‘‘இந்த நூற்றியோராவது கௌரவனுக்கு கௌரவர்கள் உரிய கௌரவம் கொடுக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.
நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனை கொல்ல துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே, அப்போது அதை முன்கூட்டியே பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான்.
இவன் தர்மநெறியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல் இருப்பவன்.
அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு.
இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன்.
இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன்.
யுத்தம் தொடங்கவிருக்கிறது அர்ச்சுனா! நான் தேரைச் செலுத்தப் போகிறேன். நீ காண்டீபத்தை எடுத்துக்கொண்டு தயாராகு.’’
என்றபடியே
கண்ணன் தேர்க் குதிரைகளின் லகானைப் பற்றி அதைச் சொடுக்கத் தயாரானான்.
தங்கள் அணிக்கு வந்துசேர்ந்த கௌரவனைப் பற்றிய நினைப்பு அர்ச்சுனன் மனத்திலிருந்து முற்றிலும் விலகியது.
அவன் போரிடத் தயாரானான்... சூரியன் அஸ்தமனம் ஆனதும் முதல்நாள் போர் அவ்வளவில் முடிவடைந்தது.
மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு, கௌரவர்களும், பாண்டவர்களும் அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள்.
பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அணைத்து அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான் ஸ்ரீகிருஷ்ணன்.
பஞ்ச பாண்டவர்கள் மட்டுமல்ல, அங்கே அவர்களது்மனைவி பாஞ்சாலியும் தாயார் குந்திதேவியும் கூட அமர்ந்திருந்தார்கள்.
யுத்தம் எத்தனை நாள் நீடிக்குமோ என்ற கவலை குந்தியின் மனத்தில் கவலைரேகை படர்ந்திருந்ததை அவள் முகம் கண்ணனுக்கு தெரிவித்தது.
தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த பாஞ்சாலியின் கண்கள் தன்னை அவமானபடுத்திய துச்சாதனன் மேலும் துரியோதனன் மேலும் கொண்ட தாளாத கோபத்தால் சிவப்பேறியிருந்தன.
‘‘கண்ணா! வா வா!’’ என்று கண்ணனைப் பரவசத்தோடு வரவேற்றாள் குந்திதேவி. பாஞ்சாலியும் கண்ணனை இன்முகம் பொங்க அழைத்தாள்.
கண்ணனையே சரணடைந்து வாழ்ந்த பாண்டவர்கள் கண்ணனுக்கு ஆசனம் அளித்து அமர வைத்தார்கள்.
தன்னுடன் வந்த கௌரவ வீரனைப் பிரியமாகத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான் கண்ணன்
குந்தி, கண்ணன் அழைத்து வந்த இளைஞனை தீவிரமாக ஆராய்ந்தாள்.
வசீகரமான தோற்றம் நற்குணங்களையே கடைப்பிடிப்பதால் வந்த பொலிவு அவன் முகத்தை மேலும் அழகாக்கியிருந்தது.
கண்ணனே அழைத்து வந்திருப்பதால் மிக முக்கியமானவனாகத்தான் இருக்க வேண்டும். யார் இவன் தாயார் கண்களாலே கேள்வி கேட்டாள்.
"இவன் கௌரவர்களில் ஒருவன்!’’ இதைக் கண்ணன் சொல்லி முடிப்பதற்குள்
பாஞ்சாலியின் சிவந்த கண்கள் மேலும் கூடுதலாகச் சிவந்தன
கண்ணன் சொன்னதைக் கேட்டு அவள் அமைதியானாள்.
‘‘இவன் கௌரவர்களை விட்டு விலகி நம் அணிக்கு வந்துவிட்டான்.
உண்மைஈன தர்மம் எங்கிருக்கிறதோ அதை உணர்ந்து கட்சி மாற விரும்புகிறவர்கள் மாறலாம் என்ற தர்மனின் அறிவிப்பைக் கேட்டு இன்று காலை நம் கட்சிக்கு மாறிவிட்டான் இவன்!’’ என்றான் கண்ணன்
அப்படியே புதியவனின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தான்.
