Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, October 25, 2014

திருவாசகத்தில் சிவபுராணத்தில்

இது திருவாசகத்தில் சிவபுராணத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வைர வரிகள் .
இதில் வேகம் என்று மாணிக்க வாசகர் எதை குறிப்பிடுகிறார் , வேகமேன்பது நாம் நடை முறையில் குறிப்பிடும் தூல பொருளின் வேகமா ?அல்லது நாம் நடை முறையில் தினசரி செய்யும் காரியங்களில் இருக்கும் வேகம்மா ?அல்லது ராஜச நிலையில் இல்லாது தாமச நிலையில் வேகம் இல்லாது இருக்கச்சொல்கிறாரா ?
மேலும் இறைவனை வேகம் கெடுத்த வேந்தன் என்கிறார்
,ஆக வேகம் கெடுப்பது இறைவனின் சிறப்பா ?
அவர் காரியத்தில் வேகம் இல்லது அமைதியாக செய்ய வேண்டும் என்கிறாரா /
புலன்களின் வேகத்தைக் குறைக்கச் சொல்கிறாரா ?
அதைத்தான் கள்ள புலன்கள் என்று வேறு இடத்தில் கூறுகிறாரா ? அல்லது அந்தக் காரணங்களான புத்தி ,மனம் சித்தம் அகங்காரம் இவைகளின் வேகம் குறைய வேண்டும் என்கிறா ? கண்ணுக்கு தெரியாத புலன்களின் வேகத்தை குறைக்கச் சொல்கிறாரா ?
தூல புலன்களின் வேகத்தை குறைக்கச் சொல்கிறாரா ?
ஆனால் கண்ணுக்கு தெரியாத புலன்களின் வேகத்தை குறைத்தாலே ,புறப் புலன்களின்
வேகம் தானே குறைத்துவிடும் !
எனவே மனோ வேகத்தை குறைத்து அல்லது அகற்றி என்னை ஆட்கொண்ட இறைவா என்கிறார்
என்றுதான் கொள்ளவேண்டும் . மனம் தான் ஒளியைவிட வேகம் ஆயிற்றே ஒளியின் வேகம் 1,86,000 miles/sec என்றல் மனம் அதைவிட வேகமாக தான் நினைக்கும் பொருளை சென்று பற்றும் ஆற்றல் உடையது ஆயிற்றே ?
அந்த மனதின் வேகத்தை கெடுப்பது என்றால் என்ன ?
இந்த குரங்கு மனம் அங்கும் இங்கும் சென்று எதையும் பற்ற ஒரு எண்ணம் வேண்டும் .
இந்த உள்ளத்தில் எண்ணம் என்னும் கொத்திப்பு ஓயாமல் பொங்கி வருகிறது .
எண்ணம் வரும் வேகம் தான் அதன் கொதிப்பு,
புசு புசு என எண்ணங்கள் கிளைத்து வரும் வேகம் இருக்கிறதே ! அப்பப்பா !அந்த கொதிப்பை பொறுத்தே
எண்ணம் வேகம் வேகம் ஆக முளைத்து வருகிறது .
எண்ணங்களை நிறைவேற்ற பிறவிகளும் பெரிகி வருகிறாது . இத்தகைய எண்ணங்களை ஓயாமல் உண்டாக்கும் கொத்திப்ப்தான் என்ன ? அதை உண்டாக்குவது எது ?
அந்தக் கொதிப்பை வேகத்தை உண்டாக்குவது ஆசை எனும் தீதான் !
எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசைதான் .ஆகையால் ஆசையையே வேகம் எனலாம் ! மனதில் ஆசை என்னும் விருத்தி இருந்தால் பந்த பாசம் என்னும் அழுக்கு உண்டாகும்
ஆசை அகன்றால் மனத்திற்கு மூலப் பொருள் ஆன ஆத்ம தர்சினம் கிடைக்கும்
இந்த ஆசைக்கு இருப்பிடம் அஞானம் .
இந்த அஞானம் அகன்றுடன் ஆசை அகன்று விடுகிறது .
அது அத்தனை சுலபமா ? அந்த அஞானம் எப்படி அகலும் ?
இறைவனது அருள் கிடைத்ததும் அஞானம் அகலுகிறது ?
அது என்ன ஞானம் ? அதை அருளும் இறைவன் எங்கே இருக்கிறார் ?
இதை யாரிடம் கேட்ப்பது ?
வீட்டில் உள்ளவரில் யார் வயதில் மூத்தவரோ அவர் கூறியததான் நாம் உண்மை சரி என்று எடுத்து

