Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, October 27, 2014

திருஅருட்பிரகாச வள்ளலார்

ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!  திருஅருட்பிரகாச வள்ளலார்!!!
மூச்சு பயன்கள்: செய்முறை: விரிப்பில் மல்லாந்து படுக்கவும். பாதங்கள் இரண்டும் தொடாமல் அகண்டிருக்கட்டும். கைகள் இரண்டையும் உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு உடலோடு ஒட்டி வையுங்கள். பாதங்கள், முழங்காலின் ஆடுசதை, புறங்கைகள், முழங்கைகள், தோள்பட்டை பகுதி, பிடரி ஆகியவை தரையோடு படிந்த நிலையில் இருப்பது அவசியம்.  இயல்பான சுவாசத்தில் மனதை செலுத்தவும். கண்களை மூடி அகமுகமாக உடலை உற்று நோக்குங்கள். இந்த நிலையில் உடல் பாரமற்றதாகிறது. எடையை தரை தாங்குவதால், உடலின் அத்தனை உள்-வெளி உறுப்புகளுக்கும் பூரண ஓய்வு கிட்டுகிறது. அதற்குபிறகு, இடதுகால் கட்டை விரலில் தொடங்கி, ஒவ்வொரு பகுதியும் `சாந்தி பெறுவதாக' என்று சொல்லவும். அப்படியே உச்சந்தலை வரைக்கும் வாருங்கள். அதற்குபிறகு இரு புருவ மத்தியில், ஓரங்குல தீபம் எரிவதாக நினைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்து பின் மூச்சு ஓட்டத்தை கவனியுங்கள். தீபத்தின் சுடர் உள் சுவாசத்தோடு கரைந்து உடலெங்கும் ஒளி, தேஜஸ் பரவுவதாக, உங்களை நினைத்துக் கொள்ளவும். அதற்குபிறகு கை, கால்களை லேசாக அசைத்து கண்களை திறக்காமல் மெல்ல எழுந்து உட்காரவும். அந்த நிலையிலேயே 1 நிமிடம் அமரவும். பிறகு உள்ளங்கைகளை முகத்திற்கு முன்பாக நீட்டி உள்ளங்கைகளில் கண்களை திறக்கவும்.
பயன்கள்: புது உற்சாகமும், தெம்பும், சுறுசுறுப்பும் கிட்டும். உடல் ஓய்வுக்கு மட்டுமின்றி மன அமைதிக்கும் இந்த ஆசனம் உதவும்.
சக்கரங்கள்; சக்கரங்கள் என்பவை, நம் சூஷ்ம சரீரத்திலுள்ள சக்தி மையங்கள் ஆகும். மனித உடல், வெறும் ஸ்தூல சரீரம் மட்டும் அல்லாது. மனம், கர்மா, ஞானம் மற்றும் ஆனந்தம் போன்ற பல்வேறு அடுக்குத் தளங்களால் ஆனது. இவைகளை நம் நாட்டு ஞானிகள் "கோஷங்கள்" என்று அழைக்கிறார்கள். இந்தக் கோஷங்களுள் "பிராணமய கோஷம்" அல்லது "சக்தி கோஷம்" என்பது பல்வேறு சக்கரங்களையும், நாடிகளையும் (Energy Channels) கொண்டது. இந்த சக்கரங்கள் மற்றும் நாடிகள் வழியாக, உறங்கிக் கிடக்கும், "குண்டலினி" எனும் ஆன்மிக சக்தி பாயும் போது, அவை, ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தப் பிராணமய கோஷத்தின் வழியா பாயும் சக்தியானது. எல்லா கோஷங்களுக்கும் உணர்வுகளைத்தூண்டுவதால், நல்ல ஆரோக்கியமான தேகமும், மனமும் அடைய ஏதுவாகிறது. இதன் விளைவாக ஆனந்தமும், அமைதியும் ஏற்படுகின்றன.அந்தச் சக்கரங்களும், நாடிகளும் முறைகேடான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களாலும், மேலும், தவறான கண்ணோட்டங்கள் மற்றும் எதிர் மறையான கர்மாக்களின் சுமையாலும் பாதிப்படைகின்றன. எதிர் மறையான எண்ண அலைகள் ஒருவரின் வாழ்வில் எதிர் மறையான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. ஆகையால் சக்கரத் தியானம் என்பது, உடலின் சூஷ்மமான பகுதியை எழுச்சி அடையச் செய்வதோடு மட்டும் இல்லாமல், ஆனந்தமான, ஆரோக்கியமான, வாழ்விற்கு அவசியமான, மன ஆரோக்கியத்தை ஏற்படுத்தவும் உதவுகின்றது.