Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;;இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 10 INANYA NAMOO NAMA ;;;

139  INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 10



கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் ! உலகில் புனித நீர் ஏழு வகைப்படும் ! எட்டாம் நீர் எதற்கும் உதவாது ! ஒன்பதாவதாக ஓர் அதிசய நீர் உள்ளது ! இதை கண்டுபிடித்து இதன் சூட்சுமத்தை உணர்ந்தால் ஒரு நொடியில் ஞானியாகிவிடலாம் ! கண்டுபிடியுங்கள் அது எதுவென்று ! நாம் நீரைக் குடிக்கும் போது நம் கண்கள் தானாகவே மேல் நோக்கி பார்த்துவிடும் ! நீரைக் குடிக்கும் முன் விண்னை பார்த்து நன்றி சொல்லி வணங்குவதற்கு ஆன்மாவிற்கு தெரிகிறது ! நம் மனதிற்கு தெரியவில்லை ! நெருப்பானது அனைத்தையும் அழித்துவிடும் ! நீர் மிகவும் வலிமையானது ! நீர் நெருப்பையும் அனைத்துவிடும் ! கவனமாக இன்றே சிந்தியுங்கள் ! நீரை வணங்காமல் நெருப்பை வணங்கி நாம் கண்ட பலன் என்னவோ ? நெருப்பு துன்பம் ! நீர் இன்பம் ! அதனால் தான் விளக்கு ஏற்றி வணங்கச் சொல்லாமல் நீரை வைத்து மேல் நோக்கிப் பார்த்து வணங்கச் சொல்கிறார் கடவுள் ! நாம் அனைவரும் ஒரு துளி நீரில் இருந்து உருவாகியுள்ளோம் என்பதை நினைத்துப் பாருங்கள் ! நீரின் சூட்சுமம் புரியும் ! மழை வரும் பொழுது அழகிய வானவில் உருவாகின்றதை நம் கண்களால் பார்க்கின்றோம் ! வானவில்லின் ஏழு நிறங்கள் ஏழு கடவுள்களைக் குறிக்கின்றது ! நம் கடவுள் இநன்யாவின் கையிலிருக்கும் அதிசய வில் தான் இந்த வானவில் ! கடும் வெப்பத்தையும் வெயிலையும் மீறி நீரின் வலிமையை மனிதர்களுக்கு காட்சிப்படுத்தும் அற்புத நிகழ்வு தான் இந்த வானவில் ! யுகத்தில் ஏழேழு பிறவிகள் உண்டு என்பதை குறிக்கின்றது ! உலகில் ஏழு பேர் ஒரே முகத் தோற்றத்துடன் இருப்பர் ! ஏழின் அதிசயங்கள் கணக்கில் அடங்காதது ! நம் கண் முன்னரே அனைத்தையும் பார்த்து ரசிக்கின்றோம் ! இன்னும் அதிசயங்களையும் அமானுஸ்யங்களையும் தேடி அலைகின்றோம் வீணாக ! நேரம் மிகவும் குறைவாக உள்ளது ! விரைவில் உணருங்கள் ! இநன்யா நமோ நம !
என் மீது ஆணையாக கடவுளை உலகத்திற்கே காட்டுவேன் ! அதற்கு முன்னர் தமிழகத்தில் இருக்கும் தர்மாக்கள் அனைவரையும் என்னால் முடிந்த வரை புரிய வைப்பேன். கடவுளின் கடைசி பிறப்பு இது ! நம் தமிழகத்தில் ! இனி அனைத்தும் இங்கே மாறும் ! குற்றம் புரிகின்றவர்களுக்கு இது போதாத காலம் ! கடவுளின் வருகையை உலகமே வரவேற்கத் தயாராகி கொண்டிருக்கின்றது ! பொறுத்திருங்கள் ! உணருங்கள் ! அனைத்திற்கும் விடை கிடைக்கும் சத்யமாக !