புதியவன் குந்திதேவியின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான்.
குந்தி அவனைப் பிரியமாய்ப் பார்த்து மனமார ஆசீர்வதித்தாள்.
பாஞ்சாலியின் விழிகளில் மகிழ்ச்சி தோன்றியது.
‘‘உன் பெயர் என்ன மகனே?’’ குந்தி ஆதரவுடன் கேட்டாள்.
அவன் கம்பீரமாக பதிலளித்தான். ‘‘தர்மநெறி பிறழாமல் வாழும் ஐந்து புதல்வர்களைப் பெற்ற பாக்கியசாலியான அன்னையே! என்னை யுயுத்சு என்று அழைப்பார்கள்!’’
யுயுத்சு! குந்தியின் மனம் அந்தப் பெயரைக் கேட்டதும் யோசனையில் ஆழ்ந்தது.
ஆம். காந்தாரி இவன் பெயரை ஒருமுறை குறிப்பிட்டு இவனைப் பற்றித் தன்னிடம் அங்கலாய்த்திருக்கிறாள்.
பல காலம் முன்னால் நடந்த சம்பவம்
காந்தாரி அன்று இவனைக் குறித்து அங்கலாய்த்தது ஏன் என நினைவில்லை.
காந்தாரிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்ற உண்மை மட்டும் இன்றும் மனத்தில் தேங்கியிருக்கிறது.
அதுசரி. உண்மையில் யார் இவன்? அனைவர் கண்களும் அவனையே பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது
அர்ச்சுனன் குரல். ‘‘கண்ணா! இவன் கௌரவர்களில் ஒருவன் என்றாய். மற்ற கௌரவர்களால் இவன் உரிய மதிப்புடன் நடத்தப்படவில்லை என்றும் சொன்னாய். இப்போது சொல்.
இவன் சரிதம் என்ன?
காந்தாரி பெற்ற கௌரவர்களில் ஒருவன் தானா இவனும்?’’ என்றான்
கண்ணனோ இவன் கௌரவர்களில் ஒருவன், அதாவது, திருதராஷ்டிரரின் மகன்.
ஆனால், காந்தாரியின் பிள்ளை அல்ல!’’ என்றான்
குந்தி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
அவளுக்குக் காந்தாரி இவனை ஏன் வெறுத்தாள் என்பது புரியத் தொடங்கியது.
கண்ணன் மேலும் விளக்கலானான்: ‘‘காந்தாரி கர்ப்பவதியாய் இருந்தபோது அவள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. அதனால், கண்ணில்லாத திருதராஷ்டிரருக்குப் பணிவிடை செய்ய அமர்த்தப்பட்டாள் சுகதா என்ற ஒரு பெண்.
அவளது பணிவிடையில் மகிழ்ந்த திருதராஷ்டிரரின் வற்புறுத்தலால் சற்று எல்லை மீறியதன் விளைவுதான் யுயுத்சு.
யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான்.
அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று.
தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான்.’’ என்றார்
அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான்.
‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான்.
மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற அந்த ஒரே பிள்ளை!’’
இந்தச் செய்திகளைக் கேட்டு குந்தி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். ‘‘கௌரவ சகோதரர்கள் நூறுபேர் அல்ல, நூற்றியோரு பேர் என்று திடீரென்று வெளிப்பட்ட இந்த உண்மை எனக்கு வியப்பாக இருக்கிறது!’’ என்றாள் அவள்.
அவளை பாண்டவர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.
யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள, பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக்கொடுத்தார்கள்.
கண்ணனின் தயவால் தர்மம் வென்றது.
பின்னொருநாள் த்ருத்ராஷ்ட்ரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கான அந்திம கடனை கண்ணன் விருப்பப் படியே செய்தான்
நாமும் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயோமாய் தொழுது நம் துயரம் தீர்போமாக!!
சர்வம் கிருஷ்ணார்பனமஸ்து!!
ஜெய் ஶ்ரீராம்!!!