சக்கரத்தியானம், மூன்று படிகளைக் கொண்டது. அதாவது சக்கரங்களின் தெய்வீக வடிவங்களை அதிர்வடையச் செய்யும்.தெய்வீக அஷ்ரங்களைச் சொல்லுதல் (மந்த்ரம்), மற்றும் சரியாக அமரும் விதம் (ஆஸனம்), கைகளின் விரல்களை வைத்துக் கொள்ளும் விதமும் (முத்திரை) முக்கியமானதே. கட்டை விரலின் அடிப்பாகத்தை ஆள் காட்டி விரலால் தொடுவது, ஒரு சிறந்த முத்திரை ஆகும். சித்தாசனத்தில் நல்ல வசதியாக அமர்ந்து கொண்டு, விரல்களை மேல் கூறிய முத்திரையில் வைத்துக் கொண்டு, உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு முழங்காலுக்கு அருகில் வைத்து, கண்களை மூடியவாறு, சக்கரங்களை உருவகித்துக் கொண்டு, அதற்கான பீஜமந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த உச்சாடனம், 7, 9 அல்லது 18 முறைகள் செய்யலாம். தினசரி சக்கரத்தியானம் செய்வதால் சக்கரங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. நம் மூளையின் பல பகுதிகள் ஊக்குவிக்கப்படுவதால், வாழ்வைப்பற்றி நமக்கு ஒரு முழுமையான கண்ணோட்டம் கிடைக்கிறது. குண்டலினி சக்தி, சக்கரங்களின் மூலம் பாய்வதால், சூஷ்ம சரீரத்திற்கு சக்தியூட்டுவதோடு மட்டுமல்லாமல், நேரடியாக ஸ்தூல சரீரத்திற்கும் சக்தி ஊட்டுகிறது.ஆனந்தமான மற்றும் ஆரோக்கியமான தனி மனிதனை உருவாக்குவதே குறிக்கோளாகக் கொண்ட எங்கள் தியான வகுப்புகளை நடத்தும் Golden Age Foundation, தங்களை ஹ்ருதயப் பூர்வமாக வரவேற்கிறது. தங்கள் வாழ்வு முன்னேற்றமடையவும், ஆனந்தமாக இருக்கவும், ஸ்ரீஅம்மா பகவானை வேண்டுகிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
1 – மூலாதாரம் அமைப்பு : நான்கு இதழ்கள் கொண்ட, சிவப்பு நிறத்தாமரை. கறுப்பு நிறலிங்கத்தை மூன்றரைச் சுற்றுக்கள் சுற்றப்பட்ட பொன்னிறகுண்டலினி சர்ப்பத்தை மையத்தில் கொண்டது.
இடம் : பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடையில்
மூலக்கூறு : பூமி
பலன்கள் : குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்தல், ஸ்திரத்தன்மையையும், உயிர் ஆற்றலையும், அதிகரிக்கச் செய்யும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : சிறு நீரகம், சிறு நீரகப்பை
பீஜமந்திரம் : லங்
2 - சுவாதிஷ்டானம்அமைப்பு : ஆறு இதழ்கள் கொண்ட ஆர்ஞ்சு நிறத்தாமரை, உள்ளே சாம்பல் நிற பிறைச் சந்திர வடிவைக் கொண்டது இந்தச் சக்கரம்.
இடம் : பிறப்புறுப்புக்கு மேல்
மூலக்கூறு : நீர்
பலன்கள் : சுயக்கட்டுப்பாட்டையும், நுண்ணுணர்வையும் அதிகரிகச் செய்யும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கர்ப்பப்பை, பிறப்புறுப்புக்கள், பெருங்குடல்
பீஜமந்திரம் : வங்
3 - மணிபூரகம்அமைப்பு : பத்து இதழ்கள் கொண்ட பிரகாசமான மஞ்சள் நிறத்தாமரை. நெருப்பு ஜ்வாலையை (ஜட்டராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம்.
இடம் : தொப்புள்
மூலக்கூறு : நெருப்பு
பலன்கள் : உடல் சக்தியையும், மிக்க ஆரோக்கியத்தையும் தீவிரப்படுத்தி விழிப்படையச் செய்கிறது.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : வயிறு, கல்லீரல், சிறுகுடல், மண்ணீரல்
பீஜமந்திரம் : ரங்
4 - அனாஹதம்அமைப்பு : பன்னிரண்டு தாமரை இதழ்கள் கொண்ட பச்சை நிறத்துடன் கூடிய இந்தச் சக்கரத்தின் மையத்தில் காணப்படும் அறுகோணவடிவத்தில் பிரகாசமாக ஒளிவீசும் பொன்னிற ஜோதியைக் கொண்டது.
இடம் : மார்பின் நடுவில்
மூலக்கூறு : காற்று
பலன்கள் : அன்பு, இரக்கம், உணர்வு, இவற்றின் மூலம் உறவுகள் சீராகும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : இதயம்
பீஜமந்திரம் : யங்
5 - விஷூத்திஅமைப்பு : பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர் நீலம் கொண்ட சக்கரமாகும்.
இடம் : தொண்டை
மூலக்கூறு : ஆகாயம்
பலன்கள் : சரணாகதியை வெளிக்கொணரும். மறைவான ஆத்மசக்தியின் பரிமாணத்தைத் திறக்கச் செய்யும். புனிதத்துவம் வளரும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : தொண்டை, நுரையீரல்
பீஜமந்திரம் : ஹங்
6 - ஆக்ஞாஅமைப்பு : இரண்டு தாமரை இதழ்கள் கொண்ட கருநீல நிறத்தையும், முறையே இதழின் வலது பக்கம் சுரியனையும், இதழின் இடது பக்கம் சந்திரனையும், நடுவில் நீல நிற லிங்கத்தையும் கொண்ட சக்கரமாகும்
இடம் : புருவ மத்தியில்
பலன்கள் : சூரிய சந்திர சக்திகளை ஒன்றுபடுத்தி, இந்த சக்கரத்தின் மீது தொடர்ந்து தியானம் செய்வது, ஞாபக சக்தியை அதிகப்படுத்தி, விழிப்புணர்வையும், ஒருமுகப்படுத்தும், தன்மையையும் மலர்ச்செய்யும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதி
பீஜமந்திரம் : ()... ... ம்...
7 - சகஸ்ராரம்அமைப்பு : ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்ட ஊதா நிறத்துடன் அடர் பொன்னிறம் கொண்ட ஜோதிர் லிங்கத்தை மையத்தில் கொண்டது.
இடம் : உச்சந்தலை
பலன்கள் : இந்தச் சக்கரம் நன்கு மலர்ந்தால், பிரபஞ்ச உணர்வுடன், முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : மூளை
பீஜமந்திரம் : ஓஹும் சத்யம்
சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கி மெய்வழி திறக்க திருஅருட்பிரகாச வள்ளலார் வழங்கும் பத்தும் ஒரு மூன்றாம் அருட்குரு மந்திரம்
1.
உச்சி வாசல் திறக்கும் பூரண மந்திரம்
என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம் (மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது (மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
2.
நெற்றிச் சுடர் விழி திறக்கும் சுயஞ்சுடரொளி மந்திரம்
என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம் (மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது (மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
3.
தொண்டையில் அருள் வாக்குப் பெட்டகந் திறக்கும் பெருவாழ்வு மந்திரம்
என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு (மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
4.
தொண்டையின் கீழ் அமுத கலசந் திறக்கும் ஆன்மநேய மந்திரம்
என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம்(ஆன்மநேய ஒருமை)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
5.
நடு மார்பில் இருதய வாய் திறக்கும் அன்பியல் மந்திரம்
என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
6.
மார்பின் கீழ் ஞானாமுத வாசி திறந்து மனந்தெளிவிக்கும் நிறையறிவு மந்திரம்
என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
7.
நாபிக் கமலந் திறக்கும் அருட்பெருவல்லப மந்திரம்
என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)                                                                                                               ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
8, 9.
