இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;; உனை தாய் போல் சீராட்டுவேன் ! நீ என்னால் மறக்கப் படமாட்டாய் ! உனை திக்கற்றவனாக விட மாட்டேன் ! நீ என் உறவு !
24 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
உனை தாய் போல் சீராட்டுவேன் ! நீ என்னால் மறக்கப் படமாட்டாய் ! உனை திக்கற்றவனாக விட மாட்டேன் ! நீ என் உறவு !
எது ஆன்மீகம் ?
உன்னை உணர்வது தான் ஆன்மீகம் ! ஊருக்கு நல்லது செய்வது தான் ஆன்மீகம் ! உழைத்து அதை வீட்டுக்கு கொடுத்து வீதியிலே உதவி செய்வது தான் ஆன்மீகம் ! நல்வழி நடந்து பிறருக்கும் நல்வழி காட்டுவது தான் ஆன்மீகம் ! தாய் தந்தையை மறவாது கடமையைச் செய்வது கட்டிய மனைவியை துன்புறுத்தாமல் அவளை மலர்ச்சியுடன் வாழ வைப்பது தான் ஆன்மீகம் ! நீ நினைப்பது போல கடவுளை வணங்குவது மட்டும் ஆன்மீகம் அல்ல !
பொய் சொல்லாதிருப்பது, புலன்களை அடக்கி மௌனமாக இருந்து தன்னை உணர்வது, ஒருத்தனுக்கு ஒருத்தி என்று கட்டுக்கோப்போடு வாழ்வது தான் ஆன்மீகம் ! மனம் போன போக்கில் போகாமல் பெற்றோர், பெரியோர் சொல் கேட்டு உத்தமனாக நடப்பது ஆன்மீகம் !
ஆன்மீகம் 63 வகை என்று என் அப்பா (கடவுள்) சொல்வார்கள். 63 வகை சித்தாந்தம் தெரிந்து அதன்படி நடப்பது தான் ஆன்மீகம். பயத்தோடு குணம் கெட்டு குட்டி தேவதைகளை வணங்குவது ஆன்மீகம் அல்ல ! ஆடு, கோழி முதலிய ஜீவராசிகளை கொன்று இந்த புண்ணிய பூமியை ரத்தம் ஆக்காதே ! இது தான் ஆன்மீகம் என்று உளராதே !
உணர்ந்தால் இங்கு துன்பமில்லை !
மூட நம்பிக்கையை விட்டொழி. எல்லாம் அறிந்த உணர்ந்த என் முதல்வன் கடவுள் உனக்குள்ளேயும் இருக்கிறார் என்பதனை உணர் ! நீ உணர்வது, அறிவது முழுவதும் புரியாமல் விழிக்கின்றாய் ! விழி மூடி தியானிக்காதே ! விழி திறந்து கேள். வேதனை தீர்க்க நான் வருவேன். கடவுள் இல்லை என்று ஒருபோதும் நினைக்காதே ! உன் முன்னால் நிற்கிறேன். நீ தான் கண் மூடி காணாமல் போகிறாய். நான் உன்னை இடையில் விட்டு செல்லும் மனித ஜாதி அல்ல !
நான் மகேசன் ! உன்னை கைவிட மாட்டேன் !
உன் இலக்கு அடையும் வரை உன்னோடு எப்போதும் இருப்பேன். ஏனென்றால் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன் அல்லவா. உன்னை நற்சான்றோன் ஆக்குவேன். உனக்கு வேதம் எனும் அறிவமுதம் ஊட்டுவேன். அதை ஆன்மீகமாய் உலகுக்கு உன் மூலமாக சொல்ல வைப்பேன். இந்த வாழ்க்கை கரை தெரியா ஆழ்கடல். அதில் நீந்தி கரை சேர்ப்பவர் யாருமில்லை. ஆனால் நீ நீந்தி கரை சேர உனக்கு படகாய் இருப்பேன். என்னில் உட்கார்ந்து நீ இந்த சம்சார கடலில் எளிதாக கரை சேர்ந்துவிடலாம். பின் கடவுளை எளிதாக அடையலாம் !
ஆழ்கடலில் முத்தெடுக்க முயற்சி செய் !
என்னையும் உன்னோடு அழைத்துப் போ. உனக்கு கற்றுத் தருவேன். நீ காலத்தை எதிர் கொள்ள இந்த காலத்தின் நாயகன் துணையாக இருப்பேன் எப்போதும் ! சத்யமாக நம்பு !
என்னை மனதில் நினை ! மறு விநாடி மன மகிழ்ச்சி தருவேன் ! உணர்வாய் நீ ! வாழ்வு குறுகியது ! வாழத் தெரியவில்லை உனக்கு ! இங்கு மனிதன் தான் நிம்மதியாக வாழ பணத்தையும், பதவியையும் தேடி அலையக் கண்டேன். இது நிம்மதியைத் தராது !

