Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, October 25, 2014

ஓம் என்றால் என்ன?

ஓம் என்றால் என்ன?
ஓ-காரத்திலேயே ம-காரமும் சுழி மேல் உட்கார்ந்து, பார்க்கவே மிக அழகா இருக்கும்!ஓம் என்பது தத்துவம்! குறியீடு! ஓம் என்றால் என்ன? ஓம் என்ப தன் மிக சுருக்கமான/நுட்பமான பொருள் = "உயிர்களுக்கும் இறைவனுக்கும் உறவு! இந்த உயிர்களே வேணாம்"-ன்னு நினைத்தாலும் பிரிக்க முடியாத உறவு! * உயிர்கள், "கடவுளே இல்லை"-ன்னு முழங் கினாலும் பிரிக்க முடியாத உறவு!* அந்த உறவை உறுதிப்படுத்துவதே இந்த "ஓம்"!"உந்தன்னோடு + உறவேல் + நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது" என்று தெய்வத் தமிழ் ஆண்டாள், உந்தன்னோடு + உறவேல் + நமக்கு = அ + உ + ம் = ஓம்! அ, உ, ம் என்று மூன்றெழுத்துக்கள் கொண்டது போல் இருப்பினும், ஓம் என்பது ஓரெழுத்து தான் அ = இறைவன் ("அ"கர முதல எழுத்தெல்லாம்! அவனைக் குறிப்பதெல்லாம் "அ"-காரமாய்த் தான் இருக்கும்)* ம = நாம் (எம், உம், நம், நாம் என்று நம்மைக் குறிப்பதெல்லாம் "ம"-காரமாய்த் தான் தொக்கி நிற்கும்) அந்த "அ"-வையும், இந்த "ம"-வையும் எப்படிச் சேர்ப்பது? - "உ" கொண்டு சேர்க்கணும்! "உ"றவைக் கொண்டு சேர்க்கணும்!* உ = உறவு! "அ"கார-"ம"காரத்தை இணைக்கும் உறவு! ஒவ்வொன்னாக் கூட்டிப் பாருங்க! உந்தன்னோடு = அ,உறவேல் = உ,,நமக்கு = ம்,,அ + உ + ம் = ஓம்!,,அதான் ஆண்டாள், இதை மட்டும் அப்படி அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறாள்! உந்தன் னோடு + உறவேல்+நமக்கு என்பது ஓங்காரம்/பிரணவம் ஆச்சே! அந்தப் பிரணவத்தை இறைவனால் கூட ஒழிக்க ஒழியாதே!குறையொன்றுமில்லாத கோவிந்தா, உந்தன்னோடு+உறவேல்+நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது! * அ = பரமாத்மா,,* உ = உறவு,,* ம் = ஜீவாத்மா"உ" என்றால் உறவு .ஓம் தோன்றியது எப்படி? ஓம்-ன்னா, அ-உ-ம் = இறைவன்-உறவு-உயிர்கள்-ன்னு ஓம்-ஓங்காரம்-பிரணவம், ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்!

சமணத்தில் "ஓம்":
"ஓம் நமஹ"-ன்னு சமணர்கள் நவ்கார் மந்திரத்தை இன்னிக்கும் சொல்றாங்க! "ஓம் ஏகாட்சர-பஞ்ச பரமேஷ்டி-நாம தீபம்" என்பதுசமணமந்திரம்!ஓம் = அ-அ-அ-உ-ம் என்று பிரித்துப் பொருள் சொல்லுவாய்ங்க சமணர்கள்! பஞ்ச பரமேஷ்டித் தத்துவம்-ன்னு இதுக்குப் பேரு! அதாச்சும்...அ = அரிஹந்த (மகாவீரர் ஈறான 24 தீர்த்தங்கரர்கள்),,அ = அசீரி (சித்தர்கள்),,அ = ஆச்சார்யர்,,உ = உபாத்தியாயர்,,ம் = முனி,,என்று "குரு வணக்கமாக மட்டும்" சமணர்கள் ஓங்காரத்தைக் கருதுவார்கள்!

பெளத்தத்தில் "ஓம்": வித்யா சடாக்ஷரி என்னும் முக்கியமான பெளத்த மந்திரம்! அதோடு, ஓம்-ஐ உடன் சேர்ப்பார்கள் பெளத்தர்கள்! கிட்டத்தட்ட நம்ம சைவத்தின் பஞ்சாட்சரம் போலத் தான் இதுவும்!* நம சிவாய என்னும் திரு-ஐந்து-எழுத்தோடு, தனியாக "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்ப்பதைப் போலே...* மணி பத்மேஹூம் = ம + ணி + பத் + மே + ஹூம் என்னும் ஐந்து எழுத்தோடு, "ஓம்" என்பதைச் சேர்ப்பது பெளத்த வழக்கம்!போதிசத்வரை குறிப்பது தான் இந்த மணிபத்மேஹூம் = தாமரைத் திரு!இவரைச் சிந்திக்க "ஓம் மணிபத்மேஹூம்" என்னும் மந்திரம் உதவுகிறது! இப்படி "ஞான சொரூபமாக" தியானித்தால், களங்க உரு/மனம் நீங்கி, பரிசுத்தமான புத்த உரு/மனம் கிடைக்கும்! அதுக்குத் தான் இந்த "ஓம்"!இப்படி ஓங்காரத்தை "ஞான சொரூபமாக மட்டும்" காண்கிறார்கள் பெளத்தர்கள்! * சீனாவில் இந்தப் பெளத்த பிரணவ-த்தை "பிண்யின்" என்கிறார்கள்! அதன் எழுத்துரு

"சீக்கியத்தில் "ஓம்":இது, இந்து தர்ம அடிப்படையான உபநிடதங்களில் இருந்து வந்தது தான்! ஆனால் சமுதாயத்துக்காக அதைக் கொஞ்சம் மேம்படுத்தித் தருகிறது சீக்கியம்!"ஏக் ஓம்கார்" = "ஓம் என்பது ஒன்றே பொருள்!" - இது குரு நானக் அவர்களின் வாக்கு! இங்கு "ஏக்(ஒன்றே)" என்பது முக்கியமான சொல்!"ஒன்றேயான ஓம்-இல் இருந்து தான் பிரம்மா தோன்றினார்! ஓம்-ஐ தன் ஞானத்தில் நிறுத்தினார்! பின்பு அந்த ஓம்-ஐக் கொண்டே, உலகம்/உயிர்கள் எல்லாம் படைத் தார்! அதனால் எல்லாப் படைப்புக்கு மூலம் ஓம்!" - இவ்வாறு சீக்கிய நூல்கள் சொல்லும்!ஆனால் அதோடு நின்று விடா மல், எல்லா உயிர்களும் "ஒரே" மூலமான ஓம்-இல் தோன்றியதால், வேற்றுமை பாராட்டக் கூடாது! "ஒன்றே"-ன்னு இதைச் சீக்கியம் குறிக்கும்!வேற்றுமை பாராட்டக் கூடாது-ங்கிற பகுதியை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால், கிட்டத் தட்ட மாண்டூக்ய உபநிடதம், கடோபநிடதம் சொல்வது போலவே தான் இதுவும் இருக்கும்! இன்னிக்கும் குருத்வா ராக்கள் முகப்பில், சீக்கிய "ஓம்" எழுத்துருவை காணலாம்!                   


கிறித்துவத்தில் "ஓம்"ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார்! = இது வேதாகமத்தின் (பைபிள்) வரிகள்! "ஓம்" என்ற வார்த்தையாய் இருந்தார் என்று பைபிள் குறிப்பிடவில்லை! ஆனால் "வார்த்தையாய் இருத்தல்" என்பது கிட்டத்தட்ட ஓங்காரத் தத்துவம் தான்!ஆதியிலே வார்த்தையாய் இருத்தல் = ஆதியிலே ஒலியாய் இருத்தல் = ஆதியிலே நாதமாய் இருத்தல் = நாத விந்து கலாதீ நமோ நம - என்று அருணகிரியார் பாடும் அதே பிரணவப் பொருளே!
இந்து மதத்தில் "ஓம்":ஓம் என்பதே வேதம் தான்! ஓம் = வேதத்தின் ஆணி வேர்!ஓம் என்பது ஆதி சப்தம்! அனைத்து வேதங்களையும் சுருக்கினால், மிஞ்சுவது "ஓம்" மட்டுமே!* படைப்புக்கு முன் இருப்பதும் = ஓம்! பிரளயத்துக்குப் பின் எஞ்சி ஒடுங்குவதும் = ஓம்!அதனால் தான் இன்னிக்கும் வேதம் ஓதும் போது, ஓம்-இல் தொடங்கி, ஓம்-இலேயே முடிப்பது வழக்கம்! அடிப்படை அ+உ+ம என்று இருந்தாலும், விளக்கம் மட்டும் பல! :) அ = உருவம், உ = அருவம், ம் = அருவுருவம் அ = ஆக்கம், உ = காத்தல், ம் = அழிப்பு,அ = பிரம்மா, உ = விஷ்ணு, ம் = சிவன் (புராணம்) என்றெல்லாம் பல மேல் விளக்கங்கள் மாண்டூக்ய, கடோ உபநிடதங்களில் உண்டு! ஆனால் அடிப்படை ஒன்று தான்! ஓம் = ஆதி மூலம்! Very Beginning!எழுத்துக்களில் அ-கரமாய் இருக்கிறேன்! சேனாதிபதிகளில் முருகனாய் இருக்கிறேன்! மாதங்களில் மார்கழியாய் இருக்கிறேன்! வேதங்களில் சாமமாய் இருக்கிறேன்!என்றெல்லாம் கீதையில் சொல்லிக் கொண்டே வருபவன்...அனைத்திலும் "ஓம்" என்னும் ஜீவப் பொருளாய் இருக்கிறேன் என்று உரைக்கின்றான்!சிலர் "ஓம்" என்ற சொல்லைக் கூட வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்களாம்! அது மந்திர ரகசியமாம்! அதனால் அதன் வேறு பெயர்களான பிரணவம், தாரக மந்திரம், உத்கீதா என்று தான் அதைக் குறிப்பார்கள்!ஆனால் கீதையிலும், கீதைக்குப் பிந்தைய காலத்திலும் இதெல்லாம் சற்று தளர்ந்து போயின! இஸ்லாமியரான கபீர் முதற்கொண்டு பலரும் "ஓம்" பற்றி அழகான விளக்கங்கள் எழுதி உள்ளனர்!

