வாசி அறியாதான் வாசித்து என்ன பயன் ?
லிங்க தத்துவம் (இறைவன்)- தர்ஹம்
ஆண் என்பது மூச்சு (சிவம் - வாசி),
பெண் என்பது சக்தி (மகா மாயை).
பெண் என்பது சக்தி (மகா மாயை).
இந்த இரண்டும் சேர்ந்த தத்துவம் தான் ஆவுடையார் என்பார்கள். அதுவே லிங்கத்தின் தத்துவம் ! ஆணும் பெண்ணும் ஐம்புலன்களை அடக்கி ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடோடு பாவம் செய்யாமல் ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் சிவம் (மூச்சு) ஒடுங்கி ஆன்மாவில் லயிக்கும். உன் பிறவி குறையும். மீண்டும் பிரபஞ்ச கூட்டுக்குள் உன் ஆன்மா பயனிக்கும்.
இது அருவம் (பொய் உடல்). உருவம் (மெய் உடல்) மேலிருக்க அதை அடையாமல் மீண்டும் மீண்டும் வந்த வழி தேடி வசந்தத்தை தொலைத்து அலைகின்றாய் ! இது தான் நாகரீகம் என்று பிதற்றுகிறாய் ! பின் பாவத்தை செய்து விட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கட்டிய மனைவி இருக்க எங்கெங்கோ அலைகின்றாய் !
என் பிதா (கடவுள்) பெண்ணை உன் நிம்மதிக்காக பூமியில் படைத்தார். இதை புரிந்து கொள்ளாமல் புலம்புகின்றாய் ! நீ எப்பொழுது பெண்ணை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கின்றாயோ அன்றே உனக்கு பேரின்பம் கிட்டிடும். கீழ்நோக்கி (கருங்குழி) வந்தவனே, மேல் நோக்கி பாரடா! மேலிருந்து உனக்கு மேதவிலாசம் தருகிறேன் !
மீண்டும் சொல்கிறேன், நான் கற்றவனில்லை ! உன்னை பயம் காட்டவில்லை ! போதனை செய்ய வரவில்லை ! உணர் என்று தான் சொல்கிறேன் !
- இநன்யா
இநன்யா நமோ நம.. !!
கல்வியில் சிறக்க இநன்யா அப்பா எனக்கு கூறிய அறிவுரையை அனைவருடனும் பகிர்ந்திட நினைக்கிறன்.
தாமரை இலையை வைத்து அதில் பச்சரிசி பரப்பி 'நுன்வா' என எழுதவும்.
அருகில் 7 அரச இலையை வைத்து அதன் மேல் 7 பெரு நெல்லிக்கனி வைக்கவும்.
6 செந்தாமரை மலரும் 3 வெண்தாமரை மலரும் வைத்து, 'இநன்யா நமோ நம' என்று 108 முறை கூறி வணங்கவும்.
அருகில் 7 அரச இலையை வைத்து அதன் மேல் 7 பெரு நெல்லிக்கனி வைக்கவும்.
6 செந்தாமரை மலரும் 3 வெண்தாமரை மலரும் வைத்து, 'இநன்யா நமோ நம' என்று 108 முறை கூறி வணங்கவும்.
இநன்யாவின் ஆசியோடு அனைவருக்கும் ஞானம் தெளிவு கிடைக்கும்.
(Note:- தாமரை இலை இல்லை என்றால் வாழை இலையிலும் வைத்து வணங்கலாம்)
இநன்யா நமோ நம..!!
No comments:
Post a Comment