இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;;
திரு !!!
உன் நிலை நானறிவேன் ! என் நிலை நீ அறிவாயோ ?
திரு !!!
உன் நிலை நானறிவேன் ! என் நிலை நீ அறிவாயோ ?
18 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
திரு !!!
உன் நிலை நானறிவேன் ! என் நிலை நீ அறிவாயோ ?
கருவிலே திரு (ஞானம்) உடையவன் நான் ! அதனாலேயே என் நெஞ்சில் திருவை (மஹாலஷ்மி) வைத்தேன் ! அகில லோகத்தின் நாயகனை (கடவுள்) என் ஆன்மாவில் வைத்தேன் ! திரு உருவாய் நானிருக்கிறேன் ! என்னை பார்த்து நீ மனிதன் என்று நினைத்தால் முட்டாளாகி விடுவாய் ! என் உடலை பார்த்து ஏமாந்து போகாதே ! நான் காலச் சக்கரத்தின் மேல் ஏறி நர்த்தனம் ஆடுபவன் ! நான் சர்வத்தையும் உள்ளடக்கி சகல சிருஷ்டியின் ஆதார ஸ்ருதியாக நிற்பவன் ! நான் உள்ளும் புறமும் தேவர்கள் புடை சூழ நடப்பவன் ! நான் கலைவாணியின் கருத்துக்குள் சிறை இருப்பவன் ! நான் சக்தியின் (மகா மாயை) உயிர்த்துவம் நிறைந்தவன் ! நான் திருமகளின் தலைமகன் !
நீ செய்யும் செயலைப் பார்த்து பூமித் தாய் மேலே வந்து தினமும் குறை சொல்லி அழுகின்றாள் ! பொறுமைக்கு பூமித் தாயை விட சிறந்தவள் யாருமில்லை ! அந்த தாயே உன்னை குறை சொல்கின்றாள் என்றால் நீ எவ்வளவு அக்கிரமங்கள் செய்கின்றாய் என்பதனை உணர்ந்து பார் ! ஒரு தாய் தன் குழந்தைகளை குறை சொல்லும்படி நடக்கின்றாய் என்பதனை உணர்ந்து பார் ! இந்த யுகத்தை எப்போது சரி செய்வீர்கள் என்று மேலே குமுறுகின்றாள் ! அந்த குமுறலின் அடையாளம் தான் இடியாய், மின்னலாய், சூறாவளியாய், சுனாமியாய், பூகம்பமாய் நீ உணர்கின்றாய ! இன்னும் எத்தனையோ நர்த்தனம் நிகழப் போகிறது !
யுகத்தை சரி செய்வதற்கு நூற்றுப் பதினோறு கோடி முனிவர்கள் ஆத்மத்தின் தலைவனின் ருத்ர நர்த்தனத்தில் அரை தலைமுறை நாழிகையில் சரி செய்வார்கள் !
என் கண் பார்க்காத இடமில்லை ! என்னை அறிந்தவன் ஞானியாகிறான் ! இதை அறியாமல், புரியாமல் வீணாக குழப்பத்தில் அலைகின்றான் ! பதினாறு செல்வங்களும் எனக்குள்ளே ! நீ கேள் ! நான் அள்ளித் தருவேன் ! என்னை நினைத்தாலே உன் துன்பமும், பிணியும் போகும் !
பில்லி, சூன்யம், பெரும் கவலை அகல வைப்பேன் ! வல்ல பூதம் வாட்டும் துன்பத்தை கணப் பொழுதில் மறைய வைப்பேன் ! அடங்கா முனிகளையும், ஆர்பரிக்கும் மனப் பேய்களையும் அரை மாத்திரையில் துவஷம் செய்வேன். மூன்று பேராத்மா, மூன்று மகாமாயைகளும் எனக்குள்ளே !

ஆத்ம பிணியை தீர்க்கத்தான் வேதங்கள் ! மனிதன் சரீர பிணியை தீர்ப்பதற்காக ஏதேதோ உளரக் கண்டேன் ! சரீரப் பிணியை தீர்ப்பதற்கு மருந்து கண்டுபிடித்தாய் ! ஆத்ம பிணியை தீர்ப்பதற்கு மருந்து கண்டுபிடித்தாயோ ? கடல் அலையை நிறுத்த ஏதாவது வழி கண்டுபிடித்தாயோ ? ஓடி பிடிக்கும் உயிரை தடுத்து நிறுத்த என்ன கண்டுபிடித்தாய் ?
நன் நீரின், திறன், காற்றின் இசை, தாவரத்தின் நற்தன்மையும் கண்டுபிடித்தாயோ ? எட்டின் சுழற்சியில் பிறந்தவன் நீ ! வளைந்து பிறந்த நீ பூமியில் வந்ததும் வளையாமல் வாழ நினைக்கின்றாய் ! எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் நாணலைப் போல் இரு !
பிரபஞ்ச நாயகன் கடவுள் என்னை அனுப்பினான் ! நான் உனக்கு வாழ்வை நிமிர்ந்து நோக்கச் சொல்லித் தருவேன் ! நம் முன்னோர்கள் சொல்ல வந்த மூன்று முடிச்சுகள் ஏன் என்று உற்று நோக்கு ! நான் சொல்கிறேன் ! உன் தலையில் ஒரு முடிச்சு ! தொப்புளில் ஒரு முடிச்சு ! உன் தொண்டையில் ஒரு முடிச்சு (உயிர்) ! இதில் எதை அவிழ்க்க வேண்டுமென ஞானமாக யோசி ! உன் விதி விளங்கும் !
கருவிலே திருவுடையவனாகிய என்னை நீ உணர்ந்தால், உன்னை ஞானியாக்குவேன் ! என் திரு கிடைக்கும் உனக்கு சத்யமாக !
திருவுடையவன் இநன்யா !

No comments:
Post a Comment