இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;;
பொறுத்திரு !
தன்னை அறிந்தவன் நான், உன்னை அறிய வைப்பேன் !
என்னை நம்புகின்றவன் செழிப்பான் !
பொறுத்திரு !
தன்னை அறிந்தவன் நான், உன்னை அறிய வைப்பேன் !
என்னை நம்புகின்றவன் செழிப்பான் !
19 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
பொறுத்திரு !
தன்னை அறிந்தவன் நான், உன்னை அறிய வைப்பேன் !
என்னை நம்புகின்றவன் செழிப்பான் !
செப்படி வித்தை காட்டுபவன் போல தெரு வீதியில் வர நான் ஆசை கொள்ளவில்லை ! என்னை பார்த்து எதை சரி செய்யப் போகிறாய் ? என்னை உற்று நோக்கி எதை உணர்ந்து கொள்ளப் போகிறாய் ? எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாய் ! எப்போது உணர கற்றுக் கொள்வாய் ? படைப்பின் சூட்சுமத்தை எல்லாம் பார்த்தாய் ! ஆனால் எதை உணர்ந்தாய் ? மீண்டும் வேறு எதையோ பார்க்க நினைக்கின்றாய் ! நீ உன்னை உணரும் வரை தேடுதல் இருந்து கொண்டு தான் இருக்கும் !
கடவுள் உன் உடலில் ஒரு உறுப்பை மட்டுமே திறந்து வைத்திருக்கிறான் ! ஏன் என்று உணர்ந்தாயோ ? எல்லாவற்றையும் அறிந்து உன்னை உணர்ந்து உற்று நோக்க கற்றுக் கொள் ! நான் உனக்கு லோகத்தை காட்டுகிறேன் ! என்னை எல்லோரும் வெளியே வாருங்கள் என்று சொல்கிறார்கள் ! மனித குலமே, நான் போகப் பொருள் அல்ல. காட்சி பொருள் அல்ல ! கூட்டத்தை கூட்டி ஆசிரமம் கட்டி குளு குளு அறையில் தூங்க நான் வரவில்லை ! நான் வந்த கடமை வேறு ! என் கடமையை முடித்த பின் உனக்கு பாக்கியம் இருந்தால் என் உறவுகளைப் போல என்னை பார்க்க அனுமதி தருவேன். அதற்கு முன் உன் அறிவால் என்னை உணர்ந்து விடு !
இந்த யுகம் எதையுமே காசாக்கி கடமையை தொலைத்து அலைகிறது ! என்னையும் காசாக்குவார்கள் ! என்னோடு இருந்து கொண்டே குளிர் காய பார்ப்பார்கள் ! பொறுத்திறு ! என் கடமையை முடித்து நான் போகின்ற போக்கில் என்னை காட்டிவிட்டு செல்கிறேன் ! கண்ணுக்கு தெரியாமல் உனக்குள் இருக்கும் காற்றை உணராதவன் என்னை எப்படி உணரப் போகின்றாய் ? நான் சொல்லித் தான் என்னை பற்றியே உனக்கு தெரிகிறது !
நீ எதை கண்டுபிடித்தாய் ?
உலகை அழிப்பதற்கு கண்டு பிடித்திருக்கிறாய் ! விதையின் வீரியம் கூட உணராதவன் உண்டு மட்டும் காலம் கழிக்கிறாய் ! உன் தேடுதல் எல்லாம் அற்ப பொருளுக்காக தான் ! ஆனந்தம் தரும் ஆன்மாவின் பேரின்ப தேடல் உன்னிடம் இல்லை ! உன் தேடல் உண்மையைத் தேடும் தேடலாக இருக்கட்டும் !
உன் உடலை காக்க நினைக்கிறாய் ! பொருளைத் தேட நினைக்கிறாய் ! இல்லையேல் பெண்ணைத் தேடுகிறாய் ! இது தான் நிம்மதி என்று தவறாக புரிந்து கொண்டு நிம்மதி இல்லாமல் அலைகின்றாய் !

மீண்டும் சொல்கிறேன் !
இந்த யுகத்தில் கடவுளாய் பிறந்தாலும் தாயின் கருவறையில் பத்து மாதம் இருந்து தான் பிறப்பார்கள் ! கருவிலே ஞானம் பொருந்தி பிறப்பார்கள். மனிதனைப் போலவே வாழ்வார்கள். தன் இலக்கை நோக்கி செயல்படுவார்கள் ! அவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை ! குருவின் துணையில்லாமல் அனைத்தையும் அறிவார்கள் ! மனிதனைப் போல் பிறப்பும் இறப்பும் உண்டு ! அவர்களுக்கும் பார்வை மங்கும் ! முடி நரைக்கும் ! உடலின் பாகங்கள் தேயும் ! ஆனால் நோயில்லாமல் வாழ்வார்கள் ! பிறரை ஆத்ம சிந்தனையுடன் வாழ வைப்பார்கள் ! அவர்களின் ஆன்மாவுக்கு மூப்பில்லை ! அழிவில்லை ! இந்த யுகத்தில் ராமனும், கிருஷ்ணனும், இன்னும் பல மகான்களும் பிறந்தார்கள் ! அவர்களின் ஆன்மா அவர்களை யாரென்று காட்டிக் கொடுத்தது !
நான் உன் போல் பிறந்தேன் ! வளர்ந்தேன் ! வாழ்ந்தேன் ! ஆனால் நான் உன் போல் அல்ல ! நான் இந்த யுகத்தில் தவறு செய்தாலும் தண்டனை உண்டு ! இந்த யுகத்தில் யார் தவறு செய்தாலும் தண்டனை உண்டு என்பதனை மறவாதே !
என்னை பார்த்து ஏதும் உணர முடியாது ! ஒரு விதையின் வீரியத்தை மரத்தின் கனிகளை வைத்து தான் கணிக்க முடியும் ! நான் எப்படிப்பட்ட வித்து என்று உன்னால் கணிக்க முடியாது ! நான் என்ன செய்கிறேன், எங்கு செல்கிறேன் என்று உன்னால் யூகிக்க முடியாது ! உனக்கு ஞானமிருந்தால் மட்டுமே என்னை உணர முடியும் !

தினமும் நான் பிரபஞ்ச வீதியில் பயணிக்கின்றேன் ! உனக்கு தெரியுமா ? நான் சொன்னால் கேலி கூத்தாக நினைப்பாய். கடவுள் பூடகமாகத்தான் இருப்பான். நான் இந்த பூமியில் உன்னைப் போலவே மனிதனாக உன்னோடு நடமாடுகிறேன் ! வருவான், வருவான் என்று சொன்னான். நான் வந்து அலைகின்றேன் ! என்னை காண்பவர் யாருமில்லை ! நான் இங்கே நீ புகழ் சூட வரவில்லை ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவிகளைப் போல வித்தையைக் காசாக்க வரவில்லை ! நான் நல்லோர்களை காக்க வந்தேன். கர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இந்த யுகத்திற்கு வந்தேன் !
நான் இங்கு உன்னை போலவே உழைத்துக் கொண்டிருக்கிறேன் ! என் கடமை முடிந்து உனக்கு காட்சிப்படுத்துவேன் ! பொறுத்திரு !
நான் இங்கு உன்னை போலவே உழைத்துக் கொண்டிருக்கிறேன் ! என் கடமை முடிந்து உனக்கு காட்சிப்படுத்துவேன் ! பொறுத்திரு !
நான் வேதம் தெரிந்தவன், அறிந்தவன் !
நான் புராணக் கதைகளையும், மத நூல்களையும் படித்து உனக்கு கதை சொல்ல வரவில்லை ! வேதாந்தம் பேச வரவில்லை ! சித்தம் தடுமாற வைக்கும் ! தீய மனிதனையும், தீய சக்திகளையும் வேறோடு களைய வந்தேன் !
யுகத்தை ஆதிகாலம் போல தோன்ற செய்ய காலச் சக்கரத்தின் மேல் ஏறி நிற்கிறேன். நான் 4.3.2015 ல் தான் என் அரசாங்கத்தை விரிவுபடுத்தினேன். அதில் நூற்றிப் பதினோறு கோடி முனிவர்களும், முப்பத்தி முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிமார்களும் என்னோடு இருந்து யுகத்தை சரி செய்வார்கள் ! நான் என்னை காட்சிபடுத்த வரவில்லை ! அதற்கு சாட்சியும் யாருமில்லை. விதைத்த விதை ஒரே நாளில் மரமாகி கனி தரும் என்று எதிர் பார்க்காதே !
பொறுத்திரு ! உன்னை புரிய வைத்து எல்லாம் அறிய வைப்பேன்.
நான் தூய்மை பொருந்திய தூயவன் - இநன்யா !

No comments:
Post a Comment