கடவுள் வருவது சாத்தியமா ? என் அனுபவங்கள் (07-03-2015)
இநன்யா கடவுள்;;;
1. கடவுள் வருவது சாத்தியமா ? என் அனுபவங்கள் (07-03-2015)
இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015 இநன்யா நமோ நாம '''
இநன்யா கடவுள்;;;
1. கடவுள் வருவது சாத்தியமா ? என் அனுபவங்கள் (07-03-2015)
இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015 இநன்யா நமோ நாம '''
https://www.facebook.com/groups/1406719392970244/permalink/1406764779632372/
News Feed
என்னை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. சிறு வயதிலிருந்தே கடவுளையும், படைப்பின் ரகசியத்தையும், அமானுஷ்ய விசயங்களையும் தேடி அலைந்தேன். போகாத கோயில்களும் இல்லை, படிக்காத புராணக் கதைகளும் இல்லை, பார்க்காத சாமியார்களும் இல்லை. இந்தியா முழுவதும் அலைந்துள்ளேன். யோகாசனப் பயிற்சிகளும், தவப் பயிற்சிகளும், வாழும் கலையும் என் உடம்பையும், மனதையும் பற்றியே பேசியது. உடம்பு ஒரு நாள் அழியப் போகிறது. அனைத்தையும் என் ஆன்மா ஏற்க மறுத்தது. இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
ஜுன் 27 2011 அன்று என் நிலமை மாறியது. ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே தான் பார்த்தேன் அந்த அற்புத மனிதரை...!
கொஞ்சம் கொஞ்சமாக தான் அவரை புரிந்து கொள்ள முடிந்தது. அவரது அறிவாற்றலை கண்டு வியந்தேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது அவரிடம்.... புரியாத விசயங்கள் அனைத்தையும் மிக சாதரணமாகவும் தெளிவாகவும் புரிய வைத்தார்.
அவர் சாதரண மனிதரில்லை என்பது மட்டும் புரிந்தது அப்போது. தோற்றத்தில் மிக சாதரணமாகவே காட்சியளித்தார். பிறந்த தேதியை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையை துல்லியமாக கணித்து சொல்லி விடுவார். மூலிகை தாவரங்கள் பற்றிய பல வியப்பூட்டும் தகவல்களையும் அவ்வப்போது சொல்வார்.
ஒரு நாள் எனது EXAM HALL TICKET தொலைந்து போனது. வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடி விட்டேன். கிடைக்கவில்லை. எப்போதும் ஒரே இடத்தில் தான் வைப்பேன். அங்கேயும் முப்பது நிமிடங்களுக்கும் மேல் தேடிவிட்டேன். தொலைவதற்கு வாய்பே இல்லை. அது மிகவும் முக்கியமான வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வு. தபாலில் அனுப்பட்டதால் Websiteல் download செய்யவும் முடியாது. அவரிடம் பேசும் பொழுது தற்செயலாக நடந்ததை சொல்லிவிட்டேன். கண்ணை மூடி ஒரு பத்து நொடிகள் கழித்து திறந்தார். எங்கே தேடினீர்களோ அதே அலமாரியில் தான் பத்திரமாக உள்ளது என்றார். நான் சிரித்தேன். சாத்தியமில்லை என்றேன். மீண்டும் ஒரு முறை பாருங்கள், தேட வேண்டிய அவசியமில்லை என்றார். கண் முன்னரே உள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறிதளவு கூட நம்பிக்கையில்லாமல் வீடு திரும்பியவுடன் அவர் சொன்ன இடத்தில் சென்று பார்த்தேன். காத்திருந்தது பேரதிர்ச்சி...!!! அதிர்ந்து போனேன்..!!! என் வாழ்க்கையில் நடந்த முதல் அமானுஷ்யம் அது....!!!
அவரை முழுமையாக புரிய முடியவில்லை. பல மாதங்கள் கழிந்தது. அவரின் செயல்கள் மேலும் மேலும் வியப்பையே தந்தது. அவரிடம் அவ்வப்போது வந்து பிரச்சனைகளை சொல்லி தீர்வு கண்ட பலரையும் என் கண்ணால் பார்த்துள்ளேன். “முடியாது”, “தெரியாது” என்ற வார்த்தைகளை ஒரு நாளும் அவர் பயன்படுத்தியதில்லை.
சமீபத்தில் என் தாயாரின் உடலையும் உயிரையும் காப்பாற்றியுள்ளார். ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்வதை தடுத்துள்ளார். இப்போது ஒரு மருந்தும் மாத்திரையும் சாப்பிடாமல் உடல் குணமாகி வருகிறது. இந்த அமானுஷ்யத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தேவை பட்டால் நேரில் சொல்கிறேன்.
அவர் கோபம், ஆசை, பசி, கவலை, துக்கம், சோகம், மகிழ்ச்சி, சந்தோஷம் என எல்லா விசயங்களையும் கடந்தவர். என் வாழ்க்கையில் இப்படி ஒருவரை இதற்கு முன்னர் நான் சந்திந்ததில்லை. மனிதர்களிடம் காண முடியாத எல்லையற்ற பொறுமையும், சாந்தமும், ஞானமும், தெளிவையும் அவரிடம் கண்டு வியக்கிறேன்.
