Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, October 26, 2014

குண்டலினி,,,மெஸ்மரிசம்

குண்டலினி என்பது நமக்குள் புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும், அது பாம்பைப் போல மூன்றரை சுருளாக சுருண்டு நமது மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்த குண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது, இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன் மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒரு அனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிட முடியும் என்கின்றனர் சித்தர்கள்.
குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர், நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவு ஒன்றினை பார்த்துவிடுவோம். நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும், இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில் இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்க்க இருப்பதால் மீண்டும் குண்டலினியை கவனிப்போம்.
குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்த நிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினை சீண்டினால் என்ன ஆகும் சீறிக் கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்பு ஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!
ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி கிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிற குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து மேலே பயணித்து துரியம் என்கிற உச்சந்தலை வரை கொண்டுவரலாம் என்கின்றனர். இந்த துரியத்திற்கு குண்டலினியை கொண்டு வந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதை காகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.
இப்படி குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து உச்சந்தலையான துரியத்திற்கு கொண்டு வந்தால் என்னவாகும்?
அந்த அனுபவத்தை கொங்கணவர் பின்வருமாறு விளக்குகிறார்.
உணர்வற்று, உடலற்று, யோகமற்று, ஓடுவதற்று, ஆடுவதற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று லெச்சை, கூச்சம், சொல்வது, சொல்லாதது போன்றவை அற்று, நிட்களமாகிய பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்து போகவேண்டும் என்று எண்ணினால் குண்டலி யோகத்தை செய் என்கிறார் கொங்கணவர்.
இப்போது குண்டலினியை எழுப்பி மேலே கொண்டு போக வேண்டும். ஒரே மூச்சில் மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொரு நிலையாக உயர்த்திட வேண்டுமா?

நாம் பரபரப்பாக இயங்கும் பெரு நகர கலாச்சாரங்களில் வாழ்ந்து வருகிறோம், தினசரி வாழ்வு ஏற்படுத்தும் பிரச்சனைகளினாலும் நெருக்கடிகளாலும் இன்று, என்றுமில்லாத அளவிற்கு மன நோய்கள் அதிகமாகிவிட்டன, மேலும் மன நோய்க்கு மருந்து மாத்திரைகளும், முரட்டுத்தனமான சிகிச்சை முறையுமே சாசுவதம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம், எந்த மருந்துகளுக்கும் கட்டுப்படாத சிக்கலான மன நோய்கள் சாதாரண மன சிக்கல்களிலிருந்து தோன்றுபவைகளே, இதற்கு புதிய புதிய மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன, அதில் ஹிப்னோ தெரபி மற்றும் பாரா ஹிப்னோ தெராபி முறைகள் மன நோய்களை தீர்க்கவல்லது என்று உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
டாக்டர் வேதமாலிகா ஒரு மனநல ஹிப்னோ மருத்துவர். இவர் ஹிப்னோ தெரபி, Para Hypno Therapy, Past lite Therapy முறைகளை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்து 20 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வருகிறார்.
மியாமி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்தவர். சைக்கோ-மியூசிக் தெரபி என்ற இசை மருத்துவ ஆய்விலும் ஈடுபட்டவர். ஹிப்னோ தெரபி அன்ட் மென்டல் ஹெல்த் என்ற மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியவர். பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழங்கியவர்.
ஹிப்னோ தெரபி என்பது மருந்தின்றி மனநோய்களை குணப்படுத்தவல்லது என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அத்தகைய ஹிப்னோ சிகிச்சை பற்றியும், உடல், மன நோய்கள் பற்றியும் வெப்உலகத்திற்கு டாக்டர் வேதமாலிகா தந்த நேர்காணலின் முதல்பாகம் வருமாறு. அடுத்தடுத்த பாகங்களை வரும் வாரங்களில் பிரசுரிக்க உள்ளோம்.
வெப்உலகம் : ஹிப்னோ தெரபி பற்றி கூறுங்களேன்?
டாக்டர் வேதமாலிகா : ஹிப்னோ தெரபிக்கு மனம்தான் அடிப்படை. மனம் என்பதை 3 விதமாக பொதுவாக பிரிக்கலாம். வெளி மனம் அதாவது இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கற Concious mind. பிறகு உள் மனம்னு சொல்லப்படுகிற Sub-concious mind. இதைத் தவிர இன்னொன்று உள்ளது. இது புதை மனம்.
ஹிப்னோ தெரபிலே 2 மனசை டீல் செய்கிறோம். வெளி மனம் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். நம்முடைய வெளி மனது அலைபாயும் குணமுடையது. அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்திய பிறகு Sub-concious mind -ங்கற உள் மனது நோக்கி கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நம்முடைய அனைத்து குணாம்சங்களுக்கும், மனோநிலைக்கும் உள் மனம்தான் காரணம். வெளி மனதை கட்டுப்படுத்துவது என்பது ஹிப்னோ தெரபி முறைல ரிலாக்ஸ் செய்ய வைப்பது, சற்றே தளர்த்துவது. பிறகு உள் மனதை அணுகுகிறோம்., இதைத்தான் ஹிப்னாடிசம் என்கிறோம்.
வெப்உலகம் : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு உள்ளதா?
டாக்டர் வேதமாலிகா : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு பற்றி கூறவேண்டுமென்றால் வெளி மனதை அமைதிப்படுத்தி உள் மனதை அணுகுவது ஹிப்னாடிசம்னு சொல்றோம்.

ஹிப்னோ தெரபில உள் மனதுக்கு தகுந்த கட்டளைகளை அதாவது Suggestion கேளை கொடுத்து உதாரணத்துக்கு இப்ப ஒருத்தருக்கு mental disorder இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும், எப்படி கண்டுபிடிக்கிறோம், முதலில் Body relaxation பிறகு mind relaxation உடலை அமைதிப்படுத்தி பிறகு மனது அமைதிப்படுத்தி உள் மனதோட பேச தொடங்குகிறோம். உள் மனசோட பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அதற்கான கட்டளைகளை இட்டு நோய் தீர்க்கறதுதான் ஹிப்னோ தெரபி என்று கூறுகிறோம். இதை 3 ஆகச் சொல்லலாம்.
1. ரிலாக்சேஷன் என்றால் உங்களுக்கே தெரியும். மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்துவது.
2. Regression அதாவது ஒரு பிரச்சினைக்கான காரணம், லைஃப்ல எப்பவோ நடந்த ஒரு நிகழ்ச்சியா இருக்கும். இப்பொழுது நாம் என்ன செய்கிறோம் நினைவை பின்னோக்கி செலுத்துகிறோம். அதாவது கடந்த காலத்தை நோக்கிப் போதல். அதாவது Hypno-regression முறையில் என்ன பிரச்சினை என்பதை தெரிந்துக் கொள்கிறோம்.
3. Suggestion : பிரச்சினை என்னவென்று தெரிந்த பின்னால் அதற்குத் தகுந்த கட்டளைச் சொற்களைக் கொடுத்துக் கொடுத்து அந்த நோயை தீர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோம். அதாவது கட்டளைச் சொற்களை வெளி மனதுக்குக் கொடுத்தால் அது தங்காது, எனவே ஹிப்னோ தெரபியில் உள் மனதிற்கு பதியும்படி கட்டளைச் சொற்களை கொடுக்கிறோம்.
வெப்உலகம் : ஹிப்னோ சிகிச்சை மூலம் எந்த மாதிரியான மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?
டாக்டர் வேதமாலிகா : இப்ப சாதாரண மக்கள்ங்கறவங்க நோயாளிகள் அல்ல. ஆனால் mental stress, மன இறுக்கம் தோன்றுகின்றன. ஆனால் மனநோயாளிகள் என்பவர்கள் உண்மையில் மனச்சிதைவு ஏற்பட்டவர்கள். முதலில் நாம் சாதாரண மக்களில் இருந்தே தொடங்குவோமே. ஒரு 4 வயசுக் குழந்தைக்குக் கூட சில பிரச்சினைகளை பெற்றோர்கள் கூறுவதைப் பார்க்கிறோம். அதாவது சொல்ற பேச்சை கேக்கறதில்ல, ஒழுங்கா படிக்கிறதில்ல, சாப்பிடறதில்ல அப்டீன்னு சொல்வாங்க. நீங்கள் கேட்கலாம். ஒரு சின்ன குழந்தைக்கு என்ன stress இருக்க முடியும் என்று கேட்கலாம். ஆனா இன்னிக்கு சின்னக்குழந்தைகளுக்கு ளவசநளள அதிகமாக இருக்கிறது. உதாணரமாக பள்ளிகள்ல புக்ஸ் தூக்குவது மட்டுமல்லாமல் பாடத்திட்டங்களும் அதிகமாக இருக்கிறது. எக்கச்சக்கமா ஹோம் ஒர்க் கொடுக்கறாங்க. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும். முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கும் இன்றைக்கு அமைதியான சூழல் தேவைப்படுது. பள்ளியிலிருந்து வந்தவுடன் ரிலாக்ஸ் செய்ய அவகாசம் கொடுத்துவிட்டு அடுத்த வேலை கொடுத்தால் சிறந்தது. வந்தவுடனேயே இதைச் செய் அதைச் செய் என்றால் வெறுப்புதான் ஏற்படும். எனவே நாம் குழந்தை மனோ நிலையை புரிந்து கொள்ள வேண்டும். விளையாடச் சொல்ல வேண்டும். பிறகு டிபன் கொடுத்துவிட்டு சற்று நேரம் கழித்து படிக்கலாமா? என்பதுபோல் கேட்டால் குழந்தைகளுக்கு படிப்பு மேல் வெறுப்பு ஏற்படாது. பெற்றோர்கள் இதைச் செய்வதேயில்லை. நல்லெண்ணம் இருக்கலாம். ஆனால், இதை விட குழந்தையின் மனநலம் தான் முக்கியம் என்பதை உணரவேண்டும். ஆனால், தற்பொழுது பெற்றோர்கள் என்ன புகார் கூறுகிறார்கள் என்றால், குழந்தைகள் டி.வி. பார்க்கின்றனர், படிப்பதில்லை, மக்காக இருக்கிறது என்று கூறுகிறார்கள். குழந்தைகள் டி.வி.ல பொதுவாக கார்ட்டூன்களை பார்க்கின்றன. ஏன் குழந்தைகள் கார்ட்டூன்களை ரசிக்கின்றன என்று பார்த்தோமானால், கார்ட்டூனில் நாய் பேசுகிறது, பூனை பேசுகிறது, மரம் பேசுகிறது. இதை குழந்தைகள் ரசிப்பது வெறும் ஆர்வத்தினால் மட்டுமல்ல, பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். பள்ளி விட்டு திரும்பிய பிறகு தனிமையில் இருக்கும் குழந்தைகள் பேசக் கூட ஆளில்லாமல் தவிக்கும்போது பேசும் விலங்குகள், பேசும் தாவரங்கள் என்று வரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் தனது இச்சையை பூர்த்தி செய்து கொள்கிறது. பேசாத மனிதர்களுக்கு நடுவே பேசும் பொருட்கள் விலங்குகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.என்னிடம் இது போன்ற ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். பரிசோதனை செய்துபார்த்த போது அந்த குழந்தையிடம் நல்ல புத்திக்கூர்மை இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்று படிக்க விருப்பமில்லை. ஏனென்று காரணம் கேட்டபோது, யாரோ டீச்சர் தன்னை அடித்துவிட்டதாக தெரிவித்தது. இது அந்தக் குழந்தையின் உள் மனதில் தீவிரமாக பதிந்திருக்கிறது. அதனால் பள்ளி என்றாலே ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. ஹிப்னோ தெரபி மூலம் இத்தகைய குழந்தைகளின் உள் மனதில் கட்டளைகளை இட்டு மீண்டும் நார்மல் நிலைக்கு கொண்டு வர முடியும். கொஞ்சம் வளர்ந்த அதாவது +1, +2 படிக்கும் மாணவர்களை எடுத்துக் கொண்டால் அந்த வயதில் நிறைய attention தேவைப்படும். இப்போது பார்த்தீர்களானால் நிறைய பேர் Drug addictiony போய்விடுகிறார்கள். ஏனெனில் வீட்டில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அடையாள நெருக்கடிகள் ஏற்படுகின்றன. தீவிரவாதிகள்னு நாம சொல்ற சிலர் உருவாவதற்கும் இதே போன்ற அங்கீகாரமில்லாமை காரணமாக இருக்கலாம். ஒரு சின்னக் குழந்தையை நாம் பாராட்டுகிறோம். இந்த பாராட்டு கிடைக்காதபோது இதற்கு பதிலாக வேறு ஒன்றை அவர்கள் வெளியில் தேடிக் கொள்கின்றனர்.
