இநன்யா ;;; ஆன்ம பலம் ;;; நான் சிருஷ்டி கர்த்தாவின் ஆன்மா !
17 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
ஆன்ம பலம் ;;;INANYA NAMOO NAMA ;;;
நான் சிருஷ்டி கர்த்தாவின் ஆன்மா !
நிலத்தை சீர் செய்து நெற்றி வியர்வை சிந்தி உனக்கு தானியம் தரும் உழவனை போல இரு ! அவன் சூரியன் உதிக்கும் முன்னரே எழுந்து உனக்காக பலம் கொண்டு உழைக்கின்றான் ! அவனை நேசி ! உன்னை மனிதனாக்குவது துன்பங்கள் தான் ! துன்பத்தை எப்போதும் இன்பமாக நினை ! இனி பயப்படாதே ! நான் இருக்கிறேன் ! நீ கூப்பிட்ட உடன் ஓடி வருவேன் ! உன் பலம் கொண்டு உழைத்து ஊருக்கு நல்லது செய் ! நிம்மதி நிச்சயம் உண்டு !
பறவைகளும், மிருகங்களும் அழுவதில்லை ! படித்தவனாகிய நீ தான் அழக் கண்டேன் ! உன் கண்ணீரைத் துடைக்கவே யுகம் வந்தேன் ! இங்கு நூற்றில் பத்து பேர் தர்மாக்கள் ! தொண்ணூறு பேர் கர்மாக்கள் ! இனி கர்மா அழிந்து தர்மா காக்கப்படும் ! (4-3-2015 முதல்).
இரண்டாயிரம் வருடங்களாக வேதம் மறைக்கப்பட்டது ! அதனால் தான் யுகத்தில் பெரும் துன்பங்களை சந்திக்க நேர்ந்தது ! இப்பொழுது வேதம் ஜெயித்தது !
அக்காலத்து மன்னர்களும், மக்களும் ஆன்ம பலத்தை பெற முனிவர்களையும், சித்தர்களையும் , ஞானிகளையும் தேடிச் சென்றார்கள் ! வந்த கடமையை உணர்ந்து நிம்மதியாக வாழ்ந்தார்கள் ! ஆதியில் மனிதனுக்கு ஆன்ம பலம் ¾ ஆகவும், சரீர பலம் ¼ ஆகவும் இருந்தது ! அனைத்தையும் உணர்ந்து வாழ்ந்தான் ! மரணத்தை கணித்து வாழ்ந்தான் !
இப்பொழுது ஆன்ம பலம் ¼ ஆகவும், சரீர பலம் ¾ ஆகவும் இருப்பதால் மனிதன் அல்லல்படுகின்றான் ! சரீர பலத்தை வைத்துக் கொண்டு வீரன் என்று பிதற்றுகின்றான் ! செத்த பாம்பை அடித்துவிட்டு கொன்றேன் என பிதற்றுகின்றான். உடலை கொன்றான். உயிரை கொன்றானோ ?
என் அப்பா (கடவுள்) எனக்கு முழு ஆன்ம பலம் தந்தார்கள் ! அதற்காகவே நான் உன் முன்னால் வந்தேன் ! உயிர் பலம் பெரிது ! அதை வைத்தே அனைத்தையும் அறிய முடியும் ! உணர முடியும் ! என் பலம் (ஆன்மா) பெரிது ! என் பின்னால் நிற்கும் படையும் (தேவர்கள்) மிகப் பெரியது !
உன் ஆன்ம பலத்தால் எதையும் சாதிக்கலாம் ! உணர்ந்து பார் ! உணர்ந்தால் நீ கடவுள் பக்கம் இருப்பாய் ! கடவுளை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை விட கடவுளுக்கு எத்தனை பேரை பிடிக்கும் என்பதே இங்கு வாதங்கள் ! கடவுள் உன் நெஞ்சில் இருப்பதை விட நீ கடவுள் நெஞ்சில் இருக்க ஆசைப்படு ! அது ஆன்ம பலத்தால் மட்டுமே முடியும் ! ஆதலால் பாவம் செய்யாதே ! உன் உயிரை வைத்தே உன் உடலைக் கொல்வார் கடவுள் !
உன்னிடம் ஆன்மா இருக்கிறது ! என்னிடம் பலம் இருக்கிறது. இருவரும் சேர்ந்தால் இமயத்தை வெல்லலாம் ! உணர்ந்து பார் ! உனக்கு ஆன்ம பலம் தருவேன் !
நான் ஆத்மத்தின் தலைவன் இநன்யா !
No comments:
Post a Comment