கொள்ளவோம் .அப்படியே நமது பண்டைய முதுசெம் உபநிஷங்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம் .
*ஹ்ர்தி ஹ்யேஷ் ஆத்மா !* இந்த ஆத்மாவானது ஹிர்தயத்தில் வசிக்கிறது என்கிறது பிரச்நோபதிஷதம் 3-6
*யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வியோமன் !
ஸ்மாஸ்னுதே ஸாவான் கர்மான் ஸ !*
பரம ஆகாசமாகிய ஹிர்தய குகையில் வீற்றுஇருக்கும்
பிருமத்தை யார் அறிகின்றானோ அவன் ஆசைகள் அனைத்தையும் நிறைவேறப் பெற்றவன் ஆகிறார் என்கிறது
தைத்திரீயோபநிஷாதம் 2-1 கூறுகிறது .
அதாவது வேகத்தை அடக்க எண்ணத்தை அடக்க வேண்டும் . எண்ணங்களின் கொதிப்பை அடக்க ஆசையை அடக்க வேண்டும் ஆசையை அடக்க அஞானம் போகவேண்டும்
அஞானம் போக ஒரே வழி ஞானம் வரவேண்டும் . ஒளி வந்தால் தான் இருள் விலகும் ! வேறு வழி இல்லை .
ஞானம் வர இறைவன் அருள் வேண்டும் அந்த இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்தில் இருக்கிறான் .
அவன் அங்கே இருக்கிறான் என்பதை அந்த ஞானத்தை அறிந்த உடனே அவன் ஆசைகளுக்கு அப்பால் பட்டவன் ஆகிறான் . அவன் வேகம் தானே குறைகிறது ! ஆழ்ந்த ஒரு அமைதி அவனை ஆட்கொள்கிறது ஆனால் அறிவது என்பது பூரணமாக உணர்தலே ! சும்மா அரை குறை எல்லாம் அறிதல் ஆகாது .அறிந்துடனே அது வயமாதல் நடைபெறுகிறது .

இது வேகம் கெடுக்கும் வழி என மாணிக்க வாசகர் கூறுகிறார் . ஆனால் இந்தக் கூற்றை அப்படியே ஒப்புக் கொள்லாதவர்க்கு இதில் சந்தேகம் உடையவர்களுக்கு
நவீன விஞானம் மூளைப் பற்றி விளக்கும் போது என்ன கூறுகிறது என்று பார்ப்போம் .அது நமது முளை நான்கு நிலைகளில் வேலை செய்வதாக குறிப்பிடுகிறது .
நமது மூளையின் முழு வேலையே அது விழிப்புணர்வில் இருப்பது தான் அந்த விழிப்புணர்வு அல்லது பிரக்ஞையின் மட்டங்கள் நான்காகப் பிரிக்கப்படுகிறது. இந்த வெவ்வேறு பிரக்ஞையின் மட்டங்களில் மூளை அலைகளின் இயக்கம் வெவ்வேறு அளவுகளில் உள்ளது. மேல் பரப்பில் உள்ள பிரக்ஞை அல்லது விழித்திருக்கும் போது இருக்கும் பிரக்ஞை, பீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. இந்த பீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 14 முதல் 21 சைக்கிள் என்ற அளவில் உள்ளது. அடுத்து ஆழ்மன பிரக்ஞையின் போது அதாவது கனவு நிலையில் உள்ள பிரக்ஞையின் போது உள்ள நிலை ஆல்பா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆல்பா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 7 முதல் 14 சைக்கிள் என்ற அளவிள் உள்ளது.
அடுத்து ஹிப்னோதெராபி வேலை செய்யும் நிலை அல்லது யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும் நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த தீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.
இறுதியாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பிரக்ஞை நிலை டெல்டா மட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த டெல்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு
1.5 முதல் 4 சைக்கிள் என்ற அளவில் உள்ளது. மூளை முழுதுமாக இயங்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள் பீட்டா நிலையிலிருந்து மிக சுலபமாக ஆல்பா மட்டத்திற்கும் பிறகு தீட்டா மட்டத்திற்கும் நம்மை ஏற்றி விடுகிறது. இதைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் தீட்டா நிலையை எய்துவதற்காக முழு முயற்சியை எடுத்து வெற்றிபெறுவோம். தியானம் செய்யும் யோகிகள் மிக சுலபமாக அதி வேகத்தில் டெல்டா நிலையை அடைவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. எனவே யோகம் ,தியானம் என்பதெலாம் நமது மூளையின் திறனை வேலை செய்யும் நிலை அல்லது
யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும் நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில் கொண்டு வருவதற்காக செய்யும் முயற்சிகளே . இதிலும் நாம் வேகத்தை குறைப்பதற்கே முயற்சி செய்கிறோம் . எனவே வேகம் கெடுவது நமது ஆன்மீக பயணத்தில் ஒரு படி முன் செல்வது தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மட்டத்தில் வேலை செய்கிறோம் ,அந்ததந்த மட்டத்திற்கு தகுந்த படி அதற்க்கு ஒத்த படி ஒரே உண்மையை ,புரியும் படி அவரவர் நிலைக்கு
தகுந்ததா படி நமது பண்டைய ஞானிகள் விளக்கங்கள் கூறி வழி நடத்து கிறார்கள் . ஆயிராம் ஆயிரம் ஆண்டுகளாக நமது ஞானிகள் நமது பரிணாம நிலை மனித தோற்றத்தோடு
மட்டும் முடியவதில்லை என்பதை புரிந்து கொண்டு ,நமது அடுத்த பரிணாம நிலைக்க்கு மனித இனத்தை கொண்டு போக ஓயாமல் உழைத்து வந்துள்ளனர் .இது இன்றும் வாழையடி வாழையாக தொடர்கிறது . இந்தியாவில் கும்ப மேளாவில் கூடும் சாதுக்கள் ,சாதகர்கள் எண்ணிக்கை
ஒருக்கோடிக்கு மேல் . அதாவது நமது மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ஆன்மீகத்தொண்டில் தங்களை ஈடு படுத்தி மக்களை மேம்படுத்த , மனித குலத்தை ஒரு படி மேலே கொண்டுபோக ,மனிதனை தேவனாக்க
உழைத்து வருகிறார்கள் . இது சாதாரணக் காரியமா ?
வேறு எங்காவது இது சாத்தியமா ? சும்மா இருப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லைங்க ! 'வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !


No comments:

Post a Comment