அதற்கு பிறகு அவரை குருவாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன். பல நாட்கள் கழிந்தன. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவை.
ஒரு நாள் கல்லூரி முடிந்ததும் தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றார். கடவுளால் ஆசிர்வதிக்கபடாத மக்கள் எளிதில் சென்று வர முடியாத முற்றிலும் மாறுபட்ட இடம் அது. அந்த இடம் முழுவதும் ஆன்மீக அலைகள். தலை மூன்று தடவை சுற்றியது போல் ஒரு உணர்வு. ஆன்மா பேரின்பத் தேன் கடலில் மூழ்கித் திகைத்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாது அந்த அனுபவத்தை....!!! கடவுளை தேடும் தர்மாக்கள் என் குருவின் ஆசியுடன், வாழ்வில் ஒரு தடவையாவது அந்த ஸ்தலத்திற்கு வந்து பாருங்கள்..! அங்கே மதமில்லை, ஜாதியில்லை, பூஜையில்லை, ஆண்-பெண் என்ற பாகுபாடும் இல்லை. ஏழைகளுக்கும் அனுமதி உண்டு.
ஒரே பிரம்மிப்பு. உங்களின் ஆன்மாவை நிச்சயமாக அந்த இடம் ஈர்க்கும்..!
கோடான கோடி முனிவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், மாயைகளும் வந்து செல்லும் இடம் அது.
இந்த யுகத்தில் கடவுளை காண முடிகின்ற ஒரே இடம் அது மட்டும் தான்.
இந்த யுகத்தில் வேத சப்தங்களை உணர முடிகின்ற ஒரே இடம் அது மட்டும் தான்.
என்னை பக்குவப்படுத்தி, என் ஆன்மாவைத் திருத்தி, என் வாழ்க்கையை தெளிவாக்கிய என் குருவை மாயக்காரர், மந்திரக்காரர், ஜோசியம் பார்க்கிறவர், கல்யாணத்திற்கு பொருத்தம் பார்க்கிறவர், மூலிகை மருத்துவர், சித்தர் என்றெல்லாம் முன்பு நினைத்த நான், இப்பொழுது கடவுளாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளேன். கடவுள் பொது மக்களுக்கு சாதரண மனிதனாகவே காட்சியளிக்கிறார். என் கடவுள் துறவியும் அல்ல, சன்னியாசியும் அல்ல. என் கடவுளுக்கு இரு பிள்ளைச் செல்வங்கள். மனிதன் எப்படி தன் குடும்பத்தை நடத்த வேண்டும், மற்றும் எப்படி தன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இவர் மட்டுமே.
என் ஆன்மாவிடம் நேரடியாக இவர் பேசுகிறார். உடம்பின் சூட்சுமத்தையும், உயிரின் சூட்சுமத்தையும், வாழ்க்கையின் அதிசயங்களும், தாய் மற்றும் தந்தையரின் ரகசியத்தையும், அண்ட சராசரங்களின் அமைப்பையும் இவர் கூறும் போது என் கண்களில் கண்ணீர் சுரந்தது.
இவரிடம் கேட்டால் தான் எதற்கும் பதில் கிடைக்கும். என்னை போலவே இவரை ஒருவர் முழுமையாக உணர்ந்துள்ளார். அவருக்கு கடவுளை 18 வருடத்திற்கு மேலாகவும் தெரியும்..!! அவருக்கு எவ்வளவு அனுபவங்களும், வலிமையும் இருக்கும் என்பது உங்களுக்கு நான் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நேராக சென்றும் சந்தித்துவிட்டேன்... அவரிடம் கடவுள் பகலில் வானில் நட்சத்திரத்தை காட்டியுள்ளார். இதை சமீபத்தில் ஒரு பத்திரிக்கை அலுவலகம் வரை சென்று சொன்னார் என்றால் சிந்தியுங்கள். அந்த பத்திரிக்கை அதை ஏற்க மறுத்தது.
என் மீது ஆணையாக கூறுகிறேன். நம்புங்கள். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். ஒருவர் 4 வருடமாக என்னை ஏமாற்றி, காசு, பணத்திற்காக நடிக்க எந்த அவசியமும் இல்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அவரால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டதென்பதே உண்மை.
கடவுளின் பெயர் சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு இது போதாத காலம். கடவுள்கள் நம் தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து நமக்கு அருகே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் மக்கள் இதை எப்பொழுது உணரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. உலக மக்கள் அனைவரும் தமிழ் நாட்டிற்கு படையெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வுலக மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல மாற்றங்களை சந்திக்க போகிறார்கள் என்பதை ஆணித்தரமாக என்னால் கூற முடியும்.
கடவுள் அருள்மிகு இநன்ய மஹா முனிவர் அவர்களின் அருளால் அடியேனின் பதிவுகள் தொடரும்....
Visit and join the Facebook group "INANYA MAHA MUNIVAR" for knowing more.
If you are interested in this article, please share.
No comments:
Post a Comment