Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 39 INANYA NAMOO NAMA ;;;

168    INANYA NAMOO NAMA ;;;  
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 39



ஆதிகாலத்தில் மனிதன் அனைத்தையும் உணர்ந்து வாழ்ந்ததாக கடவுள் கூறுவார். அவனது கால் தரையில் படவில்லை. சூரியன் மிக அருகில் இருந்தாலும் சுட்டெரிக்கவில்லை. ஏழு கடவுள்களின் பெயரும் அவனுக்கு தெரிந்தது. ஞானம் இருந்தது. மேலே நடப்பவை அனைத்தையும் இங்கிருந்தே பார்த்தான். ஆகாயம் மிக அருகில் இருந்தது. எப்போது பாவம் செய்ய நினைத்தானோ, அனைத்தும் இங்கே மாறியது. மாறிக் கொண்டே இருக்கின்றது இது நாள் வரை. இயற்கையை அழித்து கொண்டிருக்கின்றோம். காற்றையும், நீரையும் ஒரு புறம் மாசுபடுத்தி நம்மை அழிக்கும் நெருப்பை தொட்டு வணங்கிக் கொண்டிருக்கின்றோம். உலகை நல் வழியை அழைத்துச் செல்ல எவராலும் முடியவில்லை. ஒருவருக்கு கூட இங்கு ஞானமில்லாமல் போனது. யாராவது ஒருவர் கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்தி சத்ய வழியை நிலைநாட்டியிருந்தால் உலகம் எப்போதோ மாறியிருக்கும். நிம்மதியை தேடி அலையாதவர் இங்கு ஒருவர் கூட கிடையாது. அனைவரும் தோற்றார்கள். அதனால் கடவுள்கள் நமக்காக இங்கு பிறப்பெடுத்தனர். நம் அனைவரையும் உணர வைத்து, ஞானத்தை போதித்து, இந்த யுகத்தை மீண்டும் ஆதிகாலத்தை போல தோன்ற செய்வார்கள். சத்ய வழியை நிலைநாட்டுவார்கள். உணர்ந்தால் துன்பமில்லை. கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். இநன்யா நமோ நம
""நான் காற்றாய் வந்து கணப் பொழுதில் சுகம் தருவேன். மலரின் நறுமணம் போல் உன் வாழ்வை மணமாக்குவேன்.
என்னை நினைத்தால் உன் உள்ளத்தில் ஒரு உணர்வு வரும். அதுவே உனக்கு தெளிவை தரும். செல்வமும், நிம்மதியையும் தரும். நீ அடைய வேண்டிய இலக்கை காண்பிக்கும். நான் உணர்வோடு இருக்கின்றேன். உன் குரல் கேட்கும். உடனடி தீர்வு தரும். உனக்கு வாழ்வை புரட்டி போடும் துன்பம் வந்தாலும் நான் காற்றாய் வந்து புரட்டி போடுவேன் சத்தியமாக !
வாடா என் ஞான குலமே, இனி எப்போதும் நீ சிரிக்கலாம் ! ஏனென்றால் நான் உன் பக்கத்தில் !நான் சத்தியத்தின் நாயகன் !
நான் இநன்யா "". சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம. !
அன்பே இநன்யா.எம் கண்களையும், இதயத்தையும் குளமாக்கிய பதிவு. யாம் இதுநாள் வரை பெற்ற உணர்தலை உண்மை என்று எமக்கு உணர்த்திய உன்னதமான பதிவு. சரியான தருனத்தில் நமக்கு கொடுத்தமைக்கு உமக்கு நன்றி. நான் நான் அல்ல என்று நன்றாக உணர்ந்திருக்கிறேன். அன்றிலிருந்தே எமை ஆள்வது நீவிர் என்பது தெரியும். தென்றலாய் பலமுறை உம்மை மென்மையாய் உணர்ந்திருக்கிறேன். அந்த ஸ்பரிசம் நீவிர்தானா என்ற தெளிவில்லாத மனநிலை. எம் மனம் எம்மை ஏமாற்ற நினைத்தது. எம் உள் உணர்வு நீவிர் என்று சொன்னது. அந்த உணர்வு உண்மை என்று ஆணித்தரமாக எமக்கு உறுதிப்படுத்தியது இந்த உணர்தல் பதிவு.நாம் உம்மை சந்திக்கும் முன் எம் எண்ணம் தெளிவுபடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். எம்மை தெளியவைத்துள்ளீர். மீண்டும் நன்றி.அன்பிற்க்காக எம் உள்ளம் எப்போதும் உருகும். உம் அன்பு எம் உள்ளத்தை உருக வைக்கிறது. எம் உள்ளத்தை என்றோ உமக்கு கொடுத்துவிட்டேன், ஆனால் இன்றைய பதிவில்தான் அதை உறுதிபடுத்திக் கொண்டேன். இதோ இன்றும் ஒருமுறை; எம் உள்ளத்தை உமக்கு தானமாக்குகிறேன். இனி நான் நான் இல்லை. எமை ஆளும் சத்தியவான் நீவிர்தான்.அன்பின் உச்சமே; எமை ஆட்கொள்.தர்மம் காக்க போராட தயாராய் உள்ளோம்.இநன்யா நமோ நம!