மாணவர்கள் ஏன் போதைக்கு அடிமையாகின்றனர் எனில் பல சமயங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் உற்சாகமும், பாராட்டும், தூண்டுதலும் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. இதை மறக்க மாணவர்கள் கெட்ட நண்பர்களுடன் சேருகின்றனர். போதைப் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டிற்கு வரும் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்து கொள்ள வேண்டியுள்ளது. இப்ப இந்த குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு என்ன இருக்கிறது? எவ்வளவு நேரம் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும். அதனால நண்பர்களை நோக்கி செல்கின்றன. இவர்கள் நல்ல நண்பர்கள், இவர்கள் கெட்ட நண்பர்கள் என்றெல்லாம் பார்க்க முடியாமல் கிடைத்தவர்களை பற்றிக் கொள்கின்றனர். இவர்கள் அவர்களை போதைக்கு பழக்கலாம். இதுபோன்று வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஹிப்னோதெரபி மூலம் நிலைக்கு கொண்டு வருகிறோம். அதாவது தவறான பாதைக்குச் சென்ற மனதை மீண்டும் பொருத்தமான கட்டளைகள் மூலம் நல்ல நிலைக்கு திருப்புவதில் ஹிப்னோ தெரபி பயன்படுகிறது.அதேபோல் வேலைக்குச் செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர். எங்களுக்கு பின்னாடி இருக்கிறவங்க பிரமோஷன் வாங்கிக் கொண்டு செல்கின்றனர் என்று கூறுகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக நிம்மதியிழக்கின்றனர். அவர்களுக்கும் இந்த ஹிப்னோ தெரபி பயன்படுகிறது. குறிப்பா சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் இரவு அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால் தூக்கம் கெடுகிறது. இதனால் இரவு நேரத்தில் நம் உடலில் சுரக்கும் செரடோனா சுரப்பிகள் சுரப்பதில்லை. இதனால் உடல், மனப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் உந்தப்படும் மன அமைதியின்மைக்கு ஹிப்னோ தெரபி பெரிதும் பயன்படுகிறது.விளம்பரத் துறைகள்ல ஹிப்னாசிஸ் முறையைத்தான் கையாள்கிறார்கள். விளம்பரம் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு க்ஷசயனேஐ திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இதனால் அதன் பெயர் நம் உள் மனதில் பதிகிறது. எனவே ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் நமக்கு உடனே அந்த பிராண்ட் ஞாபகத்திற்கு வருவது ஒரு வகையில் பார்த்தால் ஹிப்னாடிச முறைகளிலேயே.
மெஸ்மரிசம் ஒரு விஞ்ஞானம்!!! ஆராயலாம் வாங்க நாம் வாழும் இந்த உலகம் ஒரு விங்ஞான உலகம். அதுவும் முறையாக சுவாசிக்ககூட  முடியாத ஒரு அவசர உலகம்.இந்த உலகத்துல நம்முடைய அவசரத்தின் காரணமாகவோ அலச்சியத்தின்  காரணமாகவோ பல அரிய விஷயங்களை பொக்கிஷங்களை வீணடித்துவிட்டோம். சிந்திக்க கூட நேரம்   இல்லாத இந்த உலகத்தில் நாம் உணர தவறிய ஒரு ஒரு பொக்கிசம் தான் இந்த மெஸ்மரிசம்.இதை கண்டுபிடித்தது ஜெர்மனியில் டாக்டர் பட்டம் பெற்ற மெஸ்மர் ஆவார். மெஸ்மரால்  கண்டுபிடிக்கபட்டதால் இது மெஸ்மரிசம் என அழைக்க படுகின்றது.இவர் இதை அறிமுக  படுத்தும் போது மக்கள் கலிலியோவுக்கு செய்த (அவ)மரியாதையை எல்லாம் இவருக்கும் செய்தனர். அதை எல்லாம் விழக்கமாக பார்த்தால் தலைப்பு மாறிவிடும் என்பதால்  விஷயதிற்கு வருகின்றேன்.மெஸ்மரிசம் என்பது எல்லோரும் நினைப்பது போன்று கண்கட்டு வித்தையோ அல்லது மாயஜாலமோ கிடையாது. மனிதனிடம் இயற்கையாகவே உள்ள பிரபஞ்ச சக்தியை கொண்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதைதான் மெஸ்மரிசம் என்கின்றோம். இதை எல்லோரும்  செய்யமுடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில்.மெஸ்மரிசத்தை அடுத்தவருக்கு பயன்படுத்துவதை காட்டிலும் முதலில் தனக்கு பயன்  படுத்துவதே சால சிறந்தது.ஏன் என்றால் முதலில் அதன் பலனை நீங்கள் உணர வேண்டும். அப்பொழுது தான்  அடுத்தவருக்கு செய்யும் போது உங்களுக்கு தன்னம்பிக்கையும் முழு ஈடுபாடும்  கிடைக்கும்.
