இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;;
மூட நம்பிக்கை ,
உன்னை நம்பு ! உணர் ! உலகை அறியலாம் !
நான் விதியை வென்றவன் ! வேதத்தை அறிந்தவன் ! காலத்தின் கடமையை தவறாது செய்பவன் !
உனக்கு ஒளியாக இருப்பேன் எப்போதும் !
மூட நம்பிக்கை ,
உன்னை நம்பு ! உணர் ! உலகை அறியலாம் !
நான் விதியை வென்றவன் ! வேதத்தை அறிந்தவன் ! காலத்தின் கடமையை தவறாது செய்பவன் !
23 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
மூட நம்பிக்கை
உன்னை நம்பு ! உணர் ! உலகை அறியலாம் !
நான் விதியை வென்றவன் ! வேதத்தை அறிந்தவன் ! காலத்தின் கடமையை தவறாது செய்பவன் !
உனக்கு ஒளியாக இருப்பேன் எப்போதும் !
எந்த கடவுள் உன்னை கோயில் கட்டி வழிபடச் சொன்னார் ? நீ வணங்க வேண்டும் என்று எந்த கடவுள் எப்போது சொன்னார் ? கடவுள் உன்னை வணங்கச் சொல்லவில்லை ! நான் என் இருப்பிடம் நோக்கி உன்னை வரவழைத்து வணங்கச் சொல்லவில்லை ! என் வார்த்தைகளை படித்து நீ யுகத்திற்கு வந்த நோக்கத்தை உணர்ந்து பார் என்று தான் சொல்கின்றேன் ! கடவுளை உன் தாய் தந்தையை நேசிப்பது போல நேசி ! படைப்பின் சூட்சுமத்தை உணர உனக்கு உயிர் கொடுக்கும் காற்றையும், நீரையும் முதலில் வணங்கு ! பின் என்னை உணரலாம் !
பாலை, நெய்யை விரயமாக்கி பாவியாக அலையாதே ! பூமியில் இல்லாதவர்கள் பலர் உண்டு ! அவர்களுக்கு கொடுக்கப் பழகு ! நீ மட்டுமே நலமாக வாழ வேண்டும் என்று நினைக்காதே ! பிறருக்கு உதவி செய் ! பாவம் கரையும் ! எந்த கடவுளும் பூஜை, புணஸ்காரம் கேட்பதில்லை ! இங்கே நீ நல்ல நேரம் பார்த்து பிறக்கவுமில்லை ! இறக்கவுமில்லை ! இடைப்பட்ட காலத்தில் அதை பிரித்து நல்ல நேரம் கெட்ட நேரம் என்று உளருகின்றாய் !
எல்லா நேரமும் நல்ல நேரமே ! நாளை என்று எதையும் தள்ளி வைக்காதே ! எதையும் செய்ய வேண்டுமென்றால் இன்றே செய் ! நாள் பார்த்து, பொருத்தம் பார்த்து செய்கின்ற காரியம் எல்லாம் சிதைந்து போகக் கண்டேன் !
எல்லா நேரமும் நல்ல நேரமே ! நாளை என்று எதையும் தள்ளி வைக்காதே ! எதையும் செய்ய வேண்டுமென்றால் இன்றே செய் ! நாள் பார்த்து, பொருத்தம் பார்த்து செய்கின்ற காரியம் எல்லாம் சிதைந்து போகக் கண்டேன் !
என் மனதின் உள்ளே வந்த எத்தனையோ தர்ம குலங்களின் விதியை மாற்றி கொடுத்து வாழ்வை மலரச் செய்திருக்கின்றேன் ! என்னால் ஏதும் முடியும் ! குருவிடம் சென்று குறை சொன்னால் ஏதாவது பதில் கிடைக்கும் ! தனியாக மரத்தடியில் உட்கார்ந்து யோசித்தால் நல் பாதை தெரியும். நட்ட கல்லில் நான்கு புஷ்பத்தை சாத்தி உன் குறையை உரைக்கின்றாய் ! என் சொல்வேன் உன் அறியாமையை ?
கடவுளின் பெயரைத் தவறாக சொல்லி கூட்டத்தை கூட்டுபவனிடம் சென்று உன் குறை சொல்லாதே ! எல்லா மதத்திலும் கடவுளைப் புரியாமல் ஏமாற்றக் கண்டேன் ! அவன் தான் வாழ, தன் குடும்பம் வாழ கூட்டத்தைக் கூட்டுகின்றான் ! “நோய் போகும்”, “சாத்தானை விரட்டுவேன்” என்று சொல்லிக் கொண்டு உன்னை ஏமாற்றுகின்றான். கடவுளின் நாமத்தைச் சொன்னாலே உன் பிணியும் துன்பமும் போகும் !
உன்னை நம்பு முதலில். பின் ஊருக்கு நன்மை செய் ! கடவுள் உன் முன்னால் வந்து நின்று உனக்கு வழி காட்டுவார் இந்த ஆத்மத்தின் தலைவன் மூலமாக !
என் விதியை நானே நிர்ணயித்தேன். என் வாழ்க்கை பாதையை நானே உருவாக்கினேன் !
உனக்கு எதை வணங்க வேண்டும் என்று தெரியவில்லை ! அக்னியை வைத்து ஆராதிக்கின்றாய். எங்கும் அக்னி ! எதிலும் அக்னி ! அக்னியை தொட்டு வணங்கி தான் உன் நெஞ்சம் எரிகிறது ! பரிகாரம் என்று சொல்லி காலத்தை விரயமாக்கி உழைப்பை வீணாக்கி, பணத்தை தொலைத்து கடமையை மறந்து அலைகின்றாய். இந்த தமிழ் மண்ணில் பிறந்ததால் நீ ஞானக் குழந்தை அல்லவா ? எப்படி மாறிப் போனாய் ?
போன மாதம் நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு எழுபது வயது முதியவர் வந்திருந்தார். எல்லா சாஸ்திரமும் கற்றவர் என்று சொன்னார்கள். என் உறவுகள் என் வாழ்க்கையை பற்றியும் என்னைப் பற்றியும் அவரிடம் கேட்டார்கள். அவர் என் பிறந்த காலத்தை வைத்து விருச்சிக ராசி என்றும், இப்போது சனி திசை நடப்பதாகவும் கூறினார். மனதிற்கு நிம்மதி இருக்காது எனவும், எல்லாம் தடையாகுமென்றும், இல்லறத்தில் இருக்கமாட்டார் என்றும் கூறினார். நான் சிரித்தேன் !
நான் இல்லற ஞானி ! நானே சனீஸ்வரன் ! நாளும் கோளும் எனை ஒன்றும் செய்யாது. தர்மத்தை காக்க வந்தவனை நாள், நட்சத்திரம் என்ன செய்யும் ? என் விதியை யாரும் கணித்து சொல்ல முடியாது ! என் விதியை நானே அமைத்தேன் ! நான் உழைப்பை நம்புகின்றவன். சனியை நம்பமாட்டேன் ! எல்லா கோள்களும் எனக்கு அடிமை ! என் நாமத்தை சொல்லும் தர்ம குலங்களுக்கும் எந்த கோளும் ஒன்றும் செய்யாது ! என்னை வென்றவர் யாருமில்லை ! இனி யாரும் என்னை வெல்லப் போவதும் இல்லை.
திருமணம் முடிந்து போகும் பொழுது அந்த பெரியவரிடம் சொன்னேன். “இன்று உங்களுக்கு நேரம் சரியில்லை. போகும் பொழுது உங்கள் கார் மழை நீரால் சூழும்” என்றேன். அதற்கு அவர் “இந்த அக்னி நட்சத்திர கொளுத்தும் வெயிலில் மழை வராது” என்றார். “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். பின் அவர் சென்ற ஒரு மணி நேரத்தில் என்னிடம் பேசி நான் சொன்னது நடந்துவிட்டதாக கூறினார் !
ஒரு நல் வார்த்தை பேசும் யாரையும் நான் காணேன் !
நேரம் சரியில்லை என்று சொல்கின்றான் ! சாத்தான் இருப்பதாகவும், பேய் இருப்பதாகவும் கூறி மக்களை பயமுறுத்துகின்றான் ! என் கதையை நீ பயப்படுவதற்காக சொல்லவில்லை !