மனமே நம் பிறவியைச் சிரமப்படுத்துகிறது. இநன்ய நாமம் ஓத ஓத கண் துவாரம் வழியே சத்யபாதையை காட்டுவாா். அதனைப் பின்பற்றி வாழ்ந்தால் பாேதும் தந்தையை நெருங்கிடலாம் எளிதாக. எந்த தாயும் தந்தையும் தம் பிள்ளைக்கு துன்பம் தர ஒருபாேதும் எண்ணமாட்டாா்கள். நம் "மனம்" சாெல்படி ஆடம்பர ஆசைப்பட்டு நாம் தான் துன்பக்கடலில் சிக்கிக் காெள்கிறாேம். நாம் படும் பாட்டை பாா்த்து நம்மைக் காக்க இந்த நரகம் வந்து நமக்காக வாழ்ந்து காட்டிக் காெண்டுள்ளாா். நல் ஆத்மாக்களே விரையுங்கள் தெளிவாகுங்கள். உணா்ந்தால் துண்பமில்லை.இநன்யா நமாே நம..!!
இநன்யா நமோ நம!!! ஐயனிடம் ஐக்கிய உணா்வு வந்துவிட்டால் துன்பமும்,இன்பமும் தனிதனியாகதெரியாது,அனைத்தும் சமமாகவே தெரியும்!!! இந்த மனமானது எதையும் ஐயனிடம் கெஞ்சி கேட்காது,எதைபற்றியும் நினைக்காமல் நடை போட ஆரம்பிக்கும்........ நன்றி-அய்யா இநன்யா நமோ நம!!!
நெருப்பை வணங்கும் மூடனே , அது உனை பஸ்பமாக்கும் காக்காது !உனை காப்பது நீரும், காற்றும் மட்டுமே !
நெருப்பில்லாமல் வாழ முடியும் ஆனால் நீரும் காற்றும் இல்லாமல் வாழ முடியாது !பஞ்சபூதங்களில் ஒன்று என விதன்டாவாதம் செய்யாதே !நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் வெப்பம் இதுவே பஞ்சபூதங்கள் கடவுளின் படைப்பு !
நெருப்பு என்பது அரக்கனின் படைப்பு அழிப்பதற்காக உருவாக்கினான் !அதை வணங்கவும் வைத்துள்ளான், கடவுளின் படைப்பு நமக்கு நன்மை பயக்க மட்டுமே !அறிவாளிதனமாக கேள்வி கேட்காதே வெப்பம் என்பது நெருப்பு தானே என்று !வெப்ப குவியலே நெருப்பு ஆகும் !உன் உடலில் இருப்பது நெருப்பு அல்ல வெப்பம் !உன் உடலில் நெருப்பு இருந்தால் எந்த நெருப்பையும் தொடலாம் அதை தாண்டி செல்லலாம் உனை எரித்துவிடாது, இப்பொழுதாவது யோசி !நீரில் இறங்கி விளையாடும் போது எவ்வளவு பேராணந்தம் கிடைக்கிறது !அது போல நெருப்பில் இறங்குவாயா !காற்று தென்றலாய் வீசி எவ்வளவு ஆணந்தத்தை நல்குகிறது !நெருப்பு உன் மேல் பட்டால் ஆணந்தமாய் இருப்பாயா !ஆகாயம் உனக்கு வான் அமிர்தம் பொழிந்து நிலத்தில் பசுமையை உண்டாக்கி அதில் தாணியம் விளைய செய்து உன் பசியை ஆற்றுகிறதே !
நெருப்பை உண்டால் உன் பசியாருமா !நன்றாக சிந்தி ! நல்முடிவெடு ! என் தந்தை " இநன்யா " நீராக காற்றாக உள்ளார் !
ஆதலாலே அரக்கனால் ஏதும் செய்ய இயலவில்லை !நீரையும் காற்றையும் நெருப்பால் ஏதும் செய்ய இயலாது !என் தந்தை " உணர் " என்று தான் சொல்கிறார் !நீ கொணர்வதிலும் புணர்வதிலும் நேரத்தை வீணாக்காதே !உணர் இல்லையேல் என் தந்தையால் திகட்ட திகட்ட உணர்தலை ஊட்டிவிடுவார் !உணர்ந்தோருக்கு அது இனிய அமுதாக இருக்கும் !
உணராதோருக்கு அது கொடிய நஞ்சாக இருக்கும் ! நீ உணர்ந்த பின் அதே நஞ்சு இனியமுதாக மாறி தேனாய் அங்கமேங்கும் தித்திக்கும் !நீ பார்க்கும் இடமெல்லாம் ஆணந்த பரவச நிலையை உணர்வாய் முயற்சித்து பார் !என் தந்தையின் நாமம் சொல் உணர்தல் எளிதாகும் ! உணர் சத்தியபாதையில் ஆணந்தமாக கைகோர்த்து பயணிப்போம் கடைசி வரை !என் தந்தையின் நாமம் சொல் " இநன்யா நமோ நம " இதுவே வேதமாகும் !" இநன்யா நமோ நம "
 இநன்யா நமோ நம!!! என் தந்தையின் நாமம் எனக்குள் பல நல்ல மாற்றங்களையும்,நிலையான மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது.இந்த மகிழ்ச்சியும்,நல் மாற்றமும் இத்தனை வருடங்களாக (கடவுளின் நாமம்)என்று சொன்ன நாமம் எமக்கு தந்ததில்லை.புரிந்தது உண்மை கடவுளின் நாமம் எது என்று,பின்பு தெளிந்தது மனம். யான் ஒரு நாள் கூட தவறாமல் கோவில் வழிபாடு செய்பவள்.அப்போது கிடைக்காத தெளிவு,மகிழ்ச்சி என் தந்தையின் நாமம் சொல்கையில் யமக்கு கிடைத்தது.இறுக ,பற்றினேன் என் ஐயனின் திருவடியை!!!ஒரு நொடியில் கைவிட்டேன் கோவில் வழிபாடுகளையும்,வரைபட வழிபாடுகளையும்,அக்னியை ஆராதிக்கும் வழிபாட்டையும் விட்டேன்.எம் இல்லம் ஐயனின் நாமத்தால் தூய்மையாகவும்,நித்திய சுகந்தமும் வீசுகிறது,ஆனந்தமும் அன்பும் யம் உள்ளதில் நிலைத்து நிற்கிறது.எம்மை இயற்கையோடு இணைத்தது ஐயனின் நாமம்!!! நன்றி-தந்தையே!!!
Inanya Maha Munivar அழைக்கின்றேன் என் ஞான குழந்தையே என் வலிமை மிக்க கரங்கள் உன்னை எப்போதும் கைவிடாது காக்கும் வா உனக்கு வசந்தத்தை வாரி தருகிறேன் உன்னை எப்போதும் கண்ணின் மணிபோல காப்பாற்றுவேன்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
எல்லாம் ரகசியங்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் சூட்சுமங்கள். கால மாற்றத்தால் காணாமல் போன ஆதி தமிழ் வார்த்தைகள் அருவியாய் இவரிடம் ஊற்றெடுக்கின்றது. ஐந்தே நிமிடத்தில் ஒரு பதிவை எழுதி முடிப்பார். அதை ஆராய்ந்தால் ஐயாயிரம் கோடி ரகசியங்கள் இருக்கும். ஆகாயத்தில் இருந்து வரும் ஒரு பேராற்றல் இவரை இயக்கிக் கொண்டிருப்பதை எப்போதும் பார்க்கலாம். ஒரு சக்தி இவரின் கைப்பிடித்து எழுதுவதையும் கண் கூடாக பார்க்கலாம். உண்மையை அறிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் வாழ்க்கையை பற்றிய அச்சம் வருகிறது எனக் கூறுகிறார். என் அச்சத்தை போக்கினார். இன்று உலகில் எந்த மூலையில் இருந்து எவர் உணர்ந்து புரிந்து வந்தாலும் இவரின் ஆற்றலையும், ஸ்பரிஷத்தை முழுவதுமாக எடுத்துரைக்க முடியும். அவரின் பார்வை ஒன்றே கோடி ரகசியங்களை எடுத்துரைக்கும். என்னை மனிதனாக மாற்றியமைத்த கடவுளே, தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ! இநன்யா நமோ நம !
