இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;;
அமிழ்த மொழி தமிழ்
அமிழ்த மொழி தமிழ்
14 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
அமிழ்த மொழி தமிழ்
தேவர்களின் உணர்வின் மொழி !
சித்தர்களின் ஞான மொழி !
மனிதர்களின் நயன மொழி !
உலகில் தோன்றிய முதல் மொழி !
கடவுளுக்கு பிடித்த அன்பு மொழி ! ஆசை மொழி !
இது என் நெஞ்சில் எப்போதும் தித்திக்கும் இன்ப மொழி !
என் தங்கத் தமிழ் மொழி !
என் தங்கத் தமிழ் மொழி !
இந்த புண்ணிய தமிழ் பேச நீ தவம் செய்து வந்தாய் ! இந்த புனித தமிழ் நாட்டில் பிறக்க, இருக்க, இறக்க வரம் வாங்கி வந்தாய் ! ஏன் மறந்தாய் ? உணர்ந்து பார் ! உன் ஆன்மாவுக்கு புரியும் ! உன் ஆன்மா இந்த ஞான பூமி இந்தியாவில் பிறக்க மூன்று வருடம் காத்திருந்தது ! இந்த புண்ணிய புனித தேவர்கள் குடி கொள்ளும் இன்ப தமிழ் நாட்டில் பிறக்க ஏழு வருடம் காத்திருந்தது ! இந்த புனித தமிழ் நாட்டில் பிறக்க அங்கே (பிரபஞ்சம்) ஒரு மாபெரும் போட்டியே நிகழ்கிறது ! உணர்வாயோ நீ ?
நான் உணர வைப்பேன். அதற்காகவே ஆசையாக பிறப்பெடுத்தேன் தாமிரபரணி நதிக்கரையிலே ! உன் நெற்றியில் ஒன்பது வரிகள் என்பத்தி ஒன்று எழுத்துகளாக இருக்கும் பிரம்ம லிபி என்ற விதி எழுத்தின் தாய் மொழி தமிழ் என்பதை உணர்ந்து பார் !
இரண்டாயிரத்து இருபத்து ஐந்தாம் வருடத்திற்கு பின் இலங்கையை ஒரு தமிழன் ஆள்வான். ஈழத் தமிழர்களின் வாழ்வு மலரும் ! நான் மலர வைப்பேன் ! ஒரு தமிழன் உலகை வழி நடத்துவான் ! உலகையே ஆள்வான் ! இது சத்தியமாக நடக்கும் !
இந்த புண்ணிய தமிழ் நாட்டில் இனி பஞ்சங்கள் வராது. எப்போதும் செழிப்பும், வளமையும் இருக்கும். வட நாடுகள் வாடிப் போகும் ! இந்த புண்ணிய தமிழ் நாட்டில் குடியேற எல்லா நாட்டு மக்களும் ஆசைப்படுவார்கள். இந்த புண்ணிய தமிழ்நாட்டை நோக்கி சீனா, ஜப்பான், இன்னும் பிற நாடுகளிலிருந்து சித்தர்கள், யோகிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் !
உணர்ந்து வாழ் ! எப்போதும் தங்கத் தமிழோடு வாழ்வேன் !
மனிதனாக வாழ் ! மலர்வோம் நாம் ! – நான் இநன்யா !
No comments:
Post a Comment