Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

ரகசியம் 6- நம்மை கண்கானிப்பது யார் ? (22-03-2016) INANYA NAMOO NAMA ;;;

77  ரகசியம் 6- நம்மை கண்கானிப்பது யார் ? (22-03-2016)

இநன்யா நமோ நம.. !!

INANYA NAMOO NAMA ;;; 

ரகசியம் – பகுதி 6
INANYA NAMOO NAMA ;;; 
நம்மை கண்கானிப்பது யார் ?
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஒரு தேனீக்கு பூவுக்குள் இருக்கும் தேனை யார் ஒளித்து வைத்தது என்று தெரியாது. சொல்லி புரிய வைக்கவும் முடியாது ! எதுவும் தெரியாமல் , புரியாமல் சந்தேகமின்றி அது வாழ்நாள் முழுவதும் தேனை சேகரித்துக் கொண்டே இருக்கும். தன் கடமையை உணர்ந்து சத்ய வழியில் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் ! படைப்பின் ரகசியங்கள் உணர்ந்து அறியப்பட வேண்டியவை !
ஆகாயத்தில் அதிசயங்கள் கோடான கோடி உண்டு ! கடவுளிடம் இதை ஒரு நாள் இதை கேட்க வேண்டிய சூழ்நிலையும் வந்தது. ஒரு நாள் முழுவதும் ஒரு நொடி கூட என் கண்களை இமைக்கவிடாமல் என்னை இடைவிடாமல் பார்த்து என்னை ஆகாயத்திற்கே கைகோர்த்து அழைத்து சென்றுவிட்டார். அனைத்தையும் சொல்லி புரிய வைத்தார். படைத்தவனால் மட்டுமே நம் உள்ளே வந்து காட்சிபடுத்தி, சொல்லி, விவரித்து, புரிய வைக்க முடிகின்ற ரகசியங்கள் அவை. மொழிகளால் புரியவைப்பது சிரமம்.
கடவுள் கூறிய கருத்துக்களில் சிலவற்றை மட்டும் இப்போது ஆராய்ந்து புரிந்து உணர்ந்து இந்த சிறு பதிவை அவரின் ஆசியுடன் எழுத தொடங்குகிறேன்.
இந்த வருடத்தின் முதல் பதிவு ஜனவரி 7 ஆம் தேதி வெளிவந்த “நீ ஆயிரம் வலிமைமிக்க அரிமா” என்பதிலிருந்து கடவுள் அருளிய சில வரிகளை இப்போது இந்த பதிவிற்கு உதவியாக மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
“”வரும் மார்ச் மாதத்தில் வானில் ஒரு நீண்ட வால் நட்சத்திரம் உருவாகும் ! அது உலகத்தை உற்று நோக்க வைக்கும் ! நான் மார்ச் மாதத்திலிருந்து ஞான தீட்சை தருவேன். அது மானச தீட்சையாகும். உலகமெல்லாம் நன்மக்களை தேர்ந்தெடுத்து ஞான வித்தையை சொல்லிக் கொடுப்பேன். அந்த ஞான குலங்கள் சிங்கத்தை போல பாயும், அசுரர்களை கர்ஜித்து குதறி தள்ளும் ! இது வேடிக்கை பேச்சல்ல ! நான் சொல்வது சொப்பன கருத்துமல்ல. கற்பனை கருத்துமல்ல. சத்ய கருத்து ! இந்த யுகம் இனி மாறும் ! அதன் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பிக்கும். இயற்கை மாற்றங்களும், பேரிடர்களும், சொல்ல வொனா வேதனைகளும் உண்டு ! இதன் தாக்கம் உலகத்தையே புரட்டி போடும்””
கடவுள் எழுதிய ஒவ்வொரு பதிவிலும் , ஒவ்வொரு வார்த்தையிலும் கோடி அர்த்தங்கள் உண்டு. அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு நாம் மேலும் மேலும் அவரை உணர வேண்டும்.
