Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, October 26, 2014

சித்த வித்யா பாடங்கள்: 07

பாடம் 04, 05 இல் மனிதனது சூஷ்ம அமைப்பு பற்றி பார்த்தோம், இன்றைய பதிவில் சூஷ்ம அமைபுகளான மனம், பிராணன், புத்தி, ஆன்மா ஆகியவை எப்படி சூஷ்ம உடலினை ஆக்குகிறது என்பதனைப் பார்ப்போம்.சித்தரிலக்கியங்கள் வாசித்தவர்கள் பஞ்சகோசங்கள் உண்டு என்பதனை அறிந்திருப்பர், அவை அன்னமய கோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என ஐந்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, கோசம் என்பது சூஷ்ம அமைப்புகளின் சேர்க்கை எனவே விளங்கிக்கொள்ளவேண்டும். அதாவது பஞ்சபூதங்களான நிலம், காற்று, நெருப்பு, நீர்,ஆகாயம் என்பன வெவ்வேறு விகிதத்தில் சேர்ந்து இந்த கோசங்களை ஆக்குகின்றது. இதன்படி ஒவ்வொருவருக்கும் இந்த பஞ்சகோசங்களின் தன்மையும் அளவும் வேறுபடும். உதாரணமாக அன்னமயகோசமாகிய ஸ்தூல உடலினை எடுத்துக்கொண்டால் நல்ல சத்துணவு உண்டு, உடற்பயிற்சி செய்பவருக்கும் சத்துணவு உண்ணாமல் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவரது ஆரோக்கியம் ஆற்றலில் வேறுபாடு இருப்பதுபோல் பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்களுக்கும் தகுந்த உணவும் பயிற்சியும் அவசியம். இவற்றையே பதஞ்சலி முனிவர் அழகாக பஞ்சகோசங்களையும் படிப்படியாக இணைத்து வலிமையுறச் செய்யும் பயிற்சியினை அஷ்டாங்க யோகமாக வகுத்துதந்தார். இயம, நியமங்கள் = அன்னமய, மனோமய கோச சுத்தியும் வலிமைப்படுத்தும் பயிற்சிகள். ஆசனம்:அன்னமய, பிராணமய கோச சுத்தி வலிமைப்படுத்தலும், மனோமய கோசத்தினை அவற்றுடன் இணைக்கும் செயல்முறை. பிரணாயாமம்: பிராணமய கோச சுத்தியும், வலிமைப்படுத்தும் பயிற்சிபிரத்தியாகாரம்: மனோமய கோச வலிமையுறவைக்கும் பயிற்சிதாரணை: மனோமய, பிராணமய கோச சக்திகளை ஒரு இடத்தில் குவிக்கும் செயல்முறை. மனோமய கோசத்தினையும் பிராணமய கோசத்தினையும் இணைத்து பயன்படுத்தும் உத்தி.
தியானம்: விஞ்ஞானமய, ஆனந்தமயகோசத்தினை சுத்தி செய்து வலிமைப்படுத்தும் பயிற்சிசமாதி: பஞ்சகோசங்களை வசப்படுத்தி அவற்றிலிருந்து உண்மையான "நான்" ஆகிய ஆன்மாவினை அடையும் நிலை. சித்த வித்தை அடிப்படையில் பார்த்தால் அட்டாங்க யோகத்தில் முதல் ஐந்து படிமுறைகளும் (இயம, நியம, ஆசனம், பிராணாயாம, பிரத்தியாகார) அன்னமய, பிராணமய, மனோமய கோசங்களை சுத்தி செய்து வலிமையுறச் செய்யும் பயிற்சிகள். ஆறாவதான தாரணை எனப்படும் "ஏகாக்கிரம்" ஆனது மேற்கூறிய ஐந்து படிமுறைகளாலும் பெறப்படும் சக்தியினை பயன்படுத்தும் உத்தி ஆகும். இப்படி வலிமையும் சுத்தியும் பெற்ற அன்னமய, பிராணமய,மனோமய கோசங்களுடன் அடுத்த இரண்டு வலிமையான கோசங்களான புத்திமய(விஞ்ஞானமய)ஆனந்தமய கோசங்களை வலுப்படுத்தும் பயிற்சிமுறை "தியானம்" ஆகும்.இப்படி பஞ்சகோசங்கள் சுத்தி பெற்று, வலிமையுற்றபின்பு "நான்" எனப்படும் ஆன்மாவை அறிந்த நிலை சமாதி ஆகும்.ஆக இந்த பதிவில் கூறவரும் கருத்து என்னவென்றால் சித்தவித்தை பயிலவிரும்புபவரோ, (மன,உடல்,ஆன்ம) ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் கட்டாயம் இந்த பஞ்சகோச விளக்கத்தினை புரிந்துகொண்டு அவற்றை சுத்தி செய்வதற்கான படிமுறைகளையும், வலிமைப்படுத்துவதற்கான பயிற்சிகளையும் செய்து வருவார்களானால் நிச்சயம் மகிழ்வான உலகவாழ்க்கையினையும், ஆன்ம வாழ்க்கை உயர்வு வேண்டின் அவற்றையும் பெறுவார்கள்.
அடுத்துவரும் பாடங்களில் மற்றைய கோச சுத்திகள் பற்றியும் வெளியிடுவோம். ஸத்குரு பாதம் போற்றி!
பிராணன் ஸ்துல சூட்சும உடலில் செல்லும் கண்ணுக்கு தெரியாத இழைகள் நாடிகள் எனப்படும். இவை உடலில் காணப்படும் இரத்தம் செல்லும் குழாய்களோ, நரம்புகளோ இல்லை, சூஷ்ம உடலில் காணப்படும் பிராண ஓட்டப்பாதைகளாகும். சரீரத்தில் பல்லாயிரக்கணக்கான நாடிகள் அடங்கியுள்ளன, சித்தர்களின் கணக்குப்படி அவை 72000 ஆகும். இவை வாய்க்கால்கள் என்றால் பிராணனின் சேமிப்பிடம் சக்கரங்கள், இவை பிரதானமாக  ஆறாக (௦6) குறிப்பிடப்பட்டபோதும் இன்னும் பல உபசக்கரங்கள் உண்டு. யோக சாதனைக்கு பயன்படுபவை இந்த ஆறதரங்களே! இந்த நாடிகளின் பிராண ஓட்டத்திற்கும் மனம், உடல் ஆகியவற்றின் நிலைகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. எல்லா நாடிகளும் உற்பத்தியாகும் இடம் காண்டம் எனப்படும். இது ஆசன வாய்க்கும் பிறப்பு உறுப்பின் அடிப்பாகத்திற்கும் இடையே மூலாதார சக்கரத்திற்கு மேலே அமைந்துள்ளது. யோக நுல்களில்  இதன் வடிவம் முட்டை வடிவானதாக குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து பல நாடிகள் உண்டானாலும் முக்கியமானவை 14 நாடிகள் முக்கியமானவை. அவை
1. சுழுமுனை
2. இடை
3. பிங்கலை
4. காந்தாரி
5. ஹஸ்தஜிஹ்வை
6. குஹு
7. சரஸ்வதி
8. பூசை
9. சங்கினி
10.            பயஸ்வினி
11.            வாருணி
12.            அலம்பூசை
13.            விச்வோதரை
14.            யசஸ்வினி ஆகியனவாகும்.இவற்றில்
யோகப்பயிற்சிக்கு சுழுமுனையே ஆதாரமாகும். மேலேகூறப்பட்ட காண்டத்திலிருந்து உருவாகும் சுழுமுனை மூலாதார சக்கரத்தின் நடுமையத்துடன் இணைக்கப்படுகிறது. இது தற்கால உடற்கூற்றியலுடன்(Anatomy) ஒப்பிடுவதானால் மூள்ளந்தண்டு முடிவுறும் பகுதியில் குதிரை வால் எனப்படும் நரம்புபின்னல்கள் காணப்படும இடத்துடன் ஒப்பிடலாம். படம் பார்க்கவும். சூட்சும சரீரத்தின் கேந்திர ஸ்தானம் இந்த காண்டம் எனும் பகுதியாகும். இதிலிருந்து முள்ளந்தண்டுக்கு இணையாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி என்ற ஐந்து ஆதாரங்களும் ஆக்ஞா, துவாதசாந்தம் என்பன மூளையை சார்ந்தும் உள்ளன. இவற்றின் செயற்பாடு பிராணசக்தியினை சேமிபதாகும். இந்த சேமிப்பிலிருந்து நாடிகள் வழியாக உடலின் மேற்பரப்புவரை பிராண சக்தி கடத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் பிராண சக்திகள் தங்கும் புள்ளிகள்தான் (Staying nodes) வர்மம் எனப்படும். இந்த புள்ளிகள் 108, அவற்றை கீழ்வருமாறு குருதேவர் அகத்தியர் கூறியபடி சக்கரங்களுடன் தொடர்புபடுத்தி பிரிக்கலாம்.
1. தலை முதல் கழுத்துவரையுள்ள வர்மம் 25 இவை ஆக்ஞா, துவாதசாந்த சக்கரங்களை அடிப்படையாக கொண்டவை.
2. இருகரங்களிலிமுள்ள வர்மங்க்கள் 14, இவை விசுத்தி சக்கரத்தினை அடிப்படையாக கொண்டவை. 
3. கழுத்து முதல் நாபிவரையுள்ள வர்ம புள்ளிகள் 45 இவை விசுத்தி, அனாகத சக்கரங்களை அடிப்படையாக கொண்டவை.
4. நாபியிலிருந்து குதம் வரையிலான வர்ம புள்ளிகள் 9, இவை மணிப்பூரகம், சுவாதிஷ்டானத்தினை அடைப்படையாக கொண்டவை.
5. கால்களில் உள்ள வர்மங்கள் 15, இவை மூலாதாரத்தை அடிப்படையாக  கொண்டவை 
இந்த புள்ளிகள் மூலம் உடலிலுள்ள பிராணசக்தியின் அளவினை கூட்டலாம், குறைக்கலாம், தடுக்கலாம். சித்தர்கள் இந்த பிராண சுழற்சியின் பயன்பாட்டினை மூன்று கலைகளாக பிரித்து தந்திருக்கிறார்கள். 
1. யோகம்
2. மருத்துவம்
3. போர்க்கலை
யோக கலையினை பின்பற்றவேண்டியவர்கள் கவனிக்க வேண்டியது  சுழுமுனை, இடகலை, பிங்கலை முதலான மூல நாடிகளுடான பிராண சுற்றோட்டத்தினை கட்டுப்படுத்துவதாகவும், மருத்துவம், போர்க்கலை அதனை வர்மசாத்திரமாகவும் பயன்படுத்துகிறது. உண்மையில் இந்த இடைத்தொடர்புகளை நன்கு கற்றறிவது இக்கலைகளில் தேர்ச்சி பெற உதவும். யோக சாதனை முக்கியமான பகுதி நாடிகளில் செயற்பாட்டை முழுமையாக அறிவதும் ஆகும். சென்ற பதிவில் நோக்குவர்மத்திற்கும் சித்த, மன சக்திகளிற்கும் அதனை தாரணைப் பயிற்சியின் மூலம் ஒருங்கு படுத்துவதனால் செயற்படுகிறது என்பது பற்றி அறிந்தோம். இதனை செய்ற்படுத்துவதற்கு சக்தி அவசியம் அல்லவா? அந்த சக்திதான் "பிராண சக்தி", தமிழில் "வாசி" சீன மொழியி "Chi- சீ" ஜப்பனிய மொழிவில் "Ki-கீ" என்றேல்லாம் அழைக்கப்படுகிறது. இது சுவாசத்தினால் பெறப்படும் ஒட்சிசன் வாயுவல்ல! பிராணன் என்பது பிரபஞ்ச மஹா சக்தி, அதனது ஓட்டம் மூச்சுடன் தொடர்புபட்டதேவொளிய உட்சுவாசிக்கும் மூச்சல்ல பிராணன், பிராணனை கட்டுப்படுத்தும் இலகுவான வழி மூச்சுப்பயிற்சியாகிய பிராணாயாமம், அதே வேளை பிராணனை கட்டுப்படுத்தும் மற்றைய சாதனங்கள் மந்திரம், மனம், மூலிகை மருந்துகள் என்பனவாகும்.இந்த பிராணன் தலை உச்சிக்குழியினூடாக (fontanelle) ஈர்க்கப்பட்டு பின் ஆறாதாரங்களில் சேமிக்கப்பட்டு, பின் எழுபத்தீராயிரம் நாடிகளினூடாக தச வாயுக்களாக உடல் முழுவதும் பரவுகிறது. இந்த பிராண ஓட்டம் குறிந்த நாழிகைகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடிகளில் மாறி ஓடும். அந்த ஓட்டத்தின் படியே உடலியக்கம், மனவியக்கம் என்பன ஆளப்படுகின்றன என்பதுவே சித்தர்களது யோக மருத்துவ சாஸ்திர அடிப்படை, சீன மருத்துவத்தின் அக்குபிரசர், அக்குபஞ்சர் என்பவற்றினதும் அடிப்படை. இங்கு எடுத்துக்கொண்ட விடயம் நோக்கு வர்மத்திற்கும் பிராணசக்திக்கும் உள்ள தொடர்பினை ஆராய்தலாகும். இந்த நாடிகளில் ஓடும் பிராணணை மூன்று விதங்களில் கட்டுப்படுத்தலாம். 
1. அதிக பிராணனை உட் செலுத்துதல்.
2. பிராண ஓட்டத்தினை தடைப்படுத்துதல்
3. பிராணணை உறிஞ்சுதல்
அதிக பிராணனை உட் செலுத்துதல்.
இந்த முறை பாதிப்பில்லாது, இதனால் செலுத்துபவரிடம் இருந்து வாங்குபவர் அதிக பிராணனை பெற்று அதனை தாங்க முடியாமல் மயங்கி அல்லது நிலை குலைந்து போவர். ஆனால் செலுத்துவரது நோக்கத்தினைப் பொறுத்து பாதிப்பு வேறுபடும். 
பிராண ஓட்டத்தினை தடைப்படுத்துதல்
இது ஆபத்தானது, மரணத்தினை அல்லது உறுப்புகளை செயலிளக்க வல்லது. சரியான நேரத்தில் பிராணன் திரும்பவும் பெறாவிட்டால் பாதிப்பு அதிகமாகும்
பிராணனை உறிஞ்சுல்
அதி ஆபத்தான முறை, இதனைதான் மெய்தீண்டாகாலம் என்பர், அதாவது மெய் (உடலினை) தீண்டாமல் காலனினை வரவைக்கும் முறை. இந்த வித்தையில் சித்த சக்தியினையும் பிராணசக்தியினையும் செலுத்தும் சாதனமாக கண் விளங்குகிறது.இவைதான் நோக்கு வர்மத்தின் அடிப்படை, இவை குருவில்லமல் கற்பது கற்பவர்களுக்கே ஆபத்தினை விளைவிக்க வல்லது, ஏனெனில் தமது உடலிலுள்ள பிராண ஓட்டத்தின் மூலம் மற்றவரை கட்டுப்படுத்தும் போது சரியான முறையில் அணுகவில்லையானால் தாக்க விளைபவரையே பாதிப்புற செய்யும்.எமது சித்த வித்யா விஞ்ஞான பதிவுகளின் நோக்கம் சித்தர்களின் வித்தைகளில் உள்ளவற்றை தற்கால நடைமுறைக்கேற்றவாறு புரிந்து கொள்ளுதலாகும். ஆர்வமுடையவர்கள் தகுந்த குருவை அண்டி கற்றுக்கொள்ள விளையுங்கள். 


No comments:

Post a Comment