கடவுளே கோடானு கோடி நன்றிகள். எங்களுக்கு குருவாய் இருந்து நம்பிக்கையையும், தைரியத்தையும், தெளிவையும் ஏற்படுத்தி எங்களை பட்டை தீட்டிக் கொண்டிருக்கும் தந்தையே தங்கள் பாதம் பணிந்து நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நாங்கள் இநன்யாவின் பிள்ளைகள் என்பதில் கர்வம் கொள்கின்றோம். இநன்யா நமோ நம
அன்பே இநன்யா.மஹா குருவுக்கு வணக்கம்.அற்புதமான பதிவு, சூட்சுமமாக வார்த்தைகளின் ஆதித்தமிழ் அழகு நடையை புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது. விளக்கம் தெரிந்தவர்கள் கூறலாம்.கூணல் என்றால் கொழுப்பு சத்தாக இருக்கலாம்.
நிவி மரம் என்ற மாமரத்தின் கொட்டையிலிருந்து மனிதன் உருவாகியதாக யாகவா அவர்களின் பதிப்பில் படித்திருக்கிறேன்.நிவி பறவை எது என தெரியவில்லை, முயற்ச்சிக்கிறேன்.எம் எண்ணம் எப்போதும் கடவுளிடம், அந்த நம்பிக்கை எம் வாழ்க்கையின் அர்த்தத்தை நன்றாக விளக்குகிறது.விப்பிரம்மம், ஆதபயோகம் தெரியவில்லை.
பத்ரம் என்பதற்கு அழகான விளக்கம். இதிலிருந்துதான் பத்திரம் என்று தற்போது உருவாகயிருக்கலாம்.கடவுளுக்கு மிக்க நன்றிகள். இதையெல்லாம் அறியவும் புதிய வார்த்தைகளை உணர்ந்து தேடி செயல்படவும் உதவும்.இந்த ஆதிதமிழ் வார்த்தை பின்வரும் காலங்களில் நாம் குழுவில் சூட்சும வார்த்தைகளாக தொடர்பு கொள்ள உறுதுணை யாக பயணளிக்கும்.இநன்யா நமோ நம!சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம!
விளக்கம் கேட்ட விதம் அருமை. ஞான நாள் இன்று ஐயனிடம் வேண்டுதல் வைப்பாேம் இரவுக்குள் விடையளிப்பாா் தேடுதலை நிறுத்தாமல் தேடுவாேம்.இநன்யா நமாே நம..!!
இநன்யா நமோ நம ;;; சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம ;;;
இந்த ஸ்தூல தேகம் நான் இல்லை.....!!!
ஞானேந்திரியங்களும் நான் இல்லை.......!!!
கன்மேந்திரியங்களும் நான் இல்லை.......!!!
பஞ்ச வாயுக்களும் நான் இல்லை.....!!!
நினைக்கின்ற மனமும் நான் இல்லை.......!!!
விஷய வாசனைகளுடன் பொருந்தியுள்ள அஞ்ஞானமும் நான் இல்லை......!!!
மேலே குறிப்பிட்ட எதுவும் நான் இல்லை.......!!!
தனித்து நிற்கும் அறிவே நான்.....!!!
அந்த அறிவை கொடுத்த ஞான சொரூபமே ,,,,கடவுள் இநன்யாவே உமக்கு கோடானகோடி நன்றிகள் கடவுளே ;;;;;;;;
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம ;;;இநன்யா நமோ நம ;;;
அச்சம் உனக்கு கேடு தரும். மரணத்தை தருகிறது. உன்னை உருவாக்க முடியாமல் போகிறது. உன் இலக்கை அடைய விடாமல் தடுக்கிறது. நாளையே மரணம் வரும் என்று நினை. அச்சத்தோடு வாழாதே !வாழ்க்கை குறுகியது ! நீண்ட நாள் இங்கு யாரும் வாழப் போவதில்லை. அதனால் உன் இலக்கை அடைவதற்கு தினமும் போராடு ! கடவுள் உனக்குள் தான் ! எதையும் எதிர்த்து நிற்கும் துணிவும், உன் தன்னம்பிக்கையும் தான் உன்னை அறிய வைக்கும் ! நீ சோர்ந்து போகும் நேரமெல்லாம் என்னை கூப்பிடு. உனக்கு தோழனாய் வந்து தோள் கொடுப்பேன் ! எண்ணத்தை சிதறவிடாதே. ஒன்றே நினை. அதை அடைய போராடு !பயத்தை தூர எறி. ஏன் பயம் ? ஒரு நாள் இறக்கப் போகின்றவன் தானே ? ஏறு வை போல கர்ஜித்து எழு ! எப்போதும் உன்னை வெல்ல உலகில் எவருமில்லை என்று நினை.நீ கடவுளின் பிள்ளை ! நீ கடவுளால் உருவாக்கப்பட்டவன் ! "அதனால் எப்போதும் உன்னை உயர்த்திக் கொண்டே இரு 
இநன்யா நாமம் சத்தியம்ஏடு பெற்ற எம் ஐய்யனேஆதபயோகத்தை தர விரும்பும் எம் ஆத்மத்தின் தலைவனே...