நாபியின் கீழ் எப்போதும் புணர்ந்திருக்கும் அம்மையப்பனின் பரம இரகசியந் திறந்து அவ காமந் தணிக்கும் சிவ சக்தி மந்திரங்கள்
என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை(நாதம்)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி(விந்து)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி,தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
10.
முதுகடிக் குண்டலி நாகம் எழுப்பும் மகுடி நாதப் பெருநிலை மந்திரம்
என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
11.
கடவுட் கால்களை மனிதம் பதிக்க முழங்கால்களைத் திறக்கும் அருளாட்சி மந்திரம்
என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
12.
கடவுளின் பாத மலர்களை அன்னை பூமியில் மனிதம் பதிய வைக்கப் பாதங்களைத் திறக்கும் தன் ''(தன்னை) அறியும் அறிவு மந்திரம்
எங்கும் எதிலும் எப்போதும்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
13.
மனித உடம்பாம் மெய்யை உத்தமன் எழுந்தருளியிருக்கும் புனித தேவாலயமாகத் திறக்கும் மெய்வழிப் பிராண நாத மந்திரம்
நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
இவ்வாறு தலை முதல் பாதம் வரை உம் உடம்பாம் மெய்யில் வழி திறந்து தன் அருள் வெள்ளம் பாயும் ஊடகமாக்கி உம் உடம்பை மெய்யாகவே மெய்யாக்கும் வள்ளல் பிரானின் வாய்மையை இருதய பூர்வமாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு குரு மந்திர தாரணையில் எல்லாந் தழுவிய முழுமையாம் அன்பெனும் ஒருமையில் எப்போதும் ஊன்றி நின்று தயவாய் இருப்பீர்!
இவ்வாறு உச்சி முதல் பாதம் வரை உம் ஒவ்வொருவரையும் அருட்குரு மந்திரம் பத்தும் ஒரு மூன்றாம் தன் வெள்ளங்கியால் போர்த்திப் பெருந்தயவாய் இருந்து தன் ''யே(தன்னையே) உமக்குத் தந்துப் பேரின்பப் பெருவாழ்வில் உம்மை நிலைபெறச் செய்ய வள்ளல் பிரான் அளித்திருக்கும் புதிய ஏற்பாட்டைக் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!                                                                                                         
முதல் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே அமுதகலசத்தில் ஆன்மநேய ஒருமையாக விளங்கி(அருட்குரு மந்திரம் 4) கீழே சூரிய சக்கரத்தில் பேரறிவாக(அருட்குரு மந்திரம் 6) இயங்குகிறது
இரண்டாம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே விசுத்தியில் பெருவாழ்வாய் விளங்கி(அருட்குரு மந்திரம் 3) கீழே மணிபூரகத்தில் அருட்பேராற்றலாய்(அருட்குரு மந்திரம் 7) இயங்குகிறது
மூன்றாம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே ஆக்கினையில் சுயம்பிரகாசமய் விளங்கி(அருட்குரு மந்திரம் 2) கீழே சுவாதிட்டானத்தில் தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதியாய்(அருட்குரு மந்திரம் 8,9) இயங்குகிறது
நான்காம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே சஹஸ்ராரத்தில் பூரணத்துவமாய் விளங்கி(அருட்குரு மந்திரம் 1) கீழே மூலாதாரத்தில் கடவுட்தன்மையாய்(அருட்குரு மந்திரம் 10) இயங்குகிறது
ஐந்தாம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே துரியத்தில்(தலைக்கு மேல் நிராதாரக் குண்டலி வட்டத்தில்) பரவிந்தாய் விளங்கி(தயவாய்) கீழே முழங்கால்களில் அருளாட்சியாய்(அருட்குரு மந்திரம் 11) இயங்குகிறது
ஆறாம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே துரியாதீதத்தில்(தலைக்கு மேல் நிராதார ஓங்கார வட்டத்தில்) பரநாதமாய் விளங்கி(இரு) கீழே பாதங்களில் நானே நானெனும் பூரணமாய்(அருட்குரு மந்திரம் 12) இயங்குகிறது
ஏழாம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(நானே வழி) மேலே பரலோக சத்தியமாய் விளங்கி கீழே அன்னை பூமியில் ஜீவனாய் இருந்து இயங்குகிறது(அருட்குரு மந்திரம் 13)      

No comments:

Post a Comment