Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, October 26, 2014

சித்த வித்யா பாடங்கள் 05

மனிதனது சூஷ்ம அமைப்புகளில் அடிப்படையானது மனம், புத்தி , சித்தம், அஹங்காரம் எனும் அந்தக்கரணங்கள். அவற்றின் செயன்முறை  பற்றி இன்றைய பாடத்தில் பார்ப்போம்.  மனம் எனது சடப்பொருள் அல்ல, அது ஒரு ஒரு சூஷ்ம சக்தி (Energy).புலன்கள் மூலம் வெளியிலிருந்து மூளை பெறும் தகவல்கள் மூளையில் மின்காந்த அலைகளாக ஆக்கப்பட்டு எண்ணங்களை தோற்றுவிக்கிறது.  எண்ணங்கள் தொடர்ச்சியாக தோன்றிக் கொண்டிருக்கும் சேர்க்கைதான்  (collective thoughts) மனமாக உருப்பெறுகிறது .இவை நடைபெறும் இடமே மனம் அல்லது மேல் மனம். இவை தொடர்ச்சியாக உருவாகும் போது ஒரு அடையாளத்தினை (impression) பிரபஞ்ச வெளியில் உருவாக்கிறது, அதாவது எமக்கு தோன்றும் ஒவ்வொரு எண்ணமும் இந்த பிரபஞ்ச்சத்தில் அசைவை ஏற்படுத்தி ஒரு பதிவினை ஏற்படுத்துகிறது. இந்த பதிவுகள் சேரும் பகுதியைத்தான் சித்தம் அல்லது ஆழ்மனம் என அழைக்கிறோம், இவை எப்போதும் யாராலும்  அழிக்கமுடியாதவை. அனைத்தும் பதிவுற்ற நிலையில் இருக்கும், சரியாக தமது சூஷ்ம புலன்களை விழிப்படைய செய்தவர்கள் இவற்றை அறியலாம். இப்படி சித்தத்தில் வலுப்பெற்ற எண்ணங்கள் மனிதனின் தூல நிலையில் செயல்கொள்ள தயாராகும். அவை செயல் நிலைக்கு வர தகுந்த பிராணனும், சூழலும் அவசியம். இந்த செயல் நிலைக்கு வருவதற்கான காரணிகளை ஒழுங்கு படுத்தும் செயலைத்தான் நவக்கிரகங்களும் செய்கின்றன. அதாவது எமது சித்தத்தில் பதிவுற்ற பதிவுகள் செயற்படுத்தும் பொறுப்பு கிரகங்களுக்குரிவையை. புத்தி என்பது சித்தமாகிய ஆழ மனத்தினதும் அஹம்காரதினதும் சேர்வை. அதாவது சித்தத்தில் சேர்ந்த பதிவுகளின் படி நிகழ்காலத்தில் நடக்கும் செய்முறைகளை சரி பிழை என ஆராயும் பாகம்.  அஹம்காரம் ஒரு செயலை செய்வதற்கான மையப்புள்ளி. அதாவது எப்போதும் நாம் ஒரு செயலை செய்வதற்கு மையம் ஒன்று தேவைப்படுகிறது. அந்தப்புள்ளி ஆன்மாவாக இருக்கும் நிலையே தன்னையறிந்த நிலை. அது விலக விலக நாம் உலக மாயையில் எம்மைப் பொருத்துகிறோம். உண்மையில் எமக்கு இரண்டு மையங்கள் காணப்படுகின்றன. ஒன்று உண்மையான நான் ஆகிய ஆன்மா, மற்றையது அஹம்காரமாகிய "நான்". இந்த வேற்றுமை உருவாவதற்கான காரணம் வெளி உலக தொடர்பில் மனம் ஈடுபடும் போது அந்த பதிவுகளை தனது உண்மை நிலை என எண்ணி மறந்து விடுவதே ஆகும். அஹம்காரமாகிய நான் இன்றி எந்தக் காரியமும் நடைபெறாது, எந்த ஆன்ம போதனையும் உண்மையான ஆன்மாவாகிய நானிற்கும், அதன் பிரதியான "நானிற்கு" இடையிலான இடைவெளியினை படிப்படியாக குறைத்து இறுதியில் ஆன்மாவாகிய "நானை" அடையும் வழிமுறையினையே போதிக்கிறது. இந்த அந்தக்கரணங்கள் நான்கும் ஒன்றுடன் ஒன்று கலந்த, ஒன்றை ஒன்று இடைத்தொடர்புடையவை, அதாவது பொதுவான சாதாரண வாழ்க்கை முறை ஒன்றுடன் ஒன்று கலந்த நிலை,  சித்த சாதனை அல்லது எந்தவொரு யோக சாதனையும் இந்த ஒழுங்கற்ற   அந்தக்கரணங்களில் கலப்பை ,எமது மனதின் மூலம் உணர்ந்து ஒழுங்கு படுத்தி, சக்தியுடையதாக்கி படிப்படியாக கட்டுப்படுத்தி, மாயை ஆகிய நானிலிருந்து உண்மையான ஆன்மாவாகிய நானை உணரும் வழிமுறையினையே சொல்லும். எந்த தூல  சூஷ்ம பொருட்களும் பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய ஐந்தின் கலப்பினால் ஆனவையே.  அவற்றில் விளக்கமும் எல்லாவற்றிலும் ஐந்தும் ஒன்றுடன் ஒன்று கலந்த கலவையாகவே காணப்படும். அந்தக் கரணங்கள் நான்கும் பஞ்ச பூதங்களால் ஆனவையே. ஆகவே சித்த வித்தையின் படி ஒருவர் தனது மனம், புத்தி சித்த அஹங்காரங்க்களை சுத்தி செய்வதே முதற் படி. இந்த அடிப்படையினை ஒருவர் விளங்கிக் கொண்டால் மற்றைய விடயங்களை சிந்தித்தறிவதனால் இலகுவாக விளங்கிகொள்ளலாம். அடுத்த பாடத்தில் எல்லாவற்றிற்கும் மூலமான மனதினை சுத்தி செய்யும் ஓர் எளிய முறையினை பார்ப்போம். 
அகஸ்திய மகரிஷியின் ஞானப்பாடல் கீழ்வருமாறு, 
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
பொதுவாக இந்தப் பாடலை வைத்துக்கொண்டு அகஸ்திய மகரிஷியே சொல்லிவிட்டார், மனம் செம்மையாக இருந்தால் மந்திரமும் ஜெபிக்கத்தேவையில்லை, பிரணாயாமம் செய்யத்தெவையில்லை என வாதிடுவோரும், பொருள் கொள்வோரும் உள்ளனர், ஏன் சில காலங்களுக்கு முன் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். அப்படியானால் எல்லா நூற்களிலும் என் மந்திரங்களும் யோக சாதனைகளும் கூறி உள்ளார்கள்?இந்தப்பாடலை நேற்றுக்கண்ணுற்றப்போது அதனை வாசிக்கும் போது மனதில் கீழ்வருமாறு பொருள் தோன்றியது. மனது செம்மையாக முதலில் மந்திரம் ஜெபி!அப்படி மனது செம்மையான பின்பு மந்திரம் செபிக்க வேண்டாம்,அந்த நிலையில் அசபையான மந்திரம் தானகவே ஜெபிக்கப்படும். அடுத்து மனது செம்மையாக அதன்பின் வாயுவை உயர்த்தும் பிராணாயாமத்தினை செய்,இதன் மூலம்  மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தும் பயிற்சியை நீ தொடர்ந்து செய்யத்தேவை இல்லை,தானாகவே மூச்சு கட்டுப்படும். அடுத்து மனது செம்மையாக்க வாசியாகிய பிராணனை ஆறாதாரங்களில் நிறுத்தப்பழகு அதன்பின் நீ மனமது செம்மையாக‌ வாசியை உன் முயற்சியால்  நிறுத்த வேண்டா,ஆதாரங்களில் தானாகவே வாசியாகிய பிராணன் நிலைப்படும். இவ்வளவற்றையும் நீ செய்து உனது மனம் செம்மையானால் உன்னிடமுள்ள மந்திரங்கள் எல்லாம் செம்மைதான். அதாவது சித்தி பெற்ற நீ சொல்லும் சொற்கள் எல்லாம் மந்திரமாக மாறும். ஆக இந்தப்பாடலிலேயே சித்த சாதனையின் படிமுறைகளையும், செய்முறைகளையும் பரிபாஷையாக சொல்லியுள்ளார் குருதேவர்! எப்படியெனில் ஒரு தந்தை மகனிற்கு லௌகீக ஒழுக்கத்தினை, வாழ்க்கையில் முன்னேற போதிக்கும் போது கூறும் பாணி எப்படி இருக்கும்?
"மகனே உனது படிப்பை முடித்தபின்பு நீ படிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை, நீ கற்ற கல்வி உனக்கு நல்ல தொழிலைத் தேடித்தரும், தொழில் கிடைத்த பின்பு அதனை ஒழுங்காக செய்தால் பதவியுயர்வு தேடி வரும்,அப்போது நீ தொழிலைப்பற்றி சிந்திக்கத்தேவையில்லை,பதவி வந்தால் செல்வாக்கும், பணமும் தானக வரும், அவை வந்தால் உலக‌இன்பம் தானாக வரும், அந்த நிலையில் 
உலகவின்பம் உண்டெனில் கற்க வேண்டா
உலகவின்பம் உண்டெனில் தொழிலும் வேண்டா
உலகவின்பம் உண்டெனில் பதவியும் வேண்டா
உலகவின்பம் உண்டெனில் அனைத்தும் உண்டே"
ஏனெனில் நீ ஒழுங்காக கற்றாலே இவை அனைத்தும் உனக்கு ஒழுங்காக முறையாக  கிடைக்கும்"எனக் கூறுவது போல் சித்த வித்தை கற்கும் மாணவனிற்கு ஞானத்தந்தை அகஸ்தியர் கூறுகிறார்;"மகனே ஞானம் பெற உன் மனம் செம்மையாக வேண்டும், அதற்கு நீ முதலில் மந்திரம் செபிக்கவேண்டும், பின் உனது மூச்சினால் பிராணனை கட்டுப்படுத்தும் சாதனையினை ஒழுங்காக செய்யவேண்டும், பிராணபலம் நன்கு பெற்றபின்பு வாசியினை சூஷ்ம உடலிலுள்ள ஆதாரங்களில் நிறுத்துவதற்கு பழகவேண்டும், இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்த நிலையில் உனது மனம் செம்மையான நிலையின் பின் ,
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
ஏனெனில் அனைத்தும் உன் முயற்சியில்லாமலே தானாக நடக்கும் என்பதால்! என கூறியிருக்கிறார். 

இறுதியாக இந்த புரிதல்  இலக்கண ரீதியில்  சரியா பிழையா எனத்தெரியவில்லை, ஆனால் அனுபவ ரீதியில் சரியானதே, குருவைப்பணிந்து அவர் பாதத்தில் சமர்ப்பித்து இதனை பதிகிறேன். இந்த புரிதலால் பலன் இருப்பின் பயன் பெற்றுக்கொள்ளுங்கள்! ஓம் அகஸ்திய மாமகரிஷி குரவே நமஹ! சத் குரு பாதம் போற்றி!


No comments:

Post a Comment