கடவுளின் அனுமதியின்றி இங்கே ஒரு அணு கூட அசைவதில்லை. சூரியனும் , சந்திரனும், விண்மீன்களும், ஆகாய நிகழ்வுகளும் நமக்கு அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தி படைத்தவனின் பெருமையை தினம் தினம் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
நட்சத்திரம் அல்லது விண் மீன் (STAR), வால் விண்மீன் (COMET), கோள் (PLANET), சிறு கோள் (ASTERIOD), எரி மீன் (METEOR), எரி கல் (METEORITE), எரி கல் பொழிவு (METEORITE SHOWER) முதலிய அனைத்துமே நமக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கின்றன.
பிரபஞ்சம், காண்டம். மண்டலம், லோகம், யுகம் இவையனைத்திற்கும் பொதுவானவை விண்மீன் கூட்டங்கள் (நட்சத்திரங்கள்). அதாவது கடவுள்களும், ஆகாய மக்கள் அனைவரும் பார்க்கின்ற நட்சத்திரங்களை இந்த யுகம் என்ற நரகத்தில் உள்ள நம்மாலும் பார்க்க முடியும். ஆக நட்சத்திர மண்டலம் என்பது இந்த ஐந்திற்கும் பொதுவானது. அதனால் தான் அதன் ஒலி பிரதிபலிப்பு ஐந்தாக பிரிந்து காணப்படுகின்றது. நட்சத்திரங்கள் யுகம் உருவாகும் போது உருவாக்கப்பட்டவை. காலத்திற்கும் அழியாதது. ஆதிகாலத்தில் பகலிலும் நட்சத்திரத்தை பார்க்கும் ஞானமுள்ளவர்களாக மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று கடவுள் சொல்வார். நட்சத்திரங்களில் கோடான கோடி ரகசியங்கள் உண்டு.
கோள்கள் (PLANETS) அனைத்துமே நம் யுகத்திற்கு அருகில் உள்ள நட்சத்திரங்கள் என்பது நம் கடவுள் கூறிய ரகசியம். ஆக நம் உலகிற்கு உள்ளது இரண்டே கோள்கள் தான். அவை சூரியனும் சந்திரனும் மட்டுமே ! அங்கே எவராலும் செல்ல முடியாது. சென்று வருவதற்காக கோள்கள் படைக்கப்பட வில்லை. நாம் உணர்வதற்காக படைக்கப்பட்டன. இதைப் பற்றி விரிவாக அடுத்த ரகசிய பதிவில் பார்க்கலாம்.
சிறு கோள் (ASTERIOD) என்பது ஆகாய காற்றின் சுழற்சியால் நட்சத்திரத்தில் ஏற்படும் குப்பைகளின் சேர்க்கை. இதில் இருந்து பிரிந்து உடைந்து வருபவை தான் எரி மீன் (METEOR). இவைகள் நம் பூமிப் பகுதியை நோக்கி வரும் போது அங்கே உள்ள வளிமண்டல சுழற்சியால் ஒரு சிலவைகள் தீப்பிடித்து எரியும். இவை தான் எரி கல் (METEORITE). எரிகற்கள் பல பகுதிகளாக பிரிந்து பூமியில் விழுந்தால் அவை எரிகல் பொழிவு (METEOR SHOWER).
பூமியில் மிகுந்த சேதத்தை உருவாக்குவதும் இந்த எரிகற்கள் (METEORITE) தான். கடந்த 15-2-2013 ஆம் நாளன்று சூரியனை விட முப்பது மடங்கு வெளிச்சமாக, மணிக்கு 69000 km வேகத்தில் ரஷ்யாவில் மிகப் பெரிய சேதத்தை உருவாக்கியதும் 20 மீட்டர் விட்டமுள்ள ஒரு சின்ன எரி கல் தான். ஆறு நகரங்களின் இதன் தாக்கம் உணரப்பட்டது. 7200 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தது. எல்லாம் இயற்கையின் எச்சரிக்கை. கடவுளின் அனுமதியில்லாமல் இங்கே எதுவும் நடப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளவும் !
மேலே கூறிய இவையனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுபவை வால் நட்சத்திரங்கள். கோடான கோடி நட்சத்திரங்கள் விண்ணில் எப்போதும் ஒன்றோடு ஒன்று பிரியாமல் தவழ்ந்து கொண்டிருக்க அவ்வப்போது பூமிக்கு மிக அருகில் வந்து செல்பவை தான் கடவுள் தன் பதிவில் குறிப்பிட்டு சொல்லிய வால் நட்சத்திரங்கள்.
வால் நட்சத்திரங்கள் என்பது நட்சத்திர மண்டலத்தை சேர்ந்தது அல்ல. கடவுளால் ஒரு காரணமாக புதிதாக படைத்து பூமிக்கு அருகில் அனுப்பப்படுவது. நாம் பார்த்து உணர்வதற்காக ! இது பூமியோடு மோதாது. ஆனால் பூமியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு செல்லும். வால் நட்சத்திரம் எங்கிருந்து அனுப்பப்பட்டதோ அங்கேயே திரும்பும். அது ஆகாய முனிவர்களால் இயக்கப்படுவது.
முனிவர்கள் அதன் மேல் அமர்ந்து இயக்குவார்கள் என்று கடவுள் சொல்லியுள்ளார். அது வாகனத்தை போல ! நம்மை நோட்டம் விடுவதற்காக அனுப்பப்படுபவை ! உலக மாற்றத்தின் பொழுது வால் நட்சத்திரம் தோன்றும். உலகம் உருமாறும் பொழுது முனிவர்கள் நம் உலகிற்கு அருகில் வந்து திட்டமிட்டு செல்வார்கள்.
வால் நட்சத்திரம் என்பது கடவுள் நமக்கு விடுக்கின்ற எச்சரிக்கை !
பல புராணங்களிலும், இதிகாசங்களிலும், கலாச்சாரங்களிலும் வால் நட்சத்திரங்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டுள்ளது. சில முக்கிய நிகழ்வுகளோடு இதை தொடர்புபடுத்தியும் உள்ளனர்.
வால் நட்சத்திரங்கள் பாறைகள், கற்கள், உறைந்த பனிக்கட்டி முதலியவற்றால் ஆனதாக கருதப்படுகிறது. 20 கிலோமீட்டர் முதல் 300 கிலோ மீட்டர் வரை வால் நட்சத்திரங்களின் குறுக்களவு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. வால் நீளம் 10 லட்சம் கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என்று உத்தேசமாக கணிக்கப்பட்டுள்ளது.
பூமிப் பகுதியை நெருங்கும்போது வளி மண்டலத்தின் பல்வேறு வகையான தாக்கங்களால் வால் நட்சத்திரத்திலிருந்து வெளியே தூசும், வாயுக்களும் தள்ளப்படும். அதுதான் நீண்ட வால் போல அமையும். அவற்றின் மீது சூரிய ஒளி படும் பொழுது அது வால் போல தோற்றம் அளிக்கும். இயற்கையின் ஒவ்வொரு செய்கைக்கும் அர்த்தம் உண்டு. அர்த்தமின்றி இங்கு எதுவும் நடப்பதில்லை !
நட்சத்திரத்திற்கு வால் ஒன்றை வைத்து அனுப்பியுள்ளது ஏன் என்று சிந்தியுங்கள். வால் என்பது முடிவிற்கான அறிகுறி. முடிவென்றால் அழிவல்ல ! மாற்றம் ! ஒன்று முடிந்து மற்றொன்று ஆரம்பம் ! கர்மம் அழிந்து தர்மம் ஆரம்பம் !
இந்த யுகத்தில் படைக்கப்பட்ட சில ஜீவராசிகளை தவிர அனைத்து மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் வால் உண்டு. அதனால் தான் ஜீவராசிகளுக்கும், பறவைகளுக்கும் மறுபிறவி இல்லை. மடிந்தவுடன் அதன் வாழ்வு முடிந்து பேராத்மாவை சேர்ந்துவிடும். மனிதனை ஏன் வால் இல்லாமல் படைத்தான் என்று ஆழமாக சிந்தித்தால் படைப்பின் சூட்சுமம் புரியும். மனிதனுக்கு மட்டுமே இங்கே மறுபிறவி உள்ளது.
நம்மை பாதுகாக்கும் நாயிற்கு ஒரு வேளை உணவளித்தால் அது நன்றி மறவாமல் காலம் முழுவதும் தன் வாலை அதிசயமாய் ஆட்டிக் கொண்டிருக்கும். ஆனால் வால் இல்லாத மனிதன் பார்க்கும் திசையெங்கும் அதிசயத்தை காண்பித்தாலும் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க மறந்தான் என்று சொல்வார் கடவுள்.
இந்த மாதம் (மார்ச் 2016) நாம் பார்க்கப் போகும் வால் நட்சத்திரத்தின் வருகையை அடுத்து உலகம் வேகமாக மாற்றம் அடையும் என்று கடவுள் சொல்கிறார்.
“”கர்மாக்கள் அழிக்கப்படுவார்கள். புது புது நட்சத்திரங்கள் தோன்றும். புது புது வித்துக்கள் தோன்றும். புது புது நோய்கள் தோன்றும். ஆதிகாலத்தில் அழிந்த ஜீவராசிகள் அனைத்தும் மீண்டும் உலகில் ஜணனமாகும். விஞ்ஞானம் கெடும். பஞ்சாங்கம் கெடும். கருவில் சிசு கவி பாடும். கற்ப அறைகள் மூடப்படும். கோயில் இருக்கும் இடமெல்லாம் குடியேறும் எண்ணம் மாறி அரச மரத்தின் அடியில் மக்கள் குடியேறுவார்கள். மதம் , ஜாதி, நாள், நட்சத்திரம் பார்க்காமல் ஆணும், பெண்ணும் மரத்தடியில் திருமணம் முடிப்பார்கள். தர்மாக்களுக்கு வசந்த காலம் தான் இனி. யுகத்தின் வசந்த காலம் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பமாகும். நல்ல அரசர்களும், தர்மாக்களும் உலகம் முழுவதும் ஆட்சி செய்வார்கள் ! இனி பிற மொழிக்காரர்களும், பிற நாட்டவரும் தமிழ் நாட்டை நோக்கி வருவார்கள். ஆகாயத்தில் பல அதிசயங்கள் நடக்கும். பறக்கும் தட்டில் பல கோடி முனிவர்கள் வருவார்கள். வால் நட்சத்திரத்தின் ஒளிக் கதிர்கள் கோயில் கோபுரத்தின் மணிக் கலசங்களில் பட்டு சிதிலமடையும்”” என்றும் கடவுள் இநன்யா சொல்கிறார்.
ஏழாம் கடவுளின் வருகையும், உலக மாற்றமும் ஆதிகாலத்தில் வாழ்ந்த ஞான பெருமக்களால் கணித்து சொல்லப்படுள்ளது. இயற்கை மாற்றங்களையும், ஆகாயத்தையும் பார்த்து அனைத்தையும் ஞான திருஷ்டியில் உணர்ந்து ஏதேனும் ஒரு விதத்தில் பதிவு செய்தார்கள். ஆனால் இப்பொழுது அதை அறியாமையில் தவறாக ஆராய்ந்து கணித்து புரிந்து கொள்கிறார்கள். உலகில் பல மதங்களிலும். கலாச்சாரங்களிலும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களிலும் புதைந்துள்ள கடவுளின் ரகசியங்கள் இனி ஞான பெரு மக்களால் ஏதாவது ஒரு வழியில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ! கடவுளின் வருகையை உலக மக்கள் அறிந்து கொள்ளும் காலம் வெகு விரைவில்.
இமயத்தை தன் வசமாக்கிய பிரபஞ்சத்தின் இளவரசரான நம் கடவுளை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கண்கானிக்கின்றார்கள். மேலிருந்து பெரும் படை இங்கே நம் யுகத்திற்கு இறங்கியுள்ளது அவருக்கு துணையாக ! உலக மாற்றம் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
அவரின் நாமத்தை சொல்லும் நம்மை கோடான கோடி முனிவர்கள் மேலிருந்து கண்கானிக்கின்றார்கள். துன்பங்களையும், சோதனைகளையும் கண்டு துவண்டுவிடாதீர்கள். அது நம்மை மேலும் உணரச் செய்வதற்காக ! நம் அனைவரையும் கடவுளிடம் சேர்ப்பதும் அவைகள் தான் ! அவைகளுக்கு நன்றி சொல்லுங்கள்.
பறவைகளும், அணில்களும் வீட்டிற்கு வந்து வேத சப்தத்தை பரப்பிவிட்டு செல்லும். ஆதிகாலத்தில் பறவையை பார்த்து வாழ்ந்தான் மனிதன் என்று சொல்வார் கடவுள். எப்போதும் உயரத்தில் கூடுகட்டும் பறவைகள் உலகில் உன்னதமான படைப்பு ! இப்போது பறவைகள் மூலமாக தர்மாக்கள் கண்கானிக்கப்படுவார்கள். இனி பறவைகளும், ஓரறிவு உள்ள போதி மரங்களும் ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞானத்தை போதிக்கும் !
இனி இந்த உலகம் சத்ய வழியை பின்பற்ற தொடங்கும் !
கடவுள் சொல்லியது போல் இந்த வாரம் வால் நட்சத்திரம் நம் யுகத்தை நோக்கி வரும் என்று உறுதியாக கணித்து சொல்லப்பட்டுள்ளது. ஆங்கில நாளிதழ்கள் பலவற்றிலும் ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துவிட்டன.
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த வால் நட்சத்திரத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வருகையை எதிர் நோக்கியுள்ளது.
கடவுளின் வார்த்தைகள் என்றும் பொய்ப்பதில்லை. கடவுளுக்கு கட்டுப்பட்ட இயற்கையும் அவரின் சொல்லை மீறுவதில்லை. கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் ! கடவுள் வாழும் காலத்தில் அவரை உணர்ந்து வாழ எத்தனை கோடி ஆண்டுகள் தவம் செய்தோமோ ?
வந்துள்ளவர் கடவுள் ! கடவுள் ! கடவுள் !
நாம் உணர வேண்டும் இறுதி வரை உறுதியாக !
அதிகாரம் , அகங்காரம், ஆணவம், பேராசை, மோகம், பிடிவாதம், கோபம், வஞ்சம், பொறாமை, சூது, சூழ்ச்சியுள்ள இந்த உலகம் உருமாறி ஞானம் மட்டும் மேலோங்கி உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் சத்ய வழியை பின்பற்ற கடவுளை வேண்டுகிறேன் !
காற்று என்னும் அற்புதத்தில் பறந்து, நீர் என்னும் அதிசயத்தில் நீந்தி, மீன் என்னும் ஆழமான ஞானத்தை போராடி அடைந்து வெற்றி பெறுபவை மீன் கொத்திப் பறவைகள் ! மீனுக்கு விரித்த சூழ்ச்சி வலையில் சிக்காத மீன் கொத்தி பறவைகளும், உயரே காற்றில் தவழும் கருடர்களும், வேதம் என்னும் மகரந்தத்தை எங்கும் தூவும் உணர்ந்த ஞான மலர்களும் கடவுளின் நாமத்தையும், வேதத்தையும் இனி உலகம் முழுவதும் கொண்டு செல்வார்கள் !
தடைகளை தாண்டி வெல்வோம் இந்த பிறவியிலேயே!
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் நன்றி !
இநன்யா நமோ நம !
இநன்யா நமோ நம !
இநன்யா நமோ நம !

Astronomers hope to unravel the mystery of the pair as they brush by Earth.
VOX.COM|BY BRIAN RESNICK

No comments:

Post a Comment