Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, October 26, 2014

சித்தவித்யா பாடங்கள்: 01

சித்தவித்யா பாடங்கள்: 01   சித்த வித்யா கேள்வி பதில்கள்
1 . என் சுவாசம் ஆழமாக இருக்கிறது, ஆனால் பயிற்சி நேரம் முழுவதும் எனது சுவாசம் ஒரே சீராக இல்லை. என் இப்படி ஆகிறது ? நான் தவறாக பயிற்சி செய்கிறேன ?
தங்களுக்கு ஆஸ்மா போன்ற சுவாச நோய்கள் இல்லாத பட்சத்தில் இந்த அறிகுறி உங்கள் எண்ண‌ சலனத்தினை குறிப்பதாகும். அதாவது உங்கள் சுவாசப்பை பூரண ஆரோக்கியத்தில் இருப்பின் சுவாச ஓட்டத்தின் மாறுதல் மனதில் எழும் எண்ண‌ அலைகளினால் மாற்றப்படுகிறது என்பதனை உணருவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம், ஆகவே உங்களுக்கு எதுவிதமான சுவாச நோயும் இல்லாத பட்சத்தில் இது உங்களுடைய மனம் சலனம் அடைவதால உருவாகும் நிலையாகும், ஆதலால் தொடர்ந்து பயிற்சி செய்வதன் முலம் ஆழாமான சுவாசம் கைவரும். எனினும் நீங்கள் கோபம், மகிழ்ச்சி போன்ற எந்த விதமான மன எழுச்சி ஏற்பட்டாலும் உங்களுடைய சுவாசத்தின் அளவு மாறுபடும்.
2 . பயிற்ச்சியின் போது சிலவேளைகளில்(மிக மிக சிலவேளை) மூச்சு வெளியேறிய பின்பு சில விநாடி சுவாசம் கொள்ளாமல் அப்படியே சுவாசிக்காமல் இருக்கிறேன். இது இயல்புதான அல்லது பிழையா ? (எனது சுய முயற்சியால் நான் சுவாசத்தை நிறுத்தவில்லை)
இது மிகவும் சரியான அனுபவம், உண்மையாக பயிற்சிக்கும் போது கும்பகம் எனும் முச்சடங்கும் நிலை தானாக ஏற்படும், ஆதலால் இது பற்றி நீங்கள் பயப்படத்தேவையில்லை. இது சரியான நிலையே ஆனால் உங்கள் முயற்சியினால் மூச்சை அடக்கவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்படி நடக்குமாக இருந்தால் பயிற்சியின் பின்னர் உங்கள் உடல் மனம் என்பன மிக உற்சாகமாக இருக்கும், நீண்ட நேரம் களைப்பின்றி வேலை செய்யக்கூடிய நிலை ஏற்படும், இவற்றின் மூலம் சரியாக செய்கிறீர்கள் என்பதனை உறுதி செய்து கொள்ளலாம். 
3 . எந்த வேளையில் / நிலையில் இந்த பயிற்சியினை செய்யகூடாது ? எவ்வளவு நேரம் இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம் ?
காலை சூரிய உதயத்திற்கு அரைமணி நேரம் முன்னராகவும் பின்னராகவும், அதேபோல் கூறிய அஸ்தமனத்தின் முன்னரும் பின்னரும் அரைமணி நேரத்திற்குள்ளே செய்வது மிக மிக விசேடமானது, இப்படி நேரம் கிடைக்காத மட்டில் உணவு அருந்தி நான்கு மணி நேரத்தின் பின் செய்யலாம். இதெல்லாம் விட முக்கியமானது முதலில் உங்கள் மனம் விரும்பும் நேரத்தில் செய்யப்பழக்கி பின்னர் இவ்வாறான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக்கொள்வது, இயல்பாக மூச்சினை அவதானிப்பதற்கு பொதுவாக எந்த விதிகளும் இல்லை, உங்களால் முடிந்த வரை மனம் உடல் விரும்பும் வரை செய்யுங்கள். 
4 . இபயிர்ச்சியினை மேற்கொள்ளும்போது எனது வலது காலில் சூகை பிடிக்கிறது(சிறுது நேரம் உள்டல் பக்கத்தை அசைக்காமல் இருந்ததால் ரத்த ஓட்டம் நின்றுவிடுமே ) இது எதுவும் உடலுக்கு உபாதை உண்டாக்காது அல்லவே ?
பயிற்சியினை உட்கார்ந்து செய்கிறீர்கள் அல்லவா, பயிற்சி முடிந்து எழுந்தவுடன் சிறிது உடலினை உங்களால் இயன்றவரை அசைத்து செய்யமுடிந்த அசைவுகளை செய்யவும். உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் இப்படியான பிரச்சனை வராது, உங்கள் வயது, உடலாரோக்கியத்தினை கருத்தில் கொள்ளுங்கள். தாங்கள் ஆரோக்கியமானவர் என்ற அனுமானத்தில் தான் இந்த பதில்கள் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். தாங்கள் இருதய நோயாளியாகவோ வேறு நோய்கள் உள்ளவராக இருந்தால் உங்களுடைய மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும். 
காயத்திரி மந்திரத்தை பற்றி கூறியிருந்தீர்கள் ..காயத்திரி மந்திரத்தை எப்போது , எதனை முறை கூறவேண்டும்?
இதுவும் மேலே கூறப்பட்ட படி காலை சூரிய உதயத்திற்கு அரைமணி நேரம் முன்னராகவும் பின்னராகவும், அதேபோல் கூறிய அஸ்தமனத்தின் முன்னரும் பின்னரும் அரைமணி நேரத்திற்குள்ளே செய்வது மிக மிக விசேடமானது, ஆரம்பத்தில் 9 இலிருந்து 27 , 54 , 108 , வரை கூறலாம், அதன் அர்த்தத்தினை மனதில் நினைத்தபடி வாயால் உச்சரித்து கூறலாம், பயிற்சி அடைந்த பின்னர் மனதில் அர்த்தத்தினை நினைத்தவண்ணம் மனிதிலேயே கூறும் நிலையினை அடையலாம்.
ஆக்ஞா சக்கரத்தை விழுப்பிக்க என்ன செய்யவேண்டும் ?
மூலாதாரம் விழிப்படையாமல் ஆக்ஞ்சா விழிப்படைந்து என்ன பயன், பைத்தியம்தான் பிடிக்கும் நீங்கள் குறிப்பாக எதனையும் வலிந்து விழிப்படைய வைக்க முயல வேண்டாம். பொதுவாக நீங்கள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் குறித்த சக்கரங்கள் சிறிய அளவில் விழிப்படைந்தால் மட்டுமே எதனையும் செய்ய முடியும், உங்களது பரிணாம உயர்வுக்கும் பிராண சக்தியினா அளவிலும் ஒவ்வொரு சக்கரங்களின் படிப்படியாக விழிப்படையும். மிக எளிய சுருக்கமான பாதுகாப்பான வழி நாம் குறிப்பிட்ட சுவாச பயிற்சியும் காயத்ரி மந்திர ஜெபமுமே! எப்படியாயினும் குரு தீட்சையுடன் உங்கள் சித்த சம்காரங்கள் (ஆழ் மன பதிவுகள் ) சுத்தம் செய்யாமல் இந்த முயற்சியில் இறங்கினால தங்கள் இயல்பு மன உடல் நிலைகள் பாதிப்படையும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். அடுத்து இந்தக்கேள்வியினை உங்களிடமே இப்படிக் கேட்டுப்பாருங்கள் " எனக்கு ஆக்ஞ்ச சக்கரம் விழிப்படைந்தால் என்ன பலன் என்று? " ஒரு முறை நான் எனது குரு நாதரை வற்புறுத்தி இதனை கற்றுத்தரும் படி கேட்க அவர் சொல்லித்தார், அப்போது எனது வயது அனுபவம் என்பன மிகக்குறைய, அவற்றை செய்தபின்னர் முன்னால் வந்து நிற்பவர்கள் அனைவரது எண்ணங்களும் தெரியத்தொடங்கியது, இப்படி என்னை சுற்றி நடக்கும் எல்லா விடயங்களும் வித்தியாசமாக விளங்கத்தொடங்கியது, நான் மிகவும் மன குழப்பம் அடைந்து விட்டேன், அதனால் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை, இப்படியான நிலையில் எனக்கு திரும்பவும் குரு நாதரிடம் சென்று கேட்க பயமாக இருந்தது, மாலை வேளைகளில் சிறிது தூரம் நடப்பார், அந்த வேளைகளில் அவருடன் நானும் சேர்ந்து நடப்பேன், அவ்வாறு நடக்கும் போது ஒருநாள் அவராகவே "தம்பி பக்குவம் இல்லாமல் ஆஞ்சா சக்கரம் விழ்ப்படைந்தால் இப்படித்தான் இருக்கும்" என சிரித்துக் கொண்டு கூறினார். அதன் பின் எனக்கு அப்படியான தோற்றங்கள், எண்ணங்களை அறியும் தன்மை அற்றுப்போனது. ஆகவே நண்பரே உங்களது ஆர்வம் நியாயமானது, என்றாலும் ஆராய்ந்து சரியாக குரு முறையாக செய்ய வேண்டிய விடயம் என்பதனை மனதில் ஆழமாக கொள்ளுங்கள் 
நண்பரே நான் ஆன்மிக வழித்தடங்களுக்கு புதியவன். எனக்கு எப்படி, யாரை குருவாக தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை . எனது ஆன்மிக பயணத்தை தொடர நீங்கள் எனக்கு உதவ வேண்டும்?

கவலை வேண்டாம் நண்பரே, ஆன்மிகம் லௌகிகம் என்ற பாகுபாடெல்லாம் வேண்டாம். கிடைத்த வாழ்வை நேர்மையாக குருவை பணிந்து இன்பமாக அனுபவியுங்கள், ஆதிகுரு அகஸ்தியரை அல்லது உங்கள் மனம் விரும்பும் குருவை மனதில் பிரார்த்தித்து வாருங்கள், வழிகாட்டுவார்கள். எப்படி அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பதனை எமது பதிவுகளில் கூறியுள்ளோம், படித்து பயிற்சி செய்யுங்கள். சத்குரு பாதம் போற்றி,  



No comments:

Post a Comment