மெஸ்மரிசம் என்றால் என்ன?
மெஸ்மரிசம் என்பது நமக்கு தேவையான அலோசனைகளை நாம்  நம் மனதுக்கு பிடித்த வகையில் நம்பும் படியாக எடுத்து கூறுவதே ஆகும்.நம்முடைய மனது  ஒரு விஷயத்தை நம்பிவிட்டால் பின்னர் அது தானாகவே அதன் வழியை  தேர்தெடுத்துவிடும்.
நீங்கள் இதற்குமுன் பலதடவை மெஸ்மரிசத்திற்கு ஆளாகி இருக்கின்றீகள் என்றால் அதை நம்பமுடிகின்றதா?ஆம் நீங்கள் கொஞ்சம் யோசித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.நாம் ஒரு சினிமா பார்கின்றோம் நாம் படம் பார்கும் அந்த இரண்டரைமணி நேரமும் நம்மை மறக்கவில்லையா?அப்படி படம் பார்க்கும் போது அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன்  தாக்கம் நமக்கு இருக்க வில்லையா?நாம் பார்க்கும் சினிமா பொய்யென தெரிந்தும் அது  நம் மனதை பாதிக்கின்றதே அதுதான் மெச்மரிசம். நன்றாக மெஸ்மரிசம் செய்ய தெரிந்த சினமா  வெற்றி பெற்ற சினிமாவாகவும் அதை சரியாக செய்யாத சினிமா தோல்வி அடைந்த சினிமாவாகவும்  கூறுகின்றோம்.
நடிகர்கள் தனது ரசிகர்களை தனது கட்டுபாட்டில் வைத்திருப்பதற்கு காரணமே சினிமாவை பயன்படுத்தி அவர்கள் செய்யும் மெஸ்மரிசமே ஆகும். அவர்கள் சம்பளத்திற்காக வேலை செய்கின்றார்கள் என தெரிந்தும் அவர்களுக்காக தனது பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வதே இதற்கு சாட்சி...நான் ஏன் சினிமாவை உதாரணமாக கூறுகின்றேன் என்றால்? மக்கள் இன்று அதிகமாக ஒன்று
கூடுவது சினிமா தியேட்டர்களில் தான்.இன்று மதங்களின் பெயரால் பல கலவரங்களும் உயிர்பலிகளும் நடப்பதற்கு காரணம் தங்கள் மதம்தான் சிறந்தது என ஒவ்வொருடைய மனதும் நம்புவதே ஆகும்.இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் நம் மனம் எதை நம்புகின்றதோ அதற்காக  நாம் எதையும் செய்வோம் என்பதே.....
மெஸ்மரிஸ்ம் எப்படி செய்வது?
மெஸ்மரிசத்தை தொடங்குவதற்கு முன்பாக நம் மனதை அதற்கு தயார்செய்வது ரொம்ப முக்கியம்.ஒரு சினமாவை பார்பதற்கு  முன்பாக அதனை பற்றிய எதிர்பார்போடு செல்வோமே அதைபோல.....முதலில் நீங்கள் உங்களுக்கு எதற்காக மெஸ்மரிசம் செய்ய ஆசைபடுகின்றீர்களோ அதை தெளிவாக எழுதி கொள்ளவும்.முக்கியமாக எழுதும் போது நேர்மறையாக எழுதி கொள்ளவேண்டும்.உதாரணமாக நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என நினைத்தால் நீங்கள் எழுதி கொள்ளவேண்டியது இப்படிதான்:
நான் இன்று முதல் சிகரெட் குடிக்க மாட்டேன் --  தவறு
நான் இன்று முதல் சிகரெட்டை நிறுத்த போகிறேன்  --  இதுவும் தவறு
எனக்கு சிகரெட்டின் நினைப்பு வரும் போதெல்லாம் நான் இரண்டு மிட்டாய்  சாப்பிடுவேன் -- சரியான முறை
எனக்கு சிகரெட்டின் நினைப்பு வரும் போதெல்லாம் நான் அந்த காசை ஏழைக்கு தருமம்
செய்வேன் -- சரியான முறைமுதலில் உங்களுக்கு வசதியான இடத்தில் ரிலாக்ஸாக படுத்து கொள்ளவும் அல்லது அமர்ந்து கொள்ளவும். பிறகு உங்கள் மனதை ரிலாக்ஸாக வைக்கவும்.பின்னர் உங்கள் உச்சம் தலைமுதல் பாதம் வரை உள்ள அனைத்து உறுப்புகளும் ரிலாக்ஸாக உணருங்கள்.அதற்கு கீழ்கண்டவாறு உங்கள் மனதிடம் திரும்ப திரும்ப சொல்லவும்.என் தலையில் உள்ள கண்,காது, மூக்கு போன்ற அனைத்து உறுப்புகளும்  ரிலாக்ஸா கின்றன...அவைகள் மெல்ல மெல்ல என் என் கட்டு பாட்டுக்குள்  வருகின்றது.இப்பொழுது நான் மிகவும் அமைதியாக உண்ருகின்றேன் என திரும்ப திரும்ப நான்கு  அல்லது ஐந்து முறை ஆத்மார்தமாக சொன்னவுடன் உங்கள்கை,கால்,இடுப்பு, மூளை, இதயம் என  தனிதனியாக சொல்லி கொள்ளவும்.இதனால் உங்கள் மனது நமது கட்டுப்பாட்டில் வருகின்றது. நம் மனது நம்  கட்டுபாட்டில் வந்தவுடன் நாம் சொல்லும் கட்டளைகளை நம் மனது ஏற்று கொள்ள  தயாராகின்றது. இப்பொழுது உங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தர கூடிய விஷயத்தை மனதில் நினையுங்கள்  அல்லது கற்பனை செய்யுங்கள்.அதாவது நீங்கள்  உங்கள் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ அல்லது தாயுடனோ உங்களுக்கு பிடித்தமான சுற்றுலா தளத்துக்கு செல்வதை போலவோ அல்லது கடல்கரைக்கு செல்வதை போலவோ கற்பனை செய்யவும்.உதாரணத்திற்கு கூறுவதென்றால்....நீங்கள் உங்கள் காதலியுடன் அருவிகளின் அரசியான  குற்றாலதிற்கு செல்கின்றீர்கள்  என வைத்து கொள்வோம் அதை கீழ்கண்டவாறு கற்பனை  செய்யலாம்.நீங்கள் உங்கள் காதலியுடன் குற்றாலத்தில்  இறங்குகின்றீர்கள் இறங்கியவுடனே குற்றாலத்தின் சாரல் உங்கள் உடம்பை  நனைக்கின்றது.உடனே உங்கள் காதலி மழை பொழிகின்றதென நினைத்து உங்கள் பின்னால்  ஒழிந்து கொள்கின்றால் அதை நீங்கள் சிரித்தவாறே ரசித்துகொன்டு குற்றாலத்தின்  அழகையும் அதன் தன்மையையும் மிகவும் அழகாக  விளக்குகின்றீர்கள். பின்னர்  நீங்கள் அங்கே வெள்ளியை வாற்று ஊற்றியதை போல ச்ச்சோ வென பொழியும் குற்றாலத்தின்  மெய்ன் அருவியை தூரத்தில் இருந்து காட்டுகின்றீர்கள் அதை பார்க்கும் உங்கள் காதலி  குதூகலித்து.  உடனே அங்கே போகவேண்டும் என்கின்றாள். உடனெ நீங்கள் உங்கள் காதலியின் கன்னத்தை பிடித்து திருகி அப்படியே ஆகட்டும் என்கின்றீர்கள். பின்னர்  உங்களுக்கான இருப்பிடத்திற்கு சென்று ஆடைகளை மாற்றிகொண்டு அருவியில்  குளிப்பதற்கான தயாருடன் மெய்ன் அருவியை நோக்கி நகருகின்றீர்கள்.அப்பொழுது குற்றாலத்தில் உள்ள குரங்குகள் உங்கள் காதலியின் அருகில் வங்து செல்கின்றது அப்பொழுது உங்கள் காதலி பாதி பயத்துடனும் பாதி ஆச்சரியத்துடனும் அதை வேடிக்கை பார்பதை நீங்கள் ரசிக்கின்றீர்கள் பின்னர் அங்கே இருக்கும் பச்சைபசெளென  அடர்ந்திருக்கும் காடுகளையும் உயர்ந்த மலைகளயும் உடம்பை சில்லென வருடி கொடுக்கும்  குளிர்ந்த காற்றையும் ரசித்தவாறே மெய்ன் அருவியை நெருங்குகின்றீர்கள் அதன்  பிரம்மாண்ட அழகையும் ஆற்றலயும் பார்த்த உங்கள் காதலி சற்று பயத்துடன் நான்  வரமாட்டேன் என கூறியவாறு பின்னோக்கி நகறுகின்றாள். நீங்கள் உடனே அவளை பிடித்து  நிறுத்தி அவளை சமாதானம் செய்து பின்னர் நீங்கள் இருவரும் சேர்ந்தவாறே குளிக்கின்றீர்கள்நன்றாக ஆசைதீர குளித்த பின்னர் அங்கிருந்து நீங்கள் இருவரும்  குற்றால மலையை நோக்கி நடக்கின்றீர்கள் நடக்கும் போதே நீங்கள் குற்றாலத்தின்  குளிர்ந்த கற்றையும் அருவிகளின் ஓசையையும் ரசித்தவாறே அங்கே இருக்கும் உங்களுக்கு  பிடித்தமான இடத்தில் ஓய்வுக்காக அமருகின்றீர்கள் அல்லது படுக்கின்றீர்கள். இவ்வாறு  நீங்கள் கற்பனை செய்து அதை மனதால் அனுபவிக்க வேண்டும். பின்னர் நீங்கள் எழுதி  வைத்திருக்கும் கட்டளைகளை உங்க: மனதுகுள் மிகவும் அமைதியாகவும் ஈடுபாட்டோடும் சொல்லிகொள்ள வேண்டும்.(இப்படிதான் என்று அல்ல. உங்கள் மனதுக்கு பிடித்தவாறு இதைவிட சிறப்பாக கூட நீங்கள்  கற்பனை செய்து கொள்ளலாம்.)அது கட்டளைகளின் அளவை பொருத்து இரண்டு முறையாகவோ மூன்று  முறையாகவோ அல்லது ஐந்து முறையாகவோ இருக்கலாம் முக்கியமாக  நீங்கள் அமரும்  இடம் தனிமையாகவும் பிற்ருடைய இடைஞ்சல்கள் இல்லாமலோ இருக்க வேண்டும். இதை  நீங்கள் ஒரு தியானம் போல தினமும் செய்துவர நாளடைவில் உங்களிடம் சிகரெட் பழக்கம்  அறவே இருக்காது. இதை குறைந்தது ஒரு மாதம் செய்ய வெண்டும்.இரண்டு மூன்று நாள் செய்துவிட்டு பலன் இல்லை என கூறினால் அது உங்கள் குறைதானே ஒழிய மெஸ்மரிசத்தின் குறை அல்ல.இது மெஸ்மரிசத்தின் ஒரு முறைதான்.
மெஸ்மரிசம் ஒரு விஞ்ஞானம்: பாகம் இரண்டு:மெஸ்மரிசம் ஒரு விஞ்ஞானம்: பாகம் இரண்டு:மெஸ்மரிசத்தின் வேர் என்ன என்று பார்க்க இருக்கின்றோம்.மெஸ்மரிசத்தின் மேம்படுத்த பட்ட வடிவம் தான் ஹிப்னாடிசம். தமிழில் நோக்கு வர்மம் என கூறுவார்கள். ஆகையால் ஹிப்னாடிசமும் மெஸ்மரிசமும் வெவ்வேறு என நினைக்க  வேண்டாம்.
ஹிப்னாடிசம் ஒரு கடல் அதற்குள் முழுமையாக நீந்தி வந்தவர்கள் யாரும்
கிடையாது. ஹிப்னாடிசத்தின் அடிப்படையை தெரிந்து கொண்டால் நாம் அதன் தாக்கத்தை புரிந்து  கொள்ள தோதுவாக இருக்கும். பொதுவாக மனிதர்களிடம் உள்மனம் வெளிமனம் என இரண்டு மனம்  இருக்கின்றது.(அறிவியல் வளர்ந்து விட்டதாக பெருமை அடித்து கொண்டிருக்கும்   நமக்கு உண்மையில் மனம் என்றால் என்ன? அது எங்கே இருக்கின்றது? அது மனித உடலில் உள்ள ஒரு உறுப்பா? அல்லது உயிர் போன்ற ஒரு காற்றா? மூளையா? அல்லது மூளையுடன்  தொடர்புள்ள ஒரு சின்ன பகுதியா? என அறிவியல் நமக்கு விளக்கியதாக எனக்கு தெரியவில்லை  தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.)சரி விஷயதுக்கு வருவோம். மனிதனிடம் உள்மனம் வெளிமனம் என இரண்டு மனம் இருக்கின்றது என கூறினேன். எதுக்கு இரண்டு மனம் ஒன்று பத்தாதா என நீங்கள் நினைக்கலாம்.. எதையுமே காரணம் இல்லாமல் இறைவன் படைக்கவில்லை. இரண்டிற்குமே தனி தனி  வேலைகள் இருக்கின்றது.முதலில் வெளிமனம் பற்றி பார்போம்:வெளிமனம் நம்முடைய அன்றாட செயல்களில் துணைபுரிகின்றது. நம் அன்றாட வாழ்கையில் நடைபெறுகின்ர செயல்களை சேமித்து வைகின்றது.  ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைத்து வைத்திருக்காது.தனக்கு தேவையானதை தவிர மற்றதை காலப்போக்கில் மறந்து விடும்.வெளிமனம் என்று ஒன்று இருப்பதால் தான் நாம் நமது  வாழ்கையில் நடந்த துக்கமான நிகழ்வுகளையும் ,அவமானங்களயும் மறந்து சகஜமாக  வாழமுடிகின்றது.சரி இப்போது உள்மனம் பற்றி பார்போம்:உள் மனம் அபார சக்தி வாய்ந்தது.பிரபஞ்ச  சக்தியுடன் தொடர்புடையது.நன் வாழ்கையில் நடந்த ஒவ்வொறு சம்பவங்களும் உள்மனதில் அப்படியே பதிவாகி இருக்கும். உள் மனம் எதை நம்புகின்றதோ அதுதான் நம்முடைய குணங்களாக   இருக்கும்.ஒரு சின்ன உதாரணத்தை சினிமாவிலிருந்து கூறினால் உங்களுக்கு எளிதாக புரியும் என நினைக்கின்றேன்.
நாம் எல்லோரும் சந்திரமுகி படத்தை பார்த்து இருப்போம்.அதில் ஜோதிகாவின்
கேரக்டரை அலசி பார்த்தால் நமக்கு உள் மனம் பற்றிய பல உண்மைகள் தெரியவரும்.
முதன் முதலில் ஜோதிகா அந்த வீட்டிற்கு வரும் போது அவளுக்கு எந்த பாதிப்பும்
இல்லை. ஆனால் அவள் சந்திரமுகியின் அறைக்குசென்று சந்திரமுகியின்  நகைகளையும்  ஆடைகளையும் உடுத்தி பார்கும் போதுதான் அவள் தன்னை சந்திரமுகியாக கற்பனை  செய்கின்றாள்.எதிர்வீட்டில் நடன பள்ளி அமைதிருக்கும் வினித்தும் அதற்கான  சூழ்நிலையும் அவளுடைய கற்பனையை உண்மையென மனதை நம்ப வைகின்றது அவளை சந்திரமுகி  எனவும் முற்பிறவி கொடுமைக்கு பழிவாங்கவும்தான் தான் மறுபிறவி எடுத்திருப்பதாக  நம்பியதன் விழைவுதான் சந்திரமுகி படதின் அடிப்படையே...
அவளின் பழிவாங்கும் உண்ர்ச்சி எல்லை மீறவே அவளின் மனதை திருப்தி படுத்தி அவளின்  மனதை நம்ப செய்யவே அந்த கிளமாக்ஸ்.தன் காதலனை கொண்றவனை பழிவாங்கி விட்டதாக அவளது  மனது நம்ப தொடங்கியதும் அவளின் அந்த வியாதி போய்விட்டதாக படம் முடிகின்றது.ஆக ஒரு பொய்யான விஷயத்தை உண்மையென அவளது உள்மனம் நம்பியதன் விழைவை நம் கண்  முன்னே காட்டிய படம் தான் சந்திரமுகி.உள் மனதின் ஆற்றல் இத்தோடு நிற்கவில்லை. நம்முடைய எண்ணங்கள் இந்த பிரபஞ்சத்தோடு  தொடர்பு கொண்டது. நமது உள் மனதை நமது கட்டுபாட்டில் கொண்டுவருவதன் மூலம் நாமும்  இந்த பிரபஞ்சத்தின் சக்தியை உள் வாங்கி கொள்கின்றோம்.மேலும் நம்முடைய கட்டுபாட்டில்  உள்ள உள் மன சக்தியின் மூலம் பிறருடைய மனதிலும் மாற்றத்தை கொண்டு வரமுடியும்.(இந்த  பதிவை எழாம் அறிவு படத்தை பார்த்தபின் மீண்டும் படித்தால் இதனுடைய உண்மை தன்மை  புரியும்.) இப்போது ஹிப்னாடிசத்திற்கு வருவோம்.ஹிப்னாடிசத்தில் ஒருவனுடைய வெளிமனதை உறங்க செய்து உள் மனதுடன் நேரடியாக  தொடர்புகொண்டு அவனது உள்மனதில் உள்ள விரும்பதகாத நினவுகளை கலைந்து அவனது உள்  மனதில் தன் நம்பிக்கையை வார்தைகளை விதைப்பதன் மூலம் அவனை தன்னம்பிகை மிகுந்த  மனிதனாக மற்றலாம்.அதே போல் அவனை தீவிர வாதியாகவும், தற்கொலை படையாகவும் கூட மாற்ற  முடியும். சரி உள் மனதிடம் எப்படி தொடர்பு கொள்வது? அதற்கான வழிமுறை என்ன? என்பதை எனதி  அடுத்த பதிவில் தறுகின்றேன்.
மெஸ்மரிசம் ஒரு விஞ்ஞானம் பாகம் மூன்று: மெஸ்மரிசம் ஒரு விஞ்ஞானம் என பெயர் வைத்துவிட்டு அதை விஞ்ஞான பூர்வமாக விளக்காவிட்டால் பதிவு முழுமை பெறாது என்பதற்காக ஒரே ஒரு உதாரணத்தை உங்களுக்கு கூற  விரும்புகின்றேன்.. இரண்டாம் உலக போர் நடந்து முடிந்த சமயம் போர் முடிந்து உலகில் அமைதி திரும்பி கொண்டிருந்தாலும் அந்த போரில் ஈடுபட்ட  லட்ச கணக்கானபோர் வீரர்களின் வாழ்வில் அமைதி  திரும்பவில்லை..காரண்ம் போரினால் அவர்கள் மனது மிகக்கடுமையாக பாதிக்கபட்டு  இருந்தது... கேமராவிலிருந்து வரும் வெளிச்சம் கூட அவர்களுக்கு குண்டு  வீச்சினால் ஏற்படும் வெளிசத்தை ஞாபக படுத்தியது... மின்னல் வெட்டும் ஒளியை  பார்த்தால் அவர்களது மனம் பயத்தால் நிறம்பி வளிந்தது..இடி இடிக்கும் ஓசையை  கேட்டால் அவர்கள் தங்கள் வீட்டில் குண்டு விழுவதாக நினைத்து கொண்டு தீடீரென கீழே  படுத்து விடுவார்கள் மொத்தத்தில் போர் முடிந்த பின்னரும் அவர்களின் மனம் இன்னும்  போரிலேயே இருந்தது... அவர்களால் அதிலிருந்து மீள முடியவில்லை..மருந்து மாத்திரையால்  பயன் இல்லை.. அரசாங்கத்திற்க்கு என்ன செய்வதென்றேதெரிய வில்லை.. அப்பொழுதுதான் அவர்களுக்கு உதவி செய்ய ஹிப்னாடிஸ்ட் முன் வந்தார்கள்...மனதள்வில் பாதிக்க பட்ட  வீரர்களை தேர்வு செய்து அவர்களது மனதை ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு சென்று  அவர்களது மனதுடன் பேச தொடங்கி னார்கள். சில நம்பிக்கையான வார்த்தைகளின் மூலம்  அவர்களின் மனதுக்கு போர் முடிந்த நிலையையும் இப்போது இருக்கும் நிலையையும் விளக்கி  அவர்கள் மனதை நம்ப செய்தார்கள்.. இப்படி ஒரு சில வாரங்கள் தொடர்ந்த சிகிச்சை மூலம்  வீரர்கள் தங்கள் பழய நிலையை அடைந்தார்கள்... அது வரை பொது ஜனமக்களால் பெரிய அளவில்  அங்கிகரிக்க படாத மெஸ்மரிச மற்றும் ஹிப்னாடிச கலைகள் மக்களிடையே பிரபலமடைய  தொடங்கியது..தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன் ஜென்மம் என்ற நிகழ்ச்சி வாரா வாரம் ஒளிபரப்பாகி வருகின்றது.அதில் மனிதனுடைய பூர்வ ஜென்மங்களை பற்றி கூறுவதாக கூறுகின்றார்கள்.. இதில் நம்பக தன்மையை பற்றி நான் கூற வரவில்லை.. ஆனால் அதில் அவர்கள் பூர்வ ஜென்மத்தை அறிய பயன் படுத்தும் கலை ஹிப்னாடிசம் தான்.ஒரு சிலருக்கு தங்களது சிருவயதில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.... அதன் மூலம் அவர்களின் குணங்களும் மாறிவிடும்... சிற்வயதில் தாயாரின் தவறான நடத்தையில் பாதிக்க படும் குழந்தைகள் நாளடைவில் பெண்களையே வெறுக்க தொடங்கி விடுவார்கள்.. இப்படி பட்டவர்களுக்கு கல்யாண  வாழ்க்கை என்றாலே வெறுப்பாக இருக்கும்.. இவர்களை ஹிப்னாடிச சிகிச்சை மூலம் சரி  செய்துவிடலாம்..இதே போல் ஏராளமான மக்கள் மனதளவில் பாதிக்க பட்டு வாழ்ந்து  கொண்டு இருக்கின்றார்கள்..
உங்கள் மனதை பற்றி அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே: இந்த உலகத்துல பிரார்தனை செய்யாத யாரும் இருக்க முடியாது... முஸ்லிம்கள் அல்லாவிடமும்... கிருஸ்தவர்கள் ஏசு விடமும், இந்துக்கள் தங்கள்  வணங்கும் தெய்வத்திடமும் பிரார்தனை கேட்டு கொண்டே இருக்கின்றார்கள்...முஸ்லிம்கள் அல்லாவிடம் பிரார்தனை செய்தால் தங்களது பிரார்தனை நிறைவேறும் என  நம்புகின்றார்கள்.. அதே போல் கிருஸ்தவர்கள் ஏசுவிடம் பிரார்தனை செய்தால் பலிக்கும்  என நம்புகின்றார்கள்..  இந்துக்கள் தங்களது தெய்வதிடம் பிரார்தனை செய்தால்  நிறவேறும் என நம்புகின்றார்கள்..ஆனால் இந்த உலகத்தில் ஒரு சமுதாயத்தின் பிரார்தனைகள் மட்டும் தான் நிறை வேறுகின்றதா? என கேட்டால் இல்லை..அல்லாவிடம் கேட்ட பிரார்தனையும் நிறைவேறுகின்றது.. ஏசுவிடம் கேட்ட பிரார்தனையும்  நிறைவேறுகின்றது.. இந்து கடவுள்களிடம் கேட்ட பிரார்தனையும் நிறைவேறுகின்றது..இது மட்டும் அல்லாமல் கடவுளே இல்லை என கூறிவரும் நாத்திகர்களின் பிரார்தனையும்  நிறை வேறுகின்றது... ஆக உண்மையில் பிரார்தனை யாரிடம் கேட்பது...? பிரார்தனையில் மூலம் என்ன? மதங்களுக்கும் பிரார்தனைக்கும் சம்மந்தம் உண்டா? என நீங்கள் கேட்கலாம்.(நீங்கள் கேட்கவில்லை என்றால் நானாக கேட்க வேண்டியது தான்)நண்பர்களே!! முஸ்லிம்கள் கூறுவது போல் இஸ்லாம் மட்டுமே உண்மையான மதம் என்றால்  இஸ்லாமியர்களின் பிரார்தனை மட்டுமே ஏற்று கொள்ள படவேண்டும்.. கிருஸ்துவம்   மட்டுமே உண்மை என்றால் முஸ்லிம்களின் பிரார்தனையும், இந்துகளின் பிரார்தனையும்  நிராகரிக்க பட வேண்டும்..இந்து மதம் மட்டுமே உண்மை என்றால் முஸ்லிம்களின்  பிரார்தனையும் கிருஸ்துவர்களின் பிரார்தனையும் நிராகரிக்க படவேண்டும்...ஆனால்  இந்த உலகத்தில் எல்லா மதத்தவர்களின் பிரார்தனையும் ஏற்று கொள்ளபடுகின்றது என்பதே  எல்லா மதத்தவர்களின் வாதம்..ஆக பிரார்தனைக்கும் மதங்களுக்கும் சம்மந்தம் இல்லை என தெளிவாக  விளங்குகின்றது...அப்ப பிரார்தனை யாரிடம் கேட்பது? அது ரொம்ப ஈஸிங்க!!! பிரார்தனை கேட்க வேண்டுவது  உங்கள் மனதிடமே!!!நம்பியோர் கைவிட படார்.. என்ற வாசகத்தின் மூலம் என்னங்க?
நம்பி எந்த ஒரு காரியத்தையும் செய்பவர்கள் அந்த விஷயத்தில் வெற்றி காண்பார்கள்
நீங்க எந்த அளவு நம்புரீங்க என்பதை பொறுத்தே வெற்றியின் அளவு இருக்கும்..
பிரார்தனைக்கும் முயர்சிக்கும் என்ன சம்மந்தம்? பிரார்தனைக்கும் நம்பிக்கைக்கும்
என்ன சம்மந்தம்? நண்பர்களே பிரார்தனைக்கு இன்னொரு தமிழ் சொல் என்ன தெரியுமா?திடமான  எண்ணம்.....மனதில் ஒரு விஷயத்தை திடமாக நினைக்கும் போது அது பிரார்தனையகின்றது...  பின்னர் நாம் அதை செயல் படுத்த நினைக்கும் போது அது நம்பிக்கை ஆகின்றது..... அந்த செயல் தொடர்ந்து நடக்கும் போது அது முயர்சி ஆகின்றது..ஆக முயர்சிக்கும், நம்பிக்கைக்கும் ,பிரார்தனைக்கும் வேர்களாக இருப்பது நம்முடைய திடமான எண்ணங்கள்...நாம் ஒரு விஷயத்தை திடமாக நினைக்கும் போது அது சம்மந்தமான விஷயங்களை நம்முடைய  மனது நம்ப தொடங்கும்...  நம்முடைய மனது ஒரு விஷயத்தை நம்ப தொடங்கினால்   அது சம்மந்தமான விஷயங்களை அது தானாகவே நமக்கு அருகே கொண்டுவரும்.. இதை சிலர் கடவுள்  கருணை, தெய்வாதீனம்.. என பல வகையில் கூறுகின்றன..இப்பொழுது நான் கூறுவது உங்களுக்கு வேடிக்கை யாக இருக்கும் ஆனால் அது  உண்மை..நம்முடைய கை தொலைபேசியின் மூலம் உலகில் உள்ள எல்ல தொலைபேசி இனைப்புக்கும்  தொடர்பு கொள்ள முடியும் என்பது நமக்கு எல்லாருக்கும் தெரியும்..அதே போல் நம்முடைய மனது இந்த உலகத்தில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருகின்ற அனைத்து மனிதர்களின் எண்ணங்களோடும் தொடர்பு கொண்டிருக்கின்றது.. அப்படி அது தொடர்பு  கொண்டு அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை தான்... புது ஐடியா... புது யோசனை... திடீர்  ஞானோதயம் என பலவாறு கூறுகின்றோம்...ஒரு குழப்பத்திற்கு தீர்வு காண நாம் யோசிப்பது நமக்கு வேண்டுமானால் அது யோசனையாக  இருக்கலாம், ஆனால் நம்முடைய மனது நமக்கு முன் வாழ்ந்த மனிதரின் எண்ணங்களிடம் வாழும்  மனிதரின் எண்ணங்களிடமும் அவர்களுடை அனுபவங்களை தீர்வுக்காக தேடி கொண்டு  இருக்கின்றது.. என்பதே உண்மை..ஆக மனதால் ஒரு விஷயத்தை நம்புவர்து திடமாக நம்புவது தான் பிரார்தனை... அப்படி நம்பினால் அதனால் கிடைக்க கூடிய பலன் தான் தெய்வாதீனம்..

No comments:

Post a Comment