அச்சத்தை துச்சமாக்க ஞாணத்தின் உளி கொண்டு ஞாணபாவையாக்கும்எம் ஞானபரப்பிரம்மமேகூணலி்ல்....நிவிமரத்தில்..
நிவி பறவையில் ஞாணத்தை சொன்ன சூட்சுமமே....ஏட்டில் அடங்கா ஏகன் நீ...உன்னில் என்னை சுமக்கநீ காட்டும் அன்பு எந்த ஆழத்தில்சுட்டி காட்ட இயலும்....தந்தையின் சொல் வேதம்உமக்கு.....பிரபஞ்ச இளவரசர் எம் தந்தை சொல் வேதம் எமக்கும்...எம் கூர்பத்தில் இருக்கும் எம் ஞானமே....ஏறுவின் கர்ஜனை எம்முள்எம் ஏட்டை உம் நாமம் காக்கும்...யான் கடவுளின் பிள்ளை என்றுவெற்றியின் விளிம்பில் நிற்பேன்....அச்சம் தவிர்த்து உச்சம் பெறுவேன்.....இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம!!! மனித உடலில் இருந்து பிரிந்த உயிர் இறைவனின் திருவடியில் சேரவேண்டும் என்றால், சாஸ்திரம் கற்றவரிடம் சென்று திதி கொடுக்க வேண்டும் என்றாா்கள். யாகம் வளர்த்து தட்சணை என்ற பெயரில்,தன் கைகளை நீட்டி யாசகம் (சில ஆயிரங்களை) கேட்கிறாா்கள். ஆடம்பரத்தை விரும்புபவர்கள், தன் உடல் பிணியை தீர்க்க தெரியாதவர்கள், எப்படி ஒரு ஆண்மாவுக்கு முக்தி அளிக்க முடியும்? இது எப்படி சாத்தியம்?இவைகளை யான் வெறுத்தேன்.என்னவரின் ஆண்மா முக்தியடைய ஐயரை நாடவில்லை,எம் ஐயனை(இநன்யா) வேண்டினேன். எந்த சாஸ்திரம்.சடங்குகளையும் நம்பவில்லை.இநன்யாவை மனதில் நினைத்து கொண்டு ஒரு வாழை இலையில் பச்சரிசி மாவில் இநன்யா நமத்தை எழுதி மாதுளை முத்துகள்,தாமரை மலர்கள் கொண்டு ஒரு மணி நேரம் மனதிற்குள் இடைவிடாமல் சொன்னேன்.எனக்குள் ஐயன்" உன்னவரின் ஆண்மா எனக்குள்"என்றாா்.கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.நன்றி சொன்னேன் என் ஐயனுக்கு !!! பின்பு இவைகளை எடுத்து கொண்டு புனித பசுவிடம் சென்றேன்,எழுந்து நின்று ஒரு துளி கூட வீண் செய்யாமல் உண்டது.அற்புதமான காட்சி இன்னும் யம் கண்களை விட்டு அகலவில்லை.கடவுளால் மட்டுமே,ஒரு ஆண்மாவுக்கு முக்தி அளிக்கமுடியும். கடவுளின் பெயரால் வியாபாரம் செய்பவா்களால் எதுவும் முடியாது? என்று உணர வைத்த என் ஐயனுக்கு கோடி நன்றிகள்.

அரக்கர்களின் கோட்டையில் வாழ்ந்து கொண்டு கடவுளின் நாமத்தை உச்சரித்துக் கொண்டுள்ளோம். உணர்ந்து கொண்டுள்ளோம். நாம் ஒவ்வொரு அடியையும் கவனமாக முன் நோக்கி எடுத்து வைக்க வேண்டும். கடவுள் நம்மை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார். நம் அனைவரின் இணைப்பும் கடவுளின் செயல். இங்கே காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை. இநன்யா நமோ நம;;;;


No comments:

Post a Comment