Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, October 25, 2014

மனித மூளை

ALPHA மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hem isphere) இருப்பதை விஞ்ஞான பாடத்தில் அறிந்திருப்போம். அவை வலது பக்க மூளை இடது பக்க மூளை.

இடது பக்க மூளை ஜம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும் போது ஐம்புலன் வழி வருகிற, கிடைக்கிற செய்திகளை பகுத்து தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து அந்த அனுபவங்களை பகுக்கும் போதும் தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டும் செயல்படுகின்றது. இதனை நினைவு மனம் Conscious Mind. Ratinal Mind. Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களை கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது.

ஆனால் இந்த வலது பகத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டுமொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும், கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணனியின் நினைவுத்தகடு போல செயல்படுகிறது.

நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது. சுயமாக சிந்தியப்பது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றகின்றது.

இதனை ஆழ்மனம் Sub Concious Mind, Subjective Mind, Sleeping Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த வலது பக்க ஆழ்மனம் இடது பக்க நினைவு மனப்பகுதியால் வழி நடத்தப்பட்டு மிகப்பெருஞ்சக்தியாக எல்லாவற்றுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருகிற அற்புதங்களை ஆற்றுகிற அரேபிய கதைகளில் வருகிற அலாவுதீனின் அற்புத விளக்குபோல இந்திய இதிகாச புராணங்களில் செயல்படுகிற காமதேனுவாக கற்பகத்தருவாக செயல்படுகிறது.

இந்த Sub Concious Mind என்று சொல்லப்படுகிற வலது பக்க மூளையே ஆழ்மனம். இதுவே கற்பனையின் நிலைக்களன். இதனைப் பயன்படுத்த அறிந்து கொள்கிறபோதுதான் புதியன படைக்கவும் உருவாக்கவும் நம்மால் இயலுகிறது.

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை அல்பா, பீட்டா, தீட்டா, டெல்டா என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலாளர்களும் அறிந்து கூறுகிறார்கள்.

அல்பா நிலையில் மன இயக்கம் 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும்(Cycles/Sec)
பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும் தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும் டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கு கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.

பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State)
அல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கம் அற்ற தூங்காமல் தூங்கும் தியான மோன நிலை (A Hypnotic State)

டெல்டா என்பது சமாதி நிலை.

நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Concious Mind )உறக்க நிலையிலும் இருக்கிறது.

உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனத்தை வலது பக்க மூளையை வலது பக்க மூளையை விழிப்படையச் செய்ய நினைவு மனத்தின் (Concious Mind ) செயல்பாடுகளை இயக்க நிலையை குறைக்க வேண்டும். நம் ஐம்புலன்களுக்கும் உள்ள உலக தொடர்புகளை துண்டித்தால் நினைவு மனத்தின் செயல் குறையும்.

கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்குமில்லாமல் தளர்வாக வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ, இன்னும் சொல்லப்போனால் படுத்த நிலையிலோ (படுத்த நிலை உறக்கத்தை உடனே வரவழைத்து விடுவதால் உறக்கம் நினைவு மனத்தின் செயல்பாட்டை முழுவதுமாக தடை செய்து விடுவதால் இந்த நிலை பரிந்துரைக்கப்படுவதில்லை) ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும்போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. ஆழ்மனம் விழிப்படையத் தொடங்குகிறது.

நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தால் எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும் போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை.

எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி. எல்லா தியான முறைகளையும் தொடங்குவதற்கு இந்த முறையைத்தான் பரிந்துரைக்கிறார்க்ள. குறிப்பாக அட்டாங்க யோகத்தின் சமாதி நிலையை அடைய இதுவே வழி.

தியானம் என்ற சொல்லுக்கு ஏதாவது ஒன்றை எண்ணித்தியானிப்பது என்பது பொருள். அதாவது மனதில் சங்கல்பங்களை (முனைந்து உருவாக்கும் எண்ணத் தீர்மானங்கள்) உருவாக்குவதும் ஒன்றையே தொடர்ந்து இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பதும் தியானம்.