சைவ சித்தாந்தத்தில் ஓங்காரம்:ஓம் = அ + உ + ம + நாதம் + விந்து,,விந்து-ன்ன உடனே, கன்னா பின்னா-ன்னு எல்லாம் அர்த்தம் எடுத்துக்கக் கூடாது! பொறுமை! பொறுமை! :)அது என்னமோ பாவம், விரிசடைக் கடவுளான நம்ம சிவபெருமான் ராசி போலும்! லிங்கம், நாத விந்து-ன்னு பெயர்கள் எல்லாம் இந்தக் காலத்துக்கு விவகாரமாவே அமையுது! :)* அ = சிவம்! சலனமற்று இருப்பது! சிவனே-ன்னு கிடக்கிறேன்-ன்னு சொல்றோம்-ல?* உ = சக்தி! சக்தியின் உந்துதலால் சலனம் பெறுவது!* ம = மாயை! அதாச்சும் சலனமற்று இருந்த பொருள் இப்போ சலனம் பெறுவது!* நாதம் = இந்தச் சலனத்தால் ஒலி உண்டாக,
* விந்து = அதனால் தோற்றம் ஆரம்பிக்கிறது!இதுவே நாத-விந்து-கலாதீ! ஆதியிலே தேவன் "ஓம்" எனும் நாதமாய் நின்றுஉலகைத்துவக்கினான்!ஓம் என்னும் ஓங்காரம் ஒரே மொழி தான்! (ஒப்பு நோக்குக: வடமொழி ஏகாட்சரம், சீக்கிய ஏக்-ஓம்கார்)!ஓம் என்பதற்குள் உருவமும் இருக்கு! அருவமும் இருக்கு!ஓம் என்பதற்குள் பல பேதம் இருப்பது போலத் தெரியலாம்!ஆனால் அது ஒன்றா கும் போது முக்தி சித்திக்கும்! ஒரே "ஞான பரமா"-ல்ல இருக்கு? சீவனுக்கும் "ஓம்" தான் ரூபம்! சிவனுக்கும் "ஓம்" தான் ரூபம்! இதை மட்டும் உணர்ந்தால் சீவன் = சிவன் ஆகி விடும்!சீவன்-சிவன், போதம்"(ஞானம்) கொடுப்பவன்-ன்னு சொல்லி இருக்கலாம்! "போகம்"(இன்பம்) கொடுப்பவன்-ன்னு ஏன் சொல்றாரு?எல்லா உயிர்களுக்கும், போகம்(இன்பம்)-ன்னா என்ன?-ன்னு "தானாவே" புரியும்! "குரு வணக்கம்", "ஞான சொரூபம்"-ன்னே ஓங்காரத்தைப் பற்றிப் பேசுகின்றன!பலவற்றிலும் "ஞான பரம்" தான் அதிகமா இருக்கே தவிர...கொஞ்சம் எளிமையா "எல்லா மக்களுக்கும் ஓங்காரத்தால் என்ன பயன்?" என்பதை அவ்வளவு வெளிப்படையாகப் பேசவில்லை!* ஓங்காரம் - அது ரகசியப் பொருள் - ஓங்காரம் - அது மந்திரம் - கிழக்கு பார்த்து உட்கார்ந்து, ஆச்சாரமா, நியமமா ஜபம் பண்ணனும் என்பார்கள் சிலர்!ஓங்காரம் - அது மந்திரப் பொருளாய் இருப்பதால் - அதை முறையாக ஆசிரியரிடம் வாங்கி, முழுக் கவனமாக (Total Concentration) சொல்ல வேண்டும் என்பார்கள் சிலர்!இது முற்றிலும் உண்மை தான்! முழுக் கவனம் தேவை தான்! - ஆனால் அது யோகப் பயிற்சியில் மட்டுமே! மந்திரமாகச் சொல்லும் போது மட்டுமே!மற்ற நேரங்களில் மந்திரமாக இல்லாமல், பொதுவான பொருளாகச் சொல்லலாமே! தவறில்லையே!அ,உ,ம என்று ஆகி, அப்புறம் "ஓம்" ஆனது உமையன்னைக்கு மட்டும் தானா? ஓம் = அ + உ + ம், * அ = "அ"-வன்! அகர முதல இறைவன்!,* ம் = நா-"ம்"இந்த ரெண்டு பேருக்கும் என்ன கனெக்ஷன்? "அ"-வை, "ம்" அடைவது எப்படி?* உ = உறவால் அடைய முடியும்!உ-காரோ = அனன்யார்க நியம இதி சம்பந்த மனயோஹோ என்று இதை விளக்கும் ஸ்காந்த சுலோகம்! அனன்யார்க சம்பந்தம்-ன்னா என்ன? அழகு தமிழில் சொல்லணும்னா = "உறவேல்"!இந்த ஜீவன் இன்னொருத்தருக்கு சம்பந்தப் பட்டவன் அல்ல! பரமாத்மாவுக்கு மட்டுமே சம்பந்தப் பட்டவன்! அது தான் உ-காரம்! அதுவே உற"வே"ல்! இங்கிட்டு "ஏ"-காரம் மிகவும் முக்கியம்!பரமாத்மாவுக்"கே" உரியவன் ஜீவன்!* ஜீவனுக்"கே"சரண்யன்பரமாத்மா!* இப்படிச் சரண்யனாய் இருக்கக் கூடிய அவனை, இவன், சரணம் அடையற"தே" சம்பந்தம்! = பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றை பற்றுக பற்று விடற்கு!இவன் இன்னொருத்தரைப் பற்ற வேண்டியவன் அல்ல!இவன் இன்னொருத்தருக்குச் சொந்தமானவன் அல்ல!அவன் ஒருவனுக்கே சொந்தமானவன்! - அப்படின்னு நிரூபிக்கக் கூடியதான உ-காரத்தை நடுவில் சேர்த்து விட்டால், ஓம் வந்து விடும்!* உந்தன்னோடு = "அ"வனோடு = "அ",* "உ"றவேல் = "உ",* நமக்கு = ந"ம்" = ம்,=> அ + உ + ம் = ஓம்!,உந்தன்னோடு + உறவேல் + நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது! இறைவா நீ தாராய், பறையேலோ ரெம்பாவாய்! - என்று ஓங்காரப் பொருளை, அத்தனை பேருக்கும் வெட்ட வெளிச்சம் ஆக்குகிறாள் கோதை!அ+உ+ம-வை ஒழிக்க ஒழியாது! அவனாலும் ஒழிக்க முடியாது! நம்மாலும் ஒழிக்க முடியாது!,* "அ"-வுக்கு ம! "ம"-வுக்கு அ! இரண்டுக்கும் "உ" = உறவு!அவனுக்கு நாம்! நமக்கு அவன்! = இதுவே நம் DNA! இதுவே நம் ஓங்காரம்! இதுவே நம் பிரணவப் பொருள்!,அறி-வோம்! அரி ஓம்! ஓம்! இதுவே ஓங்காரம் (எ) பிரணவத்தின் எளிமையான பொருள்!நம்மில் பல பேர் அன்றாட வாழ்வில் "ஓம்"-ன்னு சொல்லுறோம்! தியானம், யோகா, பாட்டு, நடனம், உரக்கக் கத்தல், மெல்லிய முணுமுணுத்தல்-ன்னு பல வகையாக "ஓம்" என்பதைக் கையாள்கிறோம்! இனி "ஓம்"-ன்னு சொல்லும் போதெல்லாம் வெறுமனே உச்சரிக்காது, பொருளோடு உச்சரிக்கப் பழகுவோம்!,"ஜீவாத்மா ஆகிய நான், பரமாத்மாவுக்கு மட்டுமே உரியவன்" - அப்படிங்கற ஞானத்தோடே பிரணவத்தை ஜபிக்கணும்! அனுசந்தானம் பண்ணனும்!ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று இனி மெல்லிதாக ஜபிக்கும் போதோ, உச்சரிக்கும்போதோ ..மனசுக்குள்ளே இனி மேல் இதையும் மெல்லிதாக ஓட்டிக் கொள்ளுங்கள்! கீழே சொன்னவாறே இனி ஓம்-ன்னு சொல்லுங்க!,* உனக்கு நான் – ஓம்,* எனக்கு நீ – ஓம்,* ஓம்! ஓம்! ஓம்!
1. ஏன் எல்லா மந்திரத்தோடும் ஓம் ஓம்-ன்னு சேர்த்துச் சேர்த்துச் சொல்றாய்ங்க? மந்திரம், தந்திரம், தியானம், யோகா - ஏன் எல்லாத்திலும் ஓம் சேர்க்கணும்?
2. எல்லாருக்கும் பொதுவான ஒரு விஷயம் = பந்தத்தில் மாட்டிக் கொள்வது!
