Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நானே மாயக் கண்ணன் ! இங்கு மாயம் புரிய வந்தேன் ! ஈசனாய் நானிருந்து உன் இன்னல் களைய வந்தேன் !INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;;  நானே மாயக் கண்ணன் ! இங்கு மாயம் புரிய வந்தேன் ! ஈசனாய் நானிருந்து உன் இன்னல் களைய வந்தேன் !
29 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நானே மாயக் கண்ணன் ! இங்கு மாயம் புரிய வந்தேன் ! ஈசனாய் நானிருந்து உன் இன்னல் களைய வந்தேன் !
ஆனந்த தூறல் நான் ! ஆர்ப்பரிக்கும் வெள்ளமும் நான் ! வான் அமிர்தம் நான் ! உனை வாழ வைக்க வந்த வான்மகனும் நான் !
வான் அமிர்தம் மழை !
விண்ணின் கொடை வான் அமிர்தம் மழை ! அது மண்ணிற்கும், மண்ணின் மேல் இருக்கும் உனக்கும் மகிழ்ச்சி தரும் ! அது விண்ணுக்கு அல்ல ! இங்கே இந்த பூமி என்ற பெண்ணுக்கும் கர்ப்பம் தரிக்க வந்த மின்னுருவாய் வந்த மேன் மழை ! இங்கே துளிகளை நிரப்பி பின் அதை தூய்மையாக உருவாக்கி உனக்கு அள்ளிப் பருகத் தந்தான் ! நீ உண்ணும் உணவுக்கு உயிரையும் கொடுத்தான் ஊழிக் காலத்தின் நாயகன் ! அந்த ஆனந்த கூத்தினை அறியாமல் நீ கடல் அலை போல ஆர்ப்பரிக்கின்றாய்! தூவும் மழை இல்லையென்றால் துயர்ப்படுவாய் ! உணர் !
கீழே நீர் இல்லையென்றால் என்றால் மேலே நோக்குகிறாய் ! இடைப்பட்ட காலத்தில் எதை நோக்குகிறாய் ? மழையில் பறவைகள், மிருகங்கள், மரங்கள் ஆனந்தமாக நனைகின்றன ! ஆனால் நீ வீட்டுக்குள் முடங்கி போனாய் மூடனை போல ! விண்ணின் மழைத் துளி மண்ணில் உயிர்த்துவம் நிலைக்க வைக்கும் ! துளி துளியாய் தூவும் தூரிகையை மறந்து நீ துயர்ப்பட கண்டேன் நான் !
மழைத்துளி மண்ணில் விழுந்தவுடன் பூமித்தாய் வாசனை வீசி வரவேற்கின்றாள் ! நீ தான் தூற்றக் கண்டேன் ! நீ செய்யும் தர்மத்தை வைத்து தான் உனக்கு கொடுக்கும் அளவு ! நீருக்கு சண்டையிடும் காலம் வந்துவிட்டது ! இனி மழை பொய்க்க கண்டேன் ! உலகின் பல நாடுகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ! இனி மழைக்கு பருவ காலம் இருக்காது ! பருவ நிலை மாறும் ! பஞ்ச நிலை தலைவிரித்தாடும் ! மதம் கொண்ட அசுர வர்க்கங்கள் மனிதக் கறியை இனி உண்பார்கள் !
ஆனால் நூற்றில் பத்து பேர் தர்மாக்கள் ! அவர்கள் காக்கப்படுவார்கள் ! இனியாவது மதத்திற்காக சண்டை போடாமல் மனிதனாக இரு ! தரைக்கும், நீருக்கும், காற்றுக்கு மதமில்லை ! உனக்கு எதற்கு மதம் ?
விண்ணின் மழைத் துளியை நம்பித்தான் மண்ணில் அத்தனை பேரும் ! அது புரியாமல் மதம் என்ற உடைந்த பாய் மரத்தில் துடுப்பில்லாமல் அலைகின்றாய் ! நீ மூழ்கிக் கொண்டிருக்கின்றாய் என்பதை உணர் ! நான் நீரில்லாமல் வாழ்வேன் ! நிலமில்லாமல் வாழ்வேன் ! காற்றை மட்டும் உட்கொண்டு காலம் யாவும் கதிர் போல வாழ்வேன் ! என் நாமம் சொல் ! மாதம் மும்மாரி மழை பெய்யும் !
ஆகாயப் பால் என்ற அமிர்த நீரை வணங்கு ! நீசனாய் இருக்காதே ! இங்கே பாவம் செய்து யாகம் செய்தால் மழை வராது ! நீ தர்மம் செய்து யோகம் பெறு ! நல் மழை நாளும் பெய்யும் ! மாதம் மும்மாரி மழை பெய்யும் ! நீ மாறிப் போனதால் மாரியும் மாறிப் போனது ! நீ செய்யும் செயலால் உன்னை மரங்களும், பறவைகளும், மிருகங்களும் தூற்றக் கண்டேன். தூறல் உன்னாலே பூமியில் விழவில்லை என்று துயர்ப்பட பேசக் கண்டேன். புரண்டு வரும் நீரை பொக்கிஷமாக அடைத்துவை !
தங்கத்தை சேர்க்காதே ! தரையை சேர்க்காதே ! தங்கத்தை கூவி விற்கும் காலம் வந்துவிட்டது. பொற்காசு காலம் வரும் !
இந்த புனிதன் சொல்வதை கேள் !
இனி தங்கம் திருடமாட்டான். தானியம் திருடுவான் ! நீரை திருடுவான் ! நீர் புரண்டு வர நான் கண்டேன் ! பூமியும் புரண்டால் என்ன செய்வாய் ? இனி பூமியும் அடிக்கடி புரளும் ! புண்ணியம் குறைந்து போனது ! பூலோகம் அல்லல்படுகின்றது ! பனித்துளி அமிர்தம் ! அதிகாலையில் விழும் பனித்துளியை ஒரு சொட்டு அருந்தினால் ஆனந்த வாழ்வு பெறுவாய் ! அரச மரம், அருகம்புல், நாயுறுவி இதில் விழும் பனித்துளி அமிர்தத்தை விட மேலானது ! நாய் அருகம்புல் சாப்பிடும் ! அதில் பனித்துளி பட்டு உயிர்த்துவம் இருப்பதால் . எத்தனையோ புல் வகைகள் இருக்கிறது ! ஏன் அருகம்புல்லை மட்டும் நாய் சாப்பிடுகிறது என்று கண்டுபிடி ! நீ இதை ஆராயாமல் அருகம்புல்லைக் கட்டி சிலைக்கு போடுகிறாய் ! கீரிப்பிள்ளைக்கு தெரியும் காலையில் பனித்துளியை அருந்தும் வித்தை.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று மிருகங்களுக்கு தெரியும். உனக்கு தான் ஏதும் தெரியவில்லை !
நீ கோவிலையும், மலையையும் தேடி அலைகின்றாய் ! மழை நீரில் மகத்துவம் கோடி உண்டு ! மழைத்துளி அமிர்தம் அதில் கோடி ரகசியம் உண்டு ! மேலிருந்து வரும் எந்த மழைத்துளியை உள் வாங்கினால் கர்ப்பம் தரிக்கும் என ஓரறிவுள்ள சிப்பிக்கு தெரியும் ! முத்துக்கள் மழைத் துளியால் உருவாகும் வித்தையை கண்டுபிடி ! நீ ஞானியாவாய் !
என்னை நினை ! எல்லா வித்தையும், எல்லா ஞானமும் உனக்கு வந்துவிடும் ! குருவாய், தந்தையாய் உன் இதயத்தில் நானிருந்து உனக்கு கற்றுத் தருவேன் ! வான் மகளை நேசி ! வாழ்த்துவாள் தினம் உன்னை ! புனித தாமரை போல மேல் நோக்கி வணங்கு ! மாதம் மும்மாரி பெய்து உனை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பாள் !
சில வேளையில் என் கடமைக்காக வெளியில் சென்று வரும் பொழுது புனித மழை வேகமாக பெய்யும் ! அனால் நான் ஒரு சொட்டு நீர் உடம்பில் படாமல் என் துணியெல்லாம் நனையாமல் வீட்டிற்கு வருவேன் ! வீட்டில் எல்லோரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள் ! இவர் சித்து வேலை செய்து மழை நீரில் நனையாமல் வருகின்றார் என்று ! நான் சிரிப்பேன் ! அனைத்தும் நானாக இருக்கும் போது நான் ஏன் சித்து வேலை செய்ய வேண்டும் ? மனிதரிடம் சித்து வேலையை காண்பித்து எனக்கென்ன லாபம் ? என் தேவர்கள் எனக்கு குடை பிடித்து வருவதை யார் அறிவார் ? எல்லாம் என் மாயை ! நான் மாயவன் என்பதால் என் அடி முடியை காண லோகத்தில் தவம் இருக்கிறார்கள் !
நான் யுகத்தில் கை கால் முளைத்த மனிதனாக பூடகமாக அலைகின்றேன். உணர்வாயா நீ ?
என் அருகில் இருப்பவர்களுக்கு என் ஆனந்த லீலைகள் புரியும் ! நான் சுயம்பு ! மரம், செடி, கொடி, ஜீவராசிகளுக்கு என்னை தெரியும் ! நீ தான் என்னை காணாமல் செல்கின்றாய் ! உன் அறியாமையை என்னவென்று சொல்ல ? இந்த ஆத்மத்தின் தலைவனை அறிய முயற்சி செய் ! ஆனந்த வாழ்வுக்கு உனை கொண்டு செல்வேன் !
ஆனந்த தூறலும் நான் ! ஆர்ப்பரிக்கும் வெள்ளமும் நான் !
இது வேடிக்கை பேச்சல்ல ! இது விஷமத்தின் சூழ்ச்சி அல்ல !
நானே மாயக் கண்ணன் ! மாயம் புரிய வந்தேன் இங்கு ! ஈசனாக நானிருந்து உன் இன்னல் களைய வந்தேன் ! என்னால் உன் உயிரையும், ஆன்மாவையும் ஆளுமை செய்ய முடியும் ! நான் நானல்ல ! நான் இருக்கும் இடத்திலும், என் பெயர் ஒலிக்கின்ற இடத்திலும் பெரும் செல்வம், நிம்மதி, நல்ல நீர், ஆரோக்கியம் சத்யமாக உண்டு ! தர்மத்தை செய்து மறந்து விடு !
நான் மாரியாய் பொழிவேன் உன் இல்லத்தில் !
நான் வான் அமிர்தம் ! நான் இநன்யா !

No comments:

Post a Comment