நேரம் சரியில்லை என்று சொல்கின்றான் ! சாத்தான் இருப்பதாகவும், பேய் இருப்பதாகவும் கூறி மக்களை பயமுறுத்துகின்றான் ! என் கதையை நீ பயப்படுவதற்காக சொல்லவில்லை !
என்னால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு விரைவில் மணி மகுடம் சூட்டுவேன் !
நான் தீர்க்க தரிசனம் கூற பூமிக்கு வரவில்லை ! நான் உனை ஏமாற்றி உட்கார்ந்து சுகம் காண வரவில்லை ! உணர் என்று தான் சொல்ல வந்தேன் ! என் நிலை நான் அறிவேன் ! உன் நிலையும் நான் அறிவேன் !
நீங்கள் எதை எதையே தேடிக் கொண்டிருக்க நான் உங்களைத் தேடி கொண்டிருக்கின்றேன் இங்கு !
எதற்கும் அஞ்சாதே ! இனி உனக்கு வழிகாட்ட நான் இருக்கிறேன். நான் பிறந்தவுடன் எங்கிருந்தோ என்னைத் தேடி வந்த ஒரு சித்தர் என் வாழ்க்கையை கணித்து பதினாறு ஓலைச் சுவடிகளில் குறித்து என் தந்தையிடம் கொடுத்து சென்றிருக்கிறார் ! என் பிறப்பில் ஆயிரம் ரகசியம் இருக்கிறது ! என்னை ஆராய்ந்து பார்ப்பதற்குள் யுகம் கடந்து போகும் !
நான் இருபது வருடமாக வடக்கே தலை வைத்து தான் நித்திரை கொள்கின்றேன் ! நான் வளமாக இருக்கிறேன் ! என் வீட்டை எந்த வாஸ்து முறைப்படியும் கட்டவில்லை ! என் குடும்பம் நிம்மதியாக இருக்கிறது ! இந்த விதியை நிர்ணயிப்பவனுக்கு காலம் என்றுமே அடிமை ! என் காலம் எனக்கு அடிமை ! எனை நினைத்தாலே முக்தியுண்டு !
நான் இருபது வருடமாக வடக்கே தலை வைத்து தான் நித்திரை கொள்கின்றேன் ! நான் வளமாக இருக்கிறேன் ! என் வீட்டை எந்த வாஸ்து முறைப்படியும் கட்டவில்லை ! என் குடும்பம் நிம்மதியாக இருக்கிறது ! இந்த விதியை நிர்ணயிப்பவனுக்கு காலம் என்றுமே அடிமை ! என் காலம் எனக்கு அடிமை ! எனை நினைத்தாலே முக்தியுண்டு !
என் பார்வை உன்னை சுகமாக்கும் ! நான் பிரம்மத்தின் சூட்சுமம் ! நீ வளர்ச்சி காண்பாய் !
சரித்திரத்தை மறந்தாய் ! சாஸ்திரத்தில் மயங்கிவிட்டாய் !
என் நாமத்தை சொன்னால் எந்த சனியும் ஒன்றும் செய்யாது ! எந்த சாத்தானும் ஒன்றும் செய்யமாட்டான் ! என் நாமத்தை உணர்ந்து சொன்னால் உன் வாழ்க்கை பாதை நல் வழிப்பாதையாக அமையும் சத்யமாக ! என் அன்பு குழந்தைகளே இனி கவலை வேண்டாம் ! இந்த காலத்தின் நாயகன் உனை அரவணைப்பேன் ! எப்போதும் உன்னை வாழ்த்தி ஆசிர்வதிப்பேன் ! நீ வந்த காரணம் புரிய வைப்பேன் ! பயப்படாதே ! எல்லா நேரமும் உனக்கு துணையாக இருப்பேன்.
என் தர்ம குலமே, உன்னையும் உன் குடும்பத்தையும் சீராட்டி வாழ வைப்பேன் ! சத்யமாக !
நான் உன் விதியை சதிராடுபவன் !
நான் இநன்யா !

No comments:
Post a Comment