அனாதி காலமா நீ பந்தத்தில் மாட்டிக்கறே இல்லையா? இன்னும் அனந்த காலமும் மாட்டிக்கப் போறே! ஏன் மாட்டிக்கறே?-ன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ! தெரிஞ்சிக்கலாமா? "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
ஓம் – பொதுமந்திரம்‘ஓம்’ எனப்படும் பிரணவ மந்திரத்தை இந்துக்களில் அனைத்துப்  பிரிவினரும் பயன்படுத்துகின்றனர். இறைவனின் பெயர்களாகிய மந்திரங்களுக்கு முன் ‘ஓம்’ என்னும் ஓரெழுத்து மந்திரத்தையும் இறுதியில் போற்றி எனப்பொருள்படும் நம: என்ற சொல்லையும் இணைத்து, மந்திரத்தை உச்சரிப்பர். ஓம் ஸ்ரீ மாத்ரே நம:, ஓம் நாராயணாய நம: என்பன போலசிவநெறியில் தோத்திரம் சாத்திரம் ஆகியவற்றில் “ஓம்’ எனும் பிரணவம் ஆளப் பெற்றிருக்கும் முறைமையையும் அவற்றில் கூறப்படும் பொருளைச் சுட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம். ஓங்காரத்தின் பலபெயர்கள்பிரணவம், குடிலை, குண்டலி, பிரமம், பரம், சிவம், மாமாயை, சுத்தமாயை, நாதம், விந்து, வைந்தவம் எனப் பலபெயர்கள் ஓங்காரத்துக்குஉண்டு. பிரணவத்திற்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தத்தால் அவ்விரண்டும் பிரணவமென்றோ சிவசத்தி என்றோ ஒருபெயரால் வழங்கப்படும். பிரணவம் சத்தியின் பெயராலும் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் பெயர்களாவன: பரை(பரன்), வாகீசுவரி(வாகீசுவரன்), வித்தை, மாயை, பரவிந்து(பரநாதம்), பராசத்தி(பரசிவன்), மாமாயை, குண்டலி என்பன. பிரணவம் – பிரபஞ்ச வித்துஒருபொருள் தோன்ற மூன்று காரணங்கள் வேண்டும். அவை 1.முதற்காரணம்,(material cause) 2.நிமித்தகாரணம் அல்லது கருத்தா,. 3.துணைக்காரணம் அல்லது கருவி காரணம்.(instrumental cause) என்பன.குடத்திற்கு மண் முதற்காரணம்;. குயவன் நிமித்த காரணம்;. தண்டசக்கரம் துணைக்காரணம். அதுபோல, பிரபஞ்சத் தோற்றத்துக்கு மாயை முதற்காரணம்;. சிவம் நிமித்தகாரணம்;. சிவசத்தி துணைக் காரணம்.சிவம் முழுவதும் ஞானமே வடிவானது. சிவத்துடன் பிரிப்பின்றி இருப்பது சித்சத்தி. அது ஆற்றல் வடிவமானது. சிவத்துக்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தம் சூரியனுக்கும் சூரிய ஒளிக்கதிருக்கும் உள்ள சம்பந்தத்தைப் போன்றது. உலகுக்குச் சூரியனால் பயன் சூரியக்கதிர்களால் வருவதுபோல, உயிர்களுக்குச் சிவத்தால் வரும் நன்மை சிவசத்தியால் கிடைக்கிறது. சூரியன் ஒளியால் அறியப்படுதல்போல் சிவத்தைச் சிவசத்தியால் அறியப்படும்.சிவத்துக்குச் சிவசத்தி போல இன்னொரு சத்தியும் உண்டு. அதற்குப் பரிக்கிரக சத்தி அல்லது வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் சக்தி என்று பெயர். இந்தப் பரிக்கிரகசத்தி ஜடசத்தி. ஜடம் என்றால் அறிவற்றது என்று பொருள். சித்சக்தி X ஜடசத்தி.மாயை என்னும் பிரபஞ்ச முதற்காரணமாகிய ஜடசத்தி, சித்சத்தியைத் தாரகமாகக் கொண்டிருக்கும். சித்சத்தி சிவத்துடன், சூரியன் சூரியஒளி போலக் குணி குணசம்பந்தத்துடன் இருக்கும்.இந்த மாயையே பிரணவம். இது சித்சத்தியுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் இப்பிரணவம் சித்சத்தியின் வடிவம் என்றும் கூறப்படும்.மாயையும் சத்தியும் சம்பந்தப்பட்டு இருப்பதைக் காட்டும் ஒரு பெயர் மாயாசத்தி.சித்சத்தியை குணமாகவும் சிவத்தைக் குணியாகவும் கொள்ளும் ஒருவடிவத்தில் சித்சத்தியாகிய பிரணவம் சிவவடிவம் என்றும்கொள்ளப் படும்.சிறுமீன் கண்ணைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் அதன்  விதையில் நால்வகைபடையுடன் அரசர் தங்குவதற்கேற்ற நிழலை அளிக்கத் தக்க பெரிய விருட்சம் தோன்றும் ஆற்றல் அடங்கி இருப்பதுபோல , இந்த மாயையில் மகத்தான பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூலம் அடங்கியிருக்கும்.