Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, October 28, 2014

சிருஷ்டியின் இரகஸ்யம் - முறைகள்

சிருஷ்டியின் இரகஸ்யம் - முறைகள்
தன்னிச்சையாகச் செயல்படுவது, தனக்கு அளவு ஏற்படுத்துவது, தன்னை தன்னுள் கிரகித்துக் கொள்வது; அகம் புறம்; பகுத்தல், சக்தியை எழுப்புதல், சக்தி ரூபம் ஏற்படுத்துவது; ரூபம் புலனுணர்வை எழுப்புவது; மேலும், கீழும் ஒரே சமயத்தில் செல்வது; ஒன்று பலவாக மாற, பிரிந்து சேர்வது.எல்லா லோகங்களும் ஒன்றே, எல்லா முறைகளும் ஒன்றே.லோகங்களும் முறைகளும் ஒன்றே.தன்னைக் கிரகித்துக் கொள்ள தானே முடிவு செய்வதால் அது தன்னிச்சையாகும்.அமைதி லோகம், சலனம் முறை.ஜடமாக மாறும் சத், இருளாக மாறும் ஒளி, வலியாக மாறும் ஆனந்தம் தன்னுள் தன்னைக் கிரகித்துக் கொள்ளும் முறையைப் பயன்படுத்துகிறது. தானே இச்சைப்பட்டு இது நடப்பதால் இவ்விருமுறைகளும் ஒன்றே. அகத்தில் ஒளியானது புறத்தில் இருளாக இருப்பதால், இதுவே அகம் புறம் என்ற முறையாகும். ஒளி என்பது ஓர் அளவு. இருள் என்பதும் ஓர் அளவு. ஒளி இருளாக மாற தனக்குத் தானே அளவை ஏற்படுத்திக் கொள்கிறது.சத் என்பது ஒரு லோகம். கிரகிப்பது ஒரு முறை. இவையிரண்டும் ஒன்றே என மனம் எனும் லோகமும், எண்ணம் என்ற முறையில் விளக்கலாம்.மனம் செயல்படும்பொழுது எண்ணம் எழுகிறது. எண்ணம் செயல்படாமல் அமைதியானால் மனம் என்ற லோகம் உண்டாகிறது. இதேபோல் எல்லா முறைகளும் ஒன்று எனவும், எல்லா லோகங்களும் ஒன்று எனவும் கூறலாம். மேலும் எல்லா லோகங்களும் எல்லா முறைகளும் ஒன்றே எனவும் கூறலாம்.முறைகள், பொருள்கள், ரூபங்கள், குணங்கள் ஆகிய பல ஒன்றிலிருந்து எழுந்த வகை இதுவே.
காலம், இடம்சித்தின் அகம் காலம், புறம் இடம்.சித் என்பது இங்கு முழு சச்சிதானந்தத்தையும் குறிக்கும்.சத்தில் அகம், புறம்; காலம், இடம் இருக்க முடியும். சத் பிரியப்பட்டால் அவற்றிலிருந்து விலகலாம்.சத்திய ஜீவியத்தில் காலத்தைக் கடந்த பகுதியும், காலத்திற்குட்பட்ட பகுதியும் உண்டு.மனம் இவற்றிடையே ஏற்பட்டது. மனத்திற்கு ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தைப் பார்க்க முடியும் என்றாலும் திரும்பி மறுபக்கத்தையும் பார்க்கும் திறன் உண்டு.சித்திலிருந்து வரும் சக்தியில் காலமும், இடமும் உற்பத்தியாகின்றன.சத்திற்கும், சித்திற்கும் முழுமையுண்டு. சக்தியைப் பிரிக்கலாம். சத், சித்தைப் பிரிக்க முடியாது.பிரியும் சக்தி மேலும், பிரியாத ஜீவியமும், சத்தும் முழுமையாக உள்ளேயும் உள்ளன.மனத்தால் தான் பிரித்த சக்தியையும், அதன் பாகங்களையும் காண முடியும். முழுமையான சித், சத்தைப் பார்க்க முடியாது, சத்திய ஜீவியம் பார்க்கும்.மனிதன் சிந்தனையில் எழுவது கற்பனை, காவியம், சித் தெய்வ சிந்தனையில் எழுவது காலம். அது அகம், அதன் புறம் இடம். காலமும், இடமும் உலகைத் தாங்குகின்றன. ஐக்கியம், சத்தியம், நல்லது, ஞானம், சக்தி, அன்பு ஆகிய ஆறு அம்சங்களும் சிருஷ்டி பூர்த்தியாக அவசியம். ஒரு சமயத்தில் ஓர் அம்சமே செயல்பட முடியும் என்பதால், அச்சமயம் மற்றவை குறையாக இருப்பதாகத் தெரியும். அது குறையில்லை. அதன் முறை இன்னும் வரவில்லை எனப் பொருள்.நமக்கு வலியிருப்பது ஆனந்தமில்லாதது தெரிவது போல் மற்ற எந்த அம்சம் குறையாக இருப்பதும் தெரியவில்லை என்பதால், வலியிருப்பதை மட்டும் குறையெனக் கூறுகிறோம்.
1.
The immobile immutable Self
அக்ஷர பிரம்மம்
The Self that becomes all things
சத் புருஷன் (The essence and source of all determinations and the dynamic essentiality.)
2.
The Nirguna Brahman
நிர்குணப் பிரம்மம்
The Saguna Brahman
சகுணப் பிரம்மம்
3.
The Eternal without qualities
The Eternal with infinite qualities
4.
The pure featureless
One Existence - One பரமாத்மா
The One who is the Many - Many
ஜீவாத்மா
5.
The Impersonal
அனந்தகுணா
The infinite person who is the source and foundation of all persons and personalities.
6.
The Silence void of activities புருஷன்
The Lord of Creation, the word ஓம்
7.
The Non-Being அசத்
The Master of all works and creation சத்
8.
9.
The Ineffable
The Unknowable
That being known, all is known
 ஒரு நாணயத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்து அதிலுள்ளதை நாம் அறிந்து அடுத்த பக்கமில்லை என்று கூறுவதில்லை. ஆனால் வாழ்வில் பல சமயங்களில் அதைச் செய்கிறோம், விவசாயிக்கு விவசாயமே பெரியது எனத் தோன்றுகிறது. அதைப் பேசும் பொழுது உலகமே விவசாயம் என்கிறான். மற்றது கண்ணுக்குத் தெரிவதில்லை. தெரிந்தால் மனதில் படுவதில்லை.பிரம்மத்தைக் கண்டவர், கண்டு சித்தித்தவர் ஆயிரம் பேருண்டு. கண்டவர்கள் மனத்தால் கண்டவர்கள். நம் உயர்ந்த பகுதி மனம். மனத்தால் மட்டுமே நாம் காண முடியும். மனத்தால் பிரம்மத்தைக் காண்பது மைக்கிராஸ்கோப்பால் மனிதனைப் பார்ப்பதாகும்.அப்படி இதுவரை கண்டவர்களுடைய ஆன்மீக அனுபவம் இரு பகுதிகளாகும். ஒன்றை பாஸிடிவ் எனவும், அடுத்ததைநெகட்டிவ் எனவும் கூறினால் 7 வகைகளாக அவற்றைப் பிரித்து ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார். அவற்றை மேலே எழுதியுள்ளேன். ஒன்றை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் ஒன்றுக்கு எதிரானது மற்றது என்று காண்பிப்பது இயற்கையின் முறை என்கிறார். பிரம்மத்தை சத் எனவும் அசத் எனவும் அதுபோல் பிரித்துக் காட்டுகிறது சிருஷ்டி. சத் என்பதை ஆன்மாவாகவும், அசத் என்பதை ஜடமாகவும் கருதுவோம்.சலனமற்ற மாறுதலற்ற பிரம்மம் என ஒன்றை ரிஷிகள் அறிவார்கள். அதை அக்ஷர பிரம்மம் என்பர். இதன் மறுபுறத்தைக் கண்டவர்கள் இந்த பிரம்மமே உலகிலுள்ள எல்லாப் பொருள்களாகவுமாயிற்று என்பர். அதை சத் புருஷனின் அம்சமாகக் கருதுவர்.குணங்களற்றவன், நிர்குண பிரம்மம் என்பது அடுத்தது. அதன் மறுபுறம் சகுணம், எல்லா குணங்களையும் உடைய பிரம்மம். ஈஸ்வரன் இவ்விரு பகுதிகளாகப் பிரிந்து தெரிகிறது. இரண்டும் சேர்ந்த முழுமை ஈஸ்வரன்.ரூபமற்ற பிரம்மம், அரூபிணி என்பது ஒன்று. இதன் மறுபுறம் எல்லா ரூபங்களுக்கும் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது.செயலற்ற சொல்லற்ற மௌனம் அடுத்தது. எல்லா செயல்களையும் எல்லா சொற்களையும் தன்னுட் கொண்ட ஓம், சப்த பிரம்மம் அதன் மறுபுறம்.சொல்லால் விவரிக்க முடியாதது, அறிவுக்கு எட்டாதது அடுத்தது, எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாமோ அது இதன் மறுபுறம்.
The range of spiritual mind
Higher mind                Silence              முனி
Illumined mind            Light                  ரிஷி
Intuitive mind              Knowledge        யோகி
Overmind                    Knowledge        தெய்வம்
                                   unhampered
                                    by Ignorance
மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடையே இந்த 4 நிலைகள் உள்ளன. தெய்வீக மனத்திற்கும் மேல் ஒரு பொன் மூடியுள்ளது.பொன்மூடியைக் கடந்தவுடன் நிர்வாண நிலையுண்டு.மனம் என்பதை மேற்சொன்ன 4 நிலைகளாலும், மனித மனத்தாலும் குறிப்பிடுகிறார்.சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது காலத்தைக் கடந்ததும், காலத்திற்குரியதுமாக அவற்றிடையே சத்திய ஜீவியத்தின் சிறு பகுதியாக மனம் உற்பத்தியாகிறது.சத்திய ஜீவியத்திற்கு முழுமையுண்டு.தன் முழுமையையிழந்து பகுதியான மனத்தை சத்திய ஜீவியம் உற்பத்தி செய்கிறது.சிருஷ்டி சத்திலிருந்து ஜடத்தை நோக்கி வரும்பொழுது தன்னை பிரம்மம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து ஜடமாகிறது.சத்திய ஜீவியம் முழுமையை இழந்து மனமாவது அதன் பகுதி. மனத்தைப் பிரிவினையின் கருவியாக உற்பத்தி செய்கிறது.ஆன்மாவை (spiritual substance) மனம் பிரித்து வாழ்வையும், ஜடத்தையும் உற்பத்தி செய்கிறது.பிரம்மம் சிருஷ்டியின் அடியில் ஜீவனாகவும் மேலே சக்தியாகவும் உள்ளது. ஜீவன் என்றும் முழுமையானது. அதைப் பிரிக்க முடியாது. அதன் ஜீவியத்தையும் பிரிக்க முடியாது. பிரிவது Force சக்தி.




No comments:

Post a Comment