இநன்யா ;;; உன் உருவாக்கம் ;;; என் அப்பா (கடவுள்)யாகவா உரைத்தது !INANYA NAMOO NAMA ;;;
13 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
உன் உருவாக்கம்
என் அப்பா (கடவுள்)யாகவா உரைத்தது !
ஆண் என்றும், பெண் என்றும் உருவாக்கி, இன்பம் போல் இருவரையும் இணைய வைத்தான். கருவறை தான் திறந்து ஒரு துளி நீரை பெண்ணுக்குள் எறிந்து பிண்டமாக வளர வைத்தான். பின் கண் படைத்தான். இதயத்தை தான் படைத்து தசைக்குள் கூடொன்று தான் படைத்தான். கூட்டிற்குள் உயிரொன்று வைத்தான். நெற்றியிலே விதி எழுதி அதில் மரணமதை எழுதி வைத்தான். ஒன்பது நாழிகையில் உன்னை படைத்து விதியை எழுத்தின் மேல் எழுத்தாக (பிரம்ம லிபி) எழுதி வைத்தான். ஓடி பிடிக்கும் உயிரை உனக்குள் வைத்து, உன் உயிருக்குள் ஒரு உயிரை வைத்தான்.
கொக்கி எலும்பாக இருநூற்றி ஆறும் தான் வைத்து, உன் முகத்தை மாறுபடச் செய்தான். கபாலத்தில் ஒன்பது அறைகள் தான் வைத்தான். முன்னூற்றி முப்பத்தி மூன்று நரம்பு மண்டலங்களை தான் வைத்து அதில் ஆறு நரம்புகளை சூட்சுமம் ஆக்கினான். மேலே ஒன்பது அறைகளும், பின் கீழே இரண்டு ஒன்பதாக பதினெட்டு அறைகளும் உனக்குள் வைத்தான். அறுபது அடி குடலும், கபால நரம்பு ஆறும், அதில் பதினொன்று குழிகளும், மூன்று காலங்களும் வரையறுத்தான். ஊன் உதிரம் தான் படைத்து உன்னை உருவாக்கினான்.
மூன்று நீர் வைத்தான் (உப்பு நீர், பித்த நீர், கிரந்த நீர்). முக்கோண நாடிகள் மூன்று வைத்தான். (வாதம், பித்தம், சிலேத்துமம்). ஒன்பது வாயுக்கள் வைத்தான் ! கழிவு நீரிலே வந்தவன் நீ ! கைப்பிடி மணலை எண்ண முடியாதவன் நீ ! தலை முடியை எண்ண முடியாதவன் நீ ! என் கடவுளை ஆராயாதே ! படைத்தவன் பாசமாக, பக்குவமாக, நன்றாக படைத்தான் ! நீ தான் பாசமில்லா அலையக் கண்டேன் ! படைத்தவனுக்கு யாவும் தெரியும். பார்த்த உனக்கு ஏது தெரியும் ?
வகுத்தான், நன்றாய் படைத்தான், ஆனால் வந்தவன் வாழ வழி தெரியா தடுமாறி திரிகின்றான். மனித கூட்டுக்குளே மாயை ஒன்றை வைத்தான். அந்த புனிதன் எனக்குள் தான் ! உணர்ந்து பார் ! என்னை உற்று நோக்கு ! உன்னை உணர வைப்பேன் ! நாளும், கோளும் ஒன்றும் செய்யாது நான் உனக்குள் இருந்தால் !
உன் விதியை சதிராடுவேன் !
உன் நாவில் ஒரு முறை என் நாமம் சொல் ! தேனாய் தித்திப்பாய் ! திகட்டாமல் நான் இருப்பேன் ! உன் ஆன்மாவில் எப்போதும் சுகமாக நானிருப்பேன் !
உன் நாவில் ஒரு முறை என் நாமம் சொல் ! தேனாய் தித்திப்பாய் ! திகட்டாமல் நான் இருப்பேன் ! உன் ஆன்மாவில் எப்போதும் சுகமாக நானிருப்பேன் !
உன் உருவாக்கம் எதெற்கென்று உணரப் பார் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment