Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, October 25, 2014

போதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்

நோக்கு வர்மம் என்ன என்பது பற்றி தெரியாதவர்கள் இன்றைய திகதியில் இருக்க முடியாது, எனினும் நோக்கு வர்மம் என்பது தனது பார்வையினால் எதிரிகளைத் தாக்கும் ஒரு போர்க்கலையாக அறியப்பட்டுள்ளது. அதில் பல உபபிரிவுகளும் பயன்பாடுகளும் இருக்கின்றது. அதன் இரகசியம் என்ன? எவ்வாறு வேலைசெய்கிறது என்பது பற்றித்தான் இனிவரும் பதிவுகளில் பார்க்கப்போகிறோம்.

நோக்குவர்மத்தின் திறவுகோல் எங்கு உள்ளது? போதிதர்மரின் வரலாற்றுக் குறிப்புகளிலும் சித்தர்களது யோகவித்தையினையும் இணைத்து ஒப்பீட்டு நோக்குவதன் மூலம் அறிய முடியும்.
முதலில் போதிதர்மரது கதையில் அவரது சாதனை பற்றிய குறிப்பு:
போதிதர்மர் தென்னிந்தியாவிலிருந்து முதலாவதாக தென் சீனபகுதியை அடைகிறார். அங்கு அவரது போதனைகள் வரவேற்பு அற்றுப் போகிறது. அதனால் அங்கிருந்து அவர் வட சீனப்பகுதி இரசதானியான "வேயி" இனை அடைந்து அங்குள்ள ஷவலின் ஆசிரமத்தினை அடைகிறார். ஆனால் வேற்று நாட்டவரான இவரை அந்த ஆலயத்தினுள் செல்ல விடாமல் தடுக்கின்றனர். அதனால் அருகில் உள்ள குகையினுள் சென்று அந்த குகையின் சுவரினை கண்ணினால் உற்று நோக்கியவண்ணம் ஒன்பது வருடம் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார். இந்த பயிற்சியின் போது கண்மூடுவதனைத் தவிர்ப்பதற்காக தனது கண்ணிமைகளை வெட்டி எறிந்ததாகவும் அதன் அது நிலத்தின் விழுந்தபோது உருவான தாவரம் தான "தேயிலை" எனவும் அவரது வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதன் உண்மைத்தன்மை தேயிலை மனதை விழிப்புணர்வில் வைத்திருக்கும் என்பதுதான். அதனால் தான் ஜென் புத்த கலாச்சாரத்தில் தேனீர் விருந்து ஒரு முக்கியமான ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதன் பின் அவர் ஷாவலின் ஆலயத்தினரால் வரவேற்கப்பட்டார், அங்கு சென்ற அவர் ஷாவலின் ஆலயத் துறவிகளில் உடல் வலுவற்று இருப்பது கண்டு அவர்களுக்கு உடலிற்கான புறப்பயிற்சிகளும், மனதிற்கான அகப்பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தார். 
சரி நோக்கு வர்மத்திற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?
நல்ல கேள்வி, போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார் என்பது பற்றிய குறிப்புத்தான் இந்தக்கதை. அதாவது குகை சுவரை உற்று நோக்கியவண்ணம் ஒன்பது ஆண்டுகள் இருந்தார் என்பதுதில் அது குறிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பயிற்சியின் இரகசியம் என்ன வென்பது பற்றி அறிய வேண்டுமானால் நாம் திரும்பவும் இந்திய ரிஷிகளிடம் வரவேண்டும். ஆம் யோகக்கலையின் அடிப்படை தெரியவேண்டும்.
அஷ்டாங்க யோகத்தின் ஆறாவது படியான "தாரணை" தெரியவேண்டும்.  அட்டாங்க யோகத்தின் இறுதி நிலையான சமாதியினை அடைவதற்கு தாரணைப்பயிற்சி மூலம் சாதனை பயின்று புத்த நிலையினை அடைந்தார் என்பது தான் இந்தக்கதையின் உண்மை விளக்கம். சமாதி எனும் இந்த புத்த நிலை சித்தியினைப் பெறுவதற்காகத்தான் ஒன்பது வருடங்கள் போதிதர்மர் குகைச் சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம் சாதனையிலிருந்தார்.  திருமூலரது திருமந்திரம், போகர் 7000, அகஸ்தியர் பாடல்கள், பதஞ்சலி முனிவரது யோக சூத்திரம், ஔவையாரின் ஞானக்குறள் என்பவற்றில் தாரணையைப் பற்றி குறிப்புகள் உள்ள‌ன.
தாரணை என்பது பதஞ்சலியாரின் உபதேசப்படி "கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்று இருக்கும் சித்தம் (மனம் அல்ல) தாரணை" எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கு மூலமான சித்த விருத்திகளை உருவாக்கும் சித்தத்தினை கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் செயல் முறைதான் தாரணை எனப்படும்.
நோக்கு வர்மத்தின் அடிப்படை யோகத்தின் ஆறாவது பகுதியான "தாரணை", தாரணா சித்தியின் ஒரு பிரயோகம்தான் நோக்குவர்மமே ஒழிய அது ஒரு தனியாக பயிலவேண்டிய கலை அல்ல, யோகத்தின் படி நிலையில் அடையப்படுகின்ற ஒரு உப அன்பளிப்புதான் (compliment) நோக்குவர்மம். ஆனால் பொதுவாக யோகம் பழகுபவர்கள் இயமம், நியமம், பிரத்தியாகாரம் பழகுவதால் இந்த சித்தியினை மற்றவரை தாக்குவதற்கு உபயோகிப்பதில்லை. ஆனால் சித்தர்கள் ஸத்திரியர்கள், அரசர்கள், போர்வீரர்கள் போன்ற‌ யோகம் பயின்று சமாதியாகிய இறுதி நிலையினை அடைய விரும்பாமல் இந்த கலையினை பயன்படுத்தி மற்றவர்களை காப்பாற்றவேண்டும் என்பவர்கட்கு அதனை ஒரு தனிக்கலையாக உருவாக்கி மருத்துவத்துடனும் போர்க்கலையுடனும் கற்பித்துள்ளார்கள்.
சித்தர்கள் யோகக்கலையினையும் அதனை கற்பவர்கள் பெறும் சித்திகளை மறந்தும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் அழகாக வடிவமைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே நல்ல சான்று!

எப்படி இந்த தாரணையினைச் செய்வது? இந்த தாரணா சித்தி எப்படி நோக்குவர்மத்தில் பயன்படுகிறது என்பது பற்றி இன்னும் ஆழமாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment