Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 12 INANYA NAMOO NAMA ;;;

141  INANYA NAMOO NAMA ;;;  
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 12

கோயில்களில் சிலை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் மேற்கு நோக்கி சிலையை பார்த்து வணங்குகிறார்கள். சில கோயில்களில் சிலை வடக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் தெற்கை நோக்கி வணங்குகிறார்கள். ஏன் என்று யோசியுங்கள். வழிபாடுகள் தேவையில்லை, வழிமுறைகள் தான் தேவைஎன்று கடவுள் இநன்யா சொல்வார்கள். விரைவில் சூரியன் தெற்கில் உதிக்கப் போகிறது என்று சொல்வார். அவர் கூறிய அஞ்சனா கல் உலகிலேயே இப்போது ஒரே ஒரு இடத்தில் தான் உள்ளது. ஆனால் அதிலும் மகத்துவம் இல்லை. செயற்கையை வணங்காமல் இனி இயற்கையை வணங்கிப் பாருங்கள். ஞானம் பிறக்கும். “கோபுரத்தை பார்த்தால் கோடி தரிசனம்” என்று ஏன் சொல்லி வைத்தார்கள் ? இதில் ரகசியங்கள் பல உள்ளன. அனைத்தையும் முதலில் யோசியுங்கள். சிவனை யார் பார்த்தது ? உத்தரகண்ட் வெள்ளத்தால் ஏன் கேதர்நாத் சிவனாலயம் அழிந்தது ? இமயமலை ஏன் அதிர்ந்து கொண்டிருக்கிறது ? ப்ரம்மனுக்கு ஏன் கோயில்கள் இல்லை ? படைத்தல் பெரிதா ? அழித்தல் பெரிதா ? சரஸ்வதிக்கு ஏன் கோயில்கள் இல்லை ? விநாயகர் யார் ? முருகன் யார் ? பயம் வேண்டாம். பக்தி வேண்டாம். பொறுமை தேவை ! உணருங்கள். அனைத்தும் புரிந்துவிடும். இநன்யா நமோ நம !
உணர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மிகவும் பொறுமையாக இருங்கள். யாரிடமும் அவர்களின் மத நம்பிக்கையைப் பற்றி அவதூறாக பேச வேண்டாம். உண்மை என்னவென்று அவர்களுக்கு தெரியாது. உண்மையை சொன்னாலும் நம்பமாட்டார்கள். மதத்தை குறை கூறவில்லை. மதமே வேண்டாம் என்று தான் கடவுள் சொல்கிறார். அவர்கள் செய்வதை செய்து கொண்டே இருக்கட்டும். யாரையும் மாற்ற முடியாது. மாற்ற முயன்றால் நம்மை மாற்றிவிடுவார்கள். கவனமாக இருங்கள். யாரிடமும் விவாதம் செய்ய வேண்டாம். நாம் நூற்றில் ஒன்பது பேரை மட்டுமே கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு ஞானத்தை வழங்க வேண்டும். உணர வைக்க வேண்டும். மீதம் உள்ள 91 பேரை பற்றி கவலை வேண்டாம். தர்மாக்களை தேர்ந்தெடுப்பது மட்டுமே நமது கடமை. பொறுமை தேவை. இநன்யா நமோ நம.
 உண்மையை உணர உணர உள்ளம் தெளிவடைகிறது மாயைகள் விலகி ஓடுவதை உணறமுடிகிறது. இறைவனை தவிர ஏதும் அறியா என் அறியாமைக்கு ஞானம் என்ற அமுதம் ஊட்ட படுகிறது.இறைவனின் கருணைக்கு நன்றிஇநன்யா நமோ நம..
மதம் வேண்டாம் என்று சொன்னால் பெரியார் கட்சி என்று நினைத்துவிடுவார்கள். கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்று சொன்னால் கிறிஸ்துவர்கள் என்று நினைத்துவிடுவார்கள். உணருங்கள் என்று சொன்னால் ஏதோ ஆன்மீக அமைப்பு தொடங்கப் போகிறோம் என்று நினைத்துவிடுவார்கள். "இநன்யா நமோ நம" என்று சொல்ல சொன்னால் நம்மை இந்து என்று நினைத்துவிடுவார்கள். தோலைப்பேசி எண் கொடுத்தால் இலவச ஜோசியம் பார்க்கிறவர்கள் என்று நினைத்து விடுவார்கள். முகவரி கொடுத்தால் ஜாதகக்காரர்கள் என்று நினைத்து வந்து வரிசையில் நின்றுவிடுவார்கள். புகைப்படம் காட்டினால் விளம்பரம் செய்கிறார்கள் என்று நினைத்துவிடுவார்கள். நாம் சிறு வயதிலிருந்தே ஒரு வழியை பின்பற்றி வருகிறோம். மனதில் ஆழமாக பதித்தும்விட்டார்கள். "சாமி கண்ணை குத்திவிடும்" என்று சொல்லி பயத்தால் வணங்கச் சொல்லிவிட்டார்கள். எந்த சாமி யார் கண்ணை குத்தியது ? ஏன் என்ற கேள்விகளை இதுவரை நாம் யாரும் கேட்டதில்லை. கேட்டாலும் யாருக்கும் பதில் தெரியாது. இந்த ஆன்மீகம் படிக்க கிடைக்காத அரிய புத்தகம் என்று கடவுள் கூறியுள்ளார். இது புரிந்தால் ஞானம் அடைந்துவிடலாம். விதி இல்லாமல் இங்கே வந்து பதிவுகளை படித்து புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அனைவரும் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். இநன்யா நமோ நம.
ஆம் ஆதிவேதமும் , கடவுள் நாமமும் , நமக்கு கற்பிக்கப்பட்டது..நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தாம்
மதம் பற்றி நீங்கள் கூறியுள்ளது மற்றிலும் உண்மை . நிதானம் கண்டிப்பாக வேண்டும் , இல்லாவிட்டால் தேவையற்ற குழப்பங்களும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது . நீங்கள் கூறும் பொறுமைக்கான காரணமும் , அவசியமும் புரிகிறது..
நாம் அனைவருமே இயற்கை எனும் தாயின் கருவறையில் தான் இப்பொழுதும் இருக்கின்றோம் அவள் கொடுக்கும் காற்று,நீர்,உணவு அவை அனைத்தையும் எடுத்து கொண்டு ,நன்றி கெட்டவர்களாக அவளுக்கு துரோகம் செய்கிறோம் ,நமக்கு முதல் தாய் இயற்கை அன்னையே அவளைவிட அன்பானவர்கள் இவுலகில் எவரும் இல்லை ,அவளை வணங்ககுடதேவையில்லை ,அவளுக்கு துரோகம் செய்யாமல் இருப்போம்மாக.........என் முதல்தாய்க்கு என் கோடானகோடி நன்றிகள்.....இநன்யா நமோ நம.
காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது புயல் வேகமாய் வீசி ஊரையே விழிக்க வைக்கிறது இடியும் மின்னலும்
கதி கலங்க வைக்கிறது இப்படி ஒரு கலவரத்திலும் பறவைகள் அங்கும் இங்கும் பாடி திரிகின்றது விலங்குகள் துள்ளி குதித்து நடனம் ஆடுகின்றது செடி கொடிகள் தலை அசைத்து சிரிக்கிறது நான் மட்டும் பயத்தால் உடல் நடுங்க கண்டேன்
இயற்க்கையின் உற்சாகம் எனக்கு புரியவில்லை மனிதர்களை கேட்டேன் விழி பிதுங்கி நின்றார்கள் துள்ளி சென்ற மானை கேட்டேன் ஏளனமாக சிரித்து புனிதனின் பாதம் தொழ சென்று கொண்டிருக்கிறோம் என்றது. புரியவில்லை யார் அது என்று கேட்டேன் வந்து பார் என்றது சென்றேன் காட்டாற்று வெள்ளமும், புயலும், இடியும் மின்னலும் ஏதோ பாடிக் கொண்டே வந்தது அதை கேட்ட என் மனமும் துள்ளக்கண்டேன் கண்ணீர் மல்கி வெள்ளத்தோடு கலக்கும் போது
உணர்தேன் என் அப்பா என் முன்னே நிற்பது எப்போது வந்தாய்  என்று கேட்டேன் குழந்தையே உன் அருகில் தான் இருந்தேன் உன் கண்ணீரை துடைத்து கொண்டே...
இநன்யா என்ற பெயர் உலகம் முழுவதும் எல்லா மொழிகளிழும், எல்லா கலாச்சாரங்களிலும் சூட்சமமாக இருக்கிறது. ஏழு கடவுளுக்கும் மேலே தேவ பாஷையில் பெயர்கள் உண்டு ! எல்லா மொழிகளிலும் , புனித நூல்களிலும் வெவ்வேறு பெயர்களால் அழைத்துள்ளனர்.
இநன்யா என்ற பெயர் மேலே கோடிக்கணக்கான தேவர்கள் உச்சரிக்கின்ற பெயர். இங்கே நாம் அவரின் நாமத்தை சொல்லிக் கொண்டிருப்பதால் நிம்மதி காண்கிறோம். யுகத்திலும் அவருக்கு பெயர் உண்டு.
இநன்யா என்பது கடவுளின் பெயர் என்பதால் தான் அதை சொன்னவுடன் ஆன்மா விழிப்படைகிறது. ஆறு கடவுள்களுக்கும் உள்ள தமிழ் பெயரை தான் தெரிந்து வைத்துள்ளீர்கள். சிவன் என்பது தமிழ்ப் பெயர். மேலே அவருக்கு என்று ஒரு பெயர் உண்டு. அதை யாராவது சொன்னார்களா ?
கல்லூரிக்கு வரும் பொழுது பல பறவைகள் என்னை பார்ப்பது தெரிகிறது. வழி முழுவதும் மீன் கொத்தி பறவைகள் கண்காணிப்பது தெரிகிறது. வியாழக்கிழமைகளில் எனக்கு கல்லூரி பணிகள் எதுவும் ஒதுக்கப்பட்டதில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு வேலை கடவுளிடம் மட்டுமே என்பதை உணர்ந்தேன். அவர் சொல்லியதை மனதில் வாங்கிக் கொண்டிருப்பேன். எழுதி வைத்துக் கொள்வேன். வியாழக்கிழமை காலை என்னால் உணவருந்த முடியாது. பல முறை உணவருந்த முயன்றாலும் முடியாது. அதனால் உணவருந்தாமல் தான் பதிவுகளை போட முடியும். எல்லாம் கடவுளின் விளையாட்டு என்பதை அறிவேன். அமைதியாக அனைத்தையும் செய்கிறார் அவர். நேற்று இரவு இரண்டு மணிக்கு இடி மின்னல்கள் கடுமையாக இருக்க சட்டென்று விழித்தேன். கடவுள் வந்து எழுப்பியதைப் போல் ஒரு உணர்வு. அடுத்த நொடியில் கடவுளிடம் இருந்து கைப்பேசியில் அழைப்பு வந்தது. அவர் இங்குள்ள பலரின் பெயர் சொல்லி விசாரித்தார். ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்து வைத்துள்ளார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அவர் இரவு முழுவதும் எப்போதும் தூங்குவதில்லை. இரவில் பிரபஞ்சம் சென்று வருவார் என்பதையும் அறிவேன்.
முகநூலில் எப்போதாவது தான் LOGIN செய்து பார்ப்பார். பெயரை சரியாக குறிப்பிட்டு அவர்களுக்கு தகவல் அனுப்பச் சொல்வார். சில பெயர்களை புதிதாக குறிப்பிட்டு அவர்கள் இன்று உன்னுடன் உரையாடுவார்கள் என்று சொல்வார். அது நடக்கும். அனைவரின் உணர்தலையும் சரியாக தெரிந்து வைத்திருப்பார்.
காற்றாக நீ இருந்தாலும் நாற்றாக நீ இருந்தாலும் உனை போற்றாமல் நானில்லை!மண்ணாக நீ இருந்தாலும்விண்ணாக நீ இருந்தாலும் உனை எண்ணாமல் நான் இல்லை!நீராக நீ இருந்தாலும் அதை தரும் காராக நீ இருந்தாலும் என் மனதில்
வேராக ஊன்றிய உனை தீராத ஆன்ம தாகத்தோடே அழைக்கிறேன் ..வருவாய் ! அருள் மழை பொழிவாய்!!
அனைவருக்கும் வணக்கம். வரவிருக்கும் செப்டம்பர் கடவுள் இநன்யா அவர்களுக்கு பிடித்த மாதம். செப்டம்பர் ஒன்பது முதல் பதினெட்டு வரை ரிஷிகளும், யோகிகளும் யுகத்திற்கு வந்து செல்வார்கள். ஒன்பது நாள்கள் சாப்பிடாமல் நீர் அருந்தாமல் இருப்பார். இந்த வேளையில் அவரின் நாமத்தை சொல்வதினால் நீங்களும் பல அதியங்களைக் காண முடியும். பல மாற்றங்களும் நடக்கவிருக்கிறது. இநன்யா நமோ நம !
கோபித்துக்கொள்ளாதீர்கள் !! .. முற்றிலும் தவறான பதிவு ..! 5000 வருடங்களுக்கு முன் போகர் பழனி முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தது முட்டாள்தனமா ? 7000 வருடங்களுக்கு முன் குமாரகண்டத்தில் (லெமூரியா) மூழ்கிய கடலில் முருகன் வழிபாடு இருந்திருப்பதாக ஞானிகள் மூலம் அறிகிறோம் . பண்டைத்தமிழர்கள் முட்டாள்களா ? பழைய கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்துடனும் ஒவ்வொரு கோள்களின் சக்தி உள்ள இடங்களிலும் பார்த்து அமைக்கப்பட்டன .சித்தர்கள் முருகனையும் , சிவனையும் வழிபட்டனர் . அவர்கள் என்ன அறிவிலிகளா ? இன்றைய தமிழன் ஒன்றும் தெரியாமல் இருக்கிறான் என்பதற்காக இஷ்டத்திற்கு கட்டுரை எழுதுவது உங்கள் அறியாமையையே காட்டுகிறது . பெரிய பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கெல்லாம் எல்லாம் தெரியும் என நம்புவது அறிவான செயல் அல்ல ! பழந்தமிழர்களின் வாசியோகம் மூலம் பல்வேறு உண்மைகளை உணர்ந்தும் உணர்த்தியும் உள்ளார்கள் . உங்கள் பதிவுகளெல்லாம் பக்குவமற்று இருப்பதாக உணர்கிறேன் . இப்படி எழுதியதால் என் மீது பல பேருக்கு கண்டபடி கோபம் வரலாம் . அவர்களுக்கு ஒன்று ! நான் என் கருத்தை தெளிவாகக் கூற விரும்புகிறேன் . யாராவது ஒருவராவது சொல்லத்தானே வேண்டும் ?!! --- நம் பழைய விஷயங்களை ஆராயாமல் குறை கூறவது வீண் ! நீங்கள் கடவுளைப்பார்த்தேன் என்று கூறுகிறீர்கள் . நானும் கடவுளைப்பார்த்தவர்களைப் பார்த்திருக்கிறேன் . அவர்களுடன் வாழ்ந்தும் வருகிறேன் . உங்கள் கருத்தும் , நோக்கமும் முற்றிலும் தவறான ஒரு வழிகாட்டுதலுக்குள் தமிழர்களைக் கொண்டு சேர்க்கும் ! பிழையான ஒரு விஷயத்தை வேடிக்கை பார்க்க என்னால் இனியும் முடியாது ! ஓம் சரவண பவ !!
கலியுக மனிதனுக்கு ஆத்மஞானம் என்பது எட்டா கனியாகவே இருக்கிறது..! குரு கிடைக்கபெறாதது காரணமா..? இல்லை கர்மவினைகளின் காரணத்தினாலா..? இங்கு விவாதங்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.. அப்படியில்லையென்றால் விவாதங்களால் தேவையில்லை..
பண்டைய தமிழர்களை முட்டாள்களாகவோ அறிவிலிகளாகவோ எந்த பதிவிலும் சித்தரிக்கவில்லை

எந்த முறைகள் எப்படி இருந்தாலும் உணர்ந்தால்தான் கடவுளை அடைய முடியும் என்கிற சாத்தியமான வழி வகைகளைத்தான் இந்த பதிவுகளில் காண்கிறோம்

உங்கள் கேள்விகளும் மறையீடுகளும் ஞாயமானதாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஞாயமான பதில்கள் இங்கே கிடைக்கும்

நீங்கள் காட்டிய ஆர்வத்தை வரவேற்கிறோம்
பிழையான ஒரு விஷயத்தை வேடிக்கை பார்க்க என்னால் இனியும் முடியாது /// . இதைத் தானே கடவுளும் சொல்கிறார். முருக பக்தரா நீங்கள் ? "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் " இதற்குள் இருக்கும் ரகசியம் தெரியுமா ஐயா ? முருகனை பார்த்தது யார் ? கார்த்திகைக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியுமா? மயிலுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியுமா ? மயில் வாகனன் என்று ஏன் சொல்கிறார்கள் ?சூரசம்காரத்தின் அர்த்தம் என்ன ? கடவுள் என்று முருகனை நினைத்தால் அவர் ஏன் ஆண்டியாக பழனியில் நிற்க வேண்டும் அனைத்துமே ரகசியங்கள் ! முருகனை நினைத்து வளர்ந்து விடும் முடியை மட்டும் ஏன் காணிக்கையாக கொடுக்கிறீர்கள் ? உடலெங்கும் எதற்காக வேலை குத்திக் கொள்கிறீர்கள் ? கண்களில் ஏன் வேலை குத்த தயங்குகிறீர்கள் ? சிலை என்ன செய்தது என்று தானே கடவுள் கேட்கிறார். பதில் தெரிந்தால் சொல்லுங்கள். முருகனுக்கும் நட்சத்திரத்துக்கும் ஒரு சம்பந்தம் உண்டு ! கார்த்திக்கேயன் என்று ஏன் அவரை அழைக்கின்றீர்கள் ??
அவரை தெளிவு படுத்த வேண்டும். யாரும் அவருடன் விவாதம் செய்யக் கூடாது. முருகனை பற்றி இங்கே பேசுவதற்கு கடவுள் இநன்யாவின் திருவிளையாடல். அமைதியாக கவனியுங்கள்
இரகசியங்கள் உடைக்கப்படவே கேள்விகள் பிறக்கிறது
ஐயா, இன்னும் சில நிமிடங்கள் இங்கே இருந்தால் முருகன் யார் என்பதை கூறிவிடுகிறேன். ஒத்துழைப்பு தருவீர்களா ? பேசலாமா ?
கோவில்களில் என்னென்ன விஞ்ஞானம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது ...அதில் என்னென்ன பிழை என்பதையும் விளக்கவும் ! கோவில் இடங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்ட (திருநள்ளாறு , சிதம்பரம் , காலஹஸ்தி , பழனி ) இடங்கள் ஒவ்வொன்றும் இன்றைய அட்ச ரேகை , தீர்க்க ரேகைபடி முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்றும் , ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கோளின் ஆதிக்கம் நிறைந்த இடம் என்று கூறப்படுகிறது ! இது முற்றிலும் தவறான கருத்தா ? விளக்கவும் !
சிலை ஏன் வந்தது ?
அஞ்சனா என்னும் கல்லில் மட்டும் உயித்துவம் இருப்பதை அறிந்தனர் ! அதில் தாமிரமும், இரும்பும் இருப்பதை உணர்ந்தனர்.அஞ்சனா கல்லில் உயிர்த்துவம் இருப்பதால் தான் அதில் சிலை வடித்து வணங்கினான். கிழக்கு நோக்கி வணங்கு ! வட மூலை தகுந்த இடம். எதையும் சுற்றி வராதே. சுபமற்று போகாதே !தாமிரபரணி நதிக்கரை மண்ணில் உயிர்த்துவம் உள்ளது !இயற்கையை நேசி ! காற்றாய் நீராய் நான் இருக்கிறேன் ! என்னை நேசி, காலம் உனை வணங்கும் !இல்லறம் இல்லாத வாழ்வு கல்லறையில் இருக்கின்ற வாழ்வு என்பதைச் சொன்னேன். குழந்தை இல்லாதவர்கள் பயப்பட வெண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு பூமியில் மீண்டும் பிறப்பிருக்காது ! விரைவில் மனிதன் இயற்கையை வணங்க ஆரம்பிப்பான் ! இந்த ஆத்மத்தின் தலைவன் சொல் சத்யமாக நடக்கும் ! உருவ வழிபாடு ஏன் வந்தது என்பதை உணர் ! கற்சிலையை வணங்கி நீயும் கல்லாகி போகாதே !உனக்கு உயிர் தரும் காற்றையும் நீரையும், ஆகாயத்தையும், பூமியையும் வணங்கு ! இந்த காலத்தின் நாயகன் ஆகமலத்தின் கனியைப் போல உன் சிரவில் அமர்ந்து ஆட்சி செய்வேன்.நான் உனக்குள் இருப்பவன் ! நான் இநன்யா !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment