Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 15, 2017

யாகவா முனிவரின் அறிவுரைகள்.

யாகவா முனிவரின் அறிவுரைகள்.
தொகுதி – 2 - மனிதரார் என்கின்ற உலகத்தாரை ஊக்குவிக்க உணர்விக்க, புத்தி புகட்ட வந்தவர் தான் இவையை எழுதுகின்ற யாகவா முனிவர். பார்க்க உலகத்தான் உன்னைப்போல் இவ்வுலகில் நீ உண்மை, உதவி என்கின்றாயே, இதை எழுதுகின்றவர்தான் உண்மையானவர் என்றால் இவர் யார்? யாகத்துவம், இணைத்துவம் யாதுவென உன்னை உணரச் செய்கிறார். இவர் யார் எனும் உண்மையை உணராமல் ஆடுகின்றாயே, உன் விருப்பம், உன் நிலை யாவும் இங்ஙனமும் கலகம், அகம், அதிகாரமா? பார்த்தும், உணர்ந்தும், உணராதது போல் ஏன் இருக்கின்றாய்? உலகம் யாவும் நானே என்றால் சிந்தித்துப்பார் யாவும் தெரிவாய். என் சொல் அழியாது. அது போல் இவ்வுலகமும் அழியாது என நம்பு.

உங்களுக்கு (இவ்வுலக மக்களுக்கு) உதவும் காற்றும், நீரும், வித்தும் யாவும் யாகத்து பொருள். நாங்கள் 111 (நூற்றுப் பதினோறு) உலகத்தாரும் இவ்வுலகிற்கு உதவுகின்றோம் என்றால், நாங்கள் இளக்கம் கொண்டவர்கள். நீங்களும் அவ்வாறே இளக்கமாக இருந்து என் யாஷ்யத்திற்கு வரவேண்டியவர்களே. உங்கள் காற்றுக்குள் யாரென நீங்கள் உணரவில்லை. காற்றிற்கும், சரீரத்திற்கும், யுகத்திற்கும் துணை நாங்களே என்றால், நாங்கள் 111 உலகவாதிகளும் தர்மவாதிகள் தானே. நான்றாக சிந்தித்துப் பாருங்கள் புரியும்.

நீங்கள் உலகத்தார் யாரென யாவும் நானறிவேன். நீ அகம் கொண்டு உலகில் நான் என்று சொல்லாதே. நாம் நமக்குள் யாரென உணர்ந்து சொல். அன்புக்கு நான் என்று கூறு. உதவிக்கு நான் என்று கூறு. இன்னும் எத்தகையோ உண்டு. நமக்கு இவ்வுலகமும், இவ்வுலக இன்பமும் சொந்தமா என சற்று உணர்ந்து பார்.