Sankar E N FACE BOOK

Wednesday, February 22, 2017

நான் சிருஷ்டி கர்த்தாவின் ஆண்மா ! நான் சத்யம் ! என் சொல் சத்யம் ! நான் பொய்யானவன் அல்ல. நான் மெய் !


நான் சிருஷ்டி கர்த்தாவின் ஆண்மா ! நான் சத்யம் ! என் சொல் சத்யம் ! நான் பொய்யானவன் அல்ல. நான் மெய் !
அறிவு
அறிவு மட்டுமே உன் துன்பத்தை போக்கும் ! அறிவுக்கு வேலை கொடு ! ஆத்மத்தை அறிய முற்படு ! அறிவு எப்படி வரும் என்ற கேள்வி இங்கே நித்யம். ஆனால் செயல் வடிவம் சொல்ல திராணி இல்லை. பொருளை அறிய அறிவு தேவை இல்லை. உணர்வு இருந்தால் போதும். ஆனால் உன்னை அறிய அறிவு தேவை !
தினமும் ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று உன்னிடம் கேள்வி கேட்டு அறிவை அறிய விடை பெறு ! அறிவு வளத்தை பெறுக்க தினமும் பயிற்சி செய் !
அறிவு துன்பத்தை போக்கும் சக்தி கொண்டது. அறிவை வளர்த்தால் எதையும் புரிந்து கொள்ள முடியும். புரிந்தால் தெளிவு வரும். தெளிந்தால் உன்னை யாரென்று ஒரு விநாடியில் உணர்ந்து கொள்ளலாம். ஆதலால் குருவின் பேச்சை தினமும் கேள். நல்குருவை அடைந்து உன்னை அறிய முற்படு.
நீ வேண்டினால் கடவுள் உடனே உன் துன்பத்தை தீர்க்கமாட்டான். உன்னை தேடும் பொழுது தான் கடவுள் உன் துன்பத்தை துடைக்க தயாராக உன்னில் வருகின்றான். பின் உன் ஆண்மா விழிப்படைந்து உன் இலக்கு, வழி காண்பிக்கும் !
படைப்பில் மனிதர்களுக்கு மட்டுமே பாவ, கர்ம, இன்பம், துன்பம் உண்டு ! எல்லாம் மறை பொருள். எல்லாம் ரகசியம் ! ஆனால் உனக்கு தெரிய வேண்டிய ரகசியத்தை உடைக்க உன்னால் மட்டுமே முடியும் ! நீ தேடினால் நான் உனை அறிய வைப்பேன். தெளிந்தால் உன்னை யாரென்று உணரலாம். இங்கே யாரும் எதையும் புரிந்து கொள்ளாததால் தான் துன்பம் அடைகின்றனர்.