ஆல்பா நிலையில் நினைவு மனத்தின் துணைகொண்டு எந்தப் பொருள் குறித்து புதிய செய்திகள், உத்திகள் தேவையோ, புதிய கண்டுபிடிப்புகளுக்கு விடை தேவையோ, சிக்கல்களுக்கு தீர்வு வேண்டுமோ அது குறித்து சிந்தித்தால் அந்த எண்ணங்கள் ஆழ்மனத்தில் (வலது பக்க மூளையில்) பதிந்து உடனேயோ அல்லது மற்ற சமயங்களிலோ நம்முடைய மனதில் புதிய எண்ணங்களும், கற்பனைகளும் விடைகளும், உத்திகளும் ஊற்றெடுக்கும்.

இந்த அல்பா நிலை தியானத்தின்போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை காட்சிகளாக காண வேண்டும்.

மனித உடல் அழியக்கூடியது ஆன்மா அழிவில்லாதது என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை. எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audo & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது. வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.

பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெற முடியும். என்று பெஞ்சமின் பிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள். எடிசன் போன்ற விஞ்ஞான கண்டுபிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.

ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம். இதற்காக பெஞ்சமின் பிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.

பெஞ்சமின் பிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கல்லை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துத் தளர்வாக ஓய்வாகக் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிறபோது கைப்பிடி தளர்ந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும். அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற அல்பா தியான நிலை.

இந்த நிலையில் தன்னுடைய பிரச்சினைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள் விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதவிலிருந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.

கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கிற ஒருமுறை, நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப்போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை, ஆண்டாண்டு காலமாக கிருஷ்ண பகவானுக்கும் நண்பர் குசேலருக்கும் உள்ள நட்பைப் பற்றிய இதிகாச கதைகளைக் கேட்டு நட்பின் மகத்துவத்தை பாராட்டிய நாம் 28 குழந்தைகளைப் பெற்ற குசேலர் வறுமையில் வாடியதாகவும் உதவிக்கு கிருஷ்ணரை நாடியதாகவும் கதை கேட்டு சிந்திக்காமல் விட்டுவிட்ட நிலையில் ஒரு மாணவன், இருபத்தொட்டு குழந்தைகளில் முதல் எட்டு குழந்தைகள் இருபது வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பெற்றோர்களோடு சேர்ந்து ஏறத்தாழ பத்துப்பேர் உழைக்கும் வயதிலிருந்தும் உதவிபெற வேண்டிய குடும்பமாக இருந்தது. என்றால் குடும்பத்தில் பிழை என்று குற்றம் சாட்டுகிற சிந்தனை பக்கவாட்டு சிந்தனை மாற்றி யோசிக்கும் புத்தி.

இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையொன்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம். பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை.

புதியன படைக்கிறவர்கள். சாதனையாளர்கள், திறமைசாலிகள், வணங்கத்தக்கவர்கள்.

மாற்றி யோசித்தால் மாநிலமே பாராட்டும்.

புதியன படைக்கப்படுகின்ற போது மகிழ்ச்சியும், ஆனந்தமும் பிறக்கின்றது. மனித மனங்கள் படைப்பாளிகளால் கவரப்படுகிறது.

புதியன பயன்பாட்டிற்கு எளிமையாகவும், மனத்தளர்வு நீக்குவதாகவும், சலிப்பு போக்குவதாகவும் அமைகிறது.

கற்பனை செய்ய முடியாதவை நிஜத்தை அடைவதில்லை. கற்பனைக் கோட்டைகளே நிஜக் கோட்டைகளுக்கு அடிப்படை வெற்றிக்குத் தேவை கற்பனைத் திறன்.

கற்பனை காலத்தை வெல்லும் செல்வத்தைச் சேர்க்கும்.


No comments:

Post a Comment