நீ இறக்கும் வரை உன் ஆசைக்கு எல்லை இல்லை ! நான் உனக்கு தேவையான செல்வம் தருவேன். எனக்கு தெரியும் உன் தேவை என்னவென்று. நம்பு ! எல்லாம் கிடைக்கும்.
உன்னை உணரவில்லை என்றால் சுடுகாட்டுக்கு போனாலும் துன்பம் தான். என் அன்பின் அப்பா (கடவுள்) இன்பமாக எல்லாம் படைத்தான் ! உனக்கு தான் அனுபவிக்க தெரியவில்லை ! கடவுள் இன்பமானவன் ! பேரின்பமானவன் ! அவன் அழகின் வடிவானவன் ! பேரானந்தத்தில் நிலைத்திருப்பவன் ! அவரை விவரிக்க வார்த்தைகள் போதாது !

அந்த ஆனந்த தேனமுத்தை அள்ளிப் பருகி பார் !
நான் அடைந்த இன்பம் உனக்கும் தருவேன் ! நீ கேட்டது எல்லாம் தருவேன் அது தர்ம செயலாக இருந்தால்! நிம்மதி எது என்று அறிய முற்படு ! வாழ்வும், வசந்தமும், விதியும் நானே ! கடவுளிடம் செல்வந்தன் வீட்டின் முன் நிற்கும் ஏழைபோல் கைகட்டி நிற்காதே ! அவனிடம் அன்பின் அதிகாரத்தோடு கேட்டுப் பெறு ! நான் உனக்கு கிடைக்க கட்டளை இடுவேன். பாசமாக, அன்பாக, உன் உறவை போல என்னிடம் கேள் ! நீ மனதால் நினைக்கும் எல்லாமும் உனக்கு கிடைக்கும் !
நான் உனக்கு ஆனந்த பேரின்பத்தை அள்ளித் தருவேன் ! கடவுள் அள்ள அள்ள குறையாத அமுத சுரபி ! நீ கேட்டதை தராமல் இருக்க மாட்டேன் ! உனக்கு கேட்கத் தெரியவில்லை ! நீ என்னிடம் கேட்டது கிடைக்கும் ! நினைத்தது நடக்கும்! நீ எனை அறிந்தால் உனக்கு பசிக்காது ! நித்திரை வராது ! பிணி வராது !
நீ எனை அறிந்தால் அது சுகமான பேரின்பமாக இருக்கும் !
அந்த பேரின்பத்தை உணர முற்படு ! நானே சர்வமும் ! நான் வந்தேன், வென்றேன், சென்று கொண்டிருக்கின்றேன் ! இனி பயப்படாதே ! உனை தோளில் சாய்ந்து சுகம் கொடுப்பேன் ! உனை மடியில் வைத்து தாய் போல் சீராட்டுவேன், ஏனென்றால் உலகில் தாயைப் போல உறவு ஏதுமில்லை ! படைத்தவனின் வடிவம் தாய் ! கடவுள் தான் அருவமாக படைத்ததை தாயின் மூலம் உருவமாக படைத்து அழகு பார்த்தான் உன்னை ! தாய் உயர்ந்தவள் ! தாய் தந்தைக்கு செய்யும் சேவையைத் தவிர மிகப் பெரிய வழிபாடு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ! அவர்களின் பாதத்தை உன் அன்பு மலர்களால் அர்ச்சனை செய் ! இந்த ஆத்மத்தின் தலைவன் உலகத்தை உன் காலடியில் கொண்டு வைப்பேன் !

உன் உயிருக்கு வயதில்லை ! உன் உடலுக்கு வயதுண்டு !
ஆனால் இந்த ஆத்மத்தின் தலைவனுக்கு அழிவில்லை ! வயதில்லை ! நீ வலிமையானவன் ! உன்னால் ஏதும் முடியும். ஆனால் நீ தன் நிலை மறந்து அலைகின்றாய். உணர் !
உன் பாவங்களையும், துன்பங்களையும் என்னிடம் தந்துவிடு !
நான் சுமக்கின்றேன். அதை கரைக்கின்றேன் உப்பை போல ! இனி பாவம் செய்யாதே ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவிகள் சொல் கேளாதே. கதை கேட்டு காலத்தை வீணாக்காதே ! உன்னை அறிய முற்படு ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு என்றும் துணையாக இருப்பேன் !

உணர்வது தான் ஆன்மீகம் என்பதை இன்றே புரிந்து கொள்.!
உன் கண்ணீரை துடைக்க வந்தவன் இநன்யா !
No comments:
Post a Comment