இநன்யா ;;;
உயிரின் உணர்வு அம்மா ;;;INANYA NAMOO NAMA ;;;
உயிரின் உணர்வு அம்மா ;;;INANYA NAMOO NAMA ;;;
10 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
உயிரின் உணர்வு அம்மா;;;
எதையும் பெறுவதை விட பெறப்படும் பாடு தான் பெரியது !
நீ எத்தனை சாமியை கும்பிட்டாலும், எத்தனை உறவுகள் உனக்கு இருந்தாலும் உனக்கு ஆபத்து ஏற்படும் பொழுது ”அம்மா” என்று தான் கூச்சலிடுகிறாய் ! உன் ஆன்மா மறவாதிருக்கிறதே ! நீ ஏன் மறந்தாய் ? படைத்தவனின் வடிவமே தாயும், தந்தையும் ! முதலில் அவர்களை வணங்கு ! இறந்த பிறகு கல்லறையை வணங்கியும், திதி கொடுத்தும் எந்த பலனுமில்லை !
நீ எங்கு சென்றாலும் அவளின் அடைக்காப்புக்குள் தான் இயங்குகிறாய் என்பதனை மறவாதே ! தாயின் காலடியே சொர்க்கம் ! பேரின்பம் ! முதலில் தாய்க்கு சேவை செய் ! கடவுள் உன் முன்னால் வந்து நிற்பார் ! தெய்வம் காட்டும் ! ஊட்டாது ! ஆனால் தாய் ஊட்டுவாள் !
உன்னை கருவறையில் சுமந்தவளை காலம் போவதற்குள் வணங்கி விடு ! தாயும், தந்தையுமே இங்கு பெருங்கோவில். மற்றதெல்லாம் வெறுங்கோவில் ! தாயின் அன்புக்கு நிகரானது பூமியில் ஏதுமில்லை ! தாயின் ஆன்மா மேலே செல்லும் பொழுது முதலில் தன் குழந்தைகளை நலமாக வைக்குமாறு கடவுளிடம் கேட்கிறது ! அவளின் அன்பு எவ்வளவு உயர்ந்தது என்று பார்த்தாயா ?
தாயை மறவாதே ! தரித்திரத்தில் வாழ்வாய் !
ஈன்றவுடன் கன்று கூட அம்மா என்று கத்துகிறதே ? பசுவின் கன்று கூட மறக்கவில்லை ! படித்தவன் நீ மறந்து அலைகின்றாய் ! தாயை வணங்குவதும், தர்மம் செய்வதும் உன் பிறவியின் கடமை. உன் தாய் உனக்காக உதிரத்தை பாலாக மாற்றித் தந்தாள். அவளின் கடன் தீர்க்காமல் மேலே உனக்கு இடமில்லை.
ஞானத்தையும் தாண்டி உணர வைக்கின்ற உறவுகள் உன்னுடைய தாயும், தந்தையும் ! அவர்களை தினமும் வணங்கு ! நான் உன் முன்னால் நிற்பேன் ! கருவறையில் சுமந்த தாயையும், உன்னை தோளில் தூக்கி சுமந்த தந்தையையும், உன்னை பாசமாகக் தூக்கி சுமக்கும் இந்த தாய் பூமியையும் என்றும் மறவாதே !
தாயையும், தந்தையையும் உன் தலை மேல் வைத்துக் கொண்டாடு ! உலகம் உனக்கு மணி மகுடம் சூட்டும். - இநன்யா
பதிவுகள் தொடரும்..!
No comments:
Post a Comment