பிரமன் செய்த குற்றம்  சைவசித்தாந்தம் சத்காரிய வாதம் பேசும். அதாவது’ உள்ளதுதான் தோன்றும்; இல்லது தோன்றாது’. உள்ளது போகாது; இல்லது வாராது’ என்பது சத்காரிய வாதம். சத்காரியவாதத்தில் உள்ளபொருள் முற்றாக அழிந்து விடுவதில்லை. காரியமான பொருள் அழியும்போது அதன் முதற்காரணத்தில் அடங்கும். மண்குடம் அழியும்போது அதன் முதற்காரணமான மண்ணாகும். பொன்னால் ஆன நகை அழியும்போது அதன் முதற்காரணமான பொன்னாகும்.மாயா காரியமான பிரபஞ்சம் அதன் முதற்காரண மான(material cause) மாயையில் ஒடுங்கும். மீளத் தோன்றும்போது எதில் ஒடுங்கியதோ அதிலிருந்துதான் தோன்றும். பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவன்தான் அதனை ஒடுங்கியதிலிருந்து அதனை மீளத்தோற்று விப்பான்.  எனவே சங்கார காரணன் அதாவது பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவனே மீளத் தோற்றுவிக்கும் கருத்தாவு மாவன்.எனவே, படைத்தல் தொழிலைப் புரியும் பிரமன், அழித்தல் தொழிலின் பின் நிகழும் உண்மைகளை உணரான்.  முத்தொழிலுக்கும் கருத்தாவாகிய முதல்வன் சங்கார கருத்தா ஆகிய சிவனே ஆவன். அவனே பிரபஞ்சத்தைப் பிரணவமாகிய முதற்காரணத்தில் ஒடுக்குபவன். ஒடுங்கிய அந்தக் காரணத்திலிருந்து சங்கார கருத்தாவாகிய அவனே மீளத் தோற்றுவிப்பவன். அதனால் பிரணவத்தின் உண்மைப் பொருள் பிரமப் பெரும்பொருளாகிய சிவமே என்று அறியாமல், படைத்தல் தொழிலைச் செய்கின்ற தானே பிரணவப் பொருள் என்று அகந்தையில் கூறினான். அதனால் முருகனால் தண்டிக்க ப்பட்டான் என்பது புராணக் கதை.  புராணக் கதையைச் சாத்திரப் பின்னணியில் உணரவேண்டும்.  முடிவுரை: ஓங்காரத்தின் தோற்றமும் பொருளும் மேலோட்டமாக ஒருவாறு விளக்கப்பட்டது. இங்குக் கூறப்பட்டவை மிகக் குறைவே. ஞானசாத்திரங்களைக் கொண்டு விரிவாக விளக்கம் பெறல் வேண்டும். 

"நமோ" என்றால் என்ன? வரிக்கு வரி "நமோ, நமோ"-ன்னு சொல்றாங்களே! ஏன்? ஒரே "நம நம"-ன்னு கை அரிக்கும் சில பேருக்கு! அந்த "நம நம" தான் "நமோ நமோ"-வா? நம-ன்னா நமஸ்காரம் (அ) வணக்கம்-ன்னு சொல்லுவாய்ங்களே! "நம" என்பதன் மேலோட்டமான பொருள் "வணக்கம்" என்பது தான்! நம = போற்றி!
ஆனால் "நம" என்றால் வெறுமனே "போற்றி" என்று மட்டும் பொருள் அல்ல!
ஒரு குறிப்பிட்ட தன்னலமான காரியத்துக்கு, நம்ம பேரைச் சொல்லி, அர்ச்சனை செய்யறோம்-ல? அப்போது சொல்லப்படும் "நம" என்பது வேண்டுமானால் "போற்றி"-ன்னு இருக்கலாம்! என் தோழி ஆண்டாளும் இந்த அர்ச்சனை யைத் தமிழில் செய்து வைக்கிறாள்! நம = ந + ம = இல்லை + எனது!* இங்கு எதுவுமே எனதில்லை என்பது தான் = ந+ம!,* எல்லாமே உனது என்பது தான் = ந+ம!,ஓங்காரம் சேர்க்கும் போது மட்டுமே, நமக்கும்-இறைவனுக்குமான உறவு, அந்த மந்திரத்தில் ஏறுகிறது!,நம சிவாய என்று சொல்லும் போது, அவன் பேரை மட்டுமே சொல்கிறோம்! அது நாம சங்கீர்த்தனம்! திருப்பெயர்த் துதி!ஆனால் பேரைப் பாடும் அதே நேரத்தில், அவனுக்கும் நமக்குமான உறவை கெட்டிப் படுத்திக் கொள்ள வேணாமா?ஓம் = அ + உ + ம் = அவன்->உறவு->நாம் -ன்னு சென்ற பதிவுகளில் பார்த்தோம்!* ஓம் = எனக்கு நீ, உனக்கு நான் என்கிற உறவு!* இந்த உறவை, அவன் பேரோடு சேர்த்துச் சொல்லும் போதே, நாமும்-அவனும் இன்னும் இறுகுகிறோம்!* திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய,* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வஅப்பாவை விட புள்ளைக்கு ஒரு எழுத்து கூட! ஒரு படி பெருமையும் கூட! :)இந்த மந்திரங்களோடே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! ஆனால் ஒரே ஒரு மந்திரத்துக்கு மட்டுமே, இப்படி "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை!அந்த மந்திரத்துக்குள்ளேயே பிரிக்க முடியாதபடி, ஒன்னா ஒட்டிக்கிட்டு இருக்கு! அது என்னா மந்திரம்-ங்க?,ஓம் + ந மோ + நா ரா ய ணா ய,திரு எட்டெழுத்து, அஷ்டாட்சரம் என்று சொல்லப்படும் இந்த மந்திரத்துக்கு மட்டும் தான் இப்படி பிரிக்க முடியாத உறவு!
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
(1)----(2)--(3)----(4)--(5)--(6)--(7)--(8)என்பதில் ஓம்-ஐ தனியாக் கழட்டி விட்டு எண்ணிப் பாருங்க! Count & See?எட்டெழுத்து என்பது போய், ஏழு எழுத்து-ன்னு ஆயிரும்! :)அஷ்டாட்சரம் என்பது தானே மந்திரம்? சப்தாட்சரம்-ன்னு யாராச்சும் சொல்லுவாங்களா? :)ஆக, ஓங்காரத்தை, அஷ்டாட்சரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! பொருளே போயிரும்!ஓங்காரம் உள்ளேயே இருப்பதால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி! Or else meaningless! ஆனா மற்ற மந்திரங்களுக்கு இப்படி இல்லை!,* ச ர வ ண ப வ = 6! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவாறெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!,* ந ம சி வா ய = 5! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவைந்தெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!ஆனால் திரு எட்டெழுத்தில் மட்டுமே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கத் தேவையில்லாத படிக்கு, மந்திரத்தோடே ஒட்டிஉறவாடு கிறது! இயற்கையாகவே ஓங்காரம் என்னும் DNA அமைந்து விட்டது!அதான், "உன்றன்னோடு-உறவேல்-நமக்கு" என்று DNA மகத்துவம் காட்டுகிறாள் கோதை! அந்த DNA-வை "ஒழிக்க ஒழியாது" என்றும் பாடுகிறாள்!முப்பத்து மூவர் அமரர்க்கு, முன் சென்று, கப்பம் தவிர்க்கும் கலியே என்று இதன் தாத்பர்யம்!,அதாச்சும் நமக்கு ஒரு ஆபத்து-ன்னா யார் "முன்னாடி" ஓடி வருவாய்ங்க? = அம்மா தானே? "உறவு" தானே?ஏதோ யாகம், ஹோமம்-ன்னு பண்ணின புண்ணியத்துக்கு அந்தந்த அதி தேவதைகள், அக்னி, இந்திரன்-ன்னு வந்து யக்ஞ பலன் கொடுக்கலாம்!ஆனா முப்பத்து மூவரும் வருவதுக்கு முன்னாடியே, "முன் சென்று", கப்பம் தவிர்ப்பது எது? = கலி (ஒலி)! = ஓம் + ந மோ + நா ரா ய ணா ய!
குறிப்பு: இதனால் "நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களுக்கு எல்லாம் ஓங்கார உள்ளுறை இல்லை! அதனால் ஒரு படி கம்மி!" என்று ஒரு சிலர் வழக்கம் போல தப்பர்த்தம் எடுத்துக்க கூடாது! எப்பமே கணக்கு போட்டு, ஆன்மீகம் பண்ணும் மனப் போக்கு உள்ளவர்கள் தான் இப்படி எடுத்துக்கிடுவாங்க! :))அந்தந்த மந்திரத்துக்கு அந்தந்த பெருமையும் மகிமையும் கட்டாயம் உண்டு!"ஓங்காரம் என்னும் பிரிக்க முடியாத உறவைக் காட்ட வந்த மந்திரம் = திரு எட்டெழுத்து" என்று மட்டுமே கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!"ஓம்" என்று சொல்லி, அவன்-நாம் உறவை இறுக்கிக் கொண்டாகி விட்டது!* "நமோ" என்று சொன்னால், "எனது இல்லை" என்று வருகிறதே! = அப்படின்னா எது எனதில்லை? எது என்னுடையது?உடலோ பிரகருதிக்கு (matter) சொந்தமானது! பஞ்ச பூதமாகி விடும்!ஜீவனோ இறைவனுக்குச் சொந்தமானது!உடம்பும், உயிருமாத் தானே இருக்கே? உடம்பு பிரகருதிக்குச் சொந்தமான பொருள்! ஜீவன் பரமாத்மாவுக்குச் சொந்தமான பொருள்! மீதி என்ன இருக்கு? = பிருதா அகங்கரணம் பரம்!தான் என்ற நினைப்பு = அகங்காரம் தான் மீதி இருக்கு! அது மட்டும் தான் உனக்குச் சொந்தம்! :)எல்லாம் அற என்னை "இழந்த" நலம், சொல்லாய் முருகா! சுர பூபதியே!உடம்பும் உன்னுது கிடையாது! உயிரும் உன்னுது கிடையாது! மீதி இருக்குற "தான் என்கிற உணர்வு மட்டுமே உனக்குச் சொந்தம்! * நம என்றால் ந+ம = இல்லை + எனது!* எதுவும் எனதில்லை என்பது தான் நம!நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களில் எல்லாம் ஓங்காரத்துவம் இல்லை என்றும் சென்ற பதிவில் பார்த்தோம்!நம சிவாய என்பதில் எல்லாம் "நம"-ன்னு தானே இருக்கு! அப்புறம் எதுக்கு "நமோ"?எனது இல்லை = "நம" என்று சொன்னா போதாதா?* எதுக்கு "நமோ"-ன்னு, "ஓ" போடணும்? எதுக்கு நமோ! நமோ!-ன்னு சுமோ காரில் ஒரேயடியா பறக்கணும்? :) பல பிறவிகள், பிறவிச் சுழல்-ன்னு எல்லாம் சில பேரு தத்துவமா பேசுவாங்க!"புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்....பிறந்து இறந்து இளைத்தேன்" என்பார் மாணிக்கவாசகர்!அனாதி காலமாய் இந்தப் பந்தங்களில் மாட்டிக்கிட்டு இருக்கோம் அல்லவா?இன்னும் அனந்த காலமும் மாட்டிக்கப் போறோம்! :)ஆனா எதுனால மாட்டிக்கறோம்?-ன்னு மட்டும் கொஞ்சம் தெரிஞ்சிப்போம்!தெரிஞ்சிக் கிட்டோம்-ன்னா அது நம்மள விட்டுரும்!மாட்டிக்கிட்டாலும், ரொம்ப டார்ச்சர் கொடுக்காம விட்டுரும்! :எதுனால மாட்டிக்கறோம்-ன்னா....மம, மம, மம, மம, மம என்பதால் மாட்டிக்கறோம்! = எனது, எனது, எனது, எனது, எனது....இப்படி இந்த மம-மம = எனது-எனது, என்ற லிஸ்ட்டு ரொம்பவே நீளம்! இதுல ஒருத்தன் கூட விதி விலக்கு அல்ல! சன்னியாசி உட்பட! :)மூனு நாளைக்கு முன்னாடி பொண்டாட்டி கிட்ட கோச்சிக்கிட்டு போனாரு ஒரு சன்னியாசி! போன மூனாம் நாளே திரும்பி வந்தாரு! ஏன் போனீங்க, ஏன் வந்தீங்க-ன்னு அந்தம்மா கேட்டாக! வராண்டாவில் போன வார விகடன் இருக்கு பாரு! பக்கத்து வீட்டு பாண்டுரங்கன் ஓசி கேப்பான்! கொடுத்துறாத! அத சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்-ன்னு சொன்னாரு அந்தத் "துறவி"! :)இப்படி மம, மம-ன்னு மாரடிச்சிகறதாலேயே மாட்டிக் கொள்கிறோம்! அப்போ இந்த டார்ச்சர்-ல இருந்து தப்பிக்க என்ன வழி?* ந மம = நம! நம! நம!இல்லை எனது! இல்லை எனது! இல்லை எனது!-ன்னு சொல்லிட்டா நம்மள விட்டுரும்! = அதான் நமஹ! அதான் நம! இப்படி நம, நம, நம-ன்னு மனதறிய சொல்லுறது ரொம்ப கஷ்டம்! ஆனா வாயால சொல்லலாம்-ல? சொல்லிக்கிட்டே இருக்கலாம்-ல? சொல்லச் சொல்லக் கொஞ்சம் கொஞ்சமா ஓவர் அட்டாச்மென்ட் கொறையும்-ல? அதான் "ஓம் நமோ"! :)இதுக்கு, படாத பாடுபட்டு, இது என்னுடையது, இது என்னுடையது-ன்னு அபிமானப்பட்டு...அப்படி உணர்ந்து விட்டோமானால், அது தான் நமஹ! நம = எனதில்லை!,* ஓம் ந"ம" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!,* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! எல்லாம் நாராயணனுடையது!அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!,தாற்காலிகமாக உனக்கு எம்பெருமான் கொடுத்தது! பொறந்த போது எப்படி வந்தாயோ, அப்படித் தான் பொசுங்கும் போது போகப் போகிறோம் என்றாலும் கூட...தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!எனவே தாற்காலிகத்தை ஓவராக் கட்டிக் கொண்டு அழாமல், அவ்வப்போது, நம-நம-நம-ன்னு வாயால் ஆச்சும் சொல்லிக்கிட்டு இருந்தா...அது ரொம்ப டார்ச்சர் கொடுக்காம நம்மள விட்டுரும்! :)* உடல் (தேகம்) = பிரகிருதி (Matter)க்குச் சொந்தமானது!* உயிர் (ஆத்மா) = பரமாத்மாவுக்குச் சொந்தமானது!* அப்போ எனக்கு என்ன சொந்தம்? = "நான்" என்கிற "வெற்று" உணர்வு மட்டுமே சொந்தம்! :)  பிருதா அகங்கரணம் பரம்! "நான்" என்ற அகங்காரம் மட்டும் தான் மீதி இருக்கு! அந்த "நான்" எம்பெருமானுக்கு உரியவன்!நான் சேஷன்! எம்பெருமான் சேஷி! "நான்" என்பது உடல் அல்ல! உடலும் அவருடையது! = அசித்து! "நான்" என்பது ஆத்மா/உயிர்! உயிரும் அவருடையது! = சித்து! இப்படி எதுவுமே என்னுடையது இல்லை! அவருடையது! = ஈச்வரன்!இப்படி எல்லாமே அவருடையதாக இருக்க, "நான்" அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை! நான் = "நானே" இல்லை!நான் = "அடியேன்"! நான் = "நானே" இல்லை!,நான் = "அடியேன்"!

1. "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!,ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம்,அவனுக்கு உறவாக நான் இருக்கேன்! எனக்கு உறவாக அவன் இருக்கான்!
2. "நமோ" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!,நமோ = எனதில்லை! நான் உட்பட எல்லாமே அவனுடையது!,எல்லாமே அவனுடையதாக இருக்க, இங்கே "நான்"-ன்னு அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை.

No comments:

Post a Comment