அறிவுரைகள் (பாகம் 1)
மனிதா அழகு நிலையானதல்ல. ஆற்றல்தான் நிலையானது. உன் சரீர அழகைவிட உன் உள்ளத்தில் அன்பு என்பதுதான் பெரும் அழகு. சிந்தித்துப் பார்த்தால் அழகு என்றால் பசுமைக் கொள்வதே என உணர்.
மனிதா கொடுமை இழைப்பார் யுகத்தில் நிச்சயம் ஒரு நாள் உணர்வார். யாரானாலும் உண்மை வெல்லும். யாகத்தை உணர்வாயானால் உண்மை அறிவாய்.
மனிதா உன்னை நீ உணர் என்றால், நீ செய்த பாவம் தான் உன்னை பின் பழி வாங்கும் என்றால் யாகத்தைப் பார். அவைக்குள் உன் கணக்கு என்றால் நீ பாவம் செய்யாதே. பழிச்சொல் சொல்லாதே.
மனிதா, உதவியவனை தூக்கி எறிவான், யுகத்தான். அப்படி எறிந்து அவன் கண்ட பலன் யாது? உதவியனுக்கு எப்படியும் நன்மைகளும், தூக்கி எறிந்தவனுக்கு துன்பமும் வரும். அது ஏன்? அப்படி கொடுப்பார் யார் என சிந்தித்தாயா யுகி?
மனிதா அழகு என்னும் பொருள் கனி தரும் மரம்போல். ஆனால் யுகத்தார் எவ்வளவு அழகாக இருந்தாலும் அது என்றும் நிலையில்லா அழகு. இவையில் உனக்கு அறிவே தேவை என உணர்.
மனிதா பிறரை குற்றம் சொல்லி வாழ்வதும், குற்றம் கூறுவதும், பாவம் யாவும் உனக்கே என யோசி. நீ நன்மைக்கு என்றும் முந்து.
மனிதா மரம் உயிரோடு தானிருக்க நீங்கள் கனியும் இன்னும் எவை எவையோ பார்க்கின்றீர்கள். அக்கனியை நீங்கள் உண்ணுகின்றீர்கள். அம்மரம் பட்டுப்போனாலும் எவை எவைக்கோ உதவுகின்றன. ஆனால் மனிதா நீ எவைக்கு உதவினாய்?
மனிதா என்று எழுதுகின்றானே என நினைக்காதே. உன்னை, நிலை கொண்டு தன் அழைக்க இயலும். உருவத்தில் நீ மனிதன். யாவிலும் நீ தான் உயர்ந்தவன் போல் என்றாலும் உன் தலைக்கு மேல் பல உலகம் உள்ளன. அதை மறந்து இங்கு தண்டனையில் தான் வாழ்கின்றீர்கள் நீங்கள் என்பதை உணர்ந்தால் உனக்கும் உலகிற்கும் நன்மை எனப் பொருள்.
உலகில் நீங்கள் காளானைக் கண்டதுண்டு. காளானைக் கண்டு நீ உணர்ந்ததும் யாது. அன்பிற்குள், இளக்கத்திற்குள் இன்பம் எனும் பூமிதான் மண். மண்ணில் எவையும் உனக்கு உதவுகின்றன என்றால் உன் திறனாலா? இல்லை உன் தலைக்கும் மேலுள்ள யாகத்தில் திறனாலா? என சிந்தித்துப் பார்.
காற்றும், அவைக்குள் நீரும், அவைக்கும், அவைக்குட்பட்டதும் உன் சரீர ஆத்மா என்றால் சரீரம் பரவ இயலாது. ஆத்மா பரவ இயலும். வித்தும், தானியமும், கனியும் இன்றி நீங்கள் உண்டோ? மனிதா நிதானமாக, திடமாக சிந்தனை செய்.

இறையுருவாய் வந்த இன்பத்திருவுரு-குமரிஅனந்தன்
அம்மன்புரத்தில் ஆடுகளை வளர்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஆன்மாக்களை ஆளுகின்றவராக சென்னையில் காட்சியளித்தார். உலகில் இதுவரை ஒலிக்கப்படாத வரி வடிவால் எழுதப்படாத இனன்ய மொழியை அவர் பேசினார். மொழி என்பது சுற்றியிருப்பவர்களுக்குத் தெரிந்து, அவர்களூம் அதே மொழியில் பேசுபவர்களாக இருப்பதே நாம் அறிந்தது. ஆனால் யாகவா முனிவர் பேசிய மொழி மக்களுக்கு அறிமுகமான ஒன்றல்ல. அவர் நாவில் மட்டும் அம்மொழி எவ்வாறு ஏறி நின்றது. பல தெய்வீகக் கருத்துக்களைக் கூறி நின்றது என்பது வியப்புக்கும் வியப்பாகும். கானப்பறவைகளோடும், காணும் இயற்கை மரங்கள், செடிகள், கொடிகளோடும் அவர் உரையாடினார். ஆழங்கான முடியாத மனித இதயங்களை அளந்து கொண்டவர் போலவும் அவற்றில் எழும் எண்ண அதிர்வுகளை அறிந்து கொண்டவர் போலவும் அவருடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன. புறச் சின்னங்களால் புனிதர்கள் என்று காட்ட வேண்டா. அகத்தில் ஊறும் அன்பு நீரால் அனைவருடைய நெஞ்ச நிலங்களையும் நனைத்து அன்பை விதைத்து அருளை அறுவடை செய்யுங்கள் என்பதே அவருடைய அறிவுரையாக இருந்தது.பொன்னையும், பொருளையும் துறந்து, மனைவியையும், மக்களையும் மறந்து மனிதர்களே நடமாட்டம் இல்லாத மரங்கள் அடந்த காட்டிலே மலைக்குகையிலே வாழுவதை அவர் ஏற்கவில்லை. மனிதர்களுடன் மனிதர்களுக்காக ஒரு மகானாக தெய்வீக ஆற்றல் பொருந்தியவராக வாழ்ந்தார் யாகவா முனிவர்.
நோய் என்று சென்றவர்கள் முனிவரை தாய் என்று கருதுகின்ற அளவுக்கு மருத்துவம் சொல்லி, மருந்தும் தந்து மகிழ்விக்கும் பாங்கே தனி.உலகியலில் இருந்துக்கொண்டே உலகத் துன்பங்கள் தீண்டாத ஒரு வாழ்க்கையினை நடத்தி காட்டிய நாயகனாய் நம்மிடையே திகழ்ந்தார் யாகவா முனிவர். ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒழுக்கத்தை விதைத்து இழுக்கற்றவாழ்க்கை வாழுவதற்கு வழி வகுத்துக் கொடுத்த வற்றாத கருணை ஊற்று யாகவா முனிவர்.தோற்றத்தில் எளியவர் ஆற்றலில் பெரியவர், உள்ளீட்டில் உயர்ந்தவர் இறையருளால் இறையின் அருள் வடிவமாக நம்மை ஆட்கொண்ட அரிய ஞானி யாகவா முனிவர். அவர் ஏற்றது கனிந்த அன்பை, காணிக்கையை அல்ல அவர் எதிர்பார்த்தது இதயப் பண்பையே தவிர பணத்தை அல்ல.அவர் இந்து அல்ல, இஸ்லாமியர் அல்ல. கிறிஸ்தவர் அல்ல. சீக்கியர் அல்ல. பௌத்தர் அல்ல. ஆனால் அனைவருக்கும் உரியவர். யாகவா முனிவரை இறையுருவமாக இதயத்தில் ஏந்தி நிற்போம். அமைதியும், சாந்தியும், அன்பும் பொங்கிப் பொலிந்து நிறைவாழ்வு பெறுவோம். வளர்க. விரிக. எளியவுருவிலே வந்த இறையருளாம் யாகவா முனிவரின் புகழ் .;;;;;;;;;;; - குமரி அனந்தன், எம்..பி.எச்.டி.

நான் ஒரு வழிப்போக்கன். (உன்னை நீ உணர்)குதிரையின் கடிவாளம் உன்னிடம் உன் கடிவாளம் என்னிடம்கரையான் புற்று வளரும் போது பகவான்என்று வணங்குகிறாய் உனக்குள் புற்று வளரும் போது ஏன் கதறுகிறாய்?நாயை போல் உண்டு, தின்று, நரியைப்போல் வாழாதே.கொசு உன் உதிரத்தை குடித்துவிட்டுநான்தான் பெரியவன் என்கிறதுகொசுவிற்காக தும்பி காத்திருக்கிறதுகொசுவை தின்ற தும்பிக்கு வேலியில்ஓனான் காத்திருக்கிறதுஅந்த ஓனானுக்கு ஓர் பாம்பு காத்திருக்கிறதுஒரு துளி உதிரத்திற்கு இத்தனை கலகம் நான் தானடா வைத்தேன்.உள் உணர, சொல் உணர,செயல் உணர, எவன் ஒருவன் கூறுகிறானோ அவனை உணர்ந்து செயல்பட்டால் உனக்கு நன்மையே.பணம், பணம் என்று அலைவாரைக் கண்டேன், பதவியை தேடி அலைவாரை கண்டேன், புகழ்தேடி அலைவாரைக் கண்டேன், புன்னியம் செய்வாரை காணேன், நீயும் சிந்தித்து பார் மானிடப்பிறவியே.கனிக்குள் மரம் வைத்தேன்
மரத்திற்குள்ளே பூ, காய், கனி வைத்தேன்கனியை தின்றுவிட்டு விதையை தூக்கி எறிகிறாய் விதை யெல்லாம் மரமாக வளரக்கண்டேன்நீயும் கண்டாய், நீ உணராமல் இருக்கிறாயே என் செய்வேன்நீ உழைத்து பிறர்க்கு சற்றாவது உதவ நினைத்தால் அதுதான் தர்மா.அறிந்து, புரிந்து நல் அறிவைக்கூறும் மானிடபிறவியே நான்சொல்லும் சொல்லை கதையோ, கற்பனையோ என்றுநினைக்காதே, கோடானுக் கோடி திருஞானத்தை தருகிறேன். நான்ஒரு வழிப்போக்கன்.பாதத்தைத் தொட்டு பரினாமம்தான் செய்து வாழ்ந்த அருள்காலத்தில் திருஞானம் கொண்டு மனிதர்களும், தேவிகளூம்,தேவர்களும், சித்தர் களும் இன்பமாக வாழ்ந்தார்கள். பொய்,திருடு, அன்பில்லா செயல் இல்லை ஆதியில். தற்காலத்தில்
அன்பில்லா செயல் கண்டேன், புகழ்தேடிஅலைவாரைக்கண்டேன், காசு பணத்திற்கு கபட நாடகம் நடத்துகின்ற துஷ்டர்களை கண்டேன்.வயிற்றுபசிக்கு ஆகாரம்ஆன்ம பசிக்கு மனம்பன்றியும், சில மனிதர்களும் ஒன்றேபன்றியைப் பார்த்தால் பசு ஒதுங்கிவிடும் அதுபோல் கர்மாவை பார்த்தால் தர்மா ஒதுங்கிகொள்ளும்அடக்கத்தோடு வாழ்ந்தால் வாழ்வுஅகங்காரத்தோடு வாழ்ந்தால் சாவு அஞ்ஞானந் தான் ஞானம் இஞ்ஞானம் ஞானம் இல்லைஅறிவுடையார், பற்றுடையார்அறிவில்லாதார், பகையுடை யார்தீர்க்க திருஞானம் உடையார்கிளை முறிந்த மரமும் அழுவதில்லைமுறிந்த கிளையும் அழுவதி ல்லைமுறிந்த மரமும், கிளையும் உதவுகிறதுநீ எதற்கு உதவுகிறாய்?மனம் உண்ணும் ஆன்மாநீர் அருந்தும் சரீரம்ஆன்மா எனக்கு சொந்தம்சரீரம் மண்ணுக்கு சொந்தம்பள்ளி பாடமும் கொள்ளிக்கு உதவுமா?கொள்ளி மலையேறி கும்பிட்டுதான் பலன் என்ன கண்டாய்?பசித்தால் பாலுக்கு குழந்தை அழுவ்ம்தாகமெடுத்தால் நீரை தேடி வருவாய், அதுபோல்கேட்டால்தான் ஞானம் கிடைக்கும். அன்பி ருந்தால் கரும்பின் கனையில் நீர் சேர்வதை போல்உனக்கு செல்வங்கள் தான் சேரும்அதிகாரம் என்று ஒன்றிருந்தால் நீ ஆண்டியாகி, பினிப்பட்டுநடுவழியில் நாய், நரி, திண்ண பிணமாவாய்.பாலிலே பகவான் இருப்பதாக கூறுகிற நீ,உன் பாசத்தில் நான்இல்லையென பொருளோ,தாகத்திற்கு நீர் வேண் டும்திரு ஞானத்திற்கு அறிவு வேண்டும்இரண்டும் நான் தான் கொடுக்கிறேன்நீ உண்டு கொழுத்துவிட்டு, திமிர் கொண்டால்நான் உன்னை காற்றையும், நீரையும் வைத்துபழி வாங்குவேன்.அறிவோடு நீ பழகிஅறத்தோடு நீ வாழ்ந்துஇன்புற்று நீ வாழ்ந்துபிறர் துன்பம் போக்க நினை"சத்யம் சாந்தி ப்ரணம்சாந்தி சத்யம் ப்ரணம்வசி வசியந்தம் வசியந்தஹ"

மனிதா அழகு நிலையானதல்ல. ஆற்றல்தான் நிலையானது. உன் சரீர அழகைவிட உன் உள்ளத்தில் அன்பு என்பதுதான் பெரும் அழகு. சிந்தித்துப் பார்த்தால் அழகு என்றால் பசுமைக் கொள்வதே என உணர். மனிதா அழகுக்கு ஆசைப்படாதே. அன்பிற்கு ஆசைப்படு. அழகு அழியும். ஆனால் நீதியான அன்பிற்கு என்றும் அழிவில்லை.



No comments:

Post a Comment