கோடி கணக்கில் கடன் வாங்கி, மனம் நொந்து, கடவுளை நோக்கி கதறுகின்றான் மனிதன். கடவுள் தன்னை கைவிட்டதாக புலம்புகிறான். வாழ்வை முடிக்கின்றான். அட மூடனே, உன் ஆசை தானடா உன் துன்பத்திற்கு காரணம். நான் இல்லையடா ! உப்பை அளவாக சேர்த்து உண்ணும் மானிடா, தன் குடும்பம், குழந்தை, கடமை மறந்து கோழைத்தனமாக இறப்பதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும் ? வீரியம் கொண்டு எழுந்து அதை தீர்க்க போராடாமல் கடவுளை நிந்திக்காதே !
என்னிடம் வழி கேள். வழி சொல்வேன். என் நாமம் பாவம் கரைக்கும் நிச்சயமாக ! போராட்டம் தான் வாழ்க்கை. போராடித் தான் எதையும் பெற முடியும். என்னையும் அழைத்துப் பார் ! உன் போராட்டத்தில் உனக்கு துணை இருப்பேன் வெல்வதற்கு !
இங்கே இறப்பது மிக எளிது. இங்கே வாழ்ந்து சாதிப்பது தான் மிக மிக கஷ்டம். துன்பத்தில் துவண்டு போகாதே ! நீ ஒரு பொம்மை. தற்கொலை என்பது கோழைத்தனம். மிருகங்கள், பறவைகள் தற்கொலை செய்வதில்லை. இந்த பாழ்பட்ட மனிதன் தான் தனக்கு எல்லாம் தெரியும் என்று பிதற்றி அறியாமையில் வாழ்கின்றான். காட்டில் மிருகங்கள் மிக மிக வறுமையில் நீர் இல்லாமல் வாடும் போது கூட தற்கொலை செய்வதில்லை. தொலைவில் நீரைத் தேடி அலைந்து சென்று தன் உடலை வருத்தி வாழ்கின்றன. மிருகங்களுக்கு இருக்கும் அறிவு கூட இந்த அற்ப மனிதனுக்கு இல்லையே ? ஏன் ? உணர் !
கடமையை செய்யாமல் தப்பிக்க நினைக்கின்றான் மனிதன். தற்கொலை எண்ணம் கொள்ளாதே ! நினைத்தாலே பதினாறு பிறவி பிறப்பாய். ஆதலால் வீரியம் கொண்டு எப்போதும் வாழ நினை. வீரனாய் வாழ். கோழையாக சாகாதே ! உன் இதய துடிப்பு கருவறையில் பதினாறாம் நாள் தொடங்குகிறது. அதனால் தான் பதினாறின் சூட்சுமத்தை மேன்மைபடுத்தினான். இறந்தால் பதினாறாம் நாள் திதி என்று வணங்குகிறான். பதினாறு செல்வம், பதினாறு நிலை என்று !
இது மேலிருந்து கீழ் வரும் எண் ! உணர் !
எல்லாம் உனக்கு தெரியும், நீ உணர்ந்தால் நான் உனக்கு விளம்ப வேண்டியதில்லை. சிந்திக்க சிந்திக்க தான் தெளிவு வரும். இதை உணர்ந்தால் உனக்கு துன்பமில்லை. மனிதர்களுக்கு மட்டுமே சிந்திக்கும் திறன் உண்டு ! செயல் தான் அறிவை தரும். ஆகவே செயல்பட்டு கொண்டே இரு ! நீ இங்கே வந்த நோக்கம் உண்பதற்கும், உறங்குவதற்கும் அல்ல. உன் அறிவை தெளிவாக்கி மீண்டும் பிறவி இல்லா பேரின்ப வாழ்விற்காக !
அறிவு, தெளிவு, சிந்தித்தல் உனை இன்பமாக்கும். செயல் இல்லாத அறிவு எந்த நன்மையும் தராது. ஆகவே தூங்கிவிடாதே ! விழித்திரு !
அறிவுள்ளவன் என்னை நிந்திக்கமாட்டான். தன் துன்பத்திற்கு தான் காரணம் என்று நினைப்பான். என் நாமம் பாவம் கரைக்கும். அறிவுள்ளவன் என் சொல் கேட்பான். என் செயல் அறிவான். என் எழுத்தை யோசிப்பான். புரியாததை எல்லாம் பொய் என்று சொன்னால் நீ புத்திசாலி அல்ல. அறிவது தான் புத்திசாலிதனம். ஏன் ? எதற்கு என்று யோசிப்பது தான் புத்திசாலிதனம்.
உன் செயல் இன்று தொடங்கட்டும். அதோடு உன் கடமையும் மறவாதே ! காலம் உனக்கு எப்போதும் துணை நிற்கும் !
என் நெஞ்சார்ந்த அன்பின் ஆசிகள் !
செயல் நான் !
நான் இநன்யா !

Wednesday, February 15, 2017

குழிமிட்டானில் குறை ஒன்றும் இல்லை. குறை எல்லாம் உனக்குள் தான் ! இராக்கினி போல் வாழ்வு வரும். உபராசனை போல மேன்மை வரும். என் நாமம் சத்தியமே !

குழிமிட்டானில் குறை ஒன்றும் இல்லை. குறை எல்லாம் உனக்குள் தான் ! இராக்கினி போல் வாழ்வு வரும். உபராசனை போல மேன்மை வரும். என் நாமம் சத்தியமே !
எப்போதும் விலகாதே !
உன்னில் இருந்து விலகாதே ! மேலிருந்து வரும் மெல்லிய நரம்பிலையை விட்டு விலகி விடாதே ! கடவுளின் உறவை விட்டு விலகி போகாதே ! உன் குடும்பம், பந்தம் மட்டுமே இன்பம் என்று நினைத்துவிடாதே ! என் இனியவர் படைப்பின் மூலத்தை மறந்துவிடாதே !
எல்லா உயிரினமும், படைப்பும் கடவுளின் உறவை மறப்பதில்லை. கடவுளுக்கும், உயிருக்கும் இடையில் இருக்கும் மெல்லிய நரம்பிலையை மறப்பதில்லை. மனிதன் தான் மறக்கின்றான்.
கருவறையில் கடவுளின் உறவோடு பினைந்து வாழ்ந்தாய். இன்பம் பேரின்பமாக நீயே ராஜன் என்று இறுமாந்து துள்ளிக் குதித்தாய். கடவுளோடு ஒரு நாள் மிக மகிழ்ச்சியில் ஆனந்த துள்ளலோடு உழண்டு வாழ்ந்தாய். மேல் லோக கணக்குபடி உனக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.
பந்த பாசம், கனவுகள் இல்லாமல் வாழ்ந்தவனே, யுகத்தில் பிறந்தவுடன் எங்களை மறந்து தோற்று போனாயடா ! மறவாதே ! விலகாதே ! கடவுளின் அன்பே பேரன்பு !
இருக்கும் நாளெல்லாம் இறை (பூமி) நினைவோடு கடவுளிடம் ஐக்கியமாக இரு ! எப்போதும் நிலையான இன்பம் தரும் சத்யமாக !
பீலிகை மறப்பதில்லை. ஆலிகை மனதில் உள்ளவன் இறுமாந்து மறந்து அலைகின்றான். இன்பம் தனக்குள் இருப்பதை மறந்து எங்கெங்கோ ஓடி திரிகின்றான். கடல் அலை கரை தாண்டி வராமல் இருப்பது மாயத் திரை. உன்னிலும் ஒரு மாய திரை உள்ளது. அதை விலக்க யாருக்கும் திராணி இல்லை. அத்துகமானி இருக்கும் இடத்தில் ஆளுமை அதிகம் உண்டு. பூகம்பம், வெள்ளம் தாக்குவதில்லை. இனி அத்துகமானி இருக்கும் இடத்தில் மனிதன் குடியேறுவான்.
படைத்தவை எல்லாம் எல்லை மீறுவதில்லை. பாழ்பட்ட மனிதன் எல்லை மீறுகின்றான். இரண்டாயிரம் வருடத்திற்குள்ளாக மதத்தை உருவாக்கி மனிதம் தொலைத்து அலைகின்றான்.
இமைபொழுதில் யுகம் மாறும் ! நீ வழிபடும் இடங்கள் எல்லாம் இனி இடுகாடுகளாக மாறும். எறும்பு கடிக்க தாளாத உடல் வைத்து கொண்டு என் மதம் பெரிது என்று மார்தட்டுகின்றான். கடவுள் பொது உடமை ! மதமில்லா உப்பை உண்டு உண்மை தெரியாமல் புலம்புகின்றான்.
வாராகரம் சென்று வாழ்வை இழக்கின்றான். தாயின் உறவின் ஆழம் கடவுளின் மேன்மை. தாய் அன்பை விட பூமியில் ஏதுமில்லை. அதை விட மேலான அன்பு கடவுளிடம். உன்னை ஒப்புவித்து பார். உண்மை புரியும். அன்பு எல்லாம் சாதிக்கும். இங்ஙனம் நிம்மதி காண அன்பு கொள். எல்லோரிடமும் அன்பை விதை !
நெருஞ்சியில் கூர் உண்டு. ஆனாலும் அதன் மகத்துவம் அளவிடற்கரியது. கடவுளோடு பயணம் இரயில் தண்டவாளம் போன்றது ! கொஞ்சம் விலகினாலும் துன்பம் துரத்தும். மனம் பாரமாகும். சம்மட்டியால் தலையில் அடிக்கின்றதை போல மாய தோற்றம் உருவாகும். ஆதலால் கடவுளைவிட்டு எப்போதும் விலகாதே ! கடவுளின் அன்பில் திளைத்து ஆனந்தம் கொள் ! பின் உன்னை வென்றுவிடு ! சொல்லில் உண்மை வை !
ஒழுகுமாடத்தில் நவ துவாரங்கள் ! அதில் ஓடி பிடிக்கும் உயிர் ஒன்று வைத்து உனை கண்காணிக்கின்றான் உள்ளிருந்து. உண்மை தெரியாமல் ஊமையாய் திரிகின்றாய். மறுத்தும், எதிர்த்தும் கடவுளை பற்றி பேசி காலத்தை வீணாக்குகின்றான். விதிர்த்து போய் வீழ்கின்றான்.
கடவுளின் அன்பை தக்க வைக்க தரணியில் எவருக்கும் துணிவில்லை. ஒரு சிறு மாத்திரை துன்பத்தில் துவண்டு போகின்றான். பந்தபாசத்தில் எப்போதும் விலகி நில் ! மெல்லிய மயிற்பீலி உடலை வருடுவது போல கடவுளை நெருங்கு !
நான் மழைக்கும், புயலுக்கும், இடி மின்னலுக்கும், எதற்கும் அஞ்சாதவன். நீயும் எதற்கும் அஞ்சாதே ! ஏனென்றால் உன் விரல் பிடித்து நிற்பது நானல்லவோ ! நான் உன் நெஞ்சில் இருப்பதை மறவாதே !
இடையூறுகளும், துன்பங்களும் கடவுளை ஏறெடுப்பதற்காகவே ! ஆதலால் எப்போதும் ஆணந்தமாக இரு ! ஆளுமை உள்ளவன் நான் ! உன்னை எப்போதும் கண்கானிக்கின்றேன். நான் உன்னைவிட்டு எப்போதும் விலகமாட்டேன். ஒர்மையில் சொல்கிறேன் சத்தியமாக !
நீ வெல்வாய் ! என் ஆசிகள் !
நான் இநன்யா !

யாகவா உரையாடல் ;;; இரு மடங்கு நன்மை ;;;

யாகவா உரையாடல் ;;; இரு மடங்கு நன்மை ;;; இங்கு வருபவன் தப்பு செய்தாலும், தண்டனையும் இரு மடங்கு.நீ இரு ,தோணியில் கால் வைக்காதே.வட்டத்தில் நின்று சார்ஜ் (திறன்) செய்து கொள்.நீ இவரது ஞானங்களை ஏற்று தர்மத்தின் வழி வாழ்க்கை நடத்த இங்குள்ள வட்டத்தில் நின்று வணங்கி சார்ஜ் (திறன்) ஏற்று கொள்வதால் உனக்கு கிடைக்கும் நன்மை இரு மடங்கு.அதுவே எதிர்மறையாக  செயல் பட்டால் கிடைக்கும் தண்டனையும் இரு மடங்கு என்பதனை உணர் .எனவே இரு வழியில் செல்ல எண்ணாதே .பிரம்ம ஸ்தலத்தில் பாம்பு கடிக்கு (கர்மாவின் தாக்குதலுக்கு) மருந்து உண்டு. அதுவே கழுதையிடம் உதைபட்டால் (தர்மாவிடம் அடிவாங்கினாள்)மருந்து இல்லை.
பாம்பு-கர்மாக்களால் ஏவப்பட்ட பில்லி, சூன்னியம்,ஏவல்,மந்திரம்,பேய்,மதம்,வசியம்,பொய் கதையின் மயக்கம்,போதை,பக்தி, மடமை ஆகியவற்றை போக்க மருந்து உண்டு.
கழுதை-இவரது ஞானங்களுக்கு எதிர் மறையாக செயல் பட்டு,இங்குள்ள முனிவர்களிடம் உதை வாங்கினால் மருந்து இல்லை.ஊமத்தங்காயை பிரசாதம் செய்ய பயன் படுத்தி உன்னை வசியம் செய்தால் ,நீ நெல்லிக்காயை உண்டு அதனை முறித்து விடு.

யாகவா உரையாடல் ;;; - தலை கீழ் ;;; நான் உன்னை மேலிருந்து, [ஆகாயத்தி லிருந்து] பார்க்கும் போது , இங்கு நீ நடப்பது தலை கீழாய் தான் தெரிகிறது. உன் செயல் யாவும் தலை கீழ். அழியும் உடல், அழியா உயிர் கொண்ட இவன் தன் பொய் உடலை மெய் உடல் என்கிறான். பசுவின் பால் அருந்தி வளர்ந்த இவன்,பாம்பை பயத்தால் வணங்குகின்றான்.தர்மாவின் பலனை பெற்று வளர்ந்த பின் தர்மா,கர்மா அறியாது வணங்குகின்றான்.உயிர் உள்ளனவற்றிக்கு செய்யா பாவி இவன் உயிரும்,மயிரும் அற்ற சிலைக்கு செய்வதை தர்மா என்கிறான். புலியை பார்த்து பயப்படுகிறான்.புலித்தோலில் அமர்ந்து உள்ளவனை கும்பிடுகிறான். இல்லறமற்றவனிடம்   இல்லற பிரச்னைக்கு தீர்வு காணும் முட்டாள் தனத்தை செய்கிறான்.மதம் என்கிற மதம் பிடித்து அலையும் இவன் ,மரணம் ஓன்று இருப்பதை மறந்து அலைகிறான்.பிரம்மாவை தாழ்வாகவும்,சிவனை உயர்வாகவும் சொலிகிறான்.பிரம்மா-வயல் காட்டில் வேலை செய்யும் உழவனுக்கும்  அவன் மனைவி  பாசத்துடன்  கஞ்சி கலயம் கொண்டு வருவாள்.விஷ்ணு-தோட்டத்தினை காவல் செய்யும் காவல் காரனுக்கும் அவன் மனைவி  பாசத்துடன்  கஞ்சி கலயம் கொண்டு வருவாள். சிவன்-இடுகாட்டில் வேலை செய்பவனுக்கும்   அவன் மனைவி  பாசத்துடன்  கஞ்சி கலயம் கொண்டு வருவாளோ ? உயர்ந்தவன் யார்? ஏய் ! பொய் உடல் காரனே சிந்தி.

யாகவா உரையாடல் ;;; - கொடு .என்னவே இது? கற்கண்டுப்பா. இங்கு உள்ள எல்லோருக்கும் கொடு .இவையில் இல்லாத பொருள் நீ எதை செய்தாய்.?என் பொருளை  எடுத்து நீ பிறருக்கு கொடுப்பதே உன் பொருள்.அதுவே தர்மா.நீ உழைத்து பிறர்க்கு உதவுவதே தர்மா.இவையில் உழைத்து சேர்த்த பொருள் யாவும் உன் பொருள் அல்ல .உன் உழைப்பால் உண்டாகும் நன்மையே உன் பொருள்.தேனீயின் உழைப்பு - உனக்கு தேன் (அமிர்த பொருள்கிடைக்க.சிலந்தியின் உழைப்பு - பிறரை சிக்க வைப்பதில் என்பதனை உணர்.யாகவாவல் இவையில் கிடைத்தது தேன் அமிர்தபால்.அப்பொருளை உட்க்கொண்ட நீ அதன் வழி நடந்து பிறர்க்கு இவரது ஞானங்களை சொல்லி க்கொடு.அச்செயலே உன் பொருள்.யாகவா முனிவரின் கருத்துக்களை அல்லி எடு.எல்லோருக்கும் சொல்லி க்கொடு.லோகத்தை வந்தடைவாய்..உன்னால் முடிந்ததை கொடுத்து பழகு.கொட்டியா வைத்துள்ளது என்று சொல்லாதே.

யாகவா  உரையாடல் ;;; உன் இடத்திலேயே உட்க்காருவே!  நான் பிறர்க்கு என தூக்கி போடும் பொருளை நீ எட்டி பிடிக்காதே .உனக்கு உரிய பொருள் உன் இடம் தேடி வரும்.பிரித்து வைத்துள்ள பொருள் யாவும் நல்லதானால்,வைத்துள்ள பொருள் யாவும் அப்படியே உள்ளன.மனிதன்  ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறம்,மாநிலம்,நாடு, ஏழை, பணக்காரன்,என பலவாறாக பிரித்து வைக்கப்பட்டுள்ளான்.அவ்வாறு பிரித்து வைக்க பட்டுள்ள மனிதன் தன் இடத்தில் இருந்து எங்கும் போக வேண்டாம்.[மதம் மாற வேண்டாம்].பிறரை எட்டி பிடிக்க எண்ணவும் வேண்டாம்.பிரித்து வைக்கப்பட்டுள்ள மனிதர்கள் யாவும் இவரது நன்மை எனும் ஞானங்களை உட்க்கொண்டு நல்லதானால், இவரால் கடலுக்கு அடியில் சிறைப்பட்டு மீட்கப்பட்டு வைத்துள்ள 5000  ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் சற்றும் தன் தன்மை மாறாமல்,உன் நன்மைக்கு என  அப்படியே உள்ளது.அதுவே சஞ்சிநாதம், அழியா ஆதி வேதம்,நீ உட்க்கொள்ள !காண்டமும் உன் நன் நிலைக்கு ஏற்ப நன்மை என்பதனை உன் இடத்திற்க்கே வந்து சேர்க்கும்.நான் ஜாதி என குறிப்பிட்டு கூறுகிறேன்.நீ உன் ஜாதிக்கு மதம் [வெறி] பிடிக்காமல் பார்த்து கொள்.

யாகவா  உரையாடல் ;;; இரண்டு என்னும் பொருள்;
நட்சத்திர காண்ட முனிவர்கள் ஏட்டில் வரைவது;;;தர்மா,கர்மா
தர்மா-நம் தந்தை யாகவா அவர்களால் யுகத்திற்கு கிடைத்த பொருள்.
கர்மா-யாகவா கருத்துக்களை ஏற்க மறுக்கும் மதம் கொண்ட மனம்,திறனற்ற அறிவு , தன்னிலை மறக்க செய்யும் வேடம்.
போதும் என்னும் பொருள் இரண்டு-பசியும் ,பிணியும்.இவை தவிர போதும் என்னும் எண்ணம் இடுகாடு போகும் வரை வருவதில்லையே ஏன்? யூகி.
வேண்டா பொருள் இரண்டு-மலமும்,பிணமும்.
மலம்-மலத்தையும் சந்தனம் போல் பாவிக்கும் மனம் கொண்ட தாய்.
பிணம் -ஓர் நாள் உன் பிணம் தூக்க மனிதர்களுடன் மனிதனாக பாசமாக பழகு.
கடவுளை காண வழி கேட்க கூடாத நபர்கள்-பக்தி என்னும் போதையில் இருப்பவன், நாத்திகன் என்னும் குருடன்.பஜனை என்னும் போதையில் இருப்பவன் பக்திமான். புரியாததை பொய் என்னும் நாத்திகன்.
இரண்டு ஞானங்கள்-திருஞானம்,பெருஞானம்.
திருஞானம்-அழியும் உடலுக்கு காரணமான தாய்,தந்தை மற்றும் மனைவி ,மக்கள், உறவினர்,நண்பர்கள்,இவர்களை பற்றிய செயல்பாடு உடைய சிந்தனை.
பெருஞ்ஞானம்-அழியா உயிருக்கு காரணமாகிய நம் தந்தையை பற்றிய சிந்தனை.நம் இடம் பற்றிய சிந்தனை.
மனிதர்களில் இல்லா ஊனங்கள் இரண்டு-நெற்றியில்லா மனிதன்,வயிறில்லா மனிதன்.விதி வரையப்பட்ட நெற்றியை வினை கொண்டு பாழாக்காதே.வயிறில்லா மனிதன்-வயிறு என்பது உண்பதற்க,உணர்வதற்கா,சிந்தி மானிடா.
பயனில்லா பொருள்-பாசமில்லா பாவியிடம் உள்ள பணம்.பணமில்லா பாவியிடம் உள்ள பாசம்.
யாகவா கருத்துக்களை  கற்பதினால் இல்லை, பயன் கடை பிடித்தால் உண்டு,பயன் என்பதை மறவாதே !

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;