Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, February 26, 2017

பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால் பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர்

பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால் பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர்
கர்ணன் செஞ்சோற்று கடன் தீரவேண்டி கௌரவர்களுடன் இருந்து போரில் உயிர் விட்டான் அதன் பின்பு தான் பாண்டவர்களுக்கே கர்ணன் தங்களது மூத்த சகோதரன் என்று தெரிந்தது
அவருக்கு மட்டுமல்ல ஆசாரியர் துரோணருக்கு சீடனாக கிருபர் சிஷ்யனாக போரில் தங்களால் கொல்லபட்ட துரியோதணன் உட்பட நூறு கௌரவர்களுக்கும் அந்த வம்சத்தின் மூத்த அண்ணனாக இருந்து தர்மர் அந்திமகாரியங்களை செய்தார்.
ஆனால் கௌரவர்கள் நூறுபேரும் குருச்சேத்திர யுத்தத்தில் மடித்த சில ஆண்டுகளில் இறந்து போன அவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு அந்திம க்ரியை செய்தது கௌரவர்களில் ஒருவன் என்பது தெரியுமா?
கௌரவர்கள் நூறுபேர் இறந்த பின் கௌரவரா என கேட்காதீர்கள் கௌரவர்கள் நூற்றொருவர் பின் அவர் ஏன் மற்ற கௌரவர்களுக்கு அந்திம காரியம் செய்யவில்லை என்றால் அதுவும் காரணமாகவே
திருதுராஷ்ட்ரனின் பட்ட மகிஷி காந்தாரியின் மகன்களுக்கு அவர்களது சந்திகளுடன் போரில் மரணமேற்பட்டதால் பாண்டுவின் மகன்களில் மூத்தவரான தர்மர் அந்திம காரியம் செயதார். தன் தாயின் கர்பத்தில் உதித்தவர் ஆகையாலே்கர்ணனுக்கும் செய்தார்
ஆனால் திருத்ராஷ்ரனுக்கு அந்திம காரியம் செய்தது யுயுத்சு என்னும் கௌரவன்
யார் இந்த யுயுத்சு? இவன் எப்படி கௌரவர்களில் ஒருவன் ஏன் இவன் த்ருத்ராஷ்டனுக்கு மட்டும் அந்திம க்ரியை செய்தான் என்கிறோம் என பார்ப்போம்
அதற்க்கு ஒரு சம்பவத்தை விளக்குகிறேன் உங்களுக்காக
குருசேத்ர யுத்தத்திற்காக 
தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நிற்க்க
எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன.
இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர்
அதிவிரைவில் யுத்தம் தொடங்கப் போகிறது.
இடைபட்ட நேரத்தில்
அர்ச்சுனன் தன் தேர்த்தட்டில் சாரதியாக வீற்றிருந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பணிவோடு வணங்கி நேராக பார்த்து மெல்லிய குரலில் உரிமையுடன் கேட்டான்:
‘‘கண்ணா! இதோ யுத்தம் தொடங்கப் போகிறது. எனக்கு உன்னிடமிருந்து தெளிவான பதில் தேவை.
கண்ணன் கேட்டான் என்ன கேள்விக்கு பதில் வேண்டும் 
மீண்டும் கீதையில் ஏதேனும் சந்தேகமா? என்றான்
அர்சுனன் :- அது இல்லை கண்ணா இந்த போரில் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் தானே உன் கொள்கை?
அதாவது தீயவர்களை அழித்து அடியவர்களைக் காப்பாற்றுவது! சரிதானே அப்படியானால் கௌரவர்கள் மொத்தபேரும் அழிவார்கள் அல்லவா?’’ என்றான்
கண்ணன்:- அர்ச்சுனா! நீ சொன்னதில் ஒரு பாதி சரி. ஒரு பாதி தவறு. தீயவர்களை அழிப்பேன். ஆனால், கௌரவர்கள் அத்தனை பேரும் அழிவார்கள் என்று சொல்ல முடியாது. கௌரவர்களில் நல்லவர் யாரேனும் இருக்கலாம் அல்லவா?’’ என்றான்
அர்சுனன் துனுக்குற்று்
‘‘கௌரவர்களில் நல்லவரா? பீஷ்மர், துரோணர் கிருபர் சல்லியன் போன்ற நல்லவர்களெல்லாம் கூட, கௌரவர்களோடு கூட்டு சேர்ந்ததால் அழியப் போகிறார்கள் என்கிறபோது கௌரவர்களில் யாரேனும் ஒரு நல்லவன் இருந்தாலும் அவன் கௌரவர்களுடன் இருப்பதால் அழிய வேண்டியவன் தானே? 
நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள்தானே கண்ணா?’’ என்றான்
கண்ணன் கலகலவென நகைத்தான். ‘‘நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல, அர்ச்சுனா! கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி,’’ என்று புதிராக பதில் சொன்னான்.
‘‘நீ சொல்வது புரியவில்லை கண்ணா!’’ என்றான் அர்சுனன்
கண்ணன் சொன்னார் பொறுத்திரு. புரியும்!’’
இவர்கள் இப்படிப் உரையாடிக் கொண்டிருந்த போது
தர்மபுத்ரன் யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார்.
ஏதோ முக்கியமாக ஒன்றை அறிவிக்கும் நோக்கில் வந்திருக்கிறார் என்பதை அவர் நின்ற தோரணையே இருதரப்புக்கும் தெரிவித்தது.
இரு தரப்பு வீரர்களும் அமைதி காத்தனர்.
துரியோதனன் தர்மரையே் வெறித்துப் பார்த்தவாறு அவரது அறிவிப்பைக் கேட்கக் காத்திருந்தான்.
தர்மர் ஒரு அறிவிப்பை உரத்துச் சொல்லலானார்: 
"வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்கவிருக்கிறது இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.
எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம்.
துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம்"
வீர்ர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம். என்றான்
மேலும்
அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலாகாது.
அப்படி்அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பிலேயே்போரிடுவார்கள்.’’ என
கம்பீரமாக அறிவித்து விட்டு
தர்மர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார்.
அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தர்மனின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள்.
தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டைப் இரு அணியினருக்கும் புலப்படுத்தியது
இந்தக் கடைசி சந்தர்ப்பத்தில் யாரேனும் கட்சி மாறுவார்களா என்ன? ( இன்றய அரசியல் சூழலை நிணையாதீர்கள்)
தர்மர் தமது மாபெரும் படையைப் பார்த்தார். யாரும் இருந்த இடத்தை விட்டு ஒரு துளி அசைவையும் காட்டவில்லை.
துரியோதனன் தரப்புப் படைவீரர்களைக் கேள்விக் குறியுடன் பார்த்தார் தர்மர்
என்ன ஆச்சரியம்! ஒரே ஒரு தேர் மட்டும் அதில் அமர்ந்திருந்த வீரனைத் தாங்கி கௌரவர் பக்கமிருந்து பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது!
‘‘யார் அது, நம் தரப்பிலிருந்து பாண்டவர் தரப்பிற்கு கட்சி மாறுவது?’’ துரியோதனன் உரத்த குரலில் கூச்சலிட்டான்.
அந்தத் தேரில் அமர்ந்திருந்த வீரனை நோக்கி அம்பெய்யவும் முற்பட்டான்.
பாண்டவர் அணிக்குச் செல்லும் வீரனை தொலைவிலிருந்தே உற்றுப் பார்த்தார் பிதாமகர் பீஷ்மர்.
கவசங்களால் உடல் மறைக்கப்பட்டு ஒரே மாதிரி உடை அணிந்த நிலையில் எல்லா வீரர்களும் ஏறக்குறைய ஒன்றுபோல்தான் அவர் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.
என்றாலும் அவன் யார் என்பதை பீஷ்மரின் கூரிய விழிகள் கண்டுகொண்டு விட்டன.
அந்த வீரனை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது
"துரியோதனா, சற்றுப் பொறு!’’ என்று குறுக்கிட்டார் பீஷ்மர்.
‘‘அவனைப் போகவிடு. தர்மபுத்ரன் கட்சி மாறுபவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை போகவிடு
நம் படை, அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குறையப் போவதில்லை.
மேலும் நீ அவனை இப்போது கொல்வானேன்?
நம்மிலிருந்து வேறுபட்டுப் பாண்டவர் அணியில் சேர்ந்த வீரனை போர் தொடங்கியதும் நம் வீரர்களில் ஒருவனாலேயே கொல்லப்படுவான்!
அதுவே அவனுக்கான நமது தண்டனை!’’ என்றார்,
பீஷ்மர் சொன்னதைக் கேட்டு துரியோதனன், அம்பைத் தன் அம்பறாத் தூணியில் செருகிக் கொண்டான்.
எதிரணியைச் சார்ந்த பீஷ்மரின் பேச்சைக் கேட்டு கண்ணன் முகத்தில் சிறு புன்முறுவல் படர்ந்தது.
கண்ணன் அர்ச்சுனனிடம் சொன்னான்: ‘‘பீஷ்மர் பெரும் வீரராக இருக்கலாம். ஆனால், முக்காலமும்
உணர்ந்தவரல்லர்அல்ல." என்றான்
"ஏன் அப்படிச் சொல்கிறாய் கண்ணா?’’ என்றான் அர்சுனன்
பின்னே?
இதோ நம் அணியில் சேர வருகிறானே அவன் ஒருவன்தான் போர் முடிந்த பின்னும் உயிர் பிழைத்திருக்கப் போகும் ஒரே கௌரவ வீரன். அப்படியிருக்க அவன் கொல்லப்படுவான் என்கிறாரே பீஷ்மர்? அவன் சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’ என்றான் கண்ணன்
கண்ணா என்ன சொல்லுகிறாய் அந்த வீரன் "கௌரவர்கள் நூறுபேரில் ஒருவனா?’’ என்றான்
கண்ணன் கூறினான் அர்ச்சுனா! கௌரவர்கள் மொத்தம் நூற்றியோரு பேர்.
நம் அணியில் சேர வருபவன் நூற்றியோரு பேரில் ஒருவன்.’’
கண்ணா எனக்கு ‘‘வியப்பாக இருக்கிறதே! இதுவரை கௌரவர் நூறுபேர் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன்.’’ என்றான்
கண்ணனோ அர்சுனா
‘‘இந்த நூற்றியோராவது கௌரவனுக்கு கௌரவர்கள் உரிய கௌரவம் கொடுக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.
நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனை கொல்ல துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே, அப்போது அதை முன்கூட்டியே பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான்.
இவன் தர்மநெறியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல் இருப்பவன்.
அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு.
இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன்.
இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன்.
யுத்தம் தொடங்கவிருக்கிறது அர்ச்சுனா! நான் தேரைச் செலுத்தப் போகிறேன். நீ காண்டீபத்தை எடுத்துக்கொண்டு தயாராகு.’’
என்றபடியே
கண்ணன் தேர்க் குதிரைகளின் லகானைப் பற்றி அதைச் சொடுக்கத் தயாரானான்.
தங்கள் அணிக்கு வந்துசேர்ந்த கௌரவனைப் பற்றிய நினைப்பு அர்ச்சுனன் மனத்திலிருந்து முற்றிலும் விலகியது.
அவன் போரிடத் தயாரானான்... சூரியன் அஸ்தமனம் ஆனதும் முதல்நாள் போர் அவ்வளவில் முடிவடைந்தது.
மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு, கௌரவர்களும், பாண்டவர்களும் அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள்.
பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அணைத்து அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான் ஸ்ரீகிருஷ்ணன்.
பஞ்ச பாண்டவர்கள் மட்டுமல்ல, அங்கே அவர்களது்மனைவி பாஞ்சாலியும் தாயார் குந்திதேவியும் கூட அமர்ந்திருந்தார்கள்.
யுத்தம் எத்தனை நாள் நீடிக்குமோ என்ற கவலை குந்தியின் மனத்தில் கவலைரேகை படர்ந்திருந்ததை அவள் முகம் கண்ணனுக்கு தெரிவித்தது.
தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த பாஞ்சாலியின் கண்கள் தன்னை அவமானபடுத்திய துச்சாதனன் மேலும் துரியோதனன் மேலும் கொண்ட தாளாத கோபத்தால் சிவப்பேறியிருந்தன.
‘‘கண்ணா! வா வா!’’ என்று கண்ணனைப் பரவசத்தோடு வரவேற்றாள் குந்திதேவி. பாஞ்சாலியும் கண்ணனை இன்முகம் பொங்க அழைத்தாள்.
கண்ணனையே சரணடைந்து வாழ்ந்த பாண்டவர்கள் கண்ணனுக்கு ஆசனம் அளித்து அமர வைத்தார்கள்.
தன்னுடன் வந்த கௌரவ வீரனைப் பிரியமாகத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான் கண்ணன்
குந்தி, கண்ணன் அழைத்து வந்த இளைஞனை தீவிரமாக ஆராய்ந்தாள்.
வசீகரமான தோற்றம் நற்குணங்களையே கடைப்பிடிப்பதால் வந்த பொலிவு அவன் முகத்தை மேலும் அழகாக்கியிருந்தது.
கண்ணனே அழைத்து வந்திருப்பதால் மிக முக்கியமானவனாகத்தான் இருக்க வேண்டும். யார் இவன் தாயார் கண்களாலே கேள்வி கேட்டாள்.
"இவன் கௌரவர்களில் ஒருவன்!’’ இதைக் கண்ணன் சொல்லி முடிப்பதற்குள்
பாஞ்சாலியின் சிவந்த கண்கள் மேலும் கூடுதலாகச் சிவந்தன
கண்ணன் சொன்னதைக் கேட்டு அவள் அமைதியானாள்.
‘‘இவன் கௌரவர்களை விட்டு விலகி நம் அணிக்கு வந்துவிட்டான்.
உண்மைஈன தர்மம் எங்கிருக்கிறதோ அதை உணர்ந்து கட்சி மாற விரும்புகிறவர்கள் மாறலாம் என்ற தர்மனின் அறிவிப்பைக் கேட்டு இன்று காலை நம் கட்சிக்கு மாறிவிட்டான் இவன்!’’ என்றான் கண்ணன்
அப்படியே புதியவனின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தான்.
புதியவன் குந்திதேவியின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான்.
குந்தி அவனைப் பிரியமாய்ப் பார்த்து மனமார ஆசீர்வதித்தாள்.
பாஞ்சாலியின் விழிகளில் மகிழ்ச்சி தோன்றியது.
‘‘உன் பெயர் என்ன மகனே?’’ குந்தி ஆதரவுடன் கேட்டாள்.
அவன் கம்பீரமாக பதிலளித்தான். ‘‘தர்மநெறி பிறழாமல் வாழும் ஐந்து புதல்வர்களைப் பெற்ற பாக்கியசாலியான அன்னையே! என்னை யுயுத்சு என்று அழைப்பார்கள்!’’
யுயுத்சு! குந்தியின் மனம் அந்தப் பெயரைக் கேட்டதும் யோசனையில் ஆழ்ந்தது.
ஆம். காந்தாரி இவன் பெயரை ஒருமுறை குறிப்பிட்டு இவனைப் பற்றித் தன்னிடம் அங்கலாய்த்திருக்கிறாள்.
பல காலம் முன்னால் நடந்த சம்பவம்
காந்தாரி அன்று இவனைக் குறித்து அங்கலாய்த்தது ஏன் என நினைவில்லை.
காந்தாரிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்ற உண்மை மட்டும் இன்றும் மனத்தில் தேங்கியிருக்கிறது.
அதுசரி. உண்மையில் யார் இவன்? அனைவர் கண்களும் அவனையே பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது
அர்ச்சுனன் குரல். ‘‘கண்ணா! இவன் கௌரவர்களில் ஒருவன் என்றாய். மற்ற கௌரவர்களால் இவன் உரிய மதிப்புடன் நடத்தப்படவில்லை என்றும் சொன்னாய். இப்போது சொல்.
இவன் சரிதம் என்ன?
காந்தாரி பெற்ற கௌரவர்களில் ஒருவன் தானா இவனும்?’’ என்றான்
கண்ணனோ இவன் கௌரவர்களில் ஒருவன், அதாவது, திருதராஷ்டிரரின் மகன்.
ஆனால், காந்தாரியின் பிள்ளை அல்ல!’’ என்றான்
குந்தி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
அவளுக்குக் காந்தாரி இவனை ஏன் வெறுத்தாள் என்பது புரியத் தொடங்கியது.
கண்ணன் மேலும் விளக்கலானான்: ‘‘காந்தாரி கர்ப்பவதியாய் இருந்தபோது அவள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. அதனால், கண்ணில்லாத திருதராஷ்டிரருக்குப் பணிவிடை செய்ய அமர்த்தப்பட்டாள் சுகதா என்ற ஒரு பெண்.
அவளது பணிவிடையில் மகிழ்ந்த திருதராஷ்டிரரின் வற்புறுத்தலால் சற்று எல்லை மீறியதன் விளைவுதான் யுயுத்சு.
யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான்.
அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று.
தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான்.’’ என்றார்
அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான்.
‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான்.
மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற அந்த ஒரே பிள்ளை!’’
இந்தச் செய்திகளைக் கேட்டு குந்தி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். ‘‘கௌரவ சகோதரர்கள் நூறுபேர் அல்ல, நூற்றியோரு பேர் என்று திடீரென்று வெளிப்பட்ட இந்த உண்மை எனக்கு வியப்பாக இருக்கிறது!’’ என்றாள் அவள்.
அவளை பாண்டவர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.
யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள, பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக்கொடுத்தார்கள்.
கண்ணனின் தயவால் தர்மம் வென்றது.
பின்னொருநாள் த்ருத்ராஷ்ட்ரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கான அந்திம கடனை கண்ணன் விருப்பப் படியே செய்தான்
நாமும் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயோமாய் தொழுது நம் துயரம் தீர்போமாக!!
சர்வம் கிருஷ்ணார்பனமஸ்து!!
ஜெய் ஶ்ரீராம்!!!

Sankar E N FACE BOOK

No comments:

Post a Comment