Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 1 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

அனுபவ சாட்சி 1 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல. அப்படி எனக்குள் இருந்த சில கேள்விகள்., கடவுள் ஒருவர் தான்…எனில் ஏன் இஷ்டத்துக்கு ஒரு கடவுளென இத்தனை கடவுள்கள், கோயில்கள்? எங்கும் நிறைந்தவர் தான் கடவுள்... எனில் ஏன் சிலையாக உள்ளார்? நாம் கொடுத்து கடவுள் நிறைவு பெறுவதில்லை… எனில் ஏன் காணிக்கை செலுத்துகிறோம்? என கடவுள் நம்பிக்கை, என்னுள் பிறர் அறியா வண்ணம் சிதறு தேங்காய் போல் சிதறி கிடந்தது.இந்த கேள்விகள் யாவுக்கும் பதில் தந்தார், இநன்யா! அவர் பதிவுகளில். பிறர் கூற கேட்டு வரவில்லை நம்பிக்கை! அவர் பதிவுகளை படித்து, அவர் கூறிய வார்த்தையின் ஆழத்தை அறிய முற்பட்ட போது நம்பிக்கை துளிர்த்தது! முதல் பதிவு, “நான் யார்?” அதில் முதல் வரி “கடவுள் ஒருவரே. மூலம் ஒன்று தான்”. மேலும் சிலை வந்த வரலாற்றை கூறிய “சிலை ஏன் வந்தது?” என்ற பதிவில் பல உண்மைகள் தெரிந்து கொள்ள, முடிந்தது. பின் “எல்லாம் எனக்குள்” என்ற பதிவில் இநன்யா தான் கடவுளா என்ற சிந்தனை வந்தது.பாழ்பட்ட மனித மனம் எளிதில் அவரை கடவுள் என்று பற்றி கொள்ளவில்லை. ஆனால் மனதார நாமம் சொல்ல துவங்கிய ஒரு மாதத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக, என் வாழ்வில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலமாக வாட்டிய தீராத வயிற்று உபாதையில் இருந்து நிவாரணம் கிடைத்தது. பலவிதமான மருத்துவ சிகிச்சை செய்தும் கிடைக்காத நிவாரணம், நாமம் சொன்னதால் சீரானது எப்படி? இநன்யா நாமம், சாதாரண நாமம் அல்ல என்பதை உணர்ந்தேன். என்னையும் அறியாமல், இநன்யா நாமம் என் நாவில் நிலைத்தே விட்டது.மேலும் சில வருடங்களுக்கு முன், எனது மூளையில் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அப்படி செய்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் கூறினர். குடும்பத்தில் பலமுறை நிர்பந்தம் செய்தும், நான் அறுவை சிகிச்சைக்கு ஒத்து கொள்ளவில்லை. தலைவலி மிக மிக கொடூரமாக இருக்கும். என் வேதனை கண்டு என் அம்மா “இந்த வலியை அனுபவிக்கவா நீ பிறந்தாய்?” என கேட்டு என்னை கட்டியணைத்து கதறுவாள். பல சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை. நான் அறுவை சிகிச்சைக்கு ஒத்து கொள்ளாததால் “இதற்கு மேல் உன்னை எங்கும் சிகிச்சைக்கு அழைத்து செல்ல இயலாது, அறுவை சிகிச்சை செய்வதென்றால் அழைத்து செல்கிறோம்” என கூறினர், குடும்பத்தினர்.இநன்யா நாமம் சொல்ல துவங்கிய சிறிது நாட்களில் தலைவலியால் தூக்கமில்லாது அவதிபட்டு கண்ணீரோடு இருந்த எனக்கு தலைவலி வருவதே இல்லை. இதை விட வேறு என்ன வேண்டும், சாட்சியாக? மருத்துவம் அளிக்காத நிவாரணத்தை இநன்யா நாமம் சொல்லி, நீர் பருகியதால் பெற்றேன். இழந்த தூக்கம் கிடைத்தது. குடும்பத்தில் அமைதி வந்தது. உடல்நிலை படிப்படியாக சீரானது. நம்ப துவங்கினேன், இநன்யா கடவுள் என்று.மனதளவில் என் நிலை மிக மிக பலவீனமாக இருந்தது. வாழ்க்கையில் மனிதர்களால் ஏற்பட்ட அவமானம், என் அன்பை உதாசீனம் செய்த கடந்த கால நினைவுகள், என்னை வதைக்கும் தருணம் வாழ்வை முடித்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த நாட்கள் பல. இநன்யா நாமம் சொல்ல துவங்கிய பின், என் மனநிலையில் மாற்றம் வந்தது.நான் பலவீனமாக உள்ளேன் என்றேன், கடவுள் என்னிடம், “ஆயிரம் யானையின் பலமிக்கவன் நீ” என்றார். நான் தோற்று விடுவேன் என்றேன்; ஆனால், அவரோ “நீ வெல்வாய்! உனை என்றென்றும் கைவிட மாட்டேன்” என்றார். ஊக்கத்தை விதைத்தார் என்னுள். துணிவுடன், வாழ்வை எதிர் கொள்ள முடிந்தது. என்னை படுகுழியில் இருந்து மீட்டது இநன்யா காட்டிய பேரன்பு..பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்கின்றவர், என் மனதின் குரல் கேட்டார். மனிதர்கள் எதிர்பார்ப்புடன் தான் அன்பு காட்டுவர்; கடவுள் அன்பு மட்டும் தான் மெய் என உணர்த்தினார். “அன்புக் குழந்தையே..” என்று அவர் அழைப்பதே நிறைவை தந்தது. “மனமே மாயை” என பலமுறை உணர்த்தி உள்ளார். இநன்யா தான் கடவுள் என்று அவரை இறுக பற்றினேன்.கடந்த 6மாத காலமாக எந்த மருந்தும் உட்கொள்வதில்லை, எனக்கு மருந்து, மாத்திரை தேவையே இல்லை என்று திடமான நம்பிக்கையை இநன்யா நாமம் எனக்கு தந்தது. எந்த விதமான உடல் உபாதை வந்தாலும் இநன்யா நாமம் சொல்லி, நீர் பருகினால் சரியாகி விடும். முன்பெல்லாம் மாதத்தில் ஒரு முறையேனும் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்தது இல்லை. அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படும். ஆனால் இநன்யா நாமம் சொல்லி நீர் பருகிய கடந்த ஒரு வருடத்தில், ஒருமுறை போலும் மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை வரவில்லை. இநன்யா நாமம், தான் என்னை வளமாக்கியது.என் வாழ்வில் என்னை வதைத்த வேதனை, உடல் உபாதைகள், குடும்ப சிக்கல்கள் என அனைத்திலும் என்னை மீட்டது, இநன்யா நாமம். கடவுள் அல்லாத ஒருவரால் இத்தகைய நன்மையை என் வாழ்வில் நிகழ்த்தி இருக்க இயலாது. ஆணித்தரமாக சொல்வேன், இநன்யா மெய்! இநன்யா கடவுள்!இங்கு வரும் பலரும் முதலில் இநன்யாவை தரிசிக்க ஆர்வம் காட்டுவதை காண்கிறேன். பசிக்கும் முன் உணவருந்த அவசரம் காட்டுவதால், உணவின் சுவை அறிந்து உண்ண இயலாது! நான் முதலில் அவரை காண்பதில் துளியும் ஆர்வம் காட்டவில்லை. உண்மையை உணராது அவரை காண்பதில் பயனில்லை என்று அவரது வார்த்தைகளை படித்து, இநன்யா நாமம் சொல்லியே, இநன்யா கடவுள் என கண்டேன்.
அவர் வார்த்தையில் தேடுங்கள்! அவரை கண்டெடுப்பீர்கள்! மனதில் உச்சரித்து பாருங்கள், இநன்யா நாமம்! நிச்சயமாக, நீங்கள் தொலைத்த நிம்மதி, மகிழ்ச்சியை அவர் மீட்டு தருவார்! அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. அவர் மீது உண்மையான அன்பும், ஆழமான நம்பிக்கையும் வைத்தால்; வெற்றி மட்டுமே! “இநன்யா தான் என் விதி” என்ற முடிவோடு, இநன்யாவில் பயணிக்க துவங்கினேன். அவரது தரிசனம் கிடைக்காமலே, என் வாழ்வில் வியத்தகு மாற்றங்களை கண்டேன். மலர்ச்சியும், வளர்ச்சியும் அருள்பவர் இநன்யா! உணர்ந்தால் பேரிண்பம்!
 மன்னன் முதல் மக்கள் வரை குறை சொல்லி திரிகின்றான்,தன் குறை நிவர்த்தி செய்யாமல் பிறரின் அந்தரங்கம் அறிய ஆவலாய் இருக்கிறான்,முதலில் உன்னை குறை நிவர்த்தி செய்யடா. நான் உன்னிடம் கை ஏந்த வரவில்லை ,உன் கை பிடித்து கரை சேர்க்க வந்தேன் நான் உன் உறவு உன்னை ஏமாற்ற வரவில்லை ,நம்பிக்கை இல்லாதவன் கரை சேர்வதில்லை,கடவுள் அன்பு மயமானவன் கடவுளை தவிற எல்லாம் இங்கே பொய் தான் உணரடா உண்மையில் நன்மை நானடா உன்னை எப்போதும் கைவிட மாட்டேன். ஆனந்த தூறல் நான் , ஆர்பரிக்கும் வெள்ளம் நான், தர்மாக்களை என் சத்தியத்தின் வலக்கரத்தினால் எப்போதும் காப்பேன் பயம் வேண்டாம், உணரடா உண்மையில் நன்மை நானடா இந்த இநன்யா யாரென்று என் செயல் மூலம் அறிவாய் உன்னை காப்பாற்ற உன் வாயிலில் நிற்கிறேன் பயப்படாதே. தங்க சிம்மாசனத்தில், வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து பேச வரவில்லை. எல்லாம் என் தந்தை படைத்த போருள் ! அற்ப பொருள். நான் அதை அழகு பார்ப்பதில்லை. என் காலுக்குள் இருப்பதை உயர்த்தி பார்ப்பதில்லை. நான் அதை அழகென்று நினைத்ததில்லை ! நீ அழகு ! உன்னை உணர்ந்தால் அழகோ அழகு ! உன்னை அலங்கரிக்கவே இந்த யுகம் வந்தேன். நான் கடவுள் என்று இறுமாந்து அலையவில்லை.ஒரு நொடியில் புது உலகை சிருஷ்டிப்பேன் ! ஆனால் என் விஷ்வரூபத்தை காண்பித்து நான் கடவுள் என்று சொல்ல ஆசை கொள்ளவில்லை. உன் தோளின் மேல் கைபோட்டு பேசவே ஆசை கொள்கிறேன். உனக்கு தோழனாக, உறவாக இருக்கவே ஆசைப்படுகிறேன். நீ எப்போது கூப்பிட்டாலும் ஓடி வருவேன், உன் துயர் களைய ! டிசம்பர்_12 .....இருப்பை உணர்த்திய மிக சிநேகமான இருப்பு.சூறையாடிய சூறாவளி காற்று.பெரு மழை.வாழ்வின் மிக முக்கியம் என கருதிய அனைத்தில் இருந்து துண்டிப்பு.விளக்கில்லை. மின்விசிறியில்லை.அலைபேசி.,தொலைபேசி என ஏதும் இல்லை.காரணம் மின்சாரம்.எம்மை சுற்றி பெரும் அமைதி சூழ கண்டேன்.கும் இருட்டு இரவின் இராக்கோழியின் சப்தம் கூட இல்லாத பேரமைதி.எதில் இருப்பின் நிலை கடந்து போகிறது என்பதை நொடிக்கு ஒரு முறை உணர்த்தி சென்றது.கடவுளின் அன்பின் வடிவம் கண்ணில் வழிந்த கண்ணீரில் உரைத்தது.இங்கு எதுவும் வாத்சல்யம் இல்லை என்பது சூறைக்காற்று அடித்து உணர்த்தியது.ஆதி கால மனித வாழ்வு கண முன் வந்து போனது.இனி வரும் காலம் இதுவே என்ற உண்மை சொன்னது.கடவுள் அன்பில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை இருடின் விடியல் சொல்லி நகர்ந்து சென்றது.படைத்தவனால் அழிக்கவும் முடியும் வலியினொடு இதுவே கால தேவன் சொல்லி சென்றிருக்கும் உண்மை.ஒரு துளி வலியில்லாது இந்ந சூழலை கடந்திருப்பது இநன்யாவின் அன்பினால் மட்டுமே.உலகம் மிக விரைவில் உணரும். ஒரு துளி காற்றை இயக்கினேன்,இரவு முழுவதும் இருகரம் கூப்பி கடவுளே என்று யாசிக்க கண்டேன், நான் மாருதம் என்பதை ஏன் மறந்தாய் .தர்மாக்களை நிச்சயம் காப்பேன் .நான் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை உன் அன்பை தவிற , உணர் என்றுதான் சொல்கிறேன். அடுத்து பூமிதாய் அசைய போகிறாள் என்ன செய்ய போகிறாய்,உன்னை எப்போதும் காப்பேனடா.என் நாமம் சத்தியம். இருக்க போற்றாதவன்,இறந்தபின் போற்றுவான் என்னை அறிந்தவன் விண்ணை அளப்பான்,நான் வசிக்கும் புணித பூமியில் இருக்கும் 7 மரங்களில் ஒரு கிளை கூட முறியவில்லை நான் வலிமையானவன்தானே, என்னை ஆராய்ச்சி செய், நம்பிக்கை கொண்டு என் நாமம் சத்திய மார்க்கம் அழைத்துச் செல்லும், நீ தர்மகுலமடா உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் நிச்சயமாக. கடவுளின் தன்மையை உணராது காட்சி பொருளாக கண்ணால் கண்டு விட்டால் விண்ணை தொட்டு விடலாம் என்கிற ஆசையில் தான் கடவுளை காண வருகின்றனர்.காசுக்கு ஒரு கடவுள். கண்ணுக்கு ஒரு கடவுள். கர்மத்திற்க்கு ஒரு கடவுள். என எண்ணற்ற கடவுளை தெரிந்தவனுக்கு உண்மை சொரூபம் புரியுமா ? உணரதான் செய்யுமா ?பிறக்கும் போதே கர்மாவோடு நம் விதி நிர்ணைக்கபடுகிறது.மனிதன் ஆசையால் பல துன்பத்திற்கு பலி ஆகிறான். பின்னே வீனனாய் கடவுளை குறை சொல்லி திரிகின்றான்.கஷ்டங்களை படாத சொகுசு வாழ்க்கை தந்து விட்டால் அவர்தான்உண்மையான கடவுள். இல்லை என்றால் அவர் கடவுள் அல்ல கல் என்று சாபம் விடும் அற்ப மனித கூட்டம் கடவுள் இநன்யாவை என்று உணர போகிறது.கடவுளை உணர்ந்தவர் வாழ்வை வெல்லலாம் என்பதற்கு இங்கே உதராணம் சொல்ல நல் ஆண்மாக்கள் உள்ளனர்.அவர்கள் இநன்யா அன்பை பூரணமாய் பெற்றவர்கள். மனித குலமே இன்னும் எத்தனை காலம் உணர்வறியாது மூடமாய் திறிய போகிறீர்கள்.இனி வரும் காலம் 'இநன்யா நமோ நம' என்ற திரு நாமம் ஒன்றே உலகை காக்க போகிறது.இதனை இனியும் உணராது அற்ப கேள்வியில் சிக்கி தவித்தால் இழப்பு மூட கேள்வியை கேட்பவனுகே ஒழிய கடவுளுக்கு அல்ல. தன்னை பற்றி முழுவதும் தெரியாத அற்ப பிறவி இநன்யா வை ஆராய்ச்சி செய்து கேள்வி கேட்கிறது.தானும் கெட்டு தன் குலத்தை நாசம் செய்ய பிடிவாதம் செய்கிறது.இது போன்ற அற்ப வீணர்களை பற்றி இங்கே யாருக்கும் கவலை இல்லை.அவரவர் வாழ்வு அவரவர் பயணம்.கடவுள் அன்பை உணர்ந்து அவர் வழி செல்பவன் வாழ்வையே வெல்வான்.உணர்ந்த உயிருக்கு இநன்யா அன்பு பேரன்பு.உணர்ந்தால் துன்பம் இல்லை. என் முகநூல் வட்டத்திலே கர்மா, சூழ்ச்சிகாரன் நிறைய உண்டு. நான் யார் என்று தெரியாமலே குறை சொல்லி திரிகின்றான். நான் உண்ணும் வரை விடமாட்டேன். நீ என்பதே உனக்கு தெரியாது. பின் நான் என்பதை எப்படி அறிவாய்? பவ பாவமடா நீ. என் தந்தை பிரபஞ்ச நாயகனை நம்பாத மானிடன் என்னை நம்புவதும் சிரமம் தான்.
- இநன்யா மஹா முனிவர்.
 அப்பா இநன்யா.....உணர்ந்த மனதில் சக்தி தந்திடுசக்தி பெறுக தெளிவை தந்திடுதெளிவு நிறைந்திட உறுதி தந்திடுஉறுதி நிலைக்க அமைதி தந்திடுஅமைதி தந்ததும் நீ ஆழ அமர்ந்திடுஅமர்ந்திட்ட உயிரில் அன்பை நிறைத்திடுநிறைந்த அன்பில் ஆணந்தம் கொண்டிடு
ஆணந்தம் கொண்டு நல் மக்களை காட்டிடுநல் மக்களை கொண்டு யுகத்தை கட்டிடுகட்டிய யுகத்தில் பிரபஞ்ச இளவரசாய் ஆட்சி புரிந்திடுபெற்றதை எல்லாம் தந்திடும் பிள்ளயைாய் மாற்றி அருளிடுமாறிய நிலை கொண்ட பிள்ளையாய்உணர துடிக்கும் உயிரை மாற்றிடு.மாற்றிய உயிரை உன் அருகே அழைத்திடு.
 விதி வலியது என ஓர்ந்தேன் , புத்தி இல்லாதவன் பேதலிப்பான், என்னை அறிந்தவன் இந்த யுகத்தில் எல்லா செல்வமும் பெறுவான், எதிரியை எப்போதும் பக்கத்தில் வை, அவன் உன் வெற்றிக்கு காரணமாக அமைவான் , ஆனால் நம்பிக்கை துரோகியை பக்கத்தில் வைக்காதே, நான் துரோகியை மன்னிக்க மாட்டேன், என்னை உனர்ந்தவன் ஞானியாவான் , உத்தமர் நெஞ்சில் நிறைந்து
நிற்கும் ஐய்யனே...!!!உம்மை நினைக்கும் நெஞ்சையும்காக்கும் அப்பனே...!!!தர்மகுலம் செழிக்க கர்ம குலத்தை செதுக்க யுகம் வந்த இநன்யனே...!!!காத்து ரட்சிக்க திரு எட்டு நாமம் தந்தாய்...மீட்சிக்கு உன் சுட்டு விரல் தந்தாய்....இளப்பாறி மகிழ வலது ஷ்பரிஷம் தந்தாய்...நெற்றி குளிர திரு நீரு தந்தாய்....
வெற்றி கொள்ள உம் பிள்ளையாக்கினாய்...உன் மகிமை சொல்லும் கிள்ளையாக்கினாய்உம் நந்தவனத்தின் நிழலிலே உம் காற்றின் சுவாசத்திலேஉம் பரமாத்ம தரிசனத்தை கண்டுஎம் கூட்டு இனத்தோடு பேரானந்தன் எம் இநன்யன் அன்பெனும் ஊஞ்சலில் ஆடி ஓடி திரிகின்றேன்.....
காக்கும் இநன்யா நாமம். பிரம்ராஜன் என்றுஆசானன் என்றுகண் கண்ட தெய்வம் என்றுபோற்றுதலுக்குறிய தாய் தந்தையரேபோற்றுதலுக்கும் வணங்குதற்கும் உறியவர் என்று உணர்த்திட்ட உத்தமனே.... பொற்றோர் வணக்கத்தில் உருகி மகிழும் தயாளனே....கொண்ட வாழ்கை கண்ட கடமையே உயர்வென உணர்த்திட்ட சீராளனே...செதுக்க படும் கல்லில் கழிக்கப்படும் துகள்களில் வலியை உணர்த்திட்டகர்ம யோகியே....உளி பட்ட இடத்தில் வலி தடம் தெரியாதுசிற்பத்தின் தன்மையை உணர்த்திட்டபேரன்பே....
எல்லையில்லா மாயயைகளை விள(ல)க்கிவானமே வாழ்வதன் எல்லை பஞ்சபூதமேஉள் இருப்பின் நிலை என்று உணர்த்திட்டபர பிரம்மமே....வந்த நோக்கம் வறையறுத்த வாஞ்சையே....உணர்திட்ட தன்மையால் தந்தாய் உன் அன்பையே....
 யாதார்த்தங்கள் கூறிய ஆயுதமாய் சீறி கிழிக்கவெந்த வடுக்களின் தடங்கள் வழியே மீண்டும் புதிய தடங்கள்எண்ணிக்கை அதிகரிப்பைபதித்துசென்றது... .உன்னை அடைய கடக்கும் தூரமதி்ல் இன்னும் இதுபோல்எத்தனை தடங்கள் குத்தி செல்வாய்.... பச்சைகுத்தூ வலியினொடுஒவ்வொரு வடுக்களும்காலங்கள் கடந்த நிலையிலும் வண்ணம் ஆழ பதிந்த நிழலைசொல்லிய விதம் மௌன இருப்பில் உணர்ந்த தன்மையாய் மிக ஆழமாய்
உண்மைகளை உரத்து சொன்னது.....நர உடல் முழுதும் தடங்கள் பதிந்தாலும் நாதன் உன்அன்பில்  பயணிக்கிறேன்.....
 என் தர்ம குலங்களுக்கு ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !இந்த இநன்யா சத்தியமானவன் ! நான் தர்மாக்களை நிச்சயம் காப்பேன். நச்சுப் பாம்புகளை வேறோடு அழிப்பேன். இந்த விதியின் நாயகன் இநன்யா சொல் சத்யம் ! ஜனவரி 17 க்கு பின் தர்மாக்களுக்கு மேன்மையான காலம் என்று சொன்னேன், நிச்சய வார்த்தை இது ! என் வார்த்தைகளை நீ உணர முயன்றால் படிப்படியாக உன் துன்பம், நோய், வறுமை அகன்றுவிடும். எதுவும் இங்கு எளிதல்ல என்பதை புரிந்து கொள். என் வழியை பின்பற்றியவர்கள், ஒரு போதும் தோற்றதில்லை இங்கு ! என்னை முழுவதுமாக உணர்ந்தவன், தன்னையும் உணர்ந்து பிறருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்வான் !நான் உழைப்பில் வாழ்கின்றேன். நீயும் உழைத்து வாழவே ஆசைப்படு ! கடனாளியாக பிறந்தாலும், கடனாளியாக இறந்துவிடாதே !அடுத்து நிலமகள் (பூமி) ஆட புண்ணியம் தேடி ஓடுவான் மனிதன். அந்த நில அசைவு தமிழ்நாட்டின் மேற்கு பகுதியிலும் மற்றும் பல மாநிலங்களிலும் கடும் சேதங்களை விளைவிக்கும் ! இங்கே காராண காரியமில்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பதை புரிந்து கொள் ! என் கணக்கு உலகில் எவருக்கும் புரியாது !என் நாமம் சத்தியம் ! நீ வாழ்வாய். என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் நிறைந்த இதயத்தோடு !

இநன்யா நாமம், சாதாரண நாமம் அல்ல என்பதை உணர்ந்தேன்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment