Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, October 26, 2014

சித்த வித்யா பாடங்கள் 06

இன்றைய யோகவகுப்புகள் அனைத்தும் மனதினை கட்டுப்படுத்தும் முறையினை சொல்லித்தருவதாகவும், உயர்ந்ததியானப்பயிற்சிகளை சொல்லித்தருவதாகவும் கூறிவருகின்றன. எப்படி இருப்பினும் பட்டம் பெறவேண்டுமென்றால் முதலாம் வகுப்பிலிருந்து ஒழுங்காக கற்று உயர் வகுப்புகள் தேறிய பின்னரே பல்கலைக்கழகம் செல்லமுடியும் என்பதுபோல் உயர்ந்த யோகப்பயீற்சிகள், தியானம் செய்வதற்கு முன்னர் அடிப்படை பயிற்சிகள் கட்டாயம் செய்யப்படவேண்டியவை என்பதனை அனேகமாக யோகம் பயில்பவர்கள், தியானம் பயில்பவர்கள் பறந்து விடுகின்றனர். ஒரு வீட்டிற்கு குடிபோகவேண்டுமென்றால் முதலில் வீட்டினை சுத்தப்படுத்தி வெள்ளையடித்து அழகு படுத்துவதுபோல் சித்த வித்தைக்கு அடிப்படையான மனதிற்கும் இவ்வாறனதொரு சுத்தி செய்யும், ஒழுங்க்குபடுத்தும் படிமுறை அவசியமாகும். இது இல்லாமல் எந்தவொரு மனப்பயிற்சியினையும் செய்ய ஆரம்பிப்பது தகுந்த ப்லனை தராது, ஏன் தெய்வ வழிபாட்டின் மூலம் பயன் பெறவேண்டும் என நினைப்பவர்கள் கூட இங்கு கூறப்படும் பயிற்சியினை செய்து வந்தால் துரிதமாக பலன் காணலாம். மனதினை சுத்தி செய்வது என்பது மனதில் எழும் உணர்ச்சிகளை உத்வேகங்களை கட்டுப்படுத்தி மனதை பயன் தரும் நேர் எண்ணங்களை (Positive thoughts) உருவாக்க செய்யப்படும் பயிற்சியாகும். பொதுவாக நம்மில் பலர் ஒரு விடயத்தினை தெரிய ஆரம்ப படிமுறையான கேள்வி கேட்கும் மேல்மனதை பழக்கப்படுத்திக்கொள்வதால் எப்போது நேர்மறை எண்ணங்களை (Negative thoughts) உருவாக்க பழகி விடுகிறோம், உதாரணமாக எமது மனம் நம்பினால் மூட நம்பிக்கையாக நம்பும், அல்லது சந்தேகப்பட்டால் முழுமையாக சந்தேகிக்கும், ஆனாம் நேர் எண்ணங்கள் என்பது சரியான விதத்தில் ஒரு விடயத்தினை ஆராய்ந்து, அது சரிவருமா இல்லையா என்பதனை துணிந்து, வரும் இடர்களை எதிர்பார்ப்புடன் சமாளித்து, அதன் பின் எந்த பின்வாங்கலும் இன்றி செய்துமுடிப்பது. ஆனால் மனம் வலிமையற்று இருக்கும் போது எப்போது துன்பமாகவும் எதிர்மறையாகவுமே எண்ணும். இந்த பயிற்சியினை செய்துவருவதன் மூலம் மனம் நேர் எண்ணங்களை உருவாக்குவதற்கு பழக்கப்படும். இதனால் மனம் சரியான விதத்தில் இயங்கி உங்களுக்கு காரிய வெற்றியினைத் தரும்.
பயிற்சி நிபந்தனைகள்:
பயிற்சியினை உண்மையில் பலன் காணவேண்டும் என்ற சிரத்தையுடன் செய்யவேண்டும், தினசரி காலை மாலை குறித்த நேரத்தினை ஒதுக்கிகொண்டு அதே நேரத்தில் தொடர்ந்து செய்து வரவேண்டும்.இடமும் ஒரே இடமாயிருத்தல் நன்று. பலன் தெரிவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக பயிற்சி, க்கவும், அதன் பின்பும் அனுதினம் உங்கள் சாதனையுடன், வழிபாட்டுடன் செய்துவரலாம். 
பயிற்சி:
காலை கிழக்கு திசை நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பார்த்து அமைதியாக உட்கார்ந்து கொள்ளவும். கால்களை மடித்து உட்காரக்கூடியவர்கள் சுகாசனம், பத்மாசனம், சித்தாசனம் இவற்றில் அமர்ந்து கொள்ளலாம், முடியாதவர்கள் சௌகரியமாக உட்கரக்கூடிய நாற்காலியிம் முதுதண்டு நேராக இருக்க கூடியவாறு அமர்ந்துகொள்ளவும். பிராணாயாமம் தெரிந்தவர்கள் சில முறை செய்துகொள்ளலாம், மற்றையவர்கள் மெதுவாக ஆழமான மூச்சு சிலதடவைகள் உள் இழுத்து வெளிவிட்டு தளர்ச்சியாக அமர்ந்து கொள்ளவும். பின்னர் (காலையிலாயின்) கிழக்கு திசையினை நோக்கி அமர்ந்து கொண்டு கண்களை மூடி கீழ்வரும் வாக்கியங்களை மனதில் உச்சரித்துக்கொண்டு, உங்கள் மூளையிலிருந்து உருவாகும் எண்ண அலைகள் கிழக்கு திசை பூராகவும் பரவுவதாக மனதில் பார்க்கவும், இவ்வாறு ஐந்து நிமிடங்கள் செய்தபின்பு, தெற்கு திசை நோக்கி திரும்பி ஐந்து நிமிடங்கள் மேற்கூறிய பாவனையினை செய்யவும், அதன்பின் மேற்கு, வடக்கு திசைகள் நோக்கியும் செய்யவும். மாலையில் மேற்கு தொடங்கி, வடக்கு, கிழக்கு, தெற்காக செய்து முடிக்கவும். 
பயிற்சியின் போது கூறவேண்டிய வாக்கியம்: 
"கிழக்கு திசையில் (மற்றைய திசைகளுக்கு அதன்படி மாற்றிக்கொள்ளவும்) உள்ள மனிதர்கள், ஜீவராசிகள், உயிரினங்கள், அனைத்தும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், இன்பமாகவும் இருக்க வேண்டும், கிழக்கு திசை எப்போதும் நலமாக இருக்கட்டும்" 
இந்த பயிற்சி செய்யும் போது மனம் முழுமையாக விழிப்புணர்வுடன் குறித்த திசையில் ஒன்றி மனதாலோ, அல்லது வாயினாலோ கூறலாம்.                                                          
பலன்கள்;தொடர்ச்சியான பயிற்சியால் மூன்றுமாதங்களில் பலன் தெரியும், கீழ்வரும் அறிகுறிகள் மூலம் மனம் பலமடைந்து சுத்தியாகியுள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம். முன்னர் உங்களுக்கு இருந்து தீய உணர்வுகள் தற்போது அடிக்கடி மனதில் தோன்றுவது மறைந்திருக்கும் அல்லது குறைந்திருக்கும். அவற்றை தூண்டும் சந்தர்ப்பங்கள் சூழ் நிலைகள் ஏற்பட்டபோதும் அவை மனதில் குறித்த உணர்ச்சிகளை தூண்டியிருக்காது. வெறுப்புள்ள நபர்களை காணும்போது மனதில் அந்த உணர்ச்சி தோன்றாதிருத்தல். 
மனதில் அன்பு, பாசம், கருணை, இரக்கம் போன்ற உணர்வுகள் தோன்றுதல். இவற்றின் மூலம்  உங்களது மனம் சுத்தியடைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இதன் பின் நீங்கள் செய்யும் எந்த சித்த வித்தை, மனப்பயிற்சிகளும் வெற்றியளிக்கும்..முயற்சித்து பலன் பெறுங்க்கள்.ஸ்த்குரு பாதம் போற்றி!

No comments:

Post a Comment