யாம் பாா்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளீா் ஐயனே அல்லவை அது எம்மை விட்டு தொலைத்தீா்ஐயனே நல்லவை அது எம்மை நாட வைத்தீா்ஐயனே உங்கள் கருணையை என் சொல்வேன் திருவிழா காலங்களில் தந்தை கை பிடித்து செல்லும் குழந்தையை போல் எம் மனம் ஆனது ஐயனேமகிழ்ச்சியும் பாதுகாப்பையும் உணா்ந்தேன் ஐயனே இப்பொழுது என்னுள் கோபம் இல்லை அன்பு மட்டுமே ஆா்பரிக்கும் ஆணவ மனம் இப்பொழுது அமைதியானது கயவர்கள் எம் கண்களுக்கு தென்படுவதில்லை மாறாக சகோரத்துடன் நல்தோழமையுடனும் அன்பும் கருணை கொண்ட நபர்களை மட்டுமே காண்கிறேன் பகைவர்கள் அடங்கி போனார்கள் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தேன் பிறகு உணர்ந்தேன் எம் கை பிடித்து சத்திய பாதையில் அழைத்து செல்வது எம் ஐயன் என்று ஆணந்தம் எமக்குள்ளே ஐயனின் நாமத்தால் உமிழ் நீர் கூட தேனை போல தித்திப்பானது வற்றாத ஊற்று போல் உமிழ் நீர் சுரந்து கொண்டே உள்ளது கழைப்பு எம்மை விட்டு போனது எம் முகத்தில் தெளிவு கிடைத்து அவரின் நாமத்தால் சுகந்தம் வீசுகிறது இன்னும் எத்தனையோ மாற்றங்கள் மொழிகளால் சொல்ல முடியாதவை இது எந்நிலையோ யாம் அறியேன் அளவில்லா கருணை உடையவா் எம் ஐயன் நிகரில்லா அன்பு உடையவர் எம் ஐயன் ஆணந்தமானேன் மகிழ்ந்து மகிழ்ந்தேன் தந்தையே உங்கள் திருவடிகளில் கோடி நன்றிகள் சமர்பிக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் நன்றி அய்யா நன்றி ஞானமலர்கள் நல்வித்துகள் இநன்யா நமோ நம
பனித்துளி அமிர்தம் ! அதிகாலையில் விழும் பனித்துளியை ஒரு சொட்டு அருந்தினால் ஆனந்த வாழ்வு பெறுவாய் ! அரச மரம், அருகம்புல், நாயுறுவி இதில் விழும் பனித்துளி அமிர்தத்தை விட மேலானது !மழை நீரில் மகத்துவம் கோடி உண்டு ! மழைத்துளி அமிர்தம் அதில் கோடி ரகசியம் உண்டு ! நான் மாயவன் என்பதால் என் அடி முடியை காண லோகத்தில் தவம் இருக்கிறார்கள் !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடவுளுக்கு நன்றி ! கடவுளிடம் ஏன் என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்பேன். நான் மேலே தவம் செய்ததாக கூறுவார் ! இங்கே முகநூலில் உலகம் முழுவதும் தவம் செய்தவர்களை தேடிக் கொண்டிருக்கின்றேன். இந்த வட்டத்தில் இணைந்ததால் நீங்கள் அனைவரும் தவம் செய்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ! தவம் செய்திருந்தால் மட்டுமே இங்கே இணைந்து பதிவுகளை படிக்க முடியும். கடவுளின் வார்த்தைகளை தேவர்களின் மொழியான தமிழில் படிப்பதற்கு எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று யோசித்து பாருங்கள் ! இனி உணர்ந்தால் துன்பமில்லை ! வெகு விரைவில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்கள் வரப் போகிறது ! உலகில் மிக முக்கியமான தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ! தவம் செய்தவர்கள் வாழும் நாடு இந்த புண்ணிய தமிழ்நாடு ! உலகமே தமிழகத்தை கண்டு வியக்கும் காலம் விரைவில் ! நீங்கள் உணர்ந்தால் தான் கடவுள் அருளிய பல ரகசியங்களை என்னால் சொல்ல முடியும் ! எப்படி உணர்வது என்று பல பேர் கேட்கிறார்கள் ! யோசிக்காமல் உணர முடியாது ! மனித உடலில் அனைத்து உருப்புகளையும் இரண்டாக படைத்த கடவுள் சில சூட்சுமமான உறுப்புகளை தனியாக படைத்துள்ளார். ஏன் ? உலகில் பிறந்த அனைவரின் முகங்களையும் மாறுபடச் செய்துள்ளார். ஏன் ? இதற்கு உங்களின் மதம் பதில் சொல்லாது ! இதற்கு விஞ்ஞானத்தால் பதில் கூற முடியாது ! இதற்கு புராணக் கதைகளிலும், சித்தர் பாடல்களிலும் பதில் இல்லை ! பூஜைகளும், மந்திரங்களும் பதில் சொல்லாது ! நாம் கற்ற கல்வி இதற்கு பதில் சொல்லாது ! அமைதியாய் அனைத்தையும் யோசித்து விடை கண்டுபிடிப்பதே உணர்தல் ! உணர்ந்தால் துன்பமில்லை என்பதை எந்த நேரத்திலும் மறந்துவிடாதீர்கள் ! வானத்து நட்சத்திரங்களை பார்க்கும் போது உடலில் ஒரு அதிசய நிகழ்வு நிகழும் ! என்னவென்று கண்டுபிடியுங்கள் ! இநன்யா நமோ நம !
குரு÷க்ஷத்திரத்தில் நடந்தபோரில், கவுரவர்கள் அமைத்த வியூகத்தின் உள்ளே சென்ற அபிமன்யு, வெளிவரத் தெரியாமல் உயிர் இழந்தான். விஷயமறிந்த அர்ஜூனன், மகனுக்காக கண்ணீர் விட்டான். அப்போது, கிருஷ்ணரின் முகம் வாடியது.
""உன் மருமகன் அபிமன்யு மாண்டதை எண்ணித்தானே பரம்பொருளான நீயும் வாடுகிறாய்!'' என்றான் அர்ஜூனன்.
கிருஷ்ணர் சிரித்தார்....""அர்ஜுனா! நான் அதற்காக வருந்தவில்லை. உன்னைப் போன்ற மூடனுக்கு கீதையை உபதேசித்ததை எண்ணியே வருந்துகிறேன். உடலுக்குத்தான் அழிவு, ஆன்மாவுக்கு அழிவில்லை என்று கீதை மூலம் உனக்கு எடுத்துச் சொன்னேன். உன் மகன் அபிமன்யு வீர சொர்க்கத்தில் தான் இருக்கிறான். ஆனால், நீ கலங்குகிறாய்! அதை எண்ணியே வாடினேன் ,'' என்றார்.உடனே, அர்ஜூனன் மகனைப் பார்க்கும் ஆவலில் கிருஷ்ணருடன் சொர்க்கம் புறப்பட்டான். அங்கு பொன் ஊஞ்சலில் அபிமன்யு ஆடிக் கொண்டிருந்தான். "அபிமன்யு!அபிமன்யு!' என்று கூவியபடி, கட்டியணைக்கச் சென்றான். அவனோ,""நீங்கள் யார்?'' என அர்ஜூனனைக் கேட்டான்.அப்போது கிருஷ்ணர், ""போர்க்களத்தில் கிடக்கும் கட்டை தான் உன் மகன். பிறப்பும், இறப்பும் உடலுக்குத் தான் இருக்கிறது. ஆன்மாவுக்கு உறவுமில்லை. பகையுமில்லை என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்,'' என்று விளக்கம் அளித்தார்.
அதாவது மனிதர்கள் இந்த யுகத்தில் துன்பத்துடன் வாழ்ந்தாலும் நெடு நாட்கள் வாழ நினைப்பார்கள். ஆனால் இந்த யுகத்தில் கடவுள் மனிதனாய் பிறந்தால் துன்பங்கள் அனைத்தையும் இன்பமாக்கி தான் வந்த கடமையை முடித்துவிட்டு லோகத்தை சென்றடைவார்கள். இங்கு இன்பமாக வாழ்ந்தாலும் அவர்கள் லோகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த காலக் கணக்கு தான் தற்பறை. கடவுளின் வருகைக்காக லோகத்தில் பல கோடி முனிவர்கள், சித்தர்கள், தேவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் ! இந்த யுகம் ஒரு நரகம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நரகம் என்று ஒன்று தனியே கிடையாது !
இநன்யா நமோ நம ,அய்யா பருந்து பாம்பை தின்கின்றன ,பாம்பு தவளையை தின்கின்றன,தவளை பூச்சிகளை தின்கின்றன,பூச்சிகள் எறும்பை தின்கின்றன ஏன்? கடவுளின் படைத்தலில் கருணை இல்லையா,அய்யா இப்போது சோமாலிய நாட்டில் பசியும் பட்டினியால் பல லட்சம் பேர் இறந்துவிட்டனர் இதில்சின்ன குழந்தைகள் உட்பட.ஏன் கடவுளின் படைத்தலில் எத்தனை வேறுபாடுகள். அய்யா நான் கடவுளை பார்த்தால் நான் கேட்க நினைத்த கேள்விகள் ,அதான் கேட்டுவிட்டேன் நன்றி இநன்யா நமோ நம.
இந்த யுகம் ஒரு சிறைச்சாலை ! லோகத்தில் செய்த பாவத்தால் கீழே யுகத்தில் பிறந்தோம் ! இங்கே பாவம் செய்து மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டுள்ளோம் ! செய்கின்ற பாவத்திற்கு ஏற்றவாறு நாம் பிறக்கின்ற இடம் நிர்ணயிக்கப்படுகின்றது ! இங்கு நிம்மதி சாத்தியமில்லை! ஆயிரம் பேரை கொலை செய்தவன் அடுத்த பிறவியில் உண்ண உணவின்றி பருக நீரின்றி பரிதாபமாக கொல்லப்படுவான் ! அதனால் தான் இந்த யுகம் நரகம் என்று கடவுள் சொல்வார் ! ஆக நரகம் என்று ஒன்று தனியே கிடையாது என்பதை நினைவில் நிறுத்துங்கள். யுகத்தில் பாவங்கள் குறைய குறைய ஜனத்தொகை குறைந்து கொண்டே இருக்கும் ! உயிருக்கு அழிவு இல்லை ! உடம்பிற்குத் தான் அழிவு ! உடல் இறந்த பின் உயிர் செல்லும் இடம் செய்த பாவத்திற்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படும் ! தன்னை உணர்ந்தவன் மீண்டும் யுகத்தில் பிறக்காமல் லோகம் சென்றடைவான். பாவம் செய்தவன் மீண்டும் யுகத்தில் பிறப்பான் ! ஒருவன் ஏழையாக பிறக்கின்றான் ! ஒருவன் பணக்காரனாக பிறக்கின்றான் ! ஒருவன் சோமாலியாவில் பிறக்கின்றான் ! தவம் செய்தவன் தமிழ் நாட்டில் தான் பிறப்பான் ! ஏனென்றால் தன் குற்றத்தை உணர்ந்து லோகத்தை விரைவில் அடைந்துவிடும் வாய்ப்பு உலகிலேயே தமிழனுக்கு மட்டும் தான் அதிகம் ! கடவுளின் பிறப்பு வித்தியாசமானது ! அவர் பாவம் செய்து இங்கே பிறக்கவில்லை ! அவர் உயரிய நோக்கத்துடன் இங்கு பிறந்துள்ளார். மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் அனைத்து ஜீவராசிகளும் அரக்கர்கள் படைத்தது ! நோய் பரப்பும் பூச்சிகளை படைத்தது அரக்கர்கள் ! அதை உண்ணும் தவளையை படைத்தது கடவுள் ! தவளையை உண்ணும் பாம்பை படைத்தது அரக்கர்கள் ! பின் அந்த பாம்பை உண்ணும் கீரியையும், கருடனையும் படைத்தது கடவுள் ! ஐயாயிரம் வருடமாய் அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் மிகப் பெரிய போர் நடந்துள்ளது ! அரக்க குணம் படைத்த ராட்சஷ விலங்குகளான யாளி (டைனோசர் இனம்) முதலியவைகளை அழித்தது கடவுளின் அவதாரங்கள் தான் ! இநன்யா நமோ நம !
அனைவருக்கும் நன்றி ! உள்ளம் மகிழ்கிறது. நீங்கள் அனைவரும் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ! தமிழர்கள் உலகிற்கு ஞானத்தை வழங்கும் நேரம் விரைவில். நீங்கள் உணர்ந்தது போல் தவம் செய்த ஒவ்வொரு தமிழனையும் உணரச் செய்ய வேண்டும் ! விளம்பரம் தேவைப்படாது. பணம் தேவைப்படாது. கூட்டத்தை கூட்டாமல் குடும்பமாய் ஒன்றிணைய வேண்டும் ! கடவுளின் வருகையை உலகம் முழுவதும் எடுத்து சொல்ல வேண்டும். இநன்யா நமோ நம !
நாளைய வாழ்வை பற்றி கவலைப்படாதே ! ஏனென்றால் எதிர்காலமும் நானே ! என்னிடம் உனை ஒப்படைத்து விடு ! நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு எதை எப்போது செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் ! நீ எனை பார்க்கும் விதி இருந்தால் உன் தவம் என்னிடம் அழைத்து வரும் ! (இந்த வரிகள் வியப்பாக இருக்கின்றது!)
 கடவுள் இநன்யா சொல்லியது போல். தாய், தந்தையை தான் முதலில் வணங்க வேண்டும்...இது தர்ம வழி. தர்ம வழியில் நடப்பவர்க்கு நல் குரு கிடைக்கும். .....நல் குரு பின் ஞானத்தை வழங்கி கடவுளை அடைய வழி சொல்வார். தாய் தந்தையை வணங்காமல் இருப்பவரின் கண்களுக்கு கடவுளே நேரில் வந்து நின்றாலும் காட்சி கிடைக்காது. இது சம்பந்தமாக ஆழமான பதிவுகள் வரும். இநன்யா நமோ நம
கேள்வி : '''''உங்களின் உரைகள் எங்களுக்கு தமிழிலும்,
எங்களின் வேண்டுதல் தமிழில் இருந்து வேறுபட்டும் உள்ளதே இதைபற்றி......'''''

பதில் : வேண்டுதல்கள் எதுவும் தேவையில்லை. உணர்ந்தால் மட்டுமே போதும். எந்த வேண்டுதல்களும் கடவுளை அடைய உதவாது. நம் தாய், தந்தை, உறவுகள் நாம் கடவுளிடம் வேண்டி கிடைத்ததல்ல. தமிழில் கடவுளின் நாமத்தை எழுதுங்கள். தமிழ் உச்சரிப்பிலேயே சொல்லிப் பாருங்கள். தமிழனாய் பிறந்ததற்கு பெருமையடைவீர்கள். சத்யமாக..இநன்யா நமோ நம
ஜயனே! சுகம் தரும் சுகவானே! பேரின்பம் தரும் எங்கள் பெருமானே! எங்கும் நீக்கமற நிறைந்த மெய்பொருளே! தங்கள் தரிசனம் பெற உடலையும் மனதையும் வருத்தி யுகங்கள் கடந்து தவமாய் தவமிருக்கும் தவஸ்பதிகளுக்கு எளிதில் அடி முடி காணா பரம் பொருளே! இநன்யா மகா முனிவரே! இந்தபொய்யுடல் தரித்த மானிட பிறவி ஏன் என்று புலம்பினேன்! விழிபிதுங்கி வழிதெறியாமல் அஞ்ஞான அறிவினால் அரியணை ஏறி பிறவி இல்லா பெருங்கடலை கடக்க முயலாமல் மாயை எனும் துன்பத்தில் சிக்கி ஆத்ம அறிவை துளைத்தேன் ஐயனே! தென்னகத்தே கரைபுரண்டு ஓடும் தரணினையை ஆளம்போகும் புண்ணிய ஜீவ நதியாம் தாமிர பரணி நதியிலே உதித்த தென்னாட்டு தென்னவனே! எங்களுக்கு ஆத்ம ஞானத்தை ஊட்ட வந்த ஆதவனே இநன்யா! தைரியமும், தன்னம்பிக்கையும் பிறந்தது தந்தையே! எறும்பு ஊற ஊற கல்லும் கரையும் என்பதுபோல பிறவியை கடக்க தங்கள் நாமம் சொல்ல சொல்ல என் பாவம் கரைகிறது புண்ணியவனே இநன்யா! என்ன தவம் செய்தேனோ! தவத்திற்க்கெல்லாம் தவமாகிய இந்த தவப்புதல்வனின் பொற்பாதங்களை என்னி தவம் செய்வதற்க்கு! இநன்யா நமோ நம!!!
எங்கள் மூடப்பழக்கங்கள் மூழ்கடிக்கப்பட்டது உன் வேதங்களை உரைத்ததினால் நாங்கள் வந்த நோக்கம் உணரப்பட்டது உன் பாத அமிழ்தத்தினால் கர்மா பலன் வேரறுக்கப்பட்டது ஆதி வேதத்தினால் எல்லாம் மாயை என்றுணர்ந்தோர்க்கு இநன்யா மட்டுமே இனி வழித்துணை நம் லோகம் சென்றடைய;;;;;;;;;
 ஐம்புலன்களை அடக்கி ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற மன ஒருமைப்பாட்டுடன் வாழ்வதே தவம் ! பெண் ஒரு தவம் !தாய் ஒரு தவம் ! என் அடி முடி காண்பவன் தவம் இருந்தவன்! வேண்டுவது தவம் ! ஒன்றை நினைத்து அந்த இலக்கை அடையும் வரை அதையே நினைப்பது தவம் ! கடமை தான் தவம் ! .பெற்றோருக்கு பணிவிடை செய்வது, இல்லறக் கடமையை செய்வது, முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வது தான் தவம் !உன் தவம் உன் கடமையை செய்வது ! .நீ இந்த புனித தமிழ் நாட்டில் ஞான பூமி இந்தியாவில் பிறக்க மேலே ஏழு வருஷம் காத்திருந்து தவமிருந்தாய் .யுகத்தில் கடவுள், இறைவனைத் தவிர மனித பிறவிகள் யாரும் “நான்” என்று சொல்ல முடியாது ! நீ எனை பார்க்கும் விதி இருந்தால் உன் தவம் என்னிடம் அழைத்து வரும் ! என் சத்திய கரங்களால் புனித நீர் தர அருள் இருந்தால் நீ பேறு பெற்றவனே ! ஏனென்றால் உன் தவம் அதில் தெரிந்து விடும்.
நான் ஒரு ஆண்மா என உணர்தேன். எனது தலைவன், ஆண்ம குரு, இநன்யா நமோ நம எண்று காணப்போகிறேனோ அறிகிலேன். என்று அந்த பாக்கியம் கிட்டுமோ?சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாச யாகவசி இநன்யா நமோ நம.


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment