இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;;
காவி உடை வந்த காரணம்.
அடக்க பிறவிக்கு அலங்காரம் எதற்கு ?
காவி உடை வந்த காரணம்.
அடக்க பிறவிக்கு அலங்காரம் எதற்கு ?
20 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
காவி உடை வந்த காரணம்.
அடக்க பிறவிக்கு அலங்காரம் எதற்கு ?
நான் வெண்மை ! உண்மையின் (சத்யம்) நிறம் வெண்மை !
ஆதி காலத்தில் ஞானிகள், மகான்கள், துறவு மேற்கொள்ள நினைத்தவர்கள், தான் நினைத்த இலக்கை அடைவதற்கு உடலை சீராக்க மூச்சை ஆரோக்கியமாக வைக்க முயன்றார்கள். உடல், மூச்சு சுகப்படுதலில் தான் கற்கும் கலை முழு வடிவம் பெறும் என நினைத்தார்கள். இதனை சித்தர்களின் துணையோடு ஆராய்ந்து பார்த்தார்கள் ! இதன் மகத்துவம் மஞ்சணத்தி மரத்தில் உயிர்த்துவம் இருப்பதை உணர்ந்தார்கள் !
மஞ்சணத்தி மரத்தின் பட்டயை பக்குவப்படுத்தி அதனோடு ஆகமல மரத்தின் கட்டைகளை துண்டுகளாக்கி சுடு நீரில் போட்டு அதனுடன் அதிமதுரம், கொடிவேலி பருத்தி இலையும் சேர்த்து பின் வெண்மை நிற துணியை அந்த சுடு நீரில் மூழ்கி துவைத்து எடுத்தால் வெண் துணி காவி நிறத்தில் இருக்கும். முழுதும் காய வைத்து எடுத்தால் காவி உடையாகிவிடும் ! இந்த ஆடையையே அணிந்தார்கள் ! இந்த காவி நிற ஆடையை தழுவி வரும் உயிர்த்துவமான காற்றை மூச்சுக் குழாய் வழியாக உள் இழுத்து தன் மூச்சை நிலை நிறுத்தி தான் கற்க வேண்டிய கலையைக் கற்றார்கள் !
மஞ்சணத்தி மரத்தின் பட்டயை பக்குவப்படுத்தி அதனோடு ஆகமல மரத்தின் கட்டைகளை துண்டுகளாக்கி சுடு நீரில் போட்டு அதனுடன் அதிமதுரம், கொடிவேலி பருத்தி இலையும் சேர்த்து பின் வெண்மை நிற துணியை அந்த சுடு நீரில் மூழ்கி துவைத்து எடுத்தால் வெண் துணி காவி நிறத்தில் இருக்கும். முழுதும் காய வைத்து எடுத்தால் காவி உடையாகிவிடும் ! இந்த ஆடையையே அணிந்தார்கள் ! இந்த காவி நிற ஆடையை தழுவி வரும் உயிர்த்துவமான காற்றை மூச்சுக் குழாய் வழியாக உள் இழுத்து தன் மூச்சை நிலை நிறுத்தி தான் கற்க வேண்டிய கலையைக் கற்றார்கள் !
ஆனால் இது தெரியாமல் காவி என்றால் துறவு என்றாகிவிட்டது !
காவி உடை எதற்கு , ஏன் என்று தெரியாமல் போனது !
நான் அதன் நிறத்தை வெறுக்கவில்லை ! காவி எப்போதும் முதன்மை தான் ! அதை உடுத்திக் கொண்டு மதத்தையும், மக்களையும் ஏமாற்றும் மூடர்களின் கூட்டத்தினையே வெறுக்கின்றேன் ! எல்லா மதத்திலும் ஏதாவது நிறத்தின் சாயலை வைத்து ஏமாற்றுகின்றனர் ! அழுகும் உடலுக்கு ஆடம்பரம் எதற்கு ? இந்த மஞ்சணத்தி மரத்தில் தான் கூடு கட்டாமல் காக்கையை ஏமாற்றி அதன் கூட்டில் முட்டையிடும் குயில்களின் கூட்டம் வசிக்கும் !
பறவைக்கு தெரிந்த விஷயம் கூட படித்தவனுக்கு தெரியவில்லையே என வருந்துகின்றேன் நான் ! ஆனால் இப்போது செயற்கை சாயம் பூசி காவி உடை கட்டி அதில் மகத்துவம் இருப்பதாக உளரக் கண்டேன் !
ஆதி காலத்தில் தலை முடி, தாடி, மீசை சீர்படுத்துவதற்கு தகுந்த உபகரணங்கள் இல்லாமல் போனதால் வளர்த்தான். ஆனால் இப்போது அது தான் துறவிக்கு அழகு என நினைத்து வேஷம் போடுகிறான் ! தர்மம் செய்வது தான் அழகு ! வெற்று உடலுக்கு வேஷம் எதற்கு ? தாடியும், குடுமியும் எதற்கு உதவியது ?
காட்டில் புலியைப் பார்த்து ஓடுகின்றான். ஆனால் புலித்தோலின் மேல் உட்கார்ந்தவனை பார்த்து வணங்குகின்றான் ! பாம்பையும், பாம்பின் சிலையையும் வணங்குகின்றான். வீட்டினுள் பாம்பு புகுந்தால் வணங்காமல் ஓடுகின்றான். மனிதனின் அறியாமையை என்னவென்று சொல்வேன் ?
ஆதி காலத்தில் மகான், ஞானிகள், முனிவர்கள், சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி வாழ்ந்தார்கள். சாப்பிடாமல் இருந்ததால் கல்லீரல், மண்ணீரல் பாதிப்பு ஏற்படுவதால் அதற்கு ஒரு உபாயம் கண்டுபிடித்தார்கள் சுரக்காயை பக்குவபடுத்தி அதன் குடுவையில் நீர் ஊற்றி அதனோடு நுணவு என்ற செடியின் பழத்தை பக்குவபடுத்தி அதனோடு ஆகமலத்தின் கனி, கருந்துளசி, அருகம்புல், பிஞ்சிலம், உயிர்மொக்கு சேர்த்து குடித்து வந்தார்கள். தன்னை தேடி வந்தவர்க்கும் கொடுத்தார்கள். இந்த நீர் உறுப்புகளை சீராக்குவதுடன் வாயுத் தொல்லை தராது. அபான வாயுவையும் சீர்படுத்தும். அதை சீர்படுத்தினாலே ஞான நிலை அடைய முடியும் !
நுணவு காய்களை பக்குவபடுத்தி அதனோடு கல் உப்பு, மூங்கில் உப்பு, ஆலம் விழுது, வேலம் பிசின் சேர்த்து பல் தேய்த்தார்கள். பல நாட்கள் பல் துலக்காமல் இருந்தாலும் துர்நாற்றம் வராது. வாய் புண் வராது. அனைத்தையும் பக்குவம் அறிந்து உண்டார்கள். நோயில்லாமல் வாழ்ந்தார்கள். இப்போது ஏதும் தெரியாமல் உளரக் கண்டேன். சித்தர்களின் மறை பொருளான பாடல்களை படித்து, எல்லாம் தெரிந்ததாக அதை காசாக்கினான். இவன் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு எந்த நோய் தீர்ந்தது. உணர் !
உன் உடல் நோய் தீர பாவம் செய்யாதே !
உன் மன நோய் தீர தர்மம் செய் !
காவி உடை எதற்கென்று உணர் !
வெண்மையில் இநன்யா !

No comments:
Post a Comment