Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 15, 2017

யாகவா உரையாடல் ;;; இரு மடங்கு நன்மை ;;;

யாகவா உரையாடல் ;;; இரு மடங்கு நன்மை ;;; இங்கு வருபவன் தப்பு செய்தாலும், தண்டனையும் இரு மடங்கு.நீ இரு ,தோணியில் கால் வைக்காதே.வட்டத்தில் நின்று சார்ஜ் (திறன்) செய்து கொள்.நீ இவரது ஞானங்களை ஏற்று தர்மத்தின் வழி வாழ்க்கை நடத்த இங்குள்ள வட்டத்தில் நின்று வணங்கி சார்ஜ் (திறன்) ஏற்று கொள்வதால் உனக்கு கிடைக்கும் நன்மை இரு மடங்கு.அதுவே எதிர்மறையாக  செயல் பட்டால் கிடைக்கும் தண்டனையும் இரு மடங்கு என்பதனை உணர் .எனவே இரு வழியில் செல்ல எண்ணாதே .பிரம்ம ஸ்தலத்தில் பாம்பு கடிக்கு (கர்மாவின் தாக்குதலுக்கு) மருந்து உண்டு. அதுவே கழுதையிடம் உதைபட்டால் (தர்மாவிடம் அடிவாங்கினாள்)மருந்து இல்லை.
பாம்பு-கர்மாக்களால் ஏவப்பட்ட பில்லி, சூன்னியம்,ஏவல்,மந்திரம்,பேய்,மதம்,வசியம்,பொய் கதையின் மயக்கம்,போதை,பக்தி, மடமை ஆகியவற்றை போக்க மருந்து உண்டு.
கழுதை-இவரது ஞானங்களுக்கு எதிர் மறையாக செயல் பட்டு,இங்குள்ள முனிவர்களிடம் உதை வாங்கினால் மருந்து இல்லை.ஊமத்தங்காயை பிரசாதம் செய்ய பயன் படுத்தி உன்னை வசியம் செய்தால் ,நீ நெல்லிக்காயை உண்டு அதனை முறித்து விடு.

யாகவா உரையாடல் ;;; - தலை கீழ் ;;; நான் உன்னை மேலிருந்து, [ஆகாயத்தி லிருந்து] பார்க்கும் போது , இங்கு நீ நடப்பது தலை கீழாய் தான் தெரிகிறது. உன் செயல் யாவும் தலை கீழ். அழியும் உடல், அழியா உயிர் கொண்ட இவன் தன் பொய் உடலை மெய் உடல் என்கிறான். பசுவின் பால் அருந்தி வளர்ந்த இவன்,பாம்பை பயத்தால் வணங்குகின்றான்.தர்மாவின் பலனை பெற்று வளர்ந்த பின் தர்மா,கர்மா அறியாது வணங்குகின்றான்.உயிர் உள்ளனவற்றிக்கு செய்யா பாவி இவன் உயிரும்,மயிரும் அற்ற சிலைக்கு செய்வதை தர்மா என்கிறான். புலியை பார்த்து பயப்படுகிறான்.புலித்தோலில் அமர்ந்து உள்ளவனை கும்பிடுகிறான். இல்லறமற்றவனிடம்   இல்லற பிரச்னைக்கு தீர்வு காணும் முட்டாள் தனத்தை செய்கிறான்.மதம் என்கிற மதம் பிடித்து அலையும் இவன் ,மரணம் ஓன்று இருப்பதை மறந்து அலைகிறான்.பிரம்மாவை தாழ்வாகவும்,சிவனை உயர்வாகவும் சொலிகிறான்.பிரம்மா-வயல் காட்டில் வேலை செய்யும் உழவனுக்கும்  அவன் மனைவி  பாசத்துடன்  கஞ்சி கலயம் கொண்டு வருவாள்.விஷ்ணு-தோட்டத்தினை காவல் செய்யும் காவல் காரனுக்கும் அவன் மனைவி  பாசத்துடன்  கஞ்சி கலயம் கொண்டு வருவாள். சிவன்-இடுகாட்டில் வேலை செய்பவனுக்கும்   அவன் மனைவி  பாசத்துடன்  கஞ்சி கலயம் கொண்டு வருவாளோ ? உயர்ந்தவன் யார்? ஏய் ! பொய் உடல் காரனே சிந்தி.

யாகவா உரையாடல் ;;; - கொடு .என்னவே இது? கற்கண்டுப்பா. இங்கு உள்ள எல்லோருக்கும் கொடு .இவையில் இல்லாத பொருள் நீ எதை செய்தாய்.?என் பொருளை  எடுத்து நீ பிறருக்கு கொடுப்பதே உன் பொருள்.அதுவே தர்மா.நீ உழைத்து பிறர்க்கு உதவுவதே தர்மா.இவையில் உழைத்து சேர்த்த பொருள் யாவும் உன் பொருள் அல்ல .உன் உழைப்பால் உண்டாகும் நன்மையே உன் பொருள்.தேனீயின் உழைப்பு - உனக்கு தேன் (அமிர்த பொருள்கிடைக்க.சிலந்தியின் உழைப்பு - பிறரை சிக்க வைப்பதில் என்பதனை உணர்.யாகவாவல் இவையில் கிடைத்தது தேன் அமிர்தபால்.அப்பொருளை உட்க்கொண்ட நீ அதன் வழி நடந்து பிறர்க்கு இவரது ஞானங்களை சொல்லி க்கொடு.அச்செயலே உன் பொருள்.யாகவா முனிவரின் கருத்துக்களை அல்லி எடு.எல்லோருக்கும் சொல்லி க்கொடு.லோகத்தை வந்தடைவாய்..உன்னால் முடிந்ததை கொடுத்து பழகு.கொட்டியா வைத்துள்ளது என்று சொல்லாதே.

யாகவா  உரையாடல் ;;; உன் இடத்திலேயே உட்க்காருவே!  நான் பிறர்க்கு என தூக்கி போடும் பொருளை நீ எட்டி பிடிக்காதே .உனக்கு உரிய பொருள் உன் இடம் தேடி வரும்.பிரித்து வைத்துள்ள பொருள் யாவும் நல்லதானால்,வைத்துள்ள பொருள் யாவும் அப்படியே உள்ளன.மனிதன்  ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறம்,மாநிலம்,நாடு, ஏழை, பணக்காரன்,என பலவாறாக பிரித்து வைக்கப்பட்டுள்ளான்.அவ்வாறு பிரித்து வைக்க பட்டுள்ள மனிதன் தன் இடத்தில் இருந்து எங்கும் போக வேண்டாம்.[மதம் மாற வேண்டாம்].பிறரை எட்டி பிடிக்க எண்ணவும் வேண்டாம்.பிரித்து வைக்கப்பட்டுள்ள மனிதர்கள் யாவும் இவரது நன்மை எனும் ஞானங்களை உட்க்கொண்டு நல்லதானால், இவரால் கடலுக்கு அடியில் சிறைப்பட்டு மீட்கப்பட்டு வைத்துள்ள 5000  ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் சற்றும் தன் தன்மை மாறாமல்,உன் நன்மைக்கு என  அப்படியே உள்ளது.அதுவே சஞ்சிநாதம், அழியா ஆதி வேதம்,நீ உட்க்கொள்ள !காண்டமும் உன் நன் நிலைக்கு ஏற்ப நன்மை என்பதனை உன் இடத்திற்க்கே வந்து சேர்க்கும்.நான் ஜாதி என குறிப்பிட்டு கூறுகிறேன்.நீ உன் ஜாதிக்கு மதம் [வெறி] பிடிக்காமல் பார்த்து கொள்.

யாகவா  உரையாடல் ;;; இரண்டு என்னும் பொருள்;
நட்சத்திர காண்ட முனிவர்கள் ஏட்டில் வரைவது;;;தர்மா,கர்மா
தர்மா-நம் தந்தை யாகவா அவர்களால் யுகத்திற்கு கிடைத்த பொருள்.
கர்மா-யாகவா கருத்துக்களை ஏற்க மறுக்கும் மதம் கொண்ட மனம்,திறனற்ற அறிவு , தன்னிலை மறக்க செய்யும் வேடம்.
போதும் என்னும் பொருள் இரண்டு-பசியும் ,பிணியும்.இவை தவிர போதும் என்னும் எண்ணம் இடுகாடு போகும் வரை வருவதில்லையே ஏன்? யூகி.
வேண்டா பொருள் இரண்டு-மலமும்,பிணமும்.
மலம்-மலத்தையும் சந்தனம் போல் பாவிக்கும் மனம் கொண்ட தாய்.
பிணம் -ஓர் நாள் உன் பிணம் தூக்க மனிதர்களுடன் மனிதனாக பாசமாக பழகு.
கடவுளை காண வழி கேட்க கூடாத நபர்கள்-பக்தி என்னும் போதையில் இருப்பவன், நாத்திகன் என்னும் குருடன்.பஜனை என்னும் போதையில் இருப்பவன் பக்திமான். புரியாததை பொய் என்னும் நாத்திகன்.
இரண்டு ஞானங்கள்-திருஞானம்,பெருஞானம்.
திருஞானம்-அழியும் உடலுக்கு காரணமான தாய்,தந்தை மற்றும் மனைவி ,மக்கள், உறவினர்,நண்பர்கள்,இவர்களை பற்றிய செயல்பாடு உடைய சிந்தனை.
பெருஞ்ஞானம்-அழியா உயிருக்கு காரணமாகிய நம் தந்தையை பற்றிய சிந்தனை.நம் இடம் பற்றிய சிந்தனை.
மனிதர்களில் இல்லா ஊனங்கள் இரண்டு-நெற்றியில்லா மனிதன்,வயிறில்லா மனிதன்.விதி வரையப்பட்ட நெற்றியை வினை கொண்டு பாழாக்காதே.வயிறில்லா மனிதன்-வயிறு என்பது உண்பதற்க,உணர்வதற்கா,சிந்தி மானிடா.
பயனில்லா பொருள்-பாசமில்லா பாவியிடம் உள்ள பணம்.பணமில்லா பாவியிடம் உள்ள பாசம்.
யாகவா கருத்துக்களை  கற்பதினால் இல்லை, பயன் கடை பிடித்தால் உண்டு,பயன் என்பதை மறவாதே !

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment