Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;;விண் படைத்தோன் வரைந்தேன் விதியை உன் நெற்றியில் ! கொன்றால் பாவம் தின்றால் போச்சு ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;; விண் படைத்தோன் வரைந்தேன் விதியை உன் நெற்றியில் ! கொன்றால் பாவம் தின்றால் போச்சு !

63 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 

விண் படைத்தோன் வரைந்தேன் விதியை உன் நெற்றியில் ! யுகத்தில் கண் படைத்தேன் ! காணாமல் அலைகின்றாயே ? ஆநிரை மேய்த்தவன் நான் ! ஆழி ஆழம் பார்த்தவன் நான் ! ஆணந்தமானவன் நான் ! நான் இநன்யா !
கொன்றால் பாவம் தின்றால் போச்சு !
வசைபாடும் உயிர்கள் திகிலாய் விண் நோக்கி வேந்தன் எனை அழைக்க கேட்டேன், சொல்ல வொனா துயரம் இந்த பாவி மனிதனால் என்று !
இந்த செம்மறி ஆட்டுக் கூட்டம் உணரா பாவியாக வாழ கண்டேன் ! உணர்வு வரும் பொழுது உன்னை உணர்வாய். அதுவரை எதை உண்டால் நல்லது என்று உனக்கே தெரியாது. மாமிசம் சாப்பிடலாமா என்று என்னிடம் பலர் விளம்ப கேட்டேன். உனக்கு எதை உண்ண வேண்டும், எதை செய்ய வேண்டும் என்பது உன் நிலையை பொறுத்தது.
பிடித்தால் செய் ! பிடிக்காவிட்டால் வெறுத்து ஒதுக்கு !
ஆனாலும் கொல்லாமை வேண்டும். கல்லாமை உன்னிடம் !
யுகத்தில் மிருகங்களை ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட வைத்தேன் ! ஏன் என்று உணர்ந்தாயோ ? ஒரு துளி ரத்தத்திற்காக தான் இங்கு ஓயாமல் சண்டை ! மிருகங்களுக்கு பாவம், புண்ணியம் தெரியாது. கிடையாது ! நீ உணர்வதற்காக படைக்கப்பட்டது அவைகள். நீ அடித்து கொல்வதற்கு அவைகள் படைக்கப்படவில்லை. அணைத்து செல்லவும், அதை மதித்து செல்லவும் படைத்தான் படைப்பின் சூட்சுமதாரி !
மாமிச பிண்டம் நீ, மாமிச பட்சி ஆனாய் ! நீ இங்கு எதையும் விட்டு வைக்கவில்லை. நீ எதை உண்கின்றாயோ அதன் குணம் தான் உனக்கு வரும் ! குணம் தான் உன்னை தீர்மானிக்கின்றது என்பதை புரிந்து கொள் !
என் சிறு வயதில் என் பெற்றோர்கள் குல தெய்வத்தை வேண்டி ஆடு வெட்டி பொங்கலிடுவார்கள். ஏன் ஒரு உயிரை கொன்று தான் நமக்கு சுகம் தருமா இந்த சாமி என்று ஏழு வயதில் யோசிப்பதுண்டு.
ஒரு சமயம் வீட்டில் நான் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்றை பலியிட்டார்கள். என்னிடம் மிகுந்த பாசமாக இருக்கும். என்னை யார் தொட்டாலும் சீறிப் பாயும் அந்த ஆட்டை பலியிட முடிவு செய்தார்கள். மூன்று நாட்கள் முன்னே அது சாப்பிடாமல் இருந்தது. என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியமால் இருந்தது. ஏன் என்று பின்னர் தான் புரிந்தது. என்னை விட்டு பிரியப் போகிறது என்பதை தெரிந்து கொண்டுள்ளது ! அதன் சத்தம், அந்த மரண ஓலம் என்னுள் ஓயாத ரணத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தினேன்.
ஒரு உயிரை கொன்று உடலை வளர்க்க தேவையில்லை. ஆனால் மனிதன் மனிதனை கொன்று சாப்பிடும் காலம் வந்துவிட்டது. உலகின் பல நாடுகள் இனி பஞ்சத்தில் மூழ்கும். இனி பசியின் கொடுமையால் மனித கறியை சாப்பிடுவார்கள்.
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள். ஏழு வயதில், தான் பிச்சை எடுக்கும் போது எல்லோர் வீட்டிலும் எல்லா விதமான சோற்றையும் தருவார்கள் என்று ! அதில் மாமிசம் கூட இருக்கும். பசி ருசி அறியாது என்பதால் அதை உண்ணும் சூழ்நிலை வந்தது. சிறு வயது சூழ்நிலை தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது. அதனால் மாமிசம் சாப்பிட்டால் ஞானம் வராது என்று அர்த்தமில்லை. உணர்ந்தால் துன்பமில்லை என்று சொல்வார்கள்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்கின்றாய். அதன் அர்த்தம் ஒரு உயிரை கொன்று விட்ட பிறகு அதை தின்றால் பாவம் தீர்ந்து விடும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாய். கொன்றதை தின்றால் பாவம் எப்படி போகும் என்று எப்பொழுதாவது யோசித்தாயா ?
மேலோகத்தில், தீர்ப்பு காண்டத்தில் கீழே கொன்ற பாவத்திற்கு நீ எதை கொன்று, ருசித்து சாப்பிட்டாயோ அதன் பாகத்தை உன் உடம்பில் இருந்து வெட்டி உன்னை உண்ண வைப்பார்கள் யாஷிய தீர்ப்பு காண்ட முனிவர்கள். நீ செய்த பாவம் உன் சதையை சாப்பிட்டால் தான் போகும் என்பது தான் அதன் அர்த்தம். ஆதலால் பலியிடாதே. உயிர் கொலை செய்யாதே. பசுவதை செய்யாதே. பரிதவிப்பாய் இங்கு !
ஒரு கிலோ தானியம், பருப்பு கிடைக்க நாற்பது லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும். ஆனால் ஒரு கிலோ அசைவ உணவு கிடைக்க நான்காயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீரின் தேவையை உணர்ந்து பாரடா ! பசுவுக்கு ஒரு கிலோ சதை உற்பத்தியாக பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் தேவை ! ஆனால் அது உனக்கு பாலாக திருப்பி தந்துவிடுகிறது. பசுவுக்கு உண்டான தர்ம குணம் கூட உனக்கில்லையே. ஏன் ?
மிருகங்களின் சதையை தின்று மிருகமாகி போனான் மனிதன் ! சிந்தி !
தானியங்களை பூச்சி அரிக்கும் ! சதையை புழு அரிக்கும் ! இதில் எது உயர்ந்தது என்று நீயே உணர்ந்து கண்டுபிடி !
இங்கு கொல்லாமை வேண்டும் !
பிறர் மனதை கொல்லாமை ! பிற உயிரை கொல்லாமை !
நில்லாது நான் உனக்கு சுகம் தருவேன் !
தொன்னீர், முந்நீர், செந்நீர், உன் பாவம் தீர்க்கும் உமிழ் நீரை விட கீழானது தான்.
அழலில் உழல்கின்றாய், உன் இமை நெற்றி தகிப்பாலே ! பசுவுக்கு இரண்டு இரைப்பை உள்ளது போல எறும்புக்கு இரண்டு வயிறு உண்டு.
படைத்ததில் எண்ணிலடங்கா சூட்சுமம் உண்டு ! பார்த்தவன் ஏன் உணராமல் அலைகின்றாய் ?
பரவை போல் பரந்து விரிந்திடு !
பறவை போல் பறந்து வானில் விரிந்திடு !
நான் பரப்பிரம்மம் ! உன்னை உணர வைப்பேன் !
இங்கே இரண்டு கண் தெரிந்தவன் தான் மிக அதிகமாக பாவம் செய்கின்றான். கண் இல்லாதவன் பாவம் செய்வதில்லை. கண் இல்லாதவன் தவறு செய்யமாட்டான். இனி மேலிருந்து வரும் ஒரு வித வெளிச்சம் உன் கண்களை பாதிக்கும். இனி பறக்கும் தட்டில் பல கோடி முனிவர்கள் வருவார்கள் ! அதன் ஒளியில் கண்கள் இருளாக நான் கண்டேன். இனி நீ செய்த பாவத்திற்கு தண்டனை மறு நிமிடமே கிடைக்கும். தெய்வம் நின்று கொல்லாது, அன்றே கொல்லும் ! ஆதலால் பாவம் செய்யாதே !
படைப்பின் சூட்சுமம் தெரிந்தவன் கூறுகின்றேன் !
பார்த்தவன் நீ எப்போது உணர்வாயடா ?
நான் விண்ணுக்கும், மண்ணுக்கும் சாட்சி !
நான் இநன்யா !

No comments:

Post a Comment