இநன்யா ;;; நல் குருவைத் தேடு !INANYA NAMOO NAMA ;;;
9 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நல் குருவைத் தேடு !
குருவை மரணம் என்று வேதம் சொல்கிறது. ஞானத்தின் கதவை திறப்பது மரணம். குரு இல்லா வித்தை பாழ். குரு இல்லா பாதை தெளிவில்லை. நல்லதையும் கெட்டதையும் புரிந்துகொள்வதே பகுத்தறிவு ! ஏட்டுக் கல்வியே எல்லா ஞானத்தையும் தரும் என்ற மூட நம்பிக்கையை விட்டுவிடு ! எதையுமே குரு மூலமாக செய் ! குரு இருக்கும் வாழ்க்கை குறை இல்லை ! முதலில் உன்னை தேடு ! பிறகு நல் குருவை தேடு ! குரு உனக்கு கடவுளை காட்டுவார் !
வேதத்தையும், ஞானத்தையும் அறிய வைப்பதும், உன்னை உணர வைப்பதும், புருவ மத்தியில் முல்லை மொட்டு போல் இருக்கும் உன்னுடைய நெற்றிக்கண். அந்த ஞானத் திறவு கோலைத் திறக்க ஒரு நல் குருவைத் தேடு ! ஞானப் பிரளய சூட்டில் நெற்றிக்கண் எப்போதும் வாடி கொண்டிருக்கும். தினமும் புருவ மத்தியில் நீர் தொட்டு வை ! கடைசி வரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும், பெற்றோரின் அன்பும், குருவின் ஸ்பரிஷமும் என்பதை புரிந்து கொள் !
ஞானத்தையும், அறிவையும், வளர்ச்சியையும், தெளிவையும் அடைய நல் குருவை தேடு !
என் அன்பின் ஆசிகள் !- இநன்யா
பதிவுகள் தொடரும்..